Loading

புஷ்பராகம்: நவரத்தினங்களில் இது குருவுக்கு உரிய கல்.

புஷ்பராகம் அணிவதால் கல்லீரல், கணையம் தொடர்பான வியாதிகள், கழுத்து வீக்கம், வயிறு கோளாறு, தைராய்டு சுரப்பி கோளாறு அஜீரணம் போன்ற பிரச்சினைகள் நீங்கும்.

அந்த மனிதர் ஈஸ்வரிடம் “தம்பி கோவிச்சுக்காதீங்க..

நீங்க யாரு.. எந்த ஊரு.. யாரை பாக்க வந்தீங்க…” என தொடர்ந்து கேள்விகளாக கேட்க

ஈஸ்வர் “சார்.. என் பேர் ஈஸ்வர்.. நான் சென்னைலேந்து வரேன்..எனக்கு கிராமங்கள்ல இருக்கிற சிவன் கோயிலை தேடி போய் தரிசனம் செய்யணும்னு ஆசை”

“அப்டி பல ஊர் சிவன் கோயில்களுக்கு போயிருக்கேன்..”

“இந்த ஊர்ல இருக்கிற சிவன் கோயிலை தரிசனம் செய்யணும்னு ஆசைல வந்தேன்..’

சரி..நீங்க யாருனு நான் தெரிஞ்சுக்கலாமா..” என உண்மை பாதி, பொய் பாதியாக கலந்து சொன்னான்.

அதற்கு அவர் “தம்பி…என் பேர் அம்பலவாணன்…

நானும் இதே ஊர் ஆள் தான். நான் ஒரு தொல் பொருள் ஆராய்ச்சியாளர்.”

“சரி தம்பி…. என்னை பத்தி என்ன..

அப்பறமா சொல்றேன்…நீங்க செய்யறது ரொம்ப நல்லது…நீங்க கிராமத்து சிவன் கோயில்களை தேடி போய் தரிசனம் செய்யறேன்னு சொன்னதை கேட்டதே எனக்கு பெரிய புண்ணியம்..என் பாக்கியம்…”

“ஆனா இந்த ஊர்ல தான் கோயில் இல்லையே.. சிதைஞ்சு போய் தானே இருக்கு….

உங்களை யார் இங்க வந்து தரிசனம் செய்ய சொல்லி சொன்னாங்க..இல்லை தெரியாம சொல்லிட்டாங்களா” என சாமர்த்தியமாக கேட்க…

அவனும் “யாரும் சொல்லல..சார்… இந்த ஊரை பத்தி கேள்விப்பட்டு நானா தான் வந்தேன்…” என பேச்சை முடித்து கொண்டு

ஈஸ்வர் “சார்.. நான் காலைல இங்க வந்து சேர்ந்தேன்.. இங்க ஊர்ல யாரையும் காணல…எனக்கு குளிக்கணும்..
சாப்பிடணும்….”

ரொம்ப பசிக்குது.. இங்க தங்கற மாதிரி எதாவது நல்ல ஹோட்டல் இருக்கா” என பேச்சை மாற்ற

அதற்கு அம்பலவாணன் வாய் விட்டு சிரித்து விட்டு “நல்லா கேட்டீங்க…

போங்க..தம்பி..

இதுவே ஆள் இல்லாத ஊரு.. இங்க ஏது ஓட்டல் எல்லாம்” என சொல்லி..

“உங்களுக்கு ஆட்சேபனை இல்லைன்னா…என் கூட கார்ல எங்க வீட்டுக்கு வாங்க.. வந்து குளிச்சிட்டு, எங்க வீட்டுலயே சாப்பிடுங்க..எங்க வீட்டம்மா நல்லா சமையல் செய்வாங்க…”

“உங்க வேலைகள் முடியிற வரைக்கும் எத்தனை நாள் வேணுமோ எங்க வீட்டுலயே தங்கிக்கோங்க” என உபசரிக்க…

ஈஸ்வர் “இருக்கட்டும் சார்..இதுவரைக்கும் யார்னே தெரியாத ஒருத்தரை பாத்து வீட்டுக்கு சாப்பிட கூப்பிடற உங்க அன்புக்கு ரொம்ப நன்றி…”

“நான் வந்தது சிவன் கோயில் தரிசனத்துக்கு..”.

