‘ஆலம்பனா’ என்று அவன் உருவாக்கிய செயற்கை நுண்ணறிவைப் பற்றி நிதர்ஷனா கூற, அவனோ அவளையே சுட்டிக் காட்டினான் அவனது ஆலம்பனாவாக.
யாஷ் பிரஜிதனின் கார் வெகு நேரமாக, வீட்டு வாசலில் நிற்பதைக் கண்டு மாடியில் இருந்து இறங்கி வந்தார் ஆதிசக்தி.
அந்நேரம் கண்மணி காரில் இருந்து இறங்க, ஆதிசக்தியைக் கண்டு விழிகளைத் தாழ்த்திக் கொண்டாள்.
மகளை ஒரு பார்வை பார்த்து விட்டு அவளுடனே வந்த சிந்தாமணியிடம் “என்ன ஆச்சு சிந்தா?” எனக் கேட்க,
அவள் நடந்ததைக் கூறியதும் ஆதிசக்தியின் கண்கள் கலங்கி மகனைப் பார்த்தது.
கணித்து இருக்கிறான் என்ற வியப்பு அவரிடம். அவனோ அவரைத் திரும்பியும் பாராது காரை பக்கத்து வீட்டில் நிறுத்தி விட்டு விறுவிறுவென உள்ளே சென்று விட்டான்.
நடந்த கலவரம் அறிந்ததும் இளவேந்தனுக்கு முருகனின் மீது கோபம் பீறிட்டு எழுந்தது. நிதர்ஷனாவைத் தாக்க வந்த மர்ம மனிதனையே ஆளை விட்டுத் தூக்க செய்திருந்த யாஷ், அவனுக்கு என்ன ஆனது என்று கூட சொல்லவில்லை. இப்போதோ ஊருக்குள் இருக்கும் ஆளைத் தூக்கினால், பிரச்சினை அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது.
அதிலும் முருகனின் தந்தை ஞானவேல் பஞ்சாயத்துத் தலைவர். சரியான தலைக்கணம் பிடித்தவர். மகனைத் தூக்கியது தெரிந்தால் யாஷிற்கும் ரித்திகாவிற்கும் பிரச்சினை வருமென்று ஒரு எச்சரிக்கை உணர்வு தாக்க, அதை விட முருகனை என்ன செய்து வைத்தானோ என்ற பதற்றமும் எழுந்தது.
நேராக யாஷைத் தேடிச் சென்றார்.
அங்கோ ஆலம்பனாவிடம் சுடுநீர் வைக்க உத்தரவிட்டபடி குளியலறைக்குள் புகுந்து கொண்ட யாஷ் பிரஜிதன், ஷவரின் அடியில் நின்றான்.
தீயாய் எரிந்த மனதின் வெப்பம் அடங்க மறுத்தது. கண்மணி தனது சொந்தத் தங்கையென உறுதியான பிறகு இன்னும் கோபம் பெருகத் தான் செய்தது அவனுக்கு.
குளித்து வந்தவன் ஏ. ஐ கண்ணாடி முன் நின்று,” ஐ ஹேவ் அ மீட்டிங் சூன். பிக் அ அவுட்ஃபிட் ஆலம்பனா” என உத்தரவிட, ஏ. ஐ செயல்படும் முன்பு அவனது ஆலம்பனா செயல்பட்டாள்.
“இந்த ரெட் ப்ளேசர் செம்மயா இருக்கும் யாஷ்” என எடுத்து நீட்ட, செயற்கை நுண்ணறிவோ அவனது கோப மனநிலையை எடுத்துக்காட்டும் பொருட்டு இளநீல நிறத்தை தேர்ந்தெடுத்தது.
“எப்ப பாரு இந்த ஆலம்பனா ப்ளூ கலரே சூஸ் பண்ணுதே ஏன்?” நிதர்ஷனா இடுப்பில் கை வைத்துக் கேட்க,
“என் மைண்ட்செட் பொறுத்து கலர் செலக்ட் பண்ணும். மோஸ்ட் ஆஃப் தி டைம், நான் கோபமா தான் இருப்பேன்…” என்றவன் அவள் கொடுத்த உடையைத் தவிர்த்து விட்டு நீல நிறத்தை எடுக்க, “இதெல்லாம் அதுக்கு எப்படி தெரியுது? சரியான அரைவேக்காடு ஏ. ஐ” எனக் கடிந்து கொண்டாள்.
“எனக்கு ஒரு டவுட்!” என ஆரம்பித்தாள் நிதர்ஷனா.
உடையை அணிந்து கொண்டிருந்தவன் அவள் முன்னே பேண்டையும் போட, சட்டென திரும்பிக்கொண்டவள், “யோவ் எத்தனை வாட்டி சொல்றது தனியா போய் ட்ரெஸ்ஸு மாத்துன்னு…” என்றாள் கடுப்பாக.
