
ஹாய் டியர்ஸ் என் மேல கோபமா இருப்பீங்கன்னு தெரியும்😓 எனக்கு கைல லாப்டாப் இல்ல. போன்ல டைப் பண்ணி பழக்கமே இல்ல. சோ கொஞ்சம் பண்ணாலும் தலை வலிக்குது. வர்ற செவ்வாய் என் கைக்கு லாப்டாப் வந்துடும். வந்ததும் ரெகுலர் பதிவுகள் போடுறேன் ரொம்ப சாரி… இன்னும் ரெண்டு நாள் அட்ஜஸ்ட் பண்ணுங்க டியர்ஸ் 😘🫰🏻
____________
அறை முழுதும் மதுபான பாட்டில்கள் உடைந்து சிதறி இருக்க, இதயாம்ரிதா சத்ய யுகாத்ரனின் நெஞ்சுக்கூட்டில் பத்திரமாக அடைகாக்கப்பட்டிருந்தாள்.
அவளைக் கட்டி அணைத்தபடி லேசாய் தூக்கியவன், மூக்கோடு மூக்குரசியபடி கண்ணாடித் துண்டுகள் அவளது மேனியை தீண்டாத வண்ணம் வெளியே கொண்டு வந்திருந்தான்.
அவசரமாய் அங்கு வந்த விதுரனும் மிதுனாவும் அவர்களது இணக்கம் கண்டு விழிக்க, உமாவிற்கோ இத்தனை நேரம் வெடித்து சிதறியவள் தற்போது அமைதியாய் அவளவனிடம் அடைந்து இருந்ததில் சற்றே நிம்மதி பிறந்தது.
“உனக்கு என்ன ஆச்சு அம்ரி?” உமா கேட்டதும், மீண்டும் அவளது முகத்தில் சிறு சுருக்கம்.
சத்யா தான், “கொஞ்சம் காபி கிடைக்குமா அத்தை…” எனக் கேட்டிட,
“நான் இப்ப இங்க இருந்து போகணும் அதான” என்று நிலையைப் புரிந்து கொண்டவர், “இனி இப்படி நடந்துக்க வேணாம்னு சொல்லுங்க தம்பி அவளை… உயிரே போய்டுச்சு எனக்கு” என்று நெஞ்சைப் பிடித்தபடி அடுக்களைக்கு சென்றாள்.
மிதுனாவும் “ஏன்கா?” என ஆரம்பிக்க, சத்யா அவளை அழுத்தப்பார்வையில் ஊடுருவியதும் அடுத்த வார்த்தை பேச வராமல் சிலை போல நின்றவளை நமுட்டு நகையுடன் அங்கிருந்து அப்புறப்படுத்தினான் விதுரன்.
இந்தக் கலவரத்திற்கு காரணமானவளோ, தன்னவனின் சட்டைப் பட்டனில் சிக்கி இருந்த ஒரு நூலை ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தாள்.
“இதயா…”
“ம்ம்!” நிமிரவில்லை அவள்.
“இதயா!” இம்முறை அவனிடம் கண்டிப்பு தெறித்தது.
“கேட்குது சொல்லுங்க” என்றவளின் முகத்தை தனது முகம் நோக்கி நிமிர்த்தியவன், “இப்ப என்ன பண்ண போறோம்?” எனக் கேட்டான் மொட்டையாக.
அவளோ புருவம் சுருக்கிப் பார்க்க, “நடந்து முடிஞ்சதை சரி செய்ய ஏகப்பட்ட வழி இருக்கு… ஆனா என் காதலுக்கும் உன் காதலுக்கும் தீர்வு என்னடி?” என்றான் கட்டை விரலால் அவளது கன்னத்தை வருடியபடி.
“நடந்து முடிஞ்சதை சரி செய்ய முடியுமா ப்ரொஃபி?” அத்தனை ஆதங்கம் அவள் விழிகளில்.
“அந்த வலி காலத்துக்கும் போகாதுல… அந்த வலிக்குள்ள சிக்கிருக்குற இந்தக் காதல் இப்போதைக்கு மருந்தா தோணலாம். ஆனா அதுவே வடுவாகிட்டா?”
“சீரியஸ்லி? இந்த ப்ரொஃபியை விட பெட்டர் மருந்து வேற எங்கயும் இருக்கா இதயா… என் முத்தத்தை விட உன்னை அமைதியாக்குற இடம் தான் வேற இருக்கா? இருந்தா சொல்லு. நம்ம வேணும்னா பெட்டெர் ஆப்ஷன் சூஸ் பண்ணிக்கலாம்…” என்றான் தீவிர முகபாவனையுடன்.
அவள் உதட்டைப் பிதுக்கி அமைதியாகி விட, அவனோ மீண்டும் மென்மையாய் அவளது கழுத்தில் கை போட்டு சுற்றி வளைத்துக்கொண்டான்.
“முடிவு உன் கைல தான். பலமுறை செத்து பிழைச்சு, உயிர் போற வலியைத் தாங்கிட்டு வந்துருக்குற இந்தக் காதலை இனி ஒரு முறை தொலைஞ்சுப் போகாம பாத்துக்குறதும், மறுபடியும் துடிக்க வைக்கிறதும் உன் கைல தான் இருக்கு.
ஆனா, தெரியாம கூட உன்னை இன்னொரு தடவை இழக்குற எண்ணம் எனக்கு இல்ல. இந்தக் காதல் வடுவாகிடும்னு உன் மனசுல உறுத்தல் இருந்தா, இருக்கவே இருக்கே நம்ம கான்ட்ராக்ட்.
இந்த ஒரு வருஷத்துல நீ நினைச்ச மாதிரி இந்தக் காதல் எந்த வலியையும் மாத்தவே இல்லைன்னா, நம்ம கடந்த காலம் நம்மளை சுட்டுக்கிட்டே இருக்கும்னு தோணுனா, தென் உன் இஷ்டம். நானே உன்னை விட்டு விலகிடுறேன் எப்பவும் போல…” என்றவனின் குரலில் அழுத்தம் தெறித்தது.
