Loading

இருள் மங்கத் தொடங்கிய ஏகாந்த நிலையில், வாய் வார்த்தையில் காட்டத்துடன் கொட்டிச் சிதறடித்த நேசத்தை அள்ளி உணர எத்தனிக்கும்போதே, இருவரது தவத்தையும் அர்ஜித் அகனின் அலைபேசி கலைத்தது.

அதில் கண்ணைச் சிமிட்டி அவனிடம் இருந்து மெல்ல விலகியவளின் மீதிருக்கும் பார்வையை மாற்றாதவனாக, அலைபேசியை காதில் வைத்தவனின் முகம் அதிர்வைத் தாங்கியது.

“வாட்?”

கோபமும் இயலாமையும் கூடவே கண்களும் கலங்கி அது அடக்கப்பட்ட நிலையில் சிவந்து போனது ஆடவனுக்கு.

“ஞான் உடனே வராம்…” என்றதில், அவன் அவளையும் கவனமாகப் பிடித்தபடி அலைகளைக் கடந்து கரைக்கு வந்தவன், “நீ வீட்டுக்குப் போ… ஞான் இடுக்கிக்கு போகணம். யாரு கேட்டாலும் ஞான் காலையில் வந்துடுவேன்னு பர” என்று அவசரமாக நகரப்போக, அவன் கையைப் பிடித்தாள் அகமொழி.

“அகன், இப்ப எதுக்கு இடுக்கிக்கு போற? நாளைக்கு கல்யாணம். இப்போ போயிட்டு திரும்ப மேரேஜ்குள்ள வர முடியுமா?”

“ஞான் வந்து பரயாம்…” அவன் முகமே சரியில்லை என்று உணர்ந்தவள், “என்ன பிரச்சினைன்னு சொல்லிட்டுப் போ. இடுக்கில டிஸ்ட்ரிக்ட் ஜெயில்ல தான விஷ்ணு இருக்கான். என்… என்ன பிரச்சினை?” எனக் கேட்டாள் பதற்றமாக.

ஆழ்ந்த மூச்சை எடுத்து விட்டவன், “இப்ப எதுவும் பரயான் முடியாது மொழி. ஐ ஹேவ் டு கோ…” எனக் காரில் ஏறி அமர்ந்து கொள்ள, விறுவிறுவென முன் சீட்டில் அமர்ந்து கொண்டாள்.

“காந்தாரி…” அவன் பல்லைக்கடிக்க,

“எனக்குப் படபடன்னு வருது. நாளைக்கு கல்யாணத்துல எதுவும் பிரச்சினை பண்ணிட மாட்டான்ல. நீயும் கிளம்புற. இங்க பிரச்சினை ஆனா எப்படி சமாளிக்கிறது…” என்றதில், “அவனால ஒரு பிரச்சினையும் வரதில்லா… ” என்றான் தீர்க்கமாக.

“பெயில் எதுவும் வாங்கியிருக்க மாட்டான் தான?”

ஸ்டியரிங் வீலை வெறித்தவன், “விஷ்ணு சூசைட் செய்துட்டான்…” என வெறுமையாய் உரைத்தான்.

“வாட்?” அகமொழி கத்தியே விட, “சீரியஸ் கண்டிஷனாம்… சாவுக்கு காரணம் அன்விதா தான்னு எழுதி வச்சுட்டு சூசைட் செய்திருக்கான். ஸ்டேட்மென்ட் கேட்டு என்னை உடனே வர பரயுன்னு. ஞான் போகணம்… வீட்ல இருந்து எல்லாரும் வருன்னு. நீ பார்த்துக்கோ மொழி… யாருக்கும் தெரியாண்டா, அன்விக்கு தேவையில்லாத பிரச்சினை… அவளை நிம்மதியாய் இருக்க விட மாட்டான் போல!” என்றவனுக்கு தமையனின் முடிவு கேட்டு மனமே அதிர்ந்தது.

திருந்தி வாழ்வான் என்றே எண்ணினான். இப்போது இதை ஏற்கவே அவனுக்கு பெரும் பலம் தேவைப்பட்டது.

அவனையே அதிர்ந்து பார்த்திருந்த அகமொழிக்கும் என்ன சொல்வதென்று தெரியவில்லை.

“அவன் வேணும்னே பண்ணிருக்கான் அகன். செத்தாலும் அவள் நல்லாருக்கு கூடாது அவனுக்கு. பட் லீகலா அன்வி மேல கேஸ் வராது தான? ஏற்கனவே அவன்மேல் எவிடன்ஸ் ஸ்ட்ராங்கா இருக்கு. நாளைக்கு மேரேஜ் வேற…” என்றவளுக்கு தலையே வலித்தது.

“இல்ல மொழி… கேஸ் ஒன்னும் வரத்தில்லா. ஆல்ரெடி லீகலி டிவோர்ஸ் ஆயிதானே. 

விஷ்ணுவினு விதிக் பிரஸ்தாவிச்ச நேரத்துல, அவன் சூசைட் செய்ததினோ அன்விக்கோ யாதொரு பந்தமும் இல்லன்னு ஈஸியாய் ப்ரூவ் செய்யலாம்… பக்ஷே எந்தான்னு வச்சால், அவனினு இதினு வேண்டி கொஞ்சம் போலீஸ் என்கொயரிக்கு நடக்கணமாய் இரிக்கும்… (விஷ்ணுக்கு தீர்ப்பு ரெடியா இருக்குற நேரத்துல, அவன் சூசைட் செய்ததுக்கும் அன்விக்கும் எந்த சம்பந்தமும் இல்லனு ஈஸியா ப்ரூவ் செய்யலாம்… ஆனா என்ன, அவள் அதுக்கும் கொஞ்சம் போலீஸ் என்கொயரிக்கு அலையனும்…)” என்றவனுக்கு பெருமூச்சு எழுந்தது.

“இப்ப ஃபிளைட் இருக்கா?”

“ம்ம்… கொச்சி வழியே போகாம்…” 

“சரி, நேரா ஏர்போர்ட் போ. நானும் வரேன்…” என சீட் பெல்ட்டை போட, 

“நீயும் வந்நால் சந்தேகம் வரும் மொழி…  அவனது கூற்றில், “அதெல்லாம் ஒன்னு வராது. நான் ரிஷுட்ட மேனேஜ் பண்ண சொல்லிக்கிறேன். இப்ப நீ மட்டும் போனா தான் சந்தேகம் வரும். நம்ம நைட் அவுட் போனதா நம்ப வச்சுடலாம். இந்த நிலைமைல உன்னை என்னால தனியா அனுப்ப முடியாது…” என இறுதியில் காரணத்தையும் உரைத்தவளை ஒரு கணம் அமைதியாகப் பார்த்தவன், காரை விமான நிலையத்திற்கு செலுத்தினான்.