“நான் ட்ரெஸ் சேஞ்ச் பண்றது தெரிஞ்சும் நீ ஏன் ரூம்க்குள்ளவே இருக்க? தட்ஸ் நாட் மை மிஸ்டேக்” என்றவனை மனதினுள் திட்டித் தீர்த்தாள்.
“ஓகே வாட் டவுட்?” எனக் கேட்க, அவளோ திரும்பாமல் “என்னத்த கேட்க வந்தேன்…” என யோசித்து விட்டு,
நினைவு வந்தவளாக “ஹான்” என மீண்டும் அவன் புறம் திரும்பிட, அவன் அப்போது தான் அக்கறையாக பேண்ட் ஜிப்பை மேலே ஏற்றிக்கொண்டிருந்தான்.
“ஐயோ” என மீண்டும் முதுகு காட்டித் திரும்பியவள், “கருமம் கருமம்…” எனத் தலையில் அடித்தாள்.
அவனே அதனை ஒரு பொருட்டாகவே எண்ணவில்லை. ஒன் பீஸோடு கடற்கரையில் சன் பாத் எடுப்பவனின் கண்களில் வெறும் டூ பீஸோடு குளிக்கும் அழகிகளின் வதனம் நன்றாகவே பதியும். அதனால் அவள் முன் ஒன் பீஸோடு இருந்தாலும் அவனுக்கு வெட்கமேதும் இருக்கப்போவதில்லை.
அதனாலேயே அவள் ஒவ்வொரு முறை அவன் சட்டையைக் கழற்றும்போதும் நிதர்ஷனா முகம் சுளித்துத் திரும்பிக் கொள்வது விசித்திரமாக இருக்கும்.
“சென்னைல பீச் பக்கம் தான உன் ஹோம்?” அவன் கேட்டதும்
“ஆமா அதுக்கென்ன? ட்ரெஸ்ஸ போட்டு முடிச்சியா?” எனக் கேள்வி கேட்டுக்கொண்டாள்.
“ம்ம்” என்றதும் அவன் புறம் திரும்பியவளிடம், “அங்க பாய்ஸ் அண்ட் கேர்ள்ஸ் ஸ்விம் சூட்ல குளிச்சது இல்ல?” என வினவிட,
“க்கும்… இது பாரீன் பாரு. அம்புட்டையும் அவுத்துப் போட்டுட்டு பப்பரப்பான்னு சன் பாத் எடுக்குறதுக்கு. இது தமிழ்நாடு. சென்னை… இங்க சுட்டெரிக்கிற வெயில்ல சன் பாத் எடுத்தா, கருகிப் போய்டுவ. உன்னால நான் கேட்க வந்ததையே மறந்துட்டேன்” என தலையை சொரிந்தாள்.
“இவளோட…” என எரிச்சலுற்றவன், “கேட்டு தொலை” என்றான்.
“இந்த ஆலம்பனா நம்ம பேசுறதுக்கு எல்லாம் பதில் சொல்லுதே. அது எப்படி சொல்லுது? இந்த மாதிரி கேள்வி கேட்டா இப்படி பதில் சொல்லணும்னு நீங்க ஆல்ரெடி கோடிங் பண்ணிருப்பீங்களா?” மூக்கைச் சுருக்கி வினவ,
“நான் ஏ. ஐ பில்ட் பண்ணும்போது டைரக்ட் கோடிங் மட்டுமில்லை, எமோஷனல் பிஹேவியருக்கும் சிம்பிள் வாய்ஸ் கமாண்ட் ட்ரிக்கர் பண்ணிருக்கேன். சோ போன்ல செட்டிங்ஸ் மாத்துற மாதிரி ஈஸியா கஸ்டம் ரூல் செட் பண்ணிக்க முடியும். இப்ப எக்ஸ்சாம்பில்க்கு இந்த கண்ணாடி முன்னாடி நிக்கும் போது, வெளில கிளைமேட் ஹாட்டா இருந்தா அதுக்கேத்த மாதிரி ட்ரெஸிங் சூஸ் பண்ணனும்னு நான் வாய்ஸ் கமாண்ட் பண்ணிருப்பேன். கோபமா இருந்தா எப்படி பிஹேவ் பண்ணனும், சில்லா இருந்தா எப்படி பேசணும்னு எல்லாமே ட்ரிக்கர் பண்ணிருப்பேன். பட் இதெல்லாம் கமாண்ட் தான். அது பேசுற ஒவ்வொரு வார்த்தையும் கோடிங் பண்ணனும்னு அர்த்தமில்லை.
பல மொழிகள்ல இருக்குற புக்ஸ், வெப்சைட் வச்சு நான் ட்ரெயினிங் குடுத்து இருப்பேன். அதுல இருந்தே ஏகப்பட்ட வொகேபுலரியை இது கத்துக்கும். இந்த ட்ரெயினிங் பண்ணும்போதே, நம்ம கேக்குறதுக்கான பதில் என்னவா இருக்க முடியும்னு ஒரு பாட்டர்ன் அடிப்படையில கெஸ் பண்ணி தான் நமக்கு சொல்லும். எல்லாமே ஹண்ட்ரட் பர்சன்ட் கரெக்ட்டா இருக்கும்னு சொல்ல முடியாது. அதே நேரம், எதுவுமே கரெக்ட்டா இருக்காதுன்னு ஒதுக்க முடியாது…” என்றான் அவளுக்கு புரியும் வகையில்.
