Loading

22 – வலுசாறு இடையினில் 

 

“அண்ணே .. இப்ப எதுக்கு ண்ணே இங்க போகணும்? நம்ம ஆஸ்பத்திரி போக நேரம் ஆச்சிண்ணே ..”, என பாண்டி தேவராயனிடம் கெஞ்சிக்கொண்டு வந்தான். 

 

ஊருக்குள் நுழையும் முன்பே எதிரில் வர்மன் வந்தான். புல்லெட்டில் வந்தவன் முன்பு காரை இடிப்பது போல கொண்டு போய் நிறுத்த சொன்னான் தேவராயன். 

 

“அண்ணே”, என மருதன் ஓர் நொடி தயங்கினான். 

 

“சொல்றத செய் இல்லைன்னா நகரு..”,என அடம் பிடித்தான் தேவராயன். 

 

“அண்ணே அண்ணே.. வீணா பிரச்சனை வேணாம் ண்ணே.. டேய் மருது வேணாம் டா”, என பாண்டி இருவரிடமும் கெஞ்சினான். 

 

“வாய மூடு இல்லையா வண்டில இருந்து வெளிய குதிச்சிடு “, என தேவராயன் கூறியது பாண்டி வாயை இறுக மூடிக்கொணடான். 

 

தேவராயன் கூறியது போல வர்மனை இடிப்பது போல கொண்டு போய் நிறுத்தினான் மருதன். 

 

வர்மன் சற்று நிலை தடுமாறி சுதாரித்து, நகர்ந்து சென்று வண்டியை நிறுத்திவிட்டு  சத்தம் கொடுத்தான். 

 

“ஏய்.. யாரு டா அவன்? எதிர்ல வண்டி வர்றது கண்ணு தெர்லியா?”, என கேட்டான். 

 

பொறுமையாக வேஷ்டியை பிடித்து கொண்டு, தானே இறங்கி நின்று வர்மனை பார்த்து நக்கலாக சிரித்தான் தேவராயன். 

 

“அட.. புது மாப்ள.. என்ன டா சௌக்கியமா? காலு எப்டி இருக்கு? இன்னும் ஊணி தான் நடக்கறியா? ”, என அவனது காலை பார்த்தபடி  வர்மன் நக்கலாக கேட்டான். 

 

“நீ மாப்ள ஆக வேண்டிய பொண்ணுக்கு நான் மாப்ள ஆகறது தெரிஞ்சி கூட உனக்கு எதுவும் உறைக்கல போல? சவால் விட்டா அதுல ஜெயிக்க உரம் இருக்கணும்.. அது இல்லாதவன் எதுக்கு சவால் விடணும்? அதுவும் ஒரு பொண்ணு கிட்ட தோக்கணும்?”

 

“எனக்கு  சவால் விட்டா  ஜெயிச்சி  மட்டும் தான் பழக்கம்.. நீ இன்னும் அந்த பொண்ணு கழுத்துல தாலி கட்டல தானே ? அந்த நெனைப்பு கூட வச்சிக்காத அப்பறம் ஏமாந்து நிப்ப..”

 

“ஏமாந்து நிக்கறது நீயா நானா-ன்னு பாக்கலாமா?”

 

“நான் தாலிகட்ட  வேண்டிய பொண்ணு கழுத்துல நீ தாலி கட்டுனா அப்பறம் பானு வயித்துல இருக்க கொழந்தைக்கு யார அப்பன்ன்னு சொல்லுவ?”, என கேட்டுவிட்டு வர்மன் முறைத்தான். 

 

“அதுக்கு அப்பன் நான் தான்.. ஆனா நீ கட்ட வேண்டிய பொண்ண நான் கட்டுனா ஏமாந்து நிக்கறது நீ தான். எனக்கு ரெண்டு பொண்ண கட்றதுக்கு தெம்பு இருக்கு.. உன் நெலமை ?”, என ஒரு புருவம் உயர்த்தி கேலியாக கேட்டான். 

