காதல் வெப்சைட் - காதல் - முறிவு - காதல் Archives - தூரிகை தமிழ் நாவல்கள் https://thoorigaitamilnovels.com/category/காதல்-வெப்சைட்-காதல்-முற/ Sat, 03 Feb 2024 06:21:48 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.2.2 https://thoorigaitamilnovels.com/wp-content/uploads/2021/08/favicon-32x32-1.jpg காதல் வெப்சைட் - காதல் - முறிவு - காதல் Archives - தூரிகை தமிழ் நாவல்கள் https://thoorigaitamilnovels.com/category/காதல்-வெப்சைட்-காதல்-முற/ 32 32 197060226 காதல் வளர்க்க ஒரு நேரம் – 2 https://thoorigaitamilnovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-2/ https://thoorigaitamilnovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-2/#respond Sat, 03 Feb 2024 06:21:48 +0000 https://thoorigaitamilnovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-2/ அத்தியாயம் – 2   சென்னையின் பிரதான சாலையை கிழித்துக்கொண்டு போனது ஆத்விகாவின் கருப்பு ஜாகுவர். “கம் ஆன் ஆத்வி… இன்னும் ஸ்பீடா போ…. ” என்ற ஆரவரத்துக்கு ஏற்றார் போல சற்று வேகத்தை அதிகப்படுத்தினாள்.   ஒரு மணி நேரத்தில் வர வேண்டிய கல்லூரிக்கு அரை மணி நேரத்தில் வந்து இறங்கினர் ஆத்விகாவும் அவளுடைய தோழமைகளும். காரை பார்க் செய்துவிட்டு அவள் வரும் வரை காத்திருந்து அவளோடு வகுப்பறைக்கு

The post காதல் வளர்க்க ஒரு நேரம் – 2 appeared first on தூரிகை தமிழ் நாவல்கள்.

]]>

Loading

அத்தியாயம் – 2

 

சென்னையின் பிரதான சாலையை கிழித்துக்கொண்டு போனது ஆத்விகாவின் கருப்பு ஜாகுவர்.

“கம் ஆன் ஆத்வி… இன்னும் ஸ்பீடா போ…. ” என்ற ஆரவரத்துக்கு ஏற்றார் போல சற்று வேகத்தை அதிகப்படுத்தினாள்.

 

ஒரு மணி நேரத்தில் வர வேண்டிய கல்லூரிக்கு அரை மணி நேரத்தில் வந்து இறங்கினர் ஆத்விகாவும் அவளுடைய தோழமைகளும். காரை பார்க் செய்துவிட்டு அவள் வரும் வரை காத்திருந்து அவளோடு வகுப்பறைக்கு சென்றனர்.

 

வெகு நேரமாக அவளுக்காக காத்திருந்த விக்ரம், அவளை கண்டதும் அவளிடம் வந்தான்.

“எவ்வளவு நேரம் வெயிட் பண்றேன். சீக்கிரம் வரமாட்டிய?” என்று அவள் கையை அழுத்தமாக பற்றினான்.

 

அவன் பிடித்தது வலித்தாலும் சுற்றி இருப்பவர்களை கருத்தில் கொண்டு, “டிராபிக்ல மாட்டிக்கிட்டோம் விக்ரம்” என்று மெதுவாக கையை இழுத்துக்கொண்டாள்.

அதில் சிறிது கோபம் எட்டிப் பார்க்க, “உன் கையை நான் பிடிக்க கூடாதா ஆது?” என்று நொடியில் தன் பாவனையை மாற்றி வருத்தப்பட்டான் விக்ரம்.

 

“என்ன விக்ரம் இப்படி சொல்லுற. நீ பிடிச்சதுல கை லேசா வலிச்சுது”

“சாரி பேப் சாரி. ஹார்ஷா பிஹேவ் பண்ணிட்டேனா” என்று பதறினான்.

 

“இல்லை விக்ரம். லைட்டா தான். வா பிளேஸ்க்கு போகலாம்” என்று அவனது கவனத்தை திருப்பினாள். இல்லையென்றால் இதையே இன்று முழுக்க பேசி அவளாகவே எனக்கு வலிக்கவே இல்லை சாரி என்று சொல்ல வைத்து விடுவான்.

 

அவரவர் இருக்கையில் அமர்ந்து நாளை முடிக்க வேண்டிய ஸ்கிரிப்ட்டை பற்றி பேசிக்கொண்டிருக்க முதல் வகுப்பிற்கான மணி ஒலித்தது. அவர்கள் அதற்கு அசராது தங்கள் கருத்தை விவாதிக்க, வகுப்பறையுள் நுழைந்தான் அவன். அவ்வளவு நேரம் பேசிய வாய்கள் அனைத்தும் பூட்டிக்கொண்டது. மாணவிகள் அவனழகில் மயங்கியும் மாணவர்கள் யாரிவன் என்று தோரணையிலும் அமர்ந்திருந்தனர்.

 

கையில் இருந்த அட்டெண்டன்ஸை லாவகமாக பிடித்து, அவன் பாட்டிற்கு பெயர்களை வாசிக்க கைகளை உயர்த்தி தங்கள் இருப்பை காட்டினர். அட்டெண்டன்ஸ் எடுக்கும் வரை காரியத்தில் கண்ணாக இருந்தவன்,

“ஹாய் கைஸ். நான் ஆரவ் உங்களோட மீடியா ஓரியென்டேசன் ப்ரோபசர். ஒன் பை ஒன்னா எழுந்து உங்களை சார்ட்டா இன்ட்ரோ பண்ணிக்கோங்க.”

 

அந்த வகுப்பு பாதி தங்களை அறிமுக படுத்திக்கொள்வதிலும் மீதி சிறு சிறு கேள்வி பதில்களிலும் நிறைவேறியது. அவன் சென்றதும் தான் பிடித்து வைத்திருந்த மூச்சை விட்டாள் ஆத்விகா. அவன் அவனே தான் என்று ஆரவின் வருகை அவளை முற்றும் குழப்பி மூச்சிறைக்க வைத்தது.

 

பழைய நினைவுகள் மறந்துவிட்டது என்று அவள் நினைத்த அனைத்தும் சிறு தடங்கல் இல்லாமல் மனதில் ஓட ஆரம்பிக்க அவள் மனம் துவண்டு விட்டது. வேகமாக எழுந்து வெளியே சென்றவள் அவனை தாண்டி முன்னே சென்றாள். யாரோ ஒருத்தியை போல அவளை கடந்து ஆசிரியர் அறைக்குள் சென்றவனை வெறித்து பார்த்தாள். நொடி கூட அங்கே நிற்க முடியாமல் வகுப்பறைக்கு சென்று அவள் பையை எடுத்துக்கொண்டு யாரிடமும் எதையும் கூறாமல் காரை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு சென்றுவிட்டாள்.

 

காரை பார்த்தவாறு நின்றிருந்த ஆரவிற்கு, அவளது தோற்றம் முதல் விக்ரமின் காதல் வரை அனைத்தும் வலியை கொடுத்தது. வேண்டாம் என்று சென்றவளை இப்படி தான் காண வேண்டுமோ என்று உள்ளுக்குள் மரிந்து போனான்.

 

வேகமாக காரை ஓட்டிய ரித்தீஷை தன் வார்த்தையால் குத்திக் கிழிக்க ஆரம்பித்தாள் நேத்ரா.

“ரித்தீஸ் நீ எனக்கு தான பி. ஏ? இல்லை டைரக்டர் சாணக்கியனுங்க?”

 

“மேடம் அது…..”

“ஸ்டாப் யுவர் எஸ்பிளானேசன். வர வர யாரு யாருக்கெல்லாம் நீ பயந்து நடுங்க போறியோ?”

“எப்பவும் எந்த ஸ்பீட்ல போவியோ அதே ஸ்பீட்ல போ. இல்லனா நீ இறங்கு நானே டிரைவ் பண்ணிக்கிறேன்.” என்று அவள் கத்த மிதமான வேகத்தில் காரை செலுத்தினான்.

 

ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு செல்வதற்குள் நந்தாவிடம் இருந்து இருபது அழைப்பு ரித்தீஸ்க்கு வந்துவிட்டது.

அதையெல்லாம் சட்டை செய்யாத நேத்ரா காதில் ப்ளூடூத்தை மாட்டி பாட்டை ரசிக்க ஆரம்பித்தாள் . கண்ணாடி வழியே பார்த்தவனுக்கு மனதில் கேட்க ஆயிரம் கேள்வி இருந்தாலும் கேட்க முடியாத நிலையில் அல்லவா அவன் இருக்கிறான்.

 

வழி முழுவதும் அவனை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதை மனதில் ஓட்டி பார்த்தவள், இறங்கி அவனை நோக்கி நடந்தாள்.

 

பைட் சீனுக்கான ஸ்கிரிப்ட்டை ஸ்டண்ட் மாஸ்டரிடம் கொடுத்து அது எப்படி அமைய வேண்டும் என்று அவரிடம் எடுத்துரைத்து திரும்ப, “ஹாய் சார்” என்று அவன் முன் போய் நின்றாள்.

 

‘இடியட்’ என்று வாயசைத்தவன், “கேரவன்ல வெயிட் பண்ணு வரேன்”

‘டெவில்’ என்று மனதில் திட்டியப்படி அவளது கேரவனுக்கு விரைந்தாள்.

 

அவள் உள்ளே நுழைந்ததும் புயல் வேகத்தில் உள்ளே வந்து, “உன் மனசுல என்ன நினைச்சுட்டு இருக்க நேத்ரா?”

“ஹான் உண்மைய சொல்லவா பொய் சொல்லவா?

 

“இடியட். இந்த கேரக்டர்ல நடிக்க எத்தனை பேர் தவம் இருக்காங்க தெரியுமா? யூஸ்லெஸ் பெல்லொவ் உன்னை போய் தெரியாம சூஸ் பண்ணிட்டேன்.”

“அச்சோ இப்போ ஒன்னும் பண்ண முடியாதே!” என்றாள் நக்கலாக.

 

“இங்க பாரு உன் நக்கல் எல்லாம் வேற யாருகிட்டயாவது வச்சுக்கோ”

“உங்ககிட்ட வைச்சுகிட்ட என்ன பண்ணுவீங்க? அடிப்பீங்களா?” என்று நக்கலாக பேச அவன் விட்ட அறையில் இரண்டடி பின்னே சென்று விழுந்தாள்.

 

“ஏய்” என்று கத்தியவளை,

“யாருகிட்ட உன் திமிர காமிக்கிற. கால் சீட் கொடுக்கும் போதே டைமிங் எல்லாம் இல்லை. எப்போ ஷூட் இருக்கோ வரணும்னு தானே பேசிருந்தோம். இப்போ என்ன டி ஓவர் மயிரா பண்ணிட்டு இருக்க?”

 

“சாணக்கியன் மரியாதையா பேசுங்க!”

” உனக்கு என்ன டி மரியாதை? நல்லா உன் அப்பா பேரை யூஸ் பண்ணி உழைக்காம மேல போய்டலாம்னு நினைக்கிறியா?”

 

“திஸ் இஸ் டூ மச் சாணக்கியன்”

“ஒழுங்கா நடிக்க முடியும்னா நடி இல்லை போய்கிட்டே இரு. மொக்கை ஹீரோயினை கூட என்னால டாப் ஹீரோயினா மாத்த முடியும். என்னமோ பெரிய இவன்னு நீயே உன்னை நினைச்சுட்டு இருக்க! போடி” என்று வெளியே சென்றுவிட்டான்.

 

அவமானமாக இருந்தது நேத்ராவிற்கு எப்படியாவது அவனை பழிவாங்க நினைத்தவள் அத்தனை யோசிக்க ஆரம்பித்துவிட்டாள். கலைந்த கேசத்தை சரி செய்து முகத்தில் மாஸ்க் போட்டு வேகமாக காரை நோக்கி சென்றாள் . அவள் செல்லும் காட்சியை பார்ப்பவர்களுக்கு ஏதோ இருவருக்கும் நடுவே காரச்சாரமா நடந்தது புரிந்தாலும் மேலும் அதை கிண்ட முடியாத நிலை .

 

மொத்தமாக அவனை வீழ்த்த வஞ்சதை மனதில் பூசி கொண்டாள். காதல் என்று அவனிடம் போய் நின்றது தவறோ அதனாலோ என்னவோ தன்னை மிகவும் கீழ்த்தரமாக நடத்துகிறான் என்று நினைக்காமல் அவளால் இருக்க முடியவில்லை .

 

நேராக நித்திலனிடம் சென்றவள், “அண்ணா நான் படத்தில இருந்து விலகிக்கிறேன். அதுக்கான நஷ்டத்தை நானே கொடுத்தறேன். என்ன ப்ரோஸஸோ நீங்க பார்த்து பண்ணிருங்க.” என்று நிறுத்தி நிதானமாக பேசினாள்.

 

அவளை ஆழ்ந்து பார்த்தவன், “அடிச்சானா?” என்றான்.

பதில் கூறாது அவனையே பார்த்தவள், “நான் வீட்டுக்கு போறேன்” என்று எழுந்தவள் பின்னே வந்து நின்றான் சாணக்கியன்.

 

எழுந்து அவன் சட்டையை நித்திலன் பிடிக்க, மெதுவாக அதை விலக்கினான்.

 “நீ கிளம்பு நேத்ரா ” என்று அவளை அனுப்பி வைத்து அவனிடம் பேசினான்.

“அவ பண்ணது தப்பாவே இருந்துட்டு போகட்டும் நீ யாரு டா அவளை அடிக்க. பொம்பள பிள்ளை மேல கை வைக்கிறது என்ன பழக்கம். இதை உன்கிட்ட எதிர்ப்பார்கல. அவ இந்த படத்தில இருந்து விலகிக்கிற. உனக்கு யாரை போட்டு எடுக்கணுமோ எடுத்துக்கோ. அக்ரீமெண்ட் கான்செல் பண்ற போர்மலிட்டி அப்போ சொல்லுறேன்.”

 

“எனக்கு நேத்ரா தான் நடிச்சு கொடுக்கணும்.”

“என்ன டா விளையாடுறியா? இவ்வளவு ஆனதுக்கு அப்பறம் அவ எப்படி ஓகே சொல்லுவா?”

 

“நான் பேசுறேன்.” என்றவன் நேத்ராவிடம் பேச எண்ணி அவளது அலுவலகத்திற்கு சென்றான்.

‘உன் தங்கச்சியை அடிச்சிட்டு உங்கிட்டயே சாதாரணமா பேசுறான். நீயும் அமைதியா இருக்க. வெக்கமா இல்லையா?’ என்று நித்திலனின் மனசாட்சி அவனை காரித்துப்பியது.

தங்கச்சியை விட ஒரு நூல் நண்பனின் மேல் பாசம் அதிகமாக இருந்தது. இதை அறிந்ததாலோ என்னவோ தனக்காக அவனிடம் நியாயம் கேள் என்று நேத்ரா கேட்கவில்லை.

 

நித்திலனுக்கு சாணக்கியன் மீது அப்படி என்ன பாசமோ? நித்திலனுக்கு மட்டுமா இல்லை நேத்ராவுக்கும் அவன் மீது அளவு கடந்த காதல் தான். இல்லாமலா தனக்கு வேண்டாம் என்று ஒதுக்கிய நடிப்பை தனது லட்சியமாக எடுத்திருக்கிறாள்.

 

‘அன்னைக்கு அவ்வளவு பேசிட்டு எந்த மூஞ்சிய வைச்சிகிட்டு டி என் முன்னாடி தைரியமா வர? என் காதலுக்கும் சரி என் கதைக்கும் சரி நீ கொஞ்சம் கூட தகுதியானவ இல்லை. இந்த மானங்கெட்ட மனசு தான் அதை புரிஞ்சுக்காம உன் பக்கம் யோசிக்குது. எல்லாத்துக்கும் இன்னைக்கு ஒரு முடிவு கட்டுறேன். அது தான் நம்ப எல்லாருக்கும் நல்லது என்று விவகாரமாக ஒரு முடிவை எடுத்து அவளை உயிரோடு வதைக்க முடிவெடுத்து விட்டான்.

 

அலுவலகத்திற்கு வந்த நேத்ராவின் மனம் முழுவதும் அவளவனே நிறைந்திருந்தான்.

‘அப்போ நம்ப காதல் எல்லாம் நீங்க சொன்ன மாதிரி நடிப்பு தானா? என்னை விட கவி தான் உங்களுக்கு முக்கியமா? நான் உங்களுக்கு எப்பவும் வேண்டாமா?’ என்று மனதிற்குள் கதறினாள். வாய்விட்டு அழுகக்கூட முடியாத அவளது வாழ்க்கையை முற்றிலும் வெறுத்தாள்.

 

“நேத்ரா!” என்ற சாணக்கியனின் அழைப்பில் நிமிர்ந்தாள்.

“சொல்லுங்க சார்”

“சாரி உன்கிட்ட அப்படி நடந்துகிட்டதுக்கு. அதுக்காக நீ பாதில விலகாதே”

 

“உங்களால் தான் சுமாரான ஹீரோயின கூட சூப்பர் ஹீரோயினா மாத்த முடியுமே! இப்ப என்ன என்கிட்ட வந்து போகாதனு பேசிட்டு இருக்கீங்க? உங்களுக்கு தான் போறேன்னு சொல்ற யாரையும் பிடிச்சு வைக்கிற பழக்கம் இல்லையே. திருந்திட்டீங்களா என்ன?”

 

“தேவையில்லாம பேசாத டி. நான் நம்பள பத்தி பேச வரல. என் படத்தை பத்தி பேச வந்திருக்கேன்”

“எனக்கு தான் தெரியும் எப்பவும் நீ ஒரு சுயநலவாதினு”

 

“என்ன தான் டி உன் பிரச்சனை? எதுக்கு என் உயிரை எடுக்கிற? என்னை நிம்மதியா விட மாட்டியா?”

எட்டி அவன் சட்டையை பற்றியவள், “நானா டா உன் பின்னாடி அழைஞ்சேன்? நானா டா லவ் சொன்னேன்? நானா டா நீ இல்லனா உயிர விட்ருவேன்னு சொன்னேன். நானா டா என் தேவை முடிஞ்சதும் டிஸு பேப்பர் மாதிரி கசக்கி போட்டேன். த்து நீயெல்லாம் என்கிட்ட பேசவே தகுதி இல்லை போய்ட்டு!”

 

“ஹே என்ன டி சம்பந்தம் இல்லமா பேசுற? நான் என்ன கேக்குறேன் நீ என்ன பேசுற? நான் பர்சனல் பத்தி பேச வரல எனக்கு என் ப்ரோபஷன் முக்கியம். முடிவா சொல்லு நடிக்க முடியுமா முடியாதா?

