Loading

அன்றைய தினம் எல்லாம் நன்றாக நடக்கும் என்று கனவுடன் கல்லூரி கிளம்பினாள் நேத்ரா. இன்றும் தன்னவளுடன் காதல் மொழி பேசவேண்டும் என்று காத்திருந்தான் நிமல். இவ்விருவரின் வாழ்விலும் பிரிவைத் தர காத்திருந்தார்கள் சித்துவும் ரகுவும். 

 

ரகு தான்……. நேத்ரா நிமலின் காரிலிருந்து இறங்கிய போது பார்த்தது. இருவரின் மகிழ்ச்சியை கண்டவன் கோபம் கொண்டு அங்கிருந்து யோசனையோடே சென்றான். ரகு ஏற்கனவே நிமலை பார்த்திருக்கிறான், ஆனால் சட்டென்று நியாபகம் வராமலிருக்க, யோசித்தவனுக்கு ஒரு முறை சித்துவுடன் கண்டது நினைவு வந்தது. சித்துவை அவன் பல முறை பார்த்திருக்கிறான். கொஞ்சம் பழக்கமும் கூட… அவனின் நண்பர்கள் மூலம். சித்துவின் குணம் அறிந்ததால் அவளின் மூலம் இவர்களை பிரிக்கலாம் என்று சரியாக கணக்கிட்டு அதன் படி காய் நகர்த்த அதுவும் வேலை செய்தது. ரகு ஒரு கெஸ்சில் தான் அனைத்தையும் செய்தான், ஆனால் அவனின் நல்ல நேரம்…. எல்லாம் தானாய் கூடும் என்று அவனே நினைக்கவில்லை.

 

அவளை தனியாய் அழைத்து பேசிட, அவளும் அவர்களின் காதலை பிரிக்க வேண்டும் என்றே நினைத்திட ரகுவிற்கு எல்லாம் ஈஸியாக முடிந்தது. சித்துவிடம் சில திட்டங்களை கூறியவன் அதை நாளையே செயல்படுத்துமாறு சொல்லி அனுப்பினான். அவள் சென்றதும் தன் காரில் ஏறியவன்…….. எப்பிடி நேத்ரா உன்னோட அழகையும் பணத்தையும் இன்னொருத்தனுக்கு நான் விட்டு கொடுப்பேன். நான் உன்ன மிரட்டியும் உனக்கு பயம் இல்லாமல் போச்சுல…. காத்திரு நேத்ரா நாளைய விடியல் உனக்காக தான். என் திட்டம் சரினா….. நாளை மறுநாள் நீயும் உன் பணமும் என்னுடன் என்று குரூரமாக பேசி சிரித்துக் கொண்டான்.

 

மதியம் கல்லூரி முடிந்ததும் நிமலை பார்க்க ஆவலாய் கிளம்பினாள் நேத்ரா… அலுவலகம் வந்து சேர்ந்தவள் நிமலை பார்வையிலேயே வருடிக் கொண்டிருக்க நிமலும் தன் பணியை செவ்வனே செய்து கொண்டிருந்தான். எப்போதும் கடமை தவறா நிமல் இன்று அனைத்தையும் மறந்து அவள் விழியில் முழுதும் தொலைந்து விட சரண் அழைப்பில் தான் கனவுலகில் இருந்து மீண்டான். 

 

டேய்….நிமல்….நிமல் என்னடா கனவு கண்டுட்டு இருக்க…..அங்க கிளைன்ட் மீட்டிங்க்கு நேரம் ஆச்சு சீக்கிரம் வாடா…என்று சொன்னதும் தான் அவனுக்கே நினைவு வந்தது. பார்வையிலேயே நேத்ராவிடம் கூறிவிட்டு கிளம்பிச் சென்றான். நிமல் சரணுடன் வெளியேற, ரகு அவர்களை பின் தொடருமாறு ஒருவனுக்கு கட்டளையிட்டவன் நேத்ராவிற்காக காத்திருக்க தொடங்கினான். இன்று நிமலுடன் நிறைய நேரம் செலவழிக்க திட்டமிட அவன் சென்றதை நினைத்து வருத்தத்துடன் அலுவலகம் விட்டு வர……ரகு அவளை பின்தொடர்ந்தான். 

