Loading

அவனது பிடியில் சிக்கித் திணறிய நிதர்ஷனாவிற்கு ஒன்றுமே விளங்கவில்லை.

“யாஷ்… ஏன் இப்படி பண்றீங்க?” கேட்கும்போதே கண் கலங்கி விட,

“எல்லார்ட்டயும் கடன் வாங்குன மாதிரி, என்கிட்டயும் கடன் வாங்கிட்டு திருப்பித் தராம இட்டாலிக்கு அனுப்புனது நியாயமாடி?”

“நா… நான் உங்ககிட்ட என்ன கடன் வாங்குனேன். அங்க இருந்து எதையும் நான் எடுத்துட்டுக் கூட வரல” சொல்லும்போதே தொண்டை கமறிட, “நோ. நீ எடுத்துட்டு தான் வந்துருக்க. என் கவனத்தை, என் தனிமைய, என் உயிர…” அடிநெஞ்சின் ஆழத்தில் இருந்து கூறியவனை அசையாமல் திகைத்துப் பார்த்தாள்.

“இவ்ளோவையும் எடுத்துட்டு வந்துட்டா, நான் எப்டிடி போக முடியும்? எல்லாத்தையும் திரும்பக் குடு!” எனப் பிடிவாதமாக நின்றவனைக் கண்டு நொந்தாள்.

“உனக்கு என்ன பைத்தியமா?” என மொத்த பலத்தையும் கூட்டி அவனை விலக்கினாள்.

“நீங்க முதல்ல கிளம்புங்க யாஷ். உங்க பேச்சும் சரி இல்ல. நீங்க செய்றதும் சரி இல்ல…” மேனி நடுங்க அவனை அனுப்ப முயன்றவளின் முயற்சிகள் அனைத்தும் வீணாய் போனது.

“அப்போ சரியா செய்யட்டா?” குறும்பு தொனியில் அவளது இடையைப் பற்றி அருகே இழுத்தான்.

மெல்லிடையில் ஊர்ந்த ஆடவனின் முரட்டுக் கரங்கள் அவளுக்குப் பயத்தை வாரி வழங்க,

“யாஷ் ப்ளீஸ்…” என்றாள் கெஞ்சலாக.

முன் எப்போதாவது அவன் தன்னைத் தொட்டிருந்தால், கையை வெட்டி இருப்பாள். இப்போதோ மனத்தைக் கவர்ந்தவனின் தீண்டலில் தவறு என்று புரிந்தும் கரையவே செய்த மனதை எவ்வாறு இழுத்துப் பிடிக்க இயலும்!

“ஐ ஆம் ஃபாலிங் பார் யூ நிது!” ஆழ்ந்த குரலில் அத்தனை நேசத்தையும் தேக்கியவனின் கூற்றில் கண்ணை இருட்டியது அவளுக்கு.

“யாஷ்?” உதடு நடுங்க நடப்பதை நம்ப இயலாமல் தடுமாறினாள்.

“எஸ் மின்னல்… என்னால முடியலடி நீ இல்லாம. உன்னாலயும் முடியல தான? உன் காதலை மனசுல வச்சு தான அன்னைக்கு தட் வெண்ணிலவே சாங் பாடுன?” என்று சரியாகக் கணித்துக் கூறியவனிடம் எங்கனம் மறுக்க இயலும்.

ஓர் கணம் கண்ணை இறுக்கி மூடித் திறந்தவள், “ஆமா… அதுக்கென்ன இப்போ” என்றாள் நிதானமாக.

“என்கிட்ட ஏன் சொல்லல?” கூர்மையாய் அவளை ஏறிட்டான் யாஷ்.

“எதுக்கு சொல்லணும்? சொல்ற அளவு பெரிய விஷயம் எல்லாம் இல்ல. கூடவே இருந்தீங்க, எனக்காக எல்லாம் செஞ்சீங்க அதனால வந்த ஒரு ஃபீலிங் அவ்ளோ தான். நீங்க ஊருக்குப் போனதும் நான் நார்மல் ஆகிட்டேன். இப்போ நீங்க தான் இடைல வந்து தேவையில்லாம குழப்பிட்டு இருக்கீங்க…” என்றவளின் இதழ்கள் அவனது இரு விரல்களினூடே சிக்கிக் கொண்டது.

