
“சரி அடுத்து…” என்றதும் வரனின் விபரங்களை ஆராய்ந்தவர், “இந்த பையன் கேரக்டர் சரி இல்லைன்னு சொல்லி இருக்கீங்க? அப்புறம் என் இதுல வச்சீங்க?”
“ஆமா ம்மா ரொம்ப வசதியான வீட்டு பையன் நானே அவன் வேலை செய்யற இடம், அக்கம் பக்கம் எல்லாம் விசாரிச்சேன் அவனோட சகவாசம், பழக்க வழக்கம் எதுவும் சரியில்லை எனக்கு பிடிக்கலை… அதை எடுக்க மறந்துட்டேன் போல..” என்று அவர் கையில் இருந்து வாங்கி ஓரம் வைத்தார்.
“எனக்குமே வசதி வாய்ப்பு பணம் அந்தஸ்தை விட பையனோட குணம் ரொம்ப முக்கியங்க. எந்த கெட்ட பழக்கமும் இல்லாத முன்கோபியா இல்லாம முக்கியமா சந்தேகபடாத பையனா இருக்கணும்..” என்றார் பார்கவி.
“என்ன பேசுற கவி கோபப்படறவனை அடையாளம் காணலாம் ஆனா சந்தேகபடறவன்னு எப்படி தெரிஞ்சிக்க..?”
“அதுதான் பக்கத்து தெருல இருக்க வேதாசலம் சார் ஒரு டிடெக்டிவ் கிட்ட அவர் பொண்ணு லவ் பண்ற பையனை பத்தின டீடெய்ல்ஸ் வாங்கினார் சொன்னீங்களே.. நமக்கு ஒத்துபோற பையனை வீட்டுக்கு பெண் பார்க்க வர சொல்லும் முன்னாடி அவங்ககிட்ட கொடுத்து விசாரிங்க பையனை பத்தின மொத்த விபரமும் தெரிஞ்சுக்கலாம்.. நம்ம பெண்ணை எந்த சூழலிலும் வாழும் தெளிவோடு வளர்த்திருந்தாலும் அவசரப்பட்டு கட்டிகொடுத்துட்டு காலம் முழுக்க கண்ணீர் வடிக்க கூடாதுங்க”
“சரிம்மா அடுத்த பையன்..”
“இந்த வீட்ல ரெண்டும் பசங்க.. பொண்ணு இல்லை அதனால வேண்டாங்க…”
“என்னம்மா பொண்ணு இல்லைன்னு வேண்டாம் சொல்ற..?”
“ஏங்க நம்ம பழைய வீட்டு எதிர்ல எழில் தம்பி இருந்தாரே நியாபகம் இருக்கா உங்களுக்கு?”
“இன்காம் டேக்ஸ் டிபார்ட்மென்ட்ல இருக்க மிஸ்டர் அகனெழிலனையா சொல்ற?”
“ஆமாங்க அவரே தான்..!! எழிலை மாதிரி ஒரு நிதானமான பொறுப்பான பிள்ளையை இந்த காலத்துல பார்க்க முடியாதுங்க… மனைவி குழந்தையை அப்படி தாங்குவார்! அலரும் அப்படிதான் வக்கீலா இருந்தாலும் அந்த பிள்ளைக்கு கொஞ்சம்கூட ஈகோவோ சம்பாதிக்கிற திமிரோ இருந்ததில்லை..”
“ரொம்ப பாசமா புருஷனோட அவ்ளோ அன்னியோனியமா இருப்பாங்க.. அந்த தம்பியோட அம்மா இல்ல ஆனா அவங்க குழந்தை பிறந்தப்போ அலரோட நாத்தனார் இங்கயே வந்து கிட்டத்தட்ட இரண்டு வருஷம்கூட இருந்து பார்த்துக்கிட்டாங்க தெரியுமா உங்களுக்கு?”
“நியாபகம் இருக்கும்மா அந்த குழந்தைங்க கூட பிங்கி விளையாடுவாளே..”
