Loading


பழைய நினைவுகளில் நிமல் மூழ்கி இருக்க சரண் வந்து சேர்ந்தான். அவனை வேறொரு அறைக்கு அழைத்துச் சென்ற நிமல் அவனிடம் கேட்ட முதல் கேள்வியே 

 

நேத்ரா ஏன் என்ன விட்டு விலகி போனானு உனக்கு முன்னாடியே தெரியுமா????

 

சொல்லு சரண் தெரியுமா என்று சத்தமாக கேட்க… அவன் ஏதும் சொல்லாமல் இருக்க, நிமலின் கோபம் ஏக்கத்திற்கும் அதிகமாகியது. கைகளை இறுக்கி மூடி கோபத்தை குறைத்துக் கொள்ள வெகு சிரமப்பட….அப்போதும் சரண் அமைதியாகவே இருந்தான்.

 

தன் நண்பனின் கோபம் எப்படி இருக்கும்…… எந்தளவுக்கு இருக்கும் என்று அறிந்ததால் தான் சரண் இவ்வளவு நாட்கள் நிமலிடம் அவன் அறிந்த சில உண்மைகளை கூட சொல்லாமல் இருந்தான். ஆனால் இன்று ஏதோ ஒன்று அவன் அறிந்து கொண்டதனால் தான் தன்னிடம் இப்படி கேட்கிறான் என்று புரிந்ததால் மட்டுமே அமைதியாகவே இருக்கிறான். இருப்பினும் ஒரு முடிவோடு தான் இங்கு வந்திருந்தான். இதற்கு மேலும் நிமலிடம் விஷயத்தை மறைத்தால் அது சரிபட்டு வராது என்று அனைத்து உண்மைகளையும் சொல்லிவிடத் தான் வந்திருக்கிறான். ஏனென்றால் அவனுக்கு இன்று கிடைத்த தகவல் அப்படி.

 

சரணின் அமைதி நிமலை மேலும் கோபமாக மாற்றிக் கொண்டிருந்தது. நிமலிற்க்கும் தெரியும் தான் கோபத்தில் என்ன செய்வேன் என்று தெரிந்ததனால் தான் இவன் இப்படி அமைதியாய் இருக்கிறான் என்று. ஆனாலும் இந்த பாழாய் போன கோபம் கேட்க வேண்டுமே…. கோபத்தில் சரணின் சட்டையை இறுக்கி அவனை அறைந்தவன் சொல்லு தெரியுமா?? என்று கேட்க…..

 

அதற்கு மேலும் முடியாமல் அந்த ஆறடி ஆண் மகனும் அழுகையுடன் சொன்னான்…..

 

உனக்காக….உனக்காக… தான் அவ உன்ன விட்டு போனா.

 

உன்னோட காதல் அது தான் அவளை உன்ன விட்டு பிரிச்சு வச்சிடுச்சு…. 

 

என்ன…….என்.. என்னோட காதல் தான் அவளை என்கிட்ட இருந்து பிரித்ததா….. என்னடா சொல்ற….சரண் என்னோட நேத்ரா எனக்காக என்ன விட்டு போனாளா…

 

ஆமா… என்று அன்று ரகுவும் சித்துவும் சேர்ந்து செய்த செயல் அனைத்தையும் நண்பனிடத்தில் கூறிவிட்டான் சரண்.

 

இதெல்லாம் உனக்கு எப்படிடா…தெரியும் என்று கோபத்துடனும் அதே சமயம் நேத்ரா அடைந்த கஷ்டத்தில் கண்கலங்க கேட்ட நிமலிடம்… 

 

சரண் கூற ஆரம்பித்தான். 

 

அன்று….. மீட்டிங் முடிந்து நிமலும் சரணும் கிளம்பி சென்ற இடம் ஆசிரமம் தான். இருவரும் உள்ளே சென்று நேத்ராவை தேட அவள் அங்கில்லாமல் போனதும் அவளுக்கு தொடர்பு கொள்ள……. மொபைல் போனோ எப்போதோ உயிரை விட்டிருந்தது. 