“அதுவரை?” இந்த நெருக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து விடுவானோ என்ற ஏக்கம் வேறு வாட்டி எடுத்தது அவளுக்கு.
சிறுமியாய் மொத்த தவிப்பையும் முகத்தில் தேக்கி நின்றவளை கலங்கிய கண்களுடன் அள்ளி அணைத்தவன், “அதுவரை உன் பயம் அனாவசியம்னு ப்ரூவ் பண்ணிட்டே இருப்பேன்டி பாஸ் பேபி” என்றான் ஆழ்ந்த குரலில்.
“காதல் ப்ரூவ் பண்ணி புரிய வைக்கிறது இல்லையே ப்ரொஃபி?” அவன் கன்னம் பிடித்து நெற்றி முட்டினாள் சோர்வாய்.
“காதல்னாலே அதுல எல்லாமே அடக்கம்டி. அதை புரிஞ்சுக்க வரைமுறைகளும் எல்லைகளும் தேவையில்லை. சொல்லியும் புரிய வைக்கலாம். சொல்லாமலும் புரிய வைக்கலாம். கெஞ்சியும் கொஞ்சியும் மிஞ்சியும் கூட புரிய வைக்கலாம்!” என வலி நிறைந்த புன்னகை சிந்தியபடி அவள் முட்டியில் அழுத்தமாய் முட்டினான் ஆடவன்.
“குற்ற உணர்ச்சி கொல்லுது சத்யா!” நீர் தளும்பி நின்றது அவள் கண்களில்.
அதே கண்ணீர் அவனிடமும்!
“புரியுதுடா. அதுக்காக? எல்லாத்தையும் கடந்து வர தான் வேணும். தேங்கி நிக்கிறதுனால, ஏங்கி போறது இந்த நேசம் தான இதயா?” என்றவனை இயலாமையுடன் ஏறிட்டாள்.
கண்சிமிட்டி பெருமூச்சு விட்டவன், “சரி அதெல்லாம் விடு… என்ன நடந்தாலும் அதை ஃபேஸ் பண்ணி தான் ஆகணும் இதயா. கோபத்தை முகமூடியா போட்டுட்டு ஓடுறதுல எந்த பிரயோஜனமும் இல்ல.
ஃபேஸ் பண்ணு. பத்மாவுக்கு நம்ம நியாயம் செஞ்சே ஆகணும். ம்ம்? என் பாஸ் பேபி பவர்புல் பிசினஸ் வுமனா கம்பேக் குடுக்கணும்டி. அந்தத் திமிரு பிடிச்சவ கூட ஆட் ஷுட் பண்ணுனா தான் ரொமான்ட்டிகா இருக்கும்” என்று குறும்பாய் அவளைத் திசை திருப்ப, அவனது முயற்சி புரிந்து மெல்ல முறுவலித்தாள்.
சில நொடி அமைதிக்குப் பிறகு, “கிஸ் பண்ணிக்கவா… எனக்கு பவர் கிடைக்குற மாதிரி இருக்கும்!” என்றவளின் கேள்வியில் ஆசையும் தாபமுமில்லை. தவிப்பும் தயக்கமும் மட்டுமே நிரம்பி கிடந்தது.
அதையே ஆசையாய் கேட்டிருந்தால் அளவில்லாது கொடுத்து இருப்பானே!
ஏன்தான் இவள் வலிக்க வலிக்க வலியை மட்டுமே தருகிறாளோ நெஞ்சம் அளவில்லாது ஆர்ப்பரிக்க, தன்னை அடக்கிக்கொண்டவன் “உன் பவர் நான் தான்னு புரியுதே அதுக்காக ஒரு பவர்புல் கிஸ் கொடுத்துட்டா போச்சு…” என்று அவள் இதழ்களை இதமாய் இம்சித்துக் கொண்டான் ஆடவன்.
———-
அழுது அரட்டிக்கொண்டிருந்த பத்மப்ரியாவின் அருகில் சென்ற ஸ்ரீராமிற்கும் அவளது கண்ணீர் காயத்தை கொடுத்தது.
இருப்பினும், “அம்மா போட்டோ எதாவது இருக்கா?” எனக் கேட்டான்.
அவளோ அப்போதும் அழுகையை நிறுத்தாமல் இருக்க, “உன்னை தான் ப்ரியா கேட்குறேன். இப்படி உக்காந்து ஒப்பாரி வைக்கிறதுனால சல்லிப்பைசாக்கு பிரயோஜனம் இல்ல…” என்று அதட்டினான்.
அவனை நிமிர்ந்து பாராது அலைபேசியில் இருந்து அவளது தாயின் புகைப்படத்தை எடுத்துக் காட்டிட, அகிலும் பூமிகாவும் தான் ஒன்றும் புரியாமல் நின்றனர்.
சத்யா வேறு உத்தரவிட்டு இருந்ததால், “நான் என்ன செய்யணும் சார்” என்று அகில் ஸ்ரீராமிடம் வினவ,
“இந்த போட்டோவ சோஷியல் மீடியால போட்டு சர்ச் பண்ணுங்க” என மேலும் சில வேலைகளை கூறியவன் அவர்களை அனுப்பி வைத்து விட்டு பத்மப்ரியாவின் மீது பார்வையைப் பதித்தான்.
அவளது கண்ணீர் துளிகளின் கனம் அதிகரித்தது.
“ப்ரியா…” ஸ்ரீராம் அழைக்க
“குத்திக்காட்ட போற அதான? உன் ப்ரெண்ட்ஸ் பேச்சை கேட்டுட்டு என் ப்ரபோசலை ரிஜெக்ட் பண்ணதுக்கு உனக்கு இது தேவை தான்னு தான நினைக்கிற… அதான சொல்லப்போற” எனக் கையெடுத்துக் கும்பிட்டவள் “எனக்குத் தேவை… ரொம்பத் தேவை… திருப்தியா?” என்று ஒட்டுமொத்த காயத்தையும் அவனிடமே கொட்டினாள்.
அவன் கூறி கேட்டால் அதிகம் வலிக்குமென எண்ணினாளோ என்னவோ!
