Loading

ஹாய் டியர் ஃப்ரண்ட்ஸ்.. முதல்ல ஒரு விஷயத்தை தெளிவு படுத்திக்கிறேன். யாஷ் aalambanaannu நேம் மாத்துறதுல இருந்தே ஃப்ளாஷ் பேக் தான் போகுது. 14 ஆவது எபிசோட் la கதிரை திட்டிட்டு நிதா ரூம்க்கு போறா அவளுக்கு ஏதேதோ கிளாஸ் ஆகுது மண்டைக்குள்ள லைக் இதெல்லாம் ஆல்ரெடி நடந்து முடிஞ்சு யாஷ் அவளைத் திருப்பி வீட்டுக்கு அனுப்பிட்ட மாதிரி. ஆனா மறுபடியும் ஏன் கடத்தி இருக்கான்னு குழம்பி, தென் enna நடந்ததுன்னு யோசிச்சுப் பாக்குறா. முதல்ல இருந்து கடத்துன மாதிரி தான் அவன் ப்ளாஷ்பேக் ல கடத்தி இருப்பான். அப்போ நிஜமா கல்யாணம் பண்ணிருக்க மாட்டான், கதிர் தஞ்சாவூர்ல இருக்க மாட்டான். இப்ப நடக்கிறது எல்லாமே ப்ளாஷ்பேக். சில காரணங்களால அவளுக்கு மெமரி லாஸ் ஆகிடும் … இனி வர்ற எபிசோட் ல எல்லாம் புரியும் பட் இப்ப நடக்குது ப்ளாஷ்பேக்😆

அத்தியாயம் 17

மின்விளக்குகள் அணைந்து விட்டு, இன்வெர்ட்டரின் உதவியால் மீண்டும் உயிர்பெற்றது.

“என்ன ஆச்சு?” நிதர்ஷனா கேட்க,

“பவர் கட்!” என்றவன் தனது ஸ்மார்ட் கைக்கடிகாரத்தில் மணியைப் பார்த்தபடி எழ,

“அப்போ லைட்டெல்லாம் எரியுது?” எனப் பார்த்தாள்.

“இன்வெர்ட்டர் இருக்கு”

“ஓ! எவ்ளோ நேரம் தாங்கும்?”

“பவர் கம்மியா யூஸ் பண்ணுனா 2, 3 டேஸ் வரைக்கும் இருக்கும்” என்றபடி அவன் அலுவல் அறைக்குச் சென்று விட்டான்.

மூன்று மணி நேரம் கழித்து மீண்டும் தனதறைக்கு வந்தவன், மெல்லிய வெளிச்சத்தில் அமர்ந்து கைக்கட்டை நோண்டிக் கொண்டிருந்தவளைக் கண்டு புருவம் சுருக்கினான்.

“ஏன் லைட்டை எல்லாம் ஆஃப் பண்ணி வச்சுருக்க?” கேட்டபடி விளக்குகளை எரிய விட,

“வெளில மழையைப் பார்த்தீங்கள்ல… ரோடு கூட தெரியல. அப்படி மழை… இப்படியே போனா, கரண்ட் நாலு நாள் ஆனாலும் திரும்ப வராது… கரண்டை சேவ் பண்ணணும்ல லைட்டை ஆஃப் பண்ணுங்க” என்றாள்.

“வாட்? அப்படியெலலாம் தொடர்ந்து பவர் கட் ஆகுமா என்ன?” குழப்பமாக அவன் கேட்க,

“வருசா வருசம்… டிசம்பர் மாசம் முழுக்க நானும் நிவேவும் மெழுகுவர்த்தி கூட தான் குடும்பமே நடத்துவோம். எங்க ஏரியாண்ட சில நேரம் 10 நாள் கூட கரண்ட் வராம இருந்துருக்கு. இங்க எப்படின்னு தெரியல. ஆனா நம்ப முடியாது இந்த மழைய. ஒரு காட்டு காட்டிடும்” என எச்சரிக்கை விடுத்தாள்.

“இது வேறயா?” என எரிச்சலடைந்தவனுக்கு, இதனால தனது வேலையில் இடையூறு நேருமோ என்ற யோசனையும் எழுந்தது.

இணைய சந்திப்பின் வழியே தான், அவனது பணியாளர்களுக்கு வேலைகளை பிரித்துக் கொடுத்துக் கொண்டிருக்கிறான். புது புது யுக்திகளைக் கையாண்டு செயற்கை நுண்ணறிவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் அவனது முயற்சிக்கான வேலையை எதற்காகவும் நிறுத்தியது இல்லை.

எட்டு மணி நேரம் தொடர்ந்தும் மழை நின்ற பாடில்லை. தெருவிலும் மழை நீர் தேங்க ஆரம்பித்தது.

ஆஹில்யன் அவனுக்கு அழைத்து, “சார் நீங்க சேஃப் தான?” எனக் கேட்க,

“ம்ம்… என்ன நடக்குது?” என்றான் யாஷ் பிரஜிதன்.

