Loading

நட்சத்திரம் 6

“சோ நீங்க பண்ணினது ஹிப்நாட்டைஸ் தான் அதே நீங்களே அக்செப்ட் பண்ணுறீங்க ” எனத் தீரனின் முகம் பார்த்தவளை,

“ஆஃப் கோர்ஸ், இது ஹிப்நாட்டிக்ஸ் தான். உன்னை என் வழிக்குக் கொண்டு வர எனக்குத் தெரிஞ்ச ஒரே வழி இது தான், உன்னை நான் பழி வாங்கணும்” எனப் பேசியவனின் முகம் கடுமையாக இருந்தாலும் உள்ளூர சிரித்துக்கொண்டான்.

“இல்லை நீங்க பொய் சொல்றீங்க” எனச் சொன்ன மகிழினியை பார்த்து திகைத்து விழித்தான் தீரன்.

“நீங்க ஹிப்நாட்டைஸ் பண்ணினது உண்மை ஆனா பழிவாங்க தான் இதெல்லாம் செஞ்சதா சொன்னது பொய்” என மகிழினி சொல்ல,

புன்னகை சிந்தி அங்கிருந்து அவன் நகர முற்பட்ட போது,

“இங்க பாருங்க தீரன், நீங்க இதெல்லாம் எதுக்காகச் செஞ்சிங்கன்னு நான் கண்டுபிடிச்சு, இப்ப நடந்த பொம்மை கல்யாணத்தை ஒண்ணுமில்லாமல் ஆக்கி இந்த வீட்ல இருந்து விஜயலட்சுமி மகளா வெளிய போவேன், அப்ப உங்களால என்ன செய்ய முடியும் பாக்குறேன்” எனச் சொன்னவளை,

“மஹி., இதைச் சொன்ன நீ தாங்க மாட்ட இருந்தாலும் சொல்றேன் நீ விட்ட சவால்ல தோற்க போற, அப்பறம் உன் இஷ்டம்” எனச் சொன்னவன் ஏளனமாய் அவளைப் பார்த்து சிரிக்க,

கோபத்தையும் வார்த்தைகளையும் அவன் மேல் கொட்டி நேரத்தை விரயம் செய்ய அவள் விரும்பவில்லை அமைதியே அவளின் ஆயுதம் என்று அவன் தெரிந்திருக்கவில்லை.

“சரி சரி வீணா எதையாவது உளறாமல் கிளம்பு முக்கியமான இடத்துக்குப் போகணும்” எனச் சொன்னவன் படுக்கையின் மேல் ஒரு சிறு பையை வைத்தான் “இதுல இருக்க டிரஸ்ஸ போட்டிட்டுக் கிளம்பு “ எனச் சொன்னவனைப் பார்த்தபடி பையைப் பிரித்துப் பார்த்தவளின் எண்ணம் என்னவோ தன் முன்னே சினிமாவில் வரும் வில்லனை போல் அவனைப் பாவிக்கத் தொடங்க,

​‘இவன் என்ன பிளான் பண்றான்னு தெரியலையே… திடீர்ன்னு கல்யாணம் பண்ணிட்டு வந்தான். இப்போ திடீர்னு டிரஸ் கொடுத்துக் கிளம்ப சொல்றான். எதாச்சும் நாகரிகமில்லாத டிரஸ்ஸைக் கொடுத்து நம்மளைச் தர்மசங்கடத்துல தள்ள பாக்குறானா?’ என யோசித்தபடி பையைத் திறந்தவளின் கண்களை அவளால் நம்ப முடியவில்லை. உள்ளே பட்டுப் புடவையும் மல்லிகைப் பூவும் இருக்க, நிம்மதிப் பெருமூச்சு விட்டாள்.

