Loading

“என்னடி செஞ்சுட்டு இருக்க?” கிரைண்டருக்குள் தலையை விட்டுக் கொண்டிருந்த நிதர்ஷனாவைப் புரியாமல் ஏறிட்டான் யாஷ் பிரஜிதன்.

“பார்த்தா தெரியல. மாவு ஆட்டிட்டு இருக்கேன்!” எனப் பதில் உரைத்தவள் மீண்டும் கிரைண்டரில் கவனம் செலுத்த,

“மெண்டல்” என முணுமுணுத்துவிட்டு தனது வேலையைப் பார்க்கச் சென்றான்.

நிதர்ஷனாவோ முயன்ற அளவு அவனுடன் பேசுவதை தவிர்த்து விட்டு, அடுக்களையே கதி எனத் தீவிர பாவனையுடன் வேலை செய்வது போல காட்டிக்கொண்டாள்.

அவனுடன் இருக்கும் நிமிடங்களில் எல்லாம், தான் அவன் புறமே சாய்வது புரிந்தது அந்தச் சின்ன உள்ளத்திற்கு.

சில மணி நேரத்தில் மாவு அடங்கிய பாத்திரத்துடன் ஆதிசக்தியின் வீட்டிற்குச் சென்றவள், நேராக அடுக்களைக்குச் சென்று கிருஷ்ணவேணியிடம் பாத்திரத்தை நீட்டினாள்.

“என்ன ரித்தி இது?” எனக் கையைப் புடவை முந்தானையில் துடைத்து விட்டு அதனைத் திறந்து பார்த்தவர், “ஏன்மா… நேத்து தான வீட்ல மாவு அரைச்சோம். ஏன் கடைல போய் வாங்கிட்டு வர்ற?” எனக் குறை பட்டுக்கொண்டார்.

“அட பெரியம்மா… இது கடைல வாங்குனது இல்ல. நானே அரைச்சேன்” என சொல்லும்போதே உள்ளே ஆதிசக்தியும் வந்து விட்டவர், அவளை அமைதியாக ஏறிட்டார்.

ஏற்கனவே, இளவேந்தனும் தனது சந்தேகத்தை மனையாளுடன் பகிர்ந்திருந்தார். அதில் இருந்தே அவருக்குள் சந்தேகம் வலுத்துக் கொண்டிருந்தது.

இப்போதோ இட்லி மாவுடன் வந்தவளிடம் “இதெல்லாம் உனக்கு எப்படி தெரியும். லேப்லேயே உனக்கு டைம் போய்டுமே” என ஆழம் பார்த்தார் ஆதிசக்தி.

“ஆமா ஆமா… லேப்ல வேல இருந்தாலும் என் அம்மா வீட்டு வேலையும் பார்க்கணும்னு இதெல்லாம் சொல்லிக் குடுத்தாங்க” என அசட்டுச் சிரிப்புடன் சமாளித்தாள்.

ஆதிசக்தி அவளைக் கூர்மையுடன் பார்த்து, “உன் அம்மா தான் கொஞ்ச வருஷத்துக்கு முன்னாடி இறந்துட்டாங்களே” என்றார்.

அதில் திகைத்தவள் திணறலுடன், ‘இந்த கலப்படக்கண்ணுக்காரன் இதை நம்மகிட்ட சொல்லவே இல்லையே!’ எனப் பதறி திருதிருவென விழித்தாள்.

ஆகினும் சமாளிக்கவில்லை என்றால், யாஷ் தன்னைக் கும்மி விடுவான் என்ற பயத்தில், “அது… அது… பெத்தா தான் பிள்ளையா” என ஏதேதோ உளறியவள், யாஷிற்கு ஒரு அத்தை இருப்பதாக சொல்லியது நினைவு வந்ததும், அதையே அவரிடம் கூறி வைத்தார்.

“என் அப்பாவுக்கு ஒரு தங்கச்சி இருக்காங்க. அவங்க தான் எனக்கு அம்மா மாதிரி!” என்றவள் ‘அப்பாடா சமாளிச்சுட்டோம்’ எனக் குதூகலித்தாள்.

ஆதிசக்தியின் முகம் கடுகடுத்தது. வரதராஜனுக்கு சொத்து சுகம் அதிகம் இருந்த அளவிற்கு உறவினர்கள் கூட்டம் இல்லை. ஆதிசக்திக்கும் அலெஸ்ஸாண்டரோவிற்கும் திருமணம் நிகழும்போதே வரதராஜனுக்கு இருந்த ஒரே சொந்தமான அவரது தந்தையும் இறந்திருந்தார். இவளென்னவோ புது கதை சொல்கிறாளே! என்றிருந்தது ஆதிசக்திக்கு.

துளிர்த்த சந்தேகத்தை உள்ளுக்குள் அசைபோட்டபடி இருக்க, இரவும் வந்தது.

இரவு உணவாக நிதர்ஷனா அரைத்த மாவில் தான் கிருஷ்ணவேணி இட்லி வார்த்தார். அவள் கூறியது போலவே பஞ்சைப் போல மென்மையாக இருந்தது இட்லி.

