
அத்தியாயம் – 7
ரவி முதலில் உறங்கிக் கொண்டு இருந்த போர்வையை விலக்கி உற்று பார்த்தான். அதில் சுஜிதா நன்றாக உறங்கிக் கொண்டு இருந்தாள்.
வட்டமான முகமும், சிறிய நாசியும், அளவான உதடும், அழகாக தெரிந்தது அவன் கண்களுக்கு.
மேலும், கைகளில் மருதாணி வைத்து இருப்பதை பார்த்து உறுதி செய்து விட்டு அவளை கடத்தி விட்டார்கள்.
மறுநாள் யாருக்கும் காத்தில்லாமல் கதிரவன் தன் தலையை வெளியே நீட்டினான்.
ஜெயலட்சுமி, சக்தியை அழைத்து “இது எல்லாம் நம்ம தலையெழுத்து இவ கல்யாணத்துக்கு எல்லாம் நம்ம இரண்டு பேரும் வேலை செய்ய வேண்டியதா இருக்கு“ என்றார் வெறுப்பாக.
ஜெயலட்சுமி, “சரி அதை எல்லாம் விடு” என்று சக்தியிடம் ஒரு சில வேலைகளை ஒப்படைத்தாள்.
அக்கா கொடுத்த அந்த பத்திரம் வேலையில் சக்தி கொஞ்சம் பிஸியாக இருந்து விட்டான்.
ஆகையால், சக்தி, ரவிக்கு செல்போனில் அழைத்து “மச்சான் நிலாவ பத்திரமா வச்சி இருக்கியா?” என்றான் மெதுவாக.
ரவி, “அதெல்லாம் பக்காவா முடிச்சிட்டேன் டா நம்ம ரூம்ல தான் கட்டி வச்சிருக்கேன்“ என்றான் உறுதியாக.
ரவி பக்கத்தில் இருக்கும் ஒருவனை அனுப்பி செக் செய்து கொண்டான்.
அவனுக்கு நிலா முகம் தெரியாததால் ஒரு பெண் இருப்பதை பார்த்து விட்டு, “ரவி சார் பொண்ணு இருக்கு” என்றான்.
ரவி அதை அப்படியே ஃபோனில் சொல்லி விட்டான். அதில் தைரியமாக சக்தி எப்படியும் இந்த கல்யாணம் நின்று விடும் என்று மனக்கணக்கு போட்டு விட்டு அக்கா கூறிய படி சொத்து பத்திரங்கள் விஷயமாக வக்கில்லை அழைத்து வர சென்றான்.
ஐயர் மாப்பிள்ளையை அழைத்து வருமாறு கூறினார். சக்தி, சிரித்துக் கொண்டே விக்ரமை அழைத்து வந்தான்.
விக்ரம், “என்ன ரொம்ப சந்தோஷமா இருக்கீங்க” என்றான் சக்தியை பார்த்து.
சக்தி, “ஆமா என்னோட நிலா குட்டி எனக்கு கிடைக்க போகிறா இல்ல அந்த சந்தோஷம் தான்” என்றான் புன்னகையோடு.
சக்தி விக்ரமை அழைக்க வரும் முன்னதே விக்ரம் யாருக்கோ செல்போனில் அழைத்து “நிலா என்ன பண்ணிட்டு இருக்கா?” என்று கேட்டுக் கொண்டான்.
மறுமுனையில் இருந்தவன், “பாஸ் மேடம் ரெடி ஆகிட்டு இருக்காங்க” என்றான்.
சக்தி, “நிலாவை கட்டிக்க முடியலன்னு நீ ஒன்னும் கவலைப்படாத. எனக்கும் நிலாவுக்கும் திருமணம் ஆன பின் நானே உனக்கு ஒரு நல்ல பெண்ணா பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கிறேன்” என்று ஆறுதல் கூறிக்கொண்டு இருந்தான்.
விக்ரம் சரி என்று தலை அசைத்துக் கொண்டு மேடையில் ஐயர் க்கு எதிரில் அமர்ந்தான்.
நிலா ரெடியாகி விட்டு இந்த சுஜிதா எங்க போய் தொலைஞ்சான்னே தெரியலையே முதலில் திருமணத்தை நிறுத்தலாம்னு சொல்லிக் கொண்டிருந்தா.