“சிவன் தரிசனம் தான் கிடைக்கல.. ஆனா இங்க இருக்கிற சித்தன் ஐயா கூட பேசிட்டு இருக்கேன்.. அவர் கிட்ட பேசி முடிச்சதும்.. நான் ஊருக்கு கெளம்பணும்” என அவரை அங்கிருந்து அகற்ற பார்க்க

அம்பலவாணன் “நீங்க இவர் நல்லா பேசினார்னு கிண்டல் தானே செய்யறீங்க தம்பி…..
இதுவரைக்கும் நாங்க யார் எது கேட்டாலும் இவர் தப்பு தப்பா தான் பதில் சொல்வார்..”

“அதிகமா கேட்டா..அவன் இருக்கான்.. அவன் வர வேண்டிய நாள் ரொம்ப பக்கத்துல இருக்கு.. அவன் நிச்சயம் வருவான்னு குழப்பமா சொல்லிட்டு போயிடுவார்…அது எப்படி உங்க கிட்ட மட்டும் தெளிவா பேசி இருக்க முடியும்” என்று கேள்வி எழுப்பினார்.

அவரை கேள்வியாக பார்த்து ஈஸ்வர்.. பின்னர் சித்தனை திரும்பி பார்க்க.. சித்தன் “அவன் இருக்கான்… அவன் நிச்சயம் வருவான்” என சொல்லியபடி ஈஸ்வருக்கு அம்பலவாணன் பார்க்காத மாதிரி சில கண் ஜாடைகளை செய்து விட்டு, வேகமாக அந்த இடிபாடுகளுக்கு இடையே போய் மறைந்தார்.

நடந்ததை அதிர்ச்சியுடன் பார்த்த ஈஸ்வரின் தோளை தோட்ட அம்பலவாணன் “ஆமா தம்பி.. அவர் அப்டி தான்.. நான் சொன்னது உண்மை ஆகிடுச்சா” என மறுபடியும் சிரித்தபடி கேட்க

ஈஸ்வர் மெல்ல திரும்பி அந்த இடிபாடுகளுக்கு இடையே பார்க்க.. அங்கு நின்று கொண்டு இருந்த சித்தன் அம்பலவாணனை கேள்விகள் கேட்குமாறு  ஜாடைகளை செய்தார். அதை பார்த்து,  நன்றாக புரிந்து கொண்டு ஈஸ்வர் அம்பலவாணனை பார்த்து…

ஈஸ்வர் “சார்.. நீங்க இந்த ஊர்னு சொல்றீங்களே.. இந்த கோயிலே இப்டி இடிஞ்சு போய் இருக்கே… உங்களுக்கு இந்த கோயிலை பத்தி ஏதாவது தெரியுமா..” என கேட்க

அம்பலவாணன் “நான் இந்த ஊர் ஆளா இருந்தாலும்.. அதிகமா இங்க வந்தது இல்ல தம்பி… இந்த கோயிலுக்கு சில தடவைகள் தான் வந்திருக்கேன்… இந்த இடிபாடுல போய் ஏதாவது கல்வெட்டு இருக்கானு தேடி தேடி பாத்திருக்கேன்.. இவ்வளவு பெரிய கோயில்ல…ஒரே ஒரு சுவடி மட்டும் தான் கெடைச்சது..”

“அதுலயும்.. முன்ன பின்ன அறிமுகமே இல்லாத… எந்த சொந்தமும் இல்லாம…யாரோ சம்பந்தமில்லாத ரெண்டு பேர் இந்த கோயிலுக்கு சரியான நேரத்துல வருவாங்களாம்…”

“அவங்க வந்து தான் இந்த கோயிலோட காணாம போன முக்கியமான பொருளை தேடி எடுத்து தருவாங்களாம்.. “

“அது என்ன பொருள்னு கூட அவங்களுக்கு இங்க வரும் வரைக்கும் தெரியாதாம்..அந்த பொருள் இருக்கிற இடத்தோட குறிப்பு ஆள்பவன் வீட்டுல வணங்குற இடத்துல இருக்கும்
அப்படினு அந்த சுவடில எழுதி இருக்குது..

