Loading

அன்று:

 

சூரியன் தன் கதிர்களைப் பரப்பி உறங்க செல்லும் இனிய மாலைப்பொழுதில்.

அந்த மிகப்பெரிய கட்டிடம் கண்ணாடி சுவர்களில் இருந்து வெளி உலகத்தை பார்த்தபடி அவளின் விழிகள் ஆகாயச் சூரியனை கண்டு செம்மை பூசிய வானத்தைப் மிரட்சியாய் பார்த்துக் கொண்டிருந்தது.

“என்ன அகரநதி பதில் சொல்லாமல் இப்படி நின்றிருந்தால் என்ன அர்த்தம்” என அவள் முதுகிலிருந்து கேட்டது கௌதமின் குரல்.

“நீங்க சொல்றதெல்லாம் சரிதான் சார்,ஆனால் இதற்கு நான்தான் தகுதியானவள் என்று எப்படித் தேர்ந்தெடுத்தீர்கள்.” எனக் கேட்ட அகரநதிக்கு தெரியும் அவர் பேசுவதில் ஏதோ குழப்பம் சூழ்ந்திருப்பது.

“இந்த மூன்றாவது கண் ப்ராஜெக்ட் எத்தனையோ பேரிடம் இருந்து கைமாறி, இன்று உன் கையில் சேர்க்கும் கடமை எனக்கு இருக்கு அகரநதி” என சொன்ன கௌதமை திரும்பிப் பார்த்தவள் கையிலிருந்த காபியை பருகினாள்.

“எதற்காக இந்த மூன்றாவது கண் நிகழ்ச்சிக்காக என்னைத் தேர்ந்தெடுத்தீர்கள் என்பது எனக்குப் புரியலை,ஆனால் அதன் காரணத்தை நீங்கள் சொன்னால், நான் இதை பத்தி கொஞ்சம் யோசிக்கிறேன். ஆனால் சில கண்டிஷன்கள் இதற்கு நான் போட வேண்டியது வரும் ஏனென்றால் என்னுடைய குடும்பம் இதில் எந்தப் பாதிப்பும் அடையக்கூடாது என்பதில் கவனம் எனக்கு அதிகம் உள்ளது” எனப் பேசிய அகரநதியை கண்டு வியந்து போனார் கௌதம்.

“அகரநதி நீ தெரியாமல் பேசிட்டு இருக்க, ஏன்னா இந்த ப்ராஜெக்ட்டை இதுக்கு முன்னாடி பண்ணிட்டு இருந்தவங்க யாருன்னு யாருக்குமே தெரியாது ஏன்னா ஒவ்வொருத்தரும் அவங்களோட புனைப்பெயரில் தான் பண்ணிட்டு இருந்தாங்க சோ நீ இந்த விஷயத்தில கவலைப்பட எந்த அவசியமும் இல்லை உன்னோட எல்லாம் ரிப்போர்ட்களும் பாதுகாக்கப்படும் உன்னோட பெயர் வெளியே தெரியாமல், இப்போ சொல்லு உனக்குச் சம்மதமா இந்த ப்ராஜக்ட் செய்ய.?” எனக் கேட்ட கௌதமிடம் சரி என்பது போல் தலை அசைத்தாள்.

“ஓகே, கம்மிங் டூ தி பாயிண்ட், இந்த ப்ராஜெக்ட் மொத்தமும் அரசியல் வாதிகள் செய்யும் சின்னச் சின்ன ஊழலிருந்து, பெரிய குற்றங்கள் வரை அலசி ஆராய்ந்து உண்மை தண்மையோடு உள்ள தகவல்களைச் சேகரித்து மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும், இது ரகசியமாக இருக்கணும் கடுகளவு கூடக் கசிய கூடாது” எனக் கௌதம் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தாள் .

“தெட்ஸ் கூல் என்னை நம்பி இந்த ப்ராஜெக்ட்ட கொடுக்கிறது சந்தோசம்னா.? நான் தனியா இதுல வொர்க் பண்ணுறது ரொம்பச் சந்தோசம், பிகாஸ் நான் வொர்க் பண்ணும் போது ரெஸ்டிக்சன்ற பேர்ல எந்தத் தடையும் பண்ணக்கூடாது, நீ பொண்ணு இதெல்லாம் பண்ணக்கூடாதுன்னு ரெஸ்டிரிக்ட் பண்ணாமல் இருந்தால், நான் சிறப்பா தரமா செஞ்சு கொடுத்திருவேன்.”என சந்தோசம் கொண்டாள் அதி.

