
யாஷ் அவர்களை பார்வையால் ஒரு முறை எரித்து விட்டு, மீண்டும் பேச்சைத் தொடர ஐவர் குழுவினருக்கு கிலி பிடித்தது.
“போச்சு அண்ணாட்ட செத்தோம்!” கண்மணி பரபரத்தாள்.
மீட்டிங் நிறைவடைந்து, ஆதிசக்தி எலைட் நிறுவனத்தின் சேர்மனாக பதவி ஏற்றார்.
அவர் பதவி ஏற்கும்போது, இளையவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்ய, ரித்திகாவும் ஆஹில்யனும் தான் ‘தரை டிக்கட் வாங்கி தியேட்டர்கு வந்த மாதிரி அலப்பறை பண்ணுதுங்களே…’ என்று தலையில் அடித்துக் கொண்டனர்.
“அனேகமா இவங்க பண்றதுக்கு எல்லாம் சேர்த்து பாஸ் என்னை தான் மொத்த போறாரு ரித்தி” ஆஹில்யன் உயிர் பயத்தில் முனக, “ஏன்டா?” எனப் புரியாது பார்த்தாள் ரித்திகா.
“மீட்டிங்ல எப்படி நடந்துக்கணும்னு என்னை கைட் பண்ண சொல்லிருந்தாரு. ஒர்க் பிசில மறந்துட்டேன். அப்பறமும், சரி மீட்டிங்கில அமைதியா தான இருக்கப்போறாங்கனு விட்டுட்டேன்”
ரித்திகா சிரிப்பை அடக்கிக் கொண்டு, “ரெஸ்ட் இன் பீஸ்டா ஆஹி” என்றதில், அவனுக்கு வயிற்றில் புளியைக் கரைத்தது.
யாஷ் பிரஜிதன் மற்றவர்களை விட்டு விட்டு ஆஹில்யனைத் தான் கடுமையாய் முறைத்தான்.
சரியாக ஆதிசக்தி சேர்மன் போஸ்ட் எடுக்கும்போது இளவேந்தனும் வந்து விட்டார்.
அத்தனை நேரமும் பொலிவையிழந்திருந்த ஆதிசக்தியின் முகம் அவரைக் கண்டதும் தான் மலர்ந்தது.
அவர் வரும் வரைக்கும் பதவி ஏற்பை தாமதமாக்கி மீட்டிங்கை சரளமாக நடத்திக் கொண்டிருந்த யாஷ் பிரஜிதனின் இதழ்கள் இளவேந்தனை கண்டதும் சின்னதாய் முறுவலித்துக் கொண்டது.
இளவேந்தனோ வேண்டா வெறுப்பாக வந்தது போல முகத்தை வைத்துக்கொண்டாலும், அரங்கத்தில் கம்பீரமாய் நின்றிருந்த தன்னவளை மனம் நிறைந்து பார்த்திருந்தார்.
அவர் இழந்தவைகள் ஒவ்வொன்றாய் அவருக்கு கிடைக்கும் தருணங்கள் இது!
இழந்தது கிடைக்கும் நேரம், கிடைத்த காதல் இழந்து விடுமோ என்ற சிறு அச்சமும் அவரை ஆட்டிப்படைக்க தவறவில்லை. எந்த வயதாகினும் காதல் கொண்ட மனதின் படபடப்புகள் தீர்ந்து போவதில்லையே!
பின் யாஷ், நிதர்ஷனாவை எழுப்பி அவளைத் தனது பார்ட்னராக அறிவித்திட, மற்றவர்களையும் காட்டி என்னன்னவோ சொன்னான்.
நிதர்ஷனா தான் காதைக் குடைந்தபடி, “பிரேக்ல முட்டை பப்ஸ் தருவீங்களா மாம்ஸ்” என ஆஹில்யனின் காதைக் கடிக்க,
“நீ என்ன காலேஜ் கல்ச்சுரல்கா வந்துருக்க. பிரேக்கு ஸ்னேக்ஸ் தர்றதுக்கு” என நொந்து கொண்டான்.