“உன் மருமக கெட்டிக்காரி தான் ஆதி. வீட்டு வேலையையும் நல்லா தெரிஞ்சு வச்சுருக்காளே. அப்பறம் ஏனாம் உன் பையன் சமைக்க கூட மெஷின் வச்சிருக்கான்” எனச் சலித்துக் கொண்டு மற்றவர்களுக்கும் பெருமையுடன் பரிமாறினார்.

அலுவலகத்தில் வேலையில் மூழ்கி இருந்த யாஷ் பிரஜிதன், பகல் முழுக்க அறையை விட்டு நகரவே இல்லை அவன். வெறும் பழத்தை உண்டபடி பொழுதை நகற்றிட, இரவு உணவு நேரத்தில் பொறுக்க இயலாதவளாக அவனது அலுவல் அறைக்குள் நுழைந்தாள் நிதர்ஷனா.

“யோவ்… காலைல இருந்து இடத்தை விட்டு அசையாம அப்படி என்ன தான் செஞ்சுட்டு இருக்க? வா சாப்பிடலாம்” என அழைத்திட, “நீ போ. ஒர்க் ஆர் தேர்…” முதலில் வேலை தீவிரத்தில் அமைதியாக கூறினான்.

“நீ மனுசனா என்ன… ஒரு இன்ச் கூட நகராம உக்காந்துருக்க. என்ன வேலையா இருந்தாலும் சாப்பிட்டு வந்து பாரு யாஷ்” அவள் கண்டிப்பும் உரிமையும் கலந்து அழைக்க, அது எதுவும் அவன் காதில் விழுகவில்லை.

அவன் முன்னே இருந்த நான்கு மானிட்டரையும் மாறி மாறி பார்த்து புருவம் சுருக்கிய நிலையிலேயே இருந்தான்.

‘இது ஆவுறதுக்கு இல்ல’ என்றபடி ஓரத்தில் இருந்த ஸ்விட்ச்களை எல்லாம் மொத்தமாக அணைத்து விட, அவன் முன்னே ஒளிர்ந்திருந்த கணினிகள் எல்லாம் ஒரே நேரத்தில் அணைந்து விட்டது.

சுறுசுறுவென ஆத்திரம் எழுந்திட, அவளை சப்பென அறைந்து விட்டான்.

“சென்ஸ் இருக்கா உனக்கு. இட்டாலி ப்ரெசிடெண்ட்டோட ஆன்லைன்ல கனெக்ட் ஆகி இருந்தேன். இடியட் இடியட்… அவுட்” என்றபடி அவசரமாக கணினிகளை மீண்டும் உயிர்பித்தவன், “ஏதோ பிராவர்ப் சொல்லுவாங்களே… வாட்ஸ் தட்…” என நெற்றியில் ஒற்றை விரல் தட்டி சிந்தித்து, “ஹான்… டாகை பாத் பண்ணி சென்டர் ஆஃப் தி ஹோம் வச்சாலும், அதோட ஹேபிட் மாறாதுன்னு சொல்வாங்கள்ல… நான்சென்ஸ். அவங்க அவங்க இடத்துல வைக்கணும்” இறுதி வரியை வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டாலும் அவளுக்கும் தெளிவாகக் கேட்டது.

ஏற்கனவே கன்னத்தில் கை வைத்து அதிர்ந்து நின்றிருந்தவள், அவனது கூற்றில் மூச்சிரைக்க முறைத்தாள்.

“நான் நாயாவே இருந்துட்டுப் போறேன். இனிமே உங்கிட்ட வந்து பேசுனா என்னை செருப்பால அடி!” எனத் தேம்பலுடன் அறையை விட்டு வெளியேற, “ரொம்ப ஹேப்பி” என சிடுசிடுப்புடன் மீண்டும் வேலையைத் தொடர்ந்தான்.

‘சரியான ரோபோ. அரக்கா… அந்த ரூம்க்குப் போனாலே அடிக்கிறான்… போயா… நீ சாப்பிட்டா என்ன சாப்பிடலைன்னா எனக்கு என்ன!’ எனக் கோபித்துக் கொண்டு அறைக்குச் சென்று விட்டாள்.

இணையத்தில் ஏதோ பிரச்சினை என சமாளித்து மீண்டும் மீட்டிங்கை தொடங்கியவனின் ஓரப்பார்வை சிசிடிவி காணொளியில் தெரிந்த பெண்ணவளின் பிம்பத்தைத் தழுவியது.

அவனது அறையில் கட்டிலில் கன்னத்தில் கை வைத்து அமர்ந்திருந்தாள். முகத்தில் டஜன் கணக்கில் சோகம் வழிந்தது.

அடுத்த அரை மணி நேரத்திற்குள் மீட்டிங்கை முடித்தவனை அலெஸ்சாண்டரோ வீடியோ காலில் பிடித்தார்.

“ரிசர்ச் எந்த அளவு போயிட்டு இருக்கு யாஷ்? ஒர்கவுட் ஆகுமா?”