“சார்… வெள்ளம் வர்றதுக்கான அறிகுறி இருக்குன்னு சொல்றாங்க சார். இன்னும் மூணு நாலு நாளைக்கு மழை விடாது போல. பவர் எப்ப வரும்னு ஐடியாவே இல்ல சார். உங்ககிட்ட இருக்குற பேக் அப் வச்சு பேசிக் யூஸ் மட்டும் பண்ணிட்டு மேனேஜ் பண்ணுங்க சார்” என்றிட,

“வாட் தி ஹெக்” எனக் கடுப்படைந்தான்.

“இங்க நெட்வொர்க்கும் எப்ப வேணாலும் போற நிலைமை சார். மழை நின்னுட்டா எல்லாம் நார்மல் ஆகிடும்…” என்றதில் அழைப்பைத் துண்டித்தவனின் முகத்தில் கோபம் வழிந்தது.

“என்ன ஆச்சு யாஷ்?” அவன் முகம் பார்த்து நிதர்ஷனா கேட்க, யாஷ் விவரம் கூறியதும் “அவ்ளோ தானா… இதெல்லாம் எனக்கு ஜுஜுபி மேட்டர்…” என்றவளை முறைத்து வைத்தான்.

“அப்போ உங்க ரோபோ எல்லாத்துக்கும் லீவ் குடுத்து விடுங்க. பாவம், கரண்ட் பத்தாம திணறப் போகுதுங்க…” நக்கலாக அவள் கூறிட, “ஓ காட்… என்னால எலிசா இல்லாம இருக்க முடியாது” என்றவனை விசித்திரமாகப் பார்த்தாள்.

“எலிசா என்ன உங்க பொண்டாட்டியா… கல்யாணம் ஆனாலும் அதைக் கட்டிட்டு அழுதா குட்டி யாஷோ, ரித்தியோ வர மாட்டாங்க. குட்டி எலிசா தான் வருவாங்க” என்று வாயைப் பொத்திக்கொண்டு சிரித்தவளிடம் கடுமை காட்ட இயலாது அவன் இதழ்களும் விரிந்தது.

“நக்கல் ஜாஸ்திடி உனக்கு…” என ஆசுவாசமாகக் கட்டிலில் அமர்ந்தவனிடம், “எப்ப பாரு எந்திரன் ரஜினி மாதிரி ரோபோ கூடவே இருக்கீங்களே உங்களுக்கு போர் அடிக்கலையா?” என்றாள் கன்னத்தில் கை வைத்து.

“எதுக்கு போர் அடிக்கணும்? எனக்குத் தேவையான வேலை எல்லாம் எலிசா பார்த்துடும். என்கிட்ட நான் பேசும் போது பேசும். நான் பேசாதன்னு சொன்னா பேசாது. என்ன பேசணும் எப்படி பேசணும் எதை பேசணும்னு முடிவெடுக்க வேண்டியது நான் மட்டும் தான். எனக்கே எனக்காக உருவாக்க நினைச்சது தான் இதெல்லாம். அப்பறம், பிஸினஸா மாறிடுச்சு” முதன்முறை தன்னைப் பற்றி நான்கு வரி உதிர்த்து இருக்கிறான் என்பதே அவளுக்கு வியப்பு தான்.

“நீங்க முதன் முதல்ல கிரியேட் பண்ணது என்னது?” அவள் ஆர்வமாக வினவ,

“என்னோட வாய்ஸ் கண்ட்ரோல்ல நான் சொல்றதை கேட்குற ரோபோ கிரியேட் பண்ணனும்னு ஆசை இருந்துச்சு. பட் அது ரோபோவா இருக்குறதுல எனக்கு விருப்பம் இல்ல. செல்போன் மாதிரி, வாட்டர் ஹீட்டர் மாதிரி ஒரு பொருளா இருக்கணும். அந்தப் பொருள் நான் சொல்றதக் கேட்கணும். அப்படி முதல் முதல்ல வாய்ஸ் கண்ட்ரோல் வச்சு ஏசி, லைட் இதுல எல்லாம் இன்ஃபியூஸ் பண்ணுனேன்.

இப்ப நிறைய விளம்பரங்கள் எல்லாம் வருதுல… ஸ்மார்ட் பேன், ஸ்மார்ட் லைட் இதுக்கு எல்லாம் வாய்ஸ் ரெக்கக்னைஸ் பண்ற டூல் ஃபைண்ட் அவுட் பண்ணுனது நான் தான்” என்றவனை கண்ணை விரித்துப் பார்த்தாள்.

“அவ்ளோ பெரிய அறிவாளியாயா நீ?” என்றதில், தோளைக் குலுக்கிக் கொண்டான்.

“ஆனா அதுக்கு எல்லாம் நிறைய படிக்கணும்ல?”

