
“என்…னைக் கொன்னுடு… கொன்னுடு. வலிக்கிதுடா… முடியல…” என வலியில் ஈனக் குரலில் முனகிய ரிஷிகேஷை அறை நடுவே ஒரு இருக்கை போட்டு அமர்ந்தவாறு வன்மத்துடன் பார்த்துக் கொண்டு இருந்தான் அவன்.
பின் அங்கிருந்த ஒரு பெட்டியைத் திறந்தவன் அதிலிருந்து சில இலத்திரனியல் சாதனங்களை எடுத்து வந்தான்.
தலை கீழாகத் தொங்கிக் கொண்டு இருந்த ரிஷிகேஷின் கரங்களை மட்டும் அவிழ்த்து விட்டவன் ஒரு பெரிய நெய்ல் கட்டரைக் கையில் எடுத்து, “இந்தக் கையால தானே பொண்ணுங்கள போகப் பொருளா பயன்படுத்தின. இந்தக் கையால தானே எனக்கு வேண்டப்பட்டவங்கள அவ்வளவு கஷ்டப்படுத்தின.” எனக் கோபமாகக் கேட்டவாறு ஒவ்வொரு விரல் நகத்தையும் தனியாகப் பெயர்த்து எடுத்தான்.
ரிஷிகேஷ் வலியில் அலற, “இப்படி தானே அந்தப் பொண்ணுங்களும் கதறி இருப்பாங்க. அதை எல்லாம் பார்த்து ரசிச்சியே. இது இப்போ என்னோட நேரம். நீ வலியில துடிக்கிறத பார்த்து பார்த்து ரசிப்பேன்.” என்றவன் நகம் இல்லாது இரத்தம் சிந்திக் கொண்டு இருந்த விரல்களில் மிளகாய்த்தூளைக் கரைத்து பூசி விட்டான்.
வலி தாங்க முடியாது அலறிய ரிஷிகேஷ், “வேணாம்…. வேணாம்… வலிக்கிது… இதுக்கு என்னைக் கொன்னு கூட போடு. ப்ளீஸ் வலிக்கிது. விட்டுடு…” எனக் கஞ்சினான்.
ஆனால் எதிரில் நின்று இருந்தவனோ தனக்குள் எரிந்து கொண்டு இருந்த கோபக் கனல் குறையாது ரிஷிகேஷின் இறுதி நொடிக்காகக் காத்துக் கொண்டு இருந்தான்.
“இன்னும் கதறு… சத்தமா கதறு. இப்படி தானே எனக்கும் இருந்துச்சு. உன்னை அவ்வளவு ஈசியா சாக விட்டுடுவேனா? நீ எப்படி பொண்ணுங்கள கஷ்டப்படுத்தினியோ அதை விடப் பல மடங்கு வலிய அனுபவிச்சு ஒவ்வொரு நொடியையும் நரகமா கழிக்கணும்.” என ஆவேசத்துடன் கூறியவன் ப்ளேடுடன் கூடிய சாட்டையை எடுத்து வந்து ரிஷிகேஷின் மீது விசிறினான்.
ரிஷிகேஷின் தலை முதல் கால் வரை வெட்டுக் காயங்கள் ஏற்பட்டன.
ஆனால் எதிரில் இருந்தவனுக்கோ இது எதுவும் திருப்தியைத் தரவில்லை.
மறு நொடியே வலியில் கதறிக் கொண்டு இருந்த ரிஷிகேஷின் நாக்கை இழுத்து வைத்து ஒரே வெட்டில் துண்டித்து விட்டான்.
வாயில் இரத்தம் கொப்பளிக்க, அலறிக் கொண்டே கொஞ்சம் கொஞ்சமாக மயங்கினான் ரிஷிகேஷ்.
ஒரு வாரமாக கொஞ்சம் கொஞ்சமாக அவன் சித்திரவதை செய்யப்பட்டுக் கொண்டு இருந்தான்..
அவன் சேர்த்து வைத்த பாவமோ என்னவோ மரணம் கூட அவனை உடனே எட்டவில்லை.