“நான் ஒண்ணும் அந்த அளவுக்குக் கெட்டவன்லாம் இல்ல மஹி, எங்க அம்மா அப்படி ஒண்ணும் வளர்க்கல ” எனச் சொன்ன தீரனை முறைத்தபடி,

“ஆமா தீரன் நீங்க அந்த அளவுக்குக் கெட்டவன்லாம் இல்ல , ஒரு பொண்ணை மயக்கி உங்க இச்சையைத் தீர்த்துக்குற அளவுக்குக் கேடுகெட்டவன்” எனப் பேசியவளின் மனம் எனோ “நம்ம மனசுல நினைச்சது இவனுக்கு எப்படித் தெரியது” என்ற யோசனையில் இருக்க

“இதுக்கு மேல எதாவது பேசின அப்பறம் நடக்குறதே வேற” எனக் கைகளைக் ஓங்க,

“அடிங்க தீரன் டொமஸ்டிக் வைலன்ஸ்க்கு ஈசியா டிவோர்ஸ் கிடைக்கும்“ என அவள் சொல்ல அறையிலிருந்து கோபமாக வெளியேறினான்

‘அப்படி எங்க தான் கூட்டிட்டு போறான்னு பார்ப்போம் ‘ என நினைத்தபடி கிளம்பினாள் அவனுடன் சென்றால் அவளின் குழப்பங்களுக்கு விடை கிடைக்குமோ என நினைத்தாள் மகிழினி.

******

சரசரக்க பட்டுபுடவையும் சிகை நிரம்ப மல்லியும் அவன் சூடிய பொன் சங்கிலியும் அழகிய தேவதையாய் மிளர்ந்தாள் மகிழினி, தன்னவளின் முகம் கண்டு அகம் மகிழ்ந்தான் மஹியின் தீரன்

“ஏப்பா தீரா நேரமே போயிட்டு நேரமே வந்திருங்க சடங்கு சம்பிரதாயமெல்லாம் இருக்குல்ல” என மீராம்மா பேசியபடி பூக்களைத் தொடுத்துக் கொண்டிருந்தார்

“ஆமா தீரன் தம்பி கல்யாணம் தான் முறைப்படி நடக்கலை, மத்த சம்பிரதாயம்லாம் முறைப்படி செஞ்சிரலாம்” எனச் சொன்ன விஜயலட்சுமியை பார்த்து முறைத்துக் கொண்டிருந்தாள் மகிழினி

“இல்லை அத்தை, நான் மஹிக்கு விருப்பம் இல்லாத எதையும் செய்யமாட்டேன் அதை அவளும் புரிஞ்சுப்பா இல்லை மஹி” எனத் தன்னவளை காதலுடன் பாரத்து வைத்தான் தீரன்

“இல்லைடா தீரா முறைன்னு ஒண்ணு இருக்குல, அதை நேரம் தவறாம செய்யணும் அது உங்க வாழ்கையை மாத்தும் டா தீரா” என நீலவேணி சொல்ல

“எனக்கு இப்ப அதைப் பத்தி பேச நேரம் இல்லை முக்கியமான வேலை இருக்கு நேரமாகுது” வா மஹி என அவனறியாமல் கைபற்ற போக அவன் கைகளில் குச்சி போன்ற ஒன்று அடைக்கலமாக விழியைத் திருப்பி அவள் புறம் பார்க்க கையில் கைத்தடியை ஒருமுனையை அவள் பிடித்திருக்க மறுமுனை தீரனின் கைகளில் இருந்தது.

“இனி நீங்க என் கையைப் பிடிக்கக் கூடாது அதுக்குத் தான் இந்த வாக்கிங் ஸ்டிக் நமக்குள்ள எப்பயும் இந்த அளவு டிஸ்டன்ஸ் இருந்திக்கிட்டே இருக்கணும், அதுக்குச் சம்மதம்னா சொல்லுங்க உங்க கூட நான் வெளிய வரேன் இல்லைனா வரமாட்டேன்” என அழுத்தமாய்ச் சொன்னவளின் விழிகளில் வலியையும் பயத்தையும் ஒருங்கே பார்த்தவன் உள்ளூர உறைந்துப் போனான், ‘நான் உன்னை அந்த அளவுக்குப் பயமுறுத்திட்டேன்ல மஹி சாரி மா’ எனத் தனக்குள் பேசிக்கொண்டவன்,

