About

Meenakshi Adaikkappan

நான் மீனாட்சி. மென்பொருள் துறையில் பணியாற்றுகிறேன். படித்தது உயிரித் தொழில்நுட்பம். தமிழும் கதைகளும் மிகவும் பிடிக்கும். கதைகள் படிக்க ஆரம்பித்த எனக்கு எழுத வேண்டும் என்ற உத்வேகம் பிறந்தது. அதனால் எழுத ஆரம்பித்தேன். இரண்டு வருடங்களாக கதைகள் எழுதுவது எனது தலையாய பொழுதுபோக்கு. எனது இரண்டு நாவல்கள் வானதி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருக்கிறது. சரித்திர நாவல்கள் எழுத மிகவும் பிடிக்கும். அதற்கு தகவல் சேகரிப்பு மிகவும் கடினமாக இருந்தது. இப்பொழுது கம்போடியா அங்கோர் வாட் கோவிலைக்‌ கட்டிய இரண்டாம் சூர்யவர்மனைப் பற்றி எழுதுகிறேன். எனக்கு தேவையான தகவல்கள் இந்த வகுப்புகள் மூலம் பெறலாம் என்று எண்ணியே இதில் கலந்து கொள்கிறேன். வகுப்புகளைப் பற்றி இரு வார்த்தைகளில் கூற வேண்டும் என்றால் நனி நன்று. உண்மையில் நான் எதிர்பார்த்ததை விட அதிகமான தகவல்கள் இருக்கிறது. ஒவ்வொரு நாளும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன். வகுப்பின் இறுதியில் உள்ள கேள்வி பதில் நேரமும் எந்த வித குழப்பமும் இன்றி நடைபெறுகிறது. மூன்று மாதத்துடன் முடிந்துவிடாமல், வாழ்க்கை முழுக்க இந்த குழுவுடன் பிணைப்பு வேண்டும் என்று தோன்றும் அளவு வகுப்புகளும் தகவல்களும் இருக்கிறது. உண்மையில் வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் இணைந்து விடுவேன். நனி நன்றி!!!

Meenakshi Adaikkappan
6

Completed Books

3

Ongoing Books

Thoorigai Novels

17. அக்கினி பழத்தில் அரைத்த ஆரல்(முடிந்தது)

நாட்கள் அதன் போக்கில் நகர்ந்தது. செவ்வாயில் எந்த மாற்றமும் நிகழவில்லை. கணியும் மதுபல்லவியும் ஒன்றாக...

16. அக்கினி பழத்தில் அரைத்த ஆரல்

கணி வந்த விண்கலம் செவ்வாய் வந்தடைந்தது. அதற்குள் ஒரு யுகமே கடந்துவிட்டதுபோல் உணர்வு அவனுக்கு. செவ்வாயில்...

15. அக்கினி பழத்தில் அரைத்த ஆரல்

புழுதிப்புயல் வரும் செய்தி கணி பயணம் செய்த விண்கலத்தில் இருந்தவர்களுக்குத் தெரியாது. அதை அவர்களிடம்...

14. அக்கினி பழத்தில் அரைத்த ஆரல்

நாட்கள் அதன் போக்கில் நகர்ந்தது. சென்னி அடுத்த விண்கலம் செலுத்த தயாராய் இருந்தான். அதில் கணி, அதி...

13. அக்கினி பழத்தில் அரைத்த ஆரல்

கணியின் அருகில் சென்னி அமர்ந்திருந்தான். அங்கிருந்த தொலைக்காட்சித் திரையில் நேரலை ஒளிபரப்பாகிக்...

12. அக்கினி பழத்தில் அரைத்த ஆரல்

சென்னியுடன் கணி, அதி மற்றும் கீர்த்தி அமர்ந்திருந்தனர். சென்னியும் கணியும் உருண்டு பிரண்டனர் சற்றுமுன்....

Kindle

தீரா வஞ்சம் தீர வாராயோ

முன்னுரை எழுதுபவரின் பணி கட்டியம் கூறி கதவைத் திறந்து விடுவது மட்டுமே. புதிய எழுத்தாளர்களுக்கு...

நித்தமும் உன்மத்தம் ஏறுதடி நின் பகையால்: தீரா வஞ்சம் தொடர்ச்சி

தீரா வஞ்சம் கதையின் நீட்சியே நித்தமும் உன்மத்தம் ஏறுதடி நின் பகையால். இதில் ஆதிரைக்கு என்னவாயிற்று....

சுவர்ண பூமி- அங்கோர் வாட் - பாகம் 2

கம்போடியாவில் உள்ள அங்கோர் வாட் கோவிலைக் கட்டிய இரண்டாம் சூர்யவர்மனைப் பற்றிய கதை இது. கம்போடியாவில்...

அற்றைத் திங்களில்....

ஒரு போட்டியில் முதல் பத்தா கதைகளுக்குள் தேர்வான கதையிது. நான் எழுதிய கதைகளில் இந்த கதையும் நனியிதழும்...

