
அத்தியாயம் – 2
கையில் பால் செம்புடன் கணவனின் அறைக்குள் நுழைந்தாள் நித்யா, அவளுக்கு அலங்காரம் செய்து விட்ட இரு பெண்கள் தான், அவளை ரிஷியின் அறைக்கு கொண்டு வந்து விட்டு சென்றனர், அவளை விட்டு போகும் போது அவர்கள் சிரித்த கிண்டலான சிரிப்பின் அர்த்தத்தை புரிந்து கொண்டவளுக்கு ஒருமாதிரியான பயம் ஏற்படவே, மனதை திடப்படுத்திக் கொண்டு அறைக்குள் நுழைந்தாள்,…
நல்ல விசாலமான அறையாக இருந்தது, அறையின் நடுவில் பெரிய கட்டில் போடப்பட்டிருந்தது, அந்த கட்டில் முழுக்க பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது, அறையில் இருந்த பூக்களின் நறுமணம் அவளை மயக்கமடைய செய்ய முயன்றதை போல் உணர்ந்தாள், கணவன் எங்கே என்று தேடியது அவளின் விழிகள், தன் மனதில் உள்ளதை அவனிடம் கொட்டிவிட்டு, தான் எடுத்திருக்கும் முடிவை பற்றியும் பகிர்ந்து கொண்டால் தான் அவளுள் இருக்கும் பாரம் குறையும், மெல்ல நடையுடன் சற்று உள்ளே நடந்தாள்,…
அறையை சுற்றி நோட்டமிட்டாள், அவன் இருப்பதற்கான சுவடே இல்லாமல் இருந்தது, அச்சமயம் தான் செவ்வந்தி கூறியது நினைவில் வந்தது, பேரனின் குணாதிசியங்களை பற்றி கூறிக்கொண்டு வந்தவர், “ரிஷி வெளியே போயிருக்கான்மா, பத்து நிமிஷத்துல வந்துடுவான், அதுவரைக்கும் நீ அவன் ரூமை சுத்திபார்த்துட்டு இரு” என்று கூறி இருந்தார்….
மனம் வேறொன்றை பற்றி எண்ணிக் கொண்டிருந்ததால் அவர் கூறியதை மறந்திருந்தாள், கணவனை காணாமல் தேடவும் தான் மின்னல் வெட்டியது போல், அவர் கூறியது நினைவிற்கு வந்தது…
என்ன செய்வதென்று தெரியாமல், பால் செம்பை கட்டிலின் அருகிலிருந்த அந்த சிறிய டேபிளின் மீது வைத்துவிட்டு மீண்டும் அறையை நோட்டமிட்டாள், இடதுபக்க சுவரில் பெரிய போட்டோ ஃபிரேமில் பற்கள் தெரிய அழகாக சிரித்து கொண்டிருந்தான் ரிஷி மித்ரன்,…
உண்மையில் தன்னை தொட்டு தாலி கட்டிய கணவனை இப்போது தான் சரியாக பார்க்கிறாள், பார்க்க சினிமா ஹீரோ போல் இருந்தான், அவனது அந்த வசீகர சிரிப்பு அவளை ஈர்ப்பது போல் இருக்க சட்டென்று தலைகுனிந்து கொண்டாள்,… போட்டோவில் இருக்கும் போதே அவளை கவர்கிறானா? நேரில் வந்தால் அவள் நிலை என்னவோ?
அதற்கு பிறகு அவள் அவன் போட்டோவின் பக்கம் திரும்பவில்லை, மல்லிகைப்பூக்களும் ரோஜா இதழ்களும் தூவிருந்த கட்டிலில் ஒரு ஓரமாக அமர்ந்தாள், அவளும் எவ்வளவு நேரம் தான் நிற்பாள்,…
ஒரு முறை அவனிடம் எதிலிருந்து ஆரம்பித்து எப்படி கூறுவது என்பதை ரிகர்சல் பார்த்து கொண்டாள் மனதினுள்ளேயே, அந்த நேரம் சரியாக கதவு திறக்கும் சத்தம் கேட்டது, ‘அவன் வந்துவிட்டான்’ உள்ளுக்குள் ஒருவித படபடப்பு ஏற்பட, எழுந்து நின்று விட்டாள்….
தான் உள்ளே நுழைந்ததும், அவள் சட்டென்று எழுந்து கொண்டதில் அவளை தன் லேசர் விழிகளால் அளந்தவன், சின்ன முறுவலுடன் கதவை தாழிட்டுவிட்டு திரும்பினான்,….