“என்னமோ சொல்றிங்க…” எனத் தலையை நன்றாக தேய்த்தவள், “நான் பேசிக் கம்பியூட்டர் சைன்ஸ் தான் படிச்சிருக்கேன். இப்ப நான் இந்த ஆலம்பனாகிட்ட கமாண்ட் ட்ரிக்கர் பண்ண முடியுமா?” என்றாள் யோசனையாக.
“இப்ப உனக்கு என்ன தெரியணும். அதை டைரக்டா சொல்லு” அவன் பேண்ட் பாக்கெட்டினுள் கையை நுழைத்துக் கேட்டான்.
“இதோட கமாண்ட்ல சின்ன சின்னதா சேன்ஜ் பண்ணனும்னா நான் என்ன படிக்கணும்…” என ஆர்வமாக ஆரம்பித்து பின் அவனது அழுத்தப்பார்வையில் மெல்ல சத்தத்தைக் குறைத்தாள்.
“அது சும்மா தெரிஞ்சுக்க தான்…” அவளது நெளிவில் புன்னகையை அடக்கிக்கொண்டவன், “வா” எனப் பணித்து விட்டு முன்னே நடந்தான்.
யாஷ் சென்றது அவனது அலுவல் அறைக்கு தான்.
“இந்த ரூமுக்குள்ள வரட்டா?” அவளிடம் சிறு மின்னல்.
“ம்ம்!” என்றவன் அவளைக் கண்ணாலேயே உள்ளே அழைக்க, அறைக்குள் சென்றவள் பல கணினிகள், வீட்டினுள் இருக்கும் சிசிடிவி கேமராக்களின் லைவ் பதிவுகள், வயர்களின் ஆக்கிரமிப்புகளுக்கு மத்தியில் சிறு சிறு ரோபோக்களும் மின்சாரத்துடன் இணைக்கப்பட்டிருந்தது.
“ஆத்தாடி ஆத்தா… இது என்ன ரூமா இல்ல எந்திரன் பட லேபா” எனப் பிரமித்துப் போனாள்.
“கிட்டத்தட்ட…” என்றவன் ஒரு கணினியின் முன் அமர, அவர்கள் வீட்டில் இருக்கும் சிசிடிவி ஃபுட் ஏஜ்களை ஒவ்வொரு அறைக்கும் ஒவ்வொரு கேமராக்களாக தனி தனி கணினியில் காட்சியளித்தது.
அதில் திகைத்தவள், “யா… யாஷ்! நம்ம இருக்குற ரூம்ல கேமரா இருக்கா?” என வெளிறினாள்.
“ம்ம் எஸ்” அவன் இயல்பாக கூற, அவளுக்கு கோபம் வந்து விட்டது.
“ஒரு பொண்ணு இருக்குற ரூம்ல கேமரா வச்சிருக்கீங்க. அசிங்கமா இல்ல” எனக் கத்தி விட, நாற்காலியில் இருந்து எழுந்தவன், “ரூம்ல தான கேமரா வச்சேன். பாத்ரூம்லையும் உன் ட்ரெஸிங் ரூம்லையும் வைக்கலையே?” என்றான் புருவம் இடுங்க.
“ஏன் அங்கேயும் வச்சுருக்க வேண்டியது தான?” எனும்போதே அழுகையும் தானாய் வந்தது.
“நீங்க இல்லாத நேரத்துல நான் வெளில வந்து ட்ரெஸ் பண்ணிருந்தா?” கேவலுடன் வினவிட,
“டெலிட் பண்ணிருப்பேன்” என அசட்டையாகப் பதில் அளித்தான்.
“உங்களை நம்பி இன்னும் இங்க இருக்கேன்ல, என்னை சொல்லணும்… உன் ஆம்பள புத்தியை காட்டுறீல…” ஏமாற்றமாய் நிதர்ஷனா குமைந்ததில்,
“என் ஆம்பள புத்தியை காட்ட இங்க மட்டும் கேமரா வைக்கணும்னு அவசியம் இல்ல நிதா. மைண்ட் யுவர் வர்ட்ஸ்!” தன்னை நம்பாமல் அவள் இஷ்டத்திற்கு பேசியதில் அவனுக்கும் சினம் பீறிட்டது.
“அங்க மட்டும் வச்சுருக்க மாட்டீங்கன்னு என்ன நிச்சயம்” அவள் சொன்ன நிமிடத்தில் பளாரென அறைந்திருந்தான்.