“என் திருப்திக்காக இவ்ளோ மெனக்கெடுறதுக்கு ரொம்ப தேங்க்ஸ். அண்ட், உன் ப்ரெண்ட்ஸ்காக தான் என் ப்ரபோசலை ரிஜெக்ட் பண்ணேன்னு உண்மையை ஒத்துக்கிட்டதுக்கு ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்! சோ, நீ என்னை காதலிச்சு இருக்க ரைட்?” என அமர்த்தலாய் உரைத்தவனை திகைத்துப் பார்த்தாள்.
“அது… அது… நான் ஒன்னும் அப்படி சொல்லல” மெல்லத் தடுமாறியவள் எழ முயற்சிக்க, இரு நாள்களாய் ஒன்றும் உண்ணாததால் தலை சுற்றியதில் எழ இயலாமல் மீண்டும் அமர்ந்தாள்.
இம்முறை மீண்டும் அவள் புறம் கையை நீட்டினான் ஸ்ரீராம்.
கீழுதட்டைக் கடித்து அவள் அமைதி காக்க, “இப்ப பிடிக்கலைன்னா, எப்பவும் கையைப் பிடிக்க நான் பக்கத்துல இருக்க மாட்டேன். லைஃப் எல்லாருக்குமே ஒரு செகண்ட் சான்ஸ் தந்துருக்கு. தர்ட் சான்ஸ் கிடைக்கற வரை விதி விட்டு வைக்காது பிரியா” என்றவனின் கூற்றில் உடைந்தவள்,
கையை இறுக்கி மூடிக்கொள்ள, சில நொடிகள் பொறுத்து இறுகிய முகத்துடன் கரத்தை பின்னிழுக்க போனவனின் கையில் வேகமாய் தனது கையைத் திணித்துக்கொண்டாள்.
“செகண்ட் சான்ஸ் கிடைச்ச எல்லாருக்கும் மனநிலை ஒரே மாதிரி இருக்குறது இல்ல ராம்…” என்றபடி எழுந்து கொண்ட பத்மபிரியா, அவனைத் தாண்டி நகரப்போக, விடுபட முயன்ற கையை சுழற்றி அவளைத் தன்னருகில் இழுத்தான்.
“மனநிலை ஒரே மாதிரி இருக்குறது இல்லைன்னா புரியல?” என்றான் கூர்மையாய்.
“விடு ராம்…” சொல்லும்போதே குரல் உடைந்தது அவளுக்கு.
“என்னைப் பார்த்து பேசு ப்ரியா.”
“விடுன்னு சொல்றேன்ல” எனும்போதும் அவனது பிடி இறுகி இருக்க, ஒரு கட்டத்திற்கு மேல் இயலாமல் அவன் மீதே முகத்தைப் புதைத்து அழத் தொடங்கினாள்.
அதை எதிர்பார்த்திருந்தவன் போல அவளை தன்னுள் வாரிச் சுருட்டிக்கொண்டதில், மெது மெதுவாய் அவளது தேம்பல்களும் குறைந்தது.
எத்தனை நேரங்களாக அப்படியே நின்றனர் என்றே தெரியவில்லை, மீண்டும் அங்கு வந்த சத்ய யுகாத்ரனும் இதயாம்ரிதாவும் அவர்களை ஒரு மார்க்கமாக பார்த்தபிறகே நிகழ்வுணர்ந்து அவனிடம் இருந்து விலகினாள் பத்மபிரியா.
ஸ்ரீராமை சந்தேகமாகப் பார்த்த இதயாம்ரிதா, “எப்படா கிளம்புவோம்னு வெய்ட் பண்ணிட்டு இருந்தியோ?” என முறைப்பாக கேட்க,
“நீ கிளம்புறதுக்காக நான் ஏன் வெயிட் பண்ணனும். என் எக்ஸ் லவர நான் எப்ப வேணா கட்டிப்பிடிப்பேன்” எனத் துடுக்காய் உரைத்தவனை இரு பெண்களும் முறைத்தனர்.
சத்ய யுகாத்ரன் தான், “மறுபடியும் சண்டைய ஆரம்பிக்காதீங்கசி என்று அதட்டிவிட்டு ஸ்ரீராமை வெளியில் அழைத்துச் செல்ல, அங்கு பத்மபிரியாவும் இதயாம்ரிதாவும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்கத் தயங்கி நின்றனர்.
“அட்லீஸ்ட் அம்மாவை காணோம்னாவது சொல்லிருக்கலாம்ல… எதுக்கும் உதவாத குடிகாரின்னு நினைச்சுட்டியோ!” இதயாவே தொடங்க,
“அம்ரி ப்ளீஸ்டி…” எனக் கேவிய பத்மபிரியா தோழியை தாவி அணைத்துக் கொண்டாள்.
கலங்கிய நெஞ்சத்துடன் “சாரி பத்து… எல்லாத்துக்கும்” என்ற இதயாவை தடுத்தவள்,
“இது தான் எல்லாத்துக்கும் மேல அதிகமா ஹர்ட் பண்ணுது அம்ரி. அந்த விஷால் நாய சும்மா விட கூடாது. இவ்ளோ செஞ்சுட்டு இன்னைக்கு கூட எனக்கு கால் பண்ணான்” எனக் கோபமாக உரைத்ததில் என்ன சொன்னான் எனப் பார்த்தாள்.
“சத்யா மேல ரொம்ப கோபமா இருக்கான். அவன் பேச்சே சரி இல்ல. இன்னும் வேற ஏதாவது ஏழரையை இழுத்துற போறான் இதயா” என்றவளுக்கு பயம் அதிகரிக்க,
“நான் பாத்துக்குறேன்” என்ற இதயாம்ரிதாவின் முகத்திலிருந்து எதுவும் கண்டறிய இயலவில்லை.
—–
“அப்பா என்மேல கோபமா இருக்காரா ராம்?” சத்யாவின் கேள்வியில் காரில் ஏறப் போன ஸ்ரீராம் லேசாய் முகம் கறுத்துப் பின் இயல்பாகி,
“அவர் கோபம் எவ்ளோ நாளைக்கு… அதை விடு. அந்த விஷால்கிட்ட கேர்புலா இரு மச்சி. இவ்ளோ செஞ்சவன் அவன் தோல்விய ஒத்துக்க மாட்டான்” என எச்சரித்தான்.