வண்ணத் தூரிகை

வண்ணத் தூரிகை - சிறு கதைகள் தொகுப்பு

சுவர்ண பூமி- அங்கோர் வாட் - பாகம் 1

கம்போடியாவில் உள்ள அங்கோர் வாட் கோவிலைக் கட்டிய இரண்டாம் சூர்யவர்மனைப் பற்றிய கதை இது. கம்போடியாவில்...

திரௌபதி சபதம்: திரௌபதி சபதம்

கவிதையுறவு பத்திரிகை நடத்திய இலக்கிய விழாவில் இந்த கதை இரண்டாம் பரிசு பெற்றது.சமீபகாலமாக நமது நாட்டில்...

ஆனந்த யாழை மீட்டுகிறாள்

A short Story describing the relationship.

My Work

திரௌபதி சபதம்

வானதி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருக்கிறது.

தீரா வஞ்சம் தீர வாராயோ

வானதி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருக்கிறது.

Reviews

சந்தர்ப்ப சூழ்நிலைகளே கதையின் நாயகன் நாயகி

நிச்சயமாய் என்னுடைய இதயத்தில் நீங்கா இடம் பிடித்த கலெக்சனின் ஒன்றாக இருக்கும்.நான் பல கதைகள் படிச்சிருக்கேன் காதல் கதை, கிரைம், திரில்லர், நகைச்சுவை, அமானுஷ்ய பேய் கதை, வரலாற்று கதைகள், சமூக சிந்தனை கதைகள் இப்படி நிறையா இருக்கு ஆனால் இந்த கதை போல இயற்கையின் மேல தாக்கத்தை ஏற்படுத்தியது ஏதும் இல்லை காரணம் நனியிதழ் மட்டுமே. இதை நான் பெருமையாவே சொல்லுவேன்.என்னை பொறுத்தவரையில் ஒரு கதையின் சந்தர்ப்ப சூழ்நிலைகளே கதையின் நாயகன் நாயகிகளை உருவாக்குகிறது. காரணம் அதிரூபனை நாயகனா கொண்டு ஆரம்பித்த கதையில் முடியும் போது அனைவரின் மனதிலும் நின்றவன் கணியனே.

மழை பெய்த மரத்தடி மண் போல மனச இதமாக்கி இருக்கு

"This episode sounds like an icing over a well decorated cake" - "it walk along the park very smoothly" - மழை பெய்த மரத்தடி மண் போல மனச இதமாக்கி இருக்கு. படிப்படியா கதைய நாகர்த்தி வாசிக்கிறவங்கள ஏன் இப்பிடி , அடுத்து என்ன நடக்கும், என்றெல்லாம் எதிர்பார்க்க வைச்சு அடுத்த பதிவு எப்ப வரும் என்னு ஏங்க வைச்சு அதே சுவாரஸ்யம் குறையாம முடிவுகள விளக்கி கதைய அழகா முடிச்சிருக்கீங்க "". மொத்தத்தில் இந்த கடைசி அத்தியாயம் எல்லார் நெஞ்சையும் இளக வைக்கும் ரகம்.வழக்கம் போல உங்கள் உவமை என்னை ஆச்சரியப்பட வைக்கிறது. வென் மதி-னு வாசித்த உடனே வேந்தன் சொல்லுற பௌர்ணமி கவிதையாக இருக்கும்னு நினைத்தேன் ஆனால் அது சூரிய கிரகணமாக இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. கலந்துரையாடகளைத்தவிற மீதம் ஒரு 40 வரிகள் இருக்கும் ஆனா அதுல இருந்த கருத்தும் அதனோட பொருள் அண்டம் அளவுக்கு இருந்தது. என்னுடைய பேராசிரியர் ஒரு தடவை என்கிட்ட ஒரு விசயம் சொன்னார்.

காதலை கையாண்ட விதமும் வெகு இயல்பாய் பொருந்தியது.

மிகச்சிறப்பான கதைக்களம்.அதைஅத்தனை நேர்த்தியாக கையாண்டும் இருக்கிறீர்கள் சகி. இயற்கையை மையமாக வைத்து கலந்துரையாடல் பகுதியில் பல பதிவுகளை நான் இட்டிருக்கிறேன். அவற்றைக்கொண்டு கட்டுரை ஒன்றும் எழுதலாம் என்று நினைத்திருந்தேன். இன்று தங்கை மனிஷா வாயிலாக இந்தக்கதை பற்றி அறிந்தேன். எடுத்ததும் என்னால் கீழே வைக்கக்கூட முடியவில்லை. அந்த அளவிற்கு அலுப்புத்தட்டாது வெகு அற்புதமாக கொண்டு சென்றிருந்தீர்கள். நகைச்சுவை என்ற பெயரில் கதைக்கு பொருந்தாத எதையும் நீங்கள் புகுத்தவில்லை என்பது உங்கள் மீது மிகப்பெரிய மரியாதையை தோற்றுவித்தது என்றால் மிகையல்ல. காதலை நீங்கள் கையாண்ட விதமும் வெகு இயல்பாய் பொருந்தியது. உங்கள் கதையை இதற்கு முன்பு படித்ததில்லை சகி. இதுவே முதல் முறை. ஆனால் என்றைக்குமே என்னால் மறக்கமுடியாத கதைகளில் நிச்சயம் இதற்கும் ஓரிடம் உண்டு. இந்த படைப்பை வழங்கிய உங்களுக்கு நன்றிகள் பல!!!