ரிஷிகேஷின் குரல் கொஞ்சம் கொஞ்சமாக அடங்குவதை வன்மத்துடன் ரசித்துப் பார்த்துக் கொண்டு இருந்தவனோ ரிஷிகேஷ் மயக்கத்திற்குச் செல்லவும் அவனைத் தொங்க விட்டு இருந்த கயிற்றை வெட்டி விட்டான்.
சட்டென கீழே விழுந்த ரிஷிகேஷின் மீது ஒரு வாளி நிறைய குளிர் நீரை ஊற்றினான் அவன்.
உடனே ரிஷிகேஷின் மயக்கம் தெளிந்து விட, பேசக் கூட முடியாமல் மீண்டும் வலியில் அலறினான் அவன்.
அதற்கு மேல் ரிஷிகேஷை விட்டு வைக்க மனம் இல்லாதவனோ ஒரு கூரிய கத்தியை எடுத்து வந்து, “இது இருக்குறதால தானே நீ பெரிய ஆம்பள ****** னு பொண்ணுங்கள சித்திரவதை பண்ண. இனிமே நீ வெறும் ****** தான்.” என்றவன் வலியில் அலறிக் கொண்டு இருந்த ரிஷிகேஷின் ஆணுறுப்பை அறுத்து எறிந்தான்.
அவ்விடமே அதிர அலறிய ரிஷிகேஷ் வலியில் துடிதுடிக்க, அவனைச் சுற்றியும் இரத்தம் ஆறாகப் பெருகி ஓடியது.
அன்று இரவு முழுவதுமே ரிஷிகேஷின் அலறல் சத்தம் தான் அவ் இடத்தை நிறைத்து இருந்தது.
நள்ளிரவில் ரிஷிகேஷின் அலறல் முற்றாக நின்று விட, முக்கால்வாசி உயிரை விட்டு இருந்தவனின் மீது மண்ணெண்ணெய்யை ஊற்றி நெருப்பு வைக்கவும் கொழுந்து விட்டு எரிந்த நெருப்பில் வெந்து மடிந்தான் ரிஷிகேஷ்.
________________________________________________
விடிகாலை நேரம் கேட்ட அழைப்பு மணி ஓசையில் உறக்கம் கலைந்து எழுந்த சகுந்தலா தன் அருகில் பரத் மட்டும் அவள் மீது காலைப் போட்டவாறு உறங்கிக் கொண்டு இருப்பதைக் கண்டு குழப்பத்துடன் சுற்றியும் பார்த்தாள்.
குளியலறைக் கதவு கூட திறந்தே இருக்க, துஷ்யந்தை எங்கும் காணவில்லை.
மீண்டும் அழைப்பு மணி ஓசை கேட்கவும் கொட்டாவி விட்டவாறு எழுந்து சென்று கதவைத் திறக்க, துஷ்யந்த் தான் வாசலில் தொப்பலாக நனைந்த நிலையில் நின்று இருந்தான்.
துஷ்யந்த் இருந்த கோலத்தைக் கண்டு பதறிய சகுந்தலா சட்டென அவனுக்கு வழி விட்டு நின்றவாறு, “என்ன துஷ்யந்த் இப்படி நனைஞ்சி போய் நிற்கிறீங்க? நைட் சொல்லாம கொள்ளாம எங்க போனீங்க?” எனக் கேள்விகளை அடுக்கினாள்.
துஷ்யந்தோ சகுந்தலாவின் முகத்தை நேர் கொண்டு நோக்காது, “சடன்னா ஒரு இமர்ஜன்சின்னு கால் வந்தது. அது தான் நைட் கிளம்பிப் போனேன். நீ தூங்கிட்டு இருந்த. அது தான் உன்ன டிஸ்டர்ப் பண்ண வேணாம்னு சொல்லல. நீ போய் தூங்கு. நான் ஃப்ரெஷ் ஆகிட்டு வரேன்.” என்றவன் அவசரமாக அங்கிருந்து சென்றான்.
ஷவரைத் திறந்து விட்டு அதன் கீழ் கண்களை இறுக மூடிக்கொண்டு நின்று இருந்த துஷ்யந்தின் முகம் கல்லென சமைந்து இருந்தது.
மெதுவாக இமைகளைப் பிரித்தவனின் விழிகளில் அவ்வளவு சிவப்பு.