“அப்டேட்ஸ் உங்களுக்குத் தெரியுமே பாப்பா…”

சொன்னபடி எழுந்தவனின் கண்கள் மீண்டும் சிசிடிவி காணொளியைக் காண, அவன் கண் போன போக்கை அவரும் கண்டுவிட்டு, “ஐ ஆம் டாக்கிங் டூ யூ யாஷ்”என்றார். நல்லவேளையாக அவருக்கு அந்தக் காணொளி தெரியவில்லை.

“ஐ ஆம் ஹியரிங்” என்றவன் தந்தையைப் பார்க்க, அவரோ அடுத்த வார்த்தை பேசும் முன், “குட் நைட்” என்று அழைப்பைத் துண்டித்து விட்டான்.

துரித நடையுடன் அறைக்குச் சென்றவன், அங்கு நிதர்ஷனா தனது நிலையை மாற்றாமல் அமர்ந்திருந்ததைக் கண்டும் காணாதவாறு குளியலறைக்குச் செல்ல, “ஆலம்பனா ஹாட்வாட்டர்” என உத்தரவிட்டான்.

நிதர்ஷனா அவனைக் கண்டதும் முகத்தைத் திருப்பிக்கொள்ள, கையில் இருந்த கைக்கடிகாரத்தைக் கழற்றியபடியே “ஏய் ஆலம்பனா காதுல விழுகல. கெட் மீ ஹாட் வாட்டர்” என்றான் அவளைக் கிண்டல் செய்யும் பொருட்டு.

“ஏன் உன் ஆலம்பனாக்கு கால்ல சுளுக்கா. போய் உன் ரோபோட்டயே கேளு. நான் என்ன உன் பொண்டாட்டியா… ஆஃப்டர்ஆல் நாய் தான…” என்றாள் உர்ரென.

சட்டையைக் கழற்றி விட்டு அவளை நோக்கி வந்தவன், இயல்பாக அவளருகில் அமர, அவளோ நகர்ந்தமர்ந்து “குளிக்க தான போன… எதுக்கு இங்க வந்து உக்காருற. மொதோ போய் சட்டையை போடுயா” என கரித்துக் கொட்டினாள்.

“நான் ஒரு முக்கியமான வேலைல இருந்தேன்டி. என்னோட ரிசர்ச்ல ஃபைனல் பார்ட்டை டெஸ்ட் பண்ணிட்டு இருக்கும்போது கரெக்ட்டா வந்து பவர் ஆஃப் பண்ணிட்டா எனக்கு கோபம் வராதா?” என சமாதானமாகப் பேசியபடி அவள் கையைப் பிடிக்க,

அதனை உதறியவள், “இங்க நாலு கம்பியூட்டர் தான வச்சுருக்க. இதுல எங்கிருந்து ரிசர்ச் பண்ணிட்டு இருக்க? ஏதோ சாப்பிடாம வேலை பாக்குறியேன்னு தான வந்து கூப்பிட்டேன். அப்பவே முக்கியமான வேலைன்னு சொல்லிருந்தா போயிருப்பேன்ல” என மூக்கை உறிஞ்சினாள்.

“காலைல இருந்து சாப்பிட கூட வராம இருக்கேன்னா இம்பார்ட்டண்ட் ஒர்க்னு புரிய வேணாமா?” அவனும் உரிமையாய் கோபம் கொண்டான்.

“நீ வேலைன்னு வந்துட்டா உண்மையாவே வெள்ளைக்காரனா இருப்ப… ரெண்டு மூணு நாள் ஆனாலும் வெளில வர மாட்ட. யாரும் உன்னைக் கூப்பிட மாட்டாங்கன்னு நீ தான சொல்லிருக்க. அப்ப யாரும் இல்ல கூப்பிடல. இப்ப தான் நான் பக்கத்துல இருக்கேனே. அதெப்படி உன்னை நாள் முழுக்க வேலையைப் பாருன்னு உள்ள போட்டு பூட்டி வைக்க முடியும்? அதான் வந்து கூப்பிட்டேன். அதுக்கு தான் எனக்கு நாய்னு பட்டம் குடுத்துட்டியே” என்றாள் கண்ணில் நீர் துளிர்க்க.

தனது தவறு உறைக்க, மீண்டும் அவள் கையைப் பிடித்துக் கொண்டவன், “ரிசர்ச் சம்பந்தமான பேக் ஒர்க் எல்லாம் நான் இங்க இருந்து தான் பாக்குறேன். என்னோட மெய்ன் லேப் இத்தாலில இருக்கு. அங்க இருக்குற என் அசிஸ்டன்ஸ் என்னோட ஃபார்முலாஸ், ஐடியாஸ் யூஸ் பண்ணி அவங்க அங்க இருக்குற ஸ்பேஸ்க்கு அனுப்புறதுக்கான ஏஐ ரோபோட்ல ஒர்க் பண்ணுவாங்க.