ஒருவழியாய் மீட்டிங் முடிந்து, யாஷ் பிரஜிதனிடம் எதிர்கேள்வி கேட்ட அத்தனை பேரையும் வாயடைக்கச் செய்து அவன் சொல்வதற்கு தலையாட்ட வைத்த மிடுக்கும் கம்பீரமும் நிதர்ஷனாவின் கண்களுக்கு விருந்தாய்!
பின் அனைவரும் கலையும் நேரம், “நீங்க ஏழு பேரும் இடத்தை விட்டு எந்திரிக்க கூடாது!” என்று தமிழில் கூறியவன், முக்கியமான கோப்பைகளுக்கு கையெழுத்திட்டுக் கொண்டிருந்தான்.
ஆஹில்யன் “பாஸ் நான் ஆதி மேம்கு ரூம் காட்டட்டா?” என பவ்யமாய் கேட்க, “என் மம்மா உனக்கு முன்னாடி இங்க அத்தனை ரூமும் பார்த்துக்காங்கடா. கோ அண்ட் சிட்!” என்று உறுமியதில் பதறி அடித்து மீண்டும் சென்று அமர்ந்தான்.
அவனது முகமே அனைவர்க்கும் அச்சத்தைத் தர, நிதர்ஷனா மட்டும் தான், ‘உன் கோபமெல்லாம் என்கிட்ட வேலைக்கு ஆகாது ராசா’ என்ற ரீதியில் ஆஹில்யனின் தோளை சுரண்டினாள்.
“என்னமா?” ஆஹில்யன் பரிதாபமாய் வினவ,
“இம்மாம்பெரிய கண்ணாடி கட்டடமா இருக்கே, யாராச்சு தவறிப்போய் கனமான பொருளை தூக்கிப் போட்டு கிராக் விழுந்துட்டா, மொத்த பில்டிங்கும் இடிஞ்சுடாது?” என வெகு தீவிரமாய் சந்தேகம் கேட்டாள்.
நிவேதனும், “இப்ப தான் நீ என் தங்கச்சின்னு நிரூபிக்கிற நிதா. எனக்கும் இதே சந்தேகம் தான். என்ன தான் கண்ணாடி உறுதியா இருந்தாலும் செங்கல் வச்சு சுவரு போடுற மாறி வராது…” என்றிட,
“கரெக்டு நிவே. இந்த ஹால்ல பாரேன். எத்தனை ஏசினு. எப்பவாவது மீட்டிங் போட யூஸ் பண்ற ஹால்ல இவ்ளோ ஏசி தேவையா. உன் அப்பன்காரன் காச ஏசியா ஆக்கி வச்சிருக்கான் பாரு!” என்று பீல் செய்ததில் அவளை முறைத்த நிவேதன், “உன் அப்பன்காரன் தான் கட்டடத்தை ஒழுங்கா கட்டாம கண்ணாடி கூண்டு போட்டு வச்சிருக்கான்” என்று எகிறினான்.
ரித்திகாவோ தலைவலிக்க, “டேய் என்னடா லூசு மாறி பேசுறீங்க?” எனப் பல்லைக் கடிக்க,
கதிரவன், “ம்ம்க்கும் உன் அப்பன்காரன் உன்னை மட்டும் தெளிவா பெத்து விட்டுட்டு இதுங்களை லூசாக்கி என்னாண்ட அனுப்பி இருக்கான். எல்லாம் விதி…” என்றதில், கண்மணியும் சிந்தாமணியும் அடக்க மாட்டாமல் சிரித்து விட்டனர்.