 

எப்போதும் சரண் தான் அவளை ஆசிரமத்தில் விடுவான். நேற்று நிமல் விட்டுச் சென்றான். இன்று யாரும் இல்லாமல் இருக்க ஆட்டோ ஒன்றை நிறுத்தி அவள் ஏறிட பின்னே வந்த ரகுவும் ஏறிக் கொண்டான். ரகுவை கண்டதும் அதிர்ச்சியடைந்த நேத்ரா கத்த ஆரம்பித்தாள். ஆனால் அவன் கண்ணசைவில் ஆட்டோ அவன் சொன்ன இடம் சென்றது. அவன் அருகில் இருக்க நேத்ரா வெம்பிக் கொண்டிருக்க ரகுவின் ஃபோன் அலறியது. அதில் சொன்ன செய்தியில் சிரித்தவன் இன்னும் பத்து நிமிஷம் கழிச்சு நானே கூப்பிடுறேன்…ரெடியா இரு என்றதுடன் கட் செய்தான். எவ்வளவு முயற்சி செய்தும் நேத்ராவால் அவனை விட்டு தப்பிக்க முடியவில்லை. அவளின் முயற்சியில் ரகு அவளின் கன்னத்தில் ஒரு அறை விட அதற்கு மேலும் முடியாமல் அழுகையுடன் அவனுடன் சென்றாள். அவளின் முகத்திரையை எடுத்தவன்…அவளின் கன்னத்தை வருடி….. நான் தான் அன்னிக்கே சொன்னேன்ல…. கல்யாணத்துக்கு ரெடியா இருனு….என் பேச்சு ஏதும் உனக்கு பயம் இல்லாம போய்டுச்சு தானே…இப்போ அந்த பயம் உன் கண்ணுல வர வைகட்டா என்று கேட்டு மொபைல் ஃபோனில் சித்துவிற்க்கு வீடியோ கால் செய்தான். 

 

அவள் எடுத்ததும் என்ன சித்து ஆரம்பிக்கலாமா என்று கேட்டிட..அவளும் சிரிப்புடன் ஆரம்பிக்கலாமே… என்றாள். முதலில் சித்துவை கண்டு அதிர்ந்த நேத்ரா…. பின் ஓரளவு யூகித்து அறிந்து கொண்டாள். அவள் முன் மொபைலை காட்ட அதில் சித்து விஷ மருந்தை கையில் எடுத்தவள், இது யார் வீடு தெரியுமா?????? என் வருங்கால கணவன் நிமல்… சாரி சாரி…அது எனக்கு…உனக்கு உன் அன்பு காதலன் வீடு….. 

 

அதோ அங்க பாரு என்று நிமலின் தாய் தந்தையை காட்டியவள் விஷத்தையும் காட்டி….இப்போ நீ நாங்க சொல்லுற மாதிரி கேட்கல……இந்த விஷத்தை காபில கலந்து அவங்க ரெண்டு பேருக்கும் கொடுத்துடுவேன். அப்புறம் உன் அன்பு காதலன் அப்பா அம்மா இல்லாத காதல் ஆகிடுவான். 

