Loading

அர்னவ் தேவ் தொழிற்சாலைக்கு ரவுண்ட்ஸ் செல்லும் நேரம் ஜனனியும் அவன் பின்னே வந்தாள்.

சூப்பர்வைசரிடம் அடுத்த நாள் டெலிவரி செய்யப்படும் கார்களின் விவரங்களைக் கேட்டபடி நடந்திட, ஒரு பணியாளர் வேகமாக அர்னவின் அருகில் வரும்போதே ஜனனி அவனுக்கு முன் வந்து நின்றிருந்தாள்.

பணியாளரின் நெஞ்சில் கை வைத்துத் தடுத்தவள், “என்ன வேணும்?” எனக் கூர்மையாக வினவ, “மேம்… அடுத்த வாரம் என் பொண்ணுக்கு கல்யாணம். சாருக்கு பத்திரிகை வைக்க ட்ரை பண்ணேன். அவர் ரூம்க்கு யாரையும் அலோ பண்ண மாட்டுறாங்க. அதான் இங்கயே கொடுக்கலாம்னு…” என தயங்கினார் அவர்.

பல வருடங்களாய் சீனியர் அக்கவுண்டண்டாகப் பணிபுரிபவர் மாதவன். அதனால் அர்னவ் தேவே, “விடு ஜனனி. நான் பாத்துக்குறேன்” என்றிட, அவளோ அதனைக் காதில் வாங்காமல், மாதவனிடம் பத்திரிகை கேட்டு கையை நீட்டினாள்.

இலேசாக முகம் சுருங்கி அர்னவைப் பார்த்தவர், பத்திரிகையை அவளிடம் நீட்ட, அவளோ அந்தப் பத்திரிகையைக் கூட சந்தேகமாகப் பார்த்தாள். அதில் அர்னவும் அதனை எட்டிப் பார்த்து, “ஹே நூடுல்ஸ்… இன்விடேஷன்ல என்ன தேடிட்டு இருக்க?” என அடிக்குரலில் கேட்டான்.

“ம்ம் உங்க பேர் போட்டுருக்கான்னு பாக்குறேன்” என சிலுப்பியதில், அவளை முறைத்தான்.

“என்னை பாடி கார்டா என் வேலையை செய்ய விடுங்க சார்ர்ர்… டிஸ்டர்ப் பண்ணாதீங்க” என அவனையே அடக்கியவளை தொழிற்சாலையே ஒரு மார்க்கமாகப் பார்த்தது.

பொதுவாக அர்னவிடம் குரலை உயர்த்தி பேசும் தைரியம் சந்திரசேகருக்கே இருந்ததில்லை.

ஒரு வாரமாகவே அவளுடன் இருப்பதால், அர்னவிற்கு அவள் நக்கலடிப்பதும் எதிர்த்து பேசுவதும் பழகியே போனதில், எல்லாம் என் நேரம் எனக் கடுப்படித்தான்.

ஜனனியோ “அடுத்த வாரம் கல்யாணத்தை வச்சுட்டு இப்ப தான் இன்விடேஷன் குடுக்குறீங்க” என கோபமாகக் கேட்க, “அது… சாரை பார்க்க ட்ரை பண்ணேன் மேம்.” என முடிக்கும் முன், “எப்ப இருந்து?” என எதிர்கேள்வி கேட்டாள்.

“ரெண்டு வாரமாவே!”

“இல்லையே லாஸ்ட் மூணு நாளா தான் அவர் ரூமுக்குள்ள யாரையும் அலோ பண்ணல. அதுக்கு முன்னாடி என்ன பண்ணிட்டு இருந்தீங்க?”

பத்திரிகை கொடுக்க வந்தவரை பேசியே மயக்கமடைய வைத்து விட்டதில் அர்னவ் தான், “போடி… இவளே” என பொறுமை இழந்து அவளை அங்கேயே விட்டுவிட்டு தனது ரவுண்ட்ஸை தொடர்ந்தான்.

அதில், “சார்ர்ர் நில்லுங்க…” என அவன் பின்னே ஓடியவள், “உங்களுக்காக எவ்ளோ பெரிய இன்டெராகேஷன் பண்ணிட்டு இருக்கேன்” என்று மூச்சு வாங்க முறைக்க,

“அதுக்காக இன்விடேஷன் குடுக்க வந்தவரை டெரரிஸ்ட் ரேஞ்சுக்கு விசாரணை பண்ணிட்டு இருக்க? உன் மூளை இந்த நூடுல்ஸ் மண்டைக்குள்ள சுத்திக்கிச்சா ஜனனி?” என்றான் கேலியாக.