ஸ்பேஸ்ல அந்த ரோபோ ஒர்க் பண்ண கூடிய பேசிக் பார்முலா தவிர மத்த எல்லாமே நான் முடிச்சுட்டேன். ஆனா அங்க போய் அது எந்த ப்ராபளமும் இல்லாம ஒர்க் பண்ணனும்னா அதுக்கான சில பேஸிக்ஸ் வேணும். நான் இங்க இருந்தே என் அசிஸ்டன்ஸ் வச்சு என் மெய்ன்லேப்ல இருக்குற ரோபோட்ல டெஸ்ட் பண்ணி பாப்பேன். அந்த டெஸ்டிங் முடிய முழுசா அஞ்சு மணி நேரம் வேணும். அந்த டெஸ்டிங்க ரிசர்ச் ஹெட் ப்ரெசிடெண்ட் முன்னாடி தான் நடத்தணும். கரெக்ட்டா ஃபைனல் ஸ்டேஜ் வர்றப்ப நீ சுவிட்ச் ஆஃப் பண்ணிட்ட. அந்தக் கோபத்துல தான் அடிச்சுட்டேன் கடன்காரி. மை அபாலஜிஸ்…” என அவள் புறம் குனிந்து மன்னிப்பு வேண்டினான்.

“அப்போ நீயே கண்டுபிடிச்சுட்டியா?” அவள் விழி விரித்துக் கேட்க,

“கிட்டத்தட்ட, அதுக்குள்ள தான் நீ சிஸ்டம ஆஃப் பண்ணிட்டியே. முழுசா பண்ணிருந்தா ஒரு ஐடியா கிடைச்சுருக்கும். பார்பசா திட்டல நிதா. கோபத்துல பேசிட்டேன். ஒன்ஸ் அகைன் சாரி!” என்றான் உண்மையான வருத்தத்துடன்.

அவனது பேச்சு வருத்தம் கொடுத்தாலும், அவனது வேலைக்குள் தலையை நுழைத்ததன் தவறு புரிய, அரைமனதாக தலையாட்டினாள்.

“அப்போ மறுபடியும் டெஸ்டிங் பண்ணி பார்க்க முடியாதா?”

“ப்ரெசிடெண்ட்க்கு வேற வேலை இல்லையா… அவர் டேட் ஃபிக்ஸ் பண்ணா தான் அடுத்து பண்ண முடியும். தனியாவும் இதை ட்ரை பண்ணி பார்க்க கூடாதுன்னு ரூல்! இன்னும் ரெண்டு நாள்ல ஆன்லைன் வர்றதா சொல்லிருக்காரு. அதுல ஓகே ஆனா, அப்பறம் நேர்ல போய் நான் செக் பண்ணனும். அப்பறம் சில ப்ராசஸ் இருக்கு. ஒருவேளை அது ஒர்கவுட் ஆகலைன்னா நான் வேற வழி யோசிக்கணும். லாஸ்ட் ஃபைவ் இயர்ஸா என்னை ரொம்ப சோதிச்சுட்டு இருக்கு…” எனச் சோர்வாய் புன்னகைத்தவன், “ஹங்க்ரி ஆலம்பனா!” என வயிறைப் பிடித்துக் கொண்டான்.

“சாரி யாஷ். முன்னாடியே சொல்லிருந்தா நான் வந்துருக்கவே மாட்டேன். எப்பவும் போல வேலை பார்த்துட்டு இருக்கீங்கன்னு நினைச்சுட்டேன்…” என்றவளுக்கு தன்னால் அவனது வேலையில் ஏற்பட்ட குளறுபடியில் உள்ளம் வெதும்பியது.

அவளால் அவனது வாழ்விலேயும் இலட்சியத்திலேயுமே குளறுபடி நேரப்போவது அறியாதவளாய் இந்தச் சிறு விஷயத்திற்காக வெகுவாக வருந்தினாள்.

“இட்ஸ் ஓகேடி. பாத்துக்கலாம்! நான் குளிச்சுட்டு வரேன்” எனக் குளியலறைக்குச் செல்ல, அவளது முகம் இன்னும் தெளிவடையவில்லை.

குளித்து முடித்து டைனிங் டேபிளுக்கு வந்தவனை இட்லி சாம்பார் வாசனை அதிகமாய் பசியைத் தூண்டியது.

அவனுக்கு உணவை எடுத்து வைத்தவள், அமைதியாக நிற்க, அவனோ இட்லி சாம்பாரை சுவைத்து விட்டு, விழி உயர்த்தினான்.

“யூ ப்ரிப்பேர்ட் திஸ்?” ஆச்சர்யமாகக் கேட்டவன், “மார்னிங் ஏதோ பேட்டர் ரெடி பண்ணிட்டு இருந்தியே அதுவா?” என வினவிட, “ம்ம்” என்றாள்.

“எனக்காக காரம் கம்மியா போட்டியோ?” ரசனைப் பார்வையை அவள் மீது வீசிட,

“ம்ம்” என்றவள் அவனருகில் நின்றபடி டைனிங் டேபிளை சுரண்டியவளிடம், “நீ சாப்டியா?” எனக் கேட்டான்.

“பசிக்கல” நிதர்ஷனா கூறியதும், உண்பதை நிறுத்தியவன், “டைம் ஆல்மோஸ்ட் டென். இந்நேரம் சாப்பிட்டு தூங்கிருப்பியே…” என யோசனையாகக் கேட்டவன் அவள் முகம் வாடி இருப்பதைக் கண்டு, “சிட்” எனப் பக்கத்து இருக்கையைக் காட்டினான்.