 

ஏதாவது ஷாப்பிங் சென்றிருப்பாள், சார்ஜ் இல்லாமல் மொபைல் அணைந்திருக்கும் என்று இருவரும் நினைத்து எப்படியும் இரவு வந்ததும் தங்களை தொடர்பு கொள்வாள் என்று தங்களின் வீடுகளுக்கு சென்றனர். ஒரு போதும் அவளுக்கு ஏதும் தவறாக நடந்திருக்காது என்று தவறாக நினைத்தது தான் இருவரின் தவறும்.

 

இரவு நெடு நேரம் எதிர்ப்பார்த்தும் அவளிடம் பதில் இல்லாமல் போக நிமல் சரனை அழைத்துக் கொண்டு ஆசிரமம் சென்றான். ஆனால் அப்போதும் நேத்ரா அங்கு வராமலிருக்க நிமல் தான் மிகவும் பதறிப் போனான். அவனின் பதற்றத்தை கண்டு உள்ளுக்கும் பயம் வந்தாலும் எப்படியும் நேத்ராவை கண்டுபிடித்து விடலாம் என்று நிமலை சமாதானம் செய்து எல்லா இடங்களிலும் இரவென்றும் பாராமல் இருவரும் தேடி அலைந்தனர். 

 

பாவம் எவ்வளவு அலைந்தும் மூன்று நாட்களாய் அவர்களுக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை. சரனை விட நிமல் தான் முழுதும் சோர்ந்து முற்றிலும் உடைந்து விட்டான். ஏன் என்ன விட்டு போனாள்….. ஏன் என்ன விட்டு போனாள் என்பது மட்டும் தான் அவனின் கேள்வியே.. கிட்டத்தட்ட மூன்று நாட்களில் மொத்தமும் மாறி பைத்தியம் பிடித்தவன் போல ஏன் என்ன விட்டு போனாள் என்பதை மட்டும் தான் சொல்லிக் கொண்டிருந்தான். 

 

உயிர் நண்பன் இப்படி தன்னிலை மறந்து புலம்பிக் கொண்டிருப்பதை பார்க்க பார்க்க சரணின் மனம் உடைந்து தான் போனது. அவனின் பெற்றோரின் நிலையோ அதைவிட….எப்போதும் ஆனந்தமாய் இருக்கும் மகன் இன்று இருக்கும் நிலை அவர்களையும் கொள்ளாமல் கொன்றது. நேரா நேரம் உணவு உண்ணாமல் அவளின் விழிகளை மட்டுமே நினைத்துக் கொண்டிருந்தவன் திடீரென மயங்கி விழ….. 

 

அவசர அவசரமாக நிமலை மருத்துவமனையில் சேர்ததனர். அதிகப்படியான மன அழுத்தம் அவனை மயக்கத்தில் தள்ளியதன் விளைவு அவனை ஒருமாத காலம் முடக்கி போட்டது. மருத்துவமனையில் இருந்தவன் உடல் மட்டும் தான் இங்கிருந்தது. மனம் முழுதும் தன் மனம் கவர்ந்த மை விழியாளிடம் தான் இருந்தது. 

 

நிமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த போது தான் சரண் நேத்ராவின் வீட்டிற்குச் சென்றான். அவளின் நினைவு அவனையும் விட்டு வைக்கவில்லை. உயிர் தோழியாய் உடன் பிறவா சகோதரியாய் இருந்தவள் இன்று இருக்கும் இடம் தெரியாமல் போய் விட்டதே என்று புலம்பியவன் ஏதோ தோன்ற அவளின் வீட்டிற்க்கு சென்றான்.

 

வாரம் ஒருமுறை நேத்ரா சரனை அழைத்துக் கொண்டு அவள் இல்லம் வந்து விடுவாள். அவனுடன் தாய் தந்தையை பற்றி கூறி அழுவாள். ஒற்றையாய் பிறந்ததால் தான் இப்படி யாருமில்லாமல் இருக்கிறேன் என்பதை…….. செல்லும் ஒவ்வொரு முறையும் கூறுவாள். அவளின் தலையில் கொட்டி உனக்கு நண்பனா… அண்ணனா நான் இருக்கேன் என்று சொல்ல அழுகையுடன் அவனின் மடியில் படுத்து கொள்வாள்.

