“தியாவிடம் யாரேனும் வம்பு வளர்த்தாள் சூர்யா சும்மா விடமாட்டான்”, என்ற வாசகம் அந்த கல்லூரியில் முழுவதும் பரவியிருந்தது. அப்போது வந்த சூர்யாவின் பிறந்த நாளின் போது அவனுக்கு வாங்கி வந்திருந்த கேக்கில் தியாவின் பெயரையும் சூர்யாவின் பெயரையும் இணைத்து எழுதியிருந்தனர்.
சூர்யாவின் தோழர்கள் விளையாட்டாக ஆரம்பித்தது அனைவரும் தியாவையும் சூரியாவும் காதலர்கள் என்ற எண்ணி அவரவர் போக்கில் பேசும் படியாக முடிந்தது.
தியாவிடம் இது பற்றி யாராவது பேசினாலோ கேட்டாளோ, இல்லை வேறு யாராவது பேசுவதை அவள் கேட்டாளோ அவர்களை ஒரு கை பார்த்து விடுவாள்.
ஆனால் சூர்யா அது எதையும் கண்டு கொள்ள மாட்டான். மௌனம் சம்மதத்திற்கு அறிகுறி என்பதுபோல் அனைவரும் எடுத்துக் கொண்டனர்.
மேலும் தியாவிடம் பேசுபவர்கள் அவளிடம் இது மாதிரி தான் சூர்யாகிட்டயும் கேட்டோம்.. ஆனா அவன் எதுவும் சொல்றது இல்ல.. நீ மட்டும்தான் இல்லை இல்லைனு சொல்ற”, என்று சொல்ல முதல் முறையாக சூர்யாவின் மீது கோபம் எழுந்தது.
“ஏன் அவன் அமைதியாக இருக்க வேண்டும்? இல்லை என்றால் அவன் கூறினால் அதன் பிறகு அவனுக்கு பயந்து யாராவது இவ்வாறு பேசி இருப்பார்களா? என்னைப் பற்றி பேசும்போது அவன் ஏன் அமைதியாக இருக்க வேண்டும்? என்று மனதினுள் குமைந்து கொண்டிருந்தாள்.
அவள் கோபத்தை அறிவிக்கவே அனைவரும் அவளிடம் அவனை பற்றியே பேசிக் கொண்டிருந்தனர். பொறுமையை இழந்தவள், சூரியாவிடமே கேட்டுவிட்டாள், “ஏன் அமைதியாக இருக்க வேண்டும்”, என்று,
“எனக்கு என்னது ஏதோ சொல்ல தோணல அதனால்தான் அமைதியாக இருக்கேன்.. அவ்வளவுதான் என்று அவன் முடித்துக்கொள்ள, தியாவால் அவன் அலட்சியமான பேச்சை ஏற்று கொள்ள இயலவில்லை.
தன் கோபத்தை அடக்க முடியவில்லை அவன் சட்டையை பிடித்து சண்டையிட ஆரம்பித்தாள், “என்ன யார் என்ன சொன்னாலும், உனக்கு எந்த கவலையும் இல்ல இல்ல.. உன்ன போய் என் நண்பனை சொன்னேன் பார்த்தியா.. எனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்.. என் மூஞ்சில முழிக்காத”, என்று கூறியவர் கலங்கிய விழிகளுடன் அங்கிருந்த சென்று விட்டாள்.
அதன் பிறகு அது சூரியா எவ்வளவோ முயன்றும் தியாஅவனோடு பேசவில்லை. இறுதிப் பரீட்சை முடிய அதன் பிறகு அவனால் தியாவை பார்க்கக்கூட முடியவில்லை. ஜெய்யாலும் எதுவும் செய்ய முடியவில்லை.
யார் கூறுவதையும் கேட்க தியா தயாராக இல்லை. மேலும் ஜெய்யிடம் ‘ தான் எங்கிருக்கிறேன் என்ன செய்கிறேன் என்பதை எந்த நிலையிலும் சூரியாவிடம் சொல்ல கூடாது’ என்று சத்தியம் வாங்கியிருந்தாள் தியா.
அவள் இவ்வாறு செய்திருப்பாள் என்று அறிந்தவன் ஜெய்யை தர்மசங்கடமான நிலைக்கு கொண்டுவர விரும்பாமல் அவனிடம் கேட்கவுவில்லை. ஒருவேளை கேட்டிருந்தால் சொல்லியிருப்பானோ என்னவோ..