“சரி ஓகே வா போகலாம்“ எனச் சொல்லிவிட்டு வெளியே வந்தவன் காரை ஸ்டார்ட் செய்துவிட்டு நிற்க, என்ன தான் தைரியமாக மகிழினி பேசினாலும் அவனுடன் தனியே செல்ல பெண்ணவளின் உள்ளம் படபடக்க எங்கே அமர்வது என்ற அச்சம், எங்காவது அழைத்துச்சென்று இருக்கும் மானத்தைப் பறித்துவிடுவானோ என்ற தயக்கத்துடன் நின்றிருந்தாள் மகிழினி

“என் மேல உனக்கு நம்பிக்கை இல்லைன்னு புரியுது மஹி, நீ பின்னாடியே உட்காரு, நீ பயப்படாம என் கூட வரலாம், என் சுண்டுவிரல் கூட உன் மேல படாது” என அவன் பேசிக்கொண்டிருந்த போதே காரின் பின்னிருக்கையில் அமர்ந்தாள் மகிழினி

‘கொஞ்சம் நம்பிக்கை இருக்கு போல’ எனத் தனக்குள் பேசிக்கொண்டிருந்தவனின் கார் சாலையில் சீறிக்கொண்டு செல்ல சிறிது தூர பயணத்திலே உறங்கி போனாள் மகிழினி

“மஹி..! மஹி..!” என்றவனின் அழைப்பில் கண் விழித்துப் பார்த்தாள் இருட்டி போய் இருந்தது

காரை திறந்துக்கொண்டு வெளியே வந்தவளை சில்லென்ற குளிர்ந்த தென்றல் அவளை ஒரு முறை உரசி செல்ல, குளிர் காற்று பட்டவளின் தேகம் நடுங்க துவங்க அவன் அணிந்திருந்த ஜெர்கினை அவளிடம் கொடுக்க மறுப்புச் சொல்லாமல் புடவை மேல் அணிந்து கொண்டாள்

அந்த இடமே கும் இருட்டாக இருக்கத் தூரத்தில் ஒரிடத்தில் மட்டும் ஒளி தெரிய “இது என்ன இடம் தீரன் இப்படிக் குளிருது நம்ம சென்னையில் தான் இருக்கோமா இல்ல வேற எங்கயாவது வந்துட்டோமா?” எனக் கேட்டவளின் குரலில் நடுக்கத்துடனே வெளி வர,

“நம்ம ஒரு ஏரிக்கு வந்திருக்கோம் மஹி, இந்த ஏரியோட பேரு ஷைனிங் ஸ்டார் லேக் (கற்பனை பெயர்) “ என அவன் சொல்ல

“என்னது இப்படி ஒரு லேக்கா நான் இதுவரைக்கு இந்தப் பெயரை கேள்விபட்டதே இல்லை “ எனக் கேட்டவளை பார்த்தவன்

“வாக்கிங் ஸ்டிக் எடுத்திட்டு வா, நாங்கலாம் கொடுத்த வாக்கு மாறாத கவரி மான் பரம்பரையாக்கும்” என அவன் சொல்ல

“இந்த மனுசங்களே இப்படித் தான் எல்லாத்தையும் தப்பா புரிஞ்சுகிட்டு அதுக்கு ஒரு பழமொழி வேற வச்சுகிறது , முன்னப் பின்ன கவரி மான் பாத்திருந்தால் அதோட உங்களைக் கம்ப்பேர் பண்ண மாட்டிங்க” எனச் சொன்னவளை

“ஓ.. மேடம்க்கு அப்படி என்ன கவரி மான் பத்தி தெரியும் கொஞ்சம் சொனனால் நாங்களும் தெரிஞ்சுப்போம் “ எனச் சொன்னவனைப் பார்த்து

“நீங்களெல்லாம் ஸ்டேசன் ஹெட்” எனத் தலையில் அடித்துக்கொண்டவளை பார்த்து அவள் சற்று இயல்பாய் நடந்துக்கொள்வதே தீரனின் மனதில் இதமளிக்க

 “சரி வா பேசிகிட்டே நடப்போம்“ எனச் சொல்ல

“ஹம்ம்“ என்றவள் கைத்தடியின் மறுமுணையைப் பிடிக்குமாறு சைகை செய்தாள்

“ இருட்டுனா கொஞ்சம் பயம்“ என மகிழினி சொல்ல

“இருட்டில் தான் நட்சத்திரங்கள் இன்னும் அழகாய் மிளிருமாம்,உங்களை மாதிரி” எனச் சொன்னவனை ஒரக்கண்களால் பார்த்தவள்