“உங்களை மாதிரி ஒரு ஆள் தான் இந்த மூன்றாவது கண் ப்ராஜெக்டுக்கு தேவை,ஓகே மிஸ் அகரநதி இந்த மூன்றாவது கண் ப்ராஜெக்ட்டோட சீக்ரெட் சீஃப் ரிப்போர்டர் நீங்க தான். உங்களுடைய வேலைகள் ரகசிய உளவாளி போல இருக்கணும், காட் இட்” புன்னகை முகம் காட்டிய கௌதமை பார்த்து இதழ் மலர்ந்து சிரித்தாள் அதி.

“நான் உங்க கிட்ட சில வீடியோஸை காட்டணும்” எனச் சொல்லியவள் அவள் கல்லூரி காலத்தில் எடுத்த குறும்படத்தைத் தன் லாப்டாப்பின் உதவியோடு இயக்கி காண்பித்தாள் அதி.

அதைப் பார்த்த நொடியில் அகரநதியை பாராட்டினார் கௌதம்.

“இதை ஏன் மிஸ் அகரநதி இதுவரைக்கும் நீங்க என்கிட்ட காட்டல.? உங்க கையில இருக்கிறது தற்போதைய அரசியலையே உலுக்கி பாக்குற ஆதாரம், முதலமைச்சருக்கும் இதுல சம்மந்தம் இருந்தா நடக்கப் போற தேர்தல்ல ஆட்சி மாற்றத்தை கொண்டு வர அளவுக்கு உங்க கையில இருக்க ஆதாரத்துக்குப் பவர் இருக்கு, பட் நீங்க எதுக்காக இவ்வளவு பொறுமையா இருக்கீங்கன்னு எனக்குப் புரியலை” என அகரநதியை பார்த்தார்.

“இந்த டாக்குமென்ட்ரி பிலிம் ரிஜெக்ட் ஆனா படைப்புன்னு சொன்னால் நீங்க நம்புவிங்களா கௌதம்?”

“வாட் இது ரிஜெக்ட்டானா பிலிமா.? இப்படி ஒரு ஆதாரம் அந்தச் செந்தமிழனுக்கு எதிரா கிடைக்காதான்னு ஒட்டு மொத்த மீடியா உலகமும் அலைஞ்சிட்டு இருக்கு, இதை இவ்வளவு நாளா வச்சிட்டு இருக்கீங்க.? ஏன் ரீலிஸ் பண்ணைலை.? ப்ரெஸோட பேரை வச்சு ஈசியா அவரோட முகத்திரையைக் கிழிச்சிருக்கலாம்”

“அவருக்குச் சிறப்பா சம்பவம் செய்யுற தருணத்துக்குத் தான் காத்திக்குட்டு இருந்தேன், பொறுமை என்பது பலவீனமானவர்களின் வலிமை, வலிமையற்றவரின் பலவீனம் பொறுமையின்மை,நான் பலவீனமானவள் தான் ஆனால் என்னுடைய வலிமை என்னுடைய பொறுமையில் தான் இருக்கிறது. நதிகளுக்குத் தெரியும் எங்குத் தன் பயணத்தை முடிவு செய்யப் போகிறோம் என்று, நான் இத்தனை நாள் காத்திருந்த தருணம் இதற்காகத் தான், நான் ஒரு சாதாரணப் பெண் என்பதால் தானே என் படைப்பை தகுதி இல்லைன்னு சொன்னாங்க, இந்த மூவி ஒரு நேஷனல் மீடியாவில் வெளியாகினால்? அவங்களால என்ன பண்ண முடியும்.? அந்த நேஷனல் மீடியா தான் நம்ம சேனல் கௌதம் சார்” எனப் பேசியவளின் விழிகளில் தெரிந்த நெருப்பு அவள் எதையோ சாதித்ததை போல் உணர்ந்தாள் அகரநதி.

சட்டத்தால் செய்ய முடியாததை ஊடகம் சிறப்பாகச் செய்துக்காட்டும் என்ற நம்பிக்கை அவளுக்கு அதிகம் உள்ளது. அடியெடுத்து வைத்தாலே அண்டங்கள் அதிரும், விழித்திறந்து பார்த்தாலே விண்மீன்கள் சிதறும்,உண்மைகள் உரைக்கத்தான் உதிரங்கள் துடிக்கும்,ஊடகங்கள் கர்ஜித்தால் பொய்மைகள் அடங்கும். சுவற்றில் அடித்த பந்தைப் போல் உரக்க உண்மையை உடைத்தெறிய தயாராகி விட்டாள் அகரநதி ஊடகத்தைத் தனக்குச் சாதகமாய்ப் பயன்படுத்தி, அவளின் இத்தனை நாள் காத்திருப்பு வீண் போகவில்லை.

