Loading

“சரி நிஹாரிகா மேல தானு இருக்கு எந்திரிங்க…. “

“உங்களுக்கு நான் சொன்னது புரியல்னு நினைக்குறேன்…. என் பொண்ணு நிஹாரிகா மேல இருக்கு” என்று அழுத்தி கூறினார்….

“என்ன சொல்றிங்க” என்று அதிர்ந்து போய் நின்று விட்டார் சாந்தா….

 “இத்தனை வருசம் உங்க பொண்ணுன்னு நீங்க நினைக்குற நிஹாரிகா உங்க பொண்ணே இல்லன்னு சொல்றேன், என் பொண்ணுன்னு சொல்றேன், எனக்கே இது போன மாசம் தான் தெரியும்” என்று கூறும் போதே “இல்ல இல்ல நிஹா என் பொண்ணு” என்று கூறிக் கொண்டே மயங்கி விழுந்து விட்டார் சாந்தா …..

 அவரை தண்ணீர் தெளித்து எழுந்திரிக்க வைக்கும் முயற்சி பலனற்று போனது…. மருத்துவமனையில் அனுமதிக்க பட்டார் சாந்தா…. வசும்மா மற்றும் நிதிஷுக்கு தகவல் தர பட்டது…. நிதிஷ் கல்லூரியில் இருந்தும் வசும்மா வீட்டில் இருந்தும் ஒரே நேரத்தில் மருத்துவமனை வந்தனர்….

 அந்த நேரம் சாந்தாவும் மயக்கத்தில் இருந்து எழுந்தார்…. வசும்மாவை பார்த்ததும் “அக்கா நீ சொல்லு நிஹா என் பொண்ணு தானு அந்த மேனேஜர் அவர் பொண்ணுன்னு சொல்றாரு”….

நிஹாவும் மருத்துவமனையில் தான் இருந்தாள்…. ஆனால் சாந்தாவின் அருகில் கூட வரவில்லை…. சாந்தா அவளை தன் அருகில் அழைத்தார்….”நிஹா ம்மா அம்மா கிட்ட வா டா” என்று அழைத்தார்… ஆனால் அவள் போகவே இல்லை… மேனேஜர் பாலய்யா அருகில் நின்று கொண்டாள்…

வசும்மா சாந்தாவிடம் “எல்லாத்தையும் வீட்டுல போய் பேசிக்கலாம்” என்று கூறி கொண்டு இருக்கும் போதே நிஹா “இல்ல பெரியம்மா நான் இவங்க பொண்ணு இல்ல… இவங்க பொண்ணு பொறக்கும் போதே இறந்து தான் பொறந்துச்சி… இது உங்களுக்கு இந்நேரம் தெரிஞ்சி இருக்கும்னு நினைக்குறேன்… இப்பயே பேசிடலாம் பெரியம்மா” என்று கூறினாள்….

 “என்ன நிஹா சொல்ற உனக்கு யார் அப்படி சொன்னது அதுலாம் பொய் நீ ஜனகராஜ் சாந்தாவோட பொண்ணு தான்” என்று சாந்தா அழுது கொண்டே கூறினார்….

 “இல்லை இல்லை இல்லை அந்த ஆள அப்பான்னு சொல்லாத” என்று கத்திக் கூறினாள் நிஹா….

 நர்ஸ் அங்கே வந்து “இங்க கத்த கூடாது… இவங்கள டிஸ்சார்ஜ் பண்ணலாம்…. இந்தாங்க பில் கட்டிட்டு கூட்டிட்டு போங்க….. பிபி கொஞ்சம் ஜாஸ்தி ஆயிடுச்சி” என்று கூறி விட்டு சென்று விட்டார்….. நிதிஷ் பில் கட்ட சென்று விட்டான்…

 பாலய்யா வசும்மாவிடம் வந்து “அம்மா என்ன நடந்ததுனு நான் மதியம் தெளிவா சொல்றேன்…. என் மனைவியை நான் இப்ப பாக்க போகணும்” என்று கூறிவிட்டு நிஹாவிடம் “தங்கம் நீ என்ன டா பண்ற”…. என்று கேட்டார்

“அப்பா நான் உங்க கூடயே வரேன்” என்று கூறி வசும்மாவிடம் மட்டும் கூறி விட்டு சாந்தாவைப் பார்க்காமல் பாலய்யாவுடன் சென்று விட்டாள்….

 “அக்கா என் பொண்ணு ஏன் அந்த மேனேஜர் கூட போறா… அவ என் பொண்ணு தானு அக்கா” என்று புலம்பிக் கொண்டே இருந்தார்….

