அத்தியாயம்4
“இன்னாடா, இந்தப் பச்சை மஞ்சக் கண்ணுக்காரேன் துன்றதுக்கு ஒன்னியும் தராம போய்ட்டான்.” எனக் கவலை கொண்டாள் நிதர்ஷனா.
“அடிப்பாவி… பாக்க பாடி பில்டர் மாதிரிக் கீறான்… என்ன செய்யப் போறான்னு திகிலாக்கீது எனக்கு. நீ இன்னான்னா, அவனாண்ட உதாரு வுட்டுட்டு இருக்க.” கதிரவன் எச்சிலை விழுங்கினான்.
“சும்மா லடாய் வுடுறான் கதிரு. போன வேகத்துல நாஷ்டா கொண்டாருவான் பாரு. நானு நேத்து நைட்டுல இருந்தே இந்தக் காசி மேலருந்த பயத்துல துன்னவே இல்ல. இந்தக் கலப்பட ‘ஐ’ஸ்காரன் கடத்தப் போறான்னு மொதவே தெரிஞ்சுருந்தா, வூட்டாண்ட கஞ்சி இருந்துச்சு, அதையாச்சும் துன்னுருப்பேன்.” என மென்மேலும் வருத்தப்பட, கதிரவனுக்கு மயக்கமே வந்தது.
ஆனால், அவள் எண்ணியது போல அதன்பிறகு அந்த அறைக்கு வேறு யாருமே வரவில்லை.
பிளாஸ்க்கில் இருந்த காபியைக் குடித்தே அன்று முழுதும் உயிர் வாழ்ந்தனர் இருவரும்.
அறைக்கதவைத் திறக்க முயன்றும் ஒரு பலனும் இல்லை. மறுநாள் மாலைக்கு மேல் பசி தாளாது போக, கதிரவன் “ஐயோ! வயிறு கபகபன்னு கத்துது நிதா…” எனப் பரிதாபமாகக் கூற, அவளும் ஒரு ஓரமாகச் சுருண்டு அமர்ந்திருந்தாள்.
“கஸ்மாலம்! பட்டினி போட்டுச் சாவடிக்கப் போறானோ?” மெலிதாய் அவள் முகம் பீதியாக, மறுநொடி புயலாக உள்ளே நுழைந்தான் யாஷ் பிரஜிதன்.
இருவரையும் ஒருமுறை தனது எக்ஸ்ரே பார்வையால் உள்வாங்கி விட்டு, நிதர்ஷனாவின் மீது முழுக் கவனத்தையும் பதித்தான்.
“நான் சொல்றதைக் கேட்டா ஃபுட் வரும்… கேட்கலைன்னாலும் ஃபுட் வரும். உனக்கு மட்டும்!” என்றதில் கதிரவன் மிரண்டான்.
“சார் சார்… நான் யாருக்கும் எந்தத் தப்பும் செய்யாத அப்பிராணி சார். இவள்லாம் ஏரியாவ விட்டே எங்கனயும் போனதே இல்ல. நீங்க பாக்க பந்தாவா கீறிங்க, எங்கள வுட்ருங்க சார்” எனக் கெஞ்சினான்.
நிதர்ஷனாவோ, ‘நீ என்னத்தையும் பண்ணு…’ என்ற ரீதியில் வேடிக்கை பார்க்க, அது ஆடவனின் பொறுமையைச் சோதித்தது போல.
“கிளம்புறதுன்னா கிளம்பு நிதர்ஷனா. பட், காசி உன்னை அவனோட அந்தப்புரத்துக்கு கிட்னாப் பண்ண ரெடியா இருக்கான்.” என்ற போதுதான் அவள் விழிகளில் மெல்லக் கலவரம் எட்டிப் பார்த்தது.
“சார், இந்த நிதா கடெங்காரியா வேணா சாவா… ஆனா அந்தக் கஸ்மாலத்துக்கு கீப்பா ஆக மாட்டா” எனச் சபதமிட, இறுகிய இதழ்களை லேசாய் வளைத்தவன், “வாட்ஸ் தட் கடெங்காரி?” என்றான் புரியாமல்.