“ம்ம் படிக்கணும். படிச்சுட்டே தான் இருப்பேன். சில நேரம் ரெண்டு மூணு நாள் கூட ரூமை விட்டு வர மாட்டேன்…”

“ஆத்தாடி… அம்மா, அப்பாலாம் திட்ட மாட்டாங்களா? நான்லாம் படிக்க மட்டும் தான் ரூம்குள்ள போய் கதவ சாத்திப்பேன். அதுவும் ரெண்டு மணி நேரத்துக்கு மேல கதவை திறக்கலைன்னா நிவே பயந்துடுவான்” என்றவளை அமைதியாய் ஏறிட்டவன், “அப்படி பயந்து கதவைத் தட்டி யாரும் கூப்பிட்டது இல்ல” என்றான் இறுகளாக.

“ஓஹோ… ஏன்?” புருவம் சுருக்கி அவள் வினவ,

“அதுக்கு அங்க ஆள் இருக்கணுமே. பப்பா மார்னிங் போனா மிட்நைட் தான் வீட்டுக்கு வருவாரு…”

“ஓ அப்போ அத்தை…?” ஆதிசக்தியைக் குறிப்பிட்டு கேட்க,

“எனக்கு 5 வயசா இருக்கும்போதே ரெண்டு பேருக்கும் டிவோர்ஸ் ஆகிடுச்சு. என்னை பப்பாட்ட குடுத்துட்டு அவங்க வேற மேரேஜ் பண்ணிட்டாங்க” அவளிடம் எதற்கு இத்தனை விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்கிறோம் எனப் புரியாதவனாக எழுந்து விட்டவன், அடுக்களை நோக்கிச் செல்ல, அவளும் அவன் பின்னேயே வந்தாள்.

“ஆனா உங்களை ஏன் யாஷ் உங்க அம்மா அனுப்புனாங்க. இங்க தான் இத்தனை பேர் இருக்காங்களே அவங்களே வச்சுருக்கலாமே. அதுவும் அந்த வயசுல பேபிஸ் அம்மாட்ட தான இருக்கணும்…” விவரம் புரியாமல் அவள் கேட்டு வைக்க,

“நானும் என் பப்பாவும் அவங்களுக்கு பர்டனா இருக்க வேணாம்னு நினைச்சாங்களோ என்னவோ… இங்க யாருக்கும் என்னைப் பிடிக்காது. எனக்கும் யாரையும் பிடிக்காது” என்றான் உணர்வற்று.

“இதென்ன கொடுமையா இருக்கு? குழந்தையை எப்படி பிடிக்காம போகும் யாஷ். இங்க எல்லாரும் உங்ககிட்ட நல்லா தான பேசுறாங்க. கண்மணி கூட உங்க பின்னாடியே சுத்துறாளே…”

“கண்மணி சின்ன பொண்ணு. அவளை யாருன்னே எனக்கு இங்க வந்தப்பறம் தான் தெரியும். தேவை இல்லாம ஏன் என்கிட்ட அட்வான்டேஜ் எடுக்குறான்னு இரிட்டேட் தான் ஆகுது. என் மம்மாவுக்கும், அவங்களோட பப்பாவுக்கும் என்னை பிடிக்காது” என்றபடி சமையல் செய்யும் இயந்திரத்தை ஆன் செய்ய அதுவோ அவனைப் போலவே உணர்விழந்து நின்றது.

“ஓ! ஷிட்… இன்வெர்ட்டர் பவர் இதுக்கு பத்தலை…” வாய்க்குள் முணுமுணுத்துக் கொள்ள, “அதான் கேஸ் அடுப்பு இருக்கே. இந்த ட்ராயர்க்குள்ள பாத்திரமும் இருந்துச்சு. என்ன வேணும் உங்களுக்கு?” எனக் கேட்டாலும் அவன் கூறியதே மூளையில் சுழன்று கொண்டிருந்தது.

“காபி…” நெற்றியைப் பிடித்துக் கொண்டு அவன் கூற,

அவள் பாலை அடுப்பில் வைத்தபடி, “நல்லா வெள்ளாவில வச்ச மாறிக்க தான இருக்கீங்க. அதும் பேபில இன்னும் கியூட்டா இருந்துருப்பீங்க தான. அப்பறம் ஏன் பிடிக்கல?” என்றவளுக்கு உறவுகளின் தன்மையும் அதனின் வலிகளும் இன்னுமே புரியவில்லை.

அதில் மெலிதாய் புன்னகைத்தவன், “வெள்ளையா இருந்தா பிடிச்சுருமா?” என லைட்டரை வைத்து அவள் தலையில் மெல்லமாக அடித்தான்.

“சரி அப்போ உங்க அப்பா உங்களை நல்லா பாத்துருப்பாங்க தான?” தலையைத் தேய்த்தபடி விடாமல் கேள்வி கேட்டாள்.

