Loading

ஹாய் டியர்ஸ்… எனக்கு ஹெல்த் இன்னும் சரி ஆகல.  சோ பதிவுகள் கொஞ்சம் லேட்டா தான் வரும். சாரி டியர்ஸ் இன்னும் ரெண்டு மூணு எபிசோட் ல கதை முடிஞ்சுடும் முடிஞ்சா கடைசி அத்தியாயங்கள் மொத்தமா பதிவு போடுறேன் டியர்ஸ்… கிவ் மீ ஒன் வீக் டைம்🫰🏻🫰🏻😍

——-
தலையில் கை வைத்தபடி மெல்ல மயக்கம் கலைந்து எழுந்த ஸ்வேதாவிற்கு அனைத்தும் மங்கலாக தெரிந்தது.

தலைவலியை விட உள்ளம் உலைக்களமாகக் கொதித்து அடங்கியது.

“விஷால்… கதவைத் திற!” பலவீனமாக அறைக்கதவைத் தட்டினாள்.

கத்துவதற்கு தெம்பும் இருக்கவில்லை.

எண்ணங்கள் தானாய் தனது முட்டாள்தனத்தை எண்ணிப் பார்த்தது.

———

யாமினி உயிர் பிழைக்கும் சாத்தியக்கூறு குறைவாகவே இருந்ததில் அதீத சோர்வுடன் அவனது ப்ரைவேட் பங்களாவிற்கு வந்தான் விஷால்.

அவ்வப்பொழுது அவன் அதிகம் சோர்வுறும் தினங்களில் அவனது பங்களாவினுள் நுழைந்து அவனுக்குத் தேவையானதை செய்வதை வாடிக்கையாக வைத்திருந்தாள் ஸ்வேதா.

கூடவே அவ்வப்பொழுது ஒரு யோசனையும்! சத்ய யுகாத்ரன் மீண்டும் இதயாம்ரிதாவுடன் இணைந்ததும், அவளது தொழிலை நாசம் செய்ததும் அவள் அறிந்ததே. ஆனால் விஷாலுடைய தொழிலையும் ஏன் நாசம் செய்ய வேண்டுமென்ற உறுத்தல் இருந்து கொண்டே இருந்தது.

விஷாலோ, அவள் சத்யாவுடன் பேசிவிட கூடாது என்பதில் கவனமாக இருந்தான்.

அதனாலேயே, “சத்யா உன்மேலேயும் கோபமா இருக்கான். நீயும் அவன் மேல அபியூஸ் கேஸ் கொடுத்ததா நினைச்சுட்டு இருக்கான்…” என்று தூபமிட்டான்.

அவளோ அதிர்ந்து, “ஆனா மாமாவுக்கு தெரியும் என்னைப் பத்தி. நான் கனவுல கூட அவருக்கு துரோகம் பண்ண மாட்டேன்னு…” என்று அடித்துக் கூறியதில்,

“இதோ பாருடா… உன்னை ப்ரொடக்ட் பண்ணனும்னு தான் நான் பேசிட்டு இருக்கேன். அந்த அம்ரி மறுபடியும் இதுல உன்னை இழுத்து விட்டா என்ன செய்றது. அதுவும் இல்லாம, உன்னையும் என்னையும் வச்சு பிரச்சினை செய்றது தான் அவள் பிளான்! உன் பேர் என்னோட சேர்ந்து வெளில வந்தா, உன் பேமிலில அக்செப்ட் பண்ணிப்பாங்களா?” என்றதில் அவளுக்குப் பயம் வேறு வந்தது.

“என் மாமா வாழ்க்கையை நாசம் பண்ணதுக்காக, அவளுக்கு தண்டனை கொடுக்கணும்னு நினைச்சேன் தான். ஆனா, உங்களை உண்மையா விரும்புறேன் விஷால். ஒரு பொண்ணோட வாழ்க்கையை கெடுத்துட்டோம்ன்ற எந்த குற்ற உணர்ச்சியும் எனக்கு இல்ல. ஏன்னா, அவளுக்கு தேவையான தண்டனை தான் கிடைச்சிருக்கு. நீங்க சொன்ன மாதிரி நம்ம ரெண்டு பேரும் சீக்கிரமா மேரேஜ் பண்ணிட்டா இந்தப் பிரச்சினை சால்வ் ஆகிடும்ல. சத்யா மாமாவும் உண்மையை புருஞ்சுக்கும்” என்று அவளது நிலைப்பாட்டில் உறுதியாய் கூறினாள்.

“இப்ப தான் என் கைல நிவோராவே இல்லையே. அதை மறுபடியும் அவள் கேட்டு கேஸ் போட்டுருக்கா” விஷால் எங்கோ வெறித்தபடி கூற,

“ஆனா, உங்களுக்கும் எனக்கும் எந்த வகையிலயும் தப்பு நடந்துச்சுன்னு நிரூபிக்க முடியாதே! அந்த பாயிண்ட்டை வச்சு தான அவள் வாதாடுனா.” என்றாள்.

“ப்ச்… அவளுக்கு என்னை நிம்மதியா வாழ விட கூடாது. அதான் அவளோட எண்ணமே!” என்றவனுக்கு அவளும் தன்னுடன் வாழவில்லை, தனது இளமைப் பசியைத் தீர்த்துக்கொள்ளவும் வழியில்லாது ஆக்கி விட்டதில் எரிச்சலுற்றான்.

“நிவோரா உங்க கைக்கு வரும். அப்படியே இல்லைன்னாலும் உங்களால புது தொழிலை உருவாக்க முடியாதா என்ன? எது நடந்தாலும் சேர்ந்து சமாளிக்கலாம்…” அப்போதும் உறைக்கவில்லை அவளது நேசம்.

ஆம்! விஷாலுக்கும் இன்னொரு பெண்ணிற்கும் தவறான உறவு இருப்பதாகத் தான் விவாகரத்து கோரினாள் இதயாம்ரிதா.

ஆனால், அவர்களுக்குள் எந்தத் தவறும் நிகழாததால், வேண்டுமென்றே தனது உழைப்பைச் சுரண்டுவதாக விவாகரத்து கேட்பதாக, அவன் வாதாடி இலாவகமாக நிவோராவை தனதாக்கிக் கொண்டிருந்தான்.

ஸ்வேதாவின் பெயர் வெளியில் வராதவாறு கவனமாய் பார்த்துக் கொண்டான். அதனாலேயே மற்றவர்களுக்கும் அவர்களது தனிப்பட்ட சந்திப்புகள் மிக ரகசியமாகவே இருந்தது.

அந்தச் சந்திப்புகளில் இருவருக்குள்ளும் நேசம் ததும்பிய நெருக்கமிருந்தாலும், அவனால் அவளை முழுதாய் நெருங்க இயலவில்லை.

இதைக் காரணம் காட்ட இதயாம்ரிதா தன்னை வேவு பார்ப்பாளென நன்கு தெரியும். அதனாலேயே பாரிஸ் கண்காட்சி முடியும் வரை பொறுத்திருந்தான், தான் சுத்தமானவன் என நிரூபிக்க.

அது ஸ்வேதாவிற்கும் நிம்மதியாகிப் போனது என்றாலும் நாளுக்கு நாள் அவன் மீதிருந்த நேசம் அளவில்லாது வளர்ந்தது. அவனைச் சேய் போல தன்னுள் அடைகாத்துக்கொண்டாள்.