 

அவளின் நினைவோடு அங்கு வந்த சரணுக்கு அவையெல்லாம் நினைவு வர அன்று முழுதும் அங்கு தான் இருந்தான்.

 

நேரம் செல்ல கிளம்பலாம் என்று எழும்போது தான் கண்டான் அங்கு இருந்த இரத்த கரைகளை…….

 

எப்போதும் சுத்தமாக இருக்கும் இடம் இரத்தக் கரையுடன் இருப்பது தவறாக தோன்றினாலும் அவன் வேறு எதையும் யோசிக்க வில்லை… கிளம்பிச் சென்று விட்டான். அதை ஆராயவும் அப்போது தோன்றவில்லை. மேலும் ஒருவாரம் சென்ற நிலையில் சரண் மீண்டும் நேத்ரா இல்லம் சென்றான். எப்போதும் போல சிசிடிவி பதிவுகளை ஆராய அப்போது தான் அங்கு நடந்த நிகழ்வுகள் அனைத்தும் அவனுக்கு தெரிந்தது. சித்துவை கண்டதும் ஆடித்தான் போனான். மற்ற அனைவரும் ஆண்களாய் இருக்க அவர்கள் அனைவரும் அடியாட்கள் என நினைத்துக் கொண்டவன் நேரே சென்றது சித்துவிடம் தான். 

 

சித்துவின் மேல் கொலைவெறியில் சென்ற சரண் அவளை அடித்த அடியில் அடுத்த நொடி மயங்கியிருந்தாள். அவனுக்கு நேத்ராவை கையில் இரத்தத்துடன் அதுவும் சித்துவுடன் கண்டதற்கு தான் இத்தனை கோபம். மேலும் இவர்கள் செய்த செயல்கள் அனைத்தும் தெரிந்தால் சித்துவின் நிலை தான் என்ன….

 

அவளை மயக்கம் தெளிய வைத்தவன் அவளிடம் உண்மையை சொல்லுமாறு சொல்ல… அவள் இம்மியும் வாயைத் திறக்க வில்லை. மீண்டும் ஓர் அறை விட அவளுக்கு வந்த அழைப்பு, நிமலின் மேல் உண்டான காதல் என அனைத்தையும் கூறி முடிக்க மீண்டும் ஒரு அறை விட்டவன்…. இவ்வளவு அகங்காரம் உனக்கு எங்கிருந்து வந்தது….. இனி அவன் வாழ்க்கையில வரணும்னு நெனச்ச… தங்கச்சினு கூட பார்க்க மாட்டேன்…. உயிரோட பொதச்சிடுவேன். தனது சித்தப்பாவிடம் அவளை அடித்ததற்கு மன்னிப்பு கேட்டவன், இனி ஏதும் நடக்காத மாதிரி பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு கிளம்பினான். 

 

நேத்ரா மருத்துவமனையிலிருந்து தப்பித்து சென்ற வரை சித்து சரணிடம் கூறிவிட்டாள். ஆனால் அதன் பிறகு எங்கு சென்றிருப்பாள் என்பது தெரியாமல் தான் சரண் திண்டாடி போனான். ஒரு வாரம் வரை நிமல் ஆசிரமத்தின் வாசலில் தான் இருந்தான். அப்போது நேத்ரா அங்கு வரவே இல்லை. பத்மாவதி அம்மாவிடம் கேட்டாலும் ஒன்றும் சொல்லவில்லை. கிட்டத்தட்ட நேத்ராவை பற்றி ஒன்றும் அறியமுடியா நிலையில் தான் இருக்கிறோம் என்று புலம்ப மட்டுமே முடிந்தது சரணால்.

 

இங்கு நிமலின் உடல் நிலை தேறினாலும் மனம் உடைந்து கொண்டு தான் இருந்தது. எவ்வளவு தேடியும் கிடைக்கவில்லையே என்று தான் மீண்டும் மீண்டும் வருந்திக் கொண்டிருந்தான் நிமல். 

 

அவனின் காதல் எவ்வளவு பெரியது என்றால்…..முகம் காணா மங்கையவளை விழிகள் ஒன்றை மட்டும் அடையாளமாய் வைத்து தேடுவது தான். அவளின் விழிகளில் நித்தம் மன்றாடுபவன் உறக்கம் தொலைத்து முழு நேர நேத்ராவின் நிமலாகத் தான் வாழ்ந்தான்.