“இல்ல நீங்க சாப்பிடுங்க” அவள் மறுக்க,

“உக்காருன்னு சொன்னேன்…” என்றான் யாஷ்.

அவனது அழுத்தத்தில் அருகில் அமர்ந்தவள், அமைதியாக இருக்க, இட்லியை சாம்பாரில் தோய்த்து அவளுக்கு ஊட்டினான்.

அதில் திகைத்தவள், “நீ சாப்பிடு அரக்கா…” என எழப்போக, “உக்காருன்னு சொன்னா கேட்க மாட்டியாடி” என ஒரு கையால் அவளை இழுத்தான்.

இழுத்த வேகத்தில் அவள் அவனது மடியிலேயே வந்து விழுக, யாஷ் பிரஜிதனின் தடித்த இதழ்கள் அவளது சிவந்த இதழை மெல்ல உரசிச் சென்றது.

இருவருமே அதனை எதிர்பாராது ஒரு நொடி அதிர்ந்தனர்.

யாஷ் இயல்பாக அதில் இருந்து மீண்டு விட, நிதர்ஷனா அந்த இதழ் தீண்டிய நொடியிலேயே உறைந்து விட்டாள்.

“இட் வாஸ் ஆன் ஆக்சிடென்ட் ரைட்!” எனக் கூறி விட்டு மீண்டும் உண்ணத் தொடங்கியவன், அவளுக்கும் ஒரு வாய் கொடுத்தான்.

வீம்பு பிடிக்க கூட தெம்பற்று அதனை வாங்கிக்கொண்டவள், அவனது மடியில் இருந்து எழுந்து வேறொரு தட்டில் தனக்கு வைத்துக்கொண்டாள்.

‘இதை முதல்லயே செஞ்சுருக்கலாம்’ எனத் தன்னையே திட்டிக்கொண்டவளுக்கு இன்னும் அவனது சூடான மூச்சுக்காற்று அவளது மூக்கோடு உரசியதன் தாக்கம் அகலவே இல்லை.

அடுத்த இரு நாள்களும் அவளது முகம் தெளிவு பெறாததால், “இங்க இருந்து கிளம்பும்போது உனக்கு ஒரு சர்ப்ரைஸ் சொல்லலாம்னு இருந்தேன்…” என்றான் அவளது முகவடிவைக் கண்களால் அளந்தபடி.

பால்கனியின் நின்று எங்கோ இலக்கின்றி பார்த்திருந்தவள் ஆடவனின் குரலில் திரும்பினாள்.

“என்ன? என் அண்ணனை பத்தியா?” அவளிடம் சிறு ஆர்வம்.

“ம்ம்ஹும்” அவள் மறுப்பாய் தலையசைக்க காற்று போன பலூன் போல மீண்டும் வாடினாள்.

அவன் அடுத்து பேச வரும்முன், கண்மணியின் குரல் கேட்டது.

“அண்ணா… அண்ணி” கீழிருந்தே கண்மணி குரல் கொடுக்க இருவரும் கீழிறங்கினர்.

யாஷ் கதவைத் திறந்து, “என்ன கண்மணி?” எனக் கேட்டான்.

எப்போதும் அவளைக் கண்டதும் இறுகும் முகம் இன்று இயல்பாக இருந்ததில் அவளுள் சிறு குதூகலிப்பு.

“இன்னைக்கு பாட்டியோட பிறந்த நாள் அண்ணா. எப்பவும் இந்த நாள்ல தாத்தா அன்னதானம் ஏற்பாடு பண்ணுவாரு கோவில்ல. நீங்களும் கலந்துக்கணும்னு தாத்தா கூப்பிட்டு விட்டாரு… வர்றீங்களா?” கண்மணி ஆர்வத்துடன் கேட்க, “சியூர்” என்றான் தோளைக்குலுக்கி.

அதில் புன்னகைத்தவள், “தேங்க்ஸ் அண்ணா… நான் தாத்தாட்ட சொல்றேன்” என வேகமாக வீட்டை நோக்கி ஓடினாள்.

“உனக்கான சர்ப்ரைஸ இன்னைக்கே சொல்லட்டா? இல்ல என் ரிசர்ச் சக்ஸஸ் ஆனதும் சொல்லட்டா கடன்காரி?” எனக் கேட்டான் கண்சிமிட்டி.

அதில் சறுக்கிய மனமதை பிடித்து வைக்க இயலாதவளாக அவனிடமே பறிகொடுத்தவள், அடுத்த கேள்வி கேட்க தோன்றாது அவனருகில் இருந்தபடி தன்னை மறைக்கவும் இயலாது ஆதிசக்தியின் வீட்டிற்கு சென்றாள்.

அவள் பின்னே யாஷ் பிரஜிதனும் செல்ல, அவனை வழிமறித்த ஆதிசக்தி, “ரித்தியோட அத்தை எப்படி இருக்காங்க யாஷ்?” எனக் கேட்டார் நக்கலாக.