“எனக்குத் தேவைப்பட்டா அங்கேயும் வைப்பேன். அவுட்… கெட் அவுட்!” என்று கர்ஜித்தவனின் அதீத சினத்தில் நெஞ்சோரம் பயம் துளிர்விட, அவன் அடித்ததை விடவும் அதிகமாய் வலித்தது அவனது வார்த்தைகள்.
தேம்பியபடியே கன்னத்தில் கை வைத்தபடி அலுவல் அறையை விட்டு வெளியில் வந்தவளின் கண்ணில் இளவேந்தன் பட்டுவிட்டார்.
கதவை லாக் செய்யாது விட்டிருந்ததில், இளவேந்தன் கதவைத் தட்டிப்பார்த்து விட்டு உள்ளே நுழைந்திருந்தார்.
மாடியில் சத்தம் கேட்டு அங்கு விரைந்தவர் நல்லவேளையாக அவர்கள் பேசியதைக் கேட்டிருக்கவில்லை. ஆனால் யாஷ் அவளை அடித்திருந்தது மட்டும் அவனது கை ரேகை அவளது கன்னத்தில் பதிந்திருந்ததில் புரிந்தது.
“அவன் அடிச்சானா?” இளவேந்தன் கண்ணைச் சுருக்கிக் கேட்க, அப்போதும் அவனை விட்டுக்கொடுக்க மனதின்றி “இல்ல மாமா” என்றாள்.
இளவேந்தனின் குரல் கேட்டு பொங்கி எழுந்த சினத்தை அடக்கியபடி வெளியில் வந்தவன், அவள் உண்மையை மறைப்பதை கண்டு சின்னதொரு குற்ற உணர்விற்கு ஆளானான்.
“உண்மையை சொல்லுமா. கன்னம் சிவந்துருக்கே?” இளா யாஷை முறைத்தபடி கேட்க,
“அது… தெரியாம கீழ விழுந்துட்டேன். வேற ஒன்னும் இல்ல” என்றவள் தன்னருகே வந்து நின்ற யாஷ் பிரஜிதனை நிமிர்ந்து பாராது அறைக்குச் சென்று விட்டதில், யாஷ் அவளையே பார்த்திருந்தான்.
“இது என்ன பழக்கம் யாஷ். கட்டுன பொண்டாட்டியை கை நீட்டி அடிக்கிறது? உன் அப்பா கத்துக்குடுத்தானா?” கோபத்தில் வார்த்தையை விட்டிருந்தார்.
“வேற அவர்கிட்ட இருந்து என்ன கத்துக்க முடியும்னு நினைக்கிறீங்க மிஸ்டர் இளவேந்தன் ஆதிசக்தி?” கையைக்கட்டிக்கொண்டு தெனாவெட்டாக கேட்டதில் வாயடைத்துப் போனார்.
“வந்த விஷயம்?” கன்றிப்போன அவர் முகத்தை கண்டுகொள்ளாது அவன் வினவ,
எச்சிலுடன் வேதனையை விழுங்கியவர், “முருகனை பத்திரமா வீட்ல விட்டுடு. இல்லனா அந்த ஞானவேல் சும்மா இருக்க மாட்டான்… வந்த இடத்துல பிரச்சினை வேணாம்” என்றார்.
“நாளைக்கு வந்துடுவான்…” அவன் கத்தரித்தாற் போல பேசியதில் அதற்குமேல் அங்கு நிற்க பிரியமின்றி வீட்டிற்குச் சென்றார்.
மீண்டும் தனது அலுவல் அறைக்குள் புகுந்து கொண்டவன், வேலையை விடுத்து தனது அறையின் சிசிடிவி பதிவைக் காண, அங்கோ நிதர்ஷனா கட்டிலில் அமர்ந்து தேம்பி தேம்பி அழுதபடி இருந்தாள்.
அவனால் ஏற்பட்ட கண்ணீரில் அவனுக்கும் மனம் கனத்தது.
நிதர்ஷனா சட்டென நினைவு வந்தவளாக அறையை சுற்றி நோட்டம் விட்டு விட்டு கேமராவைக் கண்டறிந்து முறைத்து விட்டு, பால்கனியில் சென்று அமர்ந்து எரிந்த கன்னத்தை தேய்த்தபடி மீண்டும் அழுதாள்.
“டோன்ட் க்ரைடி!” இங்கிருந்தே யாஷ் பிரஜிதனின் இதழ்கள் அசைய, அது அவளை அசரீரியாக சென்றடைந்ததோ என்னவோ சுற்றி முற்றி மீண்டும் தேடியவள் பால்கனியில் கேமரா இருப்பதைக் கண்டு அதனை வெப்பமூச்சுடன் சுட்டெரித்து விட்டு, உடை மாற்றும் அறைக்குள் சென்று அடைந்து கொண்டாள்.
அன்று ஏற்கனவே நடக்கவிருந்த மீட்டிங்கை நடத்தவும் அவனுக்கு பிடித்தமில்லை. எதிலும் கவனமில்லை. அத்தனை மீட்டிங்கையும் முதன்முறை கேன்சல் செய்து விடுமாறு கூறிய தனது முதலாளியின் கூற்று புரியாது ஆஹில்யன் ஆச்சரியப்பட்டுப் போனான்.