முகத்துக்கு நேராக தன் கரங்கள் இரண்டையும் கொண்டு வந்து வெறித்துப் பார்த்தவனின் உள்ளம் எரிமலையாய் கொதித்தது.
கோபத்தில் சுவற்றை ஓங்கிக் குத்தியவனின் விழிகள் வடித்த கண்ணீர் ஷவரில் இருந்து விழுந்த நீருடன் சேர்ந்து காணாமல் போனது.
அடுத்து வந்த நாட்களில் பரத்தை பள்ளியில் சேர்த்து விட, சிறுவனோ சந்தோஷத்தில் வானில் பறக்காத குறை.
தினமும் பள்ளி விட்டு வந்ததும் பரிமளத்திடமும் சகுந்தலாவிடமும் அன்று நடந்த சம்பவங்கள் அனைத்தையும் வாய் வலிக்க ஒன்று விடாது கூறுவான்.
பரத்தின் புது நண்பர்கள் பற்றிய பேச்சு தான் எப்போதும்.
மாலை ஆனதும் அத் தெருவில் இருந்த சிறுவர்களுடன் சேர்ந்து விளையாடச் சென்று விடுவான்.
ஆரம்பத்தில் பரத்தின் துணைக்கு பரிமளமும் சகுந்தலாவும் மாறி மாறி சென்று வர, பரத்தினால் இப்போது மற்ற சிறுவர்களைப் போல சாதாரணமாக விளையாட முடியும் என்பதை கண்கூடாகப் பார்த்து உறுதி செய்த பின்னர் தான் பரத்தைத் தனியேயே விட்டனர்.
அதுவரை துஷ்யந்தும் சந்திரசேகரனும் கூட பரத்தை அவன் போக்கில் விட எவ்வளவு கூறியும் தாய்மார்கள் இருவரும் அதனைக் கண்டு கொள்ளவே இல்லை.
துஷ்யந்த் மருத்துவமனையில் இருந்து வந்ததும் அவனுடன் சேர்ந்து எங்காவது வெளியே கிளம்பி விடுவான்.
பரத்திற்காக வேண்டியே புதிதாக மோட்டார் பைக்கை வாங்கி இருந்தான் துஷ்யந்த்.
அதில் பரத்துக்கு ஏக குஷி.
சில சமயங்களில் சகுந்தலாவையும் அழைத்துக் கொண்டு குடும்பமாக சென்று வருவர்.
அக் கணங்களை எல்லாம் கணவன் மனைவி இருவருமே தம் மனப் பெட்டகத்துக்குள் பொக்கிஷமாக சேமித்து வைத்து இருந்தனர்.
அன்றும் அது போலவே இரவு மூவரும் ஒன்றாக கடற்கரைக்குச் சென்று இருந்தனர்.
பரத்தை நடுவில் வைத்துக் கொண்டு துஷ்யந்த் மற்றும் சகுந்தலா இருவரும் கடல் மண்ணில் கால் புதைய நடக்க, அப் பௌர்ணமி இரவில் அந் நொடிகள் மனதுக்கு இதமாக இருந்தன.
பரத் ஒரு இடத்தில் அமர்ந்து மணல் வீடு கட்டிக் கொண்டு இருக்க, அவனை விட்டு சற்றுத் தள்ளி அருகருகே அமர்ந்தவாறு தம் மகனை ரசித்துக் கொண்டு இருந்தனர் துஷ்யந்த் மற்றும் சகுந்தலா.
இருவரின் மனதிலும் காதல் கொட்டிக் கிடந்தது.
ஆனால் அதனை வெளிப்படுத்தத் தான் தைரியம் இருக்கவில்லை.
வார்த்தைகளால் வெளிப்படுத்தாவிட்டாலும் தம் செயல்களில் தம் இணைக்கு அதனை தாராளமாகவே வெளிப்படுத்தினர் இருவரும்.
இருவரின் மனதிலும் ஒருவருக்கொருவர் இருப்பதை அறிந்து இருந்தாலும் அதனை வெளிப்படுத்தி அடுத்த கட்டத்துக்கு வாழ்வை எடுத்துச் செல்ல இருவருமே முன் வரவில்லை.