“உனக்குப் பேச எலிசா இல்லைன்னதும் அதுகிட்ட கேட்குற வெட்டி கேள்வியை எல்லாம் என்கிட்ட கேட்டுட்டு இருக்கியா?” இடுப்பில் கையூன்றி அவன் முறைக்க, “ஹி ஹி… அப்படி அந்த ஆலம்பனா மேல உங்களுக்கு ஏன் இவ்ளோ காதல்னு தெரிஞ்சுக்கணும்னு ஒரு ஆர்வம் தான்” என்றாள் குறும்பாக.

அதற்குள் ஆவி பறக்க, முதன் முறை அவளது கை வண்ணத்தில் தயாரானது காஃபி.

அந்த வாசமே அவனது தலைவலியைக் களைந்து விட்டது போலொரு மாயை அவனுக்கு.

“நைஸ் ஒன்” காபியைப் பருகி விட்டு யாஷ் அவளைப் பாராட்ட, “உங்க மெஷினை விட நான் என்ன செஞ்சாலும் நல்லா தான் தெரியும் உங்களுக்கு…” எனக் கிண்டலடித்தாள்.

“உங்க அம்மா அப்பா லவ் மேரேஜா?” கேட்டவளுக்கு தலையை மட்டும் அசைத்தான்.

“லவ் மேரேஜ் பண்ணிட்டு ஏன் டைவர்ஸ் பண்ணுனாங்க?”

“என் பப்பா கேர்ள்ஸ் விஷயத்துல வீக். மே பி அது ரீசனா இருக்கலாம்.”

“ஓஹோ வெளிநாட்டுக்காரங்களே இப்படி தான. தெரிஞ்சு தான உங்க அம்மா லவ் பண்ணிருப்பாங்க… சரி அப்படியே அவங்க முழுசா நம்பி இருந்தாலும் அவங்களை ஏமாத்துனதுல உங்க அப்பா மேல தான தப்பு. அப்போ அவங்க டிவோர்ஸ் பண்ணதையும் தப்புன்னு சொல்ல முடியாது…”

“அது அவங்க பிரச்சினை. அதுல நான் தலையிடல. என் கோபம் என்னை விட்டதுக்காக மட்டும் தான்…” என்றதில் அவள் அமைதியாகி விட்டாள்.

“உங்க அப்பாவுக்கு உங்க மேல பாசம் இருந்துருக்குமோ? அதான் பொண்டாட்டி போனாலும் நீங்க வேணும்னு கேட்டுருப்பாங்க…” நிதர்ஷனா யோசனையாக கேட்க,

“இருக்கலாம்… பட் காட்டுனது இல்ல. நான் ஃபீல் பண்ணுனதும் இல்ல. மம்மா என்னை வளக்குறது அவருக்கு பிடிக்கல. சோ என்னை இட்டாலி கூட்டிட்டுப் போய்ட்டாங்க. மம்மாவுக்கு நான் அவங்க கூட இருக்குறது பிடிக்கல. சோ பப்பா கேட்டதும் என்னை அனுப்பிட்டாங்க… தட்ஸ் இட்…”

தலையை வேகமாக சொறிந்தவள், “அப்போ யார் தான் உங்களை வளர்த்தா?” எனக் கேட்க,

“யார் வளர்க்கணும். நானா வளர்ந்துக்குட்டேன்…” காபியைக் குடித்து விட்டு கப்பைக் கழுவ பாத்திரம் கழுவும் மெஷினில் வைக்க, அதுவும் ஆன் ஆகவில்லை.

அவன் கூற்றில் அவளுள் ஏதோ உடைந்ததோ என்னவோ, “குடுங்க…” எனக் காபி கப்பை வாங்கி அவளே கழுவி விட, “ஹே உனக்கு இஞ்சூரி?” என்றான் அதட்டலாக.

“மணிக்கட்டுக்கு மேல தான. தண்ணி படாது… அது சரி இந்த மெஷின்லாம் வர்றதுக்கு முன்னாடி யார் உங்களுக்கு சமைச்சு குடுப்பா? ரூம் க்ளீன் பண்ணி குடுப்பா?” எனக் கேட்டாள் நிமிர்ந்து.

“பணத்துக்கும் மெய்டுக்கும் குறைவு இருக்காது. எல்லா வேலைக்கும் ஆள் இருக்கும்… பட் கொஞ்ச வருஷத்துல எனக்கு மெய்டு இருக்குறது பிடிக்கல. சோ, அதுக்கு அப்பறம் தான் ரோபோஸ், ஏ. ஐன்னு எலிசாவை வச்சு ஒன்னொன்னும் எனக்காக செட் பண்ணுனேன்…”

“ஏன் பிடிக்கல?”

அவள் கேள்வியில் ஒரு கணம் அமைதி காத்தவன், “என் மெய்டு கூட என் பப்பா ஃபிஸிக்கல் இன்டிமேட் பண்ணாரு. அதை நான் பாத்துட்டேன். சோ எனக்கு அதுக்கு அப்பறம் யாரும் என் ரூம்க்கு வர்றது பிடிக்கல…” என இயல்பாகக் கூறியவனைக் கண்டு திருதிருவென விழித்தாள்.