 

நீங்க முடியுமா 

நினைவு தூங்குமா

காலம் மாறுமா

காயம் மாறுமா

 

வானம் பிரிந்த மேகமா

வாழ்வில் உனக்கு சோகமா

காதல் போயின் காதல் சாகுமா

காற்றாகவே நேற்றாகவே நீ போனதேன்

 

உயிர் போகும் நாள் வரை

உன்னைத் தேடுவேன்

உன்னை மீண்டும் பார்த்தப்பின் தான் 

கண் மூடுவேன்

 

தேவன் ஈன்ற ஜீவனாக 

உனை பார்க்கிறேன்

மீண்டும் உன்னை வேண்டுமென்று

தானம் கேட்கிறேன்

 

நீ கண்கள் தேடும் வழியோ

என் கருணை கொண்ட மழையோ

நீ மழலை பேசும் மொழியோ

என் மனதை நெய்த இழையோ

 

வீசும் தென்றல் என்னை விட்டு 

விலகி போகுமோ

போன தென்றல் என்று எந்தன்

சுவாசம் ஆகுமோ

இரு விழியிலே ஒரு கனவென

உன்னைத் தொடர்வேன்……. 

 

காதல் கொண்ட மனதின் வலியை ஒரு போதும் யாராலும் புரிந்து கொள்ள முடியாது என்பதை அறிந்து, நிமலை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றத் தொடங்கினான் சரண். 

 

முழுமையாக மாறாவிடினும் நேத்ரா இன்றி ஓரளவுக்கு மாறியிருந்தார்கள் நிமலும் சரணும். ஆனால் ஒரு போதும் அவளை தேடுவை நிறுத்தவே இல்லை. இருவருட வாழ்வு நிமலனுக்கு யுகமாய் தான் நகர்ந்து கொண்டிருந்தது. சரணின் கட்டளையில் சித்துவை அவனின் சித்தப்பா வெளிநாடு அனுப்பி வைத்தார். ஆனால் ரகுவை பற்றி அன்று அவனுக்கு தெரியாமலே போய் விட்டது. இப்போது மீண்டும் சித்துவின் நடவடிக்கைகளை கண்காணித்தவனுக்கு அந்த உதவி செய்யும் நபர் யார் என்றும் அவன் மீண்டும் நேத்ராவை நெருங்குவது தெரிந்ததால் தான் இன்றே அனைத்தையும் நிமலிடம் கூறிவிட்டான்.

 

சித்துவைப் பற்றி சரண் கூற அன்றைய தன் நிலையையும் நினைத்தவனுக்கு அவளின்றி தன் நிலையை எண்ணி விரக்தி தான் வந்தது. ஆனால் சித்துவையும் ரகுவையும் எண்ணி கொலை வெறியே வந்தது. 

 

நேத்ரா அன்று மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்த போது தான் சித்து இந்தியா வந்தாள். ஆனால் அன்று அவளுக்கு நேத்ரா தரிசனம் கிடைத்ததும் மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏற ஆரம்பித்தது. திருந்தாத மனம் நிமலுக்காக திரும்பவும் நாடியது ரகுவை தான்.

 

காதலுடன் நிமலும், தோழமையுடனும் பாசத்துடனும் சரணும் நேத்ராவைத் தேடினால்….மனம் முழுதும் பணத்தாசையும் அவளின் அழகின் மேல் உண்டான ஆசையிலும் ரகு நேத்ராவை தேடிக் கொண்டிருந்தான்.

 

ஆனால் உண்மைக் காதல் நேத்ராவை நிமலனிடமே சேர்த்து விட்டது. 

 

 

தன்னவளின் முகம் கண்டவன்… அவளின் குரல் கேட்பானா……

 

 

 

இனி பழைய நினைவுகள் எதுவும் இல்லை. அடுத்த பதிவிலிருந்து நிமலின் காதல் ஆக்சன்

 

 

தொடரும்…….. Prabhaas 💝💝💝

 

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்