போகும் வழியிலேயே ரிஷானிடம் பிரச்சினையின் அளவை விவரித்து, யாருக்கும் சந்தேகம் வராமல் பார்த்துக்கொள்ள கூறினாள்.

ரிஷானுக்கு அதிக வருத்தமாகி விட்டது. ‘ச்சே… ஏன் தான் இப்படி இருக்கானா அந்த விஷ்ணு!’ என எரிச்சலுற்றவனிடம் அன்விதா, “அகா எங்க ரிஷு?” எனக் கேட்க,

“அதான என் நண்பனை கூட காணோம்?” என்று குறும்பாய் கேட்டான் பிரணீத்.

“அது… அவங்க பீச்ல இருந்தாங்க. அப்பறம் கார்ல ரவுண்டு போயிருக்காங்க. எப்ப வருவாங்களோ…” என சமாளித்தான்.

“சமாதானம் ஆகிட்டாங்களா?” அன்விதா மகிழ்ச்சியாக கேட்க, “ம்ம்ம்…” என சிரித்து வைத்தவனுக்கு திருமணம் நல்லபடியாக நடக்கவேண்டுமென்ற பயமே ஆர்பரித்தது.

விமானத்தில் பறந்த போதும், கொச்சியில் இருந்து இடுக்கிக்கு செல்லும்போதும் சரி அகனின் கையை துளியும் விடவில்லை.

“”அவனுக்கெல்லாம் ஏங்கிலும் சம்பவிச்சால், எல்லார்க்கும் ஞான் எந்தா பரயும்? அதினைப் பற்றியுள்ள சிந்தை அவனுக்கில்லா… பக்ஷே அவனைப் பற்றியுள்ள சிந்தை இன்னும் அவனைப் பெற்றவங்களுக்கு உண்டல்லோ…   (அவனுக்கு ஏதாவது ஆனா, எல்லாருக்கும் நான் என்ன பதில் சொல்லுவேன்? அதை பத்தின கவலை அவனுக்கு இல்ல. ஆனா அவனை பத்தின கவலை இன்னும் அவன பெத்தவங்களுக்கு இருக்கே…)”  என வேதனையை விழுங்கியவனைக் கண்டு கண் கலங்கினாள்.

“ஒன்னும் ஆகாது அகன். பொழைச்சு வந்து உயிரோட தண்டனை அனுபவிக்கனும். அப்ப தான் வலி தெரியும் அவனுக்கு. நீ ரிலாக்ஸ் ஆகு அகன்.”

“ம்ம்ம்…”

ஜன்னல் வழியே வெறித்தவனின் கையை எடுத்து தனது கைக்குள் வைத்துக்கொண்டவள், “எந்த பிரச்சினையா இருந்தாலும் ஃபேஸ் பண்ணலாம்… நான் இருக்கேன்ல!” என்றாள் நம்பிக்கையாக.

அதில் திரும்பி அவளை ஒரு பார்வை பார்த்தவன்,

“இங்ஙனெ தான் அன்னேக்கும் விஸ்வாசம் தந்நது… மறுநாள், என்டே விஸ்வாசம் தகர்த்துட்டு என்னை என்டே பிரச்சினையினு இடையில் விட்டுட்டு போயி. இப்போ மறுபடியும் விஸ்வாசம் தருன்னு… இதை விஸ்வசிச்சு ஞான் நிம்மதி ஆகணமோ? இல்லேங்கில் நாளைக்கு அவருடே கல்யாணம் கழிஞ்ஞதும் நீ உன்டே நஷ்டப்பட்டு போய உறவுகளை தேடி போகுன்னு மனஸ்ஸினை ஆஸ்வசிப்பிக்கணமோ?” (இப்படி தான் அன்னைக்கும் நம்பிக்கை கொடுத்த. மறுநாள், என் நம்பிக்கையை உடைச்சுட்டு என்னை என் பிரச்சினைக்கு நடுவுல விட்டுட்டு போய்ட்ட. இப்போ மறுபடியும் நம்பிக்கை கொடுக்குற. இதை நம்பி ஞான் நிம்மதியாகணுமா? இல்ல நாளைக்கு அவங்க கல்யாணம் முடிஞ்சதும் நீ உன் தொலைஞ்சு போன உறவுகளைத் தேடி போய்டுவன்னு மனசை தேத்திக்கணுமா?)” என்றான் அழுத்தமாக. இம்முறை அவன் விழிகள் கலங்கியே இருந்தது.

அவனது ஒற்றைத் துளி நீரும் அவனது இத்தனை நாள்களின் ஏக்கத்தை உடைத்திருக்க, சிலையானது என்னவோ அகமொழி தான்.

இருவரும் மருத்துவமனையை அடைந்தபோதே, இன்ஸ்பெக்டர் அர்ஜித் அகனை நோக்கி வந்தார்.

“சாரி மிஸ்டர் அர்ஜித்… நிங்ஙளை தேவையில்லாதே அலைய வச்சு…” என்றதும், “விஷ்ணு எங்ஙனெ இரிக்குன்னு?” எனக் கேட்டான் தவிப்பாக.

“நீங்க கவலைப்பட வேணாம். அவன் பொழைச்சுட்டான்…” என்றதுமே அவனுக்கு நிம்மதி மூச்சு பிறந்தது.

“அன்விதா மேல பழி போடுறதுக்காக, சூசைட் பண்ணினாலும் சாக கூடாதுன்னு தெளிவா கையை கட் பண்ணிருக்கான். எனக்கு என்னவோ எப்படியும் பொழைச்சுடுவோம்னு தெரிஞ்சு தான் பண்ணிருக்கான்னு தோணுது. நாளைக்கு அவங்களுக்கு மேரேஜ் வேறல்ல…” என தனது சந்தேகத்தை கூற, அர்ஜித் முகம் இறுகினான்.

“ஞான் அவனை ஒன்னு கானட்டே?”

“இல்ல அர்ஜித், இப்ப யாரையும் அலோ பண்ண கூடாது…”

“ஜஸ்ட் டூ மினிட்ஸ்!” என்றதில், “சரி ரெண்டு நிமிஷத்துல வந்துடுங்க…” என்று அனுமதி கொடுத்தார்.

விஷ்ணு தீவிர சிகிச்சை பிரிவில் கண் மூடி படுத்திருந்தான். அவனுக்கும் அன்விதாவிற்கும் விவாகரத்து கிடைத்த அன்று, அவனுக்கு அவளை கொலை செய்யும் அளவு கோபம் தோன்றியது.