சகுந்தலாவோ தான் துஷ்யந்தைக் காதலிக்கத் தகுதியானவளா என்ற ஐயத்தில் தன் மனதை மறைக்க, துஷ்யந்தோ தன்னவளுக்கு நடந்தவற்றை எல்லாம் ஜீரணிக்க அவகாசம் வேண்டும் என்று அமைதி காத்தான்.
நாட்கள் மாதங்களாக வேகமாக உருண்டோடினதே தவிர, இருவரும் தம் காதலை வெளிப்படுத்தவில்லை.
அதற்கு மேல் காத்துக் கிடந்தால் கடைசி வரை தான் சம்சாரியாகாமல் பிரமச்சாரியாகவே இருந்து விட வேண்டியது தான் என்பதைப் புரிந்து கொண்ட துஷ்யந்தே மௌனத்தைக் கலைத்தான்.
பரத்தின் மீது பார்வையைப் பதித்து இருந்த சகுந்தலாவின் இடக் கரம் மீது துஷ்யந்தின் கரம் பதியவும் சட்டென அதிர்ந்து தலையைத் திருப்பிப் பார்த்தாள் சகுந்தலா.
துஷ்யந்தின் பார்வையும் சகுந்தலாவின் விழிகளிலேயே பதிந்து இருக்க, சகுந்தலாவின் பார்வை தன்னில் விழவும் அதற்காகவே காத்திருந்தது போல தன்னவளின் கரத்தை எடுத்து தன் உள்ளங்கைகளுக்குள் புதைத்துக் கொண்டு சகுந்தலாவை நன்றாக நெருங்கி அமர்ந்தான்.
“எ…என்ன பண்றீங்க?” எனக் கேட்டாள் சகுந்தலா திக்கித் திணறியவாறு எச்சில் கூட்டி விழுங்கிக் கொண்டு.
துஷ்யந்தின் விரல் நுனி பட்டாலே சிலிர்க்கும் அவளது உடலோ இப்போது தன்னவன் இவ்வளவு நெருக்கமாக இருக்கவும் உஷ்ணம் ஏறியது.
தன்னவளின் தடுமாற்றத்தை ரசித்த துஷ்யந்தோ, “என்ன பண்ணுறேன்?” எனக் கேட்டவாறு தன் கரங்களுக்குள் இருந்த சகுந்தலாவின் கரத்தை எடுத்து சட்டென அதில் அழுத்தமாக இதழ் பதித்தான்.
சகுந்தலாவின் விழிகள் அதிர்ச்சியில் விரிய, சட்டென தன் கரத்தை இழுக்க முயன்றாள்.
ஆனால் துஷ்யந்தின் பிடியோ வலுவாக இருந்தது.
“ஏன்? பிடிக்கலயா?” எனக் கேட்ட துஷ்யந்த் மீண்டும் அதே போல் முத்தமிட, தன் உணர்வுகளை அடக்குவது பெரும்பாடாக இருந்தது சகுந்தலாவிற்கு.
“என்ன? பேச்சையே காணோம். பிடிக்கலயா?” எனக் கேட்ட துஷ்யந்தின் விழிகள் இப்போது சகுந்தலாவின் இதழ்களில் பதிந்தன.
“பி…பிடிச்…சிருக்கு…” என்ற சுகந்தலாவிற்கு வார்த்தைகளைக் கோர்ப்பதே கஷ்டமாக இருந்தது.
அதுவும் தன்னவனின் பார்வை விழும் இடத்தைக் கவனித்தவளின் தொண்டைக் குழி ஏறி இறங்க, சட்டென விழிகளைத் தாழ்த்திக் கொண்டாள்.
அதனைக் கண்டு துஷ்யந்தின் முகத்தில் கள்ளப் புன்னகை.
ஒரு கரத்தால் சகுந்தலாவின் கரத்தைப் பிடித்துக் கொண்டு மறு கரத்தால் அவளின் தாடையைப் பற்றி முகத்தை உயர்த்திய துஷ்யந்த் உணர்வுப் பெருக்கில் நடுங்கிக் கொண்டு இருந்த தன்னவளின் இதழ்களை மெதுவாக நெருங்கினான்.
