காணாமல் போன நேத்ராவை நிமல், சரண் என இருவரும் அன்பும் பாசமும் கொண்டு தேடிக் கொண்டிருக்க மனம் முழுதும் எப்படியேனும் அவளின் பணத்தையும் அவளின் அழகையும் அடைய வேண்டும் என்று ரகுவும் ஒரு புறம் தேடிக் கொண்டிருந்தான்.
இருவருடங்கள் கடந்ததே தவிர நேத்ரவை பற்றி யாராலும் அறிய முடியவே இல்லை. கடவுளின் செயலோ….. இல்லை நிமலின் காதலின் செயலோ……. நேத்ராவை நிமலிடமே சேர்த்து விட்டது.
ஆனால் என்னதான் உனக்கு நான் நல்லது செய்தாலும் கண்ணீர் விட வைத்து தான் செய்வேன் என்று நினைத்த கடவுளும் காதலும்…… நிமலின் மூலமே விபத்தை நடத்தி இருவரையும் சேர்த்து வைத்து விட்டது. விழிகளில் கொண்ட காதல் சேர்ந்து விட்ட நிம்மதியில் காதல் மனங்கள் இருக்க மீண்டும் தடையாய் சித்துவும் ரகுவும் வந்து சேர்ந்தனர்.
தங்களின் இருவருட நிலையை நினைத்துக் கொண்டிருந்த நிமலனை உலுக்கிய சரண், எல்லாம் நான் சொல்லிட்டேன், ஆனா இப்போ இந்த விஷயத்தை என்கிட்ட கேட்க காரணம் என்ன என்று கேள்வியுடன் நிறுத்தினான். அதுவரை அமைதியாய் பழைய நினைவுகளில் இருந்தவன், சரண் கேட்டதும்…….
இன்னிக்கி நானும் அம்முவும் வெளிய போயிருந்தோம். காலைல கிளம்பும் போது சித்து வந்துட்டு போனா… அப்போலிருந்து அம்மு ஒரு மாதிரி பயந்து கிட்டு தான் இருந்தா.. எப்படியோ சமாளித்து நார்மல் ஆகிட்டேன். ஆனா பீச் ல நான் ஃபோன் பேசிட்டு வந்த ரெண்டு நிமிசத்தில மறுபடியும் அதே பயம் அம்முவோட முகத்தில…. எனக்கு ஏதோ தப்பு நடக்குதுனு தோணுச்சு. அதான் உடனே உன்கிட்ட கேட்டேன்.
இப்போ நீ சொல்லுறத வச்சு பார்த்தா மறுபடியும் இன்னிக்கி சித்து அம்முவ மெரட்டிருக்கா… அதை மறந்து சாதாரணம் ஆன பிறகும் பயந்து போனதுக்கு காரணம் தான் என்னனு தெரியல. அதுக்கு அப்புறம் நான் ஏதும் அவ கிட்ட கேட்கவே இல்ல.
எது எப்படியிருந்தாலும் இனி என் அம்முவோட நிழலக் கூட யாராலும் நெருங்க முடியாது….. கூடிய சீக்கிரம் என் அம்முவ என்கிட்ட இருந்து பிரிச்ச அவங்களுக்கு இந்த நிமலன் யாருனு காட்டுறேன்….. கோபமாய் சிங்கமென கர்ஜித்தான் நிமல்.
இதில ரொம்ப கஷ்டம் என்ன தெரியுமா.. டா.. கண்ணு முன்னாடியே எல்லாம் நடந்தும் அத என்கிட்ட சொல்ல முடியாம அவ தவிச்சது தான்…. ஆனா ஒன்னு மட்டும் உறுதியா சொல்லுறேன்… டா… இனி எங்களோட வாழ்க்கையில சந்தோசம் மட்டும் தான்டா இருக்கும்….. அதுக்காக நான் என்ன வேண்டும்னாலும் செய்வேன்… என்றான் நிமல்.