இன்பத்தில் ஆரம்பித்த இவர்களது கல்லூரி வாழ்வு சொல்ல முடியா இன்னல்களுடன் முடிவடைந்தது.
கல்லூரி வாழ்வை எண்ணி பார்த்தவன், “எத்தனைவாட்டி என்னை மன்னிச்சிருக்க.. எத்தனைவாட்டி என நம்பி இருக்க.. அன்னைக்கு நான் எல்லாருக்கும் சண்டை போட்டிருக்கனும்..
ஏன் ரதியபத்தி தப்பா பேசுறீங்கன்னு?.. என் ரதி பற்றி பேசுவீங்களானு.. நான் யாரையாவது அடிச்சு இருக்கணும்.. எனக்கு தோணவே இல்லை.. எதுவும் பேசணும்னு..
ஒருவேளை நான் பேசினா அவங்க இன்னும் இது பத்தி அதிகமா பேசுவாங்களோனு நினைச்சேன்.. அது உனக்கு இன்னும் உனக்கு கஷ்டமா இருக்குன்னு நினைச்சேன்.. ஆனா நான் பேசாம விட்டது உனக்கு இவ்ளோ வலிக்கும்னு நான் நினைச்சு கூட பாக்கல ரதி.
என்னை அறியாமல் நான் உன்னை காயப்படுத்தி இருக்கேன். அவர்கள் வாழ்வில் கல்லூரி வாழ்க்கைக்கு பிறகு நடந்ததையும் சற்று எண்ணியவனது முழுவதுமாக உடைந்து தான் போனது அந்த இரவு தூங்க இரவாகி போனது.
அதிகாலையில் எழுந்த தியா தான் சூர்யாவின் அணைப்பில் உறங்கி உள்ளதை அறிந்தவள், அவனிடமிருந்து விலகினாள் அதில் கண் விழித்தவன்.
அவளை பார்க்க அவள் எதுவும் பேசாமல் அமைதியாக சூர்யாவை பார்த்தாள், அவள் கையை தனது கையால் பற்றி கொண்டவன், “சாரி ரதி” என்றான்
அவர்கள் கண்கள் கதை பேச, எதுவும் பேசாமல் தன்னை பார்த்துக் கொண்டிருந்த அவளை பார்த்தவன், “ஏதாவது சொல்லுறது”, என்று கேட்க “பழசை நினைச்சு பார்த்தியா” என்றாள் தியா தன்னை பற்றி சரியாக கணித்தவளை மெச்சலாக பார்த்தான்..
ஆம் என்பது போல் தலையை ஆட்டினான். “யோச்சா மட்டும் தான் அதை மாற்ற முடியாது சூர்யா”, என்று கூறியவள் எழுந்து சென்று விட்டாள். ” நடந்தத மாத்த முடியாது ஆனால் உன் மனசுல நடந்த எல்லாத்தையும் நீ மறக்குற மாதிரி செய்வேன்”, என்று படியே ஏறி செல்லும் அவளை பார்த்து உரக்கச் சொன்னான்.
“காயம் ஆறினாலும் தழும்பு இருக்கும் சூர்யா. அதை பார்க்கும் போது அந்த காயம் எதனால ஆச்சு? எப்படி ஆச்சு? அதனால எவ்வளவு கஷ்டப்பட்டோம்னு ஒன்னும் ஒன்னும்.. ஞாபகம் வந்துட்டே இருக்கும்”, என்று கூறியவள் இதற்கு மேல் அங்கிருந்தாள், அவன் பேசிக்கொண்டே இருப்பான் என்று அறைக்குள் சென்று விட்டாள்.
அவள் கூறியதின் அர்த்தம் புரிய மெலிதாகச் சிரித்துக் கொண்டான். “இது போதும் ரதி உன்னை மாத்த என்னால முடியும்.. காயம் ஆறியது நீயே சொல்லிட்ட அதை மறக்க வைக்க என்னால முடியும் மறக்க வைத்து காட்டறேன”, என்று சபதம் எடுத்தது போல் கூறியவன் தானும் எழுந்து சென்றான்.