ரித்திகாவோ, “யப்பா ஆளை விடுங்கடா. இனிமே உங்க கூட மீட்டிங்கு வந்தா என்னை பிஞ்ச செருப்பாலேயே அடிங்க…” என்று கையெடுத்து கும்பிட,
“அப்போ நீ பிஞ்ச செருப்போட தான் அலையனும்” என்று நிவேதன் கூறியதில் மீண்டும் ஒரு சிரிப்பலை.
இம்முறை ஆஹில்யனும் ரித்திகாவும் அவர்களுடன் கூட்டு சேர்ந்திட,
“சிரிச்சு முடிச்சாச்சா?” என்ற யாஷ் பிரஜிதனின் கர்ஜனையில் அனைவரும் கப்சிப்பென அமர்ந்தனர்.
கணீர் குரலில் அவனே பேச ஆரம்பித்தான்.
“இந்த எலைட் க்ரூப் ஆப் கம்பெனிஸ்…. ஜஸ்ட், ரோபோட்ஸ் ஏஐ மட்டும் வச்சு உருவானது இல்ல கைஸ்!” என்றவன் நிவேதனைக் கை காட்டி, “நீ ட்ரெஸ் ஷாப்ல ஒர்க் பண்ணிருக்க தான?” என வினவ, அவனும் பீதியுடன் தலையை ஆட்டினான்.
“சோ, நீ சேல்ஸ் டிபார்ட்மென்ட்ல இருந்துருக்க ரைட்?” என்றிட, மீண்டும் தலையாட்டியவனுக்கு ‘இயந்திரங்களை ரெண்டு நூறு ரூபாய்க்கு விக்க சொல்லிடுவானோ’ என்ற மிரட்சி தெறித்தது.
“எப்படி ட்ரெஸ் செய்றாங்கன்னு தெரிஞ்சுக்கிட்டா வேலைக்கு சேர்ந்த? இல்ல தான? அதே மாதிரி தான் இதுவும். உங்களுக்கு ஏ. ஐ பத்தி தெரிஞ்சே ஆகணும்னு அவசியம் இல்ல. ஜஸ்ட் பிசினஸ அனலைஸ் பண்ணிக்கிட்டா போதும். சோ, ஒண்ணுமே புரியலைனு புலம்புறதுக்கு பதிலா புரிஞ்சுக்க ட்ரை பண்ணுங்க. புருஞ்சு தான் ஆகணும்” என நிவேதனை அழுத்தமாய் ஏறிட,
“ஆனா அப்படி சேல்ஸ் பண்றதுக்கு கூட மொழி புரியனும் தான?” என நிவேதன் முணுமுணுத்தான்.
“எக்ஸ்சாக்ட்லி. உன்னோட ரோல் என்ன, நீ எக்ஸ்சாக்டா என்ன கத்துக்கணும், எல்லாமே உனக்கு தமிழ்ல ரெடி பண்ணி தர சொல்றேன். உனக்கு அண்டர்ஸ்டாண்ட் ஆகுற வரைக்கும்! இன்பிட்வீன், யூ ஆல் மஸ்ட் லர்ன் அட்வான்ஸ்ட் இங்கிலிஷ்…” என்றான்.
“எனக்கு ஒரு டவுட்டு நிவேதன்” கையைத் தூக்கிட, யாஷ் என்னவென பார்த்தான்.
“என்னடா முட்டை பப்ஸ் எப்ப போடுவாங்கன்னு கேக்க போறியா?” கதிரவன் அவசரமாய் கேட்க, “கொய்யால’ என அடக்கியவன், யாஷிடம் “இந்த எலைட் கம்பெனி மத்த கம்பெனி விட பெருசா. எப்படி கேக்குறேன்னா, மத்த பிசினஸ்மேன் எல்லாம் இங்க வந்து பிசினஸ் வச்சுருக்குற அளவு?” எனக் கேட்டான்.
“அஃப்கோர்ஸ்!” தோளை ஏற்றி இறக்கினான் யாஷ் பிரஜிதன்.