நண்பனின் நொடி நேர முக மாற்றத்திலேயே நிலையை உள்வாங்கி கொண்ட சத்யா, “அவன நான் பாத்துக்குறேன். பத்மாவோட அம்மாவை கண்டுபிடிக்கணும் ராம்…” என்றான்.
“நம்ம சைட் தேடலாம் சத்யா. ஆனா விஷாலுக்கு கண்டிப்பா அவங்க எங்க இருப்பாங்கன்னு தெரிஞ்சுருக்கும். அவன்மூலமா அப்ரோச் பண்ணுனா பெட்டர் ராம்” கூறியதில்,
“பட், இப்ப வரை இதெல்லாம் ராம்குமார் செஞ்சதா தான் இருக்கு. இதுக்கு பின்னாடி விஷால் தான் இருக்கான்னு பத்மா அவனை கார்னர் பண்ணுனா, அவளோட அம்மாவுக்கு பாதுகாப்பு இல்ல. அவங்க கைக்கு வர்ற வரைக்கும் பத்மாவை வச்சே அவனை ஹேண்டில் பண்ண வைக்கணும்” என யோசனையாய் கூறினான் சத்ய யுகாத்ரன்.
——
புயல் அடித்து ஓய்ந்தது போலான மனநிலையில் இனி செய்ய வேண்டியதை முடிவெடுத்து விட்டு வேலையில் மூழ்கினாள் இதயாம்ரிதா.
மிதுனாவை உமாவிற்கு துணையாக விட்டுவிட்டு அலுவலகம் வந்த விதுரன் நேராய் இதயாம்ரிதாவைப் பார்க்கச் சென்றான்.
மடிக்கணினியில் கவனத்தைப் புதைத்திருந்தவள், விதுரனை நிமிர்ந்து பாராமலே அவனது ஐடிகார்டை எடுத்துக் கொடுத்தாள்.
“செக்கியூரிட்டி கீழ இருந்துருச்சுன்னு குடுத்தாரு” என்றதும், அதனை வாங்காமல், “நான் இங்க இருந்து ரிலீவ் ஆகுறேன் மேம்” என்றான் மெதுவாக.
“வேற செக்கியூர்ட் ஜாப் கிடைச்சிடுச்சோ?” சற்றே நக்கலாக வினவியதில், “நான் இன்னும் எங்கயும் வேலை தேடல” என முணுமுணுத்தான்.
“தென் வாட்? சம்பளம் தராம போய்டுவேன்னு பயமா?”
“அதெல்லாம் இல்ல மேம். பெர்சனல் ரீசன்” என உள்ளே சென்ற குரலில் உரைக்க,
“ஓ! என்ன பெர்சனல் ரீசன்னு ஒரு பத்து பக்கத்துக்கு காரணம் எழுதி உன் அண்ணாட்ட குடு. அவர் அப்ரூவல் கொடுத்ததும் உன்ன ரிலீவ் பண்றதா வேணாமான்னு பாக்குறேன்” என்றதில், அவன் திருதிருவென விழித்தான்.
“சேர்மன் நீங்க தான? அண்ணாட்ட சொல்ல வேணாம் மேம்” விதுரன் சங்கடமாய் நெளிய,
“சார் ஒரு விஷயத்தை மறந்துட்டீங்களோ. அபிஷியலி நான் உன் அண்ணனோட அருமை மனைவி. சோ, என்னோட அபிஷியல் ரூல்ஸ் படி என் பெட்டர் ஹாஃப் தான், ஒளிராவோட எம். டி” என்றவளை பே வென பார்த்தவன் இ”து எப்போ இருந்து?” என்றான் தலையைச் சொறிந்து.
“கான்டராக்ட் போட்டதுல இருந்தே தான். அது தெரியாமயே உன் அண்ணன் என் கண்ணுக்குள்ள விரலை விட்டு ஆட்டி வச்சுட்டான். அதான் அவர்கிட்ட இதை பத்தி மூச்சு விடல” எனத் தோளைக் குலுக்கிக் கொண்டாள்.
பின் அவளே தொடர்ந்து, “சிசிடிவில உங்களுக்குள்ள நடந்த ஆர்கியூமென்ட் எல்லாம் பார்த்தேன். அது உங்க பிரச்சினை. இப்போதைக்கு உன்னை அனுப்புற ஐடியா எனக்கு இல்ல. போய் வேலைய பாரு…” என்று ஐடிகார்டை அவனிடம் தூக்கிப் போட, அதனை இலாவகமாக கேட்ச் பிடித்தவன், அரைமனதுடனே மீண்டும் போட்டுக்கொண்டான்.
அங்கிருந்து நகரப்போனவனை நிறுத்திய இதயாம்ரிதா, நெற்றியை நீவி விட்டு, “சத்யாவோட பேரண்ட்? ம்ம்ம்… அவரோட அம்மா எங்க இருக்காங்க?” என வினவினாள்.
“எங்க கூட தான் மேம்”
“எல்லாரும் ஜாயிண்ட் பேமிலி தான் ரைட்… நான் அவங்களை பாக்கணுமே?”
“எதுக்கு” கேட்கும்போதே அவனிடம் சிறு கலவரம்.
“எதுக்குன்னா? உன் அண்ணனை அவன் வீட்டுல இருந்து மொத்தமா விலக்கி வச்சு வேடிக்கை பாக்க போறியா?” என்றாள் கூர்மையாய்.
அக்கேள்வியில் துடித்துப் போனவன், “அவன் திரும்பி வீட்டுக்கு வர்ற நாளுக்கு தான் நான் காத்துட்டு இருக்கேன்” எனும்போதே கண் கலங்கியது அவனுக்கு.
“இவ்ளோ பாசம்னா, அவர் மேல ஒரு பழி விழும்போது எதுக்காக வீட்டை விட்டு அனுப்பனும்?” கத்தியாய் கீறியது அவளது கேள்வி.