உயிர் நண்பன் உயிர் தோழியின் வாழ்க்கையில் இனி எந்த பிரச்சனையும் வராது என்று சந்தோசம் அடைந்த சரண் நிமலை அணைத்து தனது ஆனந்தத்தை வெளிப்படுத்தினான். இருவரும் பேசி முடித்து அறை செல்ல அங்கு நேத்ரா இன்னும் உறங்கிக் கொண்டு தான் இருந்தாள். அவளை கண்டு சற்று யோசித்த சரண், இப்போ அவளை ஏப்பிடி இந்த பயத்திலிருந்து வெளிக் கொண்டு வரேன்னு பாரு என்று நிமலிடம் கூறியவன், உறங்கிக் கொண்டிருக்கும் நேத்ராவின் அருகில் சென்று அவள் காதுகளில் ஏதோ கூற அடுத்த நொடி அவள் உடல் நிலையையும் பயத்தையும் மறந்து சிரித்த முகமாய் சரணின் முன் கைகளை நீட்டினாள்.
அவளின் செயலில் முதலில் அவளின் உடல்நிலையை எண்ணி பயந்த நிமல் அவள் முகத்தில் தோன்றிய புன்னகையில் தன்னிலை மறந்து அவளை ரசிக்க தொடங்கியிருந்தான்.
சிறு பிள்ளை போல சரணிடம் கை நீட்டி புன்னகை முகமாய் இருந்தவளை பார்க்க சரணின் மனம் ஆனந்தம் அடைந்தது. அவளை குறும்பாய் பார்த்த சரண்…. அப்போ ஒரு கண்டிசன். நான் சொல்லுறத செய்யணும் அப்போதான் நான் உனக்கு அதை கொடுப்பேன் என்றிட… அவனை பார்த்து முடியும் அளவு முறைத்தவள் என்ன என்று சைகை மூலம் கேட்டாள்.
மீண்டும் அவள் காதுகளில் ஏதோ சொல்ல…. நேத்ரா மறுப்பாக தலை அசைத்தாள். அதெல்லாம் முடியாது நீ நான் சொன்னத செஞ்சா… நான் நீ விரும்புனத தரேன்…. என்றதோடு அறையிலிருந்து வெளியேறினான்.
மனதிற்குள்ளேயே செய்யலாமா வேண்டாமா என்று பட்டிமன்றம் நடத்தியவள் மெல்ல நிமலின் அருகில் சென்றாள். அதுவரை அவளை ரசித்துக் கொண்டிருந்த நிமல் அவள் அருகில் தயங்கி தயங்கி வருவதை பார்த்து, யோசனையாய் பார்க்க….மெல்ல உதட்டசைவில் சாரி என்று கூறியவள் அவனின் உயரத்திற்கு எம்பி தலையில் நங்கென்று இரண்டு கொட்டுகளை வைத்தவள் அவன் என்ன செய்ய போகிறானோ என்று எண்ணி பயந்து கண்களை மூடிக் கொண்டாள்.
வலியில் கத்தியவன் தலையை தடவிக் கொண்டே அவளை பார்க்க, அவளோ கண்களை இறுக்க மூடயபடி அவனின் சட்டையையே பற்றி இருந்தாள். எப்போதும் போல காதல் உணர்வு கண்களில் கவிநயம் செய்ய அவனை அவளில் தொலையச் செய்த விழிகளில் முத்தமிட்டான் நிமல்.
அவன் முதல் முத்தத்தில் மதி மயங்கியவள் மூடிய விழிகளை திறந்து அவனை பார்த்த அடுத்த நொடி தன் முழு காதலையும் அவளுக்கு உணர்த்திக் கொண்டிருந்தான் அவளின் விழி வழியே. இருவரின் விழிகளும் காதல் மொழி பேசிக் கொண்டிருக்க….. மனைவியாய் தன் முன்னிற்கும் பெண்ணவளின் இடை தழுவி கணவனாய், காதலனாய் அவளின் இதழில் கவிபாட தொடங்கினான்……….