அவள் முகம் கண்டதும் தானாய் எழும் மனநிம்மதியை அவனே அறியாது போனான்!

அவ்வப்பொழுது “சத்யா மாமாவை பக்கத்துல இருந்துட்டே பார்த்து பேசாம இருக்குறது கஷ்டமா இருக்கு விஷால்” என்று புலம்புவதை தான் அவனால் ஜீரணித்துக் கொள்ள இயலாது.

ஆனால் இந்த ஆட்டமும் முடிவிற்கு வந்தது.

சத்யாவைக் கொலை செய்யத் தேவையான திட்டத்துடன் மருத்துவமனையில் இருந்து வந்தவனை இடிந்து அமர்ந்திருந்த ஸ்வேதாவின் முகமே வரவேற்றது.

முந்தைய நாள் தான் விதுரன் மூலமாக நடந்த அனைத்தையும் அறிந்திருந்தாள்.

அவளை நேரில் சந்தித்து விதுரன் அனைத்தையும் கூறி இருக்க, அதனைத் துளியும் நம்பவில்லை அவள்.

“அந்த இதயா உன் காதுல பூ சுத்துறா. விஷால் தப்பானவர் இல்ல விதுரா. எல்லா தப்பும் அவள் தான் செஞ்சுருக்கா” எனத் தீர்மானமாகக் கூறியவளை, விதுரன் முறைத்தான்.

“அறிவுகெட்டத் தனமா பேசாத! இன்னொருத்தி ஹஸ்பண்ட் கூட அஃபேர்ல இருக்குறது ரொம்ப நல்ல விஷயம்னு நினைச்சுட்டு இருக்கியா?”

“இப்ப விஷால் அவளுக்கு ஹஸ்பண்ட்  கிடையாதே. நம்ம குடும்பத்தை நாசம் ஆக்குனவ வாழ்க்கையை நான் நாசம் பண்ண நினைச்சதுல என்ன தப்பு இருக்கு. சத்யா மாமா தான், அவள் பிஸினஸ ஒன்னும் இல்லாம ஆக்கிட்டாருல அப்பறமும் ஏன் அவகூடவே இருக்கணும்” என எரிச்சலுற்றாள்.

எத்தனை பேசியும் அவளுக்குப் புரிய வைக்க இயலாத கோபத்தில், “எப்படியோ போய் தொல. சத்யா அண்ணா கைல மட்டும் மாட்டுன அவ்ளோ தான்…” என மிரட்டி விட்டே சென்றான் விதுரன்.

அந்த இதயாம்ரிதா அனைவரையும் நன்றாக ஏமாற்றுகிறாள் என இறுமாப்பு கொண்டவளுக்கு, நேரம் செல்ல செல்ல விதுரனின் கூற்றுகளே காதினுள் எதிரொலித்து பயமுறுத்தியது.

விஷால் எப்போதும் அவனது பிரைவேட் அறைக்குள் அவளை அனுமதித்தது இல்லை.

இன்று அதனுள் செல்லத் தூண்டியது மனம்.

மனம் சொல்வதை நம்பி அவன் அறைக்குச் சென்றவள், இலக்கின்றி அவனது வார்டரோபுகளை ஆராய்ந்து விட்டு பின் அசுவாரஸ்யமாக லாக்கரைத் திறந்து பார்த்தாள்.

எப்போதும் அனைத்தையும் பாஸ்வோர்ட் போட்டு பூட்டி வைப்பவன் தான். இப்போது சத்யா இதயா மீது ஏற்பட்ட கோபத்திலும், தொழிலில் சறுக்கிய அவமானத்திலும் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் யாமினி தரும் அழுத்தத்திலும் அதனை அப்படியே விட்டுச் சென்றிருந்தான்.

அதில், சத்யாவை வெளியில் எடுக்கும்பொருட்டு வெற்றுத் தாளில் கையெழுத்து போட்டுக்கொடுத்த தாளில், அவள் சத்யா மீது வழக்கு தொடுத்திருப்பதாக எழுதி இருப்பதையும் அதற்கு சாட்சியாய் விஷாலின் கையெழுத்து இருப்பதையும் கண்டு உறைந்தே விட்டாள்.

உடலெல்லாம் உதறத் தொடங்கியது.

அப்போ விதுரா சொன்னது எல்லாம்???

செய்திருந்த மாபெரும் பிழை அப்போதே அவள் மூளையில் உறைத்தது.

விஷாலின் கார் வரும் அரவம் கேட்க அவசரமாக அனைத்தையும் உள்ளே திணித்து விட்டு வரவேற்பறைக்கு அவள் வரும்போது அவனும் வந்து விட்டான்.

“என்ன ஆச்சு பேபி?” விஷால் கேட்டதில், அவளது கண்களில் குளம் கட்டியது.

“நான் உன்னை உண்மையா லவ் பண்ணேன் விஷால். ஒரு ப்ரெண்டா ஹஸ்பண்டா அவளுக்கும் நீ உண்மையா இல்ல. உன்னைக் காதலிச்சதுக்காக எனக்கும் உண்மையா இல்ல. சத்யா மாமா மேல… நான் கேஸ் குடுத்ததா… அவள் மாத்துனான்னு தான சொன்ன.

என் வீட்டாளுங்க முகத்தை பார்க்க பயந்து சங்கடப்பட்டு வீட்டுக்கு கூட போக முடியாம, சின்ன வயசுல இருந்து என் கையைப் புடிச்சு நடக்க சொல்லிக்கொடுத்த மாமா முகத்துல முழிக்கவே மனசு வராம… என் எல்லா அழுத்தத்தையும், என் எல்லா வருத்தத்தையும் உங்கிட்ட மட்டும் தான கொட்டினேன். உன்னை மட்டும் தான நம்புனேன். எல்லாத்தையும் சரி செய்றேன் சரி செய்றேன்னு… அவளை ஏமாத்துன மாதிரி என்னையும் ஏமாத்திட்டல்ல!” நிதானமாய் அதிகம் அரற்றாமல் ஒட்டு மொத்த சோர்வையும் ஏமாற்றத்தையும் கண்களில் பிரதிபலித்துக் கேட்டவளைக் கண்டு மெல்ல அதிர்ந்தான்.

அடுத்த நொடி இறுகியவன், “சத்யா சத்யா சத்யா… ச்சை! அந்தப் பேர சொல்லி சொல்லி அவள் என்னை சாவடிச்சா. இப்ப நீயா?” என எரிச்சலுற,

“உனக்கு என்ன தான் பிரச்சினை விஷால்? அவளும் சத்யா மாமாவும் காதலிச்சதுல என்ன தப்பை கண்ட? அவங்க ஸ்டேட்டஸ் பிரச்சினையா? நீ அவளைக் காதலிச்சது தான் பிரச்சினைன்னா, அப்போ அவ்ளோ தப்பு பண்ணி என் மாமாவை அவள்கிட்ட இருந்து பிரிச்சதுக்கு, நீ அவளை ராணி மாதிரி பாத்துருக்கணும்ல… அப்போ உன் லவ் தான் வீக்!” என்று அழுத்தமாய் கூறினாள்.