 

அது மட்டும் இல்ல…உன் காதலனும் உயிரோட இருக்கணும்னா இப்போ நாங்க சொல்லுறத கவனமா கேளு…இதுக்கும் மேல நீ ஏதாவது செய்யணும்னு நெனச்சா கூட அது உன் நிமலுக்கும் அவன் குடும்பத்துக்கும் தான் ஆபத்து…. எப்படி வசதி நாங்க சொல்லுறத கேட்கிறாய இல்லையா…என்று சித்து முடிக்க…

 

முதலில் எல்லாம் அதிர்ச்சியாக இருந்தாலும் எல்லாவற்றிக்கும் காரணம் ரகுவாக தான் இருக்கும் என்பதை புரிந்து கொண்ட நேத்ரா….இது வெறும் பயமுறுத்தல் தான் என்று நினைத்து….நான் கேக்க மாட்டேன். என்று சொல்லிட….

 

சித்து விஷத்தை கலந்து காபியை எடுத்து அவர்களுக்கு குடுக்க சென்றிட….அதற்குள் அடுத்த காலை அட்டென் செய்த ரகு அதையும் அவளுக்கு காட்டிட… அதில் தான் இவர்களின் மிரட்டலின் வீரியம் புரிந்தது. சரண் நிமல் சென்ற காரில் பாம் செட் செய்து வைத்து விட்டு இருவர் செல்லும் காட்சி தெரிய மொத்தமாய் அதிர்ந்து விட்டாள். 

 

அதற்கு மேலும் அவளால் முடியவில்லை. தன்னால் இத்தனை பேருக்கு கஷ்டமா என்று தன்னை நினைத்தே வருந்தினாள். தான் ஆசை பட்ட…. பாசம் வைத்த யாரும் இப்போது அவளுடன் இல்லாமல் இருக்க தற்போது கிடைத்த நிமலும் உயிரினும் மேலாக சரணின் நட்பும் இல்லாமல் போக காரணமாக இருக்கிறோமே என்றே அழுது கரைந்தாள்.

 

ஒரு முடிவுடன் ரகுவை பார்க்க அவன் சொன்ன விஷயத்தில் நேத்ரா மொத்தமாய் உணர்விழந்து மயங்கி சரிந்தாள்.

 

அது என்னவென்றால்,

 

நீ மொத்தமா நிமல விட்டு பிரியனும்….இனிமேலும் அவன நினைக்கவோ சந்திக்கவோ கூடாது. நாளைக்கே உனக்கும் எனக்கும் கல்யாணம்……முடியாதுனு முரண்டு புடிச்ச நிமல் அவன் குடும்பம் மட்டும் இல்ல,… இவ்வளவு நாள் குடும்பமா நினச்சு சந்தோசமா வாழ்ந்துட்டு இருந்தியே ஆசிரமம் அதையும் மொத்தமா அழுச்சுடுவேன்….என்று கூடவே ஆசிரமத்தின் முன் நிற்கும் தன் ஆட்களையும் காட்டினான் ரகு. வீடியோ மூலமாக. எல்லாவற்றையும் கேட்டுத் தான் நேத்ரா மயங்கி விழுந்தாள். 

 

நேத்ராவை நிதானப் படுத்தியவன் அவளை இழுத்துக் கொண்டு காரில் ஏறி அவளையும் பணத்தையும் அடையும் திமிரில் சிரித்துக் கொண்டே வண்டியை ஒரு இடத்திற்கு செலுத்தினான். எப்படியும் நேத்ரா சம்மதித்து தான் ஆகவேண்டும் என்ற சூழ்நிலை… அறிந்து சித்துவையும் அந்த இடத்திற்கு வரச் சொன்னான்.

 