“நம்ம கவரி மான் பத்தி பேசிட்டு இருந்தோம் தீரன்” எனப் பேசியபடி நடக்க ஆரம்பித்திருந்தனர்

“கவரி மான், மான் வகையைச் சேர்ந்ததே கிடையாது , அது ஒரு மாடு வகையைச் சேர்ந்தது “ எனச் சொன்னவளை

“மஹி ..! ஒரு நிமிசம் நாங்க தெரியாம ஒண்ணும் சொல்லலை தமிழ் வரலாறுலையே கவரி மான் பத்தி சொல்லியிருக்காங்களே, நீங்கலாம் ஸ்கூல்ல படிக்கலையா..?” எனக் கேட்ட தீரனை பார்த்தவள்

“ஹம்ம் நீங்க சொல்றதை ப்ரூவ் பண்ணுற மாதிரி எக்ஸம்பிள் சொல்லுங்களேன்” எனக் கேட்டவள் அவனைப் பார்க்க

“ஓ நான் படிச்சிருக்கேனான்னு என்னை டெஸ்ட் பண்ணுறீங்க, எங்க தலை திருவள்ளுவர் சொல்லிருக்காரு

“மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்

உயிர்நீப்பர் மானம் வரின்” 

எப்புடி அழகா சொல்லியிருக்காரு பாருங்க எங்க தலை” எனச் சட்டை காலரை தூக்கி சொன்னவனைப் பார்த்து

“உங்க தலை, சரியாதான் சொல்லியிருக்காங்க நீங்க தான் தப்பா புரிஞ்சிருக்கிங்க, அதாவது கவரி மான் குளிர் பிரதேசத்தில் வாழும் யாக்(Yak), அதோட முடிகளை நீக்கிவிட்டால் குளிர் தாங்காமல் இறந்து போகும், அது போலத் தான் மானம் அழிய நேர்ந்தால் உயிரை விட்டுவிடுவார் இது தான் பொருள் , இனி புள்ளை குட்டிகளுக்காவுது சரியான அர்த்த்தை சொல்லி கொடுங்க” என நக்கலாய் அவள் சிரிக்க

“என் புள்ளை குட்டிகள பத்தி எனக்குக் கவலை இல்லைங்க, அதான் இவ்வளவு அறிவான அம்மா இருக்காங்களே” என அவளைக் கை காட்டியதும் தனக்குள் வந்த சிரிப்பை உள்ளே மறைத்தவள்

“இப்போ எதுக்காக இந்த லேக் வந்திருக்கோம் இப்பாயாவது சொல்லுங்க” எனக் கேட்டவளை

“போட்டிங் போகப் போறோம் மஹி” எனச் சாதரணமாகச் சொன்னவனைப் பார்த்துவள் “போட்டிங் போறதுக்குப் பட்டு புடவையா அதுவும் இந்த நேரத்துல“ என முறைத்தவளை

“இல்லை மஹி என்னோட மனைவிக்கு நான் முதல்ல தர கிப்ட் அவ மனச தொட்டதா இருக்கணும், மல்லிப்பூவும் பட்டுபுடவையும் தான பொண்ணுங்களுக்கு ரொம்பப் பிடிக்கும், அதான் முதல் முறை வாங்கிக் கொடுக்குற கிஃப்ட் உனக்கு பிடிச்சதா இருக்கணும் நினைச்சேன்” எனப் பேசியவனைப் பார்த்து ஏசவே தோன்றியது அவளுக்கு

“ஆளே இல்லாத இடத்துல போட்டிங் போய் என்னங்க செய்யப்போறோம் “ எனக் கேள்வியைத் தொடுத்தாள் மகிழினி

“நீ வா மஹி” என்றவன் அங்கிருந்த மோட்டர் போட்டில் ஏறி அதை ஆன் செய்தான்

ஏரியின் ஆழமான மையப்பகுதிக்குச் சென்றதும் எஞ்சினை நிறுத்தினான். அங்கே நிலவிய நிசப்தம், பிரபஞ்சத்தின் ஆதி ஒலியைப் போல இருந்தது.