அவளை கோபத்துடன் ஏறிட்ட விஷால், “ஆமாடி என் லவ் வீக் தான். நான் அவள்கிட்ட எதிர்பார்த்தது சாதாரண கல்யாண வாழ்க்கை!” என சீறிட,

“இன்னொருத்தனை லவ் பண்ணவகிட்ட சாதாரண கல்யாண வாழ்க்கையை எப்படி எதிர்பார்த்த விஷால்? எனக்குப் புரியல… நீ சத்யா மாமாவை தப்பானவன்னு போட்ரே பண்ணிட்டா, எல்லாமே மாறிடுமா? மாறாது…” சொல்லும்போதே அவள் குரல் தேய்ந்தது.

“நீ தப்பானவன்னு விதுரன் என்கிட்ட சொன்னான். நான் நம்பலையே. உன்னை உன்னை அவ்ளோ நம்புனேன். ஏன்டா, அவள் தான் உன்னை லவ் பண்ணல அவளை ஏமாத்துன சரி… நான் தான் உன் மேல உயிரையே வச்சுருக்கேனே என்னையும் ஏன்டா ஏமாத்துன? உனக்கு வலிக்காதாடா…” எனும்போதே வெடித்து அழுது விட்டாள்.

அவளது கண்ணீர் அவனை என்ன செய்ததோ, “ப்ச் ஏய் பைத்தியம் மாதிரி பேசாத. நான் உண்மையா உன்னை லவ் பண்ணேன். எக்ஸ்போ முடிஞ்சதும் நம்ம மேரேஜ் பண்ணிக்கலாம்னு சொன்னது உண்மை.

என் வாழ்க்கையை கெடுக்குறதுக்குன்னே ஒருத்தன் வந்துருக்கானே. அவன் எல்லாத்தையும் கெடுத்து விட்டுட்டான்… இப்போ கூட ஒன்னும் குறைஞ்சு போய்டல பேபி. அவனை நான் இந்த தடவை அரை உயிரா கூட விடமாட்டேன். அவனுக்கு செய்ய வேண்டியதை செஞ்சுட்டு நம்ம மேரேஜ் பண்ணிக்கலாம். ஐ நீட் யூ பேட்லி” என அணைக்க வந்தவனை பளாரென அறைந்தாள்.

“லவ்வா? இதுக்கு பேர் லவ் இல்லடா அஃபேர்!
ஒரு நல்ல பொண்ணோட வாழ்க்கையை கெடுத்து விட்டுருக்கேன். ஏற்கனவே என்ன பாவம் பண்ணோம்னு தெரியல. சத்யா மாமா ஜெயிலுக்குப் போய், என் பெரிய மாமா உயிரை விட்டு என் குடும்பமே நடைபிணமா இருக்கோம். இதுல… இந்தப் பாவம் என்னை எப்படி சுத்தி அடிக்குமோ தெரியல.

எது வந்தாலும் என்னோட போகட்டும். என்னை விட்டுடு!” எனக் கையெடுத்து கும்பிட்டவள்,

“இப்பவும் நீ சத்யா மாமாவை எதிர்க்கணும்னு நினைச்சனா அழிவு உனக்கு தான் விஷால். செஞ்ச கர்மா உன்னை என்னைக்குமே சும்மா விடாது. அந்த யாமினி அப்படியே செத்து தொலையட்டும்!” என்று அதிக அளவில் கோபத்தை கக்கி விட்டு அவனைத் தாண்டிச் செல்லப்போக, அவளது கையைப் பிடித்து இழுத்தான் விஷால்.

“என்னடி ஓவரா போற? என்னை விட்டுப் போய்டுவியா நீ. இங்க இருந்து ஒரு இன்ச் கூட நகர முடியாது” என சிவந்த விழிகளுடன் உரைத்தவனை திகைத்து விழித்தவளுக்குள் பயம் அப்பியது.

கையிலிருந்த அலைபேசியில் இருந்து அவசரமாக சத்யாவிற்கு அழைத்தாள்.

ஆனால் அவன் எடுப்பதற்குள் விஷால் அந்த அலைபேசியை கீழே போட்டு உடைத்து விட, “விஷால் ப்ளீஸ் என்னை விடு…” என்றவளின் கூற்றை காதில் வாங்காமல் அவளைத் தரதரவென இழுத்துச் சென்று ஒரு அறைக்குள் தள்ளி விட்டவன்,

“உன்னை எங்கயும் அனுப்புற ஐடியா எனக்கு இல்ல. மறுபடியும் மறுபடியும் ஏமாற நான் என்ன கேனையா. ஐ நீட் யூ அட் எனி காஸ்ட்” எனத் திட்டவட்டமாக உரைத்து விட்டு கதவை அறைந்து சாத்தினான்.

அவன் தள்ளி விட்டதில் சுவரில் முட்டிக்கொண்டவளின் நெற்றியில் இருந்து கோடாய் குருதி வழிந்தது. அவனது கூற்றை செவியில் ஏந்தியபடி மயக்க நிலைக்குச் சென்றவள் தற்போது தான் விழிக்கிறாள்!

கையில் அலைபேசியும் இல்லை. தப்பித்துச் செல்ல வழியும் இல்லாது தளர்ந்து போனாள்.

——–

பத்மபிரியாவின் முகத்தில் அதிர்வு ரேகைகள் தாண்டவமாடியது.

“விஷால் பங்களால என் அம்மா இருப்பாங்கன்னு சொல்றியா அம்ரி?” என நடுக்கத்துடன் கேட்க,

“இருக்கலாம் பத்மா. அட்லீஸ்ட் அவங்க எங்க இருக்காங்கன்னு தெரிஞ்சுக்கவாவது வாய்ப்பிருக்கு!” என்ற இதயாம்ரிதா, “நீ அங்க போ…” என சில விவரங்கள் கூறி அனுப்பி வைத்தாள்.

பின் உடனே சத்ய யுகாத்ரனுக்கு அழைக்க, அவன் சோர்வுடன் அழைப்பை ஏற்றான்.

“ஸ்வேதா கிடைச்சாளா சத்யா?”

“இல்ல… எங்கேயுமே இல்லன்னா விஷால் வீட்ல தான் இருக்கனும்” யோசனையுடன் அவன் கூற,

“ம்ம்… உன்னை டார்கெட் பண்றதுக்காக அவளை எதுவும் செய்ய வாய்ப்பில்லை சத்யா. அப்டி செஞ்சா, கண்டிப்பா மாட்டிப்பான்” என்றவளின் கூற்றை ஆமோதித்தவன்,

“அந்த நம்பிக்கையில தான் நானும் இருந்தேன். விஷயம் தெரிஞ்சதுமே அவளை பார்த்து பேசியிருக்கணும்!” எனத் தலையை அழுந்தக் கோதி கொண்டவனிடம், “நீங்க விஷால் பங்களாக்கு டைரக்டா போய்டுங்க சத்யா. எனக்கு இன்னொரு சின்ன வேலை இருக்கு. அதை முடிச்சுட்டு நான் வரேன்…” என்று அழைப்பைத் துண்டித்தாள்.

சத்யாவுக்கு இவளென்ன பிரச்சினையை இழுத்துவிடப் போகிறாளோ என்ற எண்ணம் தான்.