“எனக்கு ரெண்டும் ஒன்னு தான். முடியாது டா உன்கூட என்னால வேலை பார்க்க முடியாது என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோ” என்றவள் கேரவனில் அவன் கொடுத்த அறையை திருப்பி ஒன்றுக்கு இரண்டாக கொடுத்தாள்.

    The post காதல் வளர்க்க ஒரு நேரம் – 2 appeared first on தூரிகை தமிழ் நாவல்கள்.

    ]]>
    https://thoorigaitamilnovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-2/feed/ 0 17268
    காதல் வளர்க்க ஒரு நேரம் – 1 https://thoorigaitamilnovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-1/ https://thoorigaitamilnovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-1/#respond Fri, 02 Feb 2024 10:10:11 +0000 https://thoorigaitamilnovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-1/ அத்தியாயம் – 1     “நந்தா!” என்ற கர்ஜனையில் கையில் இருந்த காகிதங்களை தவற விட்டிருந்தான். அருகே இருத்தவனிடம் அதை எடுக்க சொல்லி வேகமாக குரல் வந்த திசைக்கு ஓடினான்.   பயம் அத்தனை பயம் அந்த குரலுக்கு சொத்தகாரனான சாணக்கியன் மீது. நத்தாவிற்கு மட்டுமல்ல அந்த இடத்தில் இருந்த அனைவருக்கும் அவன் மீது அளவு கடந்த பயம்.   “சார்” என்று பம்பியவனை அழுத்தமாக பார்த்து, “நேத்ரா

    The post காதல் வளர்க்க ஒரு நேரம் – 1 appeared first on தூரிகை தமிழ் நாவல்கள்.

    ]]>

    Loading

    அத்தியாயம் – 1

     

     

    “நந்தா!” என்ற கர்ஜனையில் கையில் இருந்த காகிதங்களை தவற விட்டிருந்தான்.

    அருகே இருத்தவனிடம் அதை எடுக்க சொல்லி வேகமாக குரல் வந்த திசைக்கு ஓடினான்.

     

    பயம் அத்தனை பயம் அந்த குரலுக்கு சொத்தகாரனான சாணக்கியன் மீது. நத்தாவிற்கு மட்டுமல்ல அந்த இடத்தில் இருந்த அனைவருக்கும் அவன் மீது அளவு கடந்த பயம்.

     

    “சார்” என்று பம்பியவனை அழுத்தமாக பார்த்து,

    “நேத்ரா எங்கே?” என்றான். எச்சில் விழுங்கி, “இன்னும் ஸ்பாட்டுக்கு மேம் வரல சார்”.

    “வாட்” என்று அவன் எழுந்த வேகத்தில் அவன் அமர்த்திருந்த நாற்காலி பறந்தது.

     

    நெற்றியை நீவி, “ஏன்?” என்றான் ஒற்றை வார்தையில்.

    “நேத்து லேட் நைட் வர ஷூட்டிங் போனதால், இன்னைக்கு மதியம் தான் வருவாங்கலாம் .

     

    “யார கேட்டு அவ இப்படி பன்றா? இப்போ அவ இங்க வரனும். இல்லை நீ அப்படியே பொட்டி படுக்கையை கட்டிட்டு ஊருக்கு போயிடு” என்றவன் நந்தாவின் பதிலை கூடகேட்காமல், நேத்ரா இல்லாமல் எடுக்க வேண்டிய சீனுக்கான பேக்கிரவுண்டை மாற்றுமாறு ஆர்ட் டீமுக்கு கட்டளையிட்டு கேரவனுக்கு போனான்.

     

    சிங்கத்துகிட்ட இருந்து தப்பிச்சு புலிக்கிட்ட மாட்டின கதையாக, சாணக்கியனிடம் முடித்து நேத்ராவிடம் இப்போது வாங்கி கட்டிக்க உள்ளான் நந்தா. அவசரமாக நேத்ராவின் உதவியாளனுக்கு அழைத்து நடந்ததை கூறி எப்படியாவது நேத்ராவை அழைத்து வருமாறு கெஞ்சிஅழைப்பைத் தூண்டித்தான்.

     

    சாதாரண நடிகர்களை போல அவளை அழைத்து விட முடியாது. அவள் நேத்ரா அதுவும் சினிமா பின்னணி கொண்ட குடும்பத்தில் இருந்து வருபவளை கட்டளையிட்டு அழைக்க இயலாது.

     

    அவள் தந்தை விஸ்வநாதன் பிரபல தயாரிப்பாளர்களுள் ஒருவர், ஏன் இந்த படத்தை கூட அவர் தான் தயாரிக்கிறார். அம்மா சித்ராதேவி அந்தக் காலத்து பின்னணி பாடகி. திருமணம் அடுத்து அடுத்து குழந்தைகள் என்று முழுநேர இல்லதரசியாக மாறியவர் அவ்வப்போது சினிமா விழாகளில் மட்டும் பங்கேற்பார்.

     

    அண்ணன் நித்திலன் வளர்ந்து வரும் இயக்குனர். அவன் எடுத்த ஏழு படமும் மெகா ஹிட் அடித்து அவனுக்கேன்று ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி உள்ளான். தயாரிப்பாளராக தந்தை இருந்தும் அவரிடம் உதவி என்று நிற்காமல் சுயமாக தன்னை நிலை நிறுத்தியிருந்தான்.

     

    தங்கை ஆத்விக்கா இப்பொழுது தான் விசுவல் கம்யூனிகேசன் மூன்றாம் ஆண்டு படித்துக்கொண்டு இருக்கிறாள். அண்ணனை போல இயக்குனர் ஆகவேண்டும் என்பது அவளது ஆசை. ஆனால் அவளது குடும்பத்திற்கு அவள் ஒரு பாடாகி ஆக வேண்டும். பிள்ளைகளில் யாராவது தான் விட்ட இசையை தொடர வேண்டும் என்பது சித்ரா தேவியின் ஆசை. அதற்கு ஏற்றவாறு மூவரில் குரல் வளமும் இசை ஞானமும் ஆத்விக்காவுக்கு தான் அதிகம்.

     

    ‘காலேஜ் முடிச்சுட்டு நான் நல்லா யோசிச்சு சொல்றேன் அது வரை என் போக்குல விடுங்க!’ என்று அவள் கூறிவிட தங்களது அறிவுரைகளை நிறுத்திவிட்டனர்.

     

    தானாக அடிபட்டு இந்த இடத்திற்கு வந்ததாலோ என்னவோ அவனுக்கு சற்று திமிர் அதிகம். ஒரு படம்தான் நடித்திருக்கிறாள். இந்த வாய்ப்பு கிடைக்காமல் எத்தனை பேர் நாயாக அலைகிறார்கள்.

     

     தானாக கிடைத்தால் இப்படி தான் என்று அவள் மீது வன்மத்தை உருவாக்கிக் கொண்டான். 

     

    அனைவரையும் அதட்டி வேலை வாங்குபவன் இவளிடம் சற்று பொறுமையாக தான் நடந்துகொள்வான். காரணம் நித்திலன் தான். படத்தின் பூஜைக்கு வந்தவன் அவனை தனியாக அழைத்து, அவளது மரியாதையை பொது இடத்தில் கெடுத்து விடாதே என்று கூறி சென்றிருந்தான்.

     

    நண்பன் தான் என்றாலும் அவ்வளவு சீக்கிரம் எதையும் யாரிடமும் கேட்டு பழகாத நித்திலன், தன்னிடம் கேட்டு சென்ற காரணத்திற்காக இன்று வரை அமைதியாக இருந்தான்.

    சற்று வளைந்து கொடுத்தால் என்னவெல்லாம் செய்கிறாள் என்று அவள் மீது சினம் மேலும் அதிகரித்தது.

     

    முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பார்களே அது தான் இவர்களிடத்திலும் நடந்தது. தனது பத்தாவது படத்திற்கான கதையை எழுதி அவன் முடித்த சமயம் நேத்ராவின் அறிமுக படமான ருத்ரா பெரும் வெற்றியை பெற்றது.

     

    உச்சி முதல் பாதம் வரை அனைத்திலும் அவளது நடிப்பு கட்டிப் போட்டது. முதல் படம் என்று யாராவது கூறினால் நம்ப முடியாது. அந்த அளவிற்கு நடிப்பு அரக்கியாக தனது திறமையை கொட்டியிருந்தாள்.

     

    அவள் தந்தையிடம் கதையை கூற சென்றிருந்த நேரம் நித்திலனும் நேத்ராவும் அங்கு வந்திருந்தனர். மூவரிடமும் கதையை கூறி முடித்தவனுக்கு தெரியும் நிச்சயம் விஸ்வநாதன் அவனது படத்தை தயாரித்து தருவார் என்று.

     

    அதே போல கதையை கேட்ட விஸ்வநாதன் தானே படத்தை முழுவதுமாக தயாரித்து தருவதாக கூறி அவனிடம் அட்வான்ஸ் செக்கை நீட்டினார்.

     

    ” ஹீரோ ஹீரோயின் முடிவு பண்ணிட்டியா சாணக்கியா?” என்ற நித்திலனிடம்,

    “ஹீரோ நம்ப ஆத்ரேயன் தான். எழுதும் போதே அவன்கிட்ட பேசிட்டேன் அவன் பிரடியூசர் கிட்ட பேசிட்டு சொல்ல சொன்னான். ஹீரோயின் என்று நேத்ராவை பார்த்தவன்,

    “கால் சீட் இருந்த நம்ப நேத்ரா மேடமையே போடறலாம்” என்றான் இயல்பாக.

     

    ஏதோ போறப் போக்கில் தன்னை இணைத்தது போல நேற்றாவிற்கு தோன்றியது.

    “ஓகே சார். ஒரு ரெண்டு நாள் நல்லா யோசிச்சுட்டு சொல்றேன்” என்று சாதாரணமாக கூறி அவர்களிடமிருந்து விடைபெற்றாள் நேத்ரா.

     

    விஸ்வநாதனும் நித்திலனும் சற்று யோசனை ஆக செல்லும் நேத்ராவை பார்த்தனர். மனதில் வியப்பும் சற்று கோபமும் சாணக்கியனுக்கு எட்டிப் பார்த்தது.

    ‘என் படத்தில் நடிக்க எத்தனையோ பேர் லைன்ல காத்துக்கிட்டு இருக்காங்க. இவ என்ன யோசிச்சு சொல்றேன்னு சொல்றா?’ என்று நினைத்தான்.

     

    அவள் நிராகரித்ததுக்கு ஒரு காரணம் இருக்கும், அவரவருக்கு ஒரு கருத்து இருக்கும் என்பதை அந்த இயக்குனர் மறந்து விட்டான்.

    பின் படம் சம்பந்தப்பட்ட சில விஷயங்களை பேசி தேர்வு செய்துவிட்டு அவன் அலுவலகத்திற்கு கிளம்பினான். 

     

    நேத்ராவின் வீட்டிற்கு வந்த உதவியாளன் ரிதேஷ் அவளை அலைபேசியில் தொடர்பு கொண்டான். அது தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளது என்று கணினி குரலில் கூற 

    படபடப்பானான்.

     

    கையை பிசைந்து நின்று கொண்டிருந்தவனை மேலே இருந்து பார்த்த நித்திலன் உள்ளே அழைத்தான்.

     

    “ரித்தீஷ் என்ன ஆச்சு? ஏன் இப்படி டென்ஷனா இருக்க?”

     

    “சார் நேத்ரா மேடம் போன ஆப் பண்ணி வச்சிருக்காங்க. தூங்கும் போது டிஸ்டர்ப் பண்ணா ரொம்ப கோபப்படுவாங்க. ரூமுக்கும் இப்போ போக முடியாது. இன்னைக்கு காலையில மேடமுக்கு செட்யூல் இருக்கு. சாணக்கியன் சார் வேற அங்க எரிமலை கொதிச்சிட்டு இருக்காரு. இப்ப மேடம் மட்டும் அங்க போகலைன்னா ஏ.டி நந்தாவை வேலையை விட்டு தூக்கிருவேன்னு செம டோஸ் கொடுத்து இருக்காரு.” என்று படபடவென ஒப்பித்தான்.

     

    “நீ வெளியில வெயிட் பண்ணு. கொஞ்ச நேரத்தில நேத்ரா வருவா” என்று அவள் அறைக்கு விரைந்தான்.

    அவனும் ஒரு இயக்குனர் அல்லவா? படத்தின் நாயகி இப்படி செய்தால் எப்படி இருக்கும் என்பதை நன்கறித்தவன். எதுவும் தெரியாதவர் இதை செய்தாலே ஏற்கமாட்டான். தனது குடும்பத்திலேயே இந்த தவறு நடந்தால் அதை ஏற்றுக் கொள்வானா என்ன?

     

    “நேத்ரா கதவ தொற!” என்று அவன் தட்டிய தட்டில் பக்கத்து அறையில் இருந்த ஆத்மிகா கூட வெளியே வந்து விட்டாள். வரவேண்டியவளோ பொறுமையாக வெளியே வந்து, “என்ன அண்ணா?” என்றாள்.

     

    “மணி என்ன? ஷூட்டிங் போகாம இன்னும் என்ன பண்ணிக்கிட்டு இருக்க?”

     

    “ம்ப்ச் மூணு மணிக்கு தான் நேத்து ஷூட்டிங் முடிஞ்சுது. கொஞ்சம் கூட ரெஸ்ட் வேண்டாமா? இதுக்கு தான் படத்துல நடிக்க மாட்டேன்னு சொன்னேன். நீயும் அப்பாவும் ஏதேதோ சொல்லி அவன் கிட்ட கோர்த்து விட்டுட்டீங்க. எப்படி நிக்கணும் சிரிக்கணும்னு இருந்து எப்ப தூங்கணும் எந்திரிக்கணும்னு டைம் டேபிள் போட்டு என்னை சாவடிக்கிறான். என்னால முடியாது நான் இன்னைக்கு லஞ்ச் டைம் தான் போவேன்” என்று தர்க்கம் செய்தாள்.

     

    “கொஞ்சமாச்சும் டெடிகேஷனோட இரு நேத்ரா. அங்க இருக்கவங்களுக்கு மட்டும் தூக்கம் வராத டையட் ஆகாதா? ஈஸியா கிடைச்சனால் உனக்கு அந்த வெல்யூ தெரியல.”

     

    “இப்போ நீ எதுக்கு இதல்லாம் பேசிட்டு இருக்க. உனக்கு கால் பண்ணானா?

    ” எனக்கு ஒன்னும் அவன் பேசல. நந்தா ரித்தீஸ்கிட்ட பேசிருக்கான். உன் போன் ஆப்ல இருந்தனால ரித்தீஸ் வீட்டுக்கு வெளிய நின்னுட்டு இருந்தான். “

     

    “ஓ….. சரி கொஞ்ச நேரம் வெயிட் பண்ணட்டும் நான் பொறுமையா போய்கிறேன்.”

     

    “ஏய் லூசு! உன்னால அங்க ஒருத்தனோட வேலை ஊசலாடிட்டு இருக்கு. ஒழுங்கா கிளம்பி போ. அவன் ஒரு கிறுக்கன் அப்பறம் கிடைக்கிற நேரம் எல்லாம் உன்னை வச்சு செய்வான் பார்த்துக்கோ. என்கிட்ட வந்து நிற்க கூடாது, நான் எதுவும் கேட்க மாட்டேன் அவன்கிட்ட”

     

    “அடேய் உன் பிரண்டு நல்லவன், வல்லவன். அவன் படத்துல நடிச்சா நல்ல ஸ்கோப் இருக்கு. என் கேரியருக்கு அது முக்கியம். நம்ம ப்ரொடக்ஷன்ல வேற நானே நடிக்கலேன்னா அது ஒரு பெரிய நியூஸா மாறும்னு, என்னென்னமோ சொல்லி அந்த சைக்கோ கிட்ட கோர்த்து விட்டுட்டு, உன்கிட்ட வரக்கூடாதுன்னு வேற சொல்லுவியா?”

     

    “பத்து நிமிஷத்துல கிளம்புனா அப்பா கூட போய் எஸ்கேப் ஆகிடலாம். அவ்ளோதான் நான் சொல்லுவேன்” என்று நகர்ந்தான்.

     

    “நான் என்ன சின்ன பொண்ணா, அப்பா பின்னாடி ஒளிஞ்சுட்டு போக. அவனுக்கு எல்லாம் அவ்வளவு சீன் இல்ல. நான் கரெக்ட் டைம்க்கு போகணும்னா, அவன் சரியா என்ன விட்டு இருக்கணும். இப்ப போறேன் அதுவும் அவனுக்கு பயந்துட்டு இல்ல என்னால நந்தா வேலை போய்ட கூடாதுனு தான் போறேன்” என்றவள் பத்து நிமிடத்தில் கிளம்பி பூகம்பத்திடம் சென்றாள்.

     

    செல்லும் அவளைப் பார்த்த ஆத்விகா, “அண்ணா என்ன ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு இன்னைக்கு கூட்டிட்டு போறியா?”

    சந்தேகமாக அவளைப் பார்த்தவன், “என்னவாம்?” என்று புருவம் உயர்த்தி கேட்டான்.

     

    “அக்கா போற வேகத்துக்கும் அவர் அங்க இருக்க கோபத்துக்கும் ஒரு நல்ல சீன் இருக்குன்னு என் பட்சி சொல்லுது. எனக்கு வேற நாளைக்கு ஸ்கிரிப்ட் சப்மிட் பண்ணனும். ஏதாவது சீன் கிடைச்சா அதை டெவலப் பண்ணி எழுதிருவேன்.” என்றவளை வெட்டவா குத்தவா என்ற பார்த்தான்.

     

    “உன் போதைக்கு அவங்க ஊறுகாயா? ஒழுங்கா போய் காலேஜ் கிளம்புற வேலைய பாரு” என்று அவள் தலையில் கொட்டி அனுப்பி வைத்தவன், அவன் வேலையை பார்க்க சென்றுவிட்டான்.

     

      The post காதல் வளர்க்க ஒரு நேரம் – 1 appeared first on தூரிகை தமிழ் நாவல்கள்.