“பொய் சொல்ற இந்த லிப்ஸ்க்கு என்ன தண்டனை குடுக்கலாம்?” எப்போதும் போல கேட்டவனின் கேள்வியை இம்முறை அவள் அசட்டை செய்திட, தண்டிக்கும் உரிமையைத் தன்னிதழ்களுக்கு வழங்கினான்.

உயிரின் அணுக்கள் மொத்தமும் ஒரே இடத்தில் உறைந்தது போல, உச்சி முதல் உள்ளங்கால் வரை மின்சாரம் பாய, அவனிடம் சிறைபட்டுக் கிடக்கும் அதரங்களின் விடுதலை நேரம் அறியாதவளாக தவித்துப் போனாள் நிதர்ஷனா.

அவனோ முத்தத்திற்கு முடிவுரை வழங்க விருப்பமற்று மீண்டும் மீண்டும் முன்னுரையில் இறங்கி இருக்க, ஓர் கட்டத்தில் சோர்வடைந்தவள், மூச்சிரைக்கத் தொடங்கினாள்.

அதன்பிறகே அவளது நிலையுணர்ந்து விலகியவன், “வேற ஏதாவது பொய் இருந்தா சொல்லேன்” எனக் கேலி மின்னக் கேட்க, அவளோ சிவந்த கண்களுடன் அவனது மார்பில் படபடவென அடித்தாள்.

“ஏன்யா இப்படி பண்ற… என்னை என்ன நினைச்ச நீ. நீ தொட்டதும் மயங்கிடுவேன்னா?” என மூக்கை உறிஞ்சியவள், வாயை அழுந்தத் துடைத்தபடி இருந்தாள்.

“போயா அரக்கா… இங்க இருந்து போ முதல்ல” எனத் தேம்பி தேம்பி அழத் தொடங்க,

“எங்க போறது?” என்றான் இறுக்கமாக.

அவளோ புரியாது நிமிர்ந்து பார்க்க, “நீ வேணும்னு வந்துருக்கேன். திரும்ப நீயில்லாம இந்த இடத்தை விட்டு என்னால நகர முடியாது. ஐ நீட் யூ அட் எனி காஸ்ட் நிது. ஐ ஜஸ்ட் லவ் யூ!” எனத் தன்னைப் புரிய வைக்க முயன்றான்.

“ஹாங்… நீ கிளம்பும்போது சொன்ன லவ் யூ தான?” நிதர்ஷனா முறைப்புடன் கேட்டதில்,

“அது வேற. இது வேற. அப்பவும் உன்னை கிஸ் பண்ணேன். ஆனா தப்பா இல்ல. அது உனக்கே தெரியும்” என கையைக் கட்டிக்கொண்டு கூறினான்.

“ஆனா இப்ப தப்பா தான குடுத்த?” மீண்டும் ஒரு முறை முணுமுணுத்த இதழ்களை துடைத்தாள்.

“தப்பா தான் குடுப்பேன். இன்னும் எவ்ளோ தப்பு வேணாலும் செய்வேன். யூ ஆர் மைன் ரைட்!” அலட்டலின்றி அவளை அலற விட,

“என்ன வெளயாடுறியா? தெனம் ஒரு பொண்ணுக்கு போன போட்டு ‘லவ் யூ லவ் யூ’ ன்னு கொஞ்சிட்டு, என்கிட்ட வந்தும் அதையே சொல்ற?” என உதட்டைப் பிதுக்கினாள்.

அவளை இடுப்பில் கையூன்றிப் பார்த்தவன், “உனக்கு என் ஆண்ட்டி பத்தி சொல்லிருக்கேன்ல” என யோசனையாகக் கேட்க, “ம்ம்” என்றாள் உர்ரென.

அதில் அவளைப் பார்த்தபடி தனது அலைபேசியின் மூலம் இத்தாலியில் இருக்கும் அத்தை ஏஞ்சலாவிற்கு அழைத்தான்.

போன் லவுட் ஸ்பீக்கரில் இருக்க, எடுத்ததும் அவர் பரபரப்பாகப் பேசினார்.