“மாணவர்களே நாளைய சமுதாயம், அவர்களைப் போதைக்கு அடிமையாக்கும் செந்தமிழன், அகிலனை போன்றோர் அரசியல் போர்வையைப் போர்த்திக்கொண்டு தப்பி வருகின்றனர், இனிமேலும் தப்ப இயலாது மூன்றாவது கண் முன். இப்படி ஒரு இன்ட்ரோ கொடுத்து இதை நம்ம சேனல்ல போடணும் சார்” இமைகள் படபடக்க பேசினாள்.

“வெல் செட் அகரநதி, இதைக் கண்டிப்பா டெலிகாஸ்ட் பண்ணலாம், பட் மார்ச் எட்டு மகளிர் தினத்தன்று, அந்தச் செந்தமிழனோட ஈசிஆர் பங்களால எதோ சக்ஸஸ் பார்ட்டி நடக்கிறதா தகவல் வந்திருக்கு, அன்னைக்கி நீங்க அங்க கெஸ்டா போகணும், அகரநதியா போக்கூடாது” எனச் சொல்ல

“என்ன சொல்றீங்க சார் அகரநதியா போகக் கூடாதுன்னா வேற எப்படிச் சார் போகணும்.?”

“நீங்க கொடுத்திருக்க வீடியோ வச்சு பார்க்கும் போது, செந்தமிழனோட மகன் அகிலனுக்கு உங்க ஃபேஸ் ரொம்பவே பரீட்சையமானது, சோ நீங்க அகரநதியா அங்க போனால் பிரச்சனை தான்” எனச் சொல்லி நிமிர்ந்தார் கௌதம்.

“யூ மீன்..? மாறுவேசத்துல போகச் சொல்றீங்க கரெக்டா?”

“யெஸ், நீங்க ரொம்பவே ஸ்மார்ட் அகரநதி” எனப் புன்னகைத்தார் கௌதம்.

“ஐ யெம் ரெடி சார்” என வீரமாய்ச் சொல்லி அங்கிருந்து அகன்றிருந்தாள்.

************************

அவள் தன்னுடைய கணினி முன் அமர்ந்து எதையோ தட்டச்சு செய்துக்கொண்டிருந்தாள். எடிட்டிங் ரூமில் இருந்து சோகமாய் வெளிபட்டான் கார்த்திக்.

“டேய் கார்த்தி, என்னடா ஆச்சு.? முகம் ஏன் ஒருமாதிரி இருக்கு.?”

“ஓன்னுமில்லை அதி, ரெஸ்ட் இல்லாமல் வொர்க் பண்ணிட்டு இருக்கேனா அதனால தான்”

“இல்லைடா அந்தப் பங்களாக்கு போயிட்டு வந்ததுல இருந்து, உன் முகமும் சரியில்லை பேச்சும் சரியில்லை, என்னை நீ ரொம்ப அவாயிட் பண்ணுற” என அவள் சொல்லிக்கொண்டிருந்த போதே, அவன் மனம் எதையோ யோசித்து வருந்திக்கொண்டிருந்தது.

அனைத்திற்கும் காரணம் அன்று அவன் கணினி திரையில் கண்ட காட்சி தான். அப்படி ஒரு நிலையில் தன் காதலியை பார்ப்பான் என்று அவன் நினைக்கவில்லை. மலரின் வீடியோ பதிவுகளைக் கணினியில் ஏற்றி வைக்கவே அகிலன் அங்கு வந்திருக்கிறான்.

மலரை அப்படி ஒரு நிலையில் கண்டவுடன் கார்த்திக்கின் மனம் சுக்கு நூறாய் உடைந்து போனது. இத்தனை நாள் வெளிநாட்டு வேலையில் இருக்கிறாள் என நினைத்துக் கொண்டிருந்தவனுக்கு, இது பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது, அவர்கள் வீட்டில் இது எல்லாருக்கும் தெரியுமா, மாத சம்பளம் சரியாக அனுப்புகிறாளா.? என்ற கேள்வியெல்லாம் மனதில் எழும்பி குழப்பம் மூட்டியது.

“டேய் கார்த்தி என்ன டா நான் பேசிட்டே இருக்கேன் நீ என்னத்தடா யோசிச்சுகிட்டு இருக்க.?” அகரநதியின் குரல் அவனைத் தன்னிலை பெற செய்தது.

“ஒன்னுமில்லை அதி, வொர்க் பரெஷர்” எனச் சொல்லி அகன்றிருந்தான்.

எப்போதும் குதுகலமாய்ப் பேசும் நண்பன், அவள் சாப்பிட்டாளா.? என்று ஆயிரம் முறை கேட்டு உறுதி செய்யும் ஆருயிர் நண்பனின் முகவாட்டம், அகரநதியை கலங்க செய்தது.