ஒரு கணம் விழி சுருக்கியவன், “அத்தையா?” எனக் குழம்பிட, அவனிடம் நேரடியாக கேட்டதில் பதறிய நிதர்ஷனா வேகமாக யாஷுடைய கையைப் பிடித்தாள்.

“அதான் யாஷ், அப்பாவோட தங்கச்சி இருக்காங்கள்ல… நான் கூட அவங்களை அம்மான்னு கூப்பிடுவேனே” என சமாளிக்க முற்பட, ‘அட கடன்காரி’ என மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டவன் தாயைக் காண, அவரோ அவனைப் பார்வையாலே பொசுக்கினார்.

அதனைக் கண்டுகொள்ளாத யாஷ் பிரஜிதன், “ஓ! தட் அத்தையை சொல்றியா? ஓகே ஓகே” என அவனும் அவளுக்கு ஆதரவு தெரிவித்து விட்டு, “கண்மணி” என அழைத்தான்.

‘ஹையோ அண்ணா இன்னைக்கு அடிக்கடி என் பேர் சொல்றாங்களே’ என கண்மண் தெரியாத சந்தோசத்துடன் வேகமாக ஓடி வந்தவள், “சொல்லுங்கண்ணா” எனக் கேட்க, “மிஸ்டர் இளவேந்தன் எங்க?” எனக் கேட்டான்.

“அப்பா ரூம்ல இருக்காரு…” என்றதும், “ம்ம்… உன் அண்ணியைக் கோவிலுக்கு கூட்டிட்டுப் போ. நான் பின்னாடி வரேன்…” என ‘அண்ணி’ என்ற வார்த்தையை அழுத்தமாக ஆதிசக்தியைப் பார்த்தே கூறிட, “சரிங்கண்ணா” என்றாள் தலையாட்டி.

இளவேந்தனைத் தேடி அறைக்குச் சென்றவன், அங்கு சென்றதும் கதவை அடைத்தான். கோவிலுக்கு வேட்டி சட்டையுடன் தயாரான இளவேந்தன் யாஷ் பிரஜிதனைக் கண்டு விழித்தார்.

“உங்களுக்கும் உங்க பிலவ்ட் வைஃப்க்கும் ரித்தி பத்தின உண்மை தெரிஞ்சுருக்கும் ரைட்?” கையைக் கட்டிக்கொண்டு கேட்க, அவர் முகம் மாறினார்.

“இது தப்பு யாஷ். ஆள் மாறாட்டம் பண்ணி இன்னொரு பொண்ணை பொண்டாட்டின்னு கூட்டிட்டு வர்றதுலாம்…” என அவர் ஆரம்பிக்க, கையை நீட்டி அவரைத் தடுத்தவன், “இதை பத்தி டிஸ்கஸ் பண்ண இங்க வரல… உங்ககிட்ட சில கேள்விகள் கேட்கணும் அதான் வந்தேன்” என்றான்.

இளவேந்தன் என்னவென பார்க்க, அவனது அலைபேசியில் பதியப்பட்டிருந்த மகேந்திரன் வைத்திருந்த குடும்ப புடைப்படங்களை எடுத்துக் காட்டினான்.

“இது உங்க ஃபேமிலி போட்டோ தான?” யாஷ் கேட்டதும் அவர் ஆமென தலையசைத்தார்.

“இதுல இந்த ஓரத்துல நிக்கிறது யாரு?”

இளவேந்தன் தனது கண்ணாடியை அணிந்தபடி அந்தப் பழைய புகைப்படத்தை உற்று நோக்கி விட்டு, “இது நீலகேசி” என்றார்.

“யார் அது?”

“எங்க வீட்ல தான் ரொம்ப வருஷமா வேலை செஞ்சுட்டு இருந்தான்.”

“ஓ! வீட்டு வேலைக்காரன் ரைட்? அவன் தோள்ல உரிமையா கை போட்டு இருக்கீங்க?” சந்தேகமாக யாஷ் வினவ,

“ஒரு வகைல தூரத்து சொந்தம் அவன். எங்க கூட ரொம்ப வருஷமா இருந்தான். அவனை நாங்க எங்க வீட்ல ஒரு ஆளா தான் பார்த்தோம். வேலைக்காரனா பார்க்கல யாஷ். எதுக்கு இதை கேட்குற?” என்றார் குழப்பமாக.

அதற்கு பதில் கூறாதவனாக, “இப்ப இவன் எங்க இருக்கான்?” எனக் கேட்டான்.

“கொஞ்ச வருஷத்துக்கு முந்தி இறந்துட்டதா கேள்விப்பட்டேன். ரொம்ப வருஷம் முன்னாடியே இவன் இங்க இருந்து போய்ட்டான்.”

“ரொம்ப வருஷத்துக்கு முன்னாடின்னா எப்போ?”

“ஒரு இருபது வருஷத்துக்கு மேல இருக்கும்…”

“அதாவது உங்க தங்கச்சி இறந்த கொஞ்ச நாள்ல” யாஷ் பிரஜிதன் அர்த்தமாய் கேட்டதும் அவரிடம் சிறு அதிர்வு.