“ஹலோ மிஸ்டர் அர்னவ் இன்னொரு தடவை என் முடி பத்தி பேசுனீங்க. அடுத்த தடவை உங்களை போட்டு தள்ள வர்றவனுக்கு நானே கத்தி எடுத்து குடுப்பேன் பார்த்துக்கோங்க…” எனக் கண்ணைச் சுருக்கி மிரட்டியவளுக்கு கொஞ்ச கொஞ்சமாக அவன் இரண்டாக தெரிய ஆரம்பித்தான்.

“நான் உன் பாஸ்னு மறந்துடாத. உன்னையவே நான் தான் காப்பாத்த வேண்டியதா இருக்கு. கார் ஓட்ட தெரியல. சண்டையை கவனமா போட தெரியல…” அர்னவ் கேலிக்குரலில் கூறியதில்,

கண்ணை சிமிட்டி நிகழ்வுக்கு வந்தவள், “அதெல்லாம் நான் நல்லா தான்…” எனும்போதே அவளுக்கு சுற்றி இருக்கும் அனைத்தும் மங்கலாக தெரிந்தது. ஆகினும் முழு நினைவு போகவில்லை.

ஏதோ ஒரு கனவு நிலைக்குள் இருப்பது போல உடம்பே பஞ்சாகப் பறக்கும் நிலை.

அவளிடம் மாற்றம் உணர்ந்தவன் புருவம் சுருக்கி, “ஜனனி ஆர் யூ ஆல்ரைட்…” எனக் கேட்க,

தலையை உலுக்கி கண்ணை நன்றாக திறக்க முயன்றவள், “ஒரு மாதிரி கேரா இருக்கு அர்னவ்…” எனத் தள்ளாடியவளின் கையில் இன்னும் பத்திரிகை இருந்தது.

அவளை பிடித்துக்கொண்டவனுக்கு ஒன்றும் புரியவில்லை.

“அந்தப் பத்திரிகையை குடு” என அதனை வாங்க முற்பட, அவளோ அந்த நிலையிலும் அதனை தூக்கி எறிந்தாள்.

“அதைத் தொடாதீங்க. அதைக் கைல வாங்குனதுல இருந்து தான் ஒரு மாதிரி இருக்கு. ஐ திங்க்… அதுல ஏதோ ட்ரக்ஸ் இருக்கு. எனக்கு எனக்கு உடம்புல சொரணையே இல்ல அர்னவ். ட்ரக்ஸ் எடுத்த மாதிரி இருக்கு…”

வார்த்தை கூட குழறலாக வந்தது அவளுக்கு. ஆகினும் அந்த அரை மயக்கத்திலும் கூட தன்னைப் பாதுகாப்பதையும் அவளது நிலையையும் விளக்கிச் சொன்னவளைத் திகைத்துப் பார்த்தான் அர்னவ் தேவ்.

“காட்… ஹாஸ்பிடல் போகலாம் கம்…” என அவளை அழைக்க,

அவளோ வரமறுத்து, “என் கெஸ் கரெக்ட்னா… இந்த பத்திரிகையை உங்களை வாங்க வச்சு ட்ரக்ஸ்ல அரெஸ்ட் பண்ணி ஈஸியா கொலை பண்ண பிளான் பண்ணிருக்கலாம். இப்ப கூட உங்களை அட்டாக் பண்ண சான்ஸ் இருக்கு அர்னவ். நீங்க ரூமுக்குப் போங்க.” என்றவளுக்கு கண்ணே இருட்டியது.

பாதுகாவலர்களாக அவனுக்கு பலர் வேலை பார்த்துள்ளனர். இப்போதும் அலுவலகத்திற்கு வெளியேயும் வீட்டின் வெளியேயும் பாதுகாவலர்கள் இருக்கத் தான் செய்கின்றனர்.

அவனையும் ருஹானாவையும் பாதுகாப்பது அவர்கள் வேலை. சிலர் காயமடைந்து இருக்கின்றனர்.