அதே சமயம் அலுவலகத்தின் வெளியே இருந்த டீகடையில் தேநீர் சொல்லிவிட்டு நின்றிருந்தவனின் கைகளில் தொலைப்பேசியில் மலர்விழியின் தாயின் தொலைப்பேசி எண்ணை தேடிக்கொண்டிருந்தது. சரியான எண்களைக் கண்டுபிடித்தவன் அழைப்பு விடுத்திருந்தான்.

“ஹலோ ஆண்ட்டி நான் கார்த்திக் பேசுறேன்”

“சொல்லுப்பா கார்த்தி.? என்ன விசயம்.?”

“மலர் உங்களுக்குக் கால் செய்தாளா ஆண்ட்டி.?” என அவன் சொன்னவுடன் மறுமுனையில் பேசிக்கொண்டிருந்த மலரின் தாய் வள்ளிக்கு குரல் தழுதழுத்தது.

“உனக்கு விசயம் தெரியாதாப்பா.?” என அமைதியாய் தொடங்கியவரின் குரல் அழுகையின் விசும்பலில் முடிந்தது.

“ஆண்ட்டி என்ன ஆச்சு மலருக்கு என்ன ஆச்சு.?” என அவன் கத்த தொடங்கியிருந்தான்.

“வெளிநாட்டுல வேலை மாசம் எழுபதாயிரம் சம்பளம், குடும்பத்துல இருக்கப் பிரச்சனைய எல்லாத்தையும் சரி பண்ணிரலாம்மான்னு சொல்லிட்டுப் படிப்பெல்லாம் பாதிலையே விட்டுட்டு போனவளோட முகத்தைக் கூடப் பார்க்க விடாமல் பண்ணிட்டாங்க” என்ற வள்ளியின் அழுகை கேட்டு தன் காதலிக்கு என்ன ஆனதோ.? என்ற அச்சம் அதிகமானது.

“என்ன ஆண்ட்டி சொல்றீங்க.? மலர் இப்போ எங்கே இருக்கா.? சொல்லுங்க எங்கே இருந்தாலும் நான் அவளைப் பார்த்தே ஆகணும்” என அவன் பேச,

“தம்பி கார்த்தி மலர் நம்ம எல்லாரையும் விட்டுட்டு போயிட்டாப்பா, அவளோட முகத்தைக் கூடக் கடைசி நேரத்துல பார்க்க கொடுத்து வைக்காதா தாயாகிட்டேனே” என அலறினார் வள்ளி.

“ஆண்ட்டி அப்படிலாம் எதுவும் இருக்காது, நீங்க நல்லா விசாரிச்சிங்களா.?”

“தெரியலையே எதோ தீ பில்டிங் புல்லா பத்திகிச்சு உங்க பொண்ணோட டெட் பாடி எதுன்னு தெரியலை இந்தியாக்கு அனுப்ப முடியாதுன்னு சொல்லிட்டானுகளே” எனக் கலங்கி பேசிய தாயின் வலியை உணர்ந்த படி

அவனுக்குள் பெரும் வலி ஏற்பட்டது, காதல் எனும் பெரும்வலியில் துடித்தவன் அனைத்தையும் கேட்டபின். அழைப்பை துண்டித்திருந்தான், தேநீர் கடையிலிருந்த மேசையில் அமர்ந்தபடி பொதுவெளி என்றும் பாராது கதறி அழுதுக்கொண்டிருந்தான்.

இறந்து போனாயோ..!

காற்றில் கலைந்து

போனாயோ.!

என்னையும் அழைத்துச்

செல்லடி..!

பிரிவை விடக்

கொடுமை வேறொன்றும்

இல்லை..!

உன் இறப்பை எப்படி

தாங்குவேன் என்று நினைத்தாய்..?

என் அன்பு காதலியே..!

ஆகாயம் பார்த்து உன்னை நினைக்கையில்

நட்சத்திரமாய்க் கண் சிமிட்டி சிரிக்கிறாயோ..?

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 7

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
4
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment

  1. மூன்றாவது கண் project ku தேடி வந்து குடுக்கும் போதே சுதாரிச்சிருக்க வேண்டாமா.

    வேலையின் மீதுள்ள ஆர்வத்தினில் தன்னிடம் இருந்த ஆதாரத்தையும் அளித்து விட்டாள்.

    அவளை கண்காணிக்கவும் வசமாய் எதிலோ சிக்கவைக்கவும் நடக்கும் நாடகம் போல் உள்ளது.

    மலருக்கு என்ன ஆனதோ?