“மேரேஜ் வேணாம்னு இந்தியா போய்ட்டியாமே யாஷ்?” என இத்தாலியன் மொழியில் கேட்க, அவனும் அதே மொழியில் கதைத்ததில் நிதர்ஷனா பேந்த பேந்த விழித்தாள்.

‘நமக்கு இங்க்லேஷே புரியாது. இவன் என்ன வாய்க்கு வந்ததை பேசுறான்’ என்ற எண்ணத்தில் இருக்கும்போதே, “ஓகே ஆண்ட்டி லவ் யூ பை” என அழைப்பைத் துண்டிக்க அவரும் “லவ் யூ டூ யாஷ். டேக் கேர்” என்றார்.

‘இவன் என்ன ஊர்ல இருக்குற ஆண்ட்டிக்கு எல்லாம் லவ் யூ சொல்லிட்டு இருக்கான்’ என்ற ரீதியில் அவள் விழிக்க,

“எனக்கு ரொம்ப பிடிச்சவங்ககிட்ட நான் லவ் யூ சொல்றது வழக்கம். அந்த லிஸ்ட்ல என் பெஸ்டி ரித்திகாவும் என் ஆண்ட்டியும் இருந்தாங்க. அப்பறம் நீயும் என் ஹார்ட்க்கு க்ளோஸ் ஆன. ஆனா அவங்களை எல்லாம் விட பல மடங்கா! உன் ப்ரசன்ஸ் எனக்கு எப்பவும் வேணும்டி. சோ நான் வந்துட்டேன். என் வேலை, என் போஸ்டிங், என் ரிசர்ச் எல்லாமே விட்டுட்டு வந்துட்டேன். நீ சொல்லு இப்ப நான் என்ன செய்யட்டும்?” என்றான் அழுத்தத்துடன்.

நிதர்ஷனாவிற்கு மலைப்பாக இருந்தது.

சேர்மன் பதவிக்காக அவன் செய்த வேலைகள் அபாரம். தனக்காகப் போய் அவனது உழைப்புகளை ஒதுக்கித் தள்ளி விட்டு வந்திருக்கிறானென்றால், அவளால் அதனை ஏற்றுக்கொள்ளவே இயலவில்லை.

“ஏன் இப்படி செஞ்சீங்க?” கேட்கும்போதே காற்று தான் வந்தது அவளுக்கு.

“தெரியல. நீ வேணும்னா நான் என்ன செய்யணும்னு யோசிச்சேன். இதை தான் செஞ்சாகணும்னு தெரிஞ்சதும் செஞ்சுட்டேன். தட்ஸ் இட்!”

“நான் உங்களை லவ் பண்றேன்னு சொன்னேனா? நீங்களா முடிவு பண்ணிட்டு கிளம்பி வந்துட்டு… மொதோ கிளம்புங்க யாஷ். தயவு செஞ்சு போய் உங்க வேலையைப் பாருங்க. நீங்க நினைக்கிறது நடக்கவே நடக்காது…” என்றவளுக்கு இதயத்தில் பெரும் பூகம்பமே நிகழ்ந்தது.

“நல்லா யோசிச்சு சொல்லு. போய்டுவேன்!” எச்சரிக்கை விடுத்தான் அந்த விடாக்கொண்டன்.

“போ!”

“நான் போனா என் அம்மா மாதிரி உனக்கும் எந்த இழப்பும் கிடையாது அப்படி தான?” கண்களின் வழியே அமிலத்தை வழிய விட்டான்.

தன்னையே அவனிடம் இழந்து நிற்பவளாகிற்றே! இனி இழக்க அவளிடம் என்ன தான் இருக்கிறது?

அந்நேரம் பக்கத்து இடத்தை ஒட்டி வீடு கட்டும் பணி நடக்க, ஜன்னலைத் திறந்து வைத்ததால் மொத்த தூசியும் வீட்டினுள் வந்தது.

அதில் யாஷ் பிரஜிதன் மூச்சு விட சிரமப்பட, அவசரமாக ஜன்னலை அடைத்தாள்.

“உங்களுக்கு இங்க செட் ஆகாது யாஷ். ரத்தம் எதுவும் வந்துட போகுது மறுபடியும். கிளம்புங்க ப்ளீஸ்” எனக் கெஞ்ச,

அவனோ வம்படியாக ஜன்னலைத் திறந்து வைத்தான்.