ஆனால் அப்படி ஒரு நிலையில் ஜனனியை விட்டு விட்டு தன்னைக் காப்பாற்றிக்கொள்ள இயலவில்லை அர்னவிற்கு.

அவளோ தலையைப் பிடித்துக்கொண்டு தரையில் அமர, அவளைக் கையில் அள்ளிக்கொண்டவன் வேகமாக பார்க்கிங்கிற்கு சென்றான்.

“கார்ட்ஸ், கெட் த கார்” எனக் கத்திக்கொண்டே ஓடியவனை அங்கிருந்தவர்களும் குழப்பமாகப் பார்த்தனர்.

வெளியில் நின்றிருந்த பாதுகாவலர் காரை எடுத்துக்கொண்டு வந்ததில் அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றான்.

அவளோ “சார்… என்னை யாரோ தூக்கிட்டுப் போற மாதிரியே இருக்கு” என முணுமுணுத்தவள் கண்ணைத் திறக்க முயன்று தோற்றாள்.

அவளுக்கு கொஞ்சம் கொஞ்சமாக உணர்வுகள் இழந்து வந்த நிலையில், “ஜனனி ஹோல்ட் ஆன்” என அவள் கன்னத்தைத் தட்டினான்.

“ஐயோ அப்பா அடிக்காதப்பா. இனிமே பாரின் போறேன்னு பொய் சொல்லிட்டு ஓடி போக மாட்டேன்…” என உளறினாள்.

ஏற்கனவே வினயனின் மீதும் ஜனனியின் மீதும் சந்தேகம் கொண்டு அர்னவ் அவர்களது பின்புலத்தை விசாரித்தான். ஆனால் அவன் சந்தேகப்படும்படி தகவல்கள் எதுவும் வரவில்லை.

ஆனால் இப்போதோ ஜனனியின் கூற்றில் நிதானித்தவன், “யார் நீ?” என அவள் காதின் அருகில் வந்து கர்ஜிக்க,

அவளோ கண்ணைச் சுருக்கி விழிக்க முற்பட்டு முடியாமல், தான் எங்கிருக்கிறோம் என்ற உணர்வும் இல்லாமல் குழப்பத்தில் இன்னும் கொஞ்சம் உளறினாள்.

“ப்பா… மிஸ் யூ பா… ஆனா நீ இல்லாம இருக்குறதும் ஜாலியா தான் இருக்கு. நான் உன் ஆசைப்படியே அரசியல்வாதி மகனை கல்யாணம் பண்ணிக்கிறேன்பா. அவளை ஒன்னும் பண்ணிடாத. ஐ ஹேட் யூ டேடி. யூ ஆர் ஹார்ட்லெஸ். உன் அண்ணன் பெண்ணுக்கே துரோகம் பண்ண எப்படி மனசு வருது உனக்கு. மோனா கம்பெனில போர்ட் மெம்பர்ன்னா என்ன வேணாலும் பண்ணுவியா. அதான் என்னை அங்க சி. ஈ. ஓ ஆக்கி அழகு பார்த்துட்டீல. இன்னும் என்ன வெறி உனக்கு… அப்பப்பா… ஐ மிஸ் யூ ப்பா” என மளமளவென உண்மையைக் கக்கியதில் அதிர்ந்தே போனேன்.

“அடிப்பாவி… என்கிட்டயே பொய் சொல்லிட்டீல?” அர்னவிற்கு சினம் பீறிட்டது.

“ஐயோ அப்பா சாரிப்பா. உசுருக்கு பயந்து தான்பா ஓடி ஒளிஞ்சுட்டு இருக்கோம். அர்னவ் வீட்ல நானே தஞ்சம் புகுந்துருக்கேன். அவனை ஒன்னும் பண்ணிடாதப்பா. அதுவே ஒரு அப்பிராணிப்பா. அப்ப்பா ஐ மிஸ் யூ ப்ப்பா” என மீண்டும் ஆரம்பித்ததில் அவனுக்கு ஐயோ என்றிருந்தது.