“ம்ம்…”

“உங்க வீட்லயே ரொம்ப வருஷமா வேலை பார்த்துட்டு இருந்தவன் திடீர்னு வேலையை விட்டுப் போனது ஏன்னு சந்தேகம் வரலையா?” அவரைக் குறுகுறுவென பார்த்தபடி கேட்டான் யாஷ்.

“அவன் என் வீட்ல வேலை பார்க்கல யாஷ். இந்த வீட்ல வேலை பார்த்தான். அதாவது, உன் அப்பா, அம்மாவுக்கு கல்யாணம் நடக்குற வரைக்கும் இந்த வீட்ல மகேந்திரன் மாமாவோட அண்ணன் குடும்பம் எல்லாரும் கூட்டு குடும்பமா தான் இருந்தாங்க. என் அப்பா, அம்மா சின்ன வயசுலயே தவறுனதுனால நானும் என் தங்கச்சியும் குறிப்பிட்ட வயசு வரைக்கும் இங்க தான் வளர்ந்தோம்.

என் அப்பா விட்டுட்டுப் போன கொஞ்ச நஞ்ச நிலத்தை தவிர எனக்குன்னு சொல்லிக்க எதுவும் கிடையாது என் படிப்பை தவிர. மகேந்திரன் மாமா மாதிரியே அவரோட அண்ணன்களும் எனக்கு சொந்த மாமாங்க தான். அவங்களுக்கும் பொண்ணுங்க இருந்தாங்க. என்னதான் சொந்த தங்கச்சி மகனா இருந்தாலும், நான் அவங்க பொண்ணுங்களை கட்டிக்க கேட்டுருவேனோன்னு ஒரு பயம் இருந்துச்சு அவங்களுக்கு. அதனால என்னை கொஞ்சம் ஒதுக்க ஆரம்பிச்சாங்க. அது புரிஞ்சதும் நான் தங்கச்சியைக் கூட்டிட்டு ரெண்டு தெரு தள்ளி இருந்த எங்க அப்பா வீட்டுக்கே போய்ட்டேன்.

அதுல மகேந்திரன் மாமா மட்டும் என்னை எப்பவும் விட்டுக்கொடுத்ததே இல்ல. என்னைப் படிக்க வச்சு ஆளாக்குனதே அவரு தான். ஆதியும் என்னை வேத்தாளா நினைச்சது இல்ல. ஆதி உன் அப்பாவை விரும்புனது தெரிஞ்சு மாமாவோட வீட்ல கலவரமே வெடிச்சுது. கொஞ்ச நாள்ல, மாமாவோட அண்ணன் ரெண்டு பேருமே ஒவ்வொருத்தரா மறைஞ்சுட்டாங்க. அப்பறம் அவங்க பேரப்பசங்க வளர்ந்து படிப்புக்குன்னு சென்னை பெங்களூர்னு போக வேண்டிய சூழ்நிலை வந்ததுல எல்லாரும் தனித் தனியா போய்ட்டாங்க. நீலகேசியும் அவங்களோட தான் ரொம்ப க்ளோஸ். அவங்கள்லாம் தனி ஊருக்குப் போகவும் நீலாவையும் சேர்த்துக் கூட்டிட்டுப் போய்ட்டாங்க.

சரியா அப்போ என் தங்கச்சி அமுதவல்லி இறந்த நேரம். அவனும் அவங்களோடவே போறேன்னு என்கிட்ட சொன்னது எனக்கு ஞாபகம் இருக்கு. அப்ப நான் இருந்த நிலைல அவனைத் தடுக்க கூட தோணல” எனக் கூறி முடித்தார் இளவேந்தன்.

“ம்ம்… இந்த நீலகேசிக்கு சொந்தபந்தம் ஏதாவது?”

“இல்ல. இவனுக்கு எங்க வீட்டைத் தவிர வேற எதுவும் தெரியாது. இந்த வீட்டு ஆளுங்களோடவே தான் இருப்பான்”

“ரைட் ரைட்!” என்றவன் தாடையைத் தடவியபடி, “உங்க தங்கச்சியோட கல்யாண போட்டோஸ் எதுவும் இல்லையே ஏன்?” எனக் கேட்டான் கூர்மையாக.

அதில் தடுமாறிய இளவேந்தன், “எதுவும் இருக்காது… எல்லாத்தையும் நான் எரிச்சுட்டேன்” என்றார் கண்ணில் மின்னிய தீயுடன்.

“ஏன்?”

“அதை பார்க்க பிடிக்கல. எரிச்சுட்டேன்” அவரிடம் எரிச்சல் தோன்றியது.

“ஏன் பார்க்க பிடிக்கல? அமுதவல்லிக்கு குழந்தை இருந்ததுல…” எனக் கேட்டதுமே இளவேந்தனுக்கு கண்ணீர் நிறைந்தது.

“ஆமா… குழந்தையோட தற்கொலை பண்ணிக்கிட்டா. தண்டவாளத்துல தலையைக் குடுத்து…” எனும்போதே உடைந்து விட்டார்.

இன்னும் அந்த வேதனை தீராது அவரை அணு அணுவாய் கொன்று கொண்டிருப்பது அவரது முகத்திலேயே தெரிந்தது.