இரவு உணவு வேளை தாண்டியும் அவள் அவ்வறையை விட்டு வெளியில் வராததால், “பிடிவாதம் பிடிச்சவ…” என்று முணுமுணுத்துக் கொண்டவனுக்கு, அவளிடம் இறங்கிப் போக ஈகோ விடவில்லை.
அதற்காக அப்படியே விடவும் மனமில்லை.
“ஃப்பூ” செய்வதறியாது மனப்போராட்டத்தில் சோர்ந்து போனவன், பின் இரவு உணவு ஆர்டர் செய்து விட்டு அதற்காக காத்திருந்தான்.
உணவு வந்தபிறகே அதனை எடுத்துக்கொண்டு அவள் இருக்கும் அறைக்குச் சென்றான்.
உடை மாற்றும் அறையே அவளுடைய வீடு அளவு பெரியதாகத் தான் இருக்கும். உள்ளே இருந்த ஒரு பக்க சுவர் முழுக்க வார்டரோபில் அவளுக்குத் தேவையான உடைகளே ஆக்கிரமித்து இருந்தது. சற்றே உள்ளடங்கலாக செவ்வக வடிவில் இருந்த பகுதில் ஒரு பக்கம் குளியலறைக்கு செல்லும் கதவும் மறுபக்கம் உடைமாற்றும் அறைக்கான கதவும் இருக்கும்.
யாஷ் குளியலறைக்குச் சென்றாலும் ஒரு போதும் அவளது உடைமாற்றும் அறைக்குச் சென்றதில்லை. அவனது உடைகளை வெளி அறையில் இருக்கும் வார்ட்ரோபிலேயே செட் செய்திருப்பான். அதனாலேயே அவன் அறை நடுவில் உடை மாற்றி அவளை முகம் திருப்பச் செய்வான். அவள் எத்தனையோ முறை உடை மாற்றும் அறைக்குச் செல்ல சொல்லியும் அவன் கேட்டதில்லை.
அவளுக்காக ஒதுக்கிய பகுதிக்கு செல்ல அவனுக்கு விருப்பமும் இருந்ததில்லை. அதனை அவன் நாகரீகமாகவும் கருதவில்லை.
அறையில் இருந்த சிசிடிவி கேமராவில் கூட, அவள் குளியல் அறையில் இருந்து அரைகுறை ஆடையுடன் வெளியில் வந்து உடைமாற்றும் அறைக்கு வந்தால் பதிவாகாது. அந்த மாதிரியாக தான் அந்த அறை அமைப்பும் இருந்தது.
அப்படி இருந்தும், அவள் தன்னை அவமதித்தது அவனுக்கு சீற்றத்தைத் தந்தது.
சினம் தணியாமல் தான், உடை மாற்றும் அறைக்கு உணவுடன் சென்றிருந்தான்.
ஆனால், மெல்லிய வெளிச்சத்தில் கண் சிவக்க தலையை கால் முஷ்டியை பதித்து குறுகி அமர்ந்திருந்தவளின் சோகமான வதனம் அவனை முற்றிலும் நிலைகுலைய வைத்தது.
அவளது சிறுதுளி கண்ணீருக்கு முன் அவனது ஈகோ அடிபட்டுத்தான் போனது.
“நிதா…” யாஷ் அழைத்த பின்னும் அவள் நிமிரவில்லை.
அவள் முன் முட்டியிட்டு அமர்ந்தவன், “உனக்குப் பிடிச்ச நூடில்ஸ்டி…” எனத் தட்டை நீட்ட, “ஒன்னும் வேணாம்” எனக் கமறிய குரலுடன் மறுபுறம் கழுத்தைத் திருப்பி முட்டி மீது சாய்ந்து கொண்டாள்.
“சிக்கன் நூடில்ஸ்! யூ லைக் இட் ரைட்…” அவளுக்குப் பிடித்ததாக ஆர்டர் செய்திருந்தான். அதுவும் அவன் முற்றிலும் மறுத்த அசைவ உணவு.
“இதெல்லாம் குடுத்து இன்னும் ரெண்டு கேமரா வைக்கப்போறியா? போயா…” மூக்கை உறிஞ்சியவளுக்கு மட்டுப்பட்டிருந்த அழுகை மீண்டும் சுரந்தது.
“உன்னை மறுபடியும் அறையப் போறேன் நிதா!” யாஷ் கண்டனமாகக் கூற, “அடிச்சா கேட்க கூட ஆளில்லை. கேமரால படம் பிடிச்சா இவள் என்ன கேட்கப்போறான்னு தான இப்படி செய்ற. உன்னை நம்புனேன்ல அரக்கா…” மீண்டும் தேம்பல் அதிகரித்தது அவளிடம்.