“ஏய் ஜனனி… எந்திரிடி” என அவள் கன்னத்தை தட்ட, அவளோ “என்னத்தை கலந்து விட்டானுங்கன்னு தெரியலடி மௌனி. வாயில இருந்து ஏதோ வார்த்தையா வருது ஆனா என்ன பேசுறேன்னு எனக்கே தெரியல. நீ கவலைப்படாதடி. நீ என் அக்கா, வினய் என் அண்ணன்னு அர்னவ்கிட்ட மூச்சே விட மாட்டேன். ஆனா அவனை எனக்கு பிடிக்கவே இல்ல. என்ன நூடில்ஸ் மண்டைன்னு கூப்பிட்டு கடுப்பேத்துறான்டி. மம்மி… நீ செத்துப் போனதோடு உன் புருசனையும் கூட்டிட்டுப் போயிருந்தா, நாங்க இப்படி அடுத்தவன் வீட்ல வந்து அடியாள் வேலை பார்க்க வேண்டிய நிலைமை வந்துருக்குமா… ஐயோ மௌனி உன் வாழ்க்கை ஏன்டி இப்படி ஆகணும். நீ கவலைப்படாத, என் உயிரே போனாலும் உனக்கு எதுவும் ஆக விட மாட்டேன்” எனப் புலம்பித் தள்ள,

“எவ்ளோ நெஞ்சழுத்தம் இருந்திருந்தா இவ்ளோ தைரியமா என் வீட்ல நுழைஞ்சுருப்பீங்க… மூணு பேரும் சிப்லிங்ஸ்ஸா?” என நெற்றியில் கை வைத்தான்.

அவளது புலம்பலில் ஒரு வித வலி உணர்ந்தானோ என்னவோ, அதிகபட்ச கோபமும் தனக்கு எதிராய் சதி திட்டம் தீட்ட வந்திருப்பாளோ என்ற சந்தேகமும் வர மறுத்தது.

“இன்னும் எவ்ளோ நாள் மூணு பேரும் இப்படி ஓடணும்டா வினய். நமக்குலாம் நல்ல வாழ்க்கையே இருக்க கூடாதா” இவ்வாசகத்தை முடிக்கும் முன்னே, மருத்துவமனை வந்து விட, அவளைக் கையில் தூக்கியபடி, “நீ கண்ணு முழி அப்பறம் பேசிக்கிறேன்…” என எரிந்து விழுந்து விட்டு காரிடோர் நாற்காலியில் தலையைப் பிடித்தபடி அமர்ந்தான்.

என்னவாகினும் தங்களை ஏமாற்றியதில் அவனுக்கு உடன்பாடில்லை.

தொழிற்சாலையில் வேறு திசையில் பணியாளர்களை விசாரித்துக்கொண்டிருந்த மௌனி ஆதிராவிற்கு நடந்த விஷயங்கள் தெரியவில்லை. சிசிடிவி வழியே அனைத்தையும் பார்த்து விட்ட சூர்ய சித்தாந்தன், அழுத்த நடையுடன் அங்கு விரைந்து கீழே விழுந்து கிடந்த பத்திரிகையை கூர்ந்து கவனித்தான்.

அப்போது தான் அங்கு வந்த மௌனி, “என்னஜி என் மேல நம்பிக்கை இல்லாம இங்கயே வந்துட்டீங்களா?” என இடுப்பில் கையூன்றி கேட்டவள்,

“கீழ என்ன விழுந்துருக்கு” என அந்த பத்திரிகையை எடுக்கப் போக, “உஷ்…” என அவள் கையைப் பிடித்து தடுத்தான் சூர்யா.

உள்ளுக்குள் குளுகுளு மலைச்சாரல் அடிக்க, “என்னாச்சு?” என வினவியளிடம், “இதுல ட்ரக்ஸ் பார்டிகல்ஸ் இருக்கு. நீ டச் பண்ணதும் உனக்கு கொஞ்ச கொஞ்சமா போதை ஏறிடும். உடம்புல எந்த உணர்வும் இருக்காது…” என்றான் தீவிரமாக.

“ஜி… கண்ணுல கலர் லேப் எதுவும் வச்சுருக்கீங்களா?” அவள் வாயைப் பிளந்து கேட்டதில் திரும்பி முறைத்தான்.

“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ஜனனிக்கு இதே தான் நடந்துச்சு. இப்ப ஹாஸ்பிடல்ல இருக்கா…” என்றபடி அவளைக்கண்டு அலட்சியமாய் கண்களை சுழற்றினான்.

அதில் திடுக்கிட்ட மௌனி ஆதிரா, “வாட்? ஜன்னிக்கு என்ன ஆச்சு? எந்த ஹாஸ்பிடல்ல இருக்கா?” எனப் பதறினாள்.