“யோவ் யோவ்… மயங்கி விழுந்துத் தொலைஞ்சுறாத. உன்னைத் தூக்குற அளவு எனக்குத் தெம்பு இல்ல” என அவள் ஜன்னலை அடைக்க, அவன் மீண்டும் திறந்தான்.

“சொல்றேன்ல. தூசி ஒத்துக்காது யாஷ். சொல்றதை கேளு”

“அதை பத்தி உனக்கு என்ன கவலை?” அவள் புறம் குனிந்து கர்ஜித்தான்.

அதில் இரண்டடி பின்னால் நகன்றவள், “என்னமோ திடுதிப்புன்னு வந்துட்டு என்னென்னமோ உளறுனா நான் என்னனு எடுக்க. இன்னைக்கு வேணா உனக்கு இது சரியா தோணலாம். ஆனா நான் எப்பவும் நடு வீட்ல வச்ச நாய் தான். என் குணமும் பழக்கவழக்கமும் உனக்கு ஈடா மாறாது. இப்ப பிடிக்கிறது எல்லாம் ஒரு கட்டத்துல பிடிக்காம போய்டும் யாஷ். உன் அப்பா மாதிரி… அத்தை மாதிரி நம்மளும் பிரிஞ்சுட்டா… இப்ப இருக்குற இந்த உணர்வு வெறும் ஆரம்பக்கட்டம் தான். கொஞ்ச நாள்ல மறந்துடும். நீ குடுத்த அந்த அன்பை மறக்கவே எனக்கு எவ்ளோ வருஷம் ஆகும்னு தெரியல… இதுல… உன்கூட வாழ்ந்துட்டுப் பிரியற நெலம வந்தா செத்தே போய்டுவேன் யாஷ். என்னை விட்டுடு ப்ளீஸ்…” என்று தேம்பி தேம்பி அழுதவளுக்கு காதலை விட அது காயம் தந்து விடுமோ என்ற பயமே அதிகம் ஆக்கிரமித்தது.

கடந்த பல வருடமாக உயிராய் நேசித்த வேலையைத் தனக்காக தூக்கி எறிந்து விட்டு வந்த ஆடவனின் தீவிரம் இன்னுமாய் பயமுறுத்தியது.

அவனது காதலின் தீவிரத்திற்கான ஆரம்பமே இது தானென்று அறியாத பேதையவள், மடங்கி அமர்ந்து கதறி அழுதிட, அவள் முன்னே அவனும் முட்டியிட்டு அமர்ந்தான்.

“என் அப்பா மாதிரி உன்னை விட்டுடுவேன்னு பயப்படுற ரைட்?” என இறுகிய முகத்துடன் கேட்க, “இல்ல… இல்ல… ஆனா…” எனத் தயங்கினாள்.

“உன்ன வேணும்னு ஹர்ட் பண்ணல நிது. அன்னைக்கு சொன்ன வார்த்தை எல்லாம் ஏதோ கோபத்துல… பட் ஐ ஆம் சாரி. அப்போ நீ என் டியரஸ்ட் அவ்ளோ தான். ஆனா நீ இல்லாம என்னால இருக்க முடியாதுன்னு புரிஞ்ச நொடில இருந்து, நான் சாகுற வரை உன்னை விட மாட்டேன் நிது. இதை எப்படி புரிய வைக்கிறதுன்னு எனக்குப் புரியல. என் அப்பா என் அம்மாவை விட்ட மாதிரி, என் அம்மா என்னை விட்ட மாதிரி, நான்… நான் விட மாட்டேன் மின்னல்.

என் கலர், என் ஸ்லாங், என் லாங்குவேஜ், என் ஸ்டேட்டஸ் இதெல்லாம் உனக்கும் வித்தியாசமா இருக்குறதுனால உன்னால என்னை நம்ப முடியல ரைட்… என் அம்மாட்ட கேட்டல்ல, கண்மணி என் கலர்ல பிறந்துருந்தா இத்தாலிக்கு அனுப்பி இருப்பீங்களான்னு அதே கேள்வியை தான் உங்கிட்ட கேக்குறேன்… என்னை தவிர உன் நாட்டு பையன் வந்து இப்படி காதலை சொல்லிருந்தா உன் மனசு ஏத்துருக்கும்ல? ஆஃப்டர்ஆல், நீயும் அந்தக் குடும்பத்துல ஒருத்தி தான!” என்றதும் துடித்து விட்டாள்.