எல்லாம் சரியாக நடக்கிறது என்ற மிதப்பில் இருந்த ரகு ஒன்றை மட்டும் தவறாக செய்து விட்டான். நிமல் காரில் வைத்த பாம் ஆசிரமம் என எல்லாவற்றையும் நிறுத்தி விட்டு நேத்ராவை ரகு அழைத்து வந்த இடம் நேத்ராவின் வீடு தான். அது தான் அவன் செய்த மிகப் பெரிய முட்டாள் தனம். ( கொஞ்சம் மக்கு வில்லன் தான்) இவர்கள் உள்ளே நுழைந்த சிறிது நேரத்தில் சித்துவும் வந்து விட வந்தவள் நேராக நேத்ராவை தான் சந்தித்தாள். அங்கிருந்த ரூம்மில் கண்ணீர் மல்க அமர்ந்திருந்த நேத்ராவை பார்த்த சித்து… என்ன மேடம் காதல் மொழி பொய்த்து போயுடுச்சினு அழுகிறயா…இல்ல நாளைக்கு உனக்கும் ரகுவுக்கும் நடக்க போற கல்யாணத்தை நெனச்சு அழுகிறயா… என்று ஏளனமாக கேட்க நேத்ராவால் அழ மட்டுமே முடிந்தது. 

 

அமைதியாய் குறும்பாய் சிறு குழந்தை போல வளர்ந்த நேத்ராவால் அப்போதைக்கு அழ மட்டும் தான் முடிந்தது. ஒரு வேளை சற்று வீரமாக வளர்ந்திருந்தால் அந்நிலையை அவளால் சமாளித்து இருக்க முடிந்திருக்கும். ஆனாலும் மனதில் முழுதும் நிமல் இருக்க ஒரு போதும் ரகுவுடன் சேரக்கூடாது என்று நினைத்தவள் தன் வீட்டிலிருப்பதை தனக்கு கிடைத்த வாய்ப்பாக நினைத்துக் கொண்டாள். நிமல் தனக்கு கிடைக்க போகும் சந்தோசத்தில் ஏதேதோ பிதற்றினாள் சித்து. எல்லாவற்றையும் பொறுமையாய் கேட்டுக் கொண்டிருந்த நேத்ரா அறையை ஆராய அங்கு கத்தி கிடப்பதை பார்த்தவள் சிறிதும் யோசிக்காமல் எடுத்து தன் கை நரம்புகளை அறுத்துக் கொள்ள….ஒரு நொடிக்குள் நடந்த நிகழ்வில் சித்து பயந்து ரகு என கத்த அதற்குள் நேத்ரா மயங்கி விழுந்தாள். 

 

அதன் பின் இரு நாட்கள் கழித்து கண்விழிக்க மருத்துவமனையில் இருப்பது புரிந்து எப்படியாவது தப்பிக்க வேண்டும் என்று முடிவெடுத்தாள் நேத்ரா. வீட்டிலிருந்தே தப்பிக்க முடிவெடுத்து இருக்க ரகு அதற்கு முட்டுகட்டையாய் வீட்டை சுற்றிலும் ஆட்களை வைத்து இருந்தான். ஆனால் எப்படியேனும் தன்னை தேடும் யாருக்காவது ரகுவையும் சித்துவையும் பற்றி குறிப்பு குடுக்க வேண்டும் என்று யோசிக்க…அப்போது தான் வீட்டின் மையத்தில் இருந்த கேமரா நினைவு வந்தது. அது வீட்டில் யாருமில்லை என்று திருடர்களுக்கு பயந்து நேத்ரா வைத்தது தான். அவள் செய்த நல்ல விஷயம் அதை சரணின் உதவியுடன் வைத்தது. அதை சரியாய் உபயோகித்துக் கொண்டவள் கையை அறுத்துக் கொண்டாள். இவை அனைத்தும் சித்து மகிழ்ச்சியில் பிதற்றும் போது சிந்தித்தவை என்றால் சித்து எவ்வளவு நேரம் தன்னை மறந்து பிதற்றியிருப்பாள். இதிலிருந்தே சித்து எவ்வளவு பெரிய முட்டாள் என்று நான் சொல்லத் தேவையில்லை.