“உயிரை பணையம் வச்சு தான இந்த வேலைக்கு வந்துருக்கா. எது வேணாலும் ஆகலாம்…” எனத் தோளைக் குலுக்கியதில் அவளுக்கு கோபம் வந்தது.

“அதெப்படி என்ன வேணாலும் ஆகலாம்னு விட முடியும்? உங்களுக்கு கீழ வேலை பார்க்க வந்தா அவ்ளோ இளக்காரமா உங்களுக்கு? நான் அவளைப் பார்க்கணும்.” என அங்கிருந்து விரைய முற்பட,

“ஆல்ரெடி என் எதிரிங்க உன்னை டார்கெட் பண்ணிருப்பாங்க மௌனி. இப்ப நீ போனா உனக்கு சேஃப் இல்ல…” அதுவும் நக்கலாய் வந்தது போலொரு பிரம்மை அவளுக்கு.

“என்னை எப்படி காப்பாத்திக்கணும்னு எனக்குத் தெரியும் மிஸ்டர் சூர்யா…” எனக் கொதித்து விட்டு வாசலில் நின்ற கார்ட்ஸிடம் மருத்துவமனை பற்றி விசாரித்தவள், சடுதியில் ஒரு ஆட்டோவைப் பிடித்து மருத்துவமனைக்கு விரைந்தாள்.

ஆட்டோ மருத்துவமனையை அடையும் முன் சீறிப்பாய்ந்து அவளுக்கு முன்னே நின்றது சூர்ய சித்தாந்தனின் கார்.

அதில் இருந்து சூடான மூச்சுடன் இறங்கியவன், “திஸ் இஸ் த லாஸ்ட் வார்னிங். நான் போகக்கூடாதுன்னு சொன்னா போக கூடாது. புரிஞ்சுதா?” என சாலையே அதிரக் கர்ஜித்தான்.

நெஞ்சம் படபடவெனத் துடித்தது அவளுக்கு. இதுவரை அவளை எதிர்த்து உத்தரவு இடும் தைரியம் எதிரிகளுக்கு கூட இருந்ததில்லை. இப்போது கூட மறைவாய் நின்று முதுகில் குத்த தான் எண்ணுகின்றனரே தவிர, நேருக்கு நேராய் வந்து நிற்க எந்த ஆண்மகனுக்கும் தைரியமிருந்ததில்லை. அந்தக் கர்வம் மெல்ல சரிந்தது அவளுக்கு.

அவனது கோபத்திற்கு ஈடாக அவளுக்கு வார்த்தை வராதது அவளுக்கே கொஞ்சம் எரிச்சலாக இருந்தது.

“நம்ம கொஞ்சம் ஓவரா சைட் அடிக்கிறோம் போல. அதான் கோபமே வர மாட்டுது” என தப்பர்த்தம் கற்பித்துக்கொண்டாள்.

தானாகவே அவள் தலை ஆடியது. உண்மையைக் கூறி இன்னும் கொஞ்சம் கோபத்தில் எதுவும் தவறாக முடிவு எடுத்து தங்களை போட்டு தள்ளி விட்டால்? ஜனனியின் உடல்நிலை தான் தற்போது முக்கியமென எண்ணி அவனை நிமிர்ந்து பாராது உள்ளே சென்றாள். ஆகினும் போட்டு தள்ளுற அளவுலாம் கொடூரமானவன் கிடையாது என சமாதானம் செய்து கொண்டாள்.

அப்போது தான் அவசர சிகிச்சை அறையிலிருந்து வெளியில் வந்த மருத்துவர் அங்கு அர்னவை கண்டு பேச வரும்போதே, தரையை உரசும் பூட்ஸ் சத்தத்துடன் சிங்கத்தின் தோரணையில் அங்கு வந்த சூர்யாவைப் கண்டு பதறினார்.