“அது தற்கொலை தானா?” யாஷ் கேட்டதும் விருட்டென நிமிர்ந்தார்.

“யாஷ்? அது தற்கொலை தான்னு அப்பவே போஸ்ட் மார்ட்டம்ல சொன்னாங்க. ஏன் இப்படி கேட்குற. எனக்குப் படபடன்னு வருது” என நெஞ்சைப் பிடித்தார். மெல்ல வியர்த்தது.

மேஜை மீதிருந்த நீர் பாட்டிலை எடுத்து அவர் முன் நீட்டியவர், “கண்முன்னால நடக்குற எல்லாமே நிஜம் இல்லை மிஸ்டர் இளவேந்தன்… நீங்க தீவிரமா விசாரிச்சுருக்கணும். வாட் அபவுட் தி பேபி?” யாஷ் கேட்டதும், அவருக்கு தொண்டையெல்லாம் அடைத்தது.

“குழந்தையோட தான் அவ சூசைட் பண்ணிட்டா யாஷ்… நீ என்ன சொல்ல வர்ற?” மூச்சிரைக்க கேட்டார்.

“அதுக்கு முன்னாடி எனக்கு ஒரு விஷயம் சொல்லுங்க. அமுதவல்லியோட ஹஸ்பண்ட் யாரு? இங்க விசாரிச்சதுல சரியான தகவல் கிடைக்கல. ஏதோ வெளியூர் ஆளுக்கு கல்யாணம் பண்ணிக் குடுத்துருக்கீங்க…”

இறுகிப்போன முகத்துடன் அவனைப் பார்த்த இளவேந்தன், “வேணாம் யாஷ். என் குடும்பம் எனக்கு நிம்மதியா இருக்கணும். பழைய விஷயங்கள்னால திரும்ப திரும்ப பிரச்சினை வர்றதுல எனக்கு உடன்பாடில்ல. என்ன பாவம் செஞ்சோம்னு தெரியல… அறியாம செஞ்ச பாவத்தை எங்க கழுவுறதுன்னும் தெரியல. ரொம்ப பட்டுட்டோம். இதுக்குமேல முடியல. இந்த டாபிக்கை விட்டுடு ப்ளீஸ்!” என்றார் கெஞ்சலாக.

“ஓகே ரைட். நான் விட்டுடுறேன். ஆனா நீலகேசி உங்க வீட்டுக்கு ஆளுங்களோட வேலைக்குப் போறேன்னு பொய் சொல்லிட்டு உங்க தங்கச்சி குழந்தையைத் தூக்கிட்டுப் போய் தனியா வச்சு வளர்த்து உங்களை எல்லாம் முட்டாள் ஆக்குனது உங்களுக்கு தெரியவும் வேணாம். உங்க தங்கச்சி குழந்தையைப் பத்தி நீங்க தெரிஞ்சுக்கவும் வேணாம். ஓகே தான?” என அர்த்தமாய் கூறி விட்டு விறுவிறுவென வெளியில் நடக்க, இளவேந்தனுக்கு அதிர்ச்சியில் கண்ணை இருட்டியது.

ஒரு கணம் தான். வேகவேகமாக வெளியில் ஓடியவர் “யாஷ் யாஷ் நில்லு…” என அவனை மறித்து நின்றார்.

“என்ன சொல்ற நீ… நிஜமா தான் சொல்றியா?” என மூச்சு வாங்க கேட்டார்.

வீட்டினர் அனைவரும் கோவிலுக்குச் சென்றிருக்க, யாஷுடன் ஓடிப்பிடித்து விளையாடாதது ஒன்று தான் குறை அவருக்கு.

“பொய் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்ல மிஸ்டர் இளவேந்தன்!” நக்கல் நகையுடன் கூறியவன் மீண்டும் அவரைத் தாண்டி செல்ல, “ப்ளீஸ் யாஷ், என்னை சோதிக்காத. நீலகேசி ஏன் அமுதாவோட குழந்தையைத் தூக்கிட்டுப் போகணும், யார் அந்தக் குழந்தை எனக்கு ஒன்னும் புரியல. தலை வெடிக்குது. ப்ளீஸ் சொல்லு” எனக் கெஞ்சினார் கண்ணீருடன்.

“லுக் மிஸ்டர் இளவேந்தன்… நீங்களும் உங்க மிஸசும் என்னோட ஆராய்ச்சி முடியிற வரை ரித்தி பத்தின ஆராய்ச்சியை நிறுத்தி வச்சுக்கிட்டா, நானும் இங்க இருந்து கிளம்பும்போது உங்களுக்கு எல்லாத்தையும் விலாவாரியா சொல்லுவேன்… டெம்பிள்ல என் ஆலம்பனா வெயிட்டிங். சோ லெட்ஸ் கோ!” எனக் குளிர்கண்ணாடியை மாட்டிக்கொண்டு நடையைக் கட்டினான் யாஷ் பிரஜிதன்.

அன்பு இனிக்கும்
மேகா

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
27
+1
191
+1
10
+1
3

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்