ஜெயிடம் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தார் ஜானகி. “முடிவா என்னதான் டா சொல்ற? இப்போ கல்யாணத்துக்கு சம்மதிப்பய மாட்டியா?”, என்றவர் கேட்க, “அம்மா நீங்க எத்தனை தடவை கேட்டாலும் என் முடிவு இதுதான்.. இப்போ எனக்கு கல்யாணம் வேண்டாம்.. வேனும்னா ரிதுக்கு மாப்ள பார்க்கலாம்.”, என்று தான் தப்பிக்க தங்கையை மாட்டிவிட்டவனை முறைத்தாள் ரிதன்யா.
இவை அனைத்தையும் வேடிக்கை பார்த்தபடி நின்று கொண்டு இருந்தாள் ஸ்வாதி. நீ என்ன சொன்னாலும் சரி நான் ஸ்வாதிக்கும் உனக்கும் சீக்கிரம் கல்யாணம் பண்ணனும். உங்களுக்கு கல்யாணம் பண்ணா தான் என்னால ரிதுக்கு ஒரு கல்யாணத்தை பத்தி பேச முடியும்.. சுவாதியை வீட்டுல வச்சுக்கிட்டு அவள விட சின்ன பொன்னும் ரிது கல்யாணத்தை பத்தி பேசினா நாலு பேரு என்னடா சொல்லுவாங்க..”, என்று அவர் கேட்க எந்த பதிலும் கூறாமல் நின்றான் ஜெய்.
அவனிடம், “புரிஞ்சுக்கோடா கண்ணா என்னைக்கு இருந்தாலும் நீயும் சுவாதி தானே கல்யாணம் பண்ணிக்க போறீங்க.. அத இப்போ பண்ணிக்கிட்டா என்ன..
உங்க கல்யாணம் முடிஞ்சுருச்சுனா, ‘சுவாதி இது ஒரு நல்ல வாழ்க்கையை அமைச்சுத் தருவேண்’, நான் என் அண்ணனுக்கு செய்து கொடுத்த வாக்கும் என் கடமை முடிந்துடும்டா ஜெய்”, என்று அமைதியாக எடுத்துச் சொல்ல ஏனோ தன்மையாக பேசும் இந்த அம்மாவிடம் அவனால் வாக்குவாதம் செய்ய முடியவில்லை.
“என்னமோ பண்ணுங்க”, கூறிவிட்டு அங்கிருந்து சென்றான். அவன் பதிலை ஆவலாக கேட்டுக்கொண்டிருந்த சுவாதிக்கு, அவனது இந்த பதிலில் அவனுக்கு தன்னை பிடிக்கவில்லையா? அதனால் தான் திருமணம் வேண்டாம் என்று கூறுகிறானா.. என்று சிந்திக்கத் தொடங்கினாள்.
அந்த எண்ணமே அவளுக்கு கண்களைக் கலங்கச் செய்தது. ஆனால் ஏன் வேண்டாம் என்று கூறுகிறான் என்ற காரணத்தை அவள் அறியவில்லை.
ஜெயின் அறைக்கு சென்றாள். அவன் அமைதியாக ஜன்னல் அருகே நின்று கொண்டிருந்தான். “என்ன பிடிக்கலன்னு தான் நீங்கள் இந்த கல்யாணம் வேணாம்னு சொல்றீங்கன்னு எனக்கு தெரியும். உங்க அளவுக்கு கூட என்னால அத்தைய எதுத்துப் பேச முடியாது.
முடிஞ்சா நீங்களே இந்த கல்யாணத்தை நிறுத்துங்க இல்லைன்னா நம்ம கல்யாணத்துக்கு அப்புறம் ஏதாவது காரணம் சொல்லி பிரிஞ்சிரலாம். அத்தைகிட்ட இதை பத்தி நான் எதுவும் சொல்ல மாட்டேன். என்மேல ஏதாவது பழிய சொல்லி நீங்க விவாகரத்து கூட வாங்கி கொங்க நீங்க கவலைப்படாதீங்க.. பிடிக்காத வாழ்க்கைய வ..வலுக்கட்டாயமாக வாழ வேண்டிய நிலைமை உங்களுக்கு வராது.. அதுக்கு ஒருபோதும் நான் காரணமா இருக்க மாட்டேன்”, என்று அவள் பேசிக்கொண்டே போக அவளது பேச்சுக்கான பதிலை கூற தொடங்கி இருந்தான் ஜெய் அவள் இதழில் தன் இதழ் வழியாக…
அதிர்ந்து நின்றாள் சுவாதி.