இந்த கதை எப்போதும் என் நினைவில் கலந்திருக்கும்

இன்னும் எத்தனையோ கதைகள் படிக்கின்றோம். சில கதைகள் வாழ்வின் அங்கங்களாகி எப்போதும் நினைவிருக்கும். உங்களது இந்த கதை எப்போதும் என் நினைவில் கலந்திருக்கும். நீங்கள் அடிக்கடி இது எனது இரண்டாவது கதை என்கிறீர்கள். ஆனால் இரண்டாயிரம் கதைகள் நீங்கள் எழுதி முடித்த பின்பும் இது உங்களது படைப்புலகில் முக்கிய அங்கம் வகிக்கும் என்பதில் யாதொரு ஐயமும் எனக்கில்லை. இந்த கதைகளின் பிளாஷ்பேக் பகுதிகள் படிக்கும்போது.. அந்த காலத்திற்குள் அழைத்து சென்றிருக்கிறீர்கள். அதற்கு நேர்மாறாக இப்போது நடக்கும் பகுதிகளில் அந்தந்த வட்டார வழக்கை மாறாமல் வழங்கி நகைச்சுவையை கலந்து அற்புதமாக படைத்திருந்தீர்கள். இந்ந கதையினை பற்றி விமர்சனம் சொல்லும் தகுதி எனக்கில்லை.. இதற்காக நீங்கள் எவ்வளவு உழைத்திருக்கிறீர்கள் என்பதை உங்கள் எழுத்தில் கண்டேன். இப்படி ஒரு படைப்பை இத்தளத்தில் இலவசமாக பதிவிட்டு படிக்கும் வாய்ப்பை நல்கியதற்கு நன்றிகள். புத்தகம் பதிப்பித்து விட்டு கூறுங்கள்.. காகிதப் பதிப்பில் மீண்டும் ஒருமுறை படிக்க விருப்பம்...

உவமைகளின் தேடல்

திருக்குறள் 2 அடிகள், 7 வார்த்தைகள் தான் ஆனால் அதுல ஒரு மனிதனின் வாழ்க்கையே அடங்கி இருக்கும். ஆனால் திருக்குறள் படிச்ச உடனே எனக்கு புரியும்னு சொல்லும் அளவுக்கு என் தமிழ் அறிவு கிடையாது..... ஆனா உங்க உவமைகள் படிச்ச பிறகு நீங்க சொல்ற விசயம் எவ்ளோ பெருசுனு உங்களோட 2-3 உவமை வரிகள்ள எனக்கு புரிகிறது (இதே மாதிரி திருக்குறள் படிச்ச உடனே புரிஞ்சுக்குற அளவுக்கு என் தமிழ் அறிவ நான் வளர்த்திப்பென்னு நம்புகிறேன்).... சில நாட்கள் முன்பு இந்த கதை பற்றிய வரலாறு தேடல்ல இருக்கிறதா சொன்னிங்க ஆனா எனக்கு அப்படி தோனல இந்த கதைக்கு தேவையான உவமைகள்ள நீங்க அதிகமான தேடல்ல இருக்கிரிங்க என்பது என் எண்ணம். காலங்கள் மாறலாம் என் தாய் தமிழ் மொழியை படித்தவர்கள் சில பேரால் தான் சங்கத் தமிழ், தொல்காப்பிய தமிழாகி, இலக்கியத்தமிழாகி, செண்தமிழாகி, மரியாதை கெஞ்சும் கொங்கு தமிழாய் கன்னித்தமிழாக இன்னும் எத்தனை யுகங்கள் கடந்தாலும் நம் தமிழ் கன்னியாகவே இருப்பாள் அதற்கு உங்களைப் போன்ற சில 21-ம் நூற்றாண்டின் இலக்கியவாதிகளே சாட்சி.......

Interview Questions

என்னோட வாசிப்பு... தமிழ் மேல் உள்ள பற்று.. இதையும் தாண்டி அன்றாட வாழ்வில் என்னால் தட்டிக் கேட்க முடியாத சில சம்பவங்கள்... அதையெல்லாம் கதையில் கூறி, அதற்கு தீர்வும் கூறுவதில் ஒரு மன அமைதி..

இவை இருண்டும் இல்லாமல் எழுத வேண்டும் என்பது என் கருத்து‌. நானும் முயற்சி செய்து கொண்டிருக்கும் கத்துக்குட்டி.

இன்னும் கொஞ்சம் திமிர் கொள்ளலாம் தமிழனென்று தவறில்லை...

அதிகமான ரொமாண்ஸ்... வில்லனை சித்தரிக்கும் வக்கிரமான காட்சிகள்... இதெல்லாம் நான் எழுத சங்கடமான பிரிவுகள்.

எதிர்மறைக் கதைகள் பெரும்பாலும் நான் எழுதவதில்லை. கதையில் வரும் வில்லனை‌யும் மாற்றிவிடுவேன்.