“என் அப்பா, பெரியப்பா இறந்த துக்கத்துல என்னன்னவோ பேசிட்டாரு. அண்ணனை வீட்டை விட்டு அனுப்புனா கோபத்துல நானும் அவர்ட்ட பேசுறது இல்ல.”
“அதுனால எதுவும் மாறலைல?”
உதட்டை அழுந்த கடித்தவன் தேங்கி நின்ற கண்ணீரை அடக்கினான்.
“உன் அப்பா அவரை வெளில அனுப்பும்போது அவரோட அம்மா எதுவும் பேசலையா?” அடுத்த கேள்வி அம்பை எறிய, மறுப்பாய் தலையசைத்தான்.
“ம்ம்… ஸ்வேதா பத்தி தெரியும் தான உனக்கு? சத்யாவுக்கு தெரியுமா?” இதயாவின் கேள்வியில்
“விஷால் கூட இருந்தது அவள் தான்னு அண்ணாவுக்கு தெரியாதுன்னு தான் நினைக்கிறேன்…” என்றான் எச்சிலை விழுங்கி.
“எப்படி சியூரா சொல்ற?”
“தெரிஞ்சுருந்தா அண்ணா அவளை அடிச்சே கொன்னுருப்பாரு. அவளுக்கான கேரியர் ஸ்பேஸை கொடுக்கும்போதே கண்டிஷனா சொல்லி தான் அனுப்புனாரு… ஆனா மேம்… எனக்கு அவளை பத்தி தெரியும். இப்படியொரு இல்லீகல் ரிலேஷன்ஷிப்ல எப்பவும் அவள் இறங்க மாட்டா. அவளுக்கு அவளோட லிமிட்ஸ் தெரியும் மேம்.”
“அத்தை பொண்ணுக்கு சப்போர்ட்டா” விழிகளால் அவனை பொசுக்கினாள் இதயாம்ரிதா.
“அத்தை பொண்ணுன்னு சொல்லல மேம். சின்ன வயசுல இருந்து அவளை பார்த்து வளர்ந்தனால சொல்றேன்… பிடிவாதம் ஜாஸ்தி தான். ஆனா கண்டிப்பா தப்பு பண்ணிருக்க மாட்டா மேம்.”
“சின்ன வயசுல இருந்து தெரிஞ்சு வச்சுருக்குற மாதிரி எல்லாரும் இருக்க மாட்டாங்க விதுரன்” என கண்டித்தவள், “இவ்ளோ விஷயத்தை தெரிஞ்சு வச்சுருக்குற சத்யாவுக்கு ஸ்வேதா அங்க வேலை பாக்குறது தெரியாதா என்ன?” என்றாள் யோசனையாக.
“அவள் அங்க வேலை பாக்குறது தெரியும் மேம். அண்ணா காலேஜ்கு வேலைக்கு வரும்போது தான் அவளுக்கு நிவோரால சான்ஸ் கிடைச்சுது.
ஆனா விஷாலுக்கும் இன்னொரு பொண்ணுக்கும் தான் இல்லீகள் ரிலேஷன்ஷிப் இருந்ததா லீக் ஆச்சு. ஸ்வேதா பேர் எங்கேயும் வரல. அவள் அப்படி பண்றவளும் இல்ல மேம்” என மீண்டும் ஒரு முறை அழுத்திக் கூறினான்.
அவனை ஒருமுறை பார்வையால் ஊடுருவியவள், “ஸ்வேதாட்ட பேசுனியா?” எனக் கேட்டாள் அர்த்தமாக.
தடுமாறிப் போனவன், பதில் சொல்லாமல் நின்றான்.
“சொல்லு விதுரன்” எனும்போது சத்யா உள்ளே வர, அவனுக்கு படபடத்துப் போனது.
சத்யா இருவரையும் புருவம் சுருக்கி பார்த்து “என்ன” எனக் கேட்க,
“நத்திங் சத்யா. பி. ஆர் டீம் இன்னும் ஸ்ட்ராங் பண்ணனும் அதை பத்தி டிஸ்கஷன்
பண்ணிட்டு இருந்தோம்…” என்றாள்.
“ஓ! டிஸ்கஷன் முடிஞ்சுதா?” எனக் கேட்டதும் இதயாம்ரிதா தலையசைக்க, “விதுரா ஒரு செகண்ட் வா…” என்று அழைத்தான்.
சத்ய யுகாத்ரனின் முகத்தில் தெரிந்த சிறு பதற்றத்தில் “என்னாச்சு சத்யா?” எனக் கேட்க, “நத்திங்டி” என்றவனை நம்பவில்லை அவள்.
“என்னன்னு சொல்லுங்க” என அழுத்திக் கேட்டதும், “என் கசின் கால் பண்ணுனா திரும்ப கால் பண்ணேன் எடுக்கல. அதான்…” என விளக்கம் கொடுத்தவன், “ஸ்வேதா உனக்கு கால் பண்ணாளா விதுரா?” எனத் தம்பியிடம் கேட்டான்.
அதில் விதுரனும் இதயாவும் ஒரு நொடி ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டதை உள்வாங்கி கொண்ட சத்யாவிடம், “இ இல்லையே அண்ணா” என்றான் விதுரன்.
“உங்க ரெண்டு பேருக்குள்ள என்ன ரகசியம் ஓடுது?” சத்யா கையைக் கட்டிக்கொண்டு அமர்த்தலாய் கேட்க,
“அதெல்லாம் ஒன்னும் இல்லண்ணா” என்ற விதுரனின் பதற்றத்தைக் கண்டு,
“கமான்… எதுவா இருந்தாலும் வெளிப்படையா சொல்லிடுங்க. இடைல யாரும் புகுந்து விளையாடுற வரை வெய்ட் பண்ண வேணாம்…” எனக் கண்டித்த சத்யாவிடம்,
“இந்த டயலாக் எங்களுக்கா இல்ல உங்களுக்கே சொல்லிக்கிறீங்களா ப்ரொஃபி” கண்ணில் குறும்பு மின்னக் கேட்டவளை ரசித்து பருகியது ஆடவனின் விழிகள்.