பிறகு, விக்ரமையே கல்யாணம் பண்ணிக்கோ ன்னு சொல்லிக் கொண்டு இருந்தா. அதுக்கு அப்புறம் உனக்கு பிடிச்ச வாழ்க்கையை தான் அமைச்சு தருவேன் என்னை நம்புன்னு சொன்னா….
கடைசியில் இப்போ பார்த்தா அவ எங்க போனான்னே தெரியல என்று அவளை வறுத்தெடுத்துக் கொண்டிருந்தாள்.
ஐயர் மணப்பெண்ணை அழைத்து வருமாறு கூறினார். சில பெண்கள் நிலாவை அழைத்துச் சென்று விக்ரம் அருகில் அமர வைத்தார்கள்.
சக்தி அந்த சமயத்தில் மண்டபத்தின் வெளியே அவன் ஆட்கள் உடன் பேசிக் கொண்டு இருந்தான், “இன்னும் ஏன் கல்யாண பெண்ணை காணும் ன்னு யாருமே குரல் கொடுக்கல” என்று யோசனையோடு நின்றிருந்தான்.
சரி நம்பளே உள்ள போய் பார்ப்போம் என்று மண்டபத்தினுள் நுழைந்திருந்தான். அங்கு அவன் கண்டது விக்ரம் மற்றும் நிலா இருவருக்கும் கல்யாண புடவை மற்றும் வேஷ்டி சட்டை ஐயர் கொடுத்து சம்பிரதாயம் செய்து கொண்டு இருந்ததை தான்.
சக்தி அதிர்ச்சியாக நிலாவை பார்த்து கொண்டே உள்ளே சென்றான். பிறகு, ஐயர் துணிகளை கொடுத்துவிட்டு அதை அணிந்து வருமாறு கூறினார். இருவரும் துணிகளை மாற்ற அறையை நோக்கி சென்று விட்டார்கள்.
சக்தி அவசரமாக ரவிக்கு ஃபோன் செய்து, “பைத்தியக்காரனே என்ன காரியம் பண்ணி வச்சிருக்க நிலாவ பத்திரமா பாத்துக்கோ தானே சொன்னேன். ஆனா நீ என்ன காரியம் பண்ணி வச்சிருக்க“ என்று திட்டிக் கொண்டிருந்தான்.
ரவி ஒன்றும் புரியாமல், “என்ன மச்சான் சொல்ற நிலா இங்க தாண்டா இருக்கா அவ முகத்துல இருக்க துணியை கூட இன்னும் நான் எடுக்கவே இல்ல. அதுமட்டும் இல்ல இன்னும் அவ மயக்கத்துல தான் இருக்கா“ என்றான்.
சக்தி, “முதல்ல போய் அவ முகத்தில் இருக்கும் துணியை எடுத்துட்டு பாரு நீ யாரை கடத்தி வச்சிருக்கன்னு. நிலா இப்போ மண்டபத்தில் தான் இருக்கா“ என்றான்.
ரவி குழப்பமாக, “அது எப்படி மச்சான் முடியும் என் முன்னாடியே தான் அவ உட்கார்ந்து இருக்கா அப்புறம் எப்படி மண்டபத்தில் இருக்க முடியும்”.
“நீ வேறு யாரையாவது பார்த்து இருக்க போற” என்று மறுபடி சொன்னதையே சொல்லிக் கொண்டிருந்தான் .
அதில் ஆத்திரம் அடைந்த சக்தி, “நான் மட்டும் அங்க வந்தேன்னு வச்சுக்கோ உன்னை கொன்னு போட்டிடுவேன் மரியாதையா போய் முகத்தில் இருக்கும் துணியை எடுத்துட்டு பாரு” என்றான்.
ரவி, “இரு பார்க்கிறேன் கத்தாத“ என்று விட்டு முகத்தில் இருந்த துணியை விளக்கினான். அதிர்ச்சியோடு, “டேய் மச்சான்” என்றான்.
சக்தி, “சொல்லித்தொல யாரை தூக்கிட்டு வந்து இருக்க?” என்றான்.