“என்ன… ஃபிஸிக்கல் இன்டிமேட்ன்னா என்னன்னு தெரியாதா?” ஒற்றைப்புருவம் உயர்த்தி தனது கலப்பட விழிகளால் கேலிப்பார்வை வீச,

“தெரியும் தெரியும்” என வேகமாகக் கூறியவள், விளக்கம் எதுவும் கொடுத்து விடுவானோ எனப் பதறி விட்டாள்.

“தெரிஞ்சா சரி!” எனும் போதே வாசல் கதவு தட்டும் சத்தம் கேட்டது.

வெளியில் கண்மணியும் சிந்தாமணியும் குடையுடன் நின்றிருந்தனர்.

“கரண்ட் இப்போதைக்கு வராது போல அண்ணா. அம்மா சாப்பாடு குடுத்து விட சொன்னாங்க… நைட்டாகிடுச்சு வாங்கிக்கோங்கண்ணா…” எனக் கெஞ்சுதலாகப் பார்த்தாள்.

“உனக்கு ஒரு தடவை சொன்னா புரியாதா கண்மணி. உன்னை இன்சல்ட் பண்றதுல எனக்கு இன்டரஸ்ட் இல்ல. ஜஸ்ட் அவுட் போத் ஆஃப் யூ” எனக் கதவை அடைத்து விட,

“உங்க அம்மா மேல இருக்குற கோபத்தை இவங்க மேல ஏன் காட்டுறீங்க? பாவம்ல” என்றாள் நிதர்ஷனா.

“இவ்ளோ வருஷமா நான் சாப்பிட்டேனா இல்லையான்னு அக்கறை இல்ல. இப்ப மட்டும் வருதாம் மிஸஸ் ஆதிசக்தி இளவேந்தனுக்கு… அவங்க அக்கறை எனக்குத் தேவையில்லை…” எனக் கடுகடுத்தபடி டைனிங் டேபிளில் சென்று அமர்ந்து ப்ரூட்ஸை நறுக்கத் தொடங்கிட,

“இங்க வந்தப்ப முதல் நாள் சாப்பிட்டீங்க தான?” எனக் கேட்டாள் வினவளாக.

“அது எங்களுக்குள்ள இருந்த அக்ரீமெண்ட் டீலிங்”

“டீலிங்கா?” அவள் புரியாது பார்க்க,

“ம்ம்… என் மம்மாவும் ரோபோடிக் எஞ்சினியர். அவங்க குடுத்த ‘பேஸ்’ தான் இப்ப நான் சிஇஓவா இருக்குற எலைட் கம்பெனி உலக நாடுகள்ல விரிஞ்சு இருக்குறதுக்கு காரணம். அப்பவே, ஸ்பேஸ்க்கு ரோபோட்டை அனுப்பி வைக்கிற முயற்சி எடுத்தாங்க. ஆனா பெர்சனல் ப்ராப்ளம்ன்னால கேரியரை விட்டுட்டாங்க. லாஸ்ட் டூ இயர்ஸா அந்த ரிசர்ச்சை நான் செஞ்சுட்டு இருக்கேன். முழுக்க முழுக்க செயற்கை நுண்ணறிவை வச்சு, சின்ன அளவிலான ரோபோட் கிரியேட் பண்ணி அதை ஸ்பேஸ்க்கு அனுப்பனும்… தட்ஸ் மை ஆம்பிஷன்” என்றான் தீவிரமாக.

“ஸ்பேஸ்க்கு அனுப்பி?” பாவம் அவளுக்குப் பசியே வந்து விட்டது. அவன் நறுக்கி வைத்த ஆப்பிளை கொஞ்சம் தானும் எடுத்துக் கடித்தபடி கேட்டாள்.

தனக்கு கட் செய்த ஆப்பிளை அவள் எடுத்து உண்டதில் லேசாய் முறைத்தவன், அவளுக்கும் ஒரு பவுலை எடுத்து அதில் பழங்களை நறுக்கிக் கொடுத்தான்.