“இப்ப நீ ரெஸ்ட் எடு வீட்டுக்கு போய் பேசிக்கலாம்” என்று கூறிவிட்டு நிதிஷ் வந்ததும் அவரை அழைத்துக் கொண்டு தன்னுடைய வீட்டுக்கே சென்று விட்டார்…. வசும்மா வரும் போது ஆட்டோவில் வந்ததால் இப்போது நிதிஷின் காரிலேயே சாந்தாவுடன் சென்று விட்டார்…

 எக்ஸாம் முடித்து இன்று கல்லூரி அரை நாள் தான்…. அரியர் மாணவர்களுக்கு எக்ஸாம் இருப்பதால்…. அதனால் நிவேதாவை அங்கேயே சாப்பிட வைத்துவிட்டு பிரியா அவளை சிஏ கோச்சிங் கிளாஸ் விட்டுட்டு அவள் மட்டும் வீட்டுக்கு வந்தாள்….

இவ்வாறு செய்யுமாறு நிதிஷ் பிரியாவுக்கு செய்தி அனுப்பி இருந்தான்…. அவளும் எந்த கேள்வியும் கேட்காமல் அவன் சொன்னவாறு செய்து விட்டு வீட்டுக்கு திரும்பினாள்…. வரும் வழியில் எல்லாம் அதே யோசனையில் தான் வீட்டுக்கு வந்து சேர்ந்தாள்…

 சாந்தா வேறு அறையில் இருப்பதால் அவர் வந்து இருப்பது தெரியாது அவளுக்கு….. வசும்மா சாந்தா அறையில் இருப்பதால் ஹாலில் யாரும் இல்லை….

அவர்களுடைய அறையில் தான் நிதிஷ் இருந்தான்…. அவள் வந்தவுடன் அவளை முகம் கழுவி விட்டு வருமாறு கூறிவிட்டு அவளுக்கு உண்ண உணவு எடுத்து வந்தான்….. அவளும் எதுவும் பேசாமல் அவளும் உண்டு அவனுக்கு ஊட்டி விட்டு கை கழுவி அந்த தட்டை கிச்சனில் வைத்து விட்டு அவர்களுடைய அறைக்கு சென்றாள்….

நிதிஷ் அவளை தன் பக்கத்தில் அமர வைத்து விட்டு அவள் மடியில் படுத்துக் கொண்டான்… அவளும் அவனின் தலையை கோதி கொடுத்தாள்…. நிதிஷ் அவனுக்கு தெரித்த அனைத்து விசயத்தையும் கூறி விட்டான்…. நேற்று அதி சொன்னதையும் சேர்த்து தான்….

 அனைத்தும் கேட்டுவிட்டு “மாமா இந்த ஆளு இவளோ வேல பண்ணி இருக்காரா???? பாவம் அந்த மேனேஜரும் அவர் மனைவியும்…. இப்ப உங்க சித்தி எங்க??? என்று கேட்டாள்…

“மாத்திரை குடுத்து இருக்காங்க சாப்டுட்டு தூங்குறாங்க…. அம்மாவும் அங்க தான் இருக்காங்க” என்று கூறும் பொழுதே வசும்மா அவனை அழைத்தார்…..

அவனும் “மீஇஇஇ…. கதவு திறந்து தான் இருக்கு நீ உள்ள வா” என்று கூறினான்…. அவன் அவள் மடியில் படுப்பது வழக்கம் தான்…. அதனால் வசும்மாவும் கண்டு கொள்ளாமல் அவன் காலை எடுத்து தன் மடியில் வைத்து கொண்டார்….

 “அம்மா அந்த மேனேஜர் எப்ப வராராம்” என்று வசும்மாவிடம் கேட்டான்….

 “இன்னும் போன் பண்ணல…. பண்ணும் போது பேசிக்கலாம்” என்று கூறிவிட்டு பிரியாவிடம் “பிரியாம்மா சாப்டியா” என்று கேட்டார்….

“சாப்பிட்டேன் அத்தம்மா…. ஏஞ்சல் வேற ஆயிரம் கேள்வி கேட்டுட்டு  தான் அங்க கிளாஸ் போனா…… வந்து கேட்டா நீங்க ரெண்டு பேரும் தான் சமாளிக்கணும் சரியா…..” என்று கூறினாள்…

“ஓகே” என்று இருவரும் கூறினர்….

“மீ …நேத்து அதி வந்த அப்ப ஏன் நிவேதாவை உள்ள போக சொன்ன…. அவங்க தப்பா நெனச்சிக்க மாட்டாங்களா….” என்று தன் சந்தேகத்தை கேட்டான்…

 “இல்லை ப்பா அந்த தம்பி தான் வீட்டுக்குள்ள வர அப்பயே நிவேதாவை உள்ள அனுப்ப சொல்லி எனக்கு மெசேஜ் பண்ணது”

 “ஓகே ம்மா” என்று கூறி தூங்க ஆரம்பித்து விட்டான்….