“பொதுவா சொன்னேன்! விஷயத்துக்கு வா…” என தனது காரியத்தில் குறியாக நிற்க, விதுரன் இதயாம்ரிதாவிடம் கெஞ்சலாய் கண் காட்டினான்.
ஆனால் அவளது உயிரானவனுக்கு உண்மையாய் இருக்க வேண்டிய சூழ்நிலையாதலால், பெருமூச்சு விட்டவள், “சத்யா… விஷால் கூட இல்லீகல் ரிலேஷன்ஷிப்ல இருந்தது உன் கசின் ஸ்வேதா தான்” என்றாள் நிதானமாக.
சத்யாவின் முகத்தில் அப்பட்டமான அதிர்ச்சி.
“வாட்? அவள் அப்படி எல்லாம் பண்ண மாட்டா இதயா” சட்டென சொன்னவனை முறைத்தவள்,
“உங்க மேல கேஸ் ஸ்ட்ராங் ஆனதுக்கே அவள் குடுத்த கம்பளைண்ட்டும் ஒரு காரணம் தான?” என்றதில்,
“அதுல நிச்சயமா உண்மை இருக்காது இதயா. அவள் அந்த நேரத்துல நிவோரால வேலை பார்த்தா. எல்லாம் விஷப்பாம்புன்னு தெரியாம அவளை அங்க வேலை பார்க்க வீட்ல பெர்மிஷன் வாங்கி கொடுத்ததே நான் தான்.
என் பேர்ல பழி போட்ட மாதிரி அவளை வச்சு பிரேம் பண்ணிருக்காங்க. அப்படியும் இல்லைன்னா என்னைக் கொன்னுருவேன்னு மிரட்டி அவளை கம்பளைண்ட் குடுக்க வச்சுருக்கலாமே தவிர, நிச்சயமா அவள் அப்படி செஞ்சுருக்க மாட்டா” என்று உறுதியாக கூறியவனை தீயாய் முறைத்தாள்.
“ஓஹோ அவள் மட்டும் பண்ணிருக்க மாட்டான்னு ஸ்ட்ராங்கா சொல்ல தெரியுது. அந்த நம்பிக்கை என்மேல இல்லையோ?” அவனது சூழ்நிலை புரிந்திருந்தும் சின்னதாய் ஏற்பட்ட தாங்களில் கேட்டு விட்டவள் நாக்கைக் கடித்தாள்.
அவளது வார்த்தைகள் அவனுக்கு அதிகபட்ச காயம் கொடுத்தது அவனது முக மாற்றத்தை வைத்தே புரிந்து கொண்டவளுக்கு தவிப்பு பெருகியது.
“உன் ப்ரெண்ட்ஸ் என்னைப் பார்க்க வரப்ப, நீ தான் என்மேல கம்பளைண்ட் கொடுத்ததா சொன்னாங்கடி.
சத்தியமா ஒரு பெர்சன்ட் கூட நான் நம்பல. ஒரு வருஷத்துல ஒரு தடவை கூட நீ என்னை வந்து பார்க்கலைன்ற வருத்தம்… அண்ட், உன்னை யாரும் கம்பெல் பண்ணி மிரட்டி எந்த வேலையையும் செய்ய வைக்க முடியாதுன்னு எனக்கு சியூரா தெரியும். அதுனாலயே உன்னோட கல்யாண போட்டோ பார்த்தப்ப எனக்கு கோபம் வந்துடுச்சு. நம்பிக்கை இல்லாம போறது வேற, கோபம் வேற இதயா…” என்றவனை நிமிர்ந்து பாராது அமர்ந்திருந்தாள்.
அவளை உணர்வின்றி ஏறிட்டவன், “விதுரா ப்ரொடக்ஷன் டீம் மெம்பர்ஸ மீட்டிங் ஹாலுக்கு வரச் சொல்லு” எனப் பணித்தான்.
விதுரன் இதயாவை வருத்தமாய் பார்த்தபடி நகர்ந்ததும் “ப்ராடக்ட்ஸ் கன்சிஸ்டன்சி பத்தி தெளிவு குடுக்கணும் இதயா. பேஸ் பார்முலால ஏதோ சிக்கல். உனக்கு தெரிஞ்சுருக்கும் தான?” எனக் கேட்டான்.
“தெரியும்” முணுமுணுத்தாள்.
“ஏன் சொதப்புதுன்னு சார்ட் அவுட் பண்ணுனியா?”
“பழசையே பிடிச்சு தொங்கிட்டு இருந்தா சொதப்பும் தான் போல”
“இந்த டயலாக் ப்ராடக்ட்கு சொல்றியா உனக்கு நீயே சொல்லிக்கிறியா?” அவளை போலவே அழுத்தம் திருத்தமாக கேட்டவனிடம், “பொதுவா தான்…” என்றதும்,
“புரிஞ்சா சரி தான்” என அவன் நகரப்போக, வேகமாய் எழுந்து அவனைப் பின்னிருந்து கட்டிக்கொண்டாள்.
“சாரி!” மெல்லிய குரல் வந்தது அவளிடமிருந்து.
அதில் கனிந்தவன், வேகமாய் திரும்பி அவளை இடையோடு இழுத்து அணைத்தான்.
“எப்ப பாரு… வார்த்தையெல்லாம் ஈட்டி மாதிரி தான் வருது” அவனது மீசையைத் திருகி குறைப்பட்டாள் இதயாம்ரிதா.
“அங்க மட்டும் என்ன காதல் அம்பா வருது?” என செல்லமாய் முறைத்தவன், சிசரி உன் பிளான் என்ன?” எனக் கேட்டான் மீண்டுமாக.
“என்ன பிளான்?”
“விஷால் சம்பந்தமா!”
“பெருசா பிளான் எதுவும் இல்ல…” சொல்லி விட்டு அவனது மீசையில் புதைந்திருந்த மேலுதட்டில் மென்முத்தம் கொடுத்து வைத்தாள்.