“ஆமாங்க மாமியார் சரியா இல்லைனாலும் ஒரு நாத்தனார் இருந்தா நம்ம பொண்ணுக்கு மாரல் சப்போர்ட் தானே!”
“நீ சொல்றதும் ஒரு வகையில சரிதான்! ஆனா எல்லா நாத்தனாரும் எழில் அக்கா போல இருப்பாங்களா?”
“ஏன் இருக்கமாட்டாங்கன்னு நினைக்கறீங்க நாம நல்லது நினைக்கிறோம் நல்லதே செய்றோம் அப்போ நமக்கு அமைய போற உறவுகளும் நல்லதா இருக்கும்னு நம்புவோங்க.. நம்ம பிங்கியையும் நாம அப்படிதான் வளர்த்திருக்கோம்!”
“படிச்சிருந்தாலும் கைநிறைய சம்பாதிச்சாலும் அலர் போல அவளுக்கும் ஈகோ கிடையாது மனுஷங்களை அனுசரிச்சு, விட்டுகொடுத்து போயிடுவா அப்போ வர மாப்பிள்ளையும் அவளுக்கு ஏத்த மாதிரி இருக்கணும் இல்லைங்களா?”
“ஏன்டி என்னென்னமோ சொல்ற இப்ப நான் எப்படிதான் மாப்பிளையை தேட?”
“இருங்க சரியா சொல்லனும்னா எழில் மாதிரி நிலையான வேலையில எந்த கெட்ட பழக்கமும் இல்லாத குடும்பத்து மேல பாசத்தோட மனைவியை புரிஞ்சிட்டு அவளுக்காக யோசிக்கிற அவளை உயிரா நேசிக்கிற ஒரு மாப்பிள்ளையை பாருங்க..”
“ஏன்டி நான் அப்படி இல்லயா என்னை மாதிரின்னு சொல்ல மாட்டேங்கிற..?”
“ஏங்க கொஞ்ச வருஷம் நீங்க உங்க அம்மாகிட்ட என்னை சிக்க வச்சுட்டுதானே குவைத் போனீங்க ஆனா எழில் தம்பி அப்படி இல்லை கல்யாணத்துக்கு முன்னமே அலருக்காகவே இங்க வேலையை மாத்திக்கிட்டு வீடு வாங்கின்னு எவ்ளோ செய்திருக்கார் தெரியுமா..? அவருக்கு தம்பி இருக்காங்களான்னு விசாரிச்சு பாருங்க நம்ம பொண்ணுக்கு பார்க்கலாம்..”
“கவி அவங்க சென்னையில இல்ல சொந்த ஊருக்கு போயிட்டாங்க”
“எப்போங்க? நாம இங்க வந்த பிறகு ரெண்டு மூணுமுறை அலர்கிட்ட பேசினேன் அப்புறம் என் ஃபோன் தொலைஞ்சுட்டதால பேச முடியலை..”
“நம்ம வீடு வைட்வாஷ் பண்ண போயிருந்தேனே அப்போதான் தெரிஞ்சது இப்போ அவங்களுக்கு பதிலா அவங்க சொந்தக்காரங்களே வேற யாரோ வந்திருக்காங்க…”
“ஓ அப்படியா! ஆனா கண்டிப்பா நம்ம பிங்கி கல்யாணத்துக்கு அவங்களை கூப்பிடனுங்க…” என்று அவர்கள் பேசிக்கொண்டே செல்ல இறுதியாக ஒரு பையனை தேர்ந்தெடுத்து அடுத்த வாரத்தில் பெண் பார்க்க வர சொல்லி இருந்தார்.
****************************************
அதிகாலையே சாகரின் அழைப்பு வர அதை ஏற்ற திருவேங்கடம் ‘சாகர் வசீக்கு வேலை இன்னும் முடியலையாம் வர நேரமாகும் நான் கலந்து பேசிட்டு எப்போன்னு சொல்றேனே’ என்றார்.