ரவி, “என்னை மன்னிச்சிடு டா. இவ நிலாவோட ஃப்ரெண்ட் சுஜிதா டா” என்றான் .
சக்தி, “அறிவு கெட்ட நாயே இதுக்கு தான் நான் அவ்வளவு தூரம் சொல்லிக்கிட்டே இருந்தேன். நைட்டு எவனும் குடிக்காதீங்க அப்படின்னு”.
“என்னமோ நான் புடுங்கிடுவேன், நான் பண்ணிடுவேன்னு சொன்னியே இப்போ பாரு எந்த லட்சணத்துல நீ பண்ணி இருக்கன்னு“ என்றான் கோபமாக.
“முதலில் சுஜிதாவை யாருக்கும் தெரியாமல் மண்டபத்திற்கு கூட்டிட்டு வந்து விடு. இங்கு யாரும் அவளை கானும் ன்னு இன்னும் தேடல சீக்கிரம் கூட்டிட்டு வா” என்று விட்டு போனை துண்டித்து விட்டான்.
துணி மாற்ற வந்த நிலா ‘சுஜிதா எங்க போனானே தெரியலையே நைட் என் கூட தான் தூங்கிட்டு இருந்தா. ஆனா, காலையில் இருந்து அவளை காணும்’.
‘ஒருவேளை வீட்டுக்கு போயிட்டு இருப்பாலோ? அப்படி இருந்தாலும் இன்னும் ஏன் வரவே இல்ல செல் போனை கூட இங்கயே வெச்சிட்டு போயிருக்கா’ என்று யோசித்துக் கொண்டிருந்தாள் .
விக்ரம் மிகவும் சந்தோஷமாக கிளம்பி கொண்டு இருந்தான். நிலா கடமைக்கு என்று கல்யாணத்துக்கு தயாராகி விட்டு. தன் அம்மாவின் புகைப்படத்தை எடுத்து மேஜையின் மீது வைத்து.
‘அம்மா நீங்க இருந்து இருந்தால் இந்நேரம் இந்த கல்யாணம் நடந்து இருக்காது என்னை இந்த கல்யாணம் பண்ணிக்க சொல்லி ரொம்ப கட்டாயப் படுத்துறாங்க’ என்று கண் கலங்கி புகைப்படத்தை பார்த்து பேசிக்கொண்டு இருந்தாள் .
‘இந்த கல்யாணத்தால் எனக்கு நல்லது நடக்குமா அல்லது என் வாழ்க்கை பாழாகி விடுமான்னு எனக்கு தெரியல. இந்த கல்யாணத்தை நிறுத்த சுஜிதா எனக்கு உதவி செய்வேன்னு சொல்லிக்கிட்டு இருந்தா’.
‘ஆனா, இப்போ அவளையும் காணோம் எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல. என் தலையெழுத்து என்னவோ அதுபடி நடக்கட்டும். நான் ராசி இல்லாதவள் சின்ன வயசிலேயே நீங்களும் என்னை விட்டு போயிட்டீங்க’.
‘அதேபோல், நான் ஆசைபட்ட என் துருவ் கூட என்னை விட்டு போயிட்டான். நீங்க என் கூட இருந்த வரைக்கும் தான் எனக்கு எல்லாம் நல்லதாக நடந்துச்சு. அப்பா கூட நீ இருந்த வரைக்கும் என் கிட்ட பாசமாக தான் இருந்தாங்க’.
‘ஆனா, இப்போ அவர் இருந்தும் எனக்கு எந்த சந்தோஷமும் இல்லை. இனி என் தலையெழுத்து படி இந்த கல்யாணம் நடக்கட்டும்’ என்று அழுது கொண்டே கூறினாள்.
அவள் கூறி முடிக்கும் நேரத்தில் அவள் தலையில் இருந்த மல்லிப்பூ அந்த புகைப்படத்தின் மேல் விழுந்தது.
அந்தப் பூவை பார்த்த நிலா, ‘என்னம்மா பூ விழுந்திருக்கு நீ என்னை ஆசிர்வாதம் செய்ததாக நான் நினைச்சுக்கிறேன்’ என்று தன் மனதில் இருந்து பேசிக் கொண்டு இருந்தாள்.