ஏற்கனவே அவன் உள்ளே நுழைந்ததில் படபடக்கும் மனதுடன் எழுந்து நின்றவள், அவன் கதவை தாழிடவும், தொண்டை வரண்டு, எச்சில் விழுங்க, கையும் காலும் நர்த்தனம் ஆட நின்றிருந்தாள், ஏசி ஓடிக் கொண்டிருந்தாலும் நெற்றியிலும் மூக்கின் கீழேயும் வியர்வை முத்து முத்தாய் படர்ந்திருந்தது பயத்திலும் பதட்டத்திலும்,…
அவனோ அவளை மேலிருந்து கீழ் வரை அளவிட்டபடியே அவளை நெருங்கி வந்து கொண்டிருந்தான்,..
சிவப்பு நிற பட்டில் தங்க பார்டர் வைத்த கூரைசேலையில், கழுத்தை ஒட்டிய ஒரு அழகான தங்க நெக்ஸலுடன், அவன் காலையில் கட்டிய மஞ்சள்தாலி கயிறுடன் அழகாக மின்னினாள், காதில் பெரிய பெரிய ஜிமிக்கிகள், கைகளில் நான்கைந்து தங்க வளையல்கள் இவ்வளவு ஆபரணங்கள் தான் அவள் அணிந்திருந்தது,… காலையில் உடலை நிறைத்த ஆபரணங்களை அணிந்திருந்ததை காட்டிலும் இப்போது தான் அழகாக தெரிந்தாள்,..
அவளது அடர்ந்த கண்ணிமைகள் கொண்ட நயனங்கள், பதட்டத்தில் அங்கும் இங்கும் அலைப்பாய்ந்து கொண்டிருந்தது, கூரான மூக்கில் சின்ன அளவில் வெள்ளை கல் மூக்குத்தி ஒன்று ஒட்டிக் கொண்டிருந்தது, செப்பு இதழை பயத்தில் கடித்து கொண்டு நின்றாள், அவள் பிறைநெற்றியில் படர்ந்திருந்த வியர்வை துளிகளை தன் உதட்டால் துடைத்து விடணுமென்ற மோகம் அவனுக்கு எழுந்த அடுத்த கணம்… ‘ச்சே… என்ன பண்ணிக்கிட்டு இருக்கேன் நான்’ தன் எண்ணத்தை நினைத்து சிரித்தவன், அவளை விட்டு சற்று இடைவெளிவிட்டு நின்றான்,…..
“இந்த ஃபார்மாலிட்டிஸ் எல்லாம் வேண்டாம், உட்காரு” தான் வந்ததும் அவள் எழுந்து கொண்டாலே என்ற எண்ணத்தில் சொன்னவன், படுக்கையில் சாவகாசமாக அமர்ந்தான்,…
அவள் அமராமல் நிற்கவும், அவளை நிமிர்ந்து பார்த்தவன்,…. “நித்யா உட்காரு” என்றான் சற்று சத்தமான குரலில்,..,….
அவன் கொஞ்சம் சத்தமாக சொன்னான் அவ்வளவே, அதற்கே அவள் திடுக்கிட்டு போனாள், அழுகை வருவது போல் இருந்தது, ஆனால் அழவில்லை, உதட்டை கடித்து அடக்கி கொண்டு,… “இ.. இல்ல,… ப.. பரவால்ல” இதை பேசி முடிக்கவே, அவளுக்கு ஏதோ பல கிலோமீட்டர் நிற்காமல் ஓடியது போல் மூச்சு வாங்கியது…..
“என்ன பரவால்ல, இப்போ உட்காருவியா? மாட்டியா?” இந்த முறை கொஞ்சம் அழுத்தமாக அதட்டிக்கொண்டு கூறவும் அமர்ந்து விட்டாள் கட்டிலின் விளிம்பை ஒட்டிக் கொண்டு,…
அவளை கண்கள் இடுங்க பார்த்தவன்,…. “கொஞ்சம் தாராளமா தான் உட்காருறது, விழுந்துட போற” சிறு நகைப்போடு சொல்ல,.. “ம்ம்” என்றாளே தவிர, கொஞ்சம் கூட நகர்ந்து அமரவில்லை, விளிம்பில் தான் அமர்ந்து கொண்டிருந்தாள்,..