“காசிட்ட கடன் வாங்கி அடைக்க முடியாம இருக்கேன்ல, அதான் கடெங்காரி… ஒங்களுக்குத் தமிழ் தெரியாதா?” இளக்காரமாகக் கேட்டவளை முறைத்தவன்,
“ஐ நோ. பட் போத் ஆஃப் யுவர் ஸ்லாங் இஸ் டிஃபரென்ட்” என்றான்.
“ஐய… மெட்ராஸ்ல குந்தின்னு மெட்ராஸ் பாஷ தெர்லன்னு சொல்றிங்களே சாரு…”
“இவ்ளோ நேரம் கொஞ்சம் புரியிற மாதிரிப் பேசுன… இப்ப வேணும்னே ஓவர் ஸ்லாங்ல பேசுறியா?” சற்றே கடுமை மின்னக் கேட்டவனைக் கண்டு அசடு வழிந்தாள். ‘என்ன கண்டு பிடிச்சுட்டான்’ என்ற ரீதியில்.
“ஸீ… ஐ ஆம் ஃப்ரம் இட்டாலி. ரோபோடிக் எஞ்சினியர். சி ஈ ஓ ஆப் எலைட் ரோபோடிக் கம்பெனி. ஐ நீட் ஒயிஃப்!” என்றதும், அவனை மேலும் பேச விடாதவாறு,
“த்தோ பார்றா… இட்லிக்குக் கூட வழியில்லாத என்னை இத்தாலிலருந்து வந்து கடத்தி ஏன் சார் டயத்த வேஸ்டு பண்றீங்க. அங்கேயே நல்ல நல்ல பிகர்ஸ் இருப்பாங்கல்ல. ஒயிஃப் வேணும்னா அங்கிருந்தே இழுத்தாறாம… என்னாண்ட இன்னாத்துக்குப் பினாத்திட்டுருக்கீங்க. ஓ! இந்த மெட்ராஸ்லயே அழகா நான்தான் தெரிஞ்சேனா…” என லேசாய் வெட்கப்பட்டுக் கொண்டாள்.
யாஷோ காலைக் குறுக்கி அமர்ந்திருந்தவளை அழுத்தமாய் ஏறிட்டு, “நாலு எலும்பைத் தவிர அங்க என்ன இருக்குன்னு அந்தக் காசிக்கு உன் மேல கண்ணுன்னு தெரியலையே… அவன் என்னவோ உன்னைக் கார்னர் பண்றான்றதை வச்சு, மிஸ் சென்னைன்னு நீயே ட்ரீம்க்குள்ள போயிடாத கடன்காரி. உன்னையும், உன் ஃபேஸையும் பார்த்தாலே இரிடேட்டிங்கா இருக்கு.” என முகத்தைச் சுளித்ததில், “க்கும்” என நொடித்துக் கொண்டாள் நிதர்ஷனா.
“அவ்ளோ இரிடேட்டிங்கா இருந்தா, அந்தக் காசியாண்டயே வுடுங்க…” உதட்டைச் சுளித்தாள்.
பிராண்டட் ஷூ அணிந்த காலை மெத்தையின் மீது வைத்துத் தங்க நிறத்தில் பளபளத்த டைட்டன் கைக்கடிகாரத்தைப் பின்னால் நகர்த்தியவாறு தீர்க்கமான விழிகளை அவள் மீதி பதித்தவன், “ஐ நீட் யூ நிதர்ஷனா. ஃபார் மை ட்ரீம், ஃபார் மை பியூச்சர்… ஆஃப்டர் சம்டேஸ், உன்னை இங்க இருந்து அனுப்பிடுவேன். அதுவரைக்கும், நான் என்ன சொல்றேனோ அதை நீ கேட்டே ஆகணும். யூ மஸ்ட் பீ. நான் சொன்னதைக் கேட்டா, காசியோட ப்ராப்ளம் மட்டும் இல்ல. உன் பிரதர் விட்டுட்டுப் போன டெப்ட் எல்லாம் நான் க்ளோஸ் பண்றேன். லைஃப்டைம் செட்டில்மெண்ட் பண்ணிடுவேன். அதுக்கு மேல உனக்கு என்ன வேணும்னாலும் ஐ ஆம் ரெடி டூ கிவ். பட்… இதெல்லாம் என் வேலை முடிஞ்சப்பறம் தான். நான் சொன்னது அண்டர்ஸ்டான்ட் ஆச்சா?” காந்தக் குரலால் அவளைக் கட்டி இழுத்தான் யாஷ்.