      ]]>
      https://thoorigaitamilnovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-1/feed/ 0 17266
      காமதேவனின் காதல் தூது 2 https://thoorigaitamilnovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%ae%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%af%82%e0%ae%a4%e0%af%81-3/ https://thoorigaitamilnovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%ae%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%af%82%e0%ae%a4%e0%af%81-3/#respond Wed, 29 Nov 2023 01:56:19 +0000 https://thoorigaitamilnovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%ae%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%af%82%e0%ae%a4%e0%af%81-3/ கிழிந்தும்கிழியா பட்டமாய்சாய்ந்தும்சாயா மரமாய் ஊசலாடி தவிக்க செய்கிறதுகாதல் முறிவு! தூது 2 : கதிரவன் தன் கதிர்களால் சுள்ளென சுட்டெரிக்காமல் புன்னகையுடன் இதமாய் மேனியை தீண்ட செய்த, பின்மதிய நேரத்தில் “சுந்தரி பெண்கள் மேல்நிலைப்பள்ளி” சுறுசுறுப்பாய் இயங்கி கொண்டிருந்தது. பெரும்பாலான வகுப்பறைகளில் பாடம் சொல்லி தரும் ஆசிரியர்களின் கணிர் குரல்களும், சில வகுப்புகளில் மாணவர்களின் கசகச குரல்களும் ஒலித்து அந்த மதியநேர அமைதியை கலைத்துக் கொண்டிருந்தது. ஆகமொத்ததில் அனைவரும் பாடம்

      The post காமதேவனின் காதல் தூது 2 appeared first on தூரிகை தமிழ் நாவல்கள்.

      ]]>

      Loading

      கிழிந்தும்கிழியா பட்டமாய்
      சாய்ந்தும்சாயா மரமாய்
      ஊசலாடி தவிக்க செய்கிறது
      காதல் முறிவு!

      தூது 2 :

      கதிரவன் தன் கதிர்களால் சுள்ளென சுட்டெரிக்காமல் புன்னகையுடன் இதமாய் மேனியை தீண்ட செய்த, பின்மதிய நேரத்தில் “சுந்தரி பெண்கள் மேல்நிலைப்பள்ளி” சுறுசுறுப்பாய் இயங்கி கொண்டிருந்தது.

      பெரும்பாலான வகுப்பறைகளில் பாடம் சொல்லி தரும் ஆசிரியர்களின் கணிர் குரல்களும், சில வகுப்புகளில் மாணவர்களின் கசகச குரல்களும் ஒலித்து அந்த மதியநேர அமைதியை கலைத்துக் கொண்டிருந்தது.

      ஆகமொத்ததில் அனைவரும் பாடம் கற்பிப்பதிலும், கற்பதிலும் கவனம் கொண்டிருக்க அந்த மிகப்பெரிய பள்ளியின் பரந்து விரிந்திருந்த விளையாட்டு மைதானத்தின் மத்தியில் தன் கிளைகளை பரப்பியபடி ஒய்யராமாய் நின்றிருந்தது ஓர் மரம்.

      மரத்தின் நிழலில் மாணவர் குழு ஒன்று அமர்ந்தபடி அங்கு மென்மையாய் வீசிக் கொண்டிருந்த தென்றலின் சுகத்துக்கு இன்னும் இனிமை கூட்ட தங்களின் குரல்களில் தேன் சொட்ட பாடிக் கொண்டிருந்தனர்.

      அவர்கள் அனைவரும் இன்னும் இரண்டு நாட்களில் வரவிருக்கும் அவர்கள் பள்ளியின் தாளாளரின் வரவேற்பில் பாடுவதற்காய் தான் பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

      குயில் மயில் குயில்கள் காணும் வெண்ணிலா
      வானோடு தீட்டி வைத்ததார்…
      தரை இறங்கி வந்து ஆடுகின்றதே
      நிலவை கூட்டி வந்ததார்

      ஆறில் இருந்து எட்டாம் வகுப்பு வரை சேர்ந்த பத்து பிள்ளைகள் அடங்கிய குழு அது. அவர்களின் சின்ன குரலில் அந்த பாடல் மெல்லிய ராகமாய் மனதை கவரும்படி இசைந்தது.

      அவர்கள் அனைவரின் குரலும் இணைந்து ஒலித்ததில் அந்த பாடல் வரிகள் இன்னும் அழகாய் மாறுவதை ரசனையுடன் பார்த்துக்கொண்டிருந்தாள் அந்த பள்ளியின் இசை ஆசிரியர் பாகிரதி.

      கடற்மணல் வண்ண தேகம் சூரியனின் மென்மையான தீண்டலில் பளபளக்க, செவ்வண்ண இதழ்களுடன் கண்களும் புன்னகைக்க அவள் பாடலை ரசித்து நின்ற தோற்றத்தை ரகசியமாய் தூரத்தில் நின்று ரசித்தது ஒரு ஜோடி கண்கள்.

      அவளை இன்னும் அருகே பார்க்க நெஞ்சம் விளைய எதை பற்றியும் யோசிக்காமல் அவள் அருகே சற்று தள்ளி வந்து நின்றது அந்த கண்களுக்கு சொந்தமான உருவம்.

      சில நிமிடங்கள் கடந்த பிறகும் பெண்ணவளின் பார்வை தன்புறம் திரும்பாததில் அந்த கண்களில் சிறு சலிப்பு வந்தது.

      அதனால், “அடடா! என்ன பசங்களா நீங்க? இந்த பாட்டை எல்லாம் யாராவது ஸ்கூல்ல பாடுவாங்களா? யார் இந்த மாதிரி பாட்டை எல்லாம் தேர்ந்தெடுக்குறது?”

      என்று சத்தமாய் கேட்டு அவளின் கவனத்தை தன்புறம் திருப்பினான் கரண், பள்ளியில் ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பிற்கு கணக்கு பாடம் எடுப்பவன்.

      அவனின் கேள்வியில் மாணவர்கள் பாகிரதியை பார்த்தனர். இத்தனை நேரம் அவனின் வரவை அறிந்தும் தெரியாதது போல் நின்றிருந்தவள் இப்பொழுது வேறு வழியின்றி கரணிண் புறம் திரும்பினாள்.

      “ஏன் சார் இந்த பாட்டுக்கு என்ன ?”

      “இல்ல ரதி! இந்த மாதிரி பாட்டெல்லாம் உங்களை மாதிரி அழகான யங் கேர்ள்-க்கு தான் சரியா இருக்கும்” கரணின் கண்களில் ரசனை வழிந்தது.

      முகம் இறுக, “அது இருக்கட்டும் சார்! எனக்கு ஒரு சந்தேகம் பிள்ளைங்களுக்கு பாடம் சொல்லி கொடுக்குற வாத்தியாருக்கு மரியாதையை வேற யாராவது சொல்லிகொடுக்கனுமா என்ன?”

      அழுத்தமாய் கேட்டவளின் கேள்வியில் ‘எனக்கு நீ மரியாதை கொடுத்து தான் ஆக வேண்டும்’ என்ற செய்தி தொணித்தது.

      “ஓ ரதி!” என அவன் சமாதானமாய் பேச வர,

      “கரண் சார்! கால் மீ பாகிரதி மேடம்” என கட்டளையாய் சொன்னவளிடம் மாணவர்கள் முன் வேறு எதுவும் பேசமுடியாததால் அமைதியாய் தலையசைத்து அங்கிருந்து நகர்ந்தான்.

      பாகிரதி மாணவர்களிடம், “ஓகே ஸ்டூடன்ட்ஸ்! இன்னும் ஒருமுறை முதல்ல இருந்து பாடுங்க” என தன் வேலையை கவனிக்க ஆரம்பித்தாள்.

      மாணவர்களிடம் கடுமை கூடாது என தனக்குதானே சொல்லி கரணிண் செயலில் தனக்குள் உண்டான கோபத்தை குறைக்க முற்பட்டாலும் மாணவர்கள் முன்னான அவனின் பேச்சும், பார்வையும் பாகிரதிக்கு எரிச்சலை தான் தந்திருந்தது.

      ‘இடியட்! ஸ்டூடன்ட்ஸ் முன்னாடி எப்படி நடந்துக்கனும்னு கூட தெரியாத இவனுக்குலாம் யார் வாத்தியார் வேலை கொடுத்தது தெரியலை’ என மனதினுள் பொறுமினாள்.

      அவளின் அந்த கோபம் மாலை வீட்டிற்கு கிளம்பும் வரை தொடர, ஆசிரியர்கள் அறையில் எரிச்சலுடன் தனது பொருட்களை எடுத்துக் கொண்டிருந்தவேளை மற்றவர்களும் கிளம்பியபடி இருந்தனர்.

      தங்கள் அறையில் இருந்து வெளியில் வந்தவள் முன் ஆண்கள் ஆசிரியர் அறையில் இருந்து வெளியில் வந்த இருவர் சென்று கொண்டிருக்க, ‘சரி அவர்கள் செல்லட்டும் நேரம் கடந்தால் தானும் சற்று நிதானம் கொள்வோம்’ என எண்ணி மெதுவாய் எட்டுவைத்தாள்.

      அவளின் போதாத காலம் உன் எரிச்சல் நீங்குவது அத்தனை சுலபம் அல்ல என சொன்னது போலும். அவளின் முன் சென்ற இருவரில் பாலா என்னும் ஆசிரியர்,

      “ரவி சார்! இங்க ரெக்கமென்டேஷனுக்குலாம் இடமில்லனு தான் பேரு ஆனா பாருங்க! கரண் சாருக்கு மட்டும் தனி கவனிப்பு தான் போலயே. பாருங்க அவரை மட்டும் ஆளே காணோம். எந்த வேலையா இருந்தாலும் பெரிய ஆளுங்களை தெரிஞ்சி வச்சிருந்தோம்னா நம்ப தனிதான் போலயே”

      “ஏய்! ஏன்பா? எதுக்கு இப்போ இப்படி கத்தி பேசிட்டு இருக்க. அந்த கரண் பெரியவருக்கு வேண்டபட்டவன்னு பேச்சு அடிபடுது. மத்தவங்களை வம்பு பேசுறது போல அவன்கிட்ட பண்ணாம அவன் பக்கமே போகாம பார்த்து ஒழுங்கா இருந்துக்கோ” என எச்சரித்தார் அவனின் உடன்வந்த ரவி என்னும் ஆசிரியர்.

      அவர்கள் பேச்சில் எரிச்சல் பண்மடங்காய் பெருக அதை யாரிடமும் காட்டிக்கொள்ளாமல் தனது இருசக்கர வாகனத்தை எடுத்து கொண்டு கிளம்பினாள் பாகிரதி.

      எப்படி எந்த வேகத்தில் சென்றாளோ அடுத்த பத்து நிமிடத்தில் கிழக்கு கடற்கரை சாலையில் குறிபிட்ட ஓர் வீட்டின் முன் வண்டியை நிறுத்தி இறங்கினாள்..

      வண்டியை அதன் இடத்தில் நிறுத்தியவள் விறுவிறுவென வீட்டுக்குள் சென்று அங்கிருந்த சோபாவின் ஒருபுறம் தனது கைப்பையை விசிறி அடித்து மறுபுறம் தொப்பென்று அமர்ந்தாள்.

      அவள் தொப்பென்று அமர்வதற்கும் அவள் தோளில் தொப்பென்று அடி விழுவதற்கும் சரியாய் இருந்தது. வண்டியின் சத்தத்தில் தன் அறையில் இருந்து வெளிவந்திருந்த அவளின் அன்னை தான் அவளை அடித்தது.

      “ஆ..அவுச்! மா! எதுக்கு இப்போ என்னை அடிச்ச” வலியில் சிணுங்கியவளிடம்,

      “ஏன்டி எத்தனை தடவை சொல்லிருக்கேன் எந்த பொருளையும் தூக்கி போடாம ஒழுங்கா வைக்கனும்னு. சொல்வது ஒன்னையும் கேக்குறது இல்ல இந்த லட்சணத்துல இவங்க ஸ்கூல்ல டீச்சர் வேற”

      முகத்தை கோணலாக்கியபடி நொடித்தார் அன்னலட்சுமி, பாகிரதியின் தாய்.

      “மா! சும்மா சும்மா இதே சொல்லாத நான் வெறும் பாட்டு டீச்சர் தான் பீடி டீச்சர் இல்ல”

      “எந்த டீச்சரா இருந்தா என்னடி ஒழுக்கத்தை யார் வேணா சொல்லி கொடுக்கலாம்”

      “க்கும்! கொடுக்குறாங்க நல்லா… இந்த டையலாக்கை எல்லாம் முதல்ல உன்னோட தொம்பிக்கு சொல்லு. எப்போ பாரு என்னை எரிச்சல் பண்ணுறதையே வேலையா வச்சிருக்கான்”

      மதியம் முதல் இருந்த எரிச்சல் நீங்க படபடவென பேசிக் கொண்டிருந்தவளின் வாயிலே பட்டென்று ஒன்று வைத்தார் அன்னலட்சுமி.

      “ச்சு.. மா!”

      “என்ன டி அம்மா! அவனை மரியாதையா ‘மாமா’னு கூப்பிடுனு எத்தனை தடவை சொல்லிருக்கேன். என்னிக்கா இருந்தாலும் உன்னை கட்டிக்க போறவன் அவன் தான் சொல்லிட்டேன்”

      கோவமாய் முறைத்த அன்னையிடம் ‘முடியாது’ என்று சொல்ல பாகிரதிக்கு வாய் வரை வார்த்தை வந்தது தான். அன்னையிடம் அதை சொல்லும் தைரியமும் அவளுக்கு நிரம்பவே உள்ளது.

      ஆனால் அவளின் தந்தையை நினைக்கும் பொழுது மனதில் எழுந்த வார்த்தைகள் அனைத்தும் தொண்டைக்குள்ளே அடைந்து கொண்டது. அப்படி வார்த்தைகளை அடக்கியதில் அவளுக்கு கண்கள் கலங்கியது.

      அவளின் கலங்கிய கண்கள் அன்னலட்சுமியை வருத்த ஒன்றும் சொல்லாமல் அருகே இருந்த சோபாவில் அமைதியாய் அமர்ந்துவிட்டார்.

      கிழக்கு கடற்கறை சாலை என்றாலே வீடுகள் அத்தனை நெருக்கமாய் இருக்காது. இதில் இவர்கள் வசிக்கும் பகுதியி மேல்தட்டி மக்கள் வசிக்கும் பகுதி ஏன் இவர்களின் வீடு கூட வெறும் வீடு அல்ல குட்டி பங்களா என்று தான் சொல்ல வேண்டும்.

      அத்தனை பெரிய வீட்டில் தற்பொழுது இவர்கள் இருவர் மட்டுமே இருக்க அவர்களின் இடையே நெளிந்த அமைதி பூதகரமாய் தோன்றியது.

      சில நிமிடங்கள் சென்று வெளியில் கேட்ட வண்டியின் சத்தத்தில் கூட இருவரும் கலையாமல் இருக்க அங்கு நிலவிய அமைதியில் புருவங்களை சுருக்கியபடி யோசனையுடன் வீட்டினுள் நுழைந்தான் கரண், கருணாகரண். பாகிரதியின் அன்னை அன்னலட்சுமியின் தம்பி, பாகிரதிக்கு தாய்மாமன்.

      வீட்டினுள் வந்தவுடன் அன்னையும், மகளும் ஆளுக்கு ஒருபுறம் அமர்ந்திருந்த கோலத்திலே இருவருக்கும் ஏதோ சண்டை என அவனுக்கு புரிந்துவிட்டது..

      “என்ன கா! ரதியை என்ன சொன்ன? ஏன் கா தினம் அவளை எதாவது சொல்லலைனா உனக்கு தூக்கம் வராதா?”

      எதையும் விசாரிக்காமல் எடுத்தவுடன் பாகிரதிக்கு ஆதரவாய் பேசியவனின் பேச்சில் அன்னலட்சுமிக்கு தம்பியின் மனம் அறிந்து முகம் எல்லாம் சிரிப்பு தான்.

      “பார்த்தியாடி அவனுக்கு உன் மேல எவ்வளவு பாசம்னு. என்ன நடந்துச்சுனு கூட கேக்கல ஆனாலும் உன் மேல தப்பிருக்காதுனு பேசுறான் பாரு”

      இத்தனை நேரம் மகளிடம் கொண்ட கோவம் எல்லாம் எங்கோ ஓடியிருக்க சிலாகித்து சொன்னவரை முறைத்து பார்த்தாள் பாகிரதி .

      “ச்சு அக்கா! போதும். எனக்கு தலை வலிக்கிது ஒரு கப் டீ போட்டு தாங்க” தமக்கையின் கேலியில் கரண் தன் தலைமுடியை கோதியபடி பேச்சை மாற்றினான்.

      தாயின் பேச்சும், கரணிண் செய்கையும் பிடிக்காத பாகிரதி இடவலமாய் தலையசைத்தபடி தன் அறை நோக்கி சென்றாள். அசைவில் அத்திசை பார்த்த கரண் அவளின் வேகநடையை வெட்கம் என எண்ணிக்கொண்டான்.

      “ம்க்கும் க்கும்! நான் இன்னும் இங்க தான் டா இருக்கேன் தம்பி”

      தமக்கையின் செறுமலில் நெளிந்தவாறு, “அக்காகா! நீ இருக்க பாரு.. போ கா” என அழகாய் வெட்கப்பட்டான்.

      அன்னலட்சுமி அருகே வந்து அவனின் முகத்தை வழித்து திருஷ்டி உடைப்பது போல் செய்தவர், “என் அழகு தம்பி! என் கண்ணே பட்டுடும் போல . அவ்வளவு பாசமா டா அவ மேல? உங்க மாமா வரட்டும் சீக்கிரமே அவர்கிட்ட சொல்லி உங்க கல்யாணத்தை முடிக்கிறேன்” என்றார்.

      “அக்கா! இப்போ என்ன அவசரம்? இத்தனை வருஷம் கழிச்சு ரதி இப்போதான் இங்க வந்திருக்கா இன்னும் அவ எனக்கூட பழகவே இல்லை”

      -என்ற கரணிண் நினைவெல்லாம் இன்று மதியம் பாகிரதி தன்னிடம் நடந்து கொண்ட முறையில் தான் சிந்தனையானது.

      “அதெல்லாம் உங்க கல்யாணம் முடிஞ்சதும் அவ பழகிப்பா. உங்க கல்யாணம் என்னோட ஆசை மட்டும் இல்லடா உங்க மாமாவும் இதை தான் விரும்புறாருனு நினைக்கிறேன். அதனால தான் இத்தனை வருஷம் இல்லாம திடிருனு இப்போ அவளை இங்க வரவச்சிருக்காருனு போல”

      சந்தோஷமாய் தன் கணவனும் அப்படிதான் நினைப்பார் என எண்ணிக்கொண்டு அவர் பேசினார்.