‘கஷ்டம்’ என்று பெருமூச்சு விட்டவன்,… அவளை சில நொடிகள் ஆழ்ந்து நோக்கிவிட்டு, அவளது கரத்தை பற்ற வர,… “என்ன பண்ணுறீங்க” அடித்து பிடித்துகொண்டு எழுந்து நகர்ந்து விட்டாள் அவன் ஏதோ தன் கற்பையே சூறையாட முயன்றது போல,…
“கைய தானே பிடிக்க வந்தேன்” அவன் கூற,… “இல்ல… அது” என்று நெஞ்சு அடைக்க வார்த்தைகள் வெளிவராமல் நின்றவள்,…. “நான்… நான் உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்” மூச்சு முட்ட எப்படியோ நான்கு வார்த்தையை கோர்வையாக கூறி முடித்துவிட்டாள்…,
இந்த நான்கு வார்த்தைகள் பேசவே அவளுக்கு நாக்கு தள்ளிவிட்டது, இதில் மொத்த கதையையும் சொல்ல வேண்டும், அதை நினைக்கவே அவளுக்கு இதயம் தாறுமாறாக துடித்தது…
“சரி பேசு, ஆனா ஒன் கண்டிஷன், என்ன பேசுறதா இருந்தாலும் என் பக்கத்துல உட்கார்ந்து தான் பேசணும்” அவன் ஏதோ தன்னை கட்டிப்பிடித்து கொண்டு தான் பேசணும் என்று கூறியது போல…. “என்ன” என்று விழிகள் விரிய அரண்டு போய் பார்த்தவள்,…. “இல்ல மாட்டேன்” என்றாள்….
“என்ன மாட்டேன், உன்னை என்ன என் மடியில உட்கார்ந்து பேசுன்னா சொன்னேன், இவ்ளோ ஷாக்காகுற” அவன் கேலி புன்னகையில் கூறவும், அதற்கும் இன்னும் அகலமாக தன் விழிகளை விரித்தவள்,… “ஈஸ்வரா” நெஞ்சில் கைவைத்து விட்டாள் என்ன இப்படியெல்லாம் பேசுகிறான் என்று,….
அவளது ஒவ்வொரு எதிர்வினையையும் கண்டு அவன் தலையில் அடித்து கொள்ளாத குறையாக அமர்ந்திருந்தாலும், அவளது பாவனை, செயல் அதில் அவள் முகம் வெளிக்காட்டும் அதிர்வுகள் இதையெல்லாம் பார்க்க சுவாரஸ்யமாகவும் க்யூட்டாகவும் இருந்தது,….
அவள் இன்னும் நெஞ்சிலிருந்து கையெடுக்காமல் அதே அதிர்வுடன் தான் நின்றாள், என்ன தான் முதல் இரவில் நடக்கும் விஷயங்களை பற்றி அவளுக்கு தெரிந்திருந்தாலும், அவன் விளையாட்டாக கூறும் இந்த சின்ன விஷயம் கூட பெரிதாக தான் தோன்றியது, இதயம் படக் படக் என்று அடித்துக் கொண்டிருந்தது,…
“ஜஸ்ட் கிட்டிங் மா, நீ என்ன எதுகெடுத்தாலும் ஷாக் ஆகுற, சரி வா இப்படி வந்து உட்காரு” அவன் மெத்தையை தட்டி காட்ட,… “இ.. இல்ல… நான் இங்கேயே இருக்கேன்” என்றாள் அறையின் கதவருகில் நின்று கொண்டிருந்தவள்,…
‘இவளை’ என்று மனதில் சிரித்தவன், முகத்தை சற்று கடினமாக்கி கொண்டு…. “இப்போ நீ வரலனா நானே தூக்கிட்டு வந்து உட்கார வைப்பேன், எப்படி வசதி” அவன் கூறியதில், விழிகள் அதிர்ச்சியை காட்டி நின்றவள்,… “கிருஷ்ண கிருஷ்ணா, ஏன் இப்படியெல்லாம் பண்ணுறீங்க, நான்.. நான் அழுதுடுவேன்” என்றாள் முகத்தை அழுவது போல் வைத்து கொண்டு,…
“நீ பண்ணுற அலப்பறைக்கு நான் தான் அழனும்” என்றவன், அவளை நேராக நோக்கி,… “நான் உன்னை எதுவும் பண்ண கூடாதுனா நீயே வந்து உட்காரு, ஏதோ சொல்லணும்னு சொன்னியே சொல்லு, நாம முதல்ல பேசலாம் அப்புறம் மத்ததை பத்தி யோசிக்கலாம்” அவன் தெளிவாகவும் நிதானமாகவும் கூற, அவளும் மனம் இறங்கினாள், வந்து அமர்ந்தாள் அவனுக்கு ஆறடி இடைவெளி விட்டு,…..