“சார் நீங்க ஏன் வந்தீங்க. நானே பார்த்துக்குறேன்னு சொன்னேனே” எனப் பணிவாய் பேசியவர், அவனது கண்ணசைவுக்கு கட்டுப்பட்டு, “ஒன்னும் இல்ல சார். ஜஸ்ட் சின்ன அளவு தான் ட்ரக். ஜஸ்ட் ஹாஃப் அவர்ல அவங்க கான்ஷியஸ்க்கு வந்துடுவாங்க. நீங்க அர்னவ் சார் ஹாஸ்பிடல் கிளம்புறதுக்கு முன்னாடியே கால் பண்ணி சொல்லிட்டதுனால, நான் எமெர்ஜென்சி வார்டு எல்லாம் ரெடி செஞ்சு தான் வச்சுருந்தேன்.

நீங்க இன்சிஸ்ட் பண்ணது மாதிரி, தற்காலிகமா சுயநினைவை இழக்க வைக்கிற ட்ரக் தான். பியூ மினிட்ஸ்கு உடம்புல எந்த உணர்வும் இருக்காது. ஈவன் கத்தியால குத்துனா கூட வலிக்காது” என மேலும் விவரம் பேசி விட்டு நகர, அர்னவ் அவனைக் காட்டத்துடன் முறைத்தான்.

“என்னைக் கொலை பண்ண வந்தாலும் இவன் சிசிடிவில தான் ரசிச்சுட்டு இருப்பான்… இவனுக்கு எதுக்கு தேவையில்லாத அக்கறை டேஷ்…” என எரிச்சல் மிகுந்தது. அவன் முகத்தைப் பார்க்க கூட விருப்பமற்று தலையைக் குனிந்து கொண்டான்.

அர்னவ் தேவை பெரியதாக கவனிக்காத மௌனி ஆதிராவிற்கு ஜனனி கண் விழிக்கும் வரை மனம் ஒரு நிலையிலேயே இல்லை. கூடவே, சூர்யாவை வேறு மனசாட்சி அற்றவனாக பேசி விட்டாள். அவனோ ஜனனிக்கு தேவையான சிகிச்சையை ஏற்பாடு செய்து வைத்து விட்டு தான் தன்னிடம் அப்படி பேசி இருக்கிறான் போலும். அவர்களை பொறுத்தவரை அவளுக்கு நான் யாரோ தானே? அது புரியாமல், வீராப்பை காட்டியாகிற்று, சந்தேகம் வந்திருக்குமோ?

அவளை ஒரு மார்க்கமாகப் பார்த்த அர்னவ், “நீ எதுக்கு இங்க நிக்கிற. அவனைக் கூட்டிட்டு கிளம்பு” என்றிட,

“இல்ல அவள் கண்ணு முழிச்சதும் போறேன்…” என்றாள் அழுத்தமாக.

“அவள் கண்ணு முழிச்சா என்ன முழிக்கலைன்னா உனக்கு என்ன?” அர்னவ் நக்கலாகவே கேட்க, “ஒரு வாரமா நாங்க ஒண்ணா இருந்துருக்கோம். அந்த பேசிக் கன்சர்ன் இருக்குல்ல மிஸ்டர் அர்னவ்.” அவளும் விடவில்லை.

“ஓ…” ஏளனமாய் குவிந்தது அவன் இதழ்கள்.

“வாட் அ கன்சர்ன். கையெல்லாம் புல்லரிக்குது உங்க பாண்ட் பார்த்து…” என்றவனின் குரலில் இருந்த நக்கலை உணர்ந்தாலும், அவனைத் திரும்பி பாராது நின்றிருந்தவள் ஜனனி கண் விழித்து விட்டதை அறிந்து புயலாக உள்ளே நுழைந்தாள்.

அவளை அர்த்தமாகப் பார்த்து வைத்த அர்னவின் விழிகள் சூர்யாவின் விழிகளுடன் மோத அவனும் மௌனி மீது அதே அர்த்தப்பார்வை தான் வீசினான்.

அப்போதே புரிந்து விட்டது. இவன் தெரிந்து தான் அமைதியாக இருக்கிறானென்று!

“நீ ஓகே தான ஜன்னி” எனும்போதே மௌனியின் விழிகள் கலங்கி போயிற்று.

“ஹே எனக்கு ஓகே தான்டி கொஞ்சம் நேரத்துல என்ன ஆச்சுன்னே தெரியல. இப்ப ஓகே தான்டி. ஆமா நான் எப்படி ஹாஸ்பிடலுக்கு வந்தேன்” மௌனி எழுந்து அமர்ந்தபடி கேட்டாள்.