      அறைக்குள் சென்று அமர்ந்திருந்த பாகிரதிக்கு வெளியே இவர்கள் இருவர் பேசுவதும் தெளிவாய் கேட்க அடுத்து இதில் தான் என்ன செய்வது என குழப்பமாய் உணர்ந்தாள்.

      அவளின் குழப்பம் நடந்துமுடிந்த சில விஷயங்களை யோசிக்க யோசிக்க பயமாய் மாறியது. அவ்வேளையில் தன் பயம் போக்கும் ஆபத்பாந்தவனை தேடி அவளின் மனம் அலைபுற்றது.

      கைகள் அன்னிச்சையாய் தனது கைப்பையில் இருக்கும் கைப்பேசியை எடுத்து அதில் குறிப்பிட்ட செயலியை தேடி ஒரு பெயரை தட்டியது.

      இரு நொடிகளில் “ரதி தேவன்” என்னும் பெயருடன் சிலபல கவிதைகள் அடங்கிய புகைபடங்களுடன் விரிந்தது அப்பக்கம்.

      நடுக்கம் கொண்ட கையின் இருவிரல் கொண்டு அப்பெயரை வருடியவளின் பயம் சிறிது சிறிதாய் விலக, நெஞ்சில் சற்று தைரியமும் துளிர்த்தது.

      இரு நிமிடங்களில் அவளின் பழைய தைரியம் மீண்டுவிட தெளிவாய் உணர்தவளின் பார்வை அந்த பக்கத்தில் உலா வர அவ்வேளையில் அதில் புதிதாய் ஓர் கவிதை பதிவேற்றபட்டதாய் செய்தி வந்தது.

      அவளின் கரம் அதை தொட, அவளின் முன் விரிந்தது அக் கவிதை,

      என் உணர்வை கொன்று
      உயிரை கொண்டு
      சென்றவளை தேடி
      ஓடி வருகிறேன்
      ஆயிரம்கால்களுடன்

      – ரதி தேவன்

      அதை வாசித்தவுடன் வியப்பில் விழிவிரித்தாள்.

      ‘நீ வருவேன்னு தெரியும் ஆனா இவ்வளவு சீக்கிரம் உன் கோவம் தீர்ந்து வருவேன்னு நான் எதிர்பார்க்கலை. ஆனா நீ என்ன நினைச்சி வரியோ அது கண்டிப்பா நடக்கபோறதில்லடா. நம்பளோட முறிஞ்ச உறவு முறிஞ்சதுதான்’

      வலித்தாலும் இதுதான் நிதர்சனம் என தன் மனதோரம் மெல்ல சொல்லியவளின் நெஞ்சுரத்தை சோதிக்கவென்றே வரபோகிறான்
      ஒருவன்.

      அத்தனை திடத்துடன் தான் பதிவிட்ட கவிதையை தானே மீண்டுமாய் வாசித்தபடி ஆயிரம் கால்கள் கொண்டு ஓடி வந்த தொடர்வண்டியின் ஒரு பெட்டியில் தன் இருக்கையில் ஒய்யாரமாய் அமர்ந்திருந்தான் மதனன், ரதியின் மதனன்.

      – தூது தொடரும்

      • Select

      The post காமதேவனின் காதல் தூது 2 appeared first on தூரிகை தமிழ் நாவல்கள்.

      ]]>
      https://thoorigaitamilnovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%ae%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%af%82%e0%ae%a4%e0%af%81-3/feed/ 0 16716
      காமதேவனின் காதல் தூது 1 https://thoorigaitamilnovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%ae%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%af%82%e0%ae%a4%e0%af%81-2/ https://thoorigaitamilnovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%ae%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%af%82%e0%ae%a4%e0%af%81-2/#comments Tue, 21 Nov 2023 13:08:38 +0000 https://thoorigaitamilnovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%ae%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%af%82%e0%ae%a4%e0%af%81-2/ கை சேராது என தெரிந்தும்சேர்ந்தால் எப்படி இருக்கும்என ஏங்க செய்யும்?இந்த காதல் முறிவு! தூது 1 : “பாப்கார்ன்… பாப்கார்ன்..” “கடல கடல வேர்கடல மேடம்… சார்! சூடான வேர்கடல இருக்கு சார்…” என கூவும் வியாபாரிகளின் குரலும், “மா! சரியான நேரத்துக்கு வந்துட்டேன் மா.. ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் கூட தான் இருக்காங்க மா” “மச்சி! ட்ரைன் கிளம்புற டைம் ஆகிடிச்சிடா மிஸ் பண்ணாம சரியா வந்து ஏறிடுவியா?” என்ற

      The post காமதேவனின் காதல் தூது 1 appeared first on தூரிகை தமிழ் நாவல்கள்.

      ]]>

      Loading

      கை சேராது என தெரிந்தும்
      சேர்ந்தால் எப்படி இருக்கும்
      என ஏங்க செய்யும்?
      இந்த காதல் முறிவு!

      தூது 1 :

      “பாப்கார்ன்… பாப்கார்ன்..”

      “கடல கடல வேர்கடல மேடம்… சார்! சூடான வேர்கடல இருக்கு சார்…” என கூவும் வியாபாரிகளின் குரலும்,

      “மா! சரியான நேரத்துக்கு வந்துட்டேன் மா.. ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் கூட தான் இருக்காங்க மா”

      “மச்சி! ட்ரைன் கிளம்புற டைம் ஆகிடிச்சிடா மிஸ் பண்ணாம சரியா வந்து ஏறிடுவியா?” என்ற பயணிகளின் கலவையான குரல்களும் தொடர்ந்து கொண்டிருக்க அந்த ரயில்நிலையம் பரபரப்புடன் இயங்கி கொண்டிருந்தது.

      அங்கு கிளம்புவதற்கு தயாராய் நின்றிருந்த ரயிலின் ஒரு பெட்டியில், “டேய் ஜீவா! என்னடா இது?”
      என ஒலித்தது ஜீவாவின் நண்பன் அஜயின் குரல்.

      அவன் எதை கேட்கிறான் என்பதைபோல் நிமிர்ந்த ஜீவா, நண்பனின் பார்வை தன் கையில் இருப்பதில் பதிந்திருப்பதை கண்டான்.

      ஒரு பெருமூச்சுடன், “இது எனக்கு அவ கொடுத்தது டா! முதல்முதல்ல எனக்காகனு அவ கொடுத்த மோதிரம்” என்றவனின் குரலில் வெளிபட்டதெல்லாம் காதலையையும் தாண்டிய வலி மட்டுமே.

      “அது தெரியும் மச்சான்! ஆனா உங்களுக்கு பிரேக்கப் ஆனப்போ அவ கொடுத்த எல்லாத்தையும் திரும்ப கொடுத்திட்டேனு சொன்னியே?” என கேட்டபடி அவன் அருகே அமர்ந்தான்.

      அஜயின் கேள்விக்கு பதில் எதுவும் சொல்லாமல் அமைதியாய் அமர்ந்திருந்தவனை பார்த்தபடியே அங்கு வந்தான் அவர்களின் மற்றொரு நண்பன் மதனன்.

      “என்னடா! அவன் கேக்கிற கேள்விக்கு அமைதியா இருக்க? சொல்ல வேண்டியது தான, அன்னிக்கு அவ முன்னாடி அவள்-லாம் எனக்கு ஒன்னுமே இல்லனு காட்டுறதுக்காக தான் அவ வாங்கி கொடுத்ததெல்லாம் தூக்கி வீசுனேன். அடுத்து அவ போனப்றம் போய் எல்லாத்தையும் பொறுக்கிட்டு வந்துட்டேனு”

      நக்கலாய் சொல்லியவனை ஜீவா உணர்வில்லாமல் பார்க்க அஜய் தான்,

      “டேய் என்னடா இப்படி பேசுற?” என கடிந்துக் கொண்டான்.

      “வேற எப்படி டா பேச சொல்ற? இவன்தான் முதல்ல பிரியுறதுனு முடிவெடுத்தான். அப்றம் என்ன இதுக்கு இப்போ இப்படி சீன் போட்டுட்டு இருக்கான்”

      “டேய் மச்சி! உனக்கு காதல் பிடிக்காதுனு தெரியும், ஆனா அதுக்காக அவன் அவனோட காதலுக்காக ஃபீல் கூட பண்ணகூடாதுனு நீ சொல்றதுலாம் ரொம்ப அதிகம் டா” என ஜீவாவுக்காய் பேசினான் அஜய்.

      அவனை ஒருமாதிரி பார்த்து, “எது இவன் பண்ணது காதலா? காலேஜ்ல இருக்க போற மூணு வருஷத்தை ஓட்டுறதுக்கு முதல் வருஷத்துலயே ஒருத்தரை பிடிக்கவேண்டியது அடுத்த மூணு வருஷம் நல்லா பேசி பழகிட்டு காலேஜ் முடிய போற நேரத்துல கழட்டிவிட்ற வேண்டியது”

      மதனன் குறையா கோபத்துடன் பொறிய, அவன் பேச்சை காதிலே வாங்காமல் தன் கையிலிருந்த மோதிரத்தில் மட்டுமே பார்வையை பதித்திருந்தான் ஜீவா.

      அதில் கடுப்பான மதனன் மீண்டும் ஏதோ சொல்ல வர, அவர்கள் அமர்ந்திருந்த அந்த ரயில் பெட்டியில் ஆட்கள் ஏற தொடங்கினர்.

      “மச்சி! ஆட்கள் வர ஆரம்பிச்சிட்டாங்கடா.. அப்றம் பேசிக்கலாம், நீ வந்து அமைதியா சீட்ல உட்காரு. மாஸ்டர் வேற இன்னும் வரலை என்ன ஏதுனு விசாரி, ட்ரைன் கிளம்பபோகுதுனு நினைக்கிறேன் ” என மதனனை திசைதிருப்பினான் அஜய்.

      அஜய், ஜீவா, மதனன் மூவரும் நண்பர்கள். இளங்கலை, முதுகலை என கல்லூரி காலங்களில் ஒன்றாகவே பயணித்தவர்கள். படிப்பை முடித்த மூவரில் மதனன் தமிழ்நாட்டில் தான் வேலை பார்ப்பேன் என அடம்செய்து அங்கு செல்கிறான் என்றால் மற்ற இருவரும் அவனுக்காய் அவனுடன் செல்ல தயாராகி வந்துள்ளனர்.

      மதனனுக்கு தமிழ்நாடு செல்வதற்கு மிக முக்கிய காரணம் இருந்தபோதிலும் மற்ற இருவரும் செல்வதற்கு காரணம் அவன் மட்டும் தான். இதோ தங்களின் அடுத்த அத்தியாயத்தை தொடங்க மூவரும் சென்னை செல்லும் ரயிலில் அமர்ந்திருந்தனர்.

      இப்படி ஒருவருக்காய் மற்றவர் பார்க்கும் இந்த மூவரின் குழுவில் ஒவ்வொருவரும் ஒரு ரகம். மென்மையும், நேசமும் ஜீவாவின் அடையாளம் என்றால் முரட்டுதனமும், சட்சட் என்ற கோபமும் மதனனின் அடையாளம். இவர்கள் இருவரின் இந்த இருதுருவ குணங்களை ஈடு செய்வது போல் தேவையான இடங்களில் கோபமும், பெரும்பாலும் பொறுமையும், சகிப்புதன்மையும் என கலந்தது அஜயின் குணம்.

      அஜய் ‘மாஸ்டர்’ என்பவருக்கு அழைப்பு விடுக்குமாறு மதனனிடம் சொல்ல, தனது கைப்பேசியில் அவருக்கு அழைத்தவன் அவர் அதை ஏற்காததில்,
      “ப்ச்! போன் எடுக்க மாட்றாருடா. ட்ரைன் கிளம்புற அனொன்ஸ்மென்ட்டு வேற வருது பாரு” என படபடத்தான்.

      அதற்குள் ஜீவாவின் எண்ணிற்கு அவர்கள் மாஸ்டரிடம் இருந்து அழைப்பு வந்தது.

      “டேய்! மாஸ்டர் எனக்கு கூப்புட்றாரு டா” என்ற ஜீவாவின் குரலில் மதனனின் படபடப்பு நீங்கி முகத்தில் யோசனை படர்ந்தது.

      அதை கவனிக்காமல் அழைப்பை ஏற்ற ஜீவா, “ஹலோ! மாஸ்டர் எங்க இருக்கீங்க? ட்ரைன் கிளம்பபோகுது அனொன்ஸ்மென்ட் வந்திடுச்சு” என்றான்

      மறுபக்கம் என்ன சொல்லபட்டதோ “ஓ! ஓகே மாஸ்டர்.. சரி மாஸ்டர்.. நாங்க பார்த்துக்குறோம்” என்ற பதில் மட்டும் இப்புறம் இவன் சொல்லிகொண்டிருந்தான்.

      முழுதாய் ஒரு நிமிடம் தொடர்ந்த அழைப்பை முடித்து அலைப்பேசியை சட்டை பையில் போட்ட ஜீவா, “மாஸ்டருக்கு காலேஜ் மேனேஜ்மென்ட்ல இருந்து முக்கியமான அழைப்பு வந்திடுச்சாம் மச்சி! அதனால் அவரால் இன்னிக்கு வரமுடியாதுனு சொன்னாரு”
      என அவன் முடிப்பதற்கு முன்பே,

      “நினைச்சேன் இந்த மனஷன் இப்படிதான் செய்வாருனு. அவருக்கு நம்ப சென்னை போறதுல விருப்பமே இல்ல” எரிச்சல் அப்பட்டமாய் வெளிபட்டது மதனனின் பேச்சில்.

      “ப்ச்! மச்சி மாஸ்டர் அப்படிலாம் இல்லடா. நம்ப மேனேஜ்மென்ட் பத்தி உனக்கே தெரியும் தான, அவர் ரிலிவ் ஆகுற கடைசி நிமிஷம் வரைக்கும் ஆயிரத்தெட்டு ஃபார்மாலிட்டீஸ் சொல்லிட்டிருந்தானுங்க. அதுமட்டுமில்லாம எங்களையே” என்ற அஜயின் சமாதானத்தில் குறுகிட்டு,

      “டேய்! லூசாடா நீ… நேத்தே எல்லா ஃபார்மாலிட்டியும் முடிஞ்சிடுச்சினு அவர்தான சொன்னாரு. திரும்ப இப்ப எங்க இருந்து என்ன ஃபார்மாலிட்டி திடிருனு முளைச்சிடிச்சாம் ” கடுகடுத்தான் மதனன்.

      “மதனா! இப்போ எதுக்கு உனக்கு இவ்வளவு கோபம்? அவர் இந்த ட்ரைன்ல தான் வரலனு சொன்னார் அடுத்த ட்ரைன்லயோ இல்லை நாளைக்கோ எப்போ டிக்கெட் கிடைக்குதோ வரேனு தான் சொல்லி இருக்காரு டா” என ஜீவா தான் அவனை சமாளித்தான்.

      “ஓ! அவரே சொன்னார்?அப்போ சரிதான்” என மதனன் ஆசுவாசம் கொள்வதற்கும் ரயில் கிளம்புவதற்கும் சரியாய் இருந்தது.

      “அப்றம் என்னடா? அதான் உனக்கே தெரியும்ல நம்ப மாஸ்டர் ஒன்னு சொன்னா அதை கண்டிப்பா செய்வாருனு. வா! வந்து உட்காரு” என்றவனின் பேச்சிற்கு தலையசைத்தபடி அவன் அருகே அமர்ந்தான் மதனன்.

      மும்பையிலிருந்து சென்னை செல்லும் அந்த சென்னை எக்ஸ்ப்ரெஸ் “தடதட” என்று சத்தமிட்டபடி விரைந்தோட அவர்கள் இருந்த கம்பார்ட்மெண்டில் இவர்கள் மூவரை தவிர வேறு யாரும் இன்னும் ஏறி இருக்கவில்லை.

      மூவரில் அஜய் ஒருபுறம் அலைப்பேசியில் தனது வீட்டினருக்கு அழைத்து ரயில் கிளம்பியதை சொல்லிக் கொண்டிருந்தான். மறுபுறம் மதனன் தனது அலைப்பேசியில் யாருக்கோ அழைப்பு விடுக்க அது ஏற்கபடாததில் கடுப்பும், சிரிப்பும் சரிசமமாய் உள்ளுக்குள் உருவெடுத்ததில் அவனையும் மீறி புன்னகைத்திருந்தான்.

      இந்த இருவரின் செயல்களையும் கண்டுகொள்ளாத ஜீவாவோ தனது கைகளில் இருந்த மோதிரத்தை அரிய பொக்கிஷம் போல் விழி சிமிட்டாமல் பார்த்திருந்தான்.

      அவன் விழிகள் அந்த மோதிரத்தில் படிந்திருந்த போதும் அவனின் நினைவுகளோ அதன் உரிமையாளரிடமே தஞ்சமடைந்திருந்தது.

      வீட்டினருடன் பேசிமுடித்த அஜய் தன் நண்பனின் நிலையை கண்டு பெருமூச்சுடன் அவனின் அருகில் வந்தமர்ந்தான்.

      “டேய் ஜீவா! என்னடா? நீதான ரொம்ப தெளிவா உங்க உறவை முடிச்சிகனும்ன்ற முடிவை எடுத்த. அப்றம் ஏன் இன்னும் இப்படியே இருக்க?” அவனின் தோள் தட்டி வினவினான்.

      “ப்ச்! ஆமாடா நான்தான் பிரியனும்னு முடிவு பண்ணேன், ஆனாலும் அவ இல்லாத என் நாட்களை யோசிச்சாலே வலிக்குதே! மூணு வருஷம்டா முழுசா மூணு வருஷம் காலையில கண்ணை திறக்குறதுல இருந்து ராத்திரி கண்ணை மூடுற வரைக்கும் அவ நினைப்பு மட்டும் தான்டா மச்சான் எனக்குள்ள.