ரித்திகாவும் தமையனுக்கு புரியும் விதமாய், “இங்க மத்த நாடுகள்ல இருக்குற பிஸினஸ்மேன்ஸ் நிறைய பேர் போர்ட் மெம்பர்ஸ்ஸா இருக்காங்க நிவே. ஆனா, இதோட மொத்த பொறுப்பும், அதாவது போர்ட் மெம்பர்ஸ கூட தூக்குற அளவு அதிகாரமும், முக்கிய முடிவுகளை பைனலைஸ் செய்ற ரைட்ஸும் நம்மகிட்ட தான் இருக்கு. இப்ப ஆதி ஆண்ட்டி சேர்மன் அதுனால அவங்ககிட்ட ஃபுல் கண்ட்ரோல் இருக்கு.
போர்ட் மெம்பெர்ஸ் லிஸ்ட்ல, நம்ம குவாலிபிகேஷனோட ஆட் ஆகிட்டா எலைட் நிறுவனத்தோட பெரும் பங்கு நமக்கு வந்துடும். இன்னும் கொஞ்சம் அதிகாரம் நமக்கு வரும். எப்படின்னா, மத்த நாடுகள் இதை கண்டுபிடிச்ச ஆகணும்னு நமக்கு ரூல்ஸ் போட முடியாது. நம்ம என்ன சொல்றோமோ அதை தான் அவங்க கேட்கணும்.
இப்போ யாஷ்ஷோட கிரியேஷன்ஸ் நம்ம அப்பா இங்க இருந்தப்ப சைனாக்காரன் கூட பார்ட்னர்ஷிப் போட்டு, அவனோட இன்வெஸ்ட்மென்ட்டோட பண்ணது. அதாவது யாஷ் கிரியேட் பண்ணுன ஸ்பேஸ் ஏஐல எந்த டிலே வந்தாலும், ஈவன் அவன் பண்ண முடியாதுனு சொன்னாலும் சைனாக்காரன் உள்ள புகுந்து எலைட் நிறுவனத்தை கலைச்சு விட்டுருவான்.
வரதராஜனோட பொண்ணு போர்ட் மெம்பெர் லிஸ்ட்ல வர கூடாதுனு தான் என்னையே கொலை பண்ண பார்த்தாங்க கொஞ்ச மாசத்துக்கு முன்னாடி. அப்போ தான் எங்களுக்கு மேரேஜும் நடக்க இருந்துச்சு. பட் நான் யாஷ் கூட ஒர்கிங் பார்ட்னர் பேர்ல சேர்த்துக்கிட்டு, போர்ட் மெம்பெர் ஆக டைம் எடுத்துக்கிட்டேன். இப்ப நீயும் நிதாவும் வரதாராஜனோட பசங்கனு தெரிஞ்சுக்கிட்ட மத்த கண்ட்ரிஸ் போர்ட் மெம்பெர்ஸ் உங்களை அட்டாக் பண்ணுவாங்க.
ஃபார் எக்ஸ்சாம்பில், யாஷ் தீவுக்கு போயிருந்தப்ப நம்ம வீட்டு வாசல்ல நடந்த கன் ஷுட் கண்மணியை டார்கெட் பண்ணது தான்.
எப்போ அலெஸ்ஸோட பொண்ணுன்னு வெளில ஸ்ப்ரெட் ஆச்சோ அப்பவே அவளையும் டார்கெட் பண்ண ஆரம்பிச்சாச்சு. இப்ப நம்ம நாலு பேருமே உசுரோட ஊர் போய் சேரணும்னா, எலைட் கம்பெனியோட ஒரு பார்ட்டா இருக்கணும். அதுக்காக தான் யாஷ் உங்களை கம்பல்சரியா உள்ள கொண்டு வந்துருக்கான்.
