46 இமை தேடும் காதலே!

https://thoorigaitamilnovels.com/wp-admin/options-general.php?page=ad-inserter.php#tab-1

Loading

அத்தியாயம் 46

 

மறுநாள் காலையில் எழுந்ததும் கல் உப்பும், வெண்ணீரும் கொடுத்து வாய் கொப்பளிக்க வைப்பதில் ஆரம்பித்தது அவனுக்கான அவளின் கவனிப்பு, பின் பிரஷ் செய்து பாத்ரூம் போய் வரவும், மாடிக்கு அழைத்து சென்று 15 நிமிடம் சூரிய ஒளியில் நிற்க வைத்து மூச்சுப் பயிற்சி செய்ய வைத்து அழைத்து வருவாள். பின் பால் ஆற்றி கொடுக்க, குடித்து விட்டு ரிலாக்ஸாக அமர்ந்து கொஞ்ச நேரம் வலைதளங்களில் சுற்றி வருவான்.

 

அதற்குள் அவனுக்கு ஆவிபிடிக்க வெண்ணீர் வைத்து கொடுத்து, ஒரே வெண்ணீரில் குளிக்க இரு வாளியில் வெதுவெதுப்பான நீர் நிறைத்து என எல்லாம் ஏற்பாடு செய்து, அவன் குளித்து வரவும், தலை துவட்டி, சாப்பாடு ஊட்டி, தொண்டை கசப்பின் காரணமாக மெதுவாகவும், கொஞ்சமாகவும் கஷ்டப்பட்டுதான் சாப்பிடுவான். பின் மாத்திரை விழுங்க வைத்து தூங்க சொல்லிவிடுவாள்.

 

10 மணிக்கு சூப் வகைகளில் ஏதோ ஒன்று, 12 மணிக்கு இஞ்சி கசாயம், கபசுர குடிநீர் போன்ற கஷாயம் ஏதோ ஒன்று. 2 மணிக்கு நான்வெஜ் துணையுடன் ஒரு சாப்பாடு, மாத்திரை, 4 மணிக்கு ஃப்ரூட்ஸ் ஏதாவது, 6 மணிக்கு பாலுடன் கொண்டைக் கடலை, பச்சைப் பயறு, வேக வைத்த முட்டை போன்ற பயறு வகைகளில் ஏதேனும் ஒன்று, 8 மணிக்கு தோசை, இட்லி போன்ற ௭ளிதான உணவு, பத்து மணிக்கு மிளகு, மஞ்சள் கலந்த பால், பின் மாத்திரை போட்டு உறக்கம். இரவு மூன்று முறையேனும் அவன் அறையை திறந்து திறந்து பார்ப்பாள். நன்றாக இருக்கிறான் என அவள் மனம் நம்ப மறுத்ததின் காரணமே அவள் செய்கைகள்.

 

அனைத்தையும் ப்ரகலத்தன் ஏற்றுக்கொண்டான். சிறு பிள்ளையைப் போல நடத்தினாலும் அவனுக்கு அது பிடித்திருந்தது. மெடிக்கல் ரெப் வந்து செக் செய்துவிட்டு எல்லோருக்குமே நெகட்டிவ் என்ற ரிசல்ட் கொடுத்து சென்றார். “சிலர் உடம்பில் கொரோனாவை எதிர்க்கும் எதிர்ப்பு சக்தி இயற்கையில் இருக்கும் அது போல உங்க வைஃப்க்கும் ஸ்பிரேட் ஆகாமல் இருந்திருக்கலாம்” என சொல்லி சென்றார்.

 

ஆல்ரெடி அவனும் அதை நம்பியதாலேயே அவளை ஹாஸ்பிடலில் இருந்து வந்ததும் அணைத்திருந்தான். இப்போது தள்ளி நிறுத்தும் எண்ணத்தை முழுவதாக நிறுத்திவிட்டிருந்தான். இவன் சொன்னாலும் அவள் கேட்க மாட்டாள் என்பது தனிக்கதை. அடுத்த 20 நாள் பிள்ளைகளுக்கு தெரியாமல் அவர்களையும் கவனித்து இவனையும் கவனித்து பாதியாக இவள் இளைத்திருந்தாள், இது எல்லாவற்றையும் ராஜமும் கவனித்துக் கொண்டு தான் இருந்தார்.

 

அன்று காலை ப்ரகலத்தன் அதிகநேரம் தூங்கிக்கொண்டிருந்தான். ஆறெழில் இருமுறை எழுப்பியும் பார்த்தாள், “ஃபைவ் மினிட்ஸ் டி” என திரும்பி திரும்பி படுத்துக்கொண்டான்.