      இனி அவ எனக்கு இல்லைனும் போது அவளோட நினைப்பை மட்டும் வச்சிட்டு நான் எப்படி டா இருப்பேன். என்னை கூட விடு மச்சி, அவ எப்படி மச்சி இருப்பா? இந்த உறவோட முறிவை அவளால ஏத்துக்கவே முடியலை மச்சி. அவ வாயாலே நம்ப பிரிஞ்சிடலாம்னு அவளை நான்தான் சொல்லவச்சேன், ஆனா அதை சொல்றதுக்குள்ள அவ பாதி செத்துட்டா டா “

      வலியின் உறைவிடம் அவன் தான் என்பதைபோல் கதறிய ஜீவாவை தோளோடு அணைத்தபடி அஜய் சமாதானம் செய்ய, இவர்களின் பேச்சு சத்தத்தில் இப்புறம் திரும்பியிருந்த மதனனோ,

      “ம்க்கும்! நல்லா இருந்த பொண்ணு வாழ்க்கையை காதல்னு சொல்லி மூணு வருஷம் வேஸ்ட் பண்ணிட்டு கடைசில கலட்டியும் விட்டுட்டான். இப்போ அழுது சீன் போட்டா ஆச்சா! உன்னை சொல்லி என்ன புரோஜனம் உன் பேச்சை கேட்டு இஷ்டம் இல்லைனாலும் அவளே பிரிஞ்சிடலாம்னு சொன்னா பாரு உன்னோட அந்த முட்டாள் காதலி அவளை சொல்லனும்”

      “டேய் அவ பாவம்டா” ஜீவா தன் காதலிக்காய் பரிந்துவர,

      “நானும் அததான் சொல்றேன் அந்த பொண்ணு பாவம்னு. உனக்கெல்லாம் காதல்னா அவ்வளவு சுலுவா போச்சாடா? நீ பாட்டுக்கு இந்த உறவை முறிச்சிக்கலாம்னு முடிவெடுத்து அதை அந்த புள்ள வாயாலையும் சொல்ல வச்சிட்டு இப்போ வந்து அழுது புலம்புற” என கண்டித்தான்.

      “மச்சி! இவன் நிலமையும் நமக்கு தெரியும் தானேடா.. அவசரபட்டு காதலிச்சிட்டான் என்ன பண்ண சொல்ற? அதான் அந்த பொண்ணும் இவன் சொன்னமாதிரி பிரேக்கப்க்கு ஓகே சொல்லிட்டு போயிடிச்சுல விடு”

      அஜய் நண்பனை மேலும் துயரத்தில் ஆழ்த்த வேண்டாம் என அப்பேச்சை முடிக்க பார்க்க, அவனின் அந்த பேச்சே மதனனை உசுப்பிவிட்டது.

      “அதான்.. அதான்… அந்த புள்ளை அசால்டா விட்டுபோயிடுச்சி அதான் இங்க பிரச்சனையே. நான்லாம் அந்த இடத்தில இருந்தா நல்லா வச்சி செஞ்சிருப்பேன்”

      இம்முறை ஜீவாவே, “சும்மா இரு மதனா! நானே ஏற்கனவே குற்றவுணர்வுல இருக்கேன். ஆக்சுவலி அவ தைரியமா பேசகூடியவ தான்டா, ஆனா இங்க பாரு இந்த விஷயத்துல பையன் நானே இப்படி தவிக்குறப்போ அவளுக்கும் எங்களோட இந்த உறவோட முறிவு கஷ்டமா இருக்கும்ல அதான் அவ அமைதியா போய்ட்டா . அவ இந்த காதல், ப்ரேக்கப் போல விஷயத்துலலாம் அந்த காலத்து பொண்ணுங்க மாதிரி ரொம்ப அமைதி” என்றான்.

      அதில் பொங்கி எழுந்த மதனன், “ப்ரேக்கப்ல என்னடா அந்த காலத்து பொண்ணு இந்த காலத்து பொண்ணு . சும்மாவே பொண்ணுங்களை கணிக்க முடியாது இதுல காரணத்தை வச்சிலாம் இவர் கணிக்கிறாரு பாரேன்” என்றான் நக்கலாய்.

      “மதனா! அவன் எதோ அந்த பொண்ணு நியாபகத்துல சொல்றான். அதுவுமில்லாம பொதுவாவே அந்த காலத்துல பிரேக்கப்னா பொண்ணுங்க வீட்ல சொந்தம் இல்லனா சாதி தான் காரணமாக இருக்கும். அதுக்கு பொண்ணுங்க பக்கம் அழுகை தான பதிலா வரும் அதை வச்சி பேசுறான்டா” என அஜய் நண்பனுக்கு சார்ந்து வந்தான்.

      “ம்ஹூம்! நீங்க பார்த்த, கேட்ட பொண்ணுங்க அப்படினு வேணா சொல்லுங்க. பிரியபோறோம்னு சொன்னவுடனே

      ‘அச்சோ! என் காதல் போச்சே’னு கண்ணை கசக்காம,

      ‘சரிதான் போடா’னு விட்டுதள்ளாம,

      ‘நீ இல்லனா நான் இல்லனு’ அழுது கெஞ்சாம,

      ஒருதடவை கூட பார்க்காத ஒருத்தனை உசுருக்கு உசுரா காதலிச்சும் அவனை பிரியவேண்டிய நேரம்வந்தப்போ கொஞ்சம்கூட பதட்டபடாம கெத்தா ‘என் நினைப்பு இல்லனா நீ உயிரோடவே இருக்கவேணாம்’னு சொன்ன பொண்ணை நான் பார்த்திருக்கேன்”

      என சிலாகித்து சொன்ன மதனனை அஜயும், ஜீவாவும் வாய் பிளந்து பார்த்தனர்.

      பின் என்ன? காதலை பற்றி பேசும் அதுவும் ஒரு பெண்ணை சிலாகித்து பேசும் இந்த மதனன் அவர்களுக்கு புதிதாகிற்றே.

      பெண்கள், காதல் போன்ற பேச்சை எடுத்தாலே காத தூரம் ஓடுபவன் ஆகிற்றே அவர்கள் அறிந்த மதனன். அப்படிபட்டவனை இப்படி பேச வைத்த பெண்ணின் கதையை கேட்டே ஆக வேண்டும் என அந்த நண்பர்களுக்கு தோன்றியதில் வியப்பில்லை தானே.

      “மச்சி! யார் டா அது? உனக்கு தெரிஞ்சவங்களா? பேர் என்ன டா?” அஜய் ஆர்வமாய் கேட்க,

      அவனின் ஆர்வமோ, அவனின் அருகே இருந்த ஜீவாவின் கேள்வி பார்வையோ எதுவும் மதனனுக்கு பெரியதாய் தோன்றவில்லை. அவனின் நினைவெல்லாம் அந்த பெண்ணிடம் தான்.

      அதனால் நண்பனின் கேள்விக்கு அவனின் இதழ்கள் தானே அப்பெண்ணின் பெயரை ரசனையுடன் உச்சரித்தது,

      “மோகனசுந்தரரூபாவதி” என்று.

      அவன் அப்பெயரை உச்சரித்த நேரம் அவனின் அலைப்பேசி “காதோரம் அடி ஆலோலம்…
      நான் தாங்க மாரோடு வா விடுது தேனே வா…”
      என சத்தமிட்டு அவனை அழைத்தது.

      இசையிலே அழைப்பது யாரென அறிந்தவனின் இதழ்களில் புன்னகை பூக்க பேசிக்கொண்டிருந்ததை விடுத்து அழைப்பை ஏற்றவன், “செல்லகுட்டி!” என்று கொஞ்சியவாறு சற்று தள்ளி சென்றான்.

      “யாரடா இவன் கொஞ்சுறான்? நானும் அஞ்சு வருஷமா பார்க்குறேன் இப்படிதான் அடிகடி போன்ல யார்கூடவோ பேசுறான் ஆனா யாருனு நம்ப கேட்டா மட்டும் பதிலே வராது. ஏன்டா நம்ப இவனோட ப்ரெண்ட்ஸ் தானடா இப்போ இவ்வளவு தூரம் போறது கூட அவனை தனியா விட மனசில்லாம தான”

      ஏற்கனவே மனஉளைச்சலில் இருந்த ஜீவா, தங்களுடன் பேசிக்கொண்டிருந்த வேளையில் மதனனின் இந்த செயலில் கோபம் வர தன் இயல்பையும் மீறி படபடத்தான்.

      இந்த ஐந்து வருடங்களில் தங்கள் மூவருள் எந்த ஒளிவுமறைவும் இல்லை என்னும் அவனின் எண்ணத்தில் அவ்வப்பொழுது துரும்பாய் உருத்துவது மதனனின் இந்த நடவடிக்கைகள் தான்.

      அந்த ஆற்றாமையில் அஜயிடம் புலம்பியவன் பேசிமுடித்து வந்த மதனனை முறைத்து பார்த்தான்.
      அவனை முறைப்பில் என்னவென்று அஜயை பார்க்க அவன் கைப்பேசியை ஜாடை காட்டினான்.

      விஷயம் புரிந்த மதனன் இப்பொழுதும் எதுவும் சொல்லாமல் மௌனம் காக்க, “அதான! உன் வாயில இருந்து ஒரு வார்த்தை இதை பத்தி வந்துடாதே!”
      என அஜயும் கோவம் கொண்டான்.

      இருவரையும் பார்த்து பெருமூச்சு விட்ட மதனன், “அடேய்ங்களா! இப்போ என்ன நான் யார் கூட அடிகடி போன் பேசுறேனு உங்களுக்கு தெரியனும் அதான? வெயிட் பண்ணுங்கடா சீக்கிரமே அது யாருனு நான் நேர்லயே உங்களுக்கு காட்றேன். ஆனா ஒன்னு அவங்களை பார்த்துட்டு நீங்க என்னை மொத்தாம இருந்தா சரி”

      -என முன்னதை சத்தமாகவும், பின்னதை தனக்குள்ளும் சொல்லி அவர்களை சமாதானம் செய்தான்.

      – தூது தொடரும்

      • Select

      The post காமதேவனின் காதல் தூது 1 appeared first on தூரிகை தமிழ் நாவல்கள்.

      ]]>
      https://thoorigaitamilnovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%ae%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%af%82%e0%ae%a4%e0%af%81-2/feed/ 1 16666
      காமதேவனின் காதல் தூது -டீசர் https://thoorigaitamilnovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%ae%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%af%82%e0%ae%a4%e0%af%81/ https://thoorigaitamilnovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%ae%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%af%82%e0%ae%a4%e0%af%81/#respond Wed, 18 Oct 2023 13:12:10 +0000 https://thoorigaitamilnovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%ae%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%af%82%e0%ae%a4%e0%af%81/ ஹாய் டியர்ஸ் எப்படி இருக்கீங்க? திஸ் இஸ் யுவர்ஸ் ஒன் அன் ஒன்லி “ஜிகர் தூது” நம்ப கதை பெயர் “காமதேவனின் காதல் தூது” டியர்ஸ் , நவம்பர் 1-ம் தேதி-யில் இருந்து நம்ப கதையை ஆரம்பிக்க போறோம். நீங்க எல்லோரும் நம்ப காமதேவனின் காதல் தூதை தெரிஞ்சிக்க வந்திருங்க டியர்ஸ். அதுவரை ஒரு ஜிகர்தண்டா உங்களுக்காய் (ஹீஹீ டீ -அ தாங்க அப்படி சொன்னேன்) டீசர் : “மோகன

      The post காமதேவனின் காதல் தூது -டீசர் appeared first on தூரிகை தமிழ் நாவல்கள்.

      ]]>

      Loading

      ஹாய் டியர்ஸ் எப்படி இருக்கீங்க? திஸ் இஸ் யுவர்ஸ் ஒன் அன் ஒன்லி “ஜிகர் தூது”

      நம்ப கதை பெயர் “காமதேவனின் காதல் தூது” டியர்ஸ் , நவம்பர் 1-ம் தேதி-யில் இருந்து நம்ப கதையை ஆரம்பிக்க போறோம். நீங்க எல்லோரும் நம்ப காமதேவனின் காதல் தூதை தெரிஞ்சிக்க வந்திருங்க டியர்ஸ். அதுவரை ஒரு ஜிகர்தண்டா உங்களுக்காய் (ஹீஹீ டீ -அ தாங்க அப்படி சொன்னேன்)

      டீசர் :

      “மோகன சுந்தரியே!

      இன்னும் எத்தனை காலங்களுக்கு உன் மோகனங்களால் என்னை மயக்கி கொண்டே இருப்பாய் . நான் நானாய் இருந்த காலங்கள் என்றால் குறைந்தது ஒரு ஐந்து வருடங்கள் இருக்குமா? என் மீதி வருடங்கள் அனைத்தும் உனது மோகனங்கள் மட்டுமே என்னை ஆழியாய் சூழ்ந்துள்ளது.

      ஆயினும் இதற்கு நான் வருந்தவேண்டுமா என்ன? உன் மோகனங்கள் உன் ரூபங்கள் அல்லவா அவை என் இதயத்தின் உனக்கான ராகங்கள் அல்லவா?

      அந்த ராகங்கள் அனைத்தும் சுககீதமாய் அன்று போல், இன்று போல் என்றுமே என்னை மீட்டிக்கொண்டிருக்கவே என் மனம் ஆசை கொள்கிறது.

      என் மோகன சுந்தரியே! உன் ரூபங்கள் என்னை சுகமாய் வதைப்பதற்கு தண்டனையாய் என் இதய அம்புகளை உன்னை நோக்கி எய்ய என் இதழ்களுக்கும், கரங்களுக்கும் கட்டளை இட போகிறேன். என் அ(ன்)ம்புகளை தாங்கி கொள்ள உனக்கு சம்பந்தமா ?

      இப்படிக்கு

      -ரதிதேவன்”

      கடிதத்தை படித்த பெண்ணவளின் கைகள் அனிச்சையாய் அக்கடிதம் வந்த உரையை எடுக்க, கண்கள் அந்த உரையில் எழுதியிருந்ததை மூளைக்கு கடத்தியதில் “காமதேவனின் இதய தூது” என அவள் இதழ்கள் அழகாய் உச்சரித்தது.

      வாசித்த இருநொடிகள் அமைதியாய் இருந்தவள் அக்கடிதத்தில் இருந்த வார்த்தைகளை தனக்குள் ஒருமுறை ஓட்டி பார்த்து “இதை யார் அனுப்பி இருப்பாங்க ? நிஜமாவே இதை நம்ப சுந்தரிக்கு தான் எழுதுனாங்களா? ஆனா எனக்கு ஏன் இது எனக்காகனு தோணுது?” என யோசனைகளுக்கு இடையில் சிக்கினாள்.

      “ரூபா! அடியே ரூபா… சீக்கிரம் இதை பாரேன்!”

      என்று ஆர்பரித்த தோழி கிருபாகரியின் தன் தோள் பற்றிய குலுக்கலில்  யோசனையில் இருந்து வெளியில் வந்தாள்  மோகனசுந்தரரூபாவதி .

      *****************

      “தம்பி! அந்த லெட்டரை சரியா சேர்த்துட்டியா இல்லையா?” மூச்சிரைக்க, வியர்வையில் தெப்பமாய் நனைந்து தன்முன் நின்றிருந்த அந்த ஐந்தரை அடி ஆண்மகனை கண்கள் பிதுங்க பார்த்தான் அந்த சிறுவன்.

      “என்ன? அண்ணா! நீ இதை கேட்கவா இவ்வளவு தூரம் வந்திருக்க?” அதிர்ச்சியாய் வாயை பிளந்த சிறுவனை கண்டு தன் அசட்டுதனம் உணர்ந்த ஆணவன் தன் இடக்கரத்தால் முகத்தை மறைத்தபடி கண்களை சுருக்கினான்.

      “அவன் மட்டும் வந்திருந்தா பரவாயில்லையே எப்படியும் ராத்திரி நீ வீட்டுக்கு தான் வரபோறனு சொல்லியும் கேக்காம கிட்டதட்ட ஆறு கிலோமீட்டருக்கு இந்த லூசு பையன் என்னையும்ல நடக்கவச்சி கூட்டிட்டு வந்திருக்கான்” என நண்பனை முறைத்தபடி மூச்சிரைக்க அருகே இருந்த நாற்காலியில் அமர்ந்தான் வினோதன்.

      **********

      “இங்க பாரு சும்மாசும்மா என்னை சொல்லவைக்காத, நல்லா கேட்டுக்கோ! உனக்கும் எனக்கும் நடுவுல எதுவும் கிடையாது எதுவுமே கிடையாது”

      அதட்டலாய் சொல்லியவளை சிறிதும் சட்டைசெய்யாதவன் அவளை பார்த்தபடியே அவள் அருகே எட்டுவைத்தான்.

      அவனின் அசைவில் கண்களில் கலவரம் வர பின்னெட்டு வைத்தவளின் வாயோ தைரியமாய் வாயாடியது,

      “பைத்தியகாரதனமா எதுவும் செய்யாத மதனா! இது ஒன்னும் உன்னோட வீடு இல்ல ‘சுந்தரி குரூப்ஸோட ஆபிஸ் ரூம்’. தள்ளி போ, அதான் நமக்குள்ள எல்லாம் முடிஞ்சிடுச்சினு சொல்றேன் தான”

      படபடத்தவளின் நயனங்களை கண்டபடியே அவள் பேச்சை அசட்டைசெய்தவன்  இரண்டே எட்டில் அவளை நெருங்கியிருந்தான்.

      அவள் உயரத்திற்கு ஏதுவாய் சற்றே குனிந்து முகத்தின் முன் முகம் வைத்தவனின் செயலில் அவளுக்கு மூச்சடைக்க,

      அவனோ “தங்களையே தியாகிக்கிற அளவுக்கு அன்பு இருந்தா காதல் முறிவுக்கு பின்னும் சரி, காதல் பிரிவுக்கு பின்னும் சரி, மீண்டும் அந்த காதல் இணைஞ்சே தீரும் என் ரதி தேவியாரே”

      அழுத்தமாய் உச்சரித்தவனை கோபமாய் பார்த்தவள், “வாய்ப்பே இல்ல! முறிஞ்ச காதல் முறிஞ்சது தான்..பிரிந்த நாமும் இனி பிரிந்தவர்கள் மட்டும்தான்”

      அவனுக்கு நிகரான அழுத்தமும், ஆளுமையும் அவளின் உச்சரிப்பிலும் இருந்தது.

      ஹாய் டியர்ஸ் எப்படி இருக்கீங்க? திஸ் இஸ் யுவர்ஸ் ஒன் அன் ஒன்லி “ஜிகர் தூது”

      நம்ப கதை பெயர் “காமதேவனின் காதல் தூது” டியர்ஸ் , நவம்பர் 1-ம் தேதி-யில் இருந்து நம்ப கதையை ஆரம்பிக்க போறோம். நீங்க எல்லோரும் நம்ப காமதேவனின் காதல் தூதை தெரிஞ்சிக்க வந்திருங்க டியர்ஸ். அதுவரை ஒரு ஜிகர்தண்டா உங்களுக்காய் (ஹீஹீ டீ -அ தாங்க அப்படி சொன்னேன்)

      டீசர் :

      “மோகன சுந்தரியே!