தட்டை தரையில் வைத்தவன், “மெண்டல் மாதிரி பேசாதடி. லுக் அட் மீ!” என அவள் முகத்தை நிமிர்த்திட, அவள் வலுக்கட்டாயமாக குனிந்து கொண்டாள்.
“உன்ன…” எனக் கடிந்தவன், இரு கையிலும் அவளை அள்ளிக்கொள்ள, திடீரென அவன் தூக்கியதில் திணறி விழித்தவளின் கண்ணெல்லாம் அழுது அழுது வீங்கிப் போயிருந்தது.
அதனைக் கண்டு முற்றிலும் அவளிடம் சரணடைந்தது அவனது ஆணவம்.
“ஏன்டி இப்படி அழுதுருக்க? அடிச்சது வலிச்சுருச்சா ரொம்ப?” தவிப்பாகக் கேட்டான் யாஷ் பிரஜிதன்.
“அதுவும் தான். அதை விட, நீ கேமரா வச்சது தான் ரொம்ப வலிக்குது…”
அவளது கூற்றில் நெஞ்செங்கும் கண்ணாடித் துகள்கள் குத்தியது போல வலித்தது. அவளை ஊஞ்சலில் அமர வைத்தவன், அடிக்குரலில் கர்ஜித்தான்.
“என்னடி கேமரா வச்சேன் கேமரா வச்சேன்னு அதையே சொல்லிட்டு இருக்க? இவ பெரிய உலக அழகி, இவளை கேமரால பில்ம் எடுத்து கண்ட சைட்ல விக்க போறாங்க… அதுவும் இல்லாம, நம்ம என்ன டெய்லி லவ் மேக் பண்ணிட்டா இருக்கோம். அது சிசிடிவில பதிஞ்சு, யாராச்சு எடுத்து அதை நெட்ஃப்ளிக்ஸ்ல போடுறதுக்கு… ஏற்கனவே ரித்திக்கு த்ரெட் இருக்கு. அது போதாதுன்னு உனக்கே நிறைய ஆபத்து இருக்கு. அது உன் மரமண்டைக்கு புரியுதா இல்லையாடி?”
சினம் பீறிட, பின்னந்தலையை அழுந்தக் கோதி தன்னை அடக்கினான்.
அவளோ அவனை மிரண்டு பார்க்க, யாஷ் வெறிப்பிடித்தவன் போல அவள் முன் நெருங்கினான்.
“அன்னைக்கு கன் ஷாட் நடந்தப்ப, நான் எப்படி கரெக்ட்டா வந்தேன்னு நினைக்கிற. நீ ரூம்ல தான இருக்கன்னு நான் அசால்ட்டா இருந்திருந்தா, இந்நேரம் உன் அண்ணனை கண்டுபிடிச்சு உன் கல்லறைக்கு மலர்வளையம் வைக்க சொல்லிருக்கணும் கடன்காரி.
நீ ரூம்ல இருக்கும்போதும் சரி இந்த வீட்ல நீ மத்த இடத்துக்குப் போகும்போதும் சரி என்ன வேலையா இருந்தாலும் என் கண்ணு உன் மேல அடிக்கடி பட்டுட்டே இருக்கும். அன்னைக்கும் அப்படி தான் இருட்டுக்குள்ள உன் மேல லேசர் லைட் பட்டதுமே எனக்கு கொஞ்ச நேரம் உயிரே இல்ல. என் ஆபிஸ் ரூம்ல இருந்து இந்த ரூம்க்கு வர்றதுக்குள்ள எனக்குள்ள நடந்த ஸ்ட்ரக்கில் எனக்கு மட்டும் தான் புரியும்.
இதோ பாருடி. என் அப்பா மாதிரி ஒரு நாளைக்கு ஒரு பொண்ணு என்ன… ஒவ்வொரு அரை மணிநேரத்துக்கும் ஒரு பொண்ணோட இருக்க முடியும் என்னால… நடிக்க வந்த உங்கிட்ட என் ஃபிஸிக்கல் நீட்ஸை தீர்த்துக்க எனக்கு எவ்ளோ நேரம் ஆகிடும்? ஹான்?” எனத் தனது கலப்படக்கண்ணை விரித்துக் காட்டி அவளை பயமுறுத்தினான் ஆடவன்.
அவளோ மிரட்சி விலகாது ஊஞ்சல் கம்பியைப் பற்றிக்கொள்ள, “உன்னை உன் விருப்பம் இல்லாம என் தேவைக்கு யூஸ் பண்ணிக்கிட்டா கூட உனக்காக என்னைக் கேட்க யாருடி வருவா?” பல்லைக்கடித்து அவன் கேட்ட கேள்விக்கு பதிலாக கன்னத்தில் ஒரு துளி நீர் வடிந்தது அவளுக்கு.
“வலிக்குதுல. அதே மாதிரி தான், என்னை நீ தப்பா போட்ரே பண்றப்ப எனக்கும் பெயினா இருக்கு.