“ஓகே திரு ஆனா உங்களுக்கு ஏற்ற இடம் இது! முடிஞ்சா நல்லா இருக்கும்னு தோணுது எனக்கு பொண்ணு இல்லைடா இல்லைன்னா நானே உனக்கு சம்பந்தியாகி இருப்பேன் டிலே பண்ணாம சீக்கிரம் பதில் சொல்லு..” என்று வைத்துவிடவும் அடுத்த சில நிமிடங்களில் மொத்த குடும்பத்தையும் ஹாலில் நிற்க வைத்திருந்தார் திருவேங்கடம்..
“டேய் அண்ணா என்ன காலையிலேயே பஞ்சாயத்து..”
“நைட் பெரிப்பா தூங்கவே இல்லடா அனேகமா அண்ணனோட கல்யாணம் விஷயமா பேச தான் கூப்பிட்டிருப்பார்..”
“ஓஒ”
“என்னங்க சமையல் வேலை இன்னும் முடியலை என்ன விஷயம் சொல்லுங்க” என்றார் நாயகி.
“சாகர் ஃபோன் பண்ணி இருந்தான் என்ன பதில் சொல்லட்டும்” என்றார் இறுகிய குரலில்.
“அதான் தம்பு வேலைக்கு போற பொண்ணு வேண்டாம் சொல்லிட்டானே மாமாஆ..” என்று அபி தயங்க..,
நான் பொண்ணு பார்க்க ஆரம்பிச்சதுல இருந்து பொண்ணுக்கு அண்ணன் தம்பி இருக்கணும்னு தொடங்கி கருப்பு, சிவப்பு, நெட்டை, குட்டை ஊர், வேலை அது இதுன்னு குறை சொல்லி வேண்டாம் சொன்னவனோட கண்டிஷனுக்கு ஏத்த மாதிரி பொண்ணு தேடினா கடைசியா அந்த பொண்ணுகூட பேசித்தான் முடிவு சொல்லுவேன்னு சொன்னான்.
சரின்னு அதுக்கும் பெண் வீட்டார்கிட்ட பேசி சம்மதம் வாங்கி கொடுத்ததுன்னு எவ்வளவோ செய்துட்டேன் ஆனா இப்போ வேலைக்கு போற பெண் வேண்டாம்னு சொல்றவன் இதோட நிறுத்துவான்னு எனக்கு தோணலை அடுத்த பெண்ணை பார்க்கிறப்போ இன்னொரு கண்டிஷன் போடுவான்..
“நேத்து சொன்ன மாதிரி ஏதாவது பெண்ணை லவ் பண்ணி கூட்டிட்டு வர சொல்லுங்க ஆனா இனியும் அவன் சொல்றதுக்கு எல்லாம் ஆட நான் தயாரா இல்லை அதனால..” என்று திரு நிறுத்த மற்றவர்களிடம் பதட்டம்
“வசீக்காக காத்திருந்தா சர்வாக்கு காலாகாலத்துல செய்ய முடியாம போயிடும் பரசுராம்க்கு என்னோட சம்பந்தம் பண்ணிக்கணும்னு ஆசை. நான் என் பையன் தம்பி பசங்கன்னு பிரிச்சு பார்த்ததில்லை யார்கேட்டாலும் மூணு பசங்கன்னு தான் சொல்லுவேன் அதனால விதுஷாவை இவனுக்கு முடிக்கலாம்னு ஒரு யோசனை..” என்றதில் நாயகியின் விழிகளில் கண்ணீர் வழிய உடனிருந்த மற்றவர்கள் அரண்டு போயினர்.
“உனக்கு ஏதாவது கண்டிஷன் இருந்தா சொல்லு சர்வா அதுக்கு ஏத்த மாதிரி பெண் பார்க்கிறேன்..”
“பெரிப்பா என்ன பேசுறீங்க? அண்ணாக்கு கல்யாணம் பண்ணாம எனக்கு வேண்டாம் முதல்ல அவருக்கு பாருங்க எனக்கென்ன அவசரம்?”