பத்மபிரியா விஷாலின் பங்களாவில் நுழையும் போதே ஒரு ஆடவன் அவளைத் தடுத்தான்.

அவனை இதுவரை விஷாலுடன் பார்த்ததே இல்லை.

“விஷாலைப் பார்க்கணும். நான் அவனோட ப்ரெண்ட்” என்றவளின் விழிகள் வரவேற்பறையைத் தாண்டி ஊடுருவ, “இங்க யாரையும் பார்க்க சார் அலோ பண்ண மாட்டாரு…” என்றான் அவன்.

“நான் அவனோட ப்ரெண்ட். அவனைப் பார்க்க வர்றதுக்கு பெர்மிஷன் தேவ இல்ல” என மடமடவென உள்ளே நுழைந்த பத்மபிரியாவை அவன் தடுத்து நிறுத்தியவன், அவளுக்கு பின்னே நிற்பவனைப் பார்த்து அதிர்ந்து விட்டான்.

இவன் ஏன் ஷாக் ஆகுறான் என்ற எண்ணத்தில் பத்மபிரியாவும் திரும்பி விழி விரித்தாள்.
ஸ்ரீராம் தான் நின்றிருந்தான்.

அவனுடன் அகிலும் மிதுனாவும் இருக்க, “நீங்க எப்ப வந்தீங்க?” எனப் பொதுவாய் கேட்டு வைத்தவளுக்கு பதில் கூறாமல், “என்ன மிஸ்டர் பிரதாப்… என்கிட்ட சம்பளம் வாங்கிட்டு, இங்க பார்ட் டைம் ஜாப் பாக்குறீங்களா?” என எகத்தாளமாய் வினவியதில் அந்த பிரதாப்பிற்கு வியர்த்து வழிந்தது.

“இல்ல சார். அது… சும்மா தான்” எனப் பயத்தில் ஏதேதோ உளற, அவனை அங்கேயே லாக் செய்த அகிலும் மிதுனாவும் இருவரையும் உள்ளே அனுப்பினர்.

விஷால் வீட்டில் இல்லாத நேரத்தைப் பயன்படுத்தி பங்களாவில் சோதனையைத் தொடங்கினர்.

ஸ்ரீராம் ஒவ்வொரு அறையாக பத்மபிரியாவின் அன்னை இருக்கிறாரா என சோதிக்க,

அவளோ ஒவ்வொரு வார்டுரோபாக தேடியதில், புருவம் சுருக்கினான்.

“நீ என்ன உன் அம்மாவை பீரோல தேடிட்டு இருக்க?”

“என் அம்மாவைத் தேடல. அம்ரி, சில பைல்ஸ் எல்லாம் இருக்கான்னு பார்க்க சொன்னா… அவனோட பாஸ்வோர்ட்ஸ் எல்லாம் கெஸ் பண்ண முடியும்” எனும்போதே ஒரு லாக்கரைத் திறக்க முற்பட்டு பலவித கடவுச்சொல்லை போட்டுப் பார்த்தாள்.

எதுவும் வேலை செய்யவில்லை.

அந்நேரம் மற்றொரு அறைக்கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்க, சிசிடிவியில் இவர்களைப் பார்த்து விட்ட விஷால் குரோதத்துடன் வீடு நோக்கி வந்து கொண்டிருந்தான்.

இதற்கிடையில், பிரதாப்பின் தயவில் உள்ளே புகுந்த சில ஆள்கள் அகிலையும் மிதுனாவையும் தாக்கத் தொடங்கினர்.

“இவனுங்க யாருடா தொறந்து வீட்டுக்குள்ள யாரோ மாதிரி நொழஞ்சுட்டு இருக்கானுங்க” மிதுனா கேட்கும்போதே அகிலின் தலையில் ஒருவன் கட்டையால் அடித்ததில், பேந்த பேந்த விழித்தான்.

மிதுனா பதறி “என்னடா ஆச்சு?” எனக் கேட்க,

“என்ன மிது… உனக்கு ட்வின்ஸ் இருக்கிறதா சொல்லவே இல்ல…” எனத் தள்ளாடி கீழே விழுக போக, அந்நேரம் மிதுனாவைத் தாக்க வந்ததில் சரியாக அங்கு வந்த விதுரன் தடுத்தான்.

“ஆளுக்குன்னா மட்டும் கரெக்ட் டைம்ல ஆஜர் ஆகுறானுங்க. அரை நிமிசத்துக்கு முன்னாடி வந்தா என்னடா” எனப் புலம்பியபடி மயங்கிச் சரிந்தான் அகில்.

அவனைத் தாங்கிப் பிடித்த பூமிகா, “மயக்கம் வர்றப்ப கூட எப்பிடிடா இவ்ளோ டயலாக் பேசுற” எனத் தலையில் அடித்துக்கொள்ள,

“உனக்கு ஒன்னும் இல்லல” எனக் கேட்ட விதுரனின் கரங்கள் தன்னிச்சையாய் மிதுனாவின் இடையில் பதிந்திருக்க, அவள் அவனை நிமிர்ந்து பாராது மறுப்பாய் தலையசைத்தாள்.

சத்ய யுகாத்ரன் நிலையின் தீவிரத்தை உணர்ந்து அவர்களை முதல் வேலையாக அங்கிருந்து அனுப்ப முயன்றான்.

ஆனால்,  அந்த ஆள்கள் அவர்களைத் தாக்க முற்பட, சத்யா அவர்களை அடித்து துவைத்தான்.
விதுரனும் சண்டையில் இறங்க, இங்கோ பத்மபிரியாவை சுற்றி வளைத்தனர் இருவர்.

கடவுச்சொல்லைக் கண்டறிந்து, லாக்கரைத் திறந்த பத்மபிரியா பயத்தில் ஸ்ரீராமைப் பார்க்க அவனோ கையைக் கட்டிக்கொண்டு நின்றான்.

ஒருவன் பத்மபிரியாவின் கையைப் பிடித்து இழுக்க, அவளோ தப்பிக்க முயன்றாள்.

அப்போதும் ஸ்ரீராம் அசையவே இல்லையே.

“ராம்…” அவளது அழைப்பில்,

“என்ன பிரியா எதுவும் சொல்லனுமா?” எனக் கேட்டான் காதைக் குடைந்தபடி.

“ராம் விளையாடாதா. காப்பாத்து” என்றதும்,

“உன்னைக் காப்பாத்துனா எதுவும் சொல்லுவியா?” மீண்டும் கேட்டவனிடம்,

“டேய் உன்னைக் கொல்ல போறேன்… பள்ளிக்கூடம் போற பொண்ணுட்ட ப்ரொபோஸ் பண்ணிட்டு, என்னவோ உன்னை லவ் பண்ணி ஏமாத்துன மாதிரி பில்டப் குடுக்குற?” என எகிறினாள்.

துளியும் தங்களைக் கண்டுகொள்ளாது அவர்களாக சண்டையிட்டதில் வெறியான அடியாள், “ஏய் என்னடா பாத்துட்டு இருக்க ரெண்டு பேரையும் அடிச்சுப் போடு…” என மற்றவனுக்கு உத்தரவிட்டதில், அவன் பத்மபிரியாவை அடிக்கப்போக, அவள் கண்ணை இறுக்கி மூடிக்கொண்டாள்.