தரையில் அமர்ந்து இரு காலையும் கட்டிக்கொண்டு அவனையே ‘ஆ’ எனப் பார்த்திருந்த நிதர்ஷனா, “நீங்க பேசுறதுல ஒண்ணுக்கும் கன்ஃபியூசன் இல்ல சார். ஆனா என்ன மதிச்சு இன்னாத்துக்கு இதெல்லாம் சொல்றீங்கன்னு தான் புரிய மாட்டேங்குது.” எனக் கொனட்டினாள்.
“ஃப்பூ…” கீழுதட்டை லேசாய் மடித்து ஊதியவன், “லுக்! நீ கொஞ்ச ‘டே’ஸ்க்கு என் வைஃபா ஆக்ட் பண்ணனும்.” எனக் கூறிக்கொண்டே வந்தவன் சட்டென இருபுறமும் தலையாட்டி,
“ம்ம், நோப்… ஆக்ட் பண்றது தெரியாத அளவு எல்லாமே ரியலா இருக்கணும்.” என்றான் தாடையைத் தடவி.
“ஓ! நீங்க புடிக்கப்போற படத்துக்கு ஆடிஷன் பண்ணத்தான் கிட்னாப்பிங்கா? ஹா ஹா… கதிரு, இப்பல்லாம் அழகா இருந்தாவே இப்படித்தான் அம்பாசிடர் வச்சு கிட்னாப் பண்ணிடுவாங்க போலடா” அவன் அவளது முகத்தைப் பார்த்தால் எரிச்சலாக இருக்கிறது என்று சொன்ன கூற்றிற்காகவே, மீண்டும் ஒரு முறை தான் அழகெனக் குத்திக் காட்டினாள், அருகில் திகைப்பு மாறாது யாஷையே பயத்துடன் பார்த்திருந்த கதிரவனிடம்.
யாஷ் பிரஜிதனின் புருவ மத்தியில் இரு கோடுகள் உருவாகிப் பின் மறைந்தது.
அவளும் அவனைப் போலவே புருவத்தைச் சுருக்கித் தனது புருவ மத்தியை நீவிப் பார்த்தாள். கண்டமேனிக்குச் சுருங்கியது.
“எப்படிங்க சார் உங்களுக்கு மட்டும் எண்ணி வச்சாப்ல ரெண்டு கோடு விழுது” என அதிசயமாய் கேட்டவளைப் புரியாது ஏறிட்டவன், “நீ என்ன அரை மெண்டலா?” என்றான் எரிச்சலாக.
“அவள் முழு மெண்டலுன்னு இவருக்கு எப்படிப் புரிய வைக்கிறது?” என முணுமுணுத்த கதிரவன், “சார்… இதுக்குலாம் நாங்க ஒர்த் இல்ல. எங்கள வுட்டுடுங்க சார்.” என்றான் பரிதாபமாக.
நிதர்ஷனா பதறி, “சார் சார், சீக்கிரம் வுடணும்னு ப்ரெஷர் இல்லை. கொஞ்ச நாள் டார்ச்சர் பண்ற மாதிரி நடிங்க. இன்னும் பத்து நாள்ல எனக்கு இன்டர்வியூ இருக்கு. அதுல செலக்ட் ஆகிட்டா ஜாக்பாட் தான். காசிட்ட, கால்ல விழுந்தாச்சும் டயம் வாங்கிடுவேன். அது வரைக்கும் இந்த ஏசி ரூம் கிட்னாப்பிங்க கன்டின்யூ பண்ணுங்க சார். ப்ளீஸ்ஸா சொல்றேன்.” என்று தலை வணங்கியவளைப் பற்களைக் கடித்தபடி முறைத்தான் யாஷ் பிரஜிதன்.