“உனக்கு கண்டிஷன் இருக்கான்னு கேட்டேன்..” என்றார் அழுத்தமான குரலில்.
திடீரென கேட்டதில் சர்வாவுக்கு ‘என்ன சொல்வது..’ என்று புரியவில்லை.
தந்தையை பார்க்க பசுபதியோ ‘அண்ணனின் முடிவு தான் தன்னுடையது’ என்பது போல அவன் பதிலுக்காக காத்திருந்தார்.. அன்னையை பார்க்க அவரோ திருவேங்கடம் அளித்த அதிர்ச்சியில் இருந்து இன்னுமே வெளி வரவில்லை.
அதற்குள் “திருப்பா எனக்கு இந்த ஆஃபர் இல்லையா?” என்று பிரணவ் கேட்க, “வாயை மூடுடா..” என்று ஜித்து..
“டேய் உனக்கா கல்யாணம் பண்ண போறோம் அமைதியா உட்கார்..”
“இரு பசுபதி இப்போ இருக்க பசங்க எங்க பெத்தவங்க விருப்பத்துக்கு மதிப்பு கொடுக்கறாங்க? அவங்க தான் நம்ம வழிக்கு வரல நாமளாவது அவங்க வழிக்கு போலாமே அவன் சொல்லட்டும் தடுக்காத”
“திருப்பா எனக்கெல்லாம் ஒரே ஒரு கண்டிஷன் தான்..”
“என்ன?”
“திருப்பா நீங்க சொல்ற விதுஷாக்கு தங்கச்சி இருக்கா..?”
“இல்லை. ஏன் கேட்கிற?”
“அப்போ அவங்க ரிஜெக்டட் அப்படிதானே ஜித்து?!” என்று அண்ணனை பார்க்க அவனோ ஆபத்பாந்தவனாக பிரணவ் தன்னை காப்பாற்றவும் ‘ஆம்’ என்று தலையசைத்தான்.
“ஏன்..?” என்று அதிர்வில் இருந்து மீண்ட அபி கேட்க…
“ஏன்னா இனிமேல் யாருக்கு பொண்ணு பார்த்தலும் தங்கச்சி இருக்கிற பொண்ணா பாருங்க..”
“எதுக்குடா?”
“உங்களை மாதிரியே நாங்களும் அக்கா தங்கச்சிங்களை கட்டிக்கிட்டா வீட்ல பிரச்சனையை இருக்காது இல்லையா.. அதனால கண்டிப்பா அடுத்து பொண்ணு பார்க்கிற வீட்ல குறைஞ்சது அவங்களுக்கு ரெண்டு தங்கச்சியாவது இருக்கணும்..”
“வாயை மூடு பிரணவ்! கல்யாணம் விளையாட்டு இல்லை” என்ற அபி, “மாமா ஜித்துக்கு இப்போ என்ன அவசரம் முதல்ல வசீக்கு முடிப்போமே.. தம்பு இன்னைக்கு வந்துடுவான் நாங்க பேசுறோம்… நீங்க ஏன் அவசரபடுறீங்க?”
“அண்ணா எந்த ஒரு முடிவும் யோசிச்சு தான் எடுப்பார் அபி”
“இருக்கட்டுங்க அதுக்காக அக்கா..” என்றவரின் பார்வை நாயகியை தழுவ அவரோ விம்மும் மனதோடு நாசி விடைக்க திருவை பார்த்திருந்தவர் மறுநொடியே கண்ணீரை துடைத்துகொண்டு அறைக்குள் நுழைந்திருந்தார்.
அபி சொல்லவும் தான் மனைவியை பார்த்தவர் அவள் கண்ணீரில் மனம் நொந்தவராக “அம்மூம்மா ஒரு நிமிஷம்..” என்று அவர் பின்னே சென்றார்.