ஜில்லென மேனி ஆர்ப்பரிக்க, “ஏய் மைண்ட மாத்ததடி!” போலியாய் கண்டித்தவனிடம் சின்னப் புன்னகையை கொடுத்தாள்.
“எதுவா இருந்தாலும் என்கிட்ட சொல்லிட்டு செய். நிவோரா உன் கைக்கு கிடைக்க கேஸ் போயிட்டு இருக்கு. பட் அது வருஷக்கணக்கா இழுத்துடும் போலயே?” இம்முறை அவன் விரல்கள் கழுத்தில் தழுவிக்கொண்டிருந்த மாங்கல்யத்தை வருடச் சென்று பின் கழுத்தின் வழவழப்பில் சிக்கிக்கொண்டது.
அவளோ சிணுங்கி குறுகி, “கூசுது ப்ரொஃபி” என்று தள்ளி விடுவது போல பாவனை செய்து மீண்டும் அவனிடமே கட்டுண்டாள்.
“டோன்ட் வொரி. அது சீக்கிரமே கைக்கு வரும். குடுக்க வேண்டியதை குடுத்தா தீர்ப்பு நமக்கு சாதகமா வரப்போகுது” தற்போது ராம்குமாரின் மகளாகவே பேசியவளை அவன் காட்டமாக பார்க்க,
“இதெல்லாம் இப்ப கட்டாயமாகிடுச்சு பேராசிரியர் அவர்களே!” என்று கன்னம் கிள்ளினாள்.
“அவ்ளோ சீக்கிரமா வாங்கி என்ன செய்ய போற? அது தான் எனக்குப் புரியல. அதையும் மெயின்டைன்ட் பண்ண போறியா?” அவளிடம் இருந்து விஷயத்தைப் பிடுங்க எண்ணினான்.
“பிளான் இல்ல ப்ரொபி இப்போதைக்கு!” கண் சிமிட்டி அவனிடம் இருந்து நகன்றவள்,
“மீட்டிங்கு லேட் ஆச்சு போகலாமா?” என இரு புருவம் உயர்த்திக் கேட்க, “எதுவா இருந்தாலும் சொல்லிட்டு செய்” என்றவனுக்கு எவ்வித பதிலும் அளிக்கவில்லை அவள். அதுவே அவனுக்கு கலக்கத்தையும் இணைந்தே கொடுத்தது.
———
இரவு வெகு நேரமாய் உறக்கம் வராமல் தவித்த இதயாம்ரிதா, டிராயரைத் திறப்பதும் மூடுவதுமாக தூக்க மாத்திரையைத் தேடிக் கொண்டே இருந்தாள்.
குளியறையில் இருந்து முகத்தைத் துடைத்தபடி வந்த சத்ய யுகாத்ரன் மனையாளின் செயலை ஓரக்கண்ணில் வருடியபடியே, “என்னடி பொண்டாட்டி செய்ற?” எனத் தெரிந்து கொண்டே கேட்டான்.
“என்னன்னு உனக்குத் தெரியாதா?” என எரிச்சலுற்றவள், “எனக்கு டேப்லட் வேணும். ஐ நீட் டூ ஸ்லீப்சி என்றாள்.
கடந்த இரவுகளும் அவனை நெருங்கவிடவில்லை அவள். மற்ற நேரங்களில் அவனது நெருக்கத்தை விரும்புபவள், அவனது நெருக்கத்தின் பலனாய் வரும் உறக்கத்தை விரும்பவில்லை போலும்.
சத்யாவிற்கு காரணம் புரியவில்லை என்றாலும் அவளுக்கு அதிக அழுத்தம் தராமல் அரை மாத்திரையை கொடுத்து உறங்க வைத்தான்.
இன்று அதையும் கொடுக்க மனம்வரவில்லை. சீராட்டி உறங்க வைக்க அவனிருக்கும்போது ஏனிப்படி மருகுகிறாள் என்ற ஆதங்கம் தான்.
“தினமும் மாத்திரை போட வேணாம் இதயா… கண்ணை மூடி தூங்கு” என்று விட்டு வெளியில் சென்றவனை மூச்சு முட்ட முறைத்து வைத்தவள், கோபமாய் படுத்துக் கொண்டாள்.
உறக்கம் தான் வரவேணாம் என்றது.
சிறிது நேரத்தில் அறைக்குள் வந்தவனின் கையில் பால் க்ளாஸ் இருக்க, கருவிழிகளை அங்கும் இங்கும் உருட்டிக் கண் மூடி படுத்திருந்தவளை எழுப்பினான்.
“இதைக் குடிச்சுட்டுத் தூங்கு இதயா” அவனது குரலில் இன்னும் இறுக்கமாய் கண்ணை மூடிக் கொண்டாள்.
“எனக்கு வேணாம்…”
“உனக்கு வேணாம்னா நான் குடிப்பேன்.”
“குடிச்சுக்கோங்க” தெனாவெட்டாய் பதில் உரைத்தவளைக் கண்டு மர்மப்புன்னகை வீசியவன்,
“நிஜமா நான் குடிச்சுடுவேன்” என எச்சரிக்க, “குடிச்….சுக்… கோடா” என்று அழுத்திக் கூறினாள்.
“ரைட்டு!” என்ற குரல் மட்டும் கேட்க சில நொடிகள் அவனிடமிருந்து எந்த பதிலும் இல்லை.
லேசாய் கண் விழித்துப் பார்க்க எத்தனித்தவளின் இதழ்கள் அவளுணரும் முன்னே மென்மையாய் சிறை செய்யப்பட்டதில் பதறினாள்.
விட்டத்தைப் பார்த்து படுத்திருந்தவளின் இரு பக்கமும் கால் போட்டு அவளுக்கு வலிக்காதவாறு அமர்ந்திருந்தான்.
அவன் அதரங்கள் சேர்த்து வைத்திருந்த பால் எல்லாம் அவள் வயிற்றில் இறங்கி கொண்டிருந்தது.
அவளது மறுப்புகள் எல்லாம் அவனிடம் செல்லுபடியாகவில்லை.