தனக்குப் பிடித்த மாதிரி அவள் இல்லை. அதே நேரம், தனக்கு கிடைத்த ஒன்றை பிரணீத்திற்கு விட்டுக் கொடுக்கவும் மனமில்லை. அவள் மீது ஒரு கண்மூடித்தனமான பொஸசிவ்னெஸ். அதைக் காதலென்று பெயரிட்டு காமத்தை துன்பமாகக் காட்டி இருந்திருக்கிறான்.

அன்றும் நீதிமன்றத்தில், “ரக்ஷா (விவாகரத்து) கிட்டிடான்னு அவன் கூட சேர்ந்து ஆடாதே அன்வி! என்னைக்கும் நீ எனக்கு மாத்ரமாண். எனக்குப் பிடிச்ச வைஃபா இல்லாம இருந்தது நீ. ஊர் உலகத்தில் கல்யாணம் கழிச்சுட்டு ஆர்க்கம் குடும்பம் நடத்தான் அறியிஃலேயோ? இல்ல புருஷன் பரஞ்ஞுன்னு குழந்தை பெத்துக்குறதை தள்ளி தான் போடலையா? என்னை இந்த அளவு கொண்டு வந்து நிறுத்திட்டீல… உன்னை என்னைக்கும் நிம்மதியா இருக்க விட மாட்டேன்!” என்றவனுக்கு அப்போதும் கூட அவன் செய்த தவறுகள் உறைக்கவில்லை.

“உனக்கு பிடிச்ச வைஃபா இருக்க எனக்கு கொடுத்து வைக்கல விஷ்ணு. ப்ச்… மை பேட் லக்!” அவளிடம் நக்கல் வழிந்தோடியது.

“நான் அமையாவை ப்ரெக்னன்டா இருந்தப்ப என்ன கேட்ட? நான் ஊர்ல இல்லாத நேரத்துல பிரணீ வந்தானானு தான? நீ அமையாவை பிரணீயோட குழந்தைன்னு தான நினைச்ச? அப்பவே நமக்குள்ள இருந்த காதல் செத்துருச்சு. செத்த காதலுக்கு நான் ஆறு வருஷமா உன் கூடவே இருந்து எனக்கே தெரியாம திவசம் பண்ணிருக்கேன்.

நல்லா கேட்டுக்கோ விஷ்ணு. அமையா பிரணீயோட பொண்ணா தான் வளருவா. உன்னால என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோ!” என நிமிர்வாகவே கூறியவளை அதிர்ந்து பார்த்தான் விஷ்ணு.

அவளுக்கும் பிரணீத்திற்கும் நடக்கவிருக்கும் திருமணத்தை ஜெகன் மூலமாக அறிந்து கொண்டவன், இந்த தற்கொலை நாடகத்தை நிகழ்த்தி அவளது மகிழ்வில் மண்ணள்ளிப் போட விழைந்திருக்கிறான்.

ஆக்ஸிஜன் மாஸ்க்குடன் படுத்திருந்த விஷ்ணுவை சலனமின்றி ஏறிட்டான் அர்ஜித் அகன்.

அவன் முன்னே சில தாள்களை தூக்கி எறிய, விஷ்ணு சோர்வுடன் புருவம் சுருக்கினான்.

“எந்து தான் நீ தப்பு செய்திருந்தாலும், நினக்கு தண்டனை கிட்டுறதை வேடிக்கை நோக்குற அளவு எனக்கு இரும்பு மனசு இல்லடா… நீ என் கூட பிறந்தவன்! உன்மேல எனக்கு எல்லோரை விடவும் அதிக அன்பு உருன்னு (இருந்தது). நீ அன்வியை கஷ்டப்படுத்தினன்னு தெரிஞ்சப்பவும், மொழியை நீ தப்பா சம்சாரிச்சப்பவும், ரிசார்ட்ல நீ தப்பு செய்தப்பவும் எனக்கு உன்மேல கோபம் உருன்னு… ஆனா வெறுப்பு இல்ல! உன்னை எப்படியும் விட்டுக்கொடுக்கக் கூடாது, உன்னை தண்டனையில் இருந்து ரக்ஷிச்சு (காப்பாத்தி), நல்ல மனுஷனா ஜீவிக்க (வாழ) வைக்கணும்னு, உன்டே தண்டனையைக் குறைக்க ஞான் ஏற்பாடு செய்த பேப்பர்ஸ்…” தம்பியின் கூற்றில் திகைத்தான் விஷ்ணு.

“பக்ஷே, நீ கொடுத்த கஷ்டத்துல இருந்து அகன்னு (விலகி), ஒரு நல்ல வாழ்க்கையை தேடி போறவளோட ஒட்டுமொத்த சந்தோஷத்தையும் நசிப்பிக்குற (அழிக்கிற) மாதிரி நீ இப்போ ஒன்னு செய்திருக்க பாத்தியா… அதை அவளே க்ஷமிச்சாலும் (மன்னிச்சாலும்) ஞான் க்ஷமிக்க மாட்டேன்! எனக்கு ஒரு ஏட்டன் (அண்ணன்) இருந்தான்… அவன் இன்னையோட மரிச்சுட்டான் (செத்துட்டான்)! நீ மரிச்சு அவளுக்கு கஷ்டம் வரும்னு நினைச்சா, அதுக்கு நீ அவளுக்கு முக்கியமானவனா இருக்கணம். அவள் என்னக்கோ உன்னைத் தூசியாய் நினைச்சு தூக்கி எறிஞ்சுட்டா… நானும் தான்! நீ மரிச்சால் கூட ஞான் உன்னைத் தேடி வர மாட்டேன்…” என்ற அர்ஜித் அகன் விறுவிறுவென வெளியில் சென்றிருக்க, விஷ்ணு அசையாது சிலையாகி இருந்தான். உள்ளுக்குள் எதுவோ உடைந்தது.

அகமொழிக்கு விஷ்ணு உயிருடன் இருப்பதே பெரும் நிம்மதியாக இருந்தது.

இருவரும் அமைதியாகவே மீண்டும் விமான நிலையத்தை அடைந்தனர். விடிகாலை நேரம்.

“அகா எங்கடி இருக்க? இங்க எல்லாரும் எந்திரிச்சு கிளம்ப ஆரம்பிச்சுட்டாங்க. கல்யாண நேரத்துக்கு வந்துடுவியா?” எனக் கேட்டான்.

“ஃபிளைட் இன்னும் வரலைடா. லேட் போலருக்கு. ஏதாச்சு சமாளி…” என்றவள், திரும்பி அர்ஜித் அகனைப் பார்க்க, அவன் நாற்காலியின் பின்னால் சாய்ந்து கண்மூடி இருந்தான்.

சுருங்கிய புருவ மத்தி அழுத்தத்தின் அளவை எடுத்துக்காட்ட, அதனை நீவி விட தன்னிச்சையாக கையை உயர்த்தும்போதே, விமான  பெண்ணின் குரல் கேட்டது.