“நான் என்ன சொல்றேன்… நீ என்ன பேசிட்டு இருக்க?” பல்லிடுக்கில் வார்த்தைகளைக் கடித்துத் துப்ப,
“சாரே… இந்த ஆக்ட் பண்றதெல்லாம் நமக்கு வராது. கடத்துனது கடத்திட்டீங்க… ஒரு பத்து நாளைக்கு என்னைத் தலைமறைவா வச்சுட்டு அனுப்பிடுங்க. சோறு கூட வேணா… இந்த பிளாஸ்க்ல காபியும், நாலு பிஸ்கோத்தும் குடுங்க. அதைச் சாப்பிட்டுப் பத்து நாள் ஓட்டிருவேன். இந்தப் பயலை மட்டும் அனுப்பி விட்டிருங்க. இவன் ஆத்தா இந்நேரத்துக்கு நான் இவனை இழுத்துட்டு ஓடிட்டேன்னு பொரளியைக் கெளப்பி வுட்ருக்கும்… இமேஜ் டேமேஜ் ஆகிடும்ல…” என வளவளத்ததில் யாஷ் பிரஜிதனுக்குத் தலை வலிக்க ஆரம்பித்தது.
“சொன்னால் புரியாதா உனக்கு? உன்னை எங்கயும் அனுப்பப் போறது இல்ல. என்கூட தான் இருக்கப் போற. அப்படி இங்க இருக்க முடியாதுன்னு தோணுச்சுன்னா, உன்னை மட்டும் தான் உயிரோட அனுப்புவேன். இவன் இங்கயே டெட் பாடியா தான் இருப்பான்…” என்று தீப்பிழம்பாய் கண்ணில் நெருப்பைப் படர விட்டதில் கதிரவன் மிரள, நிதர்ஷனாவும் அத்தனை நேரம் அடிக்குரலில் நிதானமாய் வந்த அவனது குரலில் இருந்த கணீர் தொனியும், அழுத்தமும் கண்டு இமைகளை இடித்துக்கொண்டு உர்ரென்று ஆனாள்.
“இந்த ரூம சுத்தியும் கேமரா இருக்கு. உன் சின்ன மூவ்மென்ட் கூட என் கண்ணுல இருந்து தப்பாது கடன்காரி…”
‘காசிய விட இவன், கடன் வாங்குனத வார்த்தைக்கு வார்த்தை ஞாபகப்படுத்துறானே…’ எனப் புலம்பியவள்,
“இங்க என்ன பிக்பாஸா நடக்குது, சுத்தியும் கேமரா வச்சிருக்கீங்க?” என்றாள் முறைத்து.
அதற்கும் அதிருப்தியாய் ஒரு பாவனையைக் கொடுத்தவன், “எலிசா வாட்ஸ் தட் பிக்பாஸ்?” எனக் கேட்க, அறையில் பொருத்தப்பட்டிருந்த செயற்கை நுண்ணறிவு பேசியது.
“ஹெலோ பாஸ், பிக் பாஸ் என்பது ஒரு ரியாலிட்டி ஷோ.
பல போட்டியாளர்கள் (contestants) – திரைப்பட நடிகர்கள், தொலைக்காட்சிப் பிரபலங்கள், சமூக வலைதளப் பிரபலங்கள் – எல்லாம் ஒரே வீட்டில் (Bigg Boss House) நூறு நாள்களுக்கு ஒரே இடத்தில் வாழவேண்டும்.
அவர்களது வெளியுலகத் தொடர்புகளை முழுவதுமாகத் துண்டிக்கப்படும். சில போட்டிகளும் நடத்தப்படும்.” என எலிசா பேசிக்கொண்டே செல்ல, திடீரென ஒரு பெண் குரல் கேட்டதில் அத்தனை நேரம் போர்வையைப் போர்த்திக்கொண்டு அமர்ந்திருந்த நிதர்ஷனா பயந்து அலறி எழுந்தாள்.
“என்ன சார் திடீர்னு ரூம் பேசுது? நீங்க கேள்வி கேட்டா பதில் சொல்லுது?” எனப் பதற, கதிரவன் மயக்கமடைந்து விட்டான்.
ஏற்கெனவே பசி வேறு. இதில் சொல்லாமல், கொள்ளாமல் யாரோ பேசியதில் அரண்டு விட்டான் போலும்.
“டிஸ்கஸ்டிங்!” ஏகத்துக்கும் எரிச்சலடைந்த யாஷ் பிரஜிதன், ஆள்களை வரவழைத்துக் கதிரவனை மெத்தையில் கிடத்த வைக்க,
நிதர்ஷனாவோ இன்னும் பயம் அகலாமல், “இன்னா சார், ஷோ காட்டுறீங்களா…” என்றாள் எகிறலுடன்.