சத்யாவின் மார்பை அடித்து தள்ளிய பாவையின் கரங்கள் அவனது கரத்தினுள் சிக்கித் துன்பப்பட்டது.
ஒரு கையால் அவளது இரு கையையும் பிடித்துக் கொண்டவன், மீண்டும் ஒரு மிடறு பால் அருந்திக்கொண்டு மீண்டும் அவள் இதழ்களை முற்றுகையிட, சத்யா நோ என்ற வார்த்தைகள் பாலில் இனிப்பாய் கரைந்தே போனது.
முழு க்ளாஸையும் கொடுத்து முடித்தபிறகே அவள் கரங்களுக்கு விடுமுறை அளித்தவன், அவளிடம் இருந்து விலகி விட்டு, பெண்ணின் இதழீரத்தின் மிச்சத்தையும் மிச்சமின்றி துடைத்துக்கொண்டான்.
குறும்பு மின்னியது அவனது கண்களில்.
“என்ன ப்ரொஃபி” அவளும் வாயைத் துடைத்து விட்டு சிணுங்கினாள்.
“நீ வேணாம்னு சொன்னதுனால நானே குடிச்சுட்டேன் பொண்டாட்டி” மோகம் வழிந்தோடியது அவனிடம்.
“ச்சீ!” வெட்கம் தளும்பிட முகத்தை மூடிக்கொண்டு மறுபக்கம் திரும்பிப் படுத்துக்கொண்டாள்.
மேனி முழுக்க நாணத்தின் சின்னம். அதில் ஆடவனின் தாபமும் தூண்டப்பட, இதயாம்ரிதாவின் பின்னங்கழுத்தில் மீசையால் உரசினான்.
“சத்யா…” சத்தம் வராது முனகியவளின், முதுகிலும் தடம் பதிக்க தொடங்கினான் அவன்.
நெளிந்து துள்ளிய இதயாம்ரிதா, உருண்டு தள்ளி படுத்து அவன் புறம் திரும்பினாள்.
இருவருக்கும் இடையில் ஓரடி இடைவெளி இருக்க, “வா!” ஒற்றை விரல் நீட்டி நேசம் வழிந்தோட அழைத்தான் சத்ய யுகாத்ரன்.
“ஒரு வருஷம் கான்டராக்ட் தான? பேபி வந்துட்டா அதை வச்சு என்னை லாக் பண்ணலாம்னு திட்டமோ?” சின்ன கேலி அவளிடம்.
அதில் அவனிடமும் சிறு புன்னகை மலர, “ஒரு வருஷம் பேபி வராம பாத்துக்கலாம்…” அவளது புறங்கையை வருடினான்.
அவளும் நெஞ்சம் முழுதும் அழுத்திக் கொண்டிருந்த காதலின் வெளிப்பாடாய் அவனது முகத்தையே ரசித்திருந்தாள். இருவரது விழிகளும் ஒன்றோடு ஒன்று பின்னி பிணைந்திருக்க,
“உன்னைத் தூங்க வைக்க நான் இருக்கேன்ல? கிவ் மீ அ சான்ஸ் பொண்டாட்டி” என்றான் மென்மையாய்.
சட்டென முகம் மாறிப்போனாள் அவள்.
“வேணாம் சத்யா” இறுகிய முகத்துடன் மறுத்தவளை அடிபட்ட பார்வை பார்த்தான்.
“நான் வேணாமாடி?” ஏக்கம் கொன்றது இருவரையும்.
“நீங்க வேணும். ஆனா, நீங்க என்னைத் தூங்க வைக்க பழக்க வேணாம். டைம் குடுங்க நானே பழகிக்கிறேன்” என்றாள் உணர்வற்று.
“ஏன்?”
அவளிடம் கனத்த மௌனம்.
“ஏன்னு கேட்டேன் இதயா…” மீண்டுமாக அவன் கேட்க,
“ப்ச் என்ன ஏன்? இத்தனை வருஷத்துல உங்க பக்கத்துல மட்டும் தான் மாத்திரை இல்லாம தூங்க முடியுதுன்னு இருந்தா பரவாயில்லையே சத்யா. யார் கட்டிப்பிடிச்சாலும் எனக்கு தூக்கம் வரும்…” கீழுதட்டைக் கடித்து வெறுமையாய் உரைத்தவளின் கூற்று சில கணங்கள் அவனுக்குப் புரியவே இல்லை.
புரிந்த பின் அவன் முகம் சுண்டிப் போவதை பார்க்க விருப்பமற்று மறுபுறம் திரும்பிப் படுத்துக் கொண்டாள். விழியோரம் துளி நீரின் தடம்.
புருவம் சுருக்கி படுத்திருந்த சத்ய யுகாத்ரன் அவளது முதுகையே வெறித்து யோசித்தான்.
சட்டென மூளையில் மின்னல் வெட்டியது.
விஷால்!
குடிப்பழக்கத்திற்கும் மாத்திரைப் பழக்கத்திற்கும் காரணம் அவன் என்றாலும் அதனை மறக்க வைத்ததன் காரணமும் அவன் தானே!
அவனது அரவணைப்பில் அவளது தூக்கமின்மையும் சரி செய்யப்பட்டிருக்கிறது என்பதை புரிந்து கொண்டவனுக்கு, அதே போலான தனது அரவணைப்பை ஏற்க அவளது நெஞ்சம் புழுவாய் துடிக்கிறது என்பதையும் உணர்ந்து அவனும் அதே போல துடித்தான்.
புது காதல் வளரும்
மேகா
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
26
+1
141
+1
3
+1
4
⬅ Prev Episode
31 – புதுக்காதல் புனைந்திடவா (9 to 9 husband)
Next Episode ➡
33 – புதுக்காதல் புனைந்திடவா (9 to 9 husband)
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


Sis inime vaathu olunga chapters sikkiram release pannunga pls and take care.
சத்யா இதயா பழசை மறக்க நேரம் வேண்டும்.
Yethu visha idhayavum kati pudichu thungunahla ah
Yenathu ithu onum purila ah…..
Idhayavode sister story solluva andhe part read pannunga puriyum