எவ்ளோ சீக்கிரம் போர்ட் மெம்பராக முடியுமோ அவ்ளோ சீக்கிரம் ஆகுறது பெஸ்ட்.” என நீளமாய் பேசி முடிக்க, அங்கு பலத்த அமைதி.
சிந்தாமணி தான், கொஞ்சம் அவசரப்பட்டு வந்துட்டோமோ? எனத் திருதிருவென விழிக்க, கதிரவன் அவளைத் திரும்பிப் பார்த்து சிரிப்பை அடக்கிக் கொண்டான்.
கண்மணியும் நிவேதனும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள, நிவேதனோ “அப்போ மச்சான் உயிருக்கு ஆபத்தா?” என அச்சத்துடன் கேட்டான்.
தங்கையின் வாழ்வும் அல்லவோ இதில் இருக்கிறது.
நிதர்ஷனா தான், “இந்த அரக்கனால யார் யார் உயிருக்கு ஆபத்துனு வேணும்னா கேளு நிவே. ஆல்ரெடி நம்ம அப்பன்காரனும் அவனோட அப்பன்காரனும் என்ன நெலமைல இருக்கானுங்களோ. அதெல்லாம் இவரை யாரும் தொட முடியாது…” என்று யாஷுக்கு முன் படபடத்தாள்.
அதில் இறுகிய சிவந்த இதழ்களில் நளினப்புன்னகை பரவியது யாஷ் பிரஜிதனுக்கு.
ஆஹில்யனும், “நிதா சொல்றது சரி தான் நிவே. பாஸ் கிட்டதட்ட பத்து வருஷமாவே இந்த கம்பெனில ஸ்ட்ராங் பேஸ் போட்டுருக்காரு. இவரோட ஏ. ஐ டெக்னீக் தான், உலக அளவுல பிசினஸ் பார்ட்னர்ஸ் எலைட்டோட சேரவே காரணம் ஆச்சு. சோ பாஸ் அவங்களுக்கு தேவை. அவர் மேல இருக்குற பயத்தாலயும் இன்னும் வரதராஜன் அலெஸ்ஸோட நிலைமை என்னன்னு வெளி உலகத்துக்கு தெரியாததுனாலயும் தான், இன்னுமே உங்களை ஸ்ட்ராங்கா அட்டாக் பண்ணாம இருக்காங்க. இல்லன்னா, இப்ப இந்த செகண்ட் கூட அட்டாக் பண்ண முடியும்” என்றவனை,
“நீ ஏன்டா விஜயகாந்த் படத்துல வர்ற தீவிரவாதி மாறிக்க பேசுற” என நிவேதன் நொந்ததில் அவன் அசடு வழிந்தான்.
“சோ, நீங்க உயிர் வாழணும்னா பிசினஸ் கத்துக்கோங்க…” என எளிமையாய் முடித்துக்கொண்ட யாஷ் பிரஜிதனை ஐவரும் பரிதாபமாய் ஏறிட்டனர்.
“மாமா இது அவங்க மூணு பேருக்கும் தான? என்னையும் கதிரையும் வீட்ல விட்டீங்கன்னா, நாங்க அப்படியே சீரிஸ் பார்த்துட்டு பொழுதை ஓட்டிடுவோம். இந்தியாக்கு போனப்பறம், ஏதோ எங்களுக்கு வர்ற இங்கிலிஷ் அறிவை வச்சு வேலை வாங்கிக்கிறோம். இல்ல கதிர்…” என அவனையும் துணைக்கு அழைக்க, “நான் உன்னை வழிமொழியிறேன் சிந்தா” என்று தலையைக் குனிந்து அவள் கூற்றை ஏற்றுக்கொண்டான்.
“நடந்து முடிஞ்ச ப்ராசஸ் முழுக்க, நீயும் கதிரும் கூட தான இருந்துருக்கீங்க. நீங்க தனியா சிக்குனா கூட, தேவை இல்லாத களையை புடுங்குற மாதிரி…” என்றபடி இரு விரலை நீட்டி துப்பாக்கியால் சுடுவது போல பாவனை செய்ததில், சிந்தாமணியின் நெஞ்சில் குண்டு பாய்ந்தது போல பக்கென இருந்தது.