அவளில் கிறங்கி தன் காதல் மொழிகளை அழுத்தமான இதழ் ஒற்றலில் அவளுக்கு உணர்த்திக் கொண்டிருந்தவன், தன்னிலை பெற்று மீண்டும் விழிகளில் அவளை வருட, நேத்ரா அவனில் தொலைந்து போதுமென விழிகளிலே கட்டளையிட
இருவரும் சேர்ந்து கீழே சென்றனர். இருவரின் ஆனந்தத்தை கண்ட சரனும் மகிழ்ச்சியோடு கைகளில் நேத்ராவின் விருப்ப பொருளை வைத்துக் கொண்டு நின்றிருந்தான். வேகமாக அவனருகில் சென்றவள் அவனிடம் கைகளை நீட்ட, அதில் அதை வைத்தவன் அவனுக்கும் பங்கு கேட்டிட, அவனுக்கு ஒழுங்கு காட்டி விட்டு நிமல் பின்னே சென்று ஒளிந்து நேத்ரா சப்பு கொட்டி சுவைத்தாள் அவன் தந்த அவளுக்கு மிகவும் பிடித்த பாபின்ஸ் மிட்டாயை. அவள் சாப்பிடட்டும் என்று விட்டால் அது சரண் இல்லையே, அவள் மிட்டாய் சுவைக்கும் அழகை ரசித்துக் கொண்டிருந்த நிமலை சோஃபாவில் தள்ளி விட்டு அவளிடம் இருந்த மிட்டாயை பிடிங்கியவன் வாயில் போட்டபடி ஓட, நர்சரி பள்ளி குழந்தைகள் போல இருவரும் பாப்பின்ஸ்க்காக அடித்துக் கொண்டனர். அப்படியே மீண்டும் பழைய சரண் நேத்ராவாக மாறியிருந்தனர்.
அனைவரும் குடும்பமாக அமர்ந்து உணவு உண்டு ஆனந்தமாய் இருக்க சித்து வீட்டினுள் நுழைந்தாள். சித்துவை கண்ட நேத்ரா பயத்தில் பழையதை நினைத்து கொண்டிருக்க, ஆதரவாய் அவளின் கை பற்றி உனக்கென நான் இருக்கிறேன் அம்மு என்று நிமலன் கூறினான். அதிர்ச்சியில் விழிகள் விரிய இவனுக்கு அனைத்தும் தெரிந்து விட்டதா என்ற ரீதியில் நிமலை பார்த்தால் நேத்ரா.
சகஜமாக எல்லோரிடமும் பேசிய சித்துவை பார்க்க பார்க்க நிமலனுக்கு கொலை வெறியே உண்டானது. சரணின் மனம் சித்துவுக்காக அனுதாபம் கொண்டது, பாவம் உயிர் பிழைத்து வீடு போய் சேர்வாளா என்று. என்ன இருந்தாலும் தங்கை இல்லையா. எல்லோரும் ஒன்றொன்று நினைக்க, அவளை பற்றி வெளியே காட்டிக் கொள்ளாமல் இருந்த நிமல் சரணிற்க்கு கண்களிலே செய்தி சொல்ல அவனும் சரி என்றான்.
சித்துவின் பேச்சு நிமலின் அம்மாவிடம் இருந்தாலும் பார்வை அவனிடத்தில் தான் இருந்தது. அதில் மேலும் கடுப்பானவன் எழுந்து செல்ல நேத்ரா சரண் இருவரும் அவனுடனே எழுந்து சென்றனர். இருவரும் தங்களின் திட்டத்தை செயல்படுத்த முடிவெடுத்தனர். பேசி முடித்த சரண் எப்படியும் நேத்ராவிடம் ஏதாவது சொல்லி விட்டு தான் சித்து போவாள் என்று நிமலிடம் சொல்லி முடிக்க அவனின் கணிப்பை நிறைவேத்திட அவள் மேலே வந்தாள்.
நிமலிடம் அதிகமாக வழிந்தவள். ஏதேதோ பேச, சரண் காரணமே இல்லாமல் ஒன்னு இரண்டு என எண்ணிக் கொண்டிருந்தான். அவனின் செயலில் வித்தியாசமாக பார்த்துக் கொண்டிருந்த நேத்ரா சப் என்ற சத்தத்தில் திரும்பி பார்க்க சித்து தரையில் புதையல் தேடிக் கொண்டிருந்தாள். மச்சான் வர வர ரொம்ப கோபப்படுறடா.. இன்னும் நான் ஆறே சொல்லல அதுக்குள்ள அடிச்சுட்ட…என்று கோபம் அதிகமாய் இருந்தாலும் கிண்டலாகக் கேட்டான் சரண். அவனும் அவள் மேல் கொலை வெறியுடன் தான் இருந்தான். கன்னத்தை தாங்கி அழுகையில்
அடி வாங்கிய சித்து பயந்தாலோ இல்லையோ, நிமல் அடித்த அடியை பார்த்த நேத்ரா பயந்து நடுங்கிக் கொண்டிருந்தாள்.