சூர்யா என்ன சொல்லப் போகிறான் என்பதை கேட்பதற்காக கைகளைக் கட்டிக்கொண்டு நின்றாள் தியா. அவனும் ஆரம்பித்தான்.
“அது வந்து ரதி நம்ம ரெண்டு பேரும் எங்காச்சும் வெளியே போலாமா?” என்று அவன் சொல்ல கண்களை சுருக்கி அவனை பார்த்தாள் தியா.
“நீ என்ன நினைக்கிறன்னு எனக்கு தெரியும் இப்போ எதுக்குனு தானே”, என்று அவளிடம் வினவ ஆம் என்பது போல் தலையை ஆட்டினாள்.
“நான் ஜெய் கிட்ட சொல்லி இருக்கேன் ஒரு நாலு இல்ல அஞ்சு நாள் ஸ்டே பண்ற மாதிரி புக் பண்ண சொல்லி”, என்று அவன் வரையறுக்க இன்னும் அதே பார்வை தான் பார்த்தாள்.
“இதுவும் புரியுது.. நான் இன்னும் வரேன்னு சொல்லல ஆனா நீ பிளான் போடுறியா அப்படி தான நீ நினைக்கிற”, என்க, மீண்டும் ஆம் என்று தலையை ஆட்டினாள்.
“இதே மாதிரி போலாமா என்று கேட்கும்போது தலையாட்டுவேன்னு நம்பிதான் பிளான் போடறேன்” என்று சொல்ல இப்போது அவனை நன்றாக முறைத்தாள்.
“சரி முறைக்காத ரதி என்னை என்ன பண்ண சொல்ற டாக்டர் தான் உன்ன இந்த டெய்லி ரொட்டின்ல இருந்து வெளிய அழைச்சுட்டு போக சொன்னாங்க..
நீ என் கூட வர யோசிப்பனு தெரியும் வேற வழி ஏதாச்சும் இருக்கா.. நீயே சொல்லு.. யாரு கூடயோ உன்ன உன்ன அனுப்ப எனக்கு விருப்பமில்லை.. தனியா அனுப்பிட்டு நீ என்ன பண்றியோ? ஏது பன்றியோன்னு? பயந்துட்டே இருக்கவும் என்னால முடியாது.. சோ சரின்னு சொல்லு ரதி.. எனக்காக ப்ளீஸ்”, என்று கெஞ்சும் பார்வை பார்த்துக் கொண்டே கேட்டான்.
அவள் இன்னும் யோசித்துக்கொண்டே இருக்க ஓரடி முன்னால் சென்றவன், தியாவின் கைகளைப் பிடித்துக் கொண்டான். “ப்ளீஸ் ரதி.. சரின்னு சொல்லு.. ப்ளீஸ்.. ப்ளீஸ்”, என்று கைகளை அழுந்தப் பற்றியவாறே அவர் கண்களைப் பார்த்துக் கொண்டு கேட்டான்.
அவன் வாய்மொழியில் தான் காட்டிய அலட்சியத்தை அவனது விழி மொழியில் காண்பிக்க அவளால் இயலவில்லை. அவன் விழியில் கட்டுண்டவள் ‘சரி’ என்று தன் வாயை திறந்து தன்னை அறியாமலே கூறினாள்.
அதில் உற்சாகமாணவன் ஒரு கையால் அவளை ஒரு சுழற்று சுழற்றி மற்றொரு கையால் பிடித்தான். தியாவுக்கு தான் ஒரு நொடியில் திக்கென்று ஆனது. அதில் அவனை முறைக்க, “சாரி சாரி” என்று கண்ணம் பற்றிக் கெஞ்சி விட்டு.. அறையிலிருந்து வெளியே சென்றான்
அவளை அறியாமல் அவன் சென்ற திசையில் நிலைகுத்தி நின்றது, அவளது பார்வை. “என்ன ஆச்சு எனக்கு? நான் எதுக்காக சூர்யா கூட போறதுக்கு சரின்னு சொல்லணும்? நான் எனக்கே தெரியாமல் கொஞ்சம் கொஞ்சமா மாறிட்டு வர்றேன்னா? என்னால மாற முடியுமா? சூர்யா கூட இந்த வாழ்க்கையே என்னால வாழ முடியுமா? இவ்வளவு கேள்வி இருக்கும்போது நான் ஏன் இப்போ வெளியே போறதுக்கு சரின்னு சொல்லணும்? என்னோட இந்த மாற்றம் நல்லதுக்கானு தெரியலையே!.” என்று பலவாறு சிந்திக்க தொடங்கினாள்.