      இன்னும் எத்தனை காலங்களுக்கு உன் மோகனங்களால் என்னை மயக்கி கொண்டே இருப்பாய் . நான் நானாய் இருந்த காலங்கள் என்றால் குறைந்தது ஒரு ஐந்து வருடங்கள் இருக்குமா? என் மீதி வருடங்கள் அனைத்தும் உனது மோகனங்கள் மட்டுமே என்னை ஆழியாய் சூழ்ந்துள்ளது.

      ஆயினும் இதற்கு நான் வருந்தவேண்டுமா என்ன? உன் மோகனங்கள் உன் ரூபங்கள் அல்லவா அவை என் இதயத்தின் உனக்கான ராகங்கள் அல்லவா?

      அந்த ராகங்கள் அனைத்தும் சுககீதமாய் அன்று போல், இன்று போல் என்றுமே என்னை மீட்டிக்கொண்டிருக்கவே என் மனம் ஆசை கொள்கிறது.

      என் மோகன சுந்தரியே! உன் ரூபங்கள் என்னை சுகமாய் வதைப்பதற்கு தண்டனையாய் என் இதய அம்புகளை உன்னை நோக்கி எய்ய என் இதழ்களுக்கும், கரங்களுக்கும் கட்டளை இட போகிறேன். என் அ(ன்)ம்புகளை தாங்கி கொள்ள உனக்கு சம்பந்தமா ?

      இப்படிக்கு

      -ரதிதேவன்”

      கடிதத்தை படித்த பெண்ணவளின் கைகள் அனிச்சையாய் அக்கடிதம் வந்த உரையை எடுக்க, கண்கள் அந்த உரையில் எழுதியிருந்ததை மூளைக்கு கடத்தியதில் “காமதேவனின் இதய தூது” என அவள் இதழ்கள் அழகாய் உச்சரித்தது.

      வாசித்த இருநொடிகள் அமைதியாய் இருந்தவள் அக்கடிதத்தில் இருந்த வார்த்தைகளை தனக்குள் ஒருமுறை ஓட்டி பார்த்து “இதை யார் அனுப்பி இருப்பாங்க ? நிஜமாவே இதை நம்ப சுந்தரிக்கு தான் எழுதுனாங்களா? ஆனா எனக்கு ஏன் இது எனக்காகனு தோணுது?” என யோசனைகளுக்கு இடையில் சிக்கினாள்.

      “ரூபா! அடியே ரூபா… சீக்கிரம் இதை பாரேன்!”

      என்று ஆர்பரித்த தோழி கிருபாகரியின் தன் தோள் பற்றிய குலுக்கலில்  யோசனையில் இருந்து வெளியில் வந்தாள்  மோகனசுந்தரரூபாவதி .

      *****************

      “தம்பி! அந்த லெட்டரை சரியா சேர்த்துட்டியா இல்லையா?” மூச்சிரைக்க, வியர்வையில் தெப்பமாய் நனைந்து தன்முன் நின்றிருந்த அந்த ஐந்தரை அடி ஆண்மகனை கண்கள் பிதுங்க பார்த்தான் அந்த சிறுவன்.

      “என்ன? அண்ணா! நீ இதை கேட்கவா இவ்வளவு தூரம் வந்திருக்க?” அதிர்ச்சியாய் வாயை பிளந்த சிறுவனை கண்டு தன் அசட்டுதனம் உணர்ந்த ஆணவன் தன் இடக்கரத்தால் முகத்தை மறைத்தபடி கண்களை சுருக்கினான்.

      “அவன் மட்டும் வந்திருந்தா பரவாயில்லையே எப்படியும் ராத்திரி நீ வீட்டுக்கு தான் வரபோறனு சொல்லியும் கேக்காம கிட்டதட்ட ஆறு கிலோமீட்டருக்கு இந்த லூசு பையன் என்னையும்ல நடக்கவச்சி கூட்டிட்டு வந்திருக்கான்” என நண்பனை முறைத்தபடி மூச்சிரைக்க அருகே இருந்த நாற்காலியில் அமர்ந்தான் வினோதன்.

      **********

      “இங்க பாரு சும்மாசும்மா என்னை சொல்லவைக்காத, நல்லா கேட்டுக்கோ! உனக்கும் எனக்கும் நடுவுல எதுவும் கிடையாது எதுவுமே கிடையாது”

      அதட்டலாய் சொல்லியவளை சிறிதும் சட்டைசெய்யாதவன் அவளை பார்த்தபடியே அவள் அருகே எட்டுவைத்தான்.

      அவனின் அசைவில் கண்களில் கலவரம் வர பின்னெட்டு வைத்தவளின் வாயோ தைரியமாய் வாயாடியது,

      “பைத்தியகாரதனமா எதுவும் செய்யாத மதனா! இது ஒன்னும் உன்னோட வீடு இல்ல ‘சுந்தரி குரூப்ஸோட ஆபிஸ் ரூம்’. தள்ளி போ, அதான் நமக்குள்ள எல்லாம் முடிஞ்சிடுச்சினு சொல்றேன் தான”

      படபடத்தவளின் நயனங்களை கண்டபடியே அவள் பேச்சை அசட்டைசெய்தவன்  இரண்டே எட்டில் அவளை நெருங்கியிருந்தான்.

      அவள் உயரத்திற்கு ஏதுவாய் சற்றே குனிந்து முகத்தின் முன் முகம் வைத்தவனின் செயலில் அவளுக்கு மூச்சடைக்க,

      அவனோ “தங்களையே தியாகிக்கிற அளவுக்கு அன்பு இருந்தா காதல் முறிவுக்கு பின்னும் சரி, காதல் பிரிவுக்கு பின்னும் சரி, மீண்டும் அந்த காதல் இணைஞ்சே தீரும் என் ரதி தேவியாரே”

      அழுத்தமாய் உச்சரித்தவனை கோபமாய் பார்த்தவள், “வாய்ப்பே இல்ல! முறிஞ்ச காதல் முறிஞ்சது தான்..பிரிந்த நாமும் இனி பிரிந்தவர்கள் மட்டும்தான்”

      அவனுக்கு நிகரான அழுத்தமும், ஆளுமையும் அவளின் உச்சரிப்பிலும் இருந்தது.

      • Select

      The post காமதேவனின் காதல் தூது -டீசர் appeared first on தூரிகை தமிழ் நாவல்கள்.

      ]]>
      https://thoorigaitamilnovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%ae%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%af%82%e0%ae%a4%e0%af%81/feed/ 0 16321
      கனவு 1 https://thoorigaitamilnovels.com/%e0%ae%95%e0%ae%a9%e0%ae%b5%e0%af%81-1/ https://thoorigaitamilnovels.com/%e0%ae%95%e0%ae%a9%e0%ae%b5%e0%af%81-1/#respond Wed, 06 Sep 2023 16:15:34 +0000 https://thoorigaitamilnovels.com/%e0%ae%95%e0%ae%a9%e0%ae%b5%e0%af%81-1/ தென் தமிழகம், கடற்கரை மாவட்டம் உப்பு காற்றால் பரவியுள்ள கிராமம். சாதி வெறியில் ஊறி போன இடம். பழகும் மக்களின் குணத்தை விட வசிக்கும் இடத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் மனித மிருகங்கள் பலர் வாழும் நரகம்.    ஆலமரத்தின் அடியில் இரு குடும்ப பிரச்சினையை ஊரின் பிரச்சினையாக மாற்றி வாதாடி நீதி வழங்கப்பட்டது.    அவர்களின் நீதி ஒரு பெண்ணுக்கு இழைக்கப்பட்ட அநீதி.  சுமத்தப்பட்ட பழி யாராலும் எதிர்த்து கேட்க

      The post கனவு 1 appeared first on தூரிகை தமிழ் நாவல்கள்.

      ]]>

      Loading

      தென் தமிழகம், கடற்கரை மாவட்டம் உப்பு காற்றால் பரவியுள்ள கிராமம். சாதி வெறியில் ஊறி போன இடம். பழகும் மக்களின் குணத்தை விட வசிக்கும் இடத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் மனித மிருகங்கள் பலர் வாழும் நரகம். 

       

      ஆலமரத்தின் அடியில் இரு குடும்ப பிரச்சினையை ஊரின் பிரச்சினையாக மாற்றி வாதாடி நீதி வழங்கப்பட்டது. 

       

      அவர்களின் நீதி ஒரு பெண்ணுக்கு இழைக்கப்பட்ட அநீதி. 

      சுமத்தப்பட்ட பழி யாராலும் எதிர்த்து கேட்க முடியாதது. 

      கொடுக்கப்பட்ட ஆதாரம் பொய்யானலும் அழிக்க முடியாதது. 

      சொல்லப்பட்ட சாட்சி காட்சி பிழையானாலும் மாற்ற முடியாதது…. 

       

      மொத்தத்தில் ஒரு குடும்பத்தால் சிறு குருவி கூடே கலந்து போனது. வினை விதைத்தவன் வினையை தான் அறுப்பான் என்று மறந்து போயினர். வலிக்க வலிக்க இன்று அடித்ததை பத்து மடங்கு அதிகமாக பெற போகிறார்கள். காலத்தின் முன் யாராலும் தப்பிக்க முடியாது. 

       

      இவர்களின் தவறை வலிக்க வலிக்க புரிய வைக்க ஒருவர் வர போகிறார். 

       

      இருபது வருடங்கள் பிறகு…… 

       

      டெல்லி, நாட்டின் தலை நகரம். பல லட்சக்கணக்கான மக்களை தன்னுள் அடங்கியிருக்கும் சிறிய நகரம். 

       

      ஆண்டிற்கு ஒரு முறை நடக்கும் இண்டர் காலேஜ் கல்ச்சுரல்ஸ் நடக்க, கலந்து கொண்டது என்னவோ பல கல்லூரிகள்.  ஆனால் போட்டு என்பது இரு கல்லூரிக்கு மட்டுமே. 

       

      ஒரு புள்ளியில் முன்னிலை பின்னிலையில் இருக்க கடைசி போட்டியாக பாட்டு போட்டி. 

       

      முதல் கல்லூரியின் மாணவன் கிஷோர் தன் குரலால் அனைவரையும் கட்டி போட்டு இருக்க,  அடுத்த கல்லூரியின் சார்பாக பாட இருப்பது தொகுப்பாளினி சொல்லுவதற்கு முன்னே, 

       

      யஷ்!!! யஷ்!!! யஷ்!!!  என்று அந்த அரங்கமே அதிரும் வண்ணம் மாணவ மாணவிகளின் சத்தம் இரவின் அமைதியில் கழித்துக் கொண்டு இருக்க,

       

      மேடையில், தன் முன்னே ஆர்ப்பரிக்கும் கூட்டத்தையும் கண்டு கையில் மைக்கோடு கண்களை அழுத்த மூடி திறந்தவள் தன் குரலால் அரங்கையே அடுத்த சில மணி துளிகளுக்கு கட்டி போட்டு இருந்தாள். 

       

      அந்த காந்த குரலில் மயங்காதவர் யாரும் இருக்க மாட்டார். கடைசியாக பாட்டு போட்டியில் மட்டுமே அல்ல தன் வெற்றியால் கல்லூரிக்கே ஒவர்ஆல் டிராஃபி வாங்கி கொடுத்து இருந்தாள் யஷ்வினி. 

       

      “யஷ்….  யூ ஆர் அமேசிங்…. இன்றைக்கு நம்ம காலேஜ் டிராஃபி வாங்க உன்னுடைய சிங்கிங் முக்கியமான காரணம். எல்லாரும் பார்ட்டியில் ஹாப்பியா இருக்காங்க. நீ மட்டும் ஏன் என் கிட்ட கூட சொல்லாமல் வீட்டிற்கு வந்துட்ட” என்று தன் தோழியிடம் கேட்டான் ரோகித் படேல். 

       

      “மூட் ஆஃப் ராகி… இன்றைக்கு என்னால் பாட முடியும்னு கூட நான் நினைக்கலை… ஆனால்” என்று சொல்லும் போதே இடையில் ரோகித், 

       

      “வெயிட் மச்சி… எப்படியும் நீ ஒரு சோக கதையை சொல்ல போற நான் போய் அதுக்கு கரெக்டான ஐட்டத்தை ரெடி  பண்ணிட்டு வரேன்” என்று உள்ளே செல்ல, பால்கனியில் இருந்த படியே டெல்லியின் குளுமையை அனுபவித்தாள். 

       

      கையில் சரக்கோடு வரும் நண்பனை பார்த்து “அட குடிகார நாயே அப்ப நீ என்னை சமாதானம் பண்ண வரலை… குடிக்க காரணம் தேடி வந்திருக்க” என்று முறைக்க, 

       

      “விடு மச்சி… புண்பட்ட மனதை புகை விட்டு ஆத்துனு பழமொழியே இருக்கு” என அசடு வழியே இளித்து கொண்டு சொல்ல, 

       

      “பழமொழியா….  உனக்கு தமிழ் சொல்லி கொடுத்து பெரிய தப்பை பண்ணிட்டேன். சரி சரி எனக்கும் ஒரு க்ளாஸ் தா இரண்டு பேரும் சேர்ந்து ஆத்தலாம்” என்று சிரித்து கொண்டே சொல்ல

       

      “இது தான் நல்ல நண்பிக்கு அழகு… எப்பவும் உன் முகத்தில் இந்த சிரிப்பு இருக்கனும். அதுக்காக இந்த ரோகித் எதுவும் செய்வான்” என்று அழுத்தமான குரலில் சொல்ல, 

       

      “அது தான் தெரியுமே” என்று சொன்னவளின் கண்களில் சொல்ல முடியாத வலிகள் பல தேங்கி கிடந்தது. 

       

      சூரிய ஒளியில் கண்கள் கூச முதலில் விழித்தது ரோகித் தான். பால்கனியிலே இரவு இருவரும் தூங்கி விட்டது புரிய, 

      ‘இந்த யஷ் பொண்ணா அடக்க ஒடுக்கமா என்னை பார்த்துப்பானு என் வீட்டில் நம்பறாங்க  பாரு, இந்த நிலைமையை பார்த்தா என்ன சொல்லுவாங்களோ…. குடிகாரி குடிகாரி… மொட குடிக்காரன் கூட இப்படி புலம்பி தள்ள மாட்டான். இவ கிட்ட மாட்டிட்டு ராத்திரி என் தூக்கம் போனது தான் மிச்சம்’

       

      “அரே பகவான்….. யஷ் வேக் அப்…  இன்றைக்கு ப்ராஜெக்ட் விசயமா அந்த கம்பெனிக்கு போகனும். லேட்டா போன நல்லா இருக்காது டி” என

       

      தூக்க கலக்கத்தில் “கவலைப்படாதீங்க சார்… இந்த ராக்கெட் மட்டும் கரெக்டா போய்டா நம்ம வேற லெவலுக்கு போய்டலாம்” என

       

      “பைத்தியம்… இன்னும் நேத்து அடிச்ச போதை இறங்கலையா… கிளம்புடி கடுப்பை கிளப்பிட்டு” என

       

      இருவரும் அரக்க பரக்க கிளம்பும் நேரத்தில் நாம் இருவரை பற்றி பார்க்கலாம். 

       

       

      யஷ்வினி ரோகித் இருவரும் பொறியியல் இறதி ஆண்டு மாணவர்கள். யஷ்வினிக்கு ரோகித் மட்டுமே நெருங்கிய நண்பர். மூன்று வருட நட்பு. அவளின் கடந்த காலம் துளி கூட தெரியாது. ஆனால் சொல்ல முடியாத கவலை சோகம் இருப்பது மட்டும் தெரிந்தது. சொந்த ஊர் சென்னை என்பது தெரியும் பெற்றவர்கள் பெயர் தெரியாது. உடன் பிறப்பு ஒரு தம்பி இருப்பது தெரியும் ஆனால் என்ன செய்கிறான் என்று தெரியாது. 

       

      ஆனால் ரோகித்தின் மொத்த விவரமும் யஷ்வினி தன் விரல் நுனியில் வைத்திருப்பாள். புரியாத புதிர் தான் இருவரது நட்பும். 

       

      இரண்டாம் வருடத்தில் கல்லூரி ஹாஸ்டல் பிடிக்காமல் இருவரும் கல்லூரிக்கு அருகாமையில் இரண்டு படுக்கையறை கொண்ட ஃப்ளாடில் தங்கியுள்ளனர். 

       

      ***

       

      டெல்லியின் முக்கிய நகரங்களில் ஒன்றான துவாரக்கா போலீஸ் நிலையத்தில்,  ஒரு கான்ஸ்டபிள்  “சார்…. நான்கு நாள் முன்ன மிஸ்ஸிங் கேஸ் ஃபைல் பண்ணவங்க வந்து இருக்காங்க” என

       

       

      “இது வேற இருக்கிற தொல்லை பத்தாதுனு.. வயசு கோளாறில் எவனையாவது காதலிக்க வேண்டியது பின்ன ஒடு போக வேண்டியது… பிஸியா இருக்கேன்னு சொல்லுயா” என்று அலட்சியமாக சொல்ல, 

       

      அதன்படி அந்த பெற்றோர்களிடம் சொல்ல,  அவர்களோ தங்களின் இழிவு நிலையை அறிந்து மனம் நொந்து சென்றனர். 

       

      ***

       

      இருசக்கர வாகனத்தில் கடும் போக்குவரத்து மத்தியில் யஷ்வினி வியர்வை வழிய வண்டியை ஒட்டிக்கொண்டு  “மாடு மாதிரி வளர்ந்து இருக்க… வண்டி ஒட்ட சொன்ன மட்டும் பயந்து சாக வேண்டியது… ஒரு நாள் இல்ல ஒரு நாள் நீ வண்டியை என்பதுல ஒட்டுவ பாரு”  என

       

      “அது தான் என் கடைசி நாளா இருக்கும் டி கொலைக்காரி…  நம்ம வேற  ப்ராஜெக்ட் பண்ணலாமா டி…. இது கொஞ்சம் ஓல்ட் டெக்னாலஜியா இருக்கு. அதான் எந்த கம்பெனியும் நம்ம ப்ராஜெக்டை அப்செட் பண்ண யோசிக்கிறாங்க.  நம்ம  பேச்மேட் எல்லாரும் ஸ்டார்ட் பண்ணிட்டாங்க நாம் தான் இன்னும் கம்பெனி கூட செலக்ட் பண்ணல…. தப்பு தப்பு நம்ம ப்ராஜெக்டை யாரும் செலக்ட் பண்ணல” என்று கவலையாக சொல்ல

       

      “நம்ம வாழ்க்கையில் எதாவது ஒரு விசயம் நடந்து இருக்கும். அதோட தாக்கம் நம்ம மனசில் ரொம்ப ஆழமா பதிந்து போயிருக்கும். அது நடக்கும் போது நம்மால அழ தான் முடிந்து இருக்கும். ஆனால் மனசில அப்படி ஒன்னு நடந்து இருக்க கூடாதுனு புலம்பி பாதி பைத்தியமாக கதறிட்டு இருக்கும்” என தன் மனம் போன போக்கில் பேசிக்கொண்டே வண்டி ஓட்டியவளின் கவனம் சாலையில் இல்லை. 