அதில் சட்டென கையை இழுத்துக்கொள்ள, அவனும் கண் விழித்தான்.

அருகருகில் இருந்தாலும், ஒற்றை வார்த்தைக்கும் பஞ்சமாகிப் போனது.

சண்டையிட்டாவது பேச்சை வளர்க்கலாம் என்றால், அதுவும் சண்டையிலேயே முடிந்து விடுமோ என்ற பயம் எழுந்தது அவளுக்கு.

இங்கோ பிரணீத்தும் அன்விதாவும் வாசலையே பார்த்திருந்தனர்.

அவர்களை பதிவு அலுவலகத்திற்கு கிளப்புவதே பெரும் பாடாக இருந்தது.

“எங்க தான்டா போனாங்க ரெண்டு பேரும்?” ரூஹி ரிஷானின் முதுகில் அடித்தாள்.

‘அவங்களே சும்மா இருந்தாலும் இவள் இருக்க மாட்டா போல’ என முறைத்தவன், “வந்துடுவாங்க… நீங்க கல்யாணத்தை பண்ணுங்க…” என்றான்.

“முதல்ல ரெண்டு பேரும் வரட்டும்…” என்று காத்திருக்க, அர்ஜித் அகனின் குடும்பமும் வந்திருந்தது.

சுஜாதாவிற்கு இருவரும் எங்கு சென்றிருப்பார்கள் என்றே தெரியவில்லை. ஒருவேளை அவர்களுக்குள் அனைத்தும் சரியாகி இருந்தாலும் நல்லது தானே.

பெரியவர்களிடம் ரிஷானும் ரூஹியும் வந்ததுமே ஆரம்பம் முதல் அனைத்தையும் ஒப்பித்து விட்டார்கள். அதில் அகமொழியை அடித்ததில் சுஜாதா உண்மையில் வருத்தப்பட்டார்.

“நீயெங்கிலும் பரஞ்சிருக்கலாமல்லோ பிரணீ?”  பிரணீத்தை சத்தம் போட, “அவன் வாயைத் திறக்கவே கூடாதுன்னு சொல்லிட்டான்மா…” என்றான் பரிதாபமாக.

பிரணீ வேறு அர்ஜித்திற்கு அழைத்த வண்ணம் இருக்க, “ப்ரோ… சின்னஞ்சிறுசுங்க ஏதோ ரொம்ப நாள் பிரிஞ்சுருந்ததுல நேரம் காலம் பார்க்காம லவ் பண்ணுதுங்க போல. நீங்க லேட் பண்ணாதீங்க ப்ரோ. அமையா வேற டயர்டு ஆகுறா. ரெஜிஸ்டர் ஆபீஸர் வேற முறைக்கிறாரு…” என்றான் ரிஷான்.

“எதுவும் பிரச்சினையா ரிஷு? அப்படி எல்லாம் அவங்க ரெண்டு பேரும் கல்யாணத்தை அவாய்ட் பண்ண மாட்டாங்க…” அன்விதா படபடப்பாக கேட்டாள்.

“அட ரெண்டு பேரும் எங்கயோ ரூம் போட்டு லவ் பண்றாங்கனு சொல்றேன்… நீங்க வேற!” எனப் பொய்யை அவிழ்த்து விட, “என்னது?” என இருவரும் விழித்தனர்.

“ஆமா, அமையாவுக்கு தம்பி பாப்பா ரெடி பண்ணிட்டு இருப்பாங்க. சும்மா கேள்வி கேட்காம கல்யாணத்தை பண்ணுயா. நான் தான் ஹோட்டல் ரூம்லாம் புக் பண்ணி கொடுத்தேன் தெரியுமா? கிளம்பி வர லேட் ஆகுதாம். இப்ப கூட எனக்கு மெசேஜ் போட்டா…” என்று வாய்க்கு வந்ததை உளறினான்.

ஆனாலும் பிரணீத்திற்கு உறுத்தியது.

அன்விதா தான், “அவங்க வரட்டும் பிரணீ… வெயிட் பண்ணலாம்…” என்றாலும், பெரியவர்களை எத்தனை நேரம் அங்கு நிறுத்த இயலும்?

கல்யாணி தான், “அதான் அந்த மோன் வந்துடுவேன்னு பரயுன்னுல்லோ? பிரணீ, நீ சைன் இட்டு தாலியைக் கட்டு… இதுக்கு மேல லேட் செய்யாண்டா!” என்றிட, அமுதினியும் அதையே வழிமொழிந்தார்.

“நேரத்தை வீணாக்க வேணாம் பிரணீ… ப்ளீஸ்!” என்றதில் இருவரும் இல்லாததும் வேதனையைக் கொடுத்தது.

“வரட்டும்… ரெண்டு பேர்கிட்டயும் நான் பேசுறதாவே இல்ல!” என்றவனுக்கு கண்ணே கலங்கிப் போனது.

அன்விதா தான் அவனை வருத்தமாகப் பார்த்தாள்.

“வெயிட் பண்றதுன்னா பண்ணலாம் பிரணீ…” என்றவளிடம், “இல்ல சிட்டு… நம்ம ப்ரொசீஜர் ஸ்டார்ட் பண்ணலாம்… பண்ணலாம் தான?” எனக் கேட்டதில், “ம்ம்…” என்றவளின் விழிகள் மீண்டும் வாசலைத் தொட்டு மீள, ரிஷான் தான் ஏதேதோ பேசி அவர்களை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தினான்.

இதில் ரூஹி வேறு, “டேய், நான் போன் பண்ணுனா அகாவுக்கு ரீச் ஆகவே இல்ல. உனக்கு மட்டும் எப்படிடா அவள் மெசேஜ் அனுப்புறா?” எனக் காதை கடிக்க, “உன் திருவாயை மூடிட்டு இரு… பெரிய ஷெர்லாக் ஹோம்ஸ் தடயம் கண்டுபிடிச்சுட்டா!” என்று கையை கிள்ளி வைத்தான்.

இருவரும் பதிவு சான்றிதழில் கையெழுத்திட, அன்விதாவின் கழுத்தில் மஞ்சள் நாணை பூட்டினான் பிரணீத்.

சிறு புன்னகை இருவரின் இதழ்களிலும் தவழ்ந்திட, “இது என்னது?” என தாலியைக் குறித்து கேட்ட அமையாவைத் தூக்கிக் கொண்ட பிரணீத், “இதுவா… இது உன் அம்மா எனக்கு போடுற வேலி…” எனக் குறும்பு நகை மின்ன கூற, அதில் வெட்கப் புன்னகை பரவியது அவளுக்கு.

வேணியும் அனகாவும் எந்தக் காதலால் பிரிந்தார்களோ, அதே காதலால் ஒன்றிணைந்து பல வருட கதைகளை பேசி கழித்தார்கள்.