 

வீட்டிலிருந்து தான் தப்பிக்க முடியவில்லை, இங்கிருந்து எப்படியேனும் தப்பித்து நிமலிடம் சென்று அனைத்தையும் கூறிவிட வேண்டும் என்று காதல் கொண்ட மனம் நினைக்க… ஆனால் அது அவ்வளவு எளிதாக இருக்க போவதில்லை என்பதை அவள் அறியும் போது அதே காதல் கொண்ட மனம் அடையும் நிலை தான் மிகவும் கொடுமையானது. நேத்ராவை கவனிக்கும் நர்ஸிடம் தன் நிலையை கூறியவள் அவரின் உதவியோடு அங்கிருந்து வெளியேறினாள். ரகு அவளை காண வரும் நேரம் அவள் இன்னும் கண் விழிக்க வில்லை என்று அனுப்பி வைத்தார் அந்த பெண். இரவு யாரும் இல்லாத நேரம் பார்த்து தான் நேத்ரா தப்பித்து சென்றாள். 

 

இருக்கும் இடத்தை அறிந்து கொண்டவள் ஆசிரமத்தை நோக்கி ஓட்டமும் நடையுமாக செல்ல பாவம் அவள் உடல் தான் அதற்கு ஒத்துழைக்கவில்லை. முயன்று ஆசிரமத்தை நோக்கி நடக்க அவள் கண்ட காட்சி மீண்டும் அவளின் பயத்தை தூண்டியது. ரகுவின் ஆட்கள் ஆசிரமத்தின் அருகில் நின்று கொண்டிருக்க,….எப்படியும் தன்னவள் இங்கு தானே வருவாள் என்று அந்நேரத்திலும் நிமலும் அங்கு காத்துக் கொண்டிருந்தான். 

 

 

அந்நிலையை எண்ண எண்ண பாவம் அவளுக்கு அழுகை தான் வந்தது. தன் நிலையை எண்ணி அழுக…. காதல் செய்வது அவ்வளவு பெரிய குற்றமா…. ஏன் நான் என்னவனுடன் சேரக்கூடாது……. என் வாழ்வில் மட்டும் ஏன் இத்தனை இழப்புகள்……. 

 

எனக்கென்று அம்மா அப்பா இருந்திருந்தால் எனக்கு இப்படி ஒரு நிலை வந்திருக்குமா?? வந்திருக்கத் தான் விட்டிருப்பார்களா????

 

அம்மாவின் கைகளில் தினமும் உண்டு, அப்பாவின் மடியில் படுத்து கதை கேட்டு நன்றாக சென்ற என் வாழ்வு அவர்கள் இல்லாமல் இப்படி மாறிப் போனதே….. அன்பு காட்ட கடவுள் மீண்டும் எனக்காய் தந்த நிமலை இப்போது என்னிடம் சேர விடாமல் தடுப்பது நியாயமா என்று மொத்தமாய் அழுகையில் கரைந்து போனாள். எப்படித் தான் இந்நிலையை சரி செய்வது என்று அவளால் யோசிக்க கூட முடியவில்லை. மணிக்கணக்கில் அங்கேயே நின்று அழுது கொண்டிருக்க…… அப்போது தான் மீண்டும் அங்கு ரகு வந்தான். இரவு என்பதால் நேத்ரா நின்றிருந்தது யாருக்கும் தெரியவில்லை. ரகு தன் ஆட்களிடம் பேசுவது நேத்ராவிற்க்கு மெல்லமாகத் தான் கேட்டது. அவர்களின் பேச்சை கவனிக்க….. எப்படியும் நேத்ரா இங்க தான் வருவா.. நிமல் நேத்ராவுக்காக தான் காத்திட்டு இருக்கான். அவன் மட்டும் அவளை பார்த்தான்…. அடுத்த செகண்ட் நமக்கு சங்கு தான். அவ இவனை தேடி வந்தா கொஞ்சமும் யோசிக்காம ரெண்டு பேரையும் போட்டுருங்க என்று ரகு சொல்ல…. நேத்ரா பயத்தில் உறைந்து கொண்டிருந்தாள். தன்னை மறந்து நின்று கொண்டிருந்தவள் சுதாரிக்கவே வெகு நேரம் ஆனது.