ஸ்ரீராம் வேகமாய் அவர்களைத் தடுக்க வரும்போதே எங்கிருந்தோ வந்த ஒரு கட்டை பத்மப்ரியாவை அடிக்க வந்தவனின் கையை பதம் பார்த்ததில் அவன் துள்ளி விலகினான்.

ஸ்ரீராம் கடியாகி, ‘எவண்டா அவன் என் சீன்ல சீரியல் லைட்டை ஆஃப் பண்ணது’ என்ற ரீதியில் பின்னால் பார்க்க, அங்கு சத்ய யுகாத்ரன் மற்றவனையும் அடி பின்னியதைக் கண்டதும், வெறியாய் முறைத்தான்.

“பத்மா ராம் ரெண்டு பேரும் வெளில போங்க ஃபாஸ்ட்…” என்று அவன் பரபரக்க, ஸ்ரீராமோ “டேய் உனக்கு தான் ஆள் இருக்குல்ல அவளை போய் காப்பாத்த வேண்டியது தான…” என மூச்சிரைத்தான்.

பத்மப்ரியாவோ,” காப்பாத்தாம வேடிக்கை பார்த்துட்டு பேசுறான் பேச்சு” என்று கடுமையாய் அவனை முறைத்ததில்,

“நான் எதுவும் கரடியா வந்துடலையே” என அப்பாவியாய் கேட்டான் சத்ய யுகாத்ரன்.

“ஹையோ!” ஸ்ரீராமின் புலம்பலுக்கு மேலே அறைக்கதவு தட்டும் சட்டம் கேட்க,

“இது அப்போ இருந்தே கேட்குது சார்… போய் பாக்குறதுக்குள்ள இவனுங்க வந்துட்டானுங்க” என்றாள் பத்மப்ரியா.

சத்யா யோசனையுடன் அங்கு செல்ல, இங்கோ அடியாள்களை சமாளிக்க இயலாமல் திணறினான் விதுரன்.

ஒருவன் நேராய் மிதுனாவைத் தள்ளி விட்டு அடித்திட, டீ பாய்க்கு அருகே விழுந்தவள் அங்கிருந்த பேப்பர் வெயிட்டை வைத்து தன்னை அடித்தவனின் காலில் நங்கென குத்தினாள்.

அதில் அவன் சுருண்டு விழுந்திட, விதுரன் வேகமாய் வந்து அவளைத் தூக்கி விட்டு, “மிது… நீ ஓகே தான?” எனப் பதறியபடி அவளது உதட்டில் வழிந்த இரத்தத்தை கண்டு உள்ளம் உறைந்து போனான்.

வந்த கோபத்தில், மிதுனாவின் வலிக்கு காரணமானவனை வெறித்தனமாய் அடித்து விட்டு மீண்டும் அவளிடமே வந்தவன், “வலிக்குதா?” என அவனுக்கே வலிப்பது போல கேட்க,

அவளோ “ச்சே ச்சே… இல்ல! எங்களுக்குலாம் வலியே தெரியாது. வலிச்சா பணத்தால துடைச்சுக்குவோம். இல்லைன்னா அதையே கன்டென்ட் ஆக்கிக்குவோம்…” அவனது வார்த்தைகளை வைத்து அவனையே குத்தினாள்.

“உனக்கு என் மேல கோபம்னா, உன்னை நான் பேசுன தனிப்பட்ட வார்த்தையை மட்டும் வச்சு வலி குடு. அதை விட்டுட்டு, புரிதலில்லாம ஒட்டு மொத்த பணக்காரங்களையும் சேர்த்து சொன்ன வார்த்தையை உனக்கு நீயே அப்ளை பண்ணிட்டு, என்னைக் கொல்லாத மிது!”

சொல்லி முடித்து விறுவிறுவென உள்ளே சென்று விட்டவனை விழி கலங்க பார்த்திருந்தாள் மிதுனா.

ஏதோ ஒரு அழுத்தம். ஏதோ ஒரு குழப்பத்தினுள் சிக்கித் தவிக்கும் அவளது உணர்வை அவளே உணராத போது அவனுக்கு எப்படி உணர்த்த இயலும்?

பூட்டிய அறையில் இருந்து ஸ்வேதாவின் குரல் கேட்டதில் துணுக்குற்றான் சத்ய யுகாத்ரன்.

“ஸ்வே?” சத்யாவின் அழைப்பில் கத்துவதை நிறுத்தி விட்டு அதிர்ந்த ஸ்வேதாவிற்கு அழுகை முட்டியது.

“மா… மாமா!” அவளது தேய்ந்த குரலில் தானும் தேய்ந்தவனாக, “நீ எப்படி இங்க? ஓகே ஓகே காம் டவுன்…” என்றவனுக்கு என்ன பதில் கூறுவாள், முறையற்ற காதல் கொண்டேன் என்றா?

உடைந்து அழுது கரைந்தாள் அவள்.

அவள் அழும் காரணத்தைப் புரிந்து கொள்ள இயலாமல், “பயப்படாத ஸ்வே… டோரை உடைச்சுடுறேன். நீ பின்னாடி தள்ளிக்கோ. ரூம் எவ்ளோ பெருசு?” என விவரம் கேட்க,

அவளோ எதுவும் சொல்லாது அழுது கொண்டே இருந்தாள்.

“சாரி மாமா…” அது மட்டுமே அவளது கேவலின் இடையில் வெளிப்பட்டது.

“சத்தியமா நான் எந்த கேஸும் கொடுக்கல. அந்த விஷால் என்னை ஏமாத்திட்டான்…” என்றவளின் மீது ஆதங்கம் இருப்பினும்,

“உன்னைப் பத்தி எனக்குத் தெரியும் ஸ்வே” என்றவனின் கூற்றில் இன்னுமாய் உள்ளம் தாளாது அழுது தீர்த்தாள்.

அடியாள்களோ அசராமல் அவர்களுக்கு குடைச்சல் கொடுக்க, அங்கு இதயாம்ரிதாவும் வந்து விட்டாள்.

ஸ்வேதா இருக்கும் அறையை உடைக்க ஆடவர்கள் மூவருமே முயன்று கொண்டிருக்க, அந்நேரம் மயங்கி இருந்த ஒருவன் அப்போதும் பத்மபிரியாவைத் தாக்க வந்தான்.

ஸ்ரீராம் அதனை உணர்ந்து வேகமாய் வரும்போதே, இதயாம்ரிதா பூச்சாடியை வைத்து அவனது தலையில் அடித்திருந்தாள்.

பத்மப்ரியா அப்போதும் ஸ்ரீராமை முறைத்து வைக்க,

“ஏய் எருமை மாடு… உன்னை இப்ப வந்து ஸ்டண்ட் எல்லாம் பண்ண சொன்னாங்களா?” என பொருமினான்.

முதலில் புரியாது விழித்த இதயாம்ரிதா, புரிந்தபின் “நீ காப்பாத்த சிட்டா வரணும். சுகர் வந்த மாதிரி ஸ்லோ மோஷன்ல வந்தா வாய்ப்புகள் பறிபோக தான் செய்யும்!” எனத் தோளைக் குலுக்கிக் கொள்ள, பற்களை நறநறவென கடித்தான் ஸ்ரீராம்.