மாலை ரிசப்ஷனுக்கு தான் வேணியின் குடும்பத்தினரை அழைத்திருந்தனர். மற்றும் வெகு நெருங்கிய சொந்தங்களை மட்டுமே அழைப்பு விடுத்திருந்தான்.

மதியம் தாண்டியும் இருவரையும் காணவில்லை என்றதில் சிறு பயப்பந்து உருண்டது பிரணீத்திற்கு.

“டேய் உண்மைய சொல்லு… ரெண்டு பேரும் எங்க?” எனக் கேட்டதில், “இதோ ரூம்ல இருந்து கிளம்பிட்டாங்களாம்… இப்ப வந்துடுவாங்க…” என்று சமாளித்து தப்பித்து சென்றான்.

அப்போது தான் விமானத்திலிருந்து இறங்கி இருவரும் அவசரமாக காரில் ஏறினர்.

“இவன் கல்யாணம் கழிச்சோ… இல்ல ரெஜிஸ்டர் ஆபீஸில் வீம்பு பிடிச்சுட்டு நின்னோன்னு அறியில்லா… ஃபிளைட் வேற சதி செய்துபோயி!” என எரிச்சலடைந்தான் அர்ஜித்.

“அதெல்லாம் என் தளபதி செமயா சமாளிச்சு கல்யாணம் பண்ணி வச்சுருப்பான் பாரு…” என நண்பனைப் பெருமையாகப் பேச,”அது தானே பேடி! அவன் ஒன்னும் சம்சாரிச்சில்லைங்கில் கல்யாணம் கழிச்சிருப்பாரும்…(நடந்துருக்கும்) சம்சாரிச்சு எந்தா நசிப்பிச்சோ (சொதப்புனானோ)?”  என வாரினான்.

அவனை முறைத்து வைக்கும்போதே ரிஷானிடம் இருந்து அழைப்பு வர, “இதோ பார்த்தியா… நூறு ஆயுசு!” என அர்ஜித்தின் கேவலமான பார்வையை ஒதுக்கி வைத்து விட்டு அழைப்பை ஏற்று லவுட் ஸ்பீக்கரில் போட்டாள்.

“டேய் மேரேஜ் என்னாச்சு?”

“அதெல்லாம் நல்லபடியா முடிஞ்சு வீட்டுக்கு வந்துட்டோம். இப்ப ரிசப்ஷன்க்கு மண்டபத்துக்கு கிளம்பிட்டு இருக்காங்க. எருமை மாடே! காலைல வந்துடுவேன்னு தான சொன்ன… இப்ப சாயந்தரம் ஆக போகுது!”

திருமணம் முடிந்ததில் இருவருக்கும் சற்று ஆசுவாசம்.

“நான் என்ன பண்ணுவேன்? ஃபிளைட் வந்ததே ரெண்டு மணி நேரம் லேட். லேண்ட் ஆனது லேட். இப்ப செக் அவுட் முடிக்கவும் லேட் ஆகிடுச்சு. வந்துட்டு இருக்கோம்… இன்னும் ஒரு மணி நேரம் ஆகும் போல…”

“சுத்தம்! சமாளிக்க முடியலடி. உன் ஒருத்தியை சமாளிக்கிறதே கஷ்டம்… இங்க எல்லாருமே உன்னை மாதிரி பல கேள்வி கேக்குறாங்க… முடியலடி! சீக்கிரம் வந்து சேரு.”

“ஆனா எப்பிடிடா பிரணீ ப்ரோவை சமாளிச்ச?”

“அதெல்லாம் நாக்கு வறண்டு போச்சு… அப்பறம் சில பல பொய்களை அள்ளித் தெளிச்சதும் தான் மனுஷன் தாலியவே தொட்டாரு.”

“பொய்யா? என்ன பொய்?”

“அதுவா…” என நெளிந்தவன், “அது… லவ் டோஸ் அதிகமாகி நீயும் ப்ரோவும் ஹோட்டல்ல ரூம் போட்டீங்கன்னு சொல்லிட்டேன்…” என்றதில், அவள் அதிர்ந்தே விட்டாள்.

அர்ஜித் அகனோ இதழ் மடித்து சிரிப்பை அடக்க முயன்று கவனத்தை சாலையில் நிறுத்த, அவனை அவஸ்தையாக ஒரு முறை பார்த்தவள், “பரதேசி… ஆனா ஊனா நான் ரூம் போட்டேன்னு சொல்றதுலாம் உங்களுக்கு ஜாலியா இருக்கா? இதை விட்டா வேற பொய்யே கிடைக்காதா உங்களுக்கு?” எனப் பல்லைக்கடித்து கணவனையும் சேர்த்தே சாடினாள்.

“உன் புருஷன் கூட ரூம் போட்டன்னு தான சொன்னேன்… வேற என்ன பொய் சொல்றதுன்னு டக்குன்னு வரல.”

“செருப்பு பிஞ்சுரும்… ஒழுங்கா போனை வச்சுட்டு ஓடிடு!” என அழைப்பைத் துண்டித்து விட்டு தலையில் கை வைத்தவள் அருகில் சரிந்தவன், “வளரே நன்னாய் மேனேஜ் செய்திருக்கானல்லோ…” எனக் கேலியாக கேட்டதில், அவளுக்கு எங்கு சென்று முட்டுவதென்று தெரியவில்லை.

முந்தைய நாள் அணிந்த உடையைக் கூட இருவரும் மாற்றி இருக்கவில்லை; கண்ணெல்லாம் சிவந்திருந்தது உறங்காமல். அவசரமாக வீட்டினுள் நுழைய, வீடே மயான அமைதியாக இருந்தது.

பிரணீத்தும் அன்விதாவும் இறுகிய முகத்துடன் சோபாவில் அமர்ந்திருக்க, மற்றவர்களும் அமைதியின் சின்னமாக இருந்தனர்.

“ஹேப்பி மேரீட் லைஃப்டா…” அர்ஜித் பிரணீத்தின் அருகில் வர, அவன் அர்ஜித்தின் கன்னத்தில் பளாரென அறைந்தான்.

“ப்ரோ!” அகமொழி காட்டத்துடன் கத்தி விட்டு, “ஏதோ கொஞ்சம் லவ் டோஸ் அதிகம் ஆகிடுச்சு… நேரம் காலம் தெரியாம ரூம்ல தூங்கிட்டோம். அதுக்காக அடிக்கிறதுலாம் ஓவர்…” என ரிஷான் சொன்ன பொய்யையே தொடர்ந்தாள்.

அன்விதா அவளையே பார்வையால் எரித்தாள்.