 

இனி நிமலை சந்திப்பது அவ்வளவு எளிதல்ல என்பதை உணர்ந்தவள்….. கண்கள் நிறைய நிமலை நிரப்பிக் கொண்டு அவனின் காதலுடன் அவன் காணா இடத்திற்கு சென்றாள். இலக்கிலாமல் சென்று கொண்டிருந்தவள்…. ஒரு முடிவுடன் விடியலில் பத்மாவதி அம்மாவுக்கு அழைத்து அனைத்தையும் அழுகையுடன் சொல்லி முடித்தாள். பத்மா அம்மாவின் நம்பிக்கைக்கு உரிய ஒருவரின் மூலம் அவளுக்கு உதவி செய்து கோயம்புத்தூரில் உள்ள ஓர் ஆசிரமத்திற்கு அனுப்பி வைத்தார் அவர். தன்னால் நிமலுக்கு எந்த பிரச்சனையும் வரக் கூடாது என்று தான் ஊரை விட்டுச் சென்றாள் நேத்ரா. ஆனால் அவள் இல்லாமல் போனது தான் அவனுக்கு பிரச்சனையே என்று தெரியாமல் போய்விட்டதே அவளுக்கு.

 

அவள் தூரம் சென்றாலும் அவளின் காதல் ஒரு போதும் குறையவே இல்லை. பத்மாவதி அம்மாவின் உதவியோடு மீண்டும் படிப்பத் தொடர்ந்தாள் நேத்ரா. அவள் இருந்த ஆசிரமத்தின் தலைவர் மகளுக்கு திருமணம் என்று தான் இரு வருடம் கழித்து மீண்டும் இங்கு வந்தாள். நேத்ராவிற்க்கு இங்கு வர உடன்பாடே இல்லை. வற்புறுத்தி தான் அழைத்து வந்திருந்தனர். அவள் வந்த அன்று மாலை தான் ஆக்சிடென்ட் நடந்தது.

 

இரு வருடம் அவனை பிரிந்திருந்தாலும் அவனின் காதலோடு தான் வாழ்ந்தாள். ஆனால் நிமலின் நிலை தான் கொடுமையிலும் கொடுமை. 

 

அவள் முகம் கூட பார்த்ததில்லை… அவள் விழிகள் மட்டுமே அவனின் அடையாளம். அவனின் தவிப்பைக் கூட சொல்ல முடியாத நிலை. இரண்டு ஆண்டுகளாய் அவளை தேடாத இடமில்லை……. இன்றாவது அவளின் விழிகளை மீண்டும் கண்டு விட மாட்டோமா என்ற ஆசை, அவளை என்னிடம் சேர்த்து விடு என்ற வேண்டுதல்….. இது தான் அவனின் இரண்டு வருட வாழ்க்கையே…. காதல் ஒருவனை எப்படியெல்லாம் பித்தாக்கி விடுகிறது….. 

 

தூங்கிக் கொண்டிருந்த நேத்ராவின் முகத்தை பார்த்து நிமல் பழையதை நினைத்துக் கொண்டிருக்க சரண் வந்து சேர்ந்தான்.

 

அறையை விட்டு வெளியே வந்த நிமல் சரணை அழைத்துக் கொண்டு அருகிலிருந்த அறைக்குச் சென்று விட்டான். சரண் அமர்ந்ததும் முதலில் நிமல் கேட்ட கேள்வியே….

 

 

நேத்ரா ஏன் என்ன விட்டு போனா அப்பிடின்னு உனக்கு முன்னாடியே தெரியுமா?????……..

 

 

 

 

 

சரண் நிலை……. இரண்டு வருட நிகழ்வு இனி வரும் நாட்களில்………..

 

 

 

 

தொடரும்………..prabhaas 💝💝💝

 

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்