இம்முறை பத்மபிரியாவிற்கு புன்னகையே வந்து விட்டதில், அதனை அடக்கிக்கொண்டாள்.

“ஒருத்தனும் லாயக்கு இல்ல…” சிசிடிவி வழியே அனைத்தையும் கண்டு கொண்டு தனது ஆள்களை கடிந்து கொண்ட விஷால், “இங்க இருந்து தப்பிச்சுடலாம். ஆனா, நான் வைக்கிற வெடில இருந்து…?” என எண்ணிக்கொண்டே ஏளனப்புன்னகை வீசிக்கொண்டான்.

ஒரு வழியாய் ஸ்வேதாவை வெளியில் வரவைத்திருந்தார்கள்.

அதற்குள் அவள் மீண்டும் தெம்பில்லாது மயங்கியே இருந்தாள்.

அதுவரையில் விஷால் அங்கு வரவில்லை. அதனைக் குறித்துக் கொண்ட இதயாம்ரிதா, அவர்களுடன் மருத்துவமனைக்கு விரைந்தாள்.

“சத்யா பாத்துக்கோங்க… நான் வந்துடுறேன்” எனக் கிளம்ப போனவளின் கையைப் பிடித்தவன் “என்ன தான்டி செஞ்சுட்டு இருக்க நீ?” என்றான் அதட்டலாக.

“கவலைப்படாதீங்க கொலை பண்ணிட்டு ஜெயிலுக்கு போற ஐடியா எல்லாம் இல்ல” என சாவகாசமாக உரைத்தவளை முறைத்தான்.

“எனக்கும் இல்ல… ஆனா கண்டிப்பா சாவ வைப்பேன்!” என்றவனை தீயாய் சுட்டவள், “நான் விட மாட்டேனே…” என்றாள் அழுத்தமாக.

இவர்களது உரையாடலைக் கேட்ட விதுரன், “நீங்க கொலை பண்ணலைன்னா அவங்க நாலு பேரையும் நானே கொலை பண்ணிடுவேன்” என்று ஆஜராக,

“அவ்ளோ ஈஸியா சாக விட எனக்கு விருப்பம் இல்ல விதுரன். அவமானத்தோட வாழுற வலியை அனுபவிக்காம யாரையும் விட மாட்டேன்” எனத்திட்டவட்டமாக உரைத்தவளை சத்ய யுகாத்ரன் அமைதியாய் ஏறிட்டான்.

மிதுனாவோ, “அக்கா… அதான் சத்யா சார் அவங்களோட வீடியோஸ் எல்லாம் ரிலீஸ் பண்ணி, அவங்களை சூசைட் பண்ற அளவு கொண்டு வந்துட்டாரே” என குழப்பமாக கேட்க,

பத்மப்ரியாவும் “யாமினி பொழைக்க சான்ஸ் இல்லன்னு தான் தோணுது அம்ரி…” என்றாள்.

“அவளையே அவசரப்பட்டு காப்பாத்தாம விட்டாச்சு. அவளுக்கும் சேர்த்து இவங்க மூணு பேரும் அனுபவிக்கட்டும்!” என அசட்டையாய் உரைத்தவளை ஆழ்ந்த பார்த்த சத்யா, “என்ன தான் செய்யப் போற?” என்றான்.

“நீங்க என்ன பிளான் பண்ணுனீங்க? வீடியோ ரிலீஸ் பண்றது மட்டுமா?” என அவனிடம் கேட்க,

அதை எல்லாம் ஈஸியா பணத்தை வச்சு சரி செஞ்சுடுவாங்கன்னு தெரியும். அதுனால தான நான் ஃபேக் வீடியோ ரெடி பண்ணாம ஒரிஜினல்காக இத்தனை வருஷம் வெய்ட் பண்ணுனேன்… அந்த வீடியோஸ் ஒரிஜினல்ன்றது னால தான் ஷ்யாம் நிலோபர் ரெண்டு பேரும் சூசைட் ட்ரை பண்ணாங்க” என்றவனைத் திகைத்துப் பார்த்தாள் இதயாம்ரிதா.

இந்தச் செய்தி அனைவருக்குமே புதிது.

“அப்போ அதெல்லாம் ஃபேக் இல்லையா சார்” பத்மபிரியா அதிர்வின் விளிம்பில் கேட்க, மறுப்பாய் தலையசைத்தான்.

“விஷாலோடதுமா?” இதயாவிற்கு இப்போதும் வலித்தது.

அவளது வலி நிறைந்த வதனத்தை ஊடுருவிய சத்யா, “ம்ம்” எனத் தலையசைத்தான்.

“ எல்லாருமே அஃபேர்ல தான் இருந்தாங்க. யாமினியும் ஆல்ரெடி மேரேஜ் ஆன, பிசினஸ் மேன் கூட தான் இருந்தா.

விஷால் வேறொரு மாடலோட…அதுனால தான் எனக்கு ஸ்வேதா மேல டவுட் வரல.

ஷ்யாம் நிலோபருக்கு உண்மை தெரிஞ்சுட்டா பிரச்சினை ஆகிடும்னு பயந்து சூசைட் ட்ரை பண்ணது மாதிரி தான் நிலோபரும் பண்ணிருக்கா” என்றதில் இதயாம்ரிதாவின் முகத்தில் அருவருப்பு படர்ந்தது.

“அப்போ யாமினி யாருக்கு பயந்து சூசைட் பண்ணிக்கிட்டா?” என எரிச்சலுடன் கேட்க,

“அவளோடது சூசைட்டே கிடையாது. அவள் அஃபேர்ல இருந்த பிசினஸ் மேன் தான் அவனோட ரெப்புட்டேஷன் போய்ட கூடாதுனு, அவளை ஆக்சிடென்ட் பண்ண வச்சிருக்கான். அது ஃபேக் வீடியோன்னு சொல்லி அவன் மூவ் ஆன் ஆகிட்டான்” என்றதில் தலைவலித்தது இதயாம்ரிதாவிற்கு.

இதற்கிடையில் ஸ்வேதா கண் விழித்து விட்டதாக மருத்துவர் கூறியதில் அனைவரும் அறைக்குச் சென்றனர்.

ஆனால் அகில் மட்டும் இன்னும் கண் விழிக்காது போனதில், இவர்களின் உரையாடல்களைக் கவனியாத பூமிகா அவனிருந்த அறையையே தவிப்பாய் பார்த்திருந்தாள்.

ஸ்வேதா கண் விழித்து எழுந்து அமர்ந்ததும் சத்யா அவளை சலனமின்றி ஏறிட, அவளுக்கோ இதயாம்ரிதாவைப் பார்க்கவே சங்கடம் மேலிட்டது.

“இப்ப ஓகே வா உனக்கு” சத்யா கேட்டதும், “ம்ம்…” எனத் தலையசைத்தவளுக்கு சத்யாவின் அமைதியைக் கண்டு இதயத்துடிப்பு தாறுமாறாய் எகிறியது.

மறுநொடி அவளது கன்னத்தில் பலமாய் இறங்கியது சத்யாவின் கரம்.

அதனை எதிர்பார்த்திருந்தவள் போல தலையை தரையில் புதைத்து கன்னத்தில் கை வைத்து தேம்பிய ஸ்வேதாவைப் பிடித்துக்கொண்டான் விதுரன்.