அதனூடே, “ஸ்பேஸ்க்கு அனுப்பி… அங்க இருந்து நமக்கு வரப்போற நேச்சுரல் டிசாஸ்டர் ஐ மீன், இயற்கை அழிவுகள கணிச்சு, அதுல இருந்து எப்படி தற்காத்துக்குறதுன்ற டீடெய்ல்ஸையும் நம்மளோட ஷேர் பண்ண வைக்கணும். இந்த மாதிரியான மழை, புயல், வெள்ளம், சுனாமி, எரிமலை வெடிப்பு, ஸ்பேஸ்ல நடக்குற சடன் எரிகல் அட்டாக்னு இன்னும் என்ன என்ன மாதிரியான பின்விளைவுகள் வருமோ அதை முன்னாடியே கணிச்சு, அதுக்கு சொலியூஷனும் குடுக்கும். கிட்டத்தட்ட 80 சதவீதம் முடிச்சுட்டேன். ஆனா, அது முழுசா ஒர்க் அவுட் ஆகுறதுக்கான ‘பேஸ்’ பார்முலாவைக் கண்டுபிடிக்க முடியாம, வெக்ஸ் ஆகிட்டேன். அதுக்கு அப்பறம் தான் ரித்தியோட அப்பா, என் மம்மாவும் பிசினஸ் விட்டுப் போற நேரத்துல இந்த மாதிரி ஒரு விஷயத்தைக் கண்டுபிடிச்சதாவும் அதை சொல்லாமலே விட்டுப் போய்ட்டதாவும் சொன்னாங்க.

அது கண்டிப்பா எனக்கு யூஸ் ஆகும்னு தோணுச்சு. சோ பல வருஷம் கழிச்சு மம்மாட்ட பேசுனேன். அவங்க ரூல்ஸ் போட்டாங்க. எனக்கு வேணும்ன்றது கிடைக்கணும்னா, அவங்க கூட அவங்க பக்கத்துல சில மாசம் இருக்கணும்னு. எனக்குப் பிடிக்கல… எப்படியும் நானே ஃபைண்ட் அவுட் பண்ணிக்கலாம்னு முட்டி மோதினேன். என் பப்பாவும் ரித்தியோட அப்பாவும் தான் என்னைக் கம்பெல் பண்ணி அனுப்புனாங்க.

மம்மாவோட கண்டிஷன்ஸ், நான் மேரேஜ் பண்ணிட்டு வரணும், அவங்க வீட்ல இல்லைன்னாலும் பக்கத்துலயாவது இருக்கணும்னு… இங்க வந்ததும் அவங்க வீட்ல சாப்பிட்டுட்டு தான் போகணும்னு டீல். அதுனால மட்டும் தான் சாப்பிட்டேன். அதுக்காக தினமும் அவங்க கையால சாப்பிட எனக்கு விருப்பம் இல்லை” என்று விழி சிவக்க கோபத்தைக் கக்கினான்.

அவனது முகம் காட்டிய ரௌத்திரத்திலும் கழுத்து நரம்புகள் புடைத்து எழுந்ததிலும் அரண்டு அமர்ந்திருந்தவளுக்கு ஆப்பிள் தொண்டையில் சிக்கியது.

“ஒருவேளை உங்க அம்மா கடைசிவரை நீங்க கேட்டதைக் குடுக்காம ஏமாத்திட்டா…” இமைகள் படபடவெனத் துடிக்க கேட்டாள்.

“அவங்களை மட்டுமே நான் மொத்தமா நம்பி இருக்கல. நானும் என் சைட்ல இருந்து கண்டுபிடிக்க ட்ரை பண்ணிட்டு தான் இருக்கேன். அதைக் கண்டுபிடிச்சுட்டா, தென் அவங்க எனக்கு தேவை இல்ல” என்றான் ஏளனமாக.

“என்ன இருந்தாலும் அவங்க உங்க அம்மா தான யாஷ்…” மெல்லக் கேட்டவளிடம்,

“என்ன இருந்தாலும் என் பையன் தானன்னு அவங்க நினைக்கல நிதா!” என்றான் சலனமற்று.

“சில டைம் ஆஃப் பீரியட்க்கு சிலரோட நெருக்கங்கள் கண்டிப்பா தேவைப்படும். அத தேவைப்படுறப்ப தரத் தயாரா இல்லாதவங்க எனக்கும் தேவை இல்லை தான?” பற்களின் இடையில் வார்த்தைகளைக் கடித்து துப்ப, அந்தக் கோபத்திலும் அவனது தனிமை வலி புரிந்தது அவளுக்கு.

“சரி தான்…” என ஒப்புக்கொண்டவளுக்கு இப்போது பேச்சை மாற்றியாக வேண்டி மனது அடித்துக் கொண்டது.

அந்த ஹேசல் நிறக் கண்களில் துளியாய் வெளிப்படும் அச்சிறு வலி, அவளுள் ஊடுருவி உளைச்சலைக் கொடுத்தது.

“சரி அதெல்லாம் இருக்கட்டும். இப்போ டின்னர்க்கு என்ன செய்ய? உங்க மாஸ்டர் செஃப் செத்துப் போய் கெடக்கே…” என்றாள் உதட்டைப் பிதுக்கி.