“அர்னவ் தான் உன்னை கூட்டிட்டு வந்துருக்கான். இனி கேர்புல்லா இரு ஜன்னி. கொஞ்ச நேரத்துல உயிரே போய்டுச்சு.”

“அர்னவா?” சற்றே வியந்தாலும், “நீ ஓவர்டோஸ்ல பாசத்தை காட்டாதடி. மாட்டிக்கப்போறோம். நீ கிளம்பு. நான் பாத்துக்குறேன்” என பரந்த உள்ளத்துடன் கூறியவளுக்கு தெரியவில்லை, தான் அனைத்தையும் வாக்குமூலம் கொடுத்து விட்டதாக.

அதன்பிறகே சற்று தெளிந்த மௌனி ஆதிரா அறையை விட்டு வர, அங்கு சூர்யா இல்லை.

அவனைத் தேடியபடி வெளியில் வந்தவள், அவன் காரை ஆன் செய்து எஞ்சினை உறும வைத்துக் கொண்டிருப்பதைக் கண்டு, அவளும் முகத்தை தொங்க போட்டபடி முன்னால் அமர்ந்து கொண்டாள்.

“சாரிஜி…”

அவன் திரும்பிப் பாராது காரை கிளப்பினான்.

“நீங்க கேர்லெசா பேசவும் கொஞ்சம் டென்சன் ஆகிட்டேன். அதான்…”

மௌனி அத்தனை பேசியும் அவன் தோள் குலுக்கலுடன் முடித்து கொள்ள,

“கல்நெஞ்சக்காரர்ஜி நீங்க. பரவாயில்ல. இட்ஸ் ஓகே’ன்னு சொன்னா என்னவாம்” என நொடித்தாள்.

“இப்ப உன்னை நான் அடிச்சு கொலை எதுவும் பண்ணலை தான? சோ உன்னை மன்னிச்சுட்டேன்னு தான் அர்த்தம்” அழுத்தக்குரலில் கூறியவனை ஒரு கணம் கண்ணிமைக்காது ஏறிட்டவள், “ஆனாலும் உங்களுக்கு ஈகோவும் குசும்பும் ஜாஸ்திஜி…” என தலையாட்டி புன்னகைத்தாள்.

அவளை நோக்கி அலட்சியப்பார்வை வீசியவன், நெடுஞ்சாலையில் காரை விடும்போதே பின்னிருந்து மூன்று கார்கள் அவர்களை பின் தொடர்ந்தது.

அதனைக் கண்ணாடி வழியே பார்த்த சூர்யா, “தலையை குனி…” என்றான் வேகமாக.

“எதுக்கு?” அவள் கேள்வி எழுப்பும்போதே அவள் தலையைப் பிடித்து தனது காலில் படுக்க வைத்திட அவளோ பதறி “ஐயோ ஜி இதெல்லாம் தப்பு” என்று பொங்கி எழுந்து விட்டாள்.

அந்நேரம் அவளுக்கு முன்னிருந்த கண்ணாடி துப்பாக்கி குண்டின் வீரியத்தில் உடைந்திருந்தது.

அதன்பிறகே தங்களை ஸ்கெட்ச் போட்டு விட்டார்கள் என்று புரிய, மெல்ல நிமிர்ந்து பார்த்தவள் “இதுக்கு குனிய வச்சீங்களா?” என அசடு வழிய கேட்க,

“வேற என்ன எதிர்பார்க்குற?” என்றான் இரு புருவம் உயர்த்தி.

“அய்யய்ய நான் எதுவும் எதிர்பார்க்கல…” பாவம் மருண்டு விட்டாள்.

அவனோ தீ வேகத்தில் காரை ஓட்ட, “ஆமா சீன்படி நான் தான உங்களை காப்பாத்தணும். இப்ப என்னவோ என்னை மறைச்சு வச்சுட்டு நீங்க காப்பாத்திட்டு இருக்கீங்க. நீங்க இந்தப் பக்கம் வாங்க. நான் கார் ஓட்டுறேன்” என்று துப்பாக்கி முனையை எல்லாம் மதிக்காமல் அடம்பிடித்து கொண்டிருந்தாள்.

அத்தனை பதற்ற நிலையிலும் அவளது சாவகாசமான உரையாடல், ஆண்மகனை கவர்ந்தது.