       

      “ஹரே பாப்ரே….. போதும் நிறுத்து தாயே…. ஒரு கேள்வி கேட்டா எப்பவும் புரியாத மாதிரியே பேச வேண்டியது. ஏய்…. ராங் சைடில் திரும்புற யஷ்!!! யஷ்…. லாரி டி… ” என்று கத்த அப்போது தான் கனவில் இருந்து விழித்தவள் எதிரே அதிவேகமாக வரும் சரக்கு லாரியை கண்டு வண்டியை ஒரமாக திருப்ப முயன்றாள். ஆனால், 

       

      “டொம்”

       

      ***

       

      ‘தாய் மண்ணை விட்டு ரொம்ப தூரம் வந்துட்டேன். இந்த ஊரில் சொந்தம் கொண்டாட யாருமே இல்லை. இருந்தும் சுவாசிக்கிற காற்றும் துடிக்கிற இதயமும் பக்கத்தில் எனக்கு வேண்டியவங்க இருக்கிறதா உணர்த்துதே!!! வாழ்க்கையில் நிறைய பேல் நிறைய விஷயங்களை சொல்லி கொடுத்து இருக்காங்க. இந்த டெல்லி எனக்கு என்ன சொல்லி தர காத்திருக்குதோ?’ என்று மனத்தில் சொல்லிக் கொண்டே டெல்லி மண்ணில் கால் வைத்தான் உதய வெற்றி. 

       

       

      காலம் தர காத்திருப்பது யாதோ??? 

       

       

       

        The post கனவு 1 appeared first on தூரிகை தமிழ் நாவல்கள்.

        ]]>
        https://thoorigaitamilnovels.com/%e0%ae%95%e0%ae%a9%e0%ae%b5%e0%af%81-1/feed/ 0 15908
        வெண்மேகமாய் கலைந்ததே-1 https://thoorigaitamilnovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%ae%e0%af%87%e0%ae%95%e0%ae%ae%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b2%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a4%e0%af%87-1/ https://thoorigaitamilnovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%ae%e0%af%87%e0%ae%95%e0%ae%ae%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b2%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a4%e0%af%87-1/#respond Fri, 01 Sep 2023 15:09:40 +0000 https://thoorigaitamilnovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%ae%e0%af%87%e0%ae%95%e0%ae%ae%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b2%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a4%e0%af%87-1/      வெண்மேகமாய் கலைந்ததே அத்தியாயம்-1 அகத்தை களவுக் கொள்ளும் கள்வனைசிறைப்பிடிக்க முயன்று தோற்றுப்போய் கைதியாக மாறினேன் காதலால்…       இடம் : மைசூர் பிருந்தாவனம் பார்க்       அக்காலம் முதல் இக்காலத்தின் நவீன சினிமா படங்கள் பலவும்,  சிரமம் இல்லாமல், எளிதான ‘சூட்டிங் ஸ்பாட்’ இடமென்று சில இடங்களை கூறலாம். அப்படிப்பட்ட இடங்களில் ஒன்று மைசூரில் உள்ள ‘பிருந்தாவனம் பார்க்’.    

        The post வெண்மேகமாய் கலைந்ததே-1 appeared first on தூரிகை தமிழ் நாவல்கள்.

        ]]>

        Loading

             வெண்மேகமாய் கலைந்ததே

        அத்தியாயம்-1

        அகத்தை
        களவுக் கொள்ளும்
        கள்வனை
        சிறைப்பிடிக்க முயன்று
        தோற்றுப்போய்
        கைதியாக மாறினேன்
        காதலால்…

              இடம் : மைசூர் பிருந்தாவனம் பார்க்

              அக்காலம் முதல் இக்காலத்தின் நவீன சினிமா படங்கள் பலவும்,  சிரமம் இல்லாமல், எளிதான ‘சூட்டிங் ஸ்பாட்’ இடமென்று சில இடங்களை கூறலாம். அப்படிப்பட்ட இடங்களில் ஒன்று மைசூரில் உள்ள ‘பிருந்தாவனம் பார்க்’.

            60 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த பிருந்தாவனம் லேசர் விளக்குகளுடன் நீர் ஊற்றுகளும், மலர்படுக்கைகள், அழகுப்படுத்தப்படும் புற்கள், படகு சவாரி என்று காண்போரை ரசிக்க வைக்கும். மூன்று நான்கு மணி நேரம் சுற்றி பார்க்கவே நேரம் சரியாக இருக்கும். ஆனாலும் வண்ண மலர்களையோ, செயற்கை ஊற்றுகளையோ ரசிக்க திகட்டவே திகட்டாது.
          
           அத்தகைய இடத்தில் தான் கமலி விஷ்ணுவிற்காக சற்று சலிப்புடன் காத்திருந்தாள்.
          
            விஷ்ணு கமலியின் காதலன். பெரும்பாலும் அவர்கள் சந்திப்பு இங்கு தான். வசதியான இடம், இயற்கை சூழல், சுற்றுலா ஆட்களை தவிர்த்து தெரிந்தவர்கள் வருவார்களோ என்று அஞ்சிட வேண்டிய அவசியமேயில்லை.
          
           காரணம் கமலியின் அக்கா சுதா மற்றும் மாமா ரங்கநாதன் இருவருமே பூந்தமல்லியை தாண்டி அடியெடுத்து வைக்காதவர்கள்.
        கமலியின் தாய் தந்தையர்கள் அக்கா சுதாவின் திருமணத்திற்கு பின் ஒருவர் மாற்றி ஒருவர் காலமாகிட மாமா ரங்கநாதன் தான் படிக்க வைக்கின்றார். ஓரளவு அம்மா வீட்டிற்கு தெரியாமல் மனைவிக்காக நல்லது செய்ய விருப்பப்படுவார்.

        மருத்துவம் படிக்க ஆர்வமாக இருந்தவளுக்கு போதியளவு வசதியில்லை. அதனால் மனம் உடைந்திடாமல் வேறு ஏதேனும் மருத்துவம் சார்ந்த படிப்பை சிந்திக்க பற்களில் தான் ஆர்வம் வந்தது. கையிலிருந்த இருப்பை போட்டு பற்கள் சம்மந்தமான படிப்பை படிக்கின்றாள்.

          கமலிக்கு முத்து பல் வரிசை. பார்க்கும் யாவருமே அவளது சிரிப்பையும் பல் வரிசையையும் புகழாதவர்கள் இல்லை எனலாம்.
          
            அப்படி டென்டிஸ்டாக B.D.S படிக்கும் காலகட்டத்தில் பயிற்சி வகுப்பில் சந்தித்ததவனே விஷ்ணு.

            இப்பொழுது நினைத்தாலும் அந்த நிகழ்ச்சிகள் பசுமையாக தோன்றும். ஆனால் தற்போது எண்ணி பார்க்க கமலி விரும்பவில்லை. தற்போது காத்திருப்பதற்கான காரணம் காதலனை ஆசையாக காண தவிக்கவில்லை. மாறாக அவனை திட்டி தீர்க்கவே வந்துள்ளாள்.

           விஷ்ணு எப்படி மறுக்கலாம்? காதலிக்கின்றவர்கள் பெரும்பாலும் காதலை தாண்டி அடுத்த கட்டமாய் திருமணத்தை தானே நாடுவார்கள். அவளுமே அதற்கான ஆசையில் பேச வந்தது.   
         
        “என்னப்பா இன்னமும் உன் ஆளை காணோம். எனக்கு நேரமாச்சு நான் கிளம்பட்டா?” என்று கார்த்திகா கலக்கமாய் கேட்டாள்.

        கமலிகாக காத்திருக்க துணைக்கு வந்திருந்தாள். நேரமாகவும் அவளும் வீட்டிற்கு செல்ல வேண்டுமே.

        கமலி பதில் கொடுக்க தயங்கி முகத்தை வருத்தமாய் வைத்திருக்க, “நீ வருத்தப்பட்டு நோ யூஸ் கமலி. என்னை விஷ்ணுவுக்கு சுத்தமா பிடிக்காது. நான் உன் கூட வந்திருக்கேன்னு தெரிந்து எங்கயாவது ஒளிந்து வேடிக்கை பார்ப்பான். நானா போன தானா வருவான்.” என்றதும் கமலி அந்த நிலையிலும் முறுவல் புரிந்தாள்.

        “என்ன சிரிப்பு?” என்று இடையில் கை வைத்து கார்த்திகா முறைக்க, “நானா… போனா.. தானா… ரைமிங்கா இருக்கு” என்றவள் கூடுதலாக முகம் வெட்கம் வந்து சென்றது.

        “அடிங்க… இங்க காதலே ஊஞ்சலாடுது. மேடமுக்கு சார் முதல் முதல்ல பேசின ரைமிங் வோர்ட்ஸ்ல நினைப்பு போகுது. உன்னை… உனக்கு போய் துணைக்கு காத்திருக்கேன் பாரு. இதுக்கு தான்டி காதலிக்கறவங்க கூடயிருக்கறவங்க ஹெல்ப் பண்ணறதில்லை.

        நீ காதலிச்சு கல்யாணம் பண்ணுவியோ? இல்லை பிரேக்கப் பண்ணிட்டு உங்க அக்கா மாமா பார்க்கறவரனை கட்டிப்பியோ. எதுனாலும் போன் பண்ணி சொல்லு. நான் கிளம்பறேன்.” என்று தோள் பையை எடுத்து தோளில் போட்டு எழுந்தாள்.

        “கார்த்தி.. ப்ளீஸ்… ப்ளீஸ் கார்த்தி. கூடயிருடி. நீயிருந்தா ஏதோவொரு கர்ட்டன்ஸிக்காவது டீசன்டா பேசுவான்.” என்று கமலி மீண்டும் கையை பிடிக்க, “நிஜமாவே டைம் ஆச்சு கமலி. ஏசி பஸ்ல டிக்கெட் எடுத்தாச்சு. எனக்காக அவன் வெயிட் பண்ண மாட்டான். புரிஞ்சுக்கோ கமலி.” என்றதும் கமலி கையை விடுவித்தாள்.

        “அப்பறம் போன் பண்ணு. எத்தனை மணிக்கு விஷ்ணு வந்தாலும் பேசிட்டு தகவல் சொல்லு பை” என்று கட்டியணைத்திட கமலியும் பதிலுக்கு அணைத்து விடுவித்தாள்.

        கண்ணை விட்டு மறையும் வரை கமலி கார்த்திகாவை பார்த்தாள்.

        அவள் சென்றதும் தன் கையிலிருந்த லைப்பேசியை எடுத்து தொடுத்திரையை நகர்த்தி ‘Vicchu’ என்ற எண்ணிற்கு அழைத்தாள்.

        ‘என் காதல் உயிர் பிழைத்து
        கொண்டது உன்னை பார்த்து
        என் வானம் இங்கு விடியுதே…

        என் கண்கள் அது உன்னையே தினம் பார்த்திட வேண்டும்
        உன் விரல்கள் எனை தீண்டுமே

        கூந்தலே என்னை நீ
        தொட்டு போ தொட்டு போ
        காதலே என்னை நீ
        தொட்டு போ தொட்டு போ

        நான் நானில்லை
        அவள் என் உயிருக்குள்
        ஒரு காதலெனும்
        சொல்லுக்குள் வாழ்வேன்.’ என்ற யுவன் ஷங்கர் ராஜாவின் பாடல் மிக அருகில் தன்பக்கம் கேட்க கூந்தல் அலைப்பாய திரும்பினாள்.

        இளையராஜா ஏ.ஆர்.ரஹ்மான் என்ற இரண்டு பக்கமும் வேண்டாமென்று யுவனின் இசைக்கு அடிமையானவன் இந்த விஷ்ணு.

        ‘என்னை நீ பார்க்க வர்றப்ப எப்பவும் ப்ரீ ஹேரோட தான் வரணும். அதுல ஏஞ்சல் மாதிரி இருக்க டி’ என்று கூறி கொஞ்சல் புரிந்து, காதல் செடிக்கு நீர் ஊற்றி வளர்த்த பனைமரம் நின்றிருந்தான்.

        எத்தனை நாட்களுக்கு தான் ஆறடி உயரமென்று விளிக்க?

        பனைமரம் என்று கூறினாலும் பொருந்தும் இந்த நாயகனுக்கு.

        “இங்கயே இருந்துட்டு தான் என்னை காத்திருக்க வச்சியா விஷ்ணு. கார்த்திகா சொன்னது சரி தான்.” என்று பேசி கையை கட்டி திரும்பிக் கொண்டாள்.

        “அந்த லூசு போயிடுச்சா… ஓ… மேடம் அவப்போன திசையை தான் கால்கடுக்க, கண் அலைப்பாய பார்த்திங்களோ?

        நான் கூட என்னை தான் தேடினியோனு ரசிச்சு பார்த்துட்டு வந்தேன் மடையனாட்டும் உட்கார்” என்று இழுக்க, அவன் மீதே விழும் அளவிற்கு இருந்தாள்.

        சுதாரித்து அக்கம் பக்கம் பார்த்து தள்ளி அமர, “எதுக்கு வெயிட் பண்ணற? நான் தான் என்னோட முடிவை அப்பவே சொல்லிட்டேனே. இவ்ளோ நேரம் இங்க இருக்கணுமா? நீயும் போயிருக்க வேண்டியது தானே” என்று எதிரே நீரூற்று பார்த்து பேசினான்.

        இதுவொரு பழக்கம் விஷ்ணுவிற்கு. சண்டையில்லாமல் பேசுவதாக இருந்தால் கமலி வதனத்தை இமைக்காமல் பார்த்து பேசுவான். இதே சண்டை என்றால் எங்கயாவது பார்த்து பேசுவான். இதிலே கமலி அறிந்துக்கொள்ள வேண்டும் அவன் கோபத்தின் அளவை.

        அடிக்கடி பார்த்து கோபமும் இருந்தால் அந்த சண்டை சமாதானத்திற்கு செல்லும் என்றும் அறிவாள். இன்று எப்படியோ?

        “ஆக்சுவலி நீ பேசியதுக்கு நான் கோபமா இருக்கணும். ஆனா நீ கோபமா இருக்க.” என்றதும், பச் என்று சலிப்படைந்தான்.

        “நான் இன்னிக்கு போனா இதோட எப்ப வருவேன்னு தெரியாது. இனி பேசறதா இருந்தா போன் காண்டெக் தான். கடைசியா நேர்ல பேச ஆசைப்பட்டேன்.” என்றதும் விஷ்ணு ‘ஹாஹா’ என்று சிரித்தான்.

        “என்ன சிரிப்பு?” என்று அவன் புஜத்தை பிடித்து திருப்ப, “கடைசியா… முடிவே பண்ணிட்ட போல” என்று அவள் பிடித்த கையை உதறினான்.

        “கடைசியா என்றால் நேர்ல பேசறதை தானே சொல்லறேன் விஷ்ணு. காலேஜ் முடியுது. நீ தப்பா நினைச்சா நான் பொறுப்பில்லை. எப்ப பாரு எது பேசினாலும் தப்பு கண்டுபிடிக்கிற” என்று போனை எடுத்து கார்த்திகாவுக்கு “vishnu vanthutar pesitu irukom. Nee bus eritiya?” என்று அனுப்பினாள்.

        விஷ்ணு ‘டொக்டொக்டொக்’ என்று சத்தம் கேட்கவும் திரும்பியவன் அவள் கார்த்திகாவுக்கு குறுஞ்செய்தி அனுப்ப கண்டு, “இங்க பாரு… என்னோட பேச வந்தா எனக்கு இம்பார்டன்ஸ் கொடுக்கணும். என்னை வச்சிட்டு ‘டொக்டொக்டொக்’னு தட்டிட்டு இருந்த எந்திரிச்சு கிளம்பிடுவேன்.” என்று குரல் உயர்த்தினான் விஷ்ணு.

        விஷ்ணுவிற்கு மெதுவாக பேசவே வராது. பேசினால் ‘கணீரெ’ன்று மேடை பேச்சு போல அழுத்தம் திருத்தமாய் துள்ளியமாய் கேட்கும். சாதாரணமாகவே அப்படியென்றால் சண்டையில் ‘ஹைபிச்’ ‘டிடிஎஸ்’ சத்தம் உண்டு.
        காதல் மொழி பேசும் போது மட்டும் மெல்லிசை மன்னனாக கமுக்கமாய் பேசிக்கொள்வான்.

        இன்று சண்டை என்பதால் சத்தம் கூடவும் பக்கத்திலிருந்த ஆட்கள் திரும்பி பார்த்தார்கள்.

        “ஏன் மானத்தை வாங்கற? மெதுவா பேசு” என்று அடக்க முயன்றாள்.

        “இங்கபாருடி… என்ன எதுக்கு கூப்பிட்ட? சொல்லு… உனக்கு என்ன பதில் வேண்டுமோ அதை சொல்லிட்டு கிளம்பிட்டே இருக்கேன்” என்று எரிந்து விழுந்தான். எதுக்கு கூப்பிட்டால்?77 என்ன பதில் வேண்டுமென்றே தெரிந்து கேட்பவனை கடித்து வைக்க தோன்றியது.

        ஆனாலும் பொறுமையாக “எதுக்கு கூப்பிட்டேன்னு தெரியாதா விஷ்ணு?” என்று அவன் தாடைப்பிடித்து கேட்டாள்.

        அவள் கையை எடுத்து விட்டு, “லுக் நான் இன்னமும் படிப்பை முடிக்கலை. தயவு செய்து இப்பவே கல்யாணம் பண்ணுனு டார்ச்சர் பண்ணாத.

        ஏற்கனவே இரண்டு காலேஜ்ல டி.சி கொடுத்து இரண்டு வருஷம் வேஸ்ட் ஆகிடுச்சுனு அப்பா புலம்பறார்.

        இந்த முறை இந்த வருஷத்தை கம்பீளிட் பண்ணிட்டு கல்யாணத்தை பத்தி பேசினா தான் வீட்ல பெட்டரா இருக்கும். படிப்பை முடிக்காம போய் நின்றேன். எங்கப்பா இளங்கோ என்னை வச்சி ஒரு சிலப்பதிகாரத்தையே எழுதிடுவார்.” என்று பேசவும், விம்மினாள்.