“நாங்க தேவையில்லாத களையா உங்ககூடவே இருந்துக்குறோம் யாஷ்” எனப் பரிதாபமாய் கதிரவன் உரைத்ததில், “நீ இருந்து தான்டா ஆகணும். கழட்டி வுட்டுட்டு ஓடுற ஐடியாவ எல்லாம் இங்கயே புதைச்சுடு” என்று நிவேதனும் நிதர்ஷனாவும் அவனைக் குனிய வைத்து கும்மினர்.
“ம்ம்!” யாஷ் பிரஜிதன் உறுமலில் மீண்டும் அவரவர் பொசிஷனுக்கு வந்து விட,
“ஆஹிலும் ரித்தியும் உங்களை கைட் பண்ணுவாங்க… பேப் கொஞ்ச நாளைக்கு நீ லேப்கு வர வேணாம்” என்றிட, ரித்திகா “அதில்ல யாஷ்” எனப் பேச வரும்போதே,
“திஸ் இஸ் மை ஆர்டர்!” என்றான் விழிகளில் நெருப்பைக் கக்கி.
கீழுதட்டை அழுந்தக் கடித்தவள், கலங்கிய விழிதனை அடக்கிக் கொண்டாள்.
எப்போதும் அவன் கத்துவது வழக்கம் தானே என மற்றவர்கள் ஒதுக்கி விட்டாலும் நிதர்ஷனாவும் ஆஹில்யனும் இருவரையும் குழப்பமாய் ஏறிட்டனர்.
நிவேதனோ, “சரி தான்… அப்ப இந்த கம்பெனில தமிழ்நாட்டை சேர்ந்த ஆதி அத்தை தான் ஓனர். கரிக்ட்டா” என மீண்டும் வினவ, “இவனுக்கு இதுவே இப்ப தான் நிதா புருஞ்சுருக்கு” என்று கதிரவன் தலையைச் சொரிந்ததில் நிதர்ஷனா சிரிப்பை அடக்கிக் கொண்டாள்.
நிவேதன் தனது நிலையை மாற்றாது, “அப்டின்னா ஓனர் என்ன மொழி பேசுறாங்களோ அதை தான மத்த பார்ட்னர் எல்லாம் கத்துகிட்டு பேசணும். நாம எதுக்கு கத்துக்கணும்” என்று ஒரு முக்கிய கேள்வியை கேட்க,
“கரெக்டு தான” என முதல் ஆளாக ஆஜர் ஆகி தமையனின் முறைப்பைப் பரிசாக பெற்றுக் கொண்டாள் கண்மணி.
ரித்திகாவோ, “யாஷ் இவனுக்கு எதிரி கையாள சாகிறது எல்லாம் பிரச்சினை இல்ல. இங்கிலீஷ் கத்துக்க கூடாது” என சிரித்ததில் நிவேதன் அசடு வழிந்தான்.
“அன்வாண்டட் குவைஸ்டின் கேக்காமல், நான் சொல்றதை மட்டும் செய்…” என அவனை அதட்டிய யாஷ், “ஓகே… டிஸ்மிஸ்ட்!” எனத் தளர்வாய் ஒரு நாற்காலியில் அமர,
“ நிதா நிதா உன் புருஷன்காரன் அவனாவே மனசு இறங்கி நம்மளை டிஸ்மிஸ் பண்ணிட்டான் வா ஓடிடலாம்” என நிவேதன் உரைத்ததில்,
கண்மணி “அது அந்த டிஸ்மிஸ் இல்ல. மீட்டிங் முடிஞ்சுதுனு சொல்ற டிஸ்மிஸ்…” என்றாள் சிரிப்பை அடக்கிக் கொண்டு.