“அவங்க எப்டி எதுவும் தெரியாம.. இங்க வருவாங்க…இங்க வந்ததும் வர்றவங்க ஒண்ணா சேர்ந்து அதை தேடுவாங்களாம்.. இதெல்லாம் நம்பற மாதிரியா இருக்கு” என கேலியான குரலில் சொல்லி விட்டு

அவனும் சற்று யோசித்து, சித்தன் போன வழியை பார்க்க.. அங்கு நின்று கொண்டிருந்த சித்தன் அவரோடு போகுமாறு ஜாடை செய்ய.. அவனும் சித்தனின் ஜாடையை ஏற்று, அவரோடு வீட்டுக்கு வருவதாக கூறி அவருடைய காரில் ஏற… அதை தூரத்தில் இருந்து ஒருவன் பார்த்ததை தான் பார்க்காதது போல அம்பலவாணன் அங்கிருந்து  கிளம்பினார்.

போகும் போது அவர் முன்பு இருந்த ஊரின் செழுமையையும், இப்போது இருக்கும் நிலையையும் சொல்லி கொண்டு வந்தார். இடை இடையே ஈஸ்வரை பற்றி, அவன் குடும்பத்தை பற்றியும் கேட்க.. அவன் தன் பெற்றோருக்கு ஒரே பையன், தனக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனர் என சுருக்கமாக தன் அறிமுகத்தை முடித்து கொண்டான்.

அவர் வீட்டு வாசலுக்கு போனதுமே.. அங்கு நின்று கொண்டு இருந்த அவர் மனைவி உமையாம்பிகை.. “வாங்க… வாங்க” என மெல்லிய புன்சிரிப்போடு வரவேற்றார்.

அவர் சிரித்தபடி தன்னை வரவேற்றாலும், முகத்தில் ஏதோ ஒரு சோகத்தின் சாயலும்.. எங்கோ அவரை பார்த்த மாதிரியே தெரிய.. ஈஸ்வர் ஏதும் சொல்லாமல் அவர்களின் வீட்டுக்குள் நுழைந்தான்.

உள்ளே போனதுமே..ஈஸ்வரை பின்பக்கம் இருந்த
குளியலறைக்கு அழைத்து போன அம்பலவாணன் குளித்து விட்டு வர சொன்னார்.

அவன் குளித்து விட்டு வந்ததும்
உமையாம்பிகை அவனை
சாப்பிட அழைத்து சென்றார்.

தரையில் பலகை போட்டு உட்கார சொல்லி.. வாழையிலையை நன்றாக கழுவி போட்டு…. சுட சுட இரண்டு ஆப்பம், சில குழி பணியாரங்களை போட்டு குருமாவும், சட்டினியும் பரிமாறினார்.

இலையில் ஆப்பத்தை பார்த்ததுமே ஈஸ்வர் “ஆஹா.. ஆஹா.. பிரமாதம்…இது எல்லாமே எனக்கு ரொம்ப பிடிச்சதாச்சே…நான்
வரேன்னு எப்டி உங்களுக்கு தெரியும்…” என வியப்பாக கேட்டான்

5.(பாகம்2)

உமையாம்பிகையும்.. “நீங்க வர்றது எனக்கு தெரியாது தம்பி… காக்கா காலைல கத்திச்சு… அது கத்தினா.. விருந்தாளி வருவாங்க..அதான் பலகாரம் செஞ்சேன்..”.என்று அமைதியா சொன்னார்.

ஈஸ்வர் “இதை கேட்டதுமே எனக்கு சந்தோஷமா இருக்கு..காக்கா கத்தறத பாத்து விருந்து சமைச்ச உங்களுக்கு ரொம்ப நன்றிங்க..” என சொல்லி  சாப்பிட ஆரம்பிக்க….