சகுந்தலாவின் இமைகள் படபட என அடித்துக் கொள்ள, துஷ்யந்தின் இதழ்கள் தன் இதழ்களை நெருங்கியதும் சகுந்தலாவின் இமைகள் தன்னால் மூடிக் கொள்ள, அவளது இதழ்களோ தம் இணைக்கு வழி விட்டு லேசாகக் பிரிந்தன.
இருவரின் இதழ்களுக்கும் இடையில் நூலிழை இடைவெளியே இருக்க, திடீரென, “அப்பா…” எனக் கத்திக் கொண்டு வந்து பரத் துஷ்யந்தின் மடியில் அமரவும் தன்னிலை அடைந்து சட்டென விலகினர் இருவரும்.
ஆனால் இருவருக்குமே உடனே தம் உணர்வுகளை அடக்க முடியவில்லை.
இருவருமே பெருமூச்சுகளாக விட, தன் தாயையும் தந்தையையும் மாறி மாறிப் பார்த்த பரத், “ஏன் ரெண்டு பேரோட ஃபேஸும் பிங்கா இருக்கு? ஒருவேளை பரத்துக்கு அன்னைக்கு வந்தது போல ஃபீவரோ இருக்குமோ?” எனக் கேட்டவன் இருவரின் கழுத்திலும் கையை வைத்துப் பார்த்தான்.
துஷ்யந்த் மற்றும் சகுந்தலாவின் உடலோ உணர்ச்சிப் பெருக்கில் அவ் இரவு நேரக் குளிரையும் மீறி உஷ்ணமாக இருக்க, “ஓ மை காட்… டாடி… ரெண்டு பேருக்கும் ஃபீவர் அடிக்குது. வாங்க நம்ம போய் நர்ஸ் ஆன்ட்டி கிட்ட சொல்லி இன்ஜக்ஷன் போடலாம். அதுவும் மம்மிக்கு உடம்பு சுடுது டேடி.” என பரத் கூறவும் சகுந்தலாவின் கன்னச் சிவப்பு மேலும் அடர்ந்தன.
அதனை ஓரக் கண்ணால் ரசித்துப் பார்த்த துஷ்யந்த், “என் குட்டி டாக்டர் சொன்னா கரெக்டா தான் இருக்கும். ஆனா இன்ஜக்ஷன் எல்லாம் வேணாம். வீட்டுக்குப் போனா எல்லாம் சரியாகிடும்.” என்றான் பரத்தின் கன்னத்தைக் கிள்ளிக் கொண்டு.
“நோ டாடி. மம்மி சொல்லி இருக்காங்க ஃபீவரோட இருந்தா அப்புறம் ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணி பெரிய பெரிய ஊசியா போடுவாங்களாம். இப்போவே போனா குட்டி ஊசியா போடுவாங்க. வலிக்காது மம்மி. அப்படி வலிச்சா பரத் ஊதி விடுறேன்.” எனப் பெரிய மனிதன் போல் பரத் கண்களை உருட்டிக் கொண்டு கூறவும் அவனைப் பெற்றவர்கள் தம்மை மறந்து புன்னகைத்தனர்.
“ஓக்கே ஓக்கே… ரொம்ப லேட் ஆகிடுச்சு. பரத் நாளைக்கு ஸ்கூல் போகணும்ல. சோ ஏர்லியா தூங்கணும். நாம இப்போ வீட்டுக்கு கிளம்பலாம்.” என்ற துஷ்யந்த் பரத்தைத் தூக்கிக் கொண்டு எழுந்து விட்டு சகுந்தலா எழுவதற்காக கரத்தை நீட்டினான்.
ஒரு நொடி துஷ்யந்தின் நீட்டிய கரத்தையும் அவனது முகத்தையும் மாறி மாறிப் பார்த்த சகுந்தலா முகம் நிறைந்த புன்னகையுடன் தன்னவனின் கரத்தைப் பற்றிக் கொண்டு எழுந்தாள்.
பைக்கை நெருங்கும் வரையிலுமே இருவரின் கோர்த்து இருந்த கரங்களும் விலகவில்லை.