ரிஷான் எச்சிலை விழுங்கியபடி பேந்த பேந்த விழிக்க, அர்ஜித் தனக்காக தன்மீது பழி போட்டுக் கொண்டவளை ஒருமுறை நிமிர்ந்து ஏறிட்டான்.

பிரணீத்தோ கோபத்தின் உச்சியில் இருந்தான்.

“போதும் அகா! உங்களை நீங்களே பழி வாங்க உங்க மேலேயே பழி போட்டுக்கிட்டீங்க. இப்ப எங்க மனநிலை கெடக்கூடாதுன்னு மறுபடியும் உங்க மேல பழி போட்டுக்காதீங்க…” எனும்போதே அவனுக்கு குரல் கம்மியது.

“பிரணீ…” அர்ஜித் பேச வரும்போதே,

“போதும் அர்ஜி! எங்களுக்காக நீங்க எவ்வளவோ பண்ணிருக்கீங்க… இப்ப எங்க கல்யாணம் நல்லபடியா நடக்கணும்னு உண்மையை மறைச்சுட்டு… உங்களுக்கு நான் ரொம்ப கடமைப்பட்டுருக்கேன்…” என்ற அன்விதாவிற்கு அழுகையே வந்தது.

அர்ஜித்தும் அகமொழியும் இணைந்து ரிஷானை பார்க்க, அவனோ ஆல்ரெடி பிரணீத்திடம் ஒரு அறை வாங்கி இருந்த தடயம் இருந்தது.

திருதிருவென விழித்தபடி நின்றிருந்தான் பாவம்.

அகமொழியிடம் பேசும்போதே அவனைப் பிடித்திருந்தனர் அன்விதாவும் பிரணீத்தும்.

“இப்போ சூசைட் செய்தான்னு பரஞ்சிருந்தா நீங்ஙளுடே மனசமாதானம் போயிருக்கில்லே? அதுகொண்டு ஞான் மறைச்சது… வேறே ஒன்னுமில்லை. இப்போ அவன் நன்னாய் தன்னே இரிக்குன்னு!( நல்லா தான இருக்கான்)” 

பிரணீ, ‘நான் அந்த இன்ஸ்பெக்டர்கிட்ட போன் பண்ணி பேசிட்டேன். அவங்க எல்லாமே சொன்னாங்க… விஷ்ணு அன்விதாவை காரணம் சொல்லி சூசைட் ட்ரை பண்ணது, சூசைட்லேயே போர்ஜரி பண்ண பார்த்தது எல்லாமே…” என்றதில், 

“”இதினால நிங்ஙளுக்கு எந்த பிரச்சினையும் உண்டாகத்தில்லா பிரணீ… அங்ஙனெ பிரச்சினை ஆனால், அவிடே வச்சு தானே அதினை மேனேஜ் செய்யணம்னு தோன்னியா ஞான் போயது… நல்லவேளாய் அங்ஙனெ ஒன்னும் ஆயிதில்லா…”(இதுனால உங்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது பிரணீ. அப்படி பிரச்சினை ஆனா, அங்கேயே அதை சமாளிக்கணும்னு தான் நான் போனதே… நல்லவேளை அப்படி எதுவும் ஆகல…)” என்றான் நிம்மதியுடன்.

கோபாலகிருஷ்ணன் தான் தளர்ந்து விட்டார்.

“அவனுக்கெல்லாம் ஞாங்ஙள் எந்தா குறை வச்சோம்? ஏன் இங்ஙனெ இருக்கான்? இத்ரயும் மோசமாய் இருக்குறவனை ஞாங்ஙள் தான் பெத்தோமா?” எனக் குமுறிட, சுஜாதாவும் தலையைக் குனிந்தபடி கண்ணீர் உகுத்தார்.

‘ஞாங்ஙளால இவிடே வந்து அவமானமாயி போயல்லோ…’ என்ற வலி அவருக்கு.

அவர்கள் குற்ற உணர்ச்சியில் மருகுவதை காண இயலாத அகமொழி, “ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு குணம். சிலருக்கு நல்லதா இருக்கும், சிலருக்கு கெட்டதா இருக்கும். அவங்க அவங்க அவங்களை வளர்த்துக்குறதுல தான் இருக்கு. இதுல நீங்க பெத்ததுலயும் வளர்த்ததுலயும் என்ன தப்பு இருக்கு? இங்க தனி மனுஷங்களோட தப்பு முழுக்க அவங்களோடது தான்… யாரையும் சார்ந்தது இல்ல…” என்றவளை பட்டென நிமிர்ந்து பார்த்தார் கல்யாணி.

அவள் எப்போதும் இப்படி தானே. அழுத்தம் திருத்தமாக அனைத்தையும் சட் சட்டென பேசுவாள். அதில் பொதிந்திருக்கும் அன்பும் இப்போது புரிந்தது.

அர்ஜித்தும் சுஜாதாவை சரி செய்ய, அவரோ, “ஞாங்ஙள் கிளம்புறோம் அர்ஜி…” என்றார்.

அன்விதா தான், “நீங்க இருக்கணும்மா… எனக்காக! நீங்க என்கூட இருக்குறது எனக்கு ரொம்பவே பலமா இருக்கு…” என்றதில் அவளை ஆதூரமாகப் பார்த்தார்.

பின் திரும்பி அகமொழியைப் பார்க்க, அவள் அவரது விழிகளை காணாது தவிர்த்தாள்.

அர்ஜித்திற்கு கண்கள் எரிந்தது. “மொழி… ஃபர்ஸ்ட் போய் கொஞ்சம் நேரம் தூங்கு…” என்று விட்டு மாடிக்குச் செல்ல, பிரணீத் அவன் பின்னோடு சென்று அறை வாயிலிலேயே அணைத்துக்கொண்டான்.

“தேங்க்ஸ்டா… எல்லாத்துக்கும்!” என்றவனுக்கு அவன் தரும் நட்பின் ஆழம் திணற வைத்தது.

“நின்டே தேங்க்ஸ் நீ தானே வச்சுக்கோ… போடா போயி லைஃபை என்ஜாய் செய்!” என்று வயிற்றில் குத்தி அனுப்பினான்.

“இனி எத்ர நாளேக்கு ஈ தண்டனை தரான் போகுன்னு அகா? நின்னே அடிச்சதினு சாரி…”  சுஜாதா கூறியதில், அவள் பதறினாள்.

“ஐயோ அத்தை எதுக்கு சாரி எல்லாம்! தப்பு என்மேல தான…”

“தப்பு நிங்ஙள் ரெண்டு பேர் மேலயும் உண்டு…” என்றதில் அவள் அமைதியானாள்.

அகமொழிக்கு அதற்கு மேலும் முடியவில்லை. உறக்கம் கண்ணைச் சுழற்றியது.