“அண்ணா…” அவன் வருத்தமாய் பார்க்க,

“உனக்கு எவ்ளோ தைரியம் இருந்தா, கல்யாணம் ஆன ஒருத்தன் கூட… அசிங்கமா இல்ல…” என்ற சத்யாவின் உறுமலில் அவளது கேவல் அதிகமானது.

அவள் ஏதோ பேச வரும்போதே, “எனக்காக செஞ்சேன்னு சொன்ன பல்லை பேத்துருவேன்”அவளது முன்னே கர்ஜனையுடன் நின்றவனுக்கு, மனம் ஆற மறுத்தது.

‘அட்லீஸ்ட், இதயாவாவது ஒரு கட்டத்துல எல்லாத்தையும் மறந்து அவனோட வாழ்ந்துருப்பா. பழி வாங்குறேன் பேர்வழின்னு இவளோட பேரையும் சேர்த்து கெடுத்துக்கிட்டாளே’

“சாரி மாமா” கண்ணீர் திவலைகளுடன் கூறியவளை மீண்டும் அறையப் போனவனை இதயாம்ரிதா தடுத்தாள்.

“சத்யா ப்ளீஸ்… விடுங்க” என்றதில்,

“இது மட்டும் அத்தைக்கு தெரிஞ்சா என்னாகும் தெரியுமா இதயா… இவள் மேல இருந்த நம்பிக்கைல தான வீட்ல பேசி இவளுக்கு பிடிச்ச பீல்டுக்கு அனுப்பி விட்டேன். அறிவிருக்கா இவளுக்கு கொஞ்சமாவது… அட்லீஸ்ட் நீயாவது எல்லாத்தையும் மறந்து அவனோட நிம்மதியா இருந்துருப்பல்ல… நீ அவனோட இருந்திருந்தா, கண்டிப்பா மறுபடியும் உன் லைஃப்ல நான் வந்துருக்க மாட்டேன்.

இப்போ இந்தக் காதலை ஏத்துக்கவும் முடியாம, காதலை கொடுக்கவும் முடியாம, வாங்கவும் முடியாம என்னையும் சேர்த்து சாவடிச்சுட்டு இருக்க. இந்த நிலைமை வராமையாவது இருந்துருக்கும்ல” என்றவனின் குரலில் நிறைந்திருந்த ஏக்கமும் வலியும் அவளையும் சுட்டது.

ஸ்வேதாவிற்கு தான் செய்த தவறின் வீரியம் புரிந்திட, “ஏதோ ஒரு கோபத்துல பண்ணிட்டேன் மாமா… அவனை உண்மையா தான் லவ் பண்ணேன். ஆனா அவன் ஏமாத்திட்டான்” எனக் கேவியவள், “சாரி இதயா” என்று அவளைத் தயக்கத்துடன் ஏறிட்டு மன்னிப்பு வேண்ட,

இதயாம்ரிதா முயன்று ஆடவனின் கூற்று கொடுத்த காயத்தை விழுங்கினாள்.

“விடு ஸ்வேதா. எனக்குப் புரியுது…” என்றவளின்  அவளையே சுட்டுக்கொண்டிருந்த ஆடவனைத் தழுவி விட்டு அங்கிருந்து நகன்றாள். உள்ளம் நெருப்பாய் எரிந்து கொண்டிருந்தது.

————–

ரிசப்ஷன் மாலை நேரமாக ஏற்பாடு செய்திருக்க, அன்று காலையிலேயே சத்யாவின் குடும்பத்தினர் உமாவைச் சந்தித்துப் பேசினர்.

உமாவிற்கும் சத்யாவின் குடும்பத்தினரை வெகுவாய் பிடித்து விட்டது.

மாலை ரிஸப்ஷனை வைத்துக்கொண்டு, காலையில் அலுவலகத்திற்கு செல்ல முயன்றவளை, சத்யாவே அழைத்துச் சென்றான்.

“எங்க போறீங்க?” அலுவலகத்திற்கு செல்லாமல் வேறெங்கோ சென்றவனைத் திரும்பி பார்த்து கேட்டாள்.

“பைவ் மினிட்ஸ் வெய்ட் பண்ணுனா தானா தெரிஞ்சுட போகுது” என்றவனின் கூற்றில் புருவம் சுருக்கியவளின் நிமிடங்கள் மௌனத்தில் கழிய, கார் நேராக ஒரு சொகுசு பங்களாவின் முன் நின்றது.

ஐந்து படுக்கையறை கொண்ட விசாலமான வீடு. அவளது பங்களாவின் அளவிற்கு இல்லையென்றாலும் வசதியாகவே இருந்திட, அதனை யோசனையாய் பார்த்தவளிடம், “உள்ள போய் பாக்கலாமா பேபி பாஸ்?” எனக் குறுநகையுடன் கேட்டான்.

“இது யார் வீடு?”

“உள்ள போனா தெரிஞ்சுட போகுது!” என்றவன் கைப்பிடித்து அவளை உள்ளே அழைத்துச் செல்ல, வீட்டின் அமைப்பே ரசனையாய் இருந்தது.

“மாடிக்குப் போகலாமா பொண்டாட்டி?” என்றவன் அவளை மாடிக்கு அழைத்துச் செல்ல, அங்கோ ஒரு அறை முழுக்க புகைப்படங்கள் நிறைந்திருந்தது. எல்லாம் அவனையும் அவளையும் இணைத்து உருவாக்கப்பட்ட புகைப்படங்கள் தான்.

“இதுவரை நம்ம ஒரு போட்டோ கூட எடுத்து இல்ல. இனி போட்டோ எடுத்து அதை பிரேம் பண்ணிட்டு இந்த போட்டோஸ ரீ-ப்ளேஸ் பண்ணிடலாம் ஓகே வா பொண்டாட்டி…” என்றவனின் சூடான மூச்சு அவளது கழுத்தைத் தழுவியதில் சிலிர்த்து விலகினாள்.

அவளை இடையுடன் பிடித்து இழுத்தவன், இதழுடன் நெருங்கி “இந்த வீட்டுல என்னோட இருக்க ஓகேவா?” எனக் கேட்டு வைக்க, பெண்ணின் மேனி அதிர்ந்து அடங்கியது.

சிறிய வீட்டில் இருக்க முடியாது என்பதற்காக இந்த ஏற்பாடு எனப் புரிய, திருதிருவென விழித்தாள்.

“சத்யா…” அவள் பேச இயலாமல் திணற,

“என்ன இதை விட பெரிய வீடு ஓகே வா?” எனக் கேட்டதும் அவள் தவித்து மருகினாள்.

“ஏன் சத்யா இப்டி பண்றீங்க?” அவனைத் தள்ளி விட்டவளுக்கு குரல் நடுங்கியது.

“வீட்டுக்காக நான் சொல்லலைன்னு உங்களுக்கு தெரியும் தான…” உதட்டைப் பிதுக்கினாள்.

“எனக்கும் தெரியும் உனக்கும் தெரியும்  எல்லாமே… என் காதலோட அளவும், உன் காதலோட அளவும்! அப்பறமும் ஏன்?” என தீர்க்கமாய் வினவியனிடம் என்ன சொல்வதென்று தெரியவில்லை.