“உன்னை நான் என்னைக்கும் வித்தியாசமா பார்த்தது இல்ல யாஷ்?” அழுகுரலில் நிதர்ஷனா கூற, அவனோ பேசிக்கொண்டே சென்றான்.

“லவ் இல்லைன்னு சொல்லு. நான் அக்செப்ட் பண்ணிக்கிறேன். ஆனா லவ் பண்றேன் உன்னை நம்பலன்னு சொல்லாத. இட்ஸ் ஹர்ட் மீ அ லாட். நீ இமேஜின் பண்றதை விட வலிக்குது இந்த இடியாட்டிக் லவ்” முதன் முதலாய் அவன் குரல் உடைவதை பார்க்கிறாள்.

அந்த மினுக்கும் கண்களில் நீர்த்தேக்கம். தன்னால் நேர்ந்த கண்ணீர் என்றறிந்தபின் உள்ளம் உடைந்தே போனாள்.

“யாஷ் ப்ளீஸ்… கஷ்டமா இருக்கு!”

“இப்ப பிடிச்சது ஒரு கட்டத்துல பிடிக்காம போய்டும்… ரியலி? உன் ப்ரதரை உனக்கு பிடிக்காம போய்டுமா? தட் கதிரவன பிடிக்காம போகுமா? நீ அவங்க மேல வச்சுருக்குற லவ்வ தான் நான் உன் மேல வச்சுருக்கேன். தட் மீன்ஸ், என்னைக்கும் குறையாது. என்னைக்கும் அழியாது. அதே அன்பு எனக்கு வேணும்னு வந்தேன்ல… தட்ஸ் மை மிஸ்டேக். இந்தியா வந்தா என்னை விரட்டிட்டே இருப்பீங்கள்ல? அப்போ என் அம்மா, இப்போ நீ!”

“யாஷ் அப்டிலாம் இல்ல… எனக்குப் பயமா இருந்துச்சு அதான்…”

“என்னை லவ் பண்ணுவாளாம், கிளம்புனா அழுவாளாம், உருகி உருகி பாடுவாளாம் ஆனா கூட சேர்ந்து வாழ மாட்டாளாம். கேட்டா நான் வெளிநாட்டுக்காரனாம். யூஸ் பண்ணிட்டு அனுப்பிடுவேனாம்…”

“யாஷ் யாஷ்…” அவளோ கெஞ்சிய படி அவன் தோளைப் பிடிக்க, வெடுக்கென தட்டி விட்டவன், “ஸ்டே அவே ஃப்ரம் மீ” என மிரட்டினான் பல்லைக்கடித்து.

“உன் கூட இவ்ளோ நாள் இருந்ததுக்கு சேஃப்டி ப்ரொடெக்ஷன் பண்ணியான்னு கேட்டாரு என் பப்பா. உன் நாட்டுக்காரன் கூட இருந்திருந்தா கூட உன்னை கண்ட இடத்துல தொட்டுருப்பான்டி. நான் உன்னை அப்படியா ட்ரீட் பண்ணேன்? யூஸ் பண்றதுன்னா ஒரு செகண்ட் யூஸ் பண்ணிட்டு போயிட்டே இருந்துருப்பேன். உன்னை விட்டுப் போற அன்னைக்கு, உன் மேல ஒரு கண்ட்ரோல் பண்ண முடியாத பீலிங்ஸ்டி. அதை லவ்னு எக்ஸ்போஸ் பண்ண புரியாம, உன் கூட ரிலேஷன்ஷிப் வச்சுக்கணும்னு தோணுச்சு சீரியஸ்லி. பட், உன்னால அடாப்ட் ஆக முடியாதுன்னு உன்னோட பீலிங்க்ஸை மதிச்சு தான் சைலென்ட்டா கிளம்புனேன். என் லவ் உனக்கு சீரியஸா தெரியல அப்படி தான?” அவனோ நிறுத்தாமல் பேசிக்கொண்டே சென்றது அவளை பலவகையில் பாதிக்க, தான் அவனைக் காயப்படுத்தியது புரிந்து தவித்தாள்.