        கண்ணீர் துளிகள் கன்னத்தில் இறங்க, “மாமா அக்காவுக்கு என்னை படிக்க வைக்க முடிஞ்சது. இப்ப கல்யாணம் பண்ணி கொடுத்துட்டா ஒரு கடமை முடியும். இப்ப சென்னைக்கு போனா, அடுத்த இரண்டு வாரத்துல பொண்ணு பார்க்க வர்றதா சொல்லிருக்காங்க.

        நீ எனக்கு சப்போர்டா ஏதாவது பேசி நல்ல பதிலா சொன்னா தானே நான் அக்காவிடம் பேச முடியும். இப்படி காதலை பத்தி பேசாத. இப்ப கல்யாணம் பண்ணற ஐடியா எனக்கில்லைனு சொன்னா என்ன அர்த்தம். வெறும் டைம் பாஸ் பண்ண தான் என்னை இந்த இரண்டு வருடமா லவ் பண்ணினியா?” என்று கமலி கேட்டதும் விஷ்ணு கழுத்து நரம்புகள் புடைத்தது.

        “ஆமாடி.. டைம் பாஸ் பண்ணி என்ன பண்ணிட்டேன். மிஞ்சி மிஞ்சி இந்த இரண்டு வருஷத்துல கிஸ்ஸாடிச்சிருக்கேன் கட்டிப்பிடிச்சிருக்கேன். என்னவோ…” என்றவன் பேச்சிற்கு தடையிட்டான்.

        “சோ… என்னை தந்திருந்தா யோசித்திருப்ப அப்படி தானே?” என்று கூறும் போதே அழுதாள்.

        “இந்த ம..ருக்கு தான் வரலைனு சொன்னேன்.” என்று எழுந்தான்.

        “போன்ல தான் காலை கட் பண்ணிடறியே” என்று கோபித்து அவளும் எழுந்தாள்.

        “நான் தெளிவா சொல்லிட்டேன். நீ பி.டி.எஸ் படிச்சிருக்க, நான் எம்பி.ஏ செகண்ட் இயர். இதுல பி.பி.ஏ படிக்கிறப்ப காலேஜ்ல பிராப்ளமாகி இரண்டு வருஷம் டி.சி வாங்கிட்டு வீட்லயிருந்தேன்.

        இந்த காலேஜ்ல கூட அம்மாவுக்கு தெரிந்தவங்க என்றதால ஏதோ சேர்த்துக்கிட்டாங்க. இப்ப எம்.பி.ஏவும் பாதில வச்சிட்டு உங்க அக்கா மாமாவிடம் எந்த முகத்தை வச்சி வருவேன்.
        இந்த வருஷம் வெயிட் பண்ணு. நான் படிப்பை முடிச்சி ஒரு வேலையில சேர்ந்துட்டு அப்பா அம்மாவிடம் சொல்லி பொண்ணு கேட்க வர்றேன்.

        அப்படி முடியாதுனா நீ இரண்டு வாரத்துல பொண்ணு பார்க்க வர்றவனையே கட்டிக்கோ. ஆல் த பெஸ்ட்” என்று கைகுலுக்கி வாழ்த்தி விட்டு வேகமாய் நடந்தான்
        அவன் தன் கைகளை பிடித்து வாழ்த்து குலுக்கி நடக்கவும் திகைத்தவள், “நீ என்னை அவ்வளவு தான் காதலிக்கறியா விஷ்ணு? நம்ம காதல் அவ்ளோ தானா?” என்று கேட்க திரும்பியவன்.

        “நீ என்னை அவ்ளோ தான் நம்பற கமலி. அப்படின்னா அவ்ளோ தான்” என்று மீண்டும் வாசல் பக்கம் நடந்தான்.

        பேசி பேசியே பிருந்தாவனம் வாசல் வரை வந்துவிட்டார்கள்.

        “என் மனசை உடைச்சிட்டு போற விஷ்ணு” என்று உரைக்க, தன் பைக்கை உதைத்து, “நீ காதலையே பிரேக்கப் பண்ணி உடைச்சிட்ட” என்று வண்டியை முறுக்கி கொண்டு சென்றான்.

        மின்னல் வேகத்தில் வண்டியில் சென்றவனை எண்ணி அழுதவள் ஒரு முடிவோடு இனி நானும் முறுக்கிட்டு போறேன் விஷ்ணு. நீ தேடி வரும் போது நான் ரொம்ப தொலைவுக்கு போயிருப்பேன்’ என்று மனதில் கூறி எதிர்திசையில் நடையிட்டாள்.

        இரு துருவங்கள் வெவ்வேறு திசையில் தங்களை செலுத்திக்கொண்டது. ஆனால் எதிரெதிர் திசைகள் ஒன்றை ஒன்றை ஈர்க்கும் வல்லமை நிகழாமல் போகுமா?

        -தொடரும்
        மேக்னட் காதல் 

          The post வெண்மேகமாய் கலைந்ததே-1 appeared first on தூரிகை தமிழ் நாவல்கள்.

          ]]>
          https://thoorigaitamilnovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%ae%e0%af%87%e0%ae%95%e0%ae%ae%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b2%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a4%e0%af%87-1/feed/ 0 15741
          கனவே உனை வந்து சேர – டீசர் 2 https://thoorigaitamilnovels.com/%e0%ae%95%e0%ae%a9%e0%ae%b5%e0%af%87-%e0%ae%89%e0%ae%a9%e0%af%88-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%af%87%e0%ae%b0-%e0%ae%9f%e0%af%80%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d-2/ https://thoorigaitamilnovels.com/%e0%ae%95%e0%ae%a9%e0%ae%b5%e0%af%87-%e0%ae%89%e0%ae%a9%e0%af%88-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%af%87%e0%ae%b0-%e0%ae%9f%e0%af%80%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d-2/#respond Thu, 31 Aug 2023 06:59:38 +0000 https://thoorigaitamilnovels.com/%e0%ae%95%e0%ae%a9%e0%ae%b5%e0%af%87-%e0%ae%89%e0%ae%a9%e0%af%88-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%af%87%e0%ae%b0-%e0%ae%9f%e0%af%80%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d-2/ “உன் கிட்ட ட்ரீட் கேட்டது ஒரு தப்பாடா… மூன்று மாசமா கேட்டு கேட்டு கெஞ்சி இப்ப தான் கொடுக்கிற ஆனா பரேன் கொடுமையை… இது எல்லாம் மனிசம் சாப்பிடுவானா இலையும் தழையுமா…. சரி குடிக்கவாது நல்லாத இருக்கா அதுவும் கீரை சூப் காராகுழம்புனு.. ஏன்டா”  என்று பாவமாக மாதேஷ் தன் நண்பனான வெற்றியிடம் கேட்க,    ” உனக்கு இதுவே அதிகம் தான்டா” என்று கையில் இருக்கும் சூப்பை குடிக்க, 

          The post கனவே உனை வந்து சேர – டீசர் 2 appeared first on தூரிகை தமிழ் நாவல்கள்.

          ]]>

          Loading

          “உன் கிட்ட ட்ரீட் கேட்டது ஒரு தப்பாடா… மூன்று மாசமா கேட்டு கேட்டு கெஞ்சி இப்ப தான் கொடுக்கிற ஆனா பரேன் கொடுமையை… இது எல்லாம் மனிசம் சாப்பிடுவானா இலையும் தழையுமா…. சரி குடிக்கவாது நல்லாத இருக்கா அதுவும் கீரை சூப் காராகுழம்புனு.. ஏன்டா”  என்று பாவமாக மாதேஷ் தன் நண்பனான வெற்றியிடம் கேட்க, 

           

          ” உனக்கு இதுவே அதிகம் தான்டா” என்று கையில் இருக்கும் சூப்பை குடிக்க, 

           

          “மச்சான் அட் லிஸ்ட் பீர் யாவது வாங்கி தாடா. இன்றைக்கு ட்ரீட்னு மைன்ட் செட் பண்ணிட்டேன்” என

           

          “குடி குடியைக் கெடுக்கும்…. இது எல்லாம் தெரிஞ்சி எதுக்கு டா உடம்பை கெடுத்துகுனு… ” என

           

          மாதேஷ்  “எப்பா சாமி…. நீ ஆரம்பிக்காதடா…. எதோ மொடக்குடிகாரன் கிட்ட பேசற மாதிரி பேசு. உனக்கு ஒரு குடிகாரி மனைவியா வரனும்னு நான் சாபம் தரேன். இருந்தாலும் நீ சரியான சாமியார் டா உன் கிட்ட மாட்ட போற பொண்ணு ரொம்ப பாவம். நீயே ரொம்ப மென்மையான ஆள் உனக்கு எதுக்கு டா இந்த பொலிஸ் வேலை”

           

          “என்னை பத்தி தெரியலைடா உனக்கு… நான் பார்த்தா சிங்கம் பாய்ந்தா புலி….  ஒடுனா சிறுத்தை” என

           

          “அடங்குடா நாயே…. இனி உன் கிட்ட இதை பற்றி கேட்டா செருப்பாலே அடி.  போஸ்டிங் டெல்லினு சொன்னியே எப்ப கிளம்ப போற”

           

          “அடுத்த வாரம் டா. சவுத் சைட் தான் டீரை பண்ணேன். பட் அங்க கொஞ்ச மாசமா கிரைம் ரேட் அதிகமா இருக்குனு மேல் அதிகாரி சொன்னார் டா. அதான் நாட்டை திருத்த போக போறேன்” என

           

          மாதோஷ் மனதில்  ‘அதிர்ந்து கூட பேச மாட்டான். கண்ணுக்கு தெரியாத இடமும் மொழி புரியாத ஊருக்கு போறான். கடவுளே நீ தான் துணை இருக்கனும்’ என்று வேண்ட

           

          ‘நீ சொன்ன மாதிரியே ஐபிஎஸ் ஆகிட்டேன். ஆனால் பக்கத்தில் நீ இல்லையே.  நான் என்ன தப்பு பண்ணேன் கூட தெரியலை. ஆனால் தண்டனை மட்டும் அனுபவிக்கிறேன். தண்டனை காலம் எப்ப தான் முடியுமோ’ என்று கையின் பிரேஸ்செடில் தொங்கும் மணியை வருடிக் கொண்டே இருந்தான் உதய வெற்றி ஐஏஎஸ். 

           

           

            The post கனவே உனை வந்து சேர – டீசர் 2 appeared first on தூரிகை தமிழ் நாவல்கள்.

            ]]>
            https://thoorigaitamilnovels.com/%e0%ae%95%e0%ae%a9%e0%ae%b5%e0%af%87-%e0%ae%89%e0%ae%a9%e0%af%88-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%af%87%e0%ae%b0-%e0%ae%9f%e0%af%80%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d-2/feed/ 0 15670
            கனவே உனை வந்து சேர – டீசர் 1 https://thoorigaitamilnovels.com/%e0%ae%95%e0%ae%a9%e0%ae%b5%e0%af%87-%e0%ae%89%e0%ae%a9%e0%af%88-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%af%87%e0%ae%b0-%e0%ae%9f%e0%af%80%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d/ https://thoorigaitamilnovels.com/%e0%ae%95%e0%ae%a9%e0%ae%b5%e0%af%87-%e0%ae%89%e0%ae%a9%e0%af%88-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%af%87%e0%ae%b0-%e0%ae%9f%e0%af%80%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d/#comments Thu, 24 Aug 2023 06:42:40 +0000 https://thoorigaitamilnovels.com/%e0%ae%95%e0%ae%a9%e0%ae%b5%e0%af%87-%e0%ae%89%e0%ae%a9%e0%af%88-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%af%87%e0%ae%b0-%e0%ae%9f%e0%af%80%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d/ யஷ்!!! யஷ்!!! யஷ்!!! என்று அந்த அரங்கமே அதிரும் வண்ணம் மாணவ மாணவிகளின் சத்தம் இரவின் அமைைதியை கிழித்துக் கொண்டு இருக்க, மேடையில், தன் முன்னே ஆர்ப்பரிக்கும் கூட்டத்தை கண்டு கையில் மைக்கோடு கண்களை அழுத்த மூடி திறந்தவள் தன் குரலால் அரங்கையே அடுத்த சில மணி துளிகளுக்கு கட்டி போட்டு இருந்தாள்.  “யஷ்…. யூ ஆர் அமேசிங்…. இன்றைக்கு நம்ம காலேஜ் டிராபி வாங்க உன்னுடைய சிங்கிங் முக்கியமான

            The post கனவே உனை வந்து சேர – டீசர் 1 appeared first on தூரிகை தமிழ் நாவல்கள்.

            ]]>

            Loading

            யஷ்!!! யஷ்!!! யஷ்!!! என்று அந்த அரங்கமே அதிரும் வண்ணம் மாணவ மாணவிகளின் சத்தம் இரவின் அமைைதியை கிழித்துக் கொண்டு இருக்க,

            மேடையில், தன் முன்னே ஆர்ப்பரிக்கும் கூட்டத்தை கண்டு கையில் மைக்கோடு கண்களை அழுத்த மூடி திறந்தவள் தன் குரலால் அரங்கையே அடுத்த சில மணி துளிகளுக்கு கட்டி போட்டு இருந்தாள். 

            “யஷ்…. யூ ஆர் அமேசிங்…. இன்றைக்கு நம்ம காலேஜ் டிராபி வாங்க உன்னுடைய சிங்கிங் முக்கியமான காரணம். எல்லாரும் பார்ட்டியில் ஹாப்பியா இருக்காங்க. நீ மட்டும் ஏன் என் கிட்ட கூட சொல்லாமல் வீட்டிற்கு வந்துட்ட” என்று தன் தோழியிடம் கேட்டான் ரோகித் படேல். 

            “மூட் ஆஃப் ராகி… இன்றைக்கு என்னால் பாட முடியும்னு கூட நான் நினைக்கலை… ஆனால்” என்று சொல்லும் போதே இடையில் ரோகித், 

            “வெயிட் மச்சி… எப்படியும் நீ ஒரு சோகக் கதையை சொல்ல போற நான் போய் அதுக்கு கரெக்டான ஐட்டத்தை ரெடி பண்ணிட்டு வரேன்” என்று உள்ளே செல்ல, பால்கனியில் இருந்த படியே டெல்லியின் குளுமையை அனுபவித்தாள். 

            கையில் சரக்கோடு வரும் நண்பனை பார்த்து “அட குடிகார நாயே அப்ப நீ என்னை சமாதானம் பண்ண வரலை… குடிக்க காரணம் தேடி வந்திருக்க” என்று முறைக்க, 

            “விடு மச்சி… புண்பட்ட மனதை புகை விட்டு ஆத்துனு பழமொழியே இருக்கு” என அசடு வழியே இளித்து கொண்டு சொல்ல, 

            “பழமொழியா…. உனக்கு தமிழ் சொல்லி கொடுத்து பெரிய தப்பை பண்ணிட்டேன். சரி சரி எனக்கும் ஒரு க்ளாஸ் தா இரண்டு பேரும் சேர்ந்து ஆத்தலாம்” என்று சிரித்து கொண்டே சொல்ல

            “இது தான் நல்ல நண்பிக்கு அழகு… எப்பவும் உன் முகத்தில் இந்த சிரிப்பு இருக்கனும். அதுக்காக இந்த ரோகித் எதுவும் செய்வான்” என்று அழுத்தமான குரலில் சொல்ல, 

            “அது தான் தெரியுமே” என்று சொன்னவளின் கண்களில் சொல்ல முடியாத வலிகள் பல தேங்கி கிடந்தது. 

              The post கனவே உனை வந்து சேர – டீசர் 1 appeared first on தூரிகை தமிழ் நாவல்கள்.

              ]]>
              https://thoorigaitamilnovels.com/%e0%ae%95%e0%ae%a9%e0%ae%b5%e0%af%87-%e0%ae%89%e0%ae%a9%e0%af%88-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%af%87%e0%ae%b0-%e0%ae%9f%e0%af%80%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d/feed/ 1 15572
              அறிமுகம் https://thoorigaitamilnovels.com/%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d/ https://thoorigaitamilnovels.com/%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d/#comments Wed, 23 Aug 2023 11:01:58 +0000 https://thoorigaitamilnovels.com/%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d/ வாழவே ஆரம்பிக்காத வாழ்வை துரோகத்தால் இழந்தால்??? வெறுக்கும் உறவின் சின்னத்தை வாழ்க்கை முழுக்க சுமந்தால்???  சூடு கண்ட பூனையாய் உறவை ஏற்க முடியாமல் தவிர்த்தால்???  பெற்றவரின் வேதனையால் உயிர் காதலை துறந்தால்???  கடலளவு பாசம் வைத்திருக்கும் சொந்தங்களால் உயிரளவு நேசிக்கும் உறவை பிரிந்தால்???  கடமைக்கும் குடும்பமுக்கும் இடையில் காதல் சிக்கினால்???  விதியோடு போராடி சதியை மதியால் வெல்ல முடியுமா!!!!    வெல்ல போவது யாரோ????    நாயகன்  :  உதய

              The post அறிமுகம் appeared first on தூரிகை தமிழ் நாவல்கள்.

              ]]>

              Loading

              வாழவே ஆரம்பிக்காத வாழ்வை துரோகத்தால் இழந்தால்???

              வெறுக்கும் உறவின் சின்னத்தை வாழ்க்கை முழுக்க சுமந்தால்??? 

              சூடு கண்ட பூனையாய் உறவை ஏற்க முடியாமல் தவிர்த்தால்??? 

              பெற்றவரின் வேதனையால் உயிர் காதலை துறந்தால்??? 

              கடலளவு பாசம் வைத்திருக்கும் சொந்தங்களால் உயிரளவு நேசிக்கும் உறவை பிரிந்தால்??? 

              கடமைக்கும் குடும்பமுக்கும் இடையில் காதல் சிக்கினால்??? 

              விதியோடு போராடி சதியை மதியால் வெல்ல முடியுமா!!!! 

               

              வெல்ல போவது யாரோ???? 

               

              நாயகன்  :  உதய வெற்றி

              நாயகி :  யஷ்வினி

               

              விரைவில் டீசரோட சந்திக்கலாம்❤

               

              காதலுடன்

              நிலவின் காதலி 151

               

                The post அறிமுகம் appeared first on தூரிகை தமிழ் நாவல்கள்.

                ]]>
                https://thoorigaitamilnovels.com/%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d/feed/ 1 15559