அதில் விறைத்த மார்பை இலகுவாக்கியவன், “டின்னரா? இப்படி தானடி ப்ரூட்ஸ் சாப்பிட்ட?” எனப் போலி முறைப்புடன் கேட்க,

“எதே ஃப்ரூட்ஸ் எல்லாம் டின்னரா? இதை எல்லாம் சாப்பிட்டுப் படுத்தா தூக்கம் வராது அரக்கா. அதுவும் மழைக்கும் அதுக்கும் சூடா சிக்கன் சாப்ட்டா…” எனக் கண்ணை மூடி சிலாகிக்க, “நோ நான் வெஜ்” என்றான் அதட்டலாக.

“ம்ம்க்கும்… வெறும் காய்கறியா தின்னு தின்னு எப்படி இளைச்சுட்டேன் பாரு அரக்கா…”

கையை விரித்து பாவமாகக் கேட்டவளின் முகத்தை அளந்தவனின் பார்வை முதன்முறை கழுத்துக்கு கீழேயும் அலைபாய்ந்தது.

“அப்படி ஒன்னும் இளைச்ச மாதிரி தெரியல!” விஷமம் வழிய அவன் கூற,

“உனக்கு எப்படி தெரியும். வெய்ட் குறைஞ்சது எனக்குத் தான தெரியும்” என அவனது வாதம் புரியாது மேலும் வாதம் செய்தாள்.

“பாக்குற எனக்கும் தெரியும்” அர்த்தத்துடன் அவன் பேசிய தன்மை அவளுக்கு புரியவில்லை.

‘ம்ம்க்கும்’ என நொடித்து விட்டு, “இப்ப எனக்கு டிபன் வேணும்” என்றான் பிடிவாதமாக.

அதில் பார்வையை மாற்றிக்கொண்டவன், “இந்த நேரத்துல என்னடி கிடைக்கும்?” எனக் கண்டித்தான்.

“வீட்ல தான் எல்லா திங்ஸ்ஸும் இருக்கே. நான் செய்றேன்…” அவள் தலையாட்டிக் கூறியதில், “என்னமோ செஞ்சு தொலை!” என எழுந்தான்.

“உங்களுக்கு வேணாமா?”

“வேணாம்…”

“ஏன் பசிக்காதா நைட்டு…?”

“பசிக்காது.”

“உங்களுக்கு பயம்…” அவள் நக்கலாகக் கூறி விட்டு அடுக்களைக்குச் செல்ல, அவள் பின்னால் கடுப்புடன் சென்றவன், “எனக்கு எதுக்குடி கடன்காரி பயம் வரணும்?” என்றான்.

“ஆமா, என்ன மாதிரி நல்லா நிறைய சாப்ட்டா, குண்டாகிடுவீங்கன்னு பயம் தான” என அழகு காட்ட, “போடி லூசு…” எனத் தலையில் கொட்டினான்.

“நீ தான்டா அரக்கா லூசு”

“ஏய்ய்ய்…” யாஷ் அவளது காதைப் பிடிக்க, “இங்க பாரு… என்னை எப்ப வேணா அட்டாக் பண்ணலாம். ஆனா முதல்ல வயித்த சமாதானம் பண்ணிட்டு வரேன். யார் லூசுன்னு பொறுமையா பேசி டிசைட் பண்ணலாம். நமக்கு மழை விடுற வரை பேச டைம் இருக்கு…” எனக் கண் சிமிட்டினாள்.

“காட்! அதுவரை உங்கிட்ட பேசிட்டு இருந்தா எனக்கு உண்மையாவே பைத்தியம் பிடிச்சுடும்” என்றான் கிண்டலாக.

“இப்ப மட்டும் பிடிக்கலையாக்கும்… போயா…” எனக் கொனட்டியவள், “என்ன செய்யன்னே தெரியலையே” எனக் குழம்பினாள்.

“நைட் டைம்ல நோ ஹெவி ஃபுட்ஸ்” யாஷ் பிரஜிதன் உரிமையாய் கண்டித்தான்.

“ஆமா அப்டியே இங்க சிக்கனும் மட்டனும் கொட்டிக் கிடக்கு பாரு. இருக்குற கேரட் பீன்ஸை வச்சு ஹெவியா தின்னுட்டாலும்…” என சிலுப்பியவள், உப்புமாவைக் கிண்டி உண்டு விட்டு உறங்க செல்ல, யாஷ் பிரஜிதன் தலையை ஆட்டிக்கொண்டு அலுவல் அறைக்குள் தஞ்சம் புகுந்து விட்டான்.

மறுநாள் காலையில் அவன் உடற்பயிற்சி கூடத்தை விட்டு அறைக்கு வரும்போது, அறையே சுத்தமாக துடைத்து வைக்கப்பட்டிருந்தது. எந்த ஒரு ரோபோட் இயந்திரமும் வேலை செய்யாமல் போனதில், அனைத்துமே கலைந்து இருந்தது.

இப்போது படுக்கை சிறு தூசியும் இன்றி சுத்தமாக இருக்க, தரையும் பளிச்சென இருந்தது.