“அகா… நீ தூங்கு. ரிசப்ஷன் லேட்டா கூட ஸ்டார்ட் பண்ணிக்கலாம்…” அவளது நிலை உணர்ந்து அன்விதா கூற, “ஜஸ்ட் ஒரு டூ ஹவர்ஸ் தூங்குனா போதும் அன்வி…” என்றவள், கண்ணைத் தேய்த்துக்கொண்டு நகர, அவள் கையைப் பிடித்த அன்விதா, “தேங்க்ஸ் அகா!” என்றாள் நெகிழ்வுடன்.

“உன் தேங்க்ஸ நான் தூங்கி எந்திரிச்சு வாங்கிக்கிறேன் புதுப்பொண்ணே…” எனக் கிண்டல் செய்து அவளை நாண செய்து விட்டே கீழிருக்கும் வேணியின் அறைக்குச் சென்று அப்படியே விழுந்தாள்.

“அடப்பாவிகளா… நேத்து ராத்திரில இருந்து தூங்காம சமாளிச்சு, அடியும் வாங்குன எனக்கு யாராச்சு தேங்க்ஸ் சொல்றீங்களா… ஹ்ம்ம்… வேப்பிலை கருவேப்பிலை அது யாரோ நான் தானோ…” என ரூஹியின் தோள்மீது கைபோட்டு தள்ளாடியபடி பாடிய ரிஷானின் மாடுலேஷனில் அத்தனை நேரம் உயிர்ப்பிழந்த அனைவரின் முகத்திலும் சிரிப்பு மலர்ந்தது.

ரூஹி தான் அவன் நெருக்கத்தில் தவித்துப் போனாள்.

அவனது பாடலைக் கேட்டபடி வந்த பிரணீத், அவனை பக்கவாட்டில் நின்று கழுத்தோடு பிடித்து இறுக்கி விட்டு, “மலையேறுனாலும் மச்சான் தயவு வேணும்னு புரிஞ்சுது மச்சான்…” என்றதில் ரிஷானின் இதழ்களிலும் சிறு புன்னகை.

மாலை நேரத்து மஞ்சள் விளக்கில் அந்த சிறிய பார்ட்டி ஹால் மினுமினுத்தது.

லெஹங்கா சோளியில் விளக்குகளுக்கு போட்டியாக மின்னினாள் அன்விதா. என்னவோ மனதில் இருந்த சிறு தயக்கமும் இப்போது இல்லை.

இன்னுமே தெளிவாக இருந்தது. அது அவளின் முகத்திலும் எதிரொலிக்க, அமுதினி “அவ்ளோ அழகா இருக்க அன்வி!” என நெட்டி முறித்தார்.

“அம்மா, அண்ணனோட டயலாக்லாம் நீ சொன்னா, அண்ணா என்ன சொல்லுவான் அப்பறம்?” என வேணி கிண்டல் செய்ததில், “உன் அண்ணன் கையில ஒரு ரோஜாவை வச்சே கண்ணால சொல்லி முடிச்சுடுவாரு வேணி. ஆனா அது அன்விக்கு புரிஞ்சு… ஹ்ம்ம்…” எனக் கிண்டல் செய்த அகமொழியை கண்டு மூவரும் சிரித்தனர்.

“மதி, மதி என்டே டார்லிங்கை எல்லாரும் கிண்டல் செய்தது! அவிட மாத்ரம் எந்தா வாழூன்னு? ஞாங்ஙளுடே அர்ஜி… உருகி உருகி காதல் வெளிப்படுத்தியி்ட்டும் ஒன்னும் கண்ணில் காணுன்னில்லேயோ…”  என நொடித்தாள் அனகா.

“ஆமா, உங்க சேட்டன் அப்படியே மெழுகுவர்த்தியாட்டம் உருகி தள்ளிட்டாரு! ஒரு வண்டி கடுகு போட்டாலும் பொரிஞ்சுடும்… அப்படி ஒரு கடுகடு பார்ட்டி!” என அகமொழி மூக்கைச் சுருக்கினாள்.

அன்விதாவும் இப்போது அர்ஜித்திற்கு ஆதரவிற்கு வந்தாள்.

“கடுகடுன்னு இருந்ததுக்கு காரணம் உன்மேல இருந்த கோபமா இருந்துருக்கலாம்… அதை விட கல்யாணத்துக்கு முன்னாடியே உன் மேல காதல் இருந்துருக்கு தான் அகா. இல்லைன்னா, உனக்காக பார்த்து பார்த்து அவரே நேர்ல போய் நகையை செலக்ட் பண்ணிருக்க மாட்டாரு. கல்யாணத்துக்கு அன்னைக்கு, மாலை போட கூட நீ முகம் சுருங்க கூடாதுன்னு உடனே தலை குனிஞ்சு மாலை வாங்கி இருக்க மாட்டாரு. கல்யாணம் ஆன நைட்டு நீ வாமிட் செஞ்சதுல, மார்னிங் எந்திரிக்க முடியாம கஷ்டப்படுறன்னு கோவிலை அவாய்ட் பண்ணிட்டு அவர் வேலைக்கு போயிருக்க மாட்டாரு. நீ சரியா சாப்பிடலன்னு உனக்குப் பிடிச்ச ஐட்டம் மட்டும் உனக்குன்னு சமைக்கணும்னு ஆர்டர் போட்டுருக்க மாட்டாரு. விஷ்ணு உன்னை தப்பா பேசுனதுக்காக கோபப்பட்டுருக்க மாட்டாரு…”

“இது எல்லாத்துக்கும் மேல உனக்கும் அவருக்கும் பெர்சனலா இருந்த ஒரு விஷயமே இருக்கே… அவர் உன்னை எவ்வளவோ விரும்புறாருன்னு?” என முடித்திருக்க, அகமொழி எதற்கும் சலனமின்றி அவளை ஒரு வெற்றுப்பார்வை பார்த்தாள்.

“ரொம்ப பேசி விக்கிக்க போகுது… தண்ணியை குடி!” என அசட்டையாக கிண்டல் செய்து விட்டு சென்றவளை கண்டு ஆயாசமாக இருந்தது அன்விதாவிற்கு.

சிவப்பும் நீலமும் கலந்த டிசைனர் புடவையை உடுத்தி இருந்தாள் அகமொழி.

ஒற்றையாக விடப்பட்டிருந்த முந்தானையை கையில் பிடித்துக் கொண்டு, மற்றொரு கையால் கொசுவதத்தைப் பிடித்தபடி நடந்தவளின் விழிகள் ஆடவனைத் தேடியது.

சந்தன டீ-ஷர்ட்டின் மீது சாம்பல் நிற கோட் அணிந்திருந்த அர்ஜித் அகன், குடும்பத்தாரிடமும் ஏன் ரிஷான், ரூஹியிடம் கூட பேசினான். ஆனால், அவள் ஒருத்தி கண்முன்னே நடமாடுவதை ஓரக்கண்ணில் கூட கண்டானில்லை.