மணி மூன்று இருக்கும்….. அப்போது நிஹா வசும்மாவுக்கு அழைத்தாள்….

“ஹெலோ பெரியம்மா…. இப்ப நாங்க அங்க வரட்டா… நாங்க மூணு பேர் வரோம் பெரியம்மா…..”

“ஓகே டா வாங்க…. இங்க வீட்டுக்கு வா டா…” என்று கூறினார்

“ஓகே பெரியம்மா” என கூறி வைத்து விட்டாள்…

பிரியாவும் பேசிக் கொண்டே தூங்கி விட்டாள் அதனால் இருவரையும் படுக்க வைத்து விட்டு வசும்மா சாந்தாவின் அறைக்கு வந்து உட்காந்து கொண்டார்…

தற்போது மீண்டும் நிதிஷ் மற்றும் பிரியாவை எழுப்ப கதவை தட்டினார்…. அந்த சத்தத்தில் உறக்கம் கலைந்த பிரியா வெளியே வந்தாள்…. “பிரியாம்மா போய் நிதிஷ எழுப்பு அவங்க வரங்களாம்”…..

“ஓகே அத்தம்மா” என்று கூறி விட்டு அவனை எழுப்ப சென்று விட்டாள்…. நிதிஷும் எழுந்து முகம் கழுவி விட்டு வசும்மா அருகில் அமர்ந்து கொண்டான்….

வசும்மா நிதிஷிடம் தம்பி “அதி தம்பிய வர சொல்லி இருக்கேன் ப்பா எதுக்கும் ஒரு போலீஸ் இருக்கட்டும்னு தம்பியும் வரேன்னு சொல்லிடிச்சி”

“ஓகே ம்மா” என்று கூறிவிட்டு “ம்மா உன் தங்கச்சி கிட்ட அவங்க பேசுற அப்ப சத்தம் போடா கூடாதுனு சொல்லி வை சரியா…… குட்டிமாக்கு வேற அஞ்சு மணிக்கு கிளாஸ் முடிஞ்சிடும்… அதுக்குள்ள எல்லாம் முடிச்சிடுமா”…..

“முடிஞ்சிடும் இல்லனா முரளிய போய் கூட்டிட்டு வர சொல்லிடலாம்”….

“சரி ம்மா” என்று கூறினான்…. வசும்மா சாந்தாவிடம் அங்கு எந்த சத்தமும் போட கூடாது அமைதியாக இருக்க வேண்டும் என்று கூறிக் கொண்டு இருந்தார்… வேறு வழி இல்லாமல் சாந்தாவும் சரி என தலை ஆட்டினார்…

அவர்களும் மூன்றரை மணிக்கு வந்து விட்டனர்…… அதியும் அதற்கு முன் வந்து விட்டான்…. அவனும் சாந்தா சத்தம் போட கூடாது என்று கூறி இருந்தான்…. சாந்தாவிற்கு தற்போது வேறு யாரும் நியாபகம் இல்லை நிஹாவை தவிர….

பாலய்யா அவருடைய மனைவி ருக்மணி நிஹா என மூவர் வந்து இருந்தனர்….. ருக்மணி கொஞ்சம் மனநலம் பாதிக்க பட்டு இருந்தார்….. நிஹாவை பார்த்ததும் சாந்தா அவளின் பக்கம் வந்தார்….. ஆனால் அவள் பாலய்யாவின் பின் நின்று கொண்டாள்…… வசும்மா தான் அவரை சோபாவில் அமர வைத்தார்….. பாலய்யா வசும்மாவிடம் என்ன நடந்தது என கூற ஆரம்பித்தார்…..

 “அம்மா எனக்கும் என் பொண்டாட்டிக்கும் கல்யாணம் ஆகி மூணு வருஷம் கழிச்சி தான் குழந்தை பாக்கியம் கெடச்சது…. என் மனைவிக்கு கர்ப்பபைல குழந்தையை தாங்குற சக்தி இல்லை இந்த குழந்தையே எப்படி தங்குதுனு தெரியல பெட் ரெஸ்ட்ல இருக்க சொன்னாங்க டாக்டர்….. நானும் இவளை எந்த வேலையையும் பாக்க விடல… எட்டு மாசத்துலயே டாக்டர் ஆபரேஷன் பண்ணி எடுத்துடலாம்னு சொன்னாங்க….