ஏய் அம்மு நீ ஏண்டா பயப்படுற… இங்க வா என்று அவளை அழைத்து அணைத்துக் கொண்ட நிமல் கீழே கிடந்த சித்துவை கண்களிலே எரித்திடும் அளவுக்கு பார்த்தவன், என்னோட அம்முவ என்கிட்ட இருந்து பிரிக்க யாராலையும் முடியாது. இப்போ நீ வாங்கினது வெறும் சாம்பிள் தான், இனி தான் இருக்கு உனக்கு. போ போய் உன் நலம் விரும்பிக்கிட்ட சொல்லு நமக்கு சங்கு ஊத நிமல் நாள் குறிச்சிட்டான், அவனே நம்மல தேடி வருவானம், அது வரைக்கும் அவன் கண்ணுல பட வேண்டாம் அப்பிடின்னு. அம்முவ கொடுமபடுத்துனதுக்கு உங்கள வச்சு செய்ய காத்திருக்கேன் டி….. சீக்கிரம் உங்களை தேடி நானே வருவேன், போ என் கண்ணு முன்னாடி நிக்காத என்று சிங்கமென கர்ஜித்தான் நிமல்.
அடிவாங்கி வீங்கிய முகத்தோடு வெளியேறிய சித்து வன்மம் தலைக்கேற கொதித்து கொண்டே இருந்தாள். ரகுவை அழைத்து அனைத்தையும் கூறிட, அவனோ அவன் என்ன எதுவும் செய்ய முடியாது. நேத்ராவோட அழகும் பணமும் எனக்கு மட்டும் தான் சொந்தம். அவனது உருட்டலுக்கு பயந்து நடுங்க நான் ஒன்னும் உன்ன மாதிரி கிடையாது. முடிஞ்சா என் கூட சேர்ந்து நான் சொல்லுரத கேளு. இல்ல இப்போவே முடியாதுனு விலகி போயிடு…. நீயே முடிவு பண்ணு என்று அழைப்பை உடைத்தான்.
இதில் சித்து தான் மிரண்டு கொண்டிருந்தாள், நிமலனை பற்றி தெரிந்து எப்படி அவனுடன் மோதுவது என்று யோசித்தாலும் அடி வாங்கிய கன்னத்தை தடவி இதற்காக நீ அனுபவிப்பது கொஞ்சமாக இருக்க கூடாது நிமல் என்று மீண்டும் ரகுவையே நாடினாள். இவர்களின் பழி வாங்கும் செயலால் ஓர் உயிர் போக போகிறது என்று முன்னமே தெரிந்திருந்தால் நிமல் சித்துவை அவன் பார்த்ததும் பொசுக்கி இருப்பான். ஆனால் அது சாத்தியமில்லயே.
பார்க்கலாம் பணத்திற்காக இன்னும் என்ன என்ன நடக்கிறது என்பதை.
ரகு அவனது திட்டத்தை சித்துவிடம் கூற அவளும் சரியென சம்மதித்தாள். இப்போது சித்துவிற்க்கு நிமல் மேல் ஆசை போய் பழி உணர்வு மட்டுமே இருந்தது. அதனால் ரகு சொன்ன அனைத்திற்கும் பூம் பூம் மாடு போல தலையை ஆட்டி கொண்டிருந்தாள். கொஞ்சமாவது மண்டையில் மசாலா இருந்திருந்தால் ரகு தன்னை தான் சிக்கலில் மாட்டி விட பார்க்கிறான் என்பது புரிந்திருக்கும், ஆனால் ஏதும் அறியாமல் நிமல் நேத்ரா வாழ்க்கையை கெடுக்க வேண்டும் என்று நினைத்து அவள் தலையில் அவளே மண்ணை வாறி போட்டுக் கொண்டாள். ஏனென்றால் ரகு சொன்ன திட்டம் அப்படி.
நீ என்ன வேணும் என்றாலும் திட்டம் தீட்டு, அது ஏதும் என்கிட்ட நடக்காது என்பதை போல, நிமல் நேத்ராவுடன் தன் காதல் கணைகளை வீசிக் கொண்டிருந்தான். நேத்ரவின் உடல் நிலை தேறியிருந்தாலும் அவளின் குரல் மட்டும் சரியாக வில்லை.