சில நேரம் அதிகம் சிந்திப்பதால் ஒரு முடிவு கிடைப்பதற்கு பதில் குழப்பமே மிஞ்சும். அதே நிலையில் தான் தியாவும் இருந்தாள் யோசித்து யோசித்து குழம்பிப் போனவள் தன் யோசனையை கைவிட்டாள்.
“போலாம்னு சொல்லியாச்சு.. இப்போ யோசிச்சு என்ன ஆகப்போகுது.. போறதுக்கு பேக்கிங் பண்ணலாம் ஹ்ம்ம்.. “, என்று இழுத்து விட்ட மூச்சோடு முடிவெடுத்தவள் அதற்கான வேலையை தொடங்கினாள்.
அறையிலிருந்து வெளியே வந்த சூர்யா ஜெய்க்கு அழைப்பு விடுத்தான். அழைப்பை ஏற்ற ஜெய்யிடம், “மச்சான் நான் சொன்னத செஞ்சியா”, என்று வினவினான்.
“என்ன சொன்ன?.. எனக்கு எதுவுமே ஞாபகம் இல்லையே..”, என்று அம்னீசியா வந்தவன் போல பேசினான் ஜெய். அதில் கடுப்பான சூர்யா, ” அங்க வந்து ரெண்டு விட்டேனா எல்லாம் ஞாபகம் வரும்.. என்ன வரவா?”, என்று மிரட்டும் தோணியில் கேட்க,
“மச்சான் நீ அந்த ரெசார்ட் புக் பண்ண சொன்னியே. அதை பத்தியாக கேட்கிற இப்போதண்டா நியாபகம் வருது”, என்று ஒன்றும் தெரியாத பச்சைப் பிள்ளை போல் அப்பட்டமாக நடித்து கொட்டினான் ஜெய்.
“ஆமா என்னாச்சு முடிச்சியா இல்லையா”, என்று வினவிய சூர்யாவிடம், “மச்சா இப்போதைக்கு எந்த ரேசார்டும் அவைலபுல இல்லடா.. எதைப் பார்த்தாலும் ஃபுல்னு வருது. சில இது நாட் அவைலபில் அப்படின்னு வருது”, என்று சொல்ல,
“வந்தனா உன்னை கொல்லாமல் விடமாட்டேன்.. இங்கே ரதி ட்ரிப் போறதுக்கு இப்போதான் சரின்னு சொன்னா.. நீ அதுல மண்டலி போட பாக்குறியா.. உனக்கெல்லாம் கல்யாணமே ஆகாது டா.. ஆனா கூட..”, என்று சொல்ல வந்தவனை,
“டேய் டேய் போதும்டா நிறுத்து எதாவது சாபவிட்டு தொலையாத.. அப்றம் நடந்துற போது.. மோதல்ல நான் சொல்ல வந்ததை முழுசா கேளு.. அங்க எல்லாம் கிடைக்கலன்னு தான் நான் உனக்கு மால்தீவ்ஸ் போயிட்டு வர்றதுக்கு கம்ப்ளீட் பேக்கேஜ் புக் பண்ணி இருக்கேன்”, என்று வேகமாக சொன்னான் ஜெய்.
என்னதான் அவன் சமாளித்தாலும் அவன் வேண்டும் என்றுதான் மாலத்தீவுக்கு செல்ல ஏற்பாடு செய்திருக்கிறான் என புரிந்து கொண்டான் சூர்யா.
இருந்தும், “ஏண்டா உன்கிட்ட ஒன்னு சொன்னா… சொல்றத செய்ய மாட்டியா உன் இஷ்டத்துக்கு தான் செய்வியா”, என்று நன்றி விசுவாசம் கொஞ்சம் கூட இல்லாமல் ஜெய்யை திட்டினான்.