​“இப்ப லேக்க பாருங்க மஹி,” என்றான் தீரன், அவன் குரலில் ஒரு இனம் புரியாத நெகிழ்ச்சி கலந்திருந்தது.

​நீரை உற்று நோக்கியவளின் கண்களை அந்தப் பௌர்ணமி நிலவு முழுமையாக ஆக்கிரமித்தது. வானில் இருந்த நிலவு, ஏரியின் கண்ணாடிப் பரப்பில் விழுந்து பிரதிபலித்ததில், விண்ணும் மண்ணும் ஒன்றிணைந்தது போன்றதொரு மாயத் தோற்றம் உருவானது.

​திடீரென, ஏரியின் மடியில் இருந்து ஒரு மெல்லிய குளிர் காற்று எழுந்து, மகிழினியைத் தழுவியது. அந்தத் தீண்டலில், அவள் அணிந்திருந்த பட்டுப் புடவையும், சிகையில் இருந்த மல்லிகைச் சரமும் அந்த நிலவொளியில் நனைந்து, வெண்ணிறத் தேவதையாய் ஜொலிக்க ஆரம்பித்தன. நிலவின் ஒளி அமுதென அவள் மீது வழிய, அவள் உடலைச் சுற்றி ஒரு புனிதமான வெண்ணிற ஒளி வட்டம் உருவானது. அந்த நொடியில், காலமும் நேரமும் உறைந்து போனது.

​அழகே உருவாய், நிலவின் மகளாய் நின்றவளை, “மஹி” என மெல்லிய, காதலில் தோய்ந்த குரலில் அழைத்தான் தீரன்.

​“துருவன்..” – அவளது இதழ்கள் அவளறியாமலே, காற்றின் ஈரத்தில் கரைந்த ஒரு ராகம் போல அந்தப் பெயரைக் உச்சரித்தன. அவள் கண்களில் இருந்த குழப்பங்கள் மறைந்து, ஒரு யுக காலத்துத் தேடல் நிறைந்திருந்தது.

​“நிஜமாவே நீயா நக்‌ஷத்ரா..!” எனக் கேட்டவன், அவள் விழிகளை ஆழமாக நோக்கினான். அவளது விழிகள் மெல்ல நீல நிறமாக மாறி, அந்தப் பௌர்ணமி வானின் பிரதிபலிப்பைப் போல மின்னின.

​“என்னோட நக்‌ஷத்ரா தான்!” என ஆனந்தக் கூச்சலிட்டான் அவன்.

​“உங்க நக்‌ஷத்ரா தான் துருவன்” என அவனின் கைகளைப் பற்றினாள் அவள்.

“என்ன விட்டுப் போய்விட மாட்டியே நக்‌ஷத்ரா” என்றவனின் விழியில் நிறைந்திருந்தவளின் உடையும் சிகை அலங்காரமும் மாறியிருந்தது

அவளின் வெள்ளை நிற நீண்ட ப்ராக் போன்ற உடையும் அவள் சிகையை ரத்தினங்கள் பதித்த கீரிடமும் அலங்கரித்திருக்க, சுருளான அவளின் கேசம் அலையெனப் படர்ந்திருக்க அவன் கைப்பற்றிக் கட்டியணைத்திருந்தாள் துருவனின் நக்‌ஷத்ரா

“துருவன் எனக்காக நீங்க மஹியை ரொம்பக் கஷ்டப்படுத்துறிங்க” என்றவள் அவன் விழியைப் பார்க்க

“நீயும் அவளும் வேற இல்லையே நக்‌ஷத்ரா” எனச் சொன்னவனை

“நீங்க இன்னும் துருவனா இல்லை, எல்லாம் தெரிஞ்ச தீரனா தான் பேசுறீங்க “ எனச் சொன்ன நக்‌ஷத்ராவை பார்த்து