‘இதுவே அதிகம்’ என்று நினைத்தவன்,… “சரி சொல்லு” என்றான்,…
“என்ன” அவள் மலங்க மலங்க விழிக்க,… “நீதானேடி ஏதோ பேசனுன்னு சொன்ன, இப்போ என்ன முழிக்கிற” அவன் சட்டென்று டி போட்டு அழைக்கவும் அவளுக்கு தான் ஒரு மாதிரியாகி போனது,…
“என்ன…? சொல்ல போறியா இல்லையா?” அவன் அதட்டவும், மற்றதை விட்டு வெளிவந்தவள்,… “ஹாங்,… அது,… அது… வந்து, அது… வந்து…. ” வெகு நிமிடங்களாக அவள் இப்படியே இழுத்து கொண்டிருக்க, பொறுமை இழந்தவன்,… “நாம நம்ம ஃபர்ஸ்ட் நைட் முடிச்சிட்டு அப்புறம் பேசலாம்” அவளை நெருங்கி வர முயல,… “இல்ல வேணாம், ப்ளீஸ்,… எனக்கு எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்களேன் ப்ளீஸ்” தன் மீது வந்து பாய்ந்து விடுவானோ என்ற அச்சத்தில் அவள் சற்று அலறிக்கொண்டே கூறினாள்,…
அவள் கூறியதை கேட்டு நிதானமாக அமர்ந்தவன்,… “எவ்ளோ டைம்” என்றான்,…
“அது” என்று திணறியவள்,…. “ஒரு மாசம்” என்றாள் தயங்கியவாறு,…
“ஒரு மாசத்துல என் பாட்டிக்கும் தாதாக்கும் குட்நியூஸ் சொல்லனுன்னு நான் ஆர்வமாக வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கேன், நீ ஒரு மாசம் டைம் கேட்கிற?” அவன் முறைக்க, திகைப்புடன் பாவமாக விழித்தாள் அவள்,…
“நாட்கணக்குலலாம் டைம் தர முடியாது, ட்வென்டி ஃபோர் ஹவர்ஸ் உனக்கு டைம் தரேன், அதுக்குள்ள மனசளவுலயும், உடலளவுளயும் ரெடியாகிக்கோ”அவன் கண்டிப்புடன் கூற,… “என்ன ஒரே நாளைலயா” என்று அதிர்ந்து பார்த்தவளிடம் அலட்சியமாக தோள்களை குலுக்கினான் அவன்,…
‘இல்ல… நான் இன்னைக்கே எப்படியாவது என்னை பத்தி என் மனசுல இருக்கிறதை பத்தி இவர் கிட்ட சொல்ல முயற்சி பண்ணணும், இல்லனா எல்லாம் கைமீறி போயிடும்’ என நினைத்தவள்,… “நான் ஒன்னு சொல்றேன்னு சொன்னேன்ல” என மெதுவாக ஆரம்பித்தாள்……
“இப்போயாச்சும் சொல்லிடுவியா?” என்று சந்தேகமாக பார்த்தவன், அவள் தலையசைகவும்,… “சரி சொல்லு” என்றான்…
“அது… வந்து,… நான்… நான்” அவள் முகத்தில் வியர்வை வழிய நெஞ்சு அடைக்க தன் மனதிலுள்ள ஏதோ ஒரு உண்மையை அவனிடம் சொல்ல முயற்ச்சி செய்து கொண்டிக்க, அவளையே ஆழ்ந்து நோக்கியவன்,…. “என்னடி இப்படி இழுக்குற, பிரக்னண்டா எதுவும் இருக்கியா?” அவன் இப்படி ஒரு கேள்வியை கேட்பான் என்று எதிர்பார்க்காதவளுக்கு கோபம் மண்டைக்கேற அவனை விழிகளில் அனலை தேக்கி முறைத்தாள்,….
அவள் விழிகளில் தெரிந்த கோபம், அப்படி எதுவும் இல்லை என்பதை அழகாய் எடுத்து சொல்லிவிட,…. “ஹப்பா” என்று நெஞ்சில் கரம் வைத்து பெருமூச்சு விட்டவன்,.. “தயவு செஞ்சு பீடிகை போடாம சொல்லுடி, பக்குன்னு ஆகிடுச்சு” என்றவனை வெட்டலாமா? குத்தலாமா? எனும் ரீதியில் பார்த்துக் கொண்டிருந்தாள் நித்யா,….
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
6
+1
1
+1