நம்பிக்கையை உடைத்து விட்டுப் போனதாக சொல்லி விட்டானே… அவன் திரும்பி என்னைத் தேடி வருவானென்ற நம்பிக்கையை அவன் உடைத்தது மட்டும் நியாயமா?

குபுக்கென கண்ணில் நீர் திரண்டது. ஏனோ அவனது உதாசீனம் மனதை பலவீனப்படுத்த, “ரிஷு… இப்ப பஸ்ல கிளம்புனா, மார்னிங் போயிடலாம். கிளம்பலாமா?” என்றதில், அவன் திகைத்தான்.

“என்ன திடீர்னு சொல்ற… நாங்க நாளைக்கும் இருந்துட்டு வரலாம்னு நினைச்சோம்.” ரூஹி கூறியதில், “பைன், அப்ப நீங்க இருந்துட்டு வாங்க…” என்றவள், பிரணீத் அன்விதாவிடம் சென்று விடைபெற, இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

“லான்ச் டைம் ப்ரோ… அதான்.” என அவர்கள் கேளாமலே காரணம் கூற, “உன் இஷ்டம்…” என பிரணீத் முடித்துக் கொண்டான்.

வேணியோ, “இருந்துட்டுப் போகலாம்ல?” எனக் குறை பட்டாலும், “அண்ணி… உங்க பேக் என் ரூம்ல இருந்துச்சு. மேல அர்ஜி ரூம்ல வச்சுருக்கேன். மிஸ் ஆகிட கூடாதேன்னு…” என்றதில் “ம்ம்…” எனத் தலையாட்டிக் கொண்டாள்.

அனைவரும் பிசியாக இருக்க, யாரையும் தொந்தரவு செய்யாது, பிரணீத் வீட்டிற்கு கேப் புக் செய்தபடி இருந்தாள்.

எதுவும் புக் ஆகாது போக, அவள் முன்னே ஒரு கார் கீறிச்சிட்டு நின்றது.

அர்ஜித் அகன் தான்… ஜன்னலைத் திறந்து ஏறிக்கொள்ள பணித்தான்.

“இல்ல, கேப் வரும்…” அவள் அவனைப் பாராது மறுக்க, அவனைப்போலவே காரின் எஞ்சினும் உறுமியது.

வேறு வழியற்று ஏறிக்கொண்டவளை, பிரணீத்தின் வீட்டில் விட்டான்.

வீட்டு சாவி அவனிடமும் ஒன்று இருந்தது.

வேகமாக மாடிக்கு ஏறியவளின் பின்னே அவனும் ஏறினான்.

அவள் துணியை பையில் எடுத்து வைத்துக் கொண்டிருக்க, அவன் மெத்தையில் குனிந்து அமர்ந்து அவளையே பார்த்திருந்தான்.

அந்த டிசைனர் புடவையின் வழியே அவளது வளைவு நெளிவுகளும் அழகாய் கண்ணுக்கு விருந்தாக, அவளோ கைப்பையிலும் தேவையானதை எடுத்து வைத்தாள்.

ஓரப்பார்வை அவன் மீது, அவனது விழிகள் செல்லும் திசை மீது பரவி நெஞ்சை தடதடக்க செய்தது.

“சேரி சேஞ்ச் செய்யல்லே?” அவன் மெதுவாகக் கேட்டான்.

“இல்ல…”

“ஏன்? பஸ்ல சேரி கம்ஃபோர்ட்டபிளா இருக்காதல்லோ?”

ஒரு நொடி அமைதி காத்தவள், “உனக்கு சேரி தான கம்ஃபோர்ட்டபிள்?” என்றாள் முணுமுணுப்பாக.

சட்டென ஒரு மின்னல் வெட்டி மறைய, புயல் போல அவளை நெருங்கியவன் பின்னந்தலையை அழுத்தப் பிடித்து இதழோடு இதழை அழுத்தமாகச் சேர்த்தான்.

முத்தத்திற்கு ஏங்கித் தவித்தவர்களாக இருவரும் இதழ் சுவையில் ஒருவரை ஒருவர் திணற வைத்தனர்.

கையில் இருந்த கைப்பை எப்போது கீழே விழுந்ததென்று அவள் அறியவில்லை. தரையில் இருந்த கால்கள் எப்போது தனது பிடிமானத்தை இழந்தது என்றும் தெரியவில்லை.

அதரத்திற்கு அப்போதைக்கு விடுதலை கொடுத்த அகன், நெற்றி தொடங்கி முகம் முழுக்க முத்தமிட தொடங்கினான்.

கண்மூடி அதில் லயித்து இருந்தவள், அவனது கோட்டை கழற்றச் செய்தாள். கூடவே அவனது இதழில் முத்தமிட்டபடி டீ-ஷர்ட்டையும் கழற்ற, அவளது வேகம் அவனுக்குள்ளும் உணர்வலைகளை பொறுமையின்றி பூக்க செய்தது.

அவனது டீ-ஷர்ட்டை கழற்றியதும், அப்படியே முட்டி இட்டு அமர்ந்தவளை ஒற்றைப் புருவம் உயர்த்திப் பார்த்தவன், “எந்தாடி செய்யான் போற?” எனக் கேட்டான் வியப்பும் கரகரப்பும் கலந்த குரலில்.

“திரும்பு…” என அவனை முதுகைக் காட்டி திருப்பியவள், அவனது முதுகுக்கு கீழ் இருக்கும் மச்சத்தில் படபடவென முத்தமிடத் தொடங்கினாள்.

முத்தத்தின் எண்ணிக்கை தீரவே கூடாதென்று எண்ணினாளோ என்னவோ, அவன் காலை இறுக்கிப் பிடித்து அந்த மச்சத்தின் மீதிருக்கும் மொத்தக் காதலையும் கொட்டினாள்.

ஒரு கட்டத்திற்கு மேல் தன்னை கட்டுப்படுத்த இயலாதவன், அவளை அப்படியே தூக்கிக் கட்டிலில் இட்டான்.

ஒற்றையாய் விடப்பட்ட புடவை முந்தானை இருவருக்கும் போர்வையாய் மாறிடத் துடிக்க, தன்னைத் தவிர அவள் மேனியை தொட அதற்கும் அனுமதி மறுக்கப்பட, கீழே விழுந்த கைப்பையின் மீதே ஆடைகளும் குவிக்கப்பட்டது.

ஊடல் தீண்டிய காதலைக் கூடலும் தீண்டிடுமோ?

அகன் வசப்படுவாள் (வான்)

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 12

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
9
+1
0
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்