“இங்க பாரு நான் உனக்கு மிகப்பெரிய உதவி செஞ்சிருக்கேன்.. அது புரியாம அற்ப பதர் போல் என்னை திட்டி மிகப்பெரிய பாவத்தை பண்ணாத மகனே சொல்லிட்டேன்”, என்று புத்தர் ரேஞ்சுக்கு பேசினான் ஜெய்.
“அப்படி என்ன சார் நீங்க மிகப்பெரிய உதவி செஞ்சீங்க கொஞ்சம் சொல்லுங்க” என்று நக்கலாக சூர்யா கேட்க, “நீயே சொல்லு நீ சொல்ற இடத்துக்கு எல்லாம் போயி, ஏதாச்சும் நீங்க ரெண்டு பேரும் சண்டை போட்டா தியா உன்ன அங்கயே விட்டுட்டு கிளம்பி வந்துருவா..
அதுவே இந்த மாதிரி ஓவர்சீஸ் ட்ரிப்ன்னா ரிட்டன் டிக்கெட் எப்ப போட்டிருக்கோமோ அப்போதானே வரமுடியும் சோ நான் உனக்கு நல்லது தானே பண்ணியிருக்கேன்.. சொல்லு சொல்லு”, என பெருமையாக ஜெய் சொல்ல,
“ஆக உன்மனசுல அங்க போயும் சண்டை போடணும்னு தானே நினைக்கிற.. நீ நல்லா இருப்பியா.. சோறு தான திங்கிற”, என்று மீண்டும் சாபம் உறைக்க தொடங்க,
“டேய் சும்மா இருடா.. ஏண்டா இப்படி ஆ ஊ ண்ணா சாபம் கொடுக்க ஆரம்பிக்குற..” என்று பாவமாக குறை பட,
“சரி டா நாயே ஓவரா பண்ணாத.. என் பிளான் எல்லாம் தெரியும் நான் போய் உன் தியா கிட்ட சொல்றேன்.. நீ ட்ரிப் டீடெய்ல்ஸ் எல்லாமே எனக்கு அனுப்பி விடு கிளம்பறதுக்கு முன்னாடி, உன்ன முடிஞ்சா பார்க்க வரேன்”, என்று உணர்ந்து கூறிவிட்டு அழைப்பை துண்டித்து விட்டான் சூர்யா.
ஜெயின் இந்த கலகலப்பான துடுக்குத்தனம் மிகுந்த விளையாட்டு பேச்சுக்கள் தான் சூர்யாவை இன்றும் உயிர்ப்புடன் வைத் துள்ளது.
அதை எண்ணி கைப்பேசியை பார்த்து சிரித்தவன் தியாவிடம் சென்று மாலத்தீவு செல்லவிருப்பதை பற்றி கூறினான் சிந்தனை கடலில் எண்ணப் படகில் மிதந்து கொண்டு இருந்தவள் சரி என்று கூறினாள்..
மாலத்தீவு செல்வதற்கு அனைத்தையும் செய்து முடித்தவன் தியாவை வீட்டில் கிளம்பி இருக்க கூறிவிட்டு ஜெய்யை காண அலுவலகம் சென்றான்.. அவனைக் கண்ட ஜெய்,
“வாங்க சார்.. என்ன போயிட்டு வரேன்னு சொல்லிட்டு.. அப்டியே சூரியவம்சம் படத்துல வர்ற தேவயானி மாதிரி என் கால்ல விழுந்து எனக்கே தெரியாம ஆசிர்வாதம் வாங்கிட்டு போலாம்னு வந்திங்களா..”, என்று காலை தூக்கி மேலே போட்டவன், “நான் ஒன்னும் நினைச்சிக்க மாட்டேன்.. ஸ்ட்ரைட்டா வாங்கிக்கோ”, என்றான் கால்களை ஆட்டி பெருந்தன்மையாக,
வேகமாக முன்னேறிய சூர்யா அவன் இரு கால்களையும் பிடித்து முறுக்கினான். “ஏண்டா போனா போகுது சொல்லிட்டு போலாம்னு வந்தா.. ஓவர் வாய் பேசுற ராஸ்கல்”, என்று கூறிக்கொண்டே முறுக்க,
“டேய் விடு டா..வலிக்குது”, என்று கத்திக்கொண்டே கால்களை விடுவித்துக் கொண்டான் ஜெய். சிறிதுநேர கலகலப்பு பேச்சுக்குப் பின்னால் சூர்யாவிடம் அவன் புக் செய்திருந்த டிக்கெட்டுகளையும் ஹோட்டலில் தங்குவதற்கான சீட்டுகளையும் கொடுத்தான் ஜெய்.