ஆஃப்டரால் பணத்துக்காக நடிக்க வந்தவ தான்னு நானும் உன்னை நினைக்கல. கேவலம் கடத்தி நடிக்க சொன்னவன் தானன்னு நீயும் என் மேல வெஞ்சன்ஸ் வச்சுக்கல.
உன்ன நான் நம்புறேன். என்னை நீ நம்புற. அந்த நம்பிக்கைக்கு என்ன பேர்னு எனக்குத் தெரியாது நிதா. பட் இப்போ நீ எனக்கு கொஞ்சம் ஸ்பெஷல். லைக் ஃபிரெண்ட். மை பிலவ்ட் ஆலம்பனா. இந்த ஏ. ஐ ஆலம்பனா என் தனிமைக்கு நிறைய ஹெல்ப் பண்ணிருக்கு நிதா. மத்தவங்களுக்கு அதெல்லாம் வெறும் ரோபோ, வெறும் உயிரில்லாத ஏ. ஐ. எனக்கு அப்படி இல்ல. என்னோட சின்ன சின்ன உணர்வுகள் எல்லாம் இந்த செயற்கை நுண்ணறிவுல தான் பதிஞ்சு இருக்கு.
இப்போ உன்கிட்டயும்! இதுவரை நான் யார்ட்டயும் வெளிப்படுத்தாத என் நிஜம், என் சிரிப்பு, என் வலி உனக்கு மட்டுமே தான் தெரியும்… எனக்காக நீ நிக்கிறன்ற காண்பிடண்ட் குடுத்துருக்க கடன்காரி. நீ என்னை நம்பாம போனா, எனக்கு கோபம் வரும். ரோபோ கூடவே இருக்கறதுனால எல்லா விஷயத்துலயும் நான் ரோபோ ஆகிட முடியாதுடி” உள்ளார்ந்த வலியுடன் பேசி முடித்தவனை இமை சிமிட்டாது பார்த்திருந்தாள் நிதர்ஷனா.
அவள் பிடித்திருந்த ஊஞ்சல் கம்பிகளை அவனும் பிடித்து தன்னருகில் அவளை இழுத்தவனின் இரு கையிலும் சிக்கி இருந்தது பாவையின் கைகள்.
ஊஞ்சல் கம்பிகளோடு பிணைத்து இறுக்கமாகப் பற்றி இருந்தான். சிறு வலியும் கொடுத்தது அது.
அவனோ தீவிரமாக புருவம் சுருக்கி, “அப்படியே உன்னை வீடியோ எடுத்து நெட்ல விடுற அளவு நீ ஒர்த் இல்லடி. இந்த வில்லேஜ்ல எல்லாம் ஒரு பேர் சொல்லுவாங்களே வாட்ஸ் தட்…” என நெற்றி நீவி யோசித்தவனை கண்ணீரை விடுத்து முறைப்புடன் பார்த்தாள் அவள்.
உடனே, “ஆலம்பனா வில்லேஜ் அக்ரிகல்ச்சர் பண்றப்ப ஒரு உருவத்தை வைப்பாங்களாலே அது நேம் என்ன?” என யாஷ் வினவியதும், எலிசா என்கிற ஆலம்பனா பதில் அளித்தது, “சோலைக்காட்டு பொம்மை” என.
அதில் சிரிப்பை அடக்கியவன், “ஹான் எஸ்… சோலைக்காட்டு பொம்மைக்கு சாக்குப் பை போட்ட மாதிரி மேல இருந்து கீழ வரை ஒரே சைஸ்ல ட்ரெஸ் போட்டுட்டு, கரண்டு கம்பி சைஸ்ல இருந்துட்டு என்னடி ரொம்ப தான் துள்ளுற?” கேலி வழிய அவளை வாரியதில்,
“யோவ் அரக்கா…” எனக் கத்தியபடி அவனிடம் இருந்து தனது கரங்களை விடுவித்துக் கொண்டு, அவனது தோள்பட்டையில் படபடவென அடித்தாள்.
புன்னகை இதழ்களை நிறைக்கவே, அவளைத் தடுத்த யாஷ் பிரஜிதன், “பிட்டர் ட்ரூத்” என உதட்டைப் பிதுக்கி மீண்டும் கிண்டல் செய்ததும், “ஹ்ஹ்ம்… யாஷ்…” என சிணுங்கியவள், “என் அருமை உனக்குத் தெரியல. என் ஏரியால எத்தனை பேர் என் பின்னாடி சுத்துனானுங்க தெரியுமா?” எனச் சிலுப்பினாள்.
“ம்ம் தெரியுமே. அந்த வயசான காசி, அப்பறம் அங்கிள்ஸ் நாலு பேர் தான?” என மேலுதட்டைக் கடித்தபடி சிரித்தவனை கலாய்க்கும் பொருட்டு,
“உன்ன மாதிரி ரோபோக்கு அந்த வயசான பீஸ்களே பெட்டெர் தான்…” கழுத்தை வெட்டிக் கொண்டாள்.