“ம்ம்க்கும்… மவனே நீ மாட்டிருக்குறது பிக் பாஸ் ரூம்ல டா. ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது” என்று நிதர்ஷனா கமல் மாடுலேஷனில் கனத்த குரலில் பேசியதில் பக்கென சிரித்தாள் கண்மணி.
யாஷ் நிமிர்ந்து முறைத்ததில் அனைவரும் ஹெட் மாஸ்டருக்கு பயந்த மாணவர்களாய் தலையைக் குனிந்து கொண்டு வெளியேற, சரியாக நிதர்ஷனா அவனைத் தாண்டிச் செல்லும்போது அவள் கையைப் பிடித்து விட்டான்.
நிவேதனும் கதிரவனும் சேர்ந்து அதில் நின்று விட, யாஷ் அவர்களை கடுப்பாய் ஏறிட்டு “என்னடா ப்ரீ கிஸ் பார்க்கணுமா?” எனக் கேட்டதில், இருவரும் நிற்காமல் ஓடி விட்டனர்.
நிவேதன் தான், அத்தனை நேரம் இருந்த குறும்பு மறைந்து யோசனையில் வீற்றிருந்தான்.
“என்னடா?” கதிரவன் அவனைக் கவனித்துக் கேட்க,
“இந்த யாஷ் மேல எப்படிடா இவளுக்கு லவ் வந்துச்சு?” என்றதில், ஏனென பார்த்தான்.
“அதில்ல… இவன் கொஞ்சம் ரூடா இருக்கான். ஆனா அவ மேல பாசமா தான் இருக்கான். இருந்தாலும் அவன் நிதாவை கடத்தி கல்யாணம் பண்ண கேட்டது எல்லாம் எனக்கு ஒரு மாதிரி இருக்குடா. அவன் கூட டக்குனு ஒட்ட முடியல. சில நேரம் அவன் லவ் பண்றத பார்த்தாக்கா கூட பயமா தான் இருக்கு. ஆனா நீயும் நிதாவும் எப்படி அவனாண்ட நார்மலா இருக்கீங்க?” எனத் தனது குழப்பதைக் கூறியதில்,
“டேய்… நீ அவன்கூட பழகி பார்த்தா உனக்கு வித்தியாசமா தெரியாது நிவே. மொதோ எனக்கும் அவன் மேல செம்ம காண்டு தான். ஆனா நிதாவுக்காக அவன் எந்த எல்லைக்கும் போவான். இப்படி ஒருத்தனை எல்லாம் நம்ம தேடி கல்யாணம் பண்ணி வச்சுருக்க முடியாது. அதுவாவே அமைஞ்சுருச்சுனு நிம்மதியா இருடா. யாஷ்கிட்ட டக்குனு சரளமா பேச வராது தான். அவன் கூட பேச்சு வச்சுக்க ட்ரை பண்ணு. உனக்கும் பழக ஈஸியா இருக்கும்.”
“புரியுதுடா. இதே அன்பு அவளுக்கு வாழ்க்கை முழுக்க கிடைக்கணும்னு தான் மனசு கிடந்து அடிச்சுக்குது. பேசுறோம் சிரிக்கிறோம் ஆனாலும் நெஞ்சுக்குள்ள முணுக் முணுக்குனு ஒரு பயம் ஓடிட்டே இருக்கு. நிதாவுக்கு ஏதோ வைரஸ் இருக்கறதா வேற சொல்றீங்க. அவள் முகத்திலே இதே சிரிப்பு எப்பவும் இருக்கணும் கதிரு” எனக் கண் கலங்கி கூறிட,
“ப்ச், நீ தேவையில்லாம கொழப்பிக்காத நிவே. புது நாடு, புது மனுஷங்கனு எல்லாம் உனக்கு அழுத்தம் குடுக்குது. அதான் இந்த பயமெல்லாம். நான் பல மாசமா இந்த மாதிரி பல அதிர்ச்சியைப் பார்க்குறனால, எப்படியும் யாஷ் பார்த்துக்குவான்னு ஒரு அசட்டுத் தைரியத்துல இருக்கேன். உனக்கும் எல்லாம் பழகிடும்டா” என சமன்செய்தான் கதிரவன்.