அதை வாங்கி பார்த்தவன், “என்னடா டிராவல் டிக்கெட்ஸ் இவ்ளோ இருக்கு”, என்று குழப்பமாக அவளைப் பார்த்தான் சூர்யா.
“அங்க தான் மச்சான் உன் நண்பனோட மூளையே இருக்குது.. என்று கூறியவனை வினோதமாக நோக்கினான் சூர்யா.
“என்னன்னு நீ கேக்க மாட்ட பரவால்ல நானே சொல்றேன்.. நான் நினைச்சிருந்தா ஸ்ட்ரைட்டா ஒரே பிளைட் டிக்கெட் இங்கிருந்து நீங்க மால்திவ்ஸ் போற மாதிரி போட்டு இருக்கலாம்..
ஆனால், நான் அப்படி பண்ணல நீங்க, எங்க இருந்து கொலம்பு ஏர்போர்ட் போய்.. அங்கிருந்து மால்தீஸ் மெயின்ஸ் பொய்.. அப்புறம் தான் நான் புக் பண்ணி இருக்க ஐலேண்ட் இருக்க இடத்துக்கு போக முடியும்..
அதுக்கப்புறம் அங்கிருந்து உங்களை ரிசார்ட்டுக்கு கூட்டிட்டு போக ஏற்பாடு பண்ணியிருக்கேன்”, என்று அவன் பயணத்தை வரையறுத்துச் சொன்னான்.
இதைக்கேட்ட சூர்யாவிற்கு மயக்கம் வராத குறைதான். “அட மலக் குரங்கே எதுக்குடா இத்தனை வேலை பார்த்த?.. ஸ்ட்ரைட்டா போற மாதிரி பண்ண வேண்டியதானே” என்று ஆதங்கமாக சூரியா கேட்டான்.
அவனிடம், “முட்டாப்பய மாதிரி பேசாதடா இவ்வளவு மாறி மாறி போனால் நிறைய டைம் கிடைக்கும் நீங்க ரெண்டு பேரும் நிறைய பேசலாம்.. எப்புடி”, என்று காலரை தூக்கி விட்டுக் கொண்டவனே பார்த்து முறைப்பது தவிர என்ன செய்வது என்று சூரியாவிற்கு தெரிய வில்லை.
“உன் அறிவுக்கு நீ இங்க இருக்க வேண்டிய ஆளே இல்ல டா”, என்று நீட்டி எடுப்பது போல் அவன் தலையில் கொட்டி விட்டு, அவன் அவனிடமிருந்து சீட்டுகளை வாங்கி கொண்டு கிளம்பினான்..
வீட்டிற்கு வந்தவன் கிளம்பி இருந்த தியாவிடம், “டு மினிட்ஸ்” என்று கூறிவிட்டு தானும் சென்று கிளம்பி வந்தான்.
இருவரும் ஏர்போர்ட் நோக்கி பயணத்தை தொடங்கினர். வழியில் சிக்னலில் நின்றபோது தியாவிடம் திரும்பியவன், “ரதி இங்கேயாச்சும் ஜெய் சுவாதி ரிது எல்லாரும் இருந்தாங்க, அங்கே நான் மட்டும் தான் இருப்பேன்.. உன் கூட சோ ஏதாவதுன்னா என்கிட்டே சொல்லு.. திருப்பி இங்கே வந்து நீ என்கூட பேசாட்டியும்.. பரவால்ல அங்க ஏதாச்சும்னா என்கிட்ட சொல்லு எதுவா இருந்தாலும் பரவால்ல. சரியா”,என்று கேட்க, “ம்ம்”, என்றால் வாயை திறந்து சொல்லு ரதி என்று கூற,
சரி சூர்யா என்று சொல்ல, அவள் வாயால் இத்தனை வருடங்கள் கழித்து தன் பெயரை கேட்டவனுக்கு, மிதப்பது போல் இருந்தது. அந்த மகிழ்ச்சியை உடனே ஏர்போர்ட் வந்தடைந்தான்.