“ஆமாம்…தம்பி நீங்க வெளியூரா என்ற அவரின் கேள்விக்கு பசியினாலும், சாப்பிடும் சுவாரஸ்யத்தினாலும் ஆமாம் என ஈஸ்வர் பொதுவாக தலையாட்டினான்.

உமையாம்பிகை “அடடா.. நீங்க வெளியூர்னா.. ராத்திரி பூரா பிரயாணம் செஞ்சது வந்திருப்பீங்க..பசியா இருப்பீங்க…பேச வேணாம்…
மொதல்ல நல்லா
சாப்பிடுங்க..” என சொல்லி விட்டு….”கொஞ்சம் இருங்க.. இன்னும் ரெண்டு ஆப்பம் வெக்கறேன்…” என சூடாக ரெண்டு ஆப்பங்களோடு குருமாவும் சட்டினியும் தாராளமாக அவனுடைய இலையில் பரிமாறி விட்டு…”வேற ஏதாவது வேணுமா” என கேட்க

அவனும் “போதும்ங்க..இதுவே வயிறு நிறைஞ்சிடுச்சு…எதுவும் வேணாம்ங்க..” என பதில் சொல்ல.. அதை கேட்டு “சரி தம்பி” என சொல்லி சிரித்து விட்டு அம்பலவாணனை அங்கு உட்கார்ந்து இருப்பதை பார்க்காதது போல..”நான் போய் உங்களுக்கு காபி எடுத்துட்டு வரேன்..” என வேகமாக சமையலறைக்குள் நுழைந்தார்.

அங்கு பக்கத்து மணையில் உட்கார்ந்து இருந்த அம்பலவாணன் “பாத்தீங்களா தம்பி.. நானும் தான் சாப்பிட உக்காந்திருக்கேன்..என்னை பார்த்தாளா..” என குறைபட்டு கொள்ள…

“ஏன் சார்..அவங்க உங்களுக்கு பரிமாறல…ஓஓஓ.. நான் விருந்தாளிங்கறதால எனக்கு மொதல்ல பரிமாறிட்டு உங்களுக்கு சூடா எடுத்துட்டு வருவாங்களா இருக்கும்..”என ஈஸ்வர் சிரித்து கொண்டே சொல்ல…

அம்பலவாணன் முகத்தில் வேதனை ததும்ப “இல்லை தம்பி..அவ தன் கையால எனக்கு குடிக்க தண்ணி குடுக்க மாட்டா…சமையல் செஞ்சு பரிமாற மாட்டா..எதுவும் செய்ய மாட்டா..ஏன்…என் கிட்ட பேச கூட மாட்டா” என்றார்.

ஈஸ்வர் ” நீங்க தப்பா நெனக்கலேனா ஒண்ணு கேட்கவா” என தயங்கி கேட்டான்…

அம்பலவாணன் “தாராளமா..தயங்காம உரிமையா  கேளுங்க” என்க

ஈஸ்வர் “அவங்க ஏன் உங்களை பாக்கல.. பேசல..” என்று கேட்க

அதை கேட்ட அம்பலவாணன் ஒரு பெருமூச்சோடு  “எல்லாம் தலைவிதி தம்பி.. தலைவிதி…எங்க குடும்பத்துல நடந்த சில எதிர்பாராத சம்பவங்களால அவ என் கிட்ட பேசற நிறுத்தி  ரெண்டு வருஷமாகுது” என சொல்ல..

ஈஸ்வர் “என்னது ரெண்டு வருஷமாகுதா..நீங்க என்ன சொல்றீங்க சார்.. ” என அதிர்ச்சியில் கேட்க…

அப்போது உள்ளிருந்து வேகமாக வந்த உமையாம்பிகை “மீதி பேச்செல்லாம் அப்பறமா பேசலாம் தம்பி..கை உலர்ந்து போச்சு பாருங்க…சாப்பிட்டு முடிச்சாச்சுனா..தோட்டத்துல
இருக்கிற குழாயடியில போய் கை கழுவிட்டு வாங்க.. காபி தரேன்” என அன்பொழுக சொல்ல

அவனும் வேகமாக பின்பக்கம் சென்று கை கழுவி விட்டு வந்து உமையாம்பிகை தந்த காபியை கையில் வாங்கி ருசித்து குடிக்க ஆரம்பித்தான்.