இறுதியில், அவனது பேச்சை நிறுத்த அவளே அவன் இதழ்களை அமைதிப்படுத்தும்படி ஆனது.

அதில் பேச்சு சத்தத்துடன் அவளது மூச்சு சத்தமும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

முத்தமிட்டு சட்டென விலகியவள், திருதிருவென விழித்தாள்.

அவனது கண்கள் அவளை அழுத்தமாகப் பார்த்ததில் ஐயோ என்றிருந்தது.

“அது அது… நீ பாட்டுக்கு பேசிட்டே போற. அதான்… நிறுத்த தெரியாம…” தட்டுத் தடுமாறினாள்.

பின், “நீ இல்லாம இங்க நான் ஒவ்வொரு செகண்டும் காலியானது எனக்கு தான் தெரியும். உன்னை வெளிநாட்டுக்காரனா நெஞ்சுல ஈரமே இல்லாதவனா பாத்துருந்தா உன்மேல எப்படி எனக்கு லவ் வந்துருக்கும். உன்னை விட்டதுக்காக உன் அம்மா குடும்பத்துட்ட பேசுனது எல்லாம் என் மனசுல இருந்து வந்தது. நீ போறப்ப எவ்ளோ வலிச்சுது தெரியுமா? நடக்கவே நடக்காத ஒன்னுன்னு தெரிஞ்சும், உன்மேல ஆசைப்பட்ட என்னை எந்த செருப்பால அடிக்கன்னு தெரியாம, வீட்டை விட்டு கூட வெளில போகாம வீட்டுக்குள்ளாறயே அடைஞ்சு கெடக்குறேன்” எனும்போதே பொலபொலவென கண்ணீர் கன்னத்தை நனைத்தது.

“நிது” அவள் அழுவது தாளாமல் யாஷ் அவளை நிறுத்த முற்பட,

அவளோ, “கதிறு ஓயாம என்னாச்சு என்னாச்சுன்னு கேக்குறப்ப கூட ஒன்னும் சொல்ல முடியாம, உன்கிட்டயும் நடிச்சுக்கிட்டு, வலிக்காத மாதிரி எனக்குள்ளவே அழுதுட்டு…” எனக் குரல் தேய கேவியவள்,

“மின்னல்” என கை பிடிக்க வந்தவனைத் தட்டி விட்டாள்.

“நீ திடீர்னு வந்து வாசல்ல நிக்க மாட்டியான்னுலாம் நெனச்சுருக்கேன் தெரியுமா. இப்ப நீ வந்ததும், எங்கயும் போவாத அரக்கான்னு உன்னைக் கட்டிக்கிட்டு கத்தி அழுவனும் போல தான் இருந்துச்சு. ஆனா ஆனா பயமா இருக்கே. லவ்னு சொல்ல வரதுக்கே நீ எல்லாத்தையும் விட்டுட்டு வந்துருக்க. என்னால உனக்கு என்ன குடுக்க முடியும்… நாள் ஆக ஆக பிரச்சினை மட்டும் தான் வரும் யாஷ். என்னால நீ எல்லாத்தையும் இழக்குறதை என்னால எப்படி ஏத்துக்க முடியும் சொல்லு…” என்றவள் நிற்காமல் பேசிக்கொண்டே செல்ல, அவளை இழுத்து தரையில் போட்டவன் அவள் மீது படர்ந்து நெற்றி முதல் முத்தத்தைத் தொடங்கி வைத்து இதழ்களில் இளைப்பாறினான்.

முதலில் அவனிடம் இருந்து விடுபட எண்ணி திமிறியவள், அவன் கொடுத்த மென்மையான இதழ் சூட்டின் இன்பத்தில் கிறங்கி, மெல்ல மெல்ல அடங்க, இதழ் சுவையின் இனிமையை ரசித்து ருசித்தான் யாஷ் பிரஜிதன்.

அன்பு இனிக்கும்
மேகா

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
27
+1
184
+1
7
+1
13

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    3 Comments

    1. Yash iwlo romantic nu thrlaye ka ❤️😍🙈 next episode Soon upload ka please so excited to know how she forgot evrything