துவாலையை எடுத்துக்கொண்டு குளிக்கச் சென்றவனின் பாத் டப் முழுக்க, அவன் எப்போதும் குளிக்கும் மிதமான சூட்டில் நீர் நிரப்பப்பட்டிருக்க, யோசனையுடன் குளித்து விட்டு வெளியில் வந்தவனுக்கு கட்டிலிலேயே அவனுக்கான உடை தயாராக இருந்தது.

சிந்தனையுடன் அதனை எடுத்துப் போட்டுக்கொண்டவன், மாடியில் இருந்து இறங்கும்போதே சாம்பாரின் மணம் நாசியைத் துளைத்துப் பசியைத் தூண்டியது.

ஆனால் அடுக்களையில் நிதர்ஷனா இல்லை. வீட்டுக் கதவு திறந்திருந்ததில் அவனும் அதனை நோக்கிச் செல்ல, வெளியில் இருந்து கையில் வாளி நிறைய நீருடன் உள்ளே வந்தாள்.

“என்ன செஞ்சுட்டு இருக்க?” யாஷ் புருவம் இடுங்க வினவ,

“மழைத் தண்ணி பிடிச்சுட்டு இருந்தேன் யாஷ். பாத்திரம் கழுவ, துணி துவைக்கலாம் யூஸ் ஆகும்ல…” எனத் தூக்க முடியாமல் கொண்டு வந்து அடுக்களைக்குள் வைக்க,

“நீ ஏன் இதெல்லாம் செஞ்சுட்டு இருக்க?” கேட்கும்போதே அவனது குரலில் கடுமை எட்டிப்பார்த்தது.

“வேற என்ன செய்ய? உங்க ரோபோக்கு எல்லாம் உயிர் வர்ற வரை சாப்பிடாம, குளிக்காம, வீட்டை சுத்தம் பண்ணாம உக்காந்துருக்கவா?” கேலி மின்னக் கேட்டதில்,

“நீ உனக்கு என்ன வேணுமோ செஞ்சுக்கோ. எனக்காக நீ எதுவும் செய்ய வேண்டியது இல்ல…” என்றான் அடக்கப்பட்ட கோபத்துடன்.

“உங்களுக்கு நான் செஞ்சேன்?” அவள் கண்ணைச் சுருக்கிக் கேட்டாள்.

“ரூமை ஏன் க்ளீன் பண்ணுன?”

“அங்க நானும் தான இருக்கேன். எனக்கு டஸ்ட் அலர்ஜி ஆகாதா?”

“பாத்டப்ல ஹாட் வாட்டர்…?”

“ஹலோ அரக்கா… எனக்கு இந்த க்ளைமேட்ல பச்சைத் தண்ணில குளிச்சா சேராது. அதுனால எனக்கு சுடுதண்ணி வைக்கிறப்ப உங்களுக்கும் சேர்த்து வச்சேன் அவ்ளோ தான்!” என்றதில், நெஞ்சில் மின்னலாய் ஒரு ஏமாற்றம் அவனுக்கு.

“அப்படி ஒன்னும் எனக்கும் சேர்த்து நீ செய்ய வேண்டியது இல்ல நிதா!” கடினத்தன்மையுடன் உரைத்து விட்டு, அவன் நகர, அவனது பின்னாலேயே வந்து சுற்றி வளைத்தவள்,

“இப்ப எதுக்கு ஓவரா பண்றீங்க? ஏதோ நீங்களும் கூட இருக்கீங்கன்னு உங்களுக்கும் சேர்த்து பண்ணுனா… ரொம்பத் தான்… நீங்க வேணும்னா என்னை உங்க ஆலம்பனாவா நினைச்சுக்கோங்க… அதுவாவது சொன்னா தான் செய்யும். நான்லாம் சொல்லாமலே செய்வேன் தெரியுமா?” என இரு கையையும் பின்னால் கட்டிக்கொண்டு நிற்க, அவளது கூற்றில் கோபம் மறைந்து புன்னகைக்க துடித்தது ஆடவனின் இதழ்கள்.

“எங்க… என்னை ஆலம்பனான்னு கூப்பிடுங்க பாப்போம்!” நிதர்ஷனா கேட்டதும்,

மேலுதட்டை ஈரப்படுத்தியவன், “ஆலம்பனா?” எனக் கேள்வியாய் அழைக்க,

“எஸ் பாஸ்… சொல்லுங்க நான் உங்க ஆலம்பனா… உங்களுக்கு பிரேக் ஃபாஸ்ட்க்கு பொங்கலும் சாம்பாரும் ரெடியா இருக்கு பாஸ். ஹேவ் அ டேஸ்டி டிஃபன் வித் நிதா” என ஆலம்பனா போன்று ஏற்ற இறக்கத்துடன் பேசியவளின் தொனியில் வெள்ளிப்பற்கள் மினுக்க வாய்விட்டே சிரித்து விட்டான் யாஷ் பிரஜிதன்.

அன்பு இனிக்கும்
மேகா

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
17
+1
146
+1
7
+1
6

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்