அவன் காபி குடித்ததும்  உமையாம்பிகை அவனிடம்
யார் என விசாரிக்க ஆரம்பித்தார்..

அவனும் காரில் வரும் போது அம்பலவாணனிடம் சொன்னதையே வார்த்தை மாறாமல் சொன்னான்.

ஈஸ்வர் தயங்கி தயங்கி “எனக்கு உங்களை எப்டி கூப்பிடறதுனு தெரியல..நீங்க தப்பா நெனக்கலனா.. நான் உங்களை அம்மானு கூப்பிடலாமா..” என கேட்க…

அவரும்.. “நல்லா கூப்பிடுங்க தம்பி…இந்த வார்த்தையை கேட்டு ரெண்டு வருஷமாச்சு.. என சொல்லி அழுதபடி அங்கிருந்து அகன்றார்.

ஈஸ்வர் அம்பலவாணனிடம் “சார்..அவங்களும் அம்மாங்கற வார்த்தையை கேட்டு ரெண்டு வருஷமாகுதுனு சொல்றாங்க..நீங்களும் ரெண்டு வருஷம்னு சொல்றீங்க..எனக்கு ஒரே குழப்பமா இருக்கே” என கூற..

அம்பலவாணன் “என் கூட வாங்க.. தம்பி.. நான் எல்லாம் சொல்றேன்” என்றார்.

ஈஸ்வர் காபி குடித்து முடித்ததும் அவனை அம்பலவாணன் தன்னுடைய படிக்கும் அறைக்கு அழைத்து போனார்.

அங்கு போய் உட்கார்ந்ததும் அவர்.. “தம்பி… நீங்க சில கேள்விகள் கேட்டீங்க.. நான் அதுக்கு பதிலே சொல்லல..அதுக்கு பதில் சொல்லாம இங்க ஏன் கூப்பிட்டு வந்திருக்காருனு உங்களுக்கு தோணுமே” என்க

ஈஸ்வர் தலையசைத்து அதை ஆமோதித்தான்.

அம்பலவாணன் ஈஸ்வரை பார்த்து “உங்களை பார்த்ததுமே.. எனக்கு..உங்களோட…ஏதோ பல ஜென்ம தொடர்பு போல இருக்கு…எந்த தயக்கமும் இல்லாம…இதுவரைக்கும் இந்த வீட்டுல நடந்த எல்லா விஷயங்களையும் சொல்லணும் போல இருக்கு.. ” என சொல்லி ஒரு பெருமூச்சு விட்டு

எல்லா வசதியும் செஞ்சு தரோம்னு சொன்னாங்க..அவனும் போனான்” என்றார்.

ஈஸ்வர் “ஓஹோ.. உங்க பையன் வெளி நாட்டுல தான் இருக்காரா” என்று கேட்டான்.

அம்பலவாணன் “இல்ல தம்பி.. அங்க போன கொஞ்ச நாள்லயே அவனுக்கு அடிக்கடி உடம்பு சரியில்லாம போகவே.. திரும்ப இங்கயே வந்துட்டான்” என்றார்.

“இப்ப உங்க பையன் என்ன பண்றார் சார்” என்ற ஈஸ்வரின் கேள்விக்கு “அவனும் என்னை போலவே தொல் பொருள் ஆராய்ச்சி படிப்பு படிச்சிருக்கான்.கல்வெட்டு ஆராய்ச்சில பி. எச்.டி வாங்கி இருக்கான்.. அதுவும் கோல்ட் மெடலோட..”

“அவன் டாக்டர் படிப்பு முடிச்சதும் நிறைய வெளிநாடுகள்ல வேலை குடுக்கறோம். குடும்பத்தோட வந்து எங்க ஊர்லயே தங்கிடுங்க.. எல்லா வசதியும் செஞ்சு தரோம்னு சொன்னாங்க..அவனும் போனான்” என்றார்.