சரினு நாங்களும் ஹாஸ்பிடல் போனோம்…. எங்க கிட்ட அவ்வளவா காசு இல்லை தான்…. ஊருல கொஞ்சமா நிலம் இருந்திச்சி அத வித்து பணம் கொண்டு போனோம்…. அங்க ஆபரேஷன் பண்ணி குழந்தையை எடுத்தாங்க…. ஆனா குழந்தை இறந்துடிச்சினு சொல்லிட்டாங்க…. அத கேட்ட என் பொண்டாட்டிக்கு மனநலம் பாதிக்க பட்டுடிச்சி….” என்று கூறி அழுதார்….

“நான் ஜனகராஜ் ஐயா கடையில தான் வேல பாத்துட்டு இருந்தேன்…. அவரோட மனைவியும் நாங்க காட்டுன டாக்டர் கிட்ட தான் பிரசவம் பாக்க வந்தாங்க… அவங்களுக்கும் அங்க தான் பெண் குழந்தை பொறந்தது…. எல்லாத்துக்கும் ஸ்வீட் குடுத்தாரு எனக்கு குடுக்க வந்தாரு நான் அழுகுறத பாத்துட்டு வருத்த பட்டாரு நம்பினேன் அவர…. ஆனா அவரு” என்று கூறி முகத்தை மூடிக் கொண்டார் பாலய்யா….

தன்னை நிதானம் படுத்திக் கொண்டார்…. அதி தான் “எப்படி உங்களுக்கு உண்மை தெரிஞ்சது” என்று கேட்டான் அவரிடம்….

“எனக்கும் ரொம்ப வருஷம் தெரியாது… நிஹாக்கு பதினாலு வயசுல ஒரு ஆக்சிடென்ட் ஆச்சு… அப்ப நடு ராத்திரில எனக்கு போன் போட்டு நிஹாக்கு ரத்தம் குடுக்கணும் வானு கூப்பிட்டாரு நானும் போய் ரத்தம் குடுத்தேன் நீங்க ரத்தம் தரலையா ஐயானு கேட்டேன்… அதுக்கு அவரு நிஹாக்கு அவ அம்மாவோட ரத்தம்… அவ மயக்கத்துல இருக்கா அதுனால ரத்தம் எடுக்க முடியல…. உன் ஞாபாகம் வந்தது அதுனால கூப்பிட்டேனு சொன்னாரு நானும் போயிட்டேன்..ஒரு விஷயம் நான் யோசிக்கவே இல்லை என் ரத்த பிரிவு அவருக்கு எப்படி தெரியும்னு….

 ஒரு ரெண்டு மாசம் முன்னாடி இவங்களுக்கு (சாந்தாவைக் காட்டி)ரத்தம் கம்மியா இருக்கு ஏத்தனும் சொன்னாங்க அந்த ரத்தம் யாருக்கும் இல்லை கடையில யாருக்கோ இருந்தா குடுக்க சொன்னாங்க கடையில இருந்த ஒரு பொண்ணு ரத்தம் குடுத்துட்டு வந்துச்சு ஆனா அந்த பொண்ணு வேற ரத்த பிரிவு நான் போய் கேட்டேன் அந்த பொண்ணு கிட்ட எந்த ரத்த பிரிவு ம்மா நீனு அந்த பொண்ணு வேற ரத்த பிரிவு சொன்னிச்சி ஏன் ஐயா மாத்தி சொல்லணும்னு யோசிச்சேன்…

அப்பறம் நிஹா கடைக்கு வந்துச்சு அப்ப அடிபட்டுடிச்சி… ரத்தம் கொஞ்சம் வெளியே வந்துடிச்சி அந்த ரத்தத்தை நான் எதுக்கும் எடுத்து வைக்கலாம்னு எடுத்து வெச்சிட்டேன்… எனக்கு தெரிஞ்ச பையன் லேப் வெச்சி இருக்கான்… அவன் கிட்ட கொடுத்து செக் பண்ண சொன்னேன் அவனும் ரெண்டு நாள்ல ரிசல்ட் சொன்னான் நிஹா என் பொண்ணுன்னு

எனக்கு பயங்கர அதிர்ச்சி… என் மனைவிக்கு பிரசவம் பார்த்த டாக்டர கண்டுபிடிச்சேன் அவங்க முதல்ல ஒதுக்கல.. அப்புறம் தான் ஒதுக்கிட்டாங்க… (சாந்தாவைக் காட்டி) இவங்க குழந்தை இறந்துடிச்சி.. ஆனா இவங்க புருஷன் டாக்டருக்கு அஞ்சு லட்சம் பணம் குடுத்து குழந்தைய மாத்தி வெச்சி இருக்காரு… இவர நல்லவருனு நம்புனா… ஏமாத்தி இருக்காரு… ” என்று கூறி முடித்து கண் மூடி அமர்ந்து விட்டார்….

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
3
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்