“நீங்களும் நானும் எல்லாத்தையும் மறந்து ஒரு வாரம் வாழ முடியும். அதுக்கு அப்பறம் ஒவ்வொரு தடவையும் நீங்க  என்னைப் பாக்கும்போது நீங்க இழந்தது மட்டும் தான் ஞாபகம் வரும்” என்றவளைக் கண்டனத்துடன் ஏறிட்டவன்,

“சோ இந்தக் காதலையும் இழக்க வைக்கலாம்னு முடிவு பண்ணிட்ட… நிறைய இழந்துட்டேன் தான். அதுக்கு எல்லாம் சேர்த்து வச்சு இதையும் இழக்க சொல்ற? பரவாயில்ல… ஒரு வாரம் ஆச்சு உனக்கு உண்மையா வாழ்வேன்னு சொன்னியே…” என சலிப்புடன் கூறியவனின் வார்த்தைகள் ஊசியாய் தைத்தது.

“அட்லீஸ்ட் இந்தக் காதலாவது நினைச்சுப் பார்க்க தேவையானதா இருக்கணும் சத்யா…” கண்ணில் நீர் தளும்ப கூறியவளிடம்,

“அப்போ சேர்ந்து வாழ்ந்தா நினைச்சு பார்க்க முடியாத அளவு வலி குடுத்துடும் என் காதல் அப்படி தானடி?” என சீறினான்.

“இல்ல நான் அப்படி சொல்லல!” எனக் கையைப் பிசைந்தவளுக்கு தன்னை எப்படி புரிய வைப்பதென்று தெரியவில்லை.

மீண்டும் அவளுடன் காரில் பயணித்தவனுக்கு கோபம் வேறு கொழுந்து விட்டு எரிந்தது. அதில் டேஷுபோர்டை காலால் எத்தி விட்டான்.

அவன் கோபம் புரிந்தும் செய்வதறியாமல் கீழுதட்டைக் கடித்தவள், சாலையில் கவனத்தைப் பதிக்க, டேஷ்போர்டில் இருந்து சில தாள்கள் கீழே விழுந்தது.

பல மாதமாய் அதிலிருந்த எதையும் சுத்தம் செய்யாமல் வைத்திருந்தாள் போலும்!

அவளும் விஷாலுமாக தேனிலவு செல்வதற்காக ஏற்பாடு செய்திருந்த விசாவும் டிக்கட்டும் பரிதாபமாய் உள்ளுக்குள் அடைபட்டுக் கிடந்தது.

அதனை சத்ய யுகாத்ரன் சலனமின்றி பார்க்க, எதேச்சையாய் அவன் புறம் திரும்பிய இதயாம்ரிதா காரை சடாரென நிறுத்தினாள். அவள் விழிகள் சிவந்து போனது.

உடனடியாய் அதனைக் கிழித்து போட்ட சத்ய யுகாத்ரன், “காரை க்ளீன் பண்ணவே இல்லையாடி. எல்லா குப்பையும் கார்ல தான் இருக்கு. அப்போ அப்போ எல்லாத்தையும் சுத்தம் பண்ணு” என இயல்பாய் ‘எல்லாத்தையும்’ என்பதை அழுத்திக் கூறினான்.

அவன் முகத்தில் ஏமாற்றமோ கோபமோ எதுவும் தென்படவில்லை.

“உங்களை விட்டு இன்னொருத்தன் கூட வாழ போய்ட்டேன். இப்போ திரும்பி நீங்க வந்ததும், உங்க கூட வாழ்ந்தா… இது காதலா சத்யா?” என நெஞ்சம் உடைய கேட்டவளிடம்,

“இது காதலான்னா எனக்குப் புரியல?” ஒற்றைப்புருவம் உயர்த்தி கேட்டான் அவன்.

“நான் மூவ் ஆன் ஆகிட்டேன் தான சத்யா”

“நானும் தான் மூவ் ஆன் ஆகிட்டேன். சோ?” கையைக் கட்டிக்கொண்டு கடுகடுத்தான்.

“ப்ரொஃபி ப்ளீஸ்!” சோர்ந்து போனாள் அவள்.

“எனக்கு இழப்பீடா என்னோட காதல் வேணும்டி. உனக்குப் புரியுதா இல்லையா? என் பழைய இதயா எனக்கு வேணும். எந்த வலியை குடுக்க உன் அப்பாவும் உன் ப்ரெண்ட்ஸும் நினைச்சாங்களோ, உண்மையாவே அந்த வலியை இப்ப நீ தான் குடுக்குற. குற்ற உணர்ச்சி எதுக்குடி உனக்கு?

உண்மையா காதலிச்சதுக்கா? வேணாம் இதயாம்மா…” என அவள் கன்னம் பிடித்து நேசம் ததும்ப கூறியதில், பெண்ணவளின் விழிகளில் நீர்த்தேக்கம்!

“முடியல சத்யா… என் ஒருத்தியால எவ்ளோ லாஸ்!”

“உன்னை சுத்தி உள்ளவங்களால தான். உன்னால இல்ல. அதை முதல்ல உன் தலைக்குள்ள ஏத்திக்க.”

“ஆனா, எல்லாமே இந்தக் காதலால தான.”

“ஊஃப்! சரி அப்ப அந்தக் காதலை கொன்னுடு” என்று சினந்தவனை ஏக்கமாய் ஏறிட்டாள்.

அவளது பின்னந்தலை முடியைக் கொத்தாக பற்றி தன்னருகே இழுத்தவன், “புதுசா காதல் பண்ணலாம். புதுக்காதல், புது நேசம், புது சுவாசம்!” என அவளது மூச்சுக்காற்றை ஆழ்ந்து சுவாசித்தவன் இதழால் இதழ் வருடினான்.

அவன் தீண்டல் அவளுள் சில்லென்ற பனியாய் இறங்க, “புதுசாவா?” என விழி விரித்தாள்.

“ம்ம்! நீயும் நானும் இப்போ ப்ரொபஸரும் இல்ல ஸ்டூடண்டும் இல்ல. சிஇஓவும் இல்ல பி. ஏ வும் இல்ல. நான் உனக்கு 9 டு 9 ஹஸ்பண்ட் . நீ எனக்கு 9 டு 9 லவர். இந்த டீல் ஓகே வா?” என்றான் கிசுகிசுப்பாக.

“அதென்ன ரெண்டு 9 டு 9?” கேட்கும்போதே இந்தப் புது காதலில் கிறங்கிடவே மனம் விரும்பியது.

“காலைல 9 ல இருந்து நைட் 9 வரை நான் ஹஸ்பண்டா இருப்பேன். நைட்டு 9 ல இருந்து காலைல 9 வரை, நீ எனக்கு ரொமான்ட்டிக் லவரா இருக்கணும்” என்று மந்தகாசப் புன்னகை சிந்தியவனின் வசீகரத்தில் தொலைந்தே போனாள் இதயாம்ரிதா.

“சரி சொல்லு… நம்ம எப்போ ஸ்விஸ் போலாம். ஹனிமூன்கு…” செவியோரம் சில்மிஷம் செய்ததில், செவ்வானமாய் சிவந்தே போனவளின் இதயமும் மெல்ல மெல்ல சீராகியது.

புதுக்காதல் மலரும்
மேகா

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 138

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
18
+1
141
+1
7
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

3 Comments