ரவி இன்னும் மயக்கம் தெளியாத சுஜிதாவின் கையைப் பிடித்து உயிர் இருக்கிறதா என்று பரிசோதித்தான்.
பின்பு அவளை காரில் எடுத்து போட்டு கொண்டு கூட இரண்டு ஆட்களையும் ஏற்றிக் கொண்டு மண்டபத்தை நோக்கி விரைந்தான்.
ஐயர், “மாப்பிள்ளையை அழச்சிட்டு வாங்கோ” என்றார்.
ஜெயலட்சுமி மண்டபத்தில் முதல் வரிசையில் முதல் ஆளாக கையில் சொத்து பத்திரத்துடன் அமர்ந்திருந்தாள்.
விக்ரம் முதலில் வந்து மன வரையில் அமர்ந்தான். அவனைப் பார்த்த ஜெயலட்சுமி, ஏலனமாக சிரித்து கொண்டு மனதுக்குள் உன் முகத்தை பார்த்தால் ரொம்ப சந்தோஷமா இருக்க மாதிரி தெரியுது எல்லாம் இன்னும் கொஞ்சம் நேரம் தான்.
அப்புறம் இந்த வீட்டை விட்டு உன்னையும் எதுக்கும் உபயோகம் இல்லாத அந்த நிலாவையும் சேர்த்து துரத்தி விடுறேன்.
தங்குவதற்கு வீடு கூட இல்லாமல் இரண்டு பேரும் கஷ்ட பட போறிங என்று மனக்கணக்கு போட்டு சந்தோஷப்பட்டாள்.
மறுபக்கம், “ஐயர் பொண்ண அழச்சிட்டு வாங்கோ” என்றார்.
நிலா நடந்து வருவதை பார்த்த விக்ரம் கண்களை சிமிட்ட நேரமில்லாமல் அவளை பார்த்துக் கொண்டே இருந்தான்.
மெரூன் நிறத்தின் புடவையில், மிதமான ஆபரணங்களுடன், தலை நிறைய மல்லிகை பூ வைத்து மிகவும் அழகாக கோவில் சிலையை போல் தெரிந்தாள்.
நிலா வருவதை பார்த்த சக்தி கண்கள் சிவந்து போனது. இவ்வளவு அழகாக இருக்கிறாளே இவளை எப்படி நான் விட முடியும் என்று அவள் அழகை மனதுக்குள் வர்ணித்து கொண்டிருந்தான்.
கண்டிப்பா நான் நிலாவை விட்டுக் கொடுக்க மாட்டேன். இப்போ நான் நிலாவை விட்டுக் கொடுத்தா அது எனக்கு அவமானம்.
சின்ன வயதில் இருந்து நிலா எனக்கு தான் என்று அவள் மேல் ஆசை கொண்டு உள்ளேன். அவளை மிரட்டி உள்ளேன். ஆனால், இப்பொழுது நான் விட்டு விட்டால் அது என்னை நானே அசிங்கப்படுத்திக் கொண்டதற்கு சமம் என்று மனதுக்குள் ஒரு போராட்டம் நடத்திக் கொண்டிருந்தான்.
மணவறையில் வந்து அமர்ந்தால் நிலா அவள் அமர்ந்த சற்று நேரத்தில் சக்தி விக்ரமை பார்த்து முறைத்து எழுந்தரி டா என்று கண்களால் கட்டளையிட்டான்.
விக்ரம் அதை பார்த்து சிரித்து கொண்டே எந்த ஒரு சலனமும் இன்றி திரும்பி கொண்டான். அதில் கோவம் கொண்ட சக்தி உன்னை என்று பற்களை கடித்துக் கொண்டு எழுந்து நின்றவன் அந்த அறையே அதிரும் படி, “மரியாதையா என் நிலா பக்கத்தில் இருந்து எழுந்தரி டா” என்றான் கண்கள் சிவக்க.
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


விக்ரம் இடத்தில் துருவ் சூப்பர்.
நன்றி 😊
அப்போ இவன் தான் துருவ் வா சூப்பர் …
அத்தியாயம் 8இல்லை.
இருக்கு சகோ