 

அவளோ, ‘ப்ரசிடண்ட்டுக்கு ஏதும் செய்தோ? 15 நாள் கோரன்டைன் முடிஞ்சு இன்னைக்கு டாக்டர் செக்கப் போகணும், டாக்டர் வேற என்ன சொல்லுவாரோன்னு பயமா இருக்கு, இவங்க வேற இன்னும் எழும்பாம இருக்காங்க டையர்டா இருக்குமோ?’ என அதும் இதும்மாக யோசனையிலேயே அவள் சுற்றிவர.

 

“ஆறெழில்  உட்காந்து சாப்பிடு, அவன் எழும்புனப்புறம் அவனுக்கு எல்லாம் பாத்து சாப்பிட மதியமே ஆகிடும். 2 இட்லிய பிச்சு வயித்துக்குள்ள போடு, அவன எழுப்பிட்டு நீ படுத்திறாத” என்றார் ராஜம்.

 

கண்ணை அகல விரித்துப் பார்த்தாள் மாமியாரை, அப்பப்போ கொட்டி கொட்டி பேசுவார் தான் மற்றபடி அவர் பெரிய வில்லியெல்லாம் இல்லை, இது போல் பாசமாகவும் பேசியதில்லை, கனவோ என கண்ணை கசக்கியும் பார்த்தாள், “என்ன? வந்து சாப்பிடுவா” என இப்போது அவர் அரட்டலாக அழைக்கவும், வந்தமர்ந்து இரண்டு இட்லிகளை சாப்பிட்டாள்.

 

அதற்கு மேல் ப்ரகலத்தன் ஞாபகம் வந்து விட, “அப்புறமா சாப்பிடறேன், அவங்க ஹாஸ்பிடல் வேற போகணும்” என எழ, “கூட ஒன்னு சாப்பிடு” என இறுத்திவிட்டார்.

 

ஜெயந்தியும் வெளிவந்து இதைப் பார்த்தார், அவர் சாப்பிட சொன்ன போது, “சும்மா இருமா, எனக்கே அவங்களுக்கு என்னமு செய்தோ அதான் இன்னும் தூங்குகிறாங்களோன்னு பயமாயிருக்கு. சாப்பாடுலா இறங்காது, ப்ரெசிடெண்ட் ௭ழும்பட்டும்” என்று விட்டாள்.

 

‘மருமகள் மகனை கவனிப்பதை கண்டதும், மருமகள் மேல் பிடிப்பு வந்து விட்டது போல’ என நினைத்து சிரித்துக் கொண்டார்.

 

ஆறெழில் மாமியாரை பார்த்தவாறே அந்த இட்லியையும் சாப்பிட்டவள், “போதும் த்தே” என எழுந்து ஓடியே விட்டாள் கிட்சன் சிங்க்கை நோக்கி.

 

அந்நேரம் அவள் போனில் மிஸ்டு கால் வர, தண்ணீரையும், உப்பையும் எடுத்துக் கொண்டு ப்ரகலத்தன் அறையை நோக்கி சென்றாள்.

 

“இத இன்னும் எத்தனை நாள் தான்ம்மா கண்டினியூ பண்ணுவ”,

 

“3 மாசத்துக்கு” ௭ன அவள் சொன்னதும், கட்டிலை விட்டு எழுந்தவன் மறுபடியும் அப்படியே அமர்ந்து விட்டான்.

 

“எழுந்துருங்க, டைம் பாருங்க, குளிச்சு கிளம்பி ஹாஸ்பிடல் போகணும், அங்க கூட்டமா வேற இருக்கும் பத்திரமா போயிட்டு வரணுமேன்னு நானே டென்ஷன்ல இருக்கேன். உங்களுக்கு வேற எதுவும் செய்யல தான? இன்னைக்கு ஏன் இவ்வளவு நேரம் தூங்கிட்டீங்க?” என அவனை ஆராய்ந்தவாறு கேட்க.

 

அவள் முகத்தில் உண்மையான பயத்தை கண்டவன், “கூட கொஞ்ச நேரம் தூங்குனதுக்கும் பயமா? நைட் தூக்கம் வரலடி, லேட்டா தான் தூங்கினேன், அதான் இப்ப லேட். வேற ஒன்னுமில்ல, கொண்டா தண்ணிய” என வாங்கி சென்றான்.

 

அவள் அவனை கிளப்புவதற்கான அடுத்த வேலைகளில் இறங்க, ஹாஸ்பிடலுக்கு கிளம்பி சென்றவன், உடன் கிளம்பியவளை இறுத்தி கிளம்ப ஒரு பாடுதான் பட்டு விட்டான். வைரமும் இவனுக்காக ஒன் வீக் லீவ் எடுத்து இருந்தவன் வேலைக்கு திரும்பியிருக்க, மறுபடியும் லீவு போட சொல்ல முடியாமல் தான் தான் அவனுடன் கிளம்பினாள். ஆனால் அரட்டி மிரட்டி வீட்டிலேயே விட்டுவிட்டு சென்று விட்டான்.