ஒவ்வொரு நாளும் நிமலனின் அன்பில் சிறு குழந்தையாய் மாறியிருந்தாள் நேத்ரா. அம்மு அம்மு என்று அவளின் அனைத்து தேவைகளையும் அன்னைக்கு அன்னையாய், தந்தைக்கு தந்தையாய், காதலானாய், கணவணாய், நண்பனாய் நிமல் இருந்தான். காதல் செய்த நாட்கள் குறைவாக இருந்தாலும், காதலை சுமந்த நாட்கள் அவர்களை மேலும் காதலில் மூழ்க வைத்திருந்தது. நீயின்றி ஒரு போதும் நான் இல்லை என்று காதல் செய்து கொண்டிருந்தனர் கணவன் மனைவி இருவரும். இவ்வளவு நாள் தான் ஏங்கிய அன்பு கிடைத்து விட்டது என்ற மகிழ்ச்சியில் திளைத்திருந்தாள் நேத்ரா.
ஒருவர் மனதை ஒருவர் புரிந்து கொண்டு எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் மீண்டும் தங்களின் விழி வழிக் காதலை செவ்வனே செய்து கொண்டிருந்தனர். நேத்ராவின் மையிட்ட விழிகளில் மீண்டும் தொலைந்திருந்தான் நிமல்.
காற்றை தரும் காடுகள் வேண்டாம்
தண்ணீர் தரும் கடல்கள் வேண்டாம்
நான் உண்ண உறங்கவே பூமி வேண்டாம்
தேவை எதுவும் தேவையில்லை
தேவை இந்த தேவதையே…
என்னோடு நீ இருந்தால்…உயிரோடு நான்
இருப்பேன்….
அன்றும் அவர்களின் காதல் மொழி விழி வழியே யுத்தம் செய்து கொண்டிருக்க, யுத்தத்தை தடை செய்ய கரடியாய் வந்து சேர்ந்தது அந்த ஆறரை அடி கரடி. ஹாய்…… ஹாய் நேரா எப்பிடி இருக்க என்று கேட்டுக் கொண்டே உள்ளே வந்தான் சரண். வாடா கரடி எப்போவும் நான் உன் கண்ணுக்கு தெரியவே மாட்டேனா… வந்ததும் அம்மு மட்டும் தான் உன் கண்ணுக்கு தெரிவா போல, என்று நிமல் கொஞ்சம் கோபத்துடன் கூடிய பொறாமையில் பொங்க,
எப்போதும் அவன் சிரிக்கும் அதே அசட்டு சிரிப்போடு அதெல்லாம் இருக்கட்டும் எனக்கு இப்போ ஒரு முக்கியமான விஷயம் தெரியணும். அதை முதல்ல யார் சொல்லுறதுனு முடிவு பண்ணுங்க என்ற கேள்வியோடு சரண் நிறுத்த…..
என்ன என்று இருவரும் சேர்ந்து அவனை பார்க்க,
நம்ம கம்பனிக்கு புதுசா வந்திருக்கிற அந்த பொண்ணு யாரு, யார் அவளை அப்பாயின்ட் பண்ணது. அது மட்டும் இல்லாம அவ அடிக்கடி என் கிட்ட வம்பு வழக்க சொல்லி… சொல்லி குடுத்தது யாரு….. சொல்லுங்க…
என்று கேட்க….. இப்போது நிமலும் நேராவும் அசடு வழிந்து கொண்டிருந்தனர்.
ஐய்ய…… ரொம்ப வழியாதிங்க டா…. வீட்டுக்குள்ள வெள்ளம் வந்திடப் போகுது…. அப்போ இது கணவன் மனைவி ரெண்டு பெரும் சேர்ந்து செய்த சதி அப்படித் தானே….
ஆமா அதுக்கு இப்போ என்னடா…. நிமல் முதலில் அவனின் கேள்விக்கு பதில் சொல்ல….. நேராவோ…… கை அசைவில்……
ஏதோ சொல்ல…. முதலில் அதை புரியாமல் விழித்தவன், பின் புரிந்ததும் அவளை துரத்த ஆரம்பித்தான்.
நிமல் தான் இப்போ இவ என்ன சொன்னானு இவன் இப்பிடி துரத்துறான்….. யோசனையோடு நிற்க, அடப்பாவி, இவ பாஷ எல்லாம் மத்த நேரம் புரியும், இப்போ மட்டும் புரியாது, பாவி, பாவி…. என்று கதற….. அதன் பின் அர்த்தம் புறிந்தவானாய் விழுந்து விழுந்து சிரிக்கத் தொடங்கினான் நிமல்.
அப்படி என்ன தான் நேரா சொன்னா……
யோசிங்க… யோசிங்க….
தொடரும்……… prabhaas 💝💝💝