ஒருமணி நேரம் கடந்த நிலையிலும் திருவின் எந்த சமாதானமும் நாயகியிடம் செல்லுபடி ஆகாமல் போக இறுதியில் “என் மகனுக்கு எப்படி கல்யாணம் பண்ணனும்னு எனக்கு தெரியும் ஆனா நீங்க இனி என்கூட பேசாதீங்க அவ்ளோதான்..” என்று ஒரே வரியில் கணவனை தள்ளி நிறுத்த மனைவியின் கோபத்தில் செய்வதறியாது அரண்டு போனார் திருவேங்கடம்.
வசீகரனும் விஜயசாரதியும் வீடு வந்து சேர்ந்தபோது மதிய நேரத்தை தாண்டி இருக்க அவர்களை வரவேற்ற அபியிடம், “அம்மா எங்க அபிம்மா” என்றான்.
“அக்கா தலைவலின்னு படுத்துட்டு இருக்காங்க நீங்க முதல்ல சாப்பிட வாங்க..” என்று பிள்ளைகளுக்கு உணவு எடுத்து வைத்தார்.
“தலைவலியா காலையில நல்லாதானே பேசினாங்க என்னாச்சு?” என்று வசீ மேலே அவரறைக்கு செல்ல முற்பட,
“தம்பு அக்கா தூங்கிட்டு இருக்காங்க நீ முதல்ல சாப்பிடு நான் கூட்டிட்டு வரேன்..” என்று அவனை பிடித்து அமர்த்தி பரிமாறியவர், “நிச்சயம் எப்போ சாரதி?” என்றார்.
“நிச்சயம் தனியா வைக்கல ஆன்டி. கல்யாணத்துக்கு முந்தின நாள் மண்டபத்துலயே பண்ணிக்கலாம்னு முடிவு செய்திருக்காங்க… அம்மா அப்பா கல்யாண பத்திரிக்கை எடுத்துட்டு வருவாங்க கண்டிப்பா எல்லாரும் முன்னாடி நாளே வரணும். உங்களுக்காக தனியா ரூம் அலாட் பண்ணியிருக்கேன்..”
“நீ சொல்லனுமா என்ன?! இது எங்க வீட்டு கல்யாணம் கண்டிப்பா வரோம்..”
“அப்பு எங்க அபிம்மா?”
“இன்னைக்கு லாஸ்ட் எக்ஸாம் இல்லையா அதான் முடிச்சுட்டு பிரெண்ஸோட வெளில போயிட்டு வரேன் சொல்லி இருந்தான்” என்றவர் கைபேசியை எடுத்து திருவிற்கு அழைத்தார்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
+1
9
+1
+1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


பாருமா எல்லா வகையிலும் யோசிச்சு அலசி ஆராய்ந்து வரன்களை வடிகட்டுறாங்க. அவங்க இப்போ தேர்ந்தெடுத்த வரன் யாரா இருக்கும்? 🤔
பிள்ளைங்க நம்ப வழிக்கு வரலேனா நம்ப அவங்க வழிக்கு போவோம்னு பரந்த மனபான்மையோட யோசிக்கும் திருவேங்கடம்.
Condition மேல் condition போட்டா அவரும் என்னதான் செய்வாரு பாவம்.
அண்ணனுக்கு இல்லேனா தம்பிக்கு பார்க்க யோசிக்க அதுவே குடும்பத்தில் பிரளயம் ஆகிட்டே. 😳
மகனுக்கு கல்யாணம் செய்து வைக்கும் முயற்சியில் ஏற்கனவே கல்யாணம் செய்து கூட வைத்து இருக்கும் அவர் மனைவி கோவிச்சுகிட்டாங்களே. 😀
அடுத்தடுத்த நிகழ்வுகளுக்காக காத்திருக்கிறோம். ஏலகிரிக்கு போன பொண்ணு என்ன ஆனா? ஆளையே காணும்.
அழகான குடும்பம் … ஆனா இந்த வசி ஏன் இப்பிடி இருக்கான் … பெத்தவங்க பத்தியும் கொஞ்சம் யோசிக்கலாம்