 

மேலும் 15 நாட்களுக்கு மாத்திரையுடன் வந்தவன், சுகர் கூடியிருப்பதாக சொல்ல, கஷாயங்களை கூட இரு நேரங்கள் கொடுத்து அதை குறைக்க ஆரம்பித்தாள்.

 

ப்ரகலத்தன் பிள்ளைகளுடன் அதிக நேரங்களை செலவு செய்தான். இரவிலும் ப்ரகி அவனை விட்டு இறங்க மறுத்தான். அதனால் ப்ரகலத்தன், ஆறெழில், ப்ரகி மூவரும் ஒரு அறையிலும், அம்மாக்களும், குணவான்மதியும் மறு அறையிலும் படுத்து கொண்டனர்.

 

ஆறெழில் எல்லோரும் உறங்கிய பின்பும் அவனையே பார்த்திருப்பாள். தான் தூங்கிய பின் அவனுக்கு ஏதும் ஆகி விடுமோ என பயந்து கொண்டே தூங்காமல் இருந்தாள். ‘மறுபடியும் ஏதும் செய்யுமோ? எதிர் சக்தி இல்லாமல் இருப்பது தானே பிரச்சனை, இவ்வளவு வீக்கா இருக்காங்க’ என ஏதாவது யோசித்து பயந்த இரவு வெகு நேரம் கழித்து உறங்குவாள். பகலில் கொஞ்சம் தைரியமாக நடமாடுபவள் இரவானால் பயந்து நடுங்க தான் செய்வாள்.

 

அவ்வப்போது உடம்பு சூடு தெரிகிறதா என தொட்டு தொட்டுப் பார்த்துக்கொள்வாள், அவனுக்கு மூச்சு அதிகமாக வாங்குகிறதோ? என சந்தேகம் திடீர் திடீரென்று தோன்றும். கொரோனா வந்தவர்களுக்கும், எதிர் சக்தி கம்மியாக இருப்பவர்களுக்கும் புதிதாக கருப்பு பூஞ்சை தொற்று பரவுகிறது என சொன்னதும், அதன் சிம்டம்ஸ் என்னவென்று ஆராய்ந்து அது எதுவும் தெரிகிறதா என செக் செய்ய ஆரம்பித்தாள்.

 

கண்ணை காட்ட சொல்லி அந்தப் பூனை கண்ணை உற்று உற்றுப்பார்ப்பாள், அதில் நார்மலாக தெரியும் சிவப்புக் கோடுகளை கண்டு கூட பயந்து கண்ணை குளிர்ந்த நீரில் அடிக்கொரு தரம் கழுவ சொல்வது, கண்ணை சுற்றி ஆயில் அப்ளை பண்ணிவிடுவது, தினமும் இளநீர் ஆர்டர் செய்து வரவைத்துக் குடிக்கக் கொடுப்பது என எப்போதும் பார்ப்பதை விட இப்போது அதிகமாகவே அந்த கண்ணைப் பார்த்தாள், பாடாய் படுத்தினாள்.

 

அவனும், “எனக்கு ஒன்னுமில்லடி, நார்மலா இருக்கத்தையும் நீயா திங்க் பண்ணி குழம்பிட்டிருக்க” என சொல்லி சொல்லி அலுத்து தான் போய்விட்டான். ஆனாலும் அவளுக்குத் தான் அவன் ஆரோக்கியமாக இருக்கிறான் என அவள் மனம் நம்ப மறுத்தது.

 

மறு வாரம் முதல், மழை பிடித்தது. பலத்த மழை காரணமாக அங்கங்கு வெள்ளம் பெருக்கெடுத்திருந்தது. அதில் சடன் கிளைமேட் சேஞ்ச், கஷாயம் எல்லாம் சேர்த்து சூட்டை கிளப்பி விட்டிருக்க, அவனுக்கு டையோரியா வானது, அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்ற கணக்கில் அல்ரெடி பயத்தில் இருந்தவள், இந்த புதிய பிரச்சினையில் அதீதப் பயமாக இவளுக்கு காய்ச்சல் வந்து விட்டிருந்தது.

 

அவனுக்கும் இரண்டு நாள் மைதா மாவிலான உணவுகள், ப்ரட், கஞ்சி போன்ற உணவுகள் கொடுத்தும் டிசென்டரி கேட்கவில்லை. அவளுக்கும் பாராசிட்டமல் கொடுத்து காய்ச்சல் விட்டாலும் மன அழுத்தத்தால் எந்திக்க முடியவில்லை. பின் மெடிக்கலில் டிசென்ட்ரிக் காண டேப்லெட் வாங்கி போட்டான், மூன்று வேளை போட்டதின் பின் மறுநாள் தான் சரியாகியது. அதன்பின்பு தான் இவள் எழுந்து அமர்ந்தாள்.