“ம்ம்ம்… அவன் கூடவும் பேச பயமா இருக்கு. ஒட்டவும் மாட்டேங்குது. அதே நேரம் நிதாகிட்ட கூட விட மாட்டுறான். எதுவுமே பழைய மாதிரி இருக்காதோன்னு ஒரு சின்ன வருத்தம்டா…”
நிதர்ஷனாவைத் தன் உள்ளங்கையில் அடைகாப்பது போல தனக்குள்ளேயே பொத்திக் கொள்கிறானே! இத்தனை மாதத்தில் கதிரவன் கூடவே இருந்தாலும் கூட, அவளிடம் பேசிய வார்த்தைகளை விரல் விட்டு எண்ணி விடலாம். அதுவும் அவன் அருகில் இல்லாத போது தான்.
இருவரது எண்ணங்களும் பேக் ஃபயர் ஆகி, இதை எண்ணியதற்காகவே நரக வேதனை பட போவதை இரு அன்பு உள்ளங்களும் அறியவே இல்லை!
—-
“யாஷ்… விடு!” அவனிடம் இருந்து கையை இழுத்துக் கொள்ள முயன்று தோல்வியுற்றவளிடம், “குடு” என்றான்.
“என்ன குடுக்க?”
“கிஸ் குடுக்க தோணுச்சுல உனக்கு. இப்ப குடு!” அத்தனை நேரம் இருந்த கடுமை தற்போது இல்லை. அவளிடம் மட்டுமே குழைந்திருந்தான்.
சிவந்து போனவள், “நீங்க ஸ்ட்ரிக்ட்டா பேசும்போது தோணுச்சு. இப்ப இல்ல…” என நாக்கைத் துருக்கிட, “ஸ்ட்ரிக்ட்டா தான பேசிட்டா போச்சு” என்றபடி அவளை இழுத்தான்.
நேராய் அவன் மடிமீதே அமர்ந்து விட்டவள், முத்தமிட வந்தவனின் இதழ்களைத் தடுத்து “ரித்தி ஓகே வா? ஏன் ஒரு மாதிரி இருக்கா?” எனக் கேட்டிட, அதை “அவள்கிட்டவே கேளு…” என்றான் தோளைக் குலுக்கி.
“எதுவும் பிரச்சினையா அரக்கா?” அவனது புருவ சுருக்கத்தை நீவி விட்டபடி கேட்டாள்.
“நத்திங் கடன்காரி. ஒர்க் பிசி தான்.”
“நெஜமாவே ஒன்னும் இல்லையா?”
அதற்கு பதில் கூறாதவன், “நீ வெய்ட்டே போட மாட்டியாடி. கையெல்லாம் குச்சியா இருக்கு…” என்று அவள் கையை மெல்ல மெல்ல பிடித்து விட்டான்.
“நீ தான் வெய்ட் போடாம இருக்க எக்ஸர்சைஸ் பண்ணனும். எனக்கு தேவை இல்ல.”
“இப்ப எக்ஸ்டரா ஒர்கவுட் வேற ஆட் ஆகிடுச்சோ” அவள் மூக்கோடு மூக்குரசி அர்த்தமாய் உரைத்ததில், செங்கொழுந்தாய் சிவந்து விட்டாள்.
“போ அரக்கா!” முகத்தை மூடிக்கொண்டவளுக்கு எங்கெங்கோ சிலிர்த்தது.
அரக்கன் தொடரும்
மேகா
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
8
+1
60
+1
+1
1