“ஏய்!” ஒற்றை விரலை அவன் நீட்டி எச்சரிக்க, யாஷின் விழி வீச்சில் தானாக இரண்டடிப் பின்னால் நகர்ந்தாள்.
“உங்களுக்கு என்ன, அலாவுதீன் மாதிரி எதுவும் மாய விளக்குக் கிடைச்சு, ஆலம்பனான்னு கூப்பிட்டா, அதுல இருந்து பூதம் வந்து நீங்க கேட்டதுக்குலாம் பதில் சொல்லுமா?” கண்களை அகல விரித்துக் கேட்டவளுக்கு ஏ. ஐ பற்றிய கேள்வி ஞானம் மட்டுமே.
அவளது கேள்வியில் அவனுக்கும் தானாகக் கோபம் மட்டுப்பட, “இட்ஸ் எலிசா… லைக், அலெக்ஸா மாதிரியான ஏ. ஐ வாய்ஸ் அசிஸ்டன்ட். பட் அலெக்ஸால இல்லாத எக்ஸ்ட்ரீம் லேட்டஸ்ட் டெக்னாலஜி யூஸ் பண்ணப்பட்ட மெஷின். இந்தப் பங்களால பிஃப்ட்டி பெர்சன்ட் ஏ. ஐ ரோபோஸ் இருக்கு.” என்றவன் அவளை அவனது பங்களாவிற்குப் பக்கத்திலேயே இருந்த மற்றொரு வீட்டில் தான் தங்க வைத்திருந்தான். இன்னும் அவனது முழு ரோபோடிக் வீட்டைக் கண்டால் கதிரவனுக்கு அருகில் அவளும் மயங்கிக் கிடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
“ஓஹோ… அப்போ நான் சொன்னதும் சரி தான். ‘ஆலம்பனா’னு கமல் கூடச் சொல்லுவாரே. அலாவுதீன் கண்டுபிடிச்ச மாய விளக்குல இருந்து ஒரு ஜின்னி வரும். நம்ம என்ன சொன்னாலும் செய்யும்… அது மாதிரி இந்த ஏ. ஐ யும் ஆலம்பனா… கரெக்ட்டா?” என விழி விரித்தவள், அறையை அங்கும் இங்குமாகப் பார்த்து, “ஆலம்பனா… ஒரு பாட்டுப் பாடு!” என்று கேட்க ஒரு சத்தமும் இல்லை.
“வாட் தி ஹெக்!” கழுத்தைத் தேய்த்துக் கொண்ட யாஷ் பிரஜிதன், “எலிசான்னு சொன்னா தான் அதுக்குப் புரியும். நான் அப்படி தான் கோடிங் பண்ணிருக்கேன்.” என்றான்.
“இத்தாலில இருந்து வந்ததுக்காக அந்த நாட்டுப் பொண்ணுங்க பேர் தான் வைக்கணுமா? ஆமா, இந்த ஆலம்பனா பொண்ணா பையனா, சரி எதுவா இருந்தா என்ன? எனக்கு ஆலம்பனா தான் வேணும், எலிசா வேணாம்!” என அடம் பிடித்ததில், தலை சூடானது அவனுக்கு.
விறுவிறுவெனத் தனது பங்களாவிற்கு வந்து அடுக்களையில் போடப்பட்டிருந்த சிறு டைனிங் டேபிளில் அமர்ந்தவன், “ஆலம்பனா, காபி…” எனக் கேட்க, ஒன் செஃப் சமையல் செய்யும் கருவி தனது முதலாளியின் பெயர் வேறுபாட்டைப் புரிந்து கொள்ள இயலாமல் கிணற்றில் போட்ட கல்லாகச் சமைந்து நின்றது.
அதன்பிறகே தான் செய்த பிழை புரிய “ஓ! ஷிட்…” என்று மேஜையில் குத்திக்கொண்ட யாஷ், “எலிசா காபி…” என்றான் பல்லைக் கடித்து.
“காபி ப்ரிபேரிங் பாஸ்…” என காபி மேக்கர் தனது வேலையைச் செய்ய ஆரம்பிக்க, “ஆலம்பனான்னு பேர் வைக்கச் சொன்னதுக்கு ஏன் இந்த மனுஷன் இம்மாம் டென்சன் ஆவுவாரு…” என யோசனையில் மிதந்தாள் நிதர்ஷனா.
அன்பு இனிக்கும்
மேகா