ஒரே ஒரு நொடி தான் வேகத்தில் பிசிறி இருப்பான். ஒரு துப்பாக்கி குண்டு ஸ்டியரிங்கின் மீதிருந்த அவன் கையை பதம் பார்த்தது.

“ஷிட்” என வேகத்தை அவன் அதிகப்படுத்த, மௌனி அதிர்ந்தாள்.

“சூர்யா… கைல ரத்தம் வருது.”

“குண்டு பட்டா ரத்தம் தான வரணும்?” ஒரு துளி வலியை கூட கண்ணில் காட்டாது வெறிப்பிடித்தவன் போல காரை ஓட்டியவனைக் காண சற்று திகிலாகவே இருந்தது.

“அந்தக் கையை ஸ்ட்ரெய்ன் பண்றது நல்லது இல்ல சூர்யா…”

“இப்ப இடம் மாற முடியாது மௌனி…” என்னும் போதே இன்னும் சில குண்டுகள் அவர்களை நோக்கி வர நூலிழையில் தப்பித்தனர்.

ஒரு கையால் ஸ்டியரிங்கை பிடித்தவனுக்கும் இரத்தம் அதிகம் வீணாகிக் கொண்டிருந்தது.

“சூர்யா ஆக்சிலேட்டரை ஒரு அழுத்து அழுத்திட்டு உங்க சீட்டை பின்னாடி நகட்டுங்க பாஸ்ட்…”

“வாட்?” அவன் கேள்விக்கு பதில் கூறாதவள், “சீக்கிரம் சூர்யா… யூ லாஸ்ட் யுவர் கண்ட்ரோல்” என்றதில் அவனும் அவள் சொன்னது போலவே செய்ய, யோசியாமல் ஓட்டுநர் இருக்கைக்கு வந்தவள் அவனது மடியிலேயே அமர்ந்து காரை தீயாக ஓட்டினாள்.

இதனை எதிர்பாராத சூர்யாவின் முகத்திலும் சிறு அதிர்ச்சி.

சூர்யாவின் கையில் வழிந்த இரத்தம் வேறு அவளது கவனத்தை கலைக்க முயன்றது.

மற்றபடி அவன் மடியில் அமர்ந்து கொண்டிருப்பதெல்லாம் இப்போதைக்கு உறைக்கவில்லை. அவனைக் காப்பாற்ற வேண்டும் அது ஒன்றே அவளுக்கு முக்கியம்.

ஒரு கையால் ஸ்டியரிங்கை பிடித்து வளைத்தவளின் கார் ஓட்டும் விதத்தில், பின்னால் வந்த ஒவ்வொரு காரும் விபத்துக்குள்ளானது.

அவளது புத்திக்கூர்மையும் நொடிகளை கணக்கிட்டு காரின் வேகத்தை அதிகப்படுத்தி பின் வரும் காரையும் துப்பாக்கி குண்டையும் தவிர்க்கும் தோரணையில் அவள் மீதிருந்த விழிகளை விலக்க மறந்தான் சூர்ய சித்தாந்தன்.

அவளோ, தனது டாப்சை பக்கவாட்டு வழியே அவனிடம் கொடுத்து “இதை கிழிங்க சூர்யா…” என்றவள் தானும் முயன்று டாப்ஸின் ஒரு பகுதியை கிழித்தவள், இரத்தம் வழியும் கையில் வேகமாக கட்டினாள்.

“உங்க இரத்தத்தை பார்த்தா எனக்கு கான்செண்ட்ரேஷன் மிஸ் ஆகுதுஜி… நீங்க ஹோல்டு பண்ணிப்பீங்க தான?” அவளது அக்கறை நிறைந்த கேள்வியில், பதில் பேசாது அவளது முதுகில் முகத்தை சரித்தான்.

அவனது வெப்ப மூச்சு முதுகை நிறைப்பதிலேயே இன்னும் சீராக இருக்கிறான் என்ற நிலை புரிய, அவனுக்கோ முதன்முறை உணர்ந்த பெண்ணின் மென்மை பாறை உள்ளத்தின் வழியே நுழைய ஆயத்தமானது.

அகம் நுழைந்தவளுக்கு
அகிலத்தையே புரட்டினாலும்
அகல வழி இல்லை…

நிதர்சனம் அறியாது போனது யார் பிழையோ!!!

ரசித்திட வருவாள் (ன்)
மேகா

Click on a star to rate it!

Rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்