உடனே அவனது முகம் மாற, “ரியலி? அவனுங்களே பெட்டரா?” எனத் தனது விழிகளால் சாடியபடி அவளை நெருங்கியதில்,
“நீ மட்டும் என்னை கிண்டல் பண்ணுன…” என உதட்டைச் சுளித்தாள்.
அதில் கோபம் விடுத்து மெல்ல முறுவலித்தவன் சிவந்திருந்த கன்னத்தை மென்மையாகப் பற்றினான்.
இப்போது முகம் மாறுவது அவள் முறையானது.
ஐவிரல்களால் அக்கன்னத்தை மெதுவாக வருடி விட்டவன், “பர்னிங் சென்சேஷன் இருக்கா நிதா?” எனக் கேட்க, அவளுக்கு அவனது கூற்று காதிலேயே விழவில்லை.
அவனைத் தொட்டுப் பேசியதில்லை என்று சொல்ல முடியாது தான். ஆனால், இந்த தொடுகை, மெய்யைத் தாண்டி உயிரைத் தீண்டியதுவே!
மூச்சுக்காற்று தீண்டும் அண்மையில் நின்றிருந்தவனின் முகத்தை எப்போதும் வீற்றிருக்கும் குறும்பு நீங்கி, விழிகளுக்குள் பதித்துக் கொண்டிருந்தாள்.
அக்கண்கள்! மெல்லிய இருட்டிலும் மின்னும் அவனது கலப்பட விழிகள். அதில் காட்டும் தனக்கே தனக்கான அக்கறை! காயப்படுத்தி விட்ட குற்ற உணர்வு, அவள் மீதிருக்கும் ஒரு விதமான பரிதவிப்பு! ஒரே வார்த்தையில் அவளை தனது ஆலம்பனா என்று விட்டான். அவனது செயற்கை நுண்ணறிவிற்குப் பதிலாக இயற்கை நுண்ணறிவு அவள்.
ஆனால் அவளுக்கு? அவன் மீதிருக்கும் உணர்வை அவள் எப்படி வரையறுப்பதாம்? இந்தத் தீண்டலின் குளுமையை எவ்வாறு மறைப்பதாம்?
அவனது வெப்ப மூச்சு தாக்கும் போது, மேனியெங்கும் முள் முள்ளாய் புல்லரிப்பது ஏனோ?
“நிதா நிதா…” கிணற்றினுள் இருந்து யாஷ் அழைப்பது போல இருக்க, தனது அதீத கற்பனைகளுக்கு கடிவாளமிட்டவள், “ஹான்?” என விழித்தாள்.
“கன்னம் எரியுதான்னு கேட்டேன். வெய்ட் க்ரீம் தேய்ச்சு விடுறேன்” என்றவன் அறைக்குள் சென்று பின் சில நொடிகளில் திரும்பினான்.
கன்னத்தில் க்ரீம் தேய்த்து விட்டவன், “உன் கையைக் காட்டு” என்றிட, அவளும் அவனது சிறு தொடுகையிலும் சின்னதொரு அன்பிலும் கரைந்து போனவளாக இரு உள்ளங்கையையும் அவன் முன் நீட்டினாள்.
“நான் பார்த்த வரைக்கும் கேர்ள்ஸ் உள்ளங்கை இவ்ளோ சொர சொரன்னு இருந்ததே இல்லடி…” என்றபடி அவளது உள்ளங்கைக்கும் க்ரீம் தடவி விட்டான்.
அது அவளை பாதித்ததோ? தெரியவில்லை… ஆனால் இதயம் மெல்லக் கனன்றது.
அவனோ எப்போதும் போல இயல்பாய், “இந்த க்ரீம டெய்லி தேச்சுக்கோ. ஸ்கின் சாஃப்ட்டா இருக்கும்” என்று கொடுத்தான்.
“இப்ப சாஃப்ட்டா மாறி என்ன செய்யப்போறேன். திரும்ப போய் வீட்டு வேலை செய்றப்ப, இந்த க்ரீம் போட்டாலும் வேஸ்ட் தான்” என்றவளுக்கு அவ்வுணர்வுகள் அவளை அழுத்துவது போல இருந்தது.
அதிலிருந்து விடுபட, “எனக்கு சிக்கன் நூடில்ஸ் வாங்கிருக்கேன்னு சொன்ன? வா வா அதை வாசம் புடிச்சதுல இருந்து பசி வயித்தைக் கிள்ளுது” என்றபடி உள்ளே ஓடினாள்.
“சரியான ஃபுட்டி!” எனத் தலையாட்டிப் புன்னகைத்துக் கொண்டனின் விரல்களில் அவளது சருமத்தின் வளவளப்பு மிச்சமிருந்தது போலொரு பிரம்மை.
உடை மாற்றும் அறையிலேயே தட்டை வைத்து விட்டு வந்ததில், அங்கு சென்று உணவுத் தட்டை எடுத்துக்கொண்டவள், உண்ணாது தட்டையே வெறித்திருந்தாள்.
அன்பு இனிக்கும்
மேகா