“இப்ப நான் துருவனா பேசணும் அவ்வளவு தானே, இந்தப் பௌர்ணமி நிலவு மறையும் வரை நமக்கு நேரம் இருக்கு நக்‌ஷத்ரா, உன் துருவனை இந்த இரவு முழுக்க ரசிக்கலாம்” எனச் சொன்னவனை வாரி அணைத்து அவன் முகம் முழுவதும் இதழ் பதித்து முத்தமிட்டாள் துருவனின் நக்‌ஷத்ரா

அவளை விலக்கி நிறுத்தியவன் “இல்ல நக்‌ஷத்ரா மஹி, ஏற்கனவே நடந்த விசயத்துல கோபமா இருக்கா இப்ப இது நமக்குள்ள தேவையில்லை”

“இது என்னோட நீண்ட நாள் தவம் துருவன், நீங்க இப்படிப் பேசி, என்னை ரொம்பக் காயபடுத்திட்டிங்க துருவன், நானும் மஹியும் வேற வேற இல்லையே” எனச் சொல்ல

“நீ மட்டும் தான் தவமிருந்தியா நக்‌ஷத்ரா நானும் தான் தவமிருந்தேன் உன்னை மறுபடியும் தொலைச்சிட கூடாதுன்னு தானே இந்த அவசர திருமணம்” எனச் சொன்னவனைப் பார்த்து

“அதான் மணம் முடிச்சாச்சே, இனி தடை என்ன இருக்கு..?” கேள்வியாய் அவன்புறம் திரும்பியவள்

“நீங்க எதையும் பேசாதீங்க துருவன் என் விழிகளை மட்டும் பாருங்கள்” எனச் சொல்ல அவளின் நீல நிற விழிதனில் வீழ்ந்தவன் காதல் அரங்கேற்றம் நிகழ்த்த ஆரம்பித்திருந்தான், தன்னவனின் ஸ்பரிசம் பட்டு அவன் முன் சேயாகி போனாள் துருவனின் நக்‌ஷத்ரா, நிலவின் ஒளியில் ,நீரின் நடுவே அவள் பெண்மையை அவனிடம் பரிசாகக் கொடுக்க, மென்மையான ஆண்மையை முதல் முறை அவளிடம் தொலைத்தான் நக்‌ஷத்ராவின் துருவன் இவர்களின் ரகசிய கூடல் தொடர்ந்து கொண்டே இருக்க நிலவு மறைய போகும் நேரத்தை எட்ட

“துருவன்“ அவளின் மெல்லிய குரல்

“ஹம்ம்“ அவள் மார்புக்குள் புதைந்த படி குரல் கொடுத்தான்.

“நேரம் முடிய போகுது துருவன் “தன் காதலியின் பிரிவில் வருந்தியவன் நெடுங்காலப் பிரிவிற்குப் பின் இன்று தான் அவளை முழுமையாக ஆராதிக்கிறான் அவர்களுக்கான நேரம் இன்னும் சில விநாடிகளில் முடியப் போவதை எண்ணி வருந்தியபடி, 

“துருவன் அடுத்தப் பௌர்ணமி வர காத்திருந்து தான் ஆகணும், தங்களின் முக மாறுதல், என்னை வருத்தம் கொள்ளச் செய்கிறது துருவன் , மஹியிடம் தங்களின் அன்பை மட்டும் காட்டுங்கள் அவை என்னிடம் வந்து சேரும்” என நக்ஷ்த்ரா பேசியபடி மகிழினியாய் மாறிய நொடியில் மயங்கி சரிந்தாள்

விண்ணில் ஒளி சிந்திய நிலவும் சாய,

மண்ணில் அவனுள் உறைந்த காதலும் மெல்லக் கரைய,

நக்ஷத்ராவின் நினைவுகள் நழுவிய அந்த நொடியில்

மகிழினியாய் மயங்கிச் சரிந்தாள்…

​நக்‌ஷத்ராவை ஆன்மாவால் காதலித்து,

மகிழினியை கரங்களால் பற்றியவன்…

விதியின் துருவனோ…?

நிஜத்தின் தீரனோ…?

​யுகங்கள் தாண்டிய பிரபஞ்சக் காதல்..!

Click on a star to rate it!

Rating 3.8 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
2
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்