ஈஸ்வர் “ஓஹோ.. உங்க பையன் வெளி நாட்டுல தான் இருக்காரா” என்று கேட்டான்.

அம்பலவாணன் “இல்ல தம்பி.. அங்க போன கொஞ்ச நாள்லயே அவனுக்கு அடிக்கடி உடம்பு சரியில்லாம போகவே.. திரும்ப இங்கயே வந்துட்டான்” என்றார்.

“இப்ப உங்க பையன் என்ன பண்றார் சார்” என்ற ஈஸ்வரின் கேள்விக்கு அம்பலவாணன் “என் கல்வெட்டு ஆராய்ச்சிக்கு எல்லாம் என் கூட வருவான்… ரொம்ப பொறுமையானவன்… எத்தனை நாள்னாலும் அமைதியா என் கூடவே இருந்து எனக்கு உதவி செய்வான்..”

“நான் கல்வெட்டு ஆராய்ச்சி செய்யவன்ங்கறதால, இந்த படிப்பு, ஆராய்ச்சி சம்பந்தப்பட்ட ஆட்கள் நிறைய பேர் என்னை அடிக்கடி தேடி வருவாங்க.. சில உதவி கேட்பாங்க.. நானும் போய் செய்வேன்..”

“அப்படி தான் அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி மேத்தானு ஒருத்தர் வந்தார். அவர் தன்னை ஒரு தொல் பொருள் ஆராய்ச்சியாளர்னு சொல்லிக்கிட்டார்…”

“அவர் கல்வெட்டுகளை படிக்கறது சம்பந்தமா ஏதோ புதுசா ஆராய்ச்சி பண்றதாகவும்.. அதுக்கு நான் அவருக்கு உதவி பண்ணணும்னு சொல்லிகிட்டு தான் எனக்கு பொதுவான ஒரு நண்பர் மூலமா அறிமுகமானார்.

“அவர் சில சந்திப்புலயே சகஜமா பழக ஆரம்பிச்சார்.. நான் அவர் கூட தமிழ் நாட்டு கோயில்கள், ஆந்திரா, கர்நாடகா கோயில்கள்னு பல கோயில்களுக்கு போய் இருக்கேன்.”

“கல்வெட்டுக்களை நான் படிச்சு சொல்வேன்.. அவர் பிரதி எடுத்துப்பார்.. அவரை போலவே கல்வெட்டு ஆராய்ச்சி பண்ற அவரோட நண்பர்கள் சிலரையும் எனக்கு அறிமுகம் செஞ்சு வெச்சார்.”

“அவங்களும் எங்க கூட வருவாங்க.. கல்வெட்டுக்களை பத்தி நிறைய கேள்வி துருவி, துருவி கேப்பாங்க..
நோட்ல நிறைய குறிப்புகள் எழுதிப்பாங்க.. “

“ஊரு, கோயில் பேரு எல்லாம் சொல்ல சொல்லி, அங்க இருக்கிற சிறப்பு, நாங்க புதுசா தெரிஞ்சுக்கிட்டது எல்லாம்
அவங்களோட ரெக்கார்டர்ல என்னை பேச வெச்சு பதிவும் செஞ்சுப்பாங்க.”

“நானும் அப்பாவியா அவங்க ஆராய்ச்சி செய்ய வந்தங்கனு நம்பிட்டு இருந்தேன் தம்பி”

“அப்பறம் என்னாச்சு.. அவங்க சரியில்லாதவங்களா சார்” என ஈஸ்வர் கேட்க..

அம்பலவாணன் “சொல்றேன் தம்பி.. எல்லாத்தையும் சொலாறேன்…..நாங்க எல்லாம் ஒரு தடவை கங்கை கொண்ட சோழபுரம் போனோம்.. அங்க இருந்த கல்வெட்டுகளை படிச்சிட்டு இருக்கும் போது..அவர் திடீர்னு என்னை பார்த்து ஒரு கேள்வி கேட்டார் பாருங்க… நான் அந்த கேள்வியால ஆடி போயிட்டேன்..(ஐந்தாம் பாகம் முடிந்தது)

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
1
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்