 

இப்போதுதான் அவன் யோசனை ஆனான், “இது சரியில்ல எழில். எவ்வளவு போல்ட் நீ. ஏன் இப்டி ஆகிட்ட? கொரோனாவுக்கு முன்ன இதுமாதிரி வந்தா நீ இவ்வளவு ரியாக்ட் பண்ண மாட்ட தானே, அதுபோலதான் இதுவும், இனிமேயும்னு நினைச்சுக்கோ. நீ உன்ன இவ்ளோ ஸ்ட்ரஸ் பண்ணிக்கிறது நல்லதுக்கில்ல சொல்லிட்டேன்” என பொறுமையாகவே எடுத்துக் கூறினான்.

 

‘மைண்ட்க்கு புரியுது, ஓவர் ரியாக்ட் பண்றன்னு எடுத்தும் சொல்லுது, ஆனா மனசு பயந்து சாகுதே, நானும் தான் என்ன பண்ண?’ என நினைத்து அமைதியாகவே அவன் கூறுவதை கேட்டு கொண்டாள்.

 

மேலும் ஒரு மாதம் சென்றிருந்தது, கொரோனா தொற்று ௭ண்ணிக்கை கொஞ்சம் குறைய ஆரம்பித்திருந்தது. சௌத் சைடு அதிகரிக்க ஆரம்பித்திருந்தது. ஜெயந்திக்கும் ஸ்கூல் திறக்காத காரணத்தால் பிரச்சனை இன்றி அவர் இருந்தார். ப்ரகலத்தனின் அப்பா போலீஸ் உத்தியோகத்தர், ௭னவே 24 ஹவர்ஸ் டூட்டியில் இருந்ததால் ராஜமும் வீட்டைத் தேடாமல் அவர் போக்கில் இங்கு இருந்தார். இரண்டு அம்மாக்களும் சண்டையின்றி வேலையை பிரித்து அட்ஜஸ்ட்டில் இருந்ததால் பெரிதாக பிரச்சனை ஆகாமல் சென்று கொண்டிருந்தது. இவர்கள் யாருமே ஆறுவின் பயத்தை அறியவில்லை. அது அவள் மட்டுமே அறிந்த ஒன்றாக இருந்தது.

 

இந்த காய்ச்சலில் விழுந்த பின் தான் ப்ரகலத்தன் அவளைக் கவனிக்க ஆரம்பித்தான். அவனை ஆராய்ந்து கொண்டே இருப்பதும், அவளது தூக்கமின்மை, அவளின் உடல் மெலிவு எல்லாம் அவன் கண்ணில் பட்டது.

 

அவன் பகலில் தூங்க வில்லை என்றால் “ஒன் ஹவர் தூங்கி எழும்பினா என்னங்க?” என்பாள், அதே தூங்கி விட்டான் என்றால், “உடம்புக்கு என்னமு செய்தாங்க? டயர்டா இருக்கா? தலை வலிக்குதா? ஃபீவர் வர்ற மாதிரி இருக்கா?” என அவனை படுத்திவிடுவாள்.

 

பிலைட் சர்வீஸ் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் ஸ்டாப்ஸ் வேலைக்கு வரணும் என்றாலும், கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்களை அவர்கள் கட்டாயப்படுத்தவில்லை. அதனால் அவன் வீட்டில்தான் இருந்தான். முழுநேரமும் அவள் கண்காணிப்பில் தான் இருந்தான், ஆனால் அதை இப்போது முழுமையாக உணர்ந்தான் ப்ரகலத்தன்.

 

அன்று எல்லாவற்றிற்கும் உச்சமாக ஒரு சம்பவம் நடந்தது, நல்ல வெயில் நேரம் தான், ஆனாலும் அவனுக்கு வியர்க்க வில்லை என்றதும், “ஏன் வேர்க்க மாட்டேங்குது உங்களுக்கு? எனக்குலா வேர்க்குது. இவ்ளோ வெக்கையிலயும் உங்களுக்கு ஏன் வேர்க்கல? இருங்க ஃபேன் அமத்தி பார்ப்போம்” என ஃபேன், ஏ.சி., எல்லாவற்றையும் நிறுத்தி பார்த்தாள், அப்போதும் அவனுக்கு வேர்க்கவில்லை என்றதும், கனத்த போர்வையை ௭டுத்து வந்து அவனுக்கு தலை வரை இழுத்து மூடி விட்டாள். அவன் அரண்டு தான் விட்டான் இவளின் செய்கையில்.

 

 

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 40

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
43
+1
3
+1
2

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

https://thoorigaitamilnovels.com/wp-admin/options-general.php?page=ad-inserter.php#tab-1