 

“மொத கட்டினா தானே.. பகல் கனவு காணாம போய் கால சரி பண்ணு.. பொம்பள புள்ளைங்க வாழ்க்கைய கெடுத்து வீணா போகாத ..” ,என கூறிவிட்டு நகர்ந்தான் வர்மன். 

 

“அப்ப அந்த செங்கல்வராயன் பொண்ண நீ கட்ட தயாரா தான் இருக்க போல?”

 

“அதயும் நீயே கட்டிக்க.. உன் சித்தப்பன் குடுமிய தான் அவன் கைல குடுத்து வச்சி இருக்கியே..”, என வர்மன் அதை மட்டும் மெதுவாக அருகில் வந்து தேவராயன் காதில் கூறிவிட்டு சென்றான். 

 

சித்தப்பாவின் குடுமி என்றதும் தேவராயன் முகத்தில் புன்னகை அரும்பியது. 

 

வர்மனை பார்த்து சிரித்தபடி, “முடிஞ்சா உன் சவால்ல ஜெயிச்சி காட்டு டா.. அப்ப ஒத்துக்கறேன் உனக்கு வச்ச பேருக்கு உனக்கு தகுதி இருக்குன்னு..”

 

“மொத உனக்கு வச்ச பேர நீ காப்பாத்திக்க பாரு டா ..  வந்துட்டான் பெருசா வேஷ்டிய கைல புடிச்சிக்கிட்டு..”, என அவனும் நக்கலாக கூறி சிரித்தபடி சென்றான். 

 

“வண்டிய எடு”, என கூறிவிட்டு அமைதியாக காரில் அமர்ந்து கொண்டான் தேவராயன். 

 

வர்மனும் மெல்லிய முறுவலுடன்  நகை கடை சென்றவன் அவனுக்கு பிடித்த அனைத்தும் வாங்கி விட்டு அப்பாத்தாவை தேடி வந்தான். 

 

“அப்பத்தா.. எத்தன பொடவ எடுத்தீங்க?”, என கேட்டபடி அருகில் அமர்ந்தான். 

 

“முகூர்த்தத்துக்கு  இது எல்லாம் எடுத்து வச்சி இருக்கேன்.. நல்லா இருக்கா? இதுல ஒண்ணு எடு டா.. ”, என அருகில் இருந்த 5 புடவைகளை காட்டி கேட்டார். 

 

“என்ன அப்பத்தா நீ? இது எப்டி பத்தும்?”, என முகத்தை சுருக்கி கொண்டு புடவை இருந்த ரேக்குகளை பார்வையிட்டான். 

 

தக்காளி நிறத்தில் உடலும், அரக்கு நிற பார்டரும் வைத்த பெரிய பூ புட்டா போட்ட புடவையை எடுக்க கூறினான். 

 

“இத பாருங்க.. என் முத்துக்கு அம்சமா இருக்கும்”, என எடுத்து விரித்து காட்டினான். 

 

“சரி தான்.. பேராண்டி கண்ணுக்கு தான் அப்டி பட்ட நெறம் கண்ணுக்கு தெரியுது. இவ்ளோ நேரம் கெழவி கண்ணுக்கு ஒண்ணும் தெரியல தான் ப்பா..”, என ஆச்சி வக்கணைத்து கொண்டார். 

 

“அட.. என்ன அப்பத்தா நீ? இது நல்லா இருக்கும்-ன்னு தானே சொல்றேன்.. நீ எடுத்த எல்லா பொடவையும் எடுத்துக்க.. உனக்கு பொடவை எடுத்தியா இல்லயா ?”, என அப்பத்தா கட்டுவது போல எந்த புடவையும் அங்கே இல்லாதது கண்டு கேட்டான். 

 

“இல்ல ராசா.. எனக்கு வீட்ல ஏகபட்ட பொடவ இருக்கு யா “, என சிரித்தபடி மறுத்தார். 

 

“நீ எதுவும் பேசாத .. உனக்கு நான் பொடவ எடுக்கறேன் “, என கூறிவிட்டு அவருக்கும் பெரிய ஜரிகை புட்டா போட்ட புடவைகளை எடுத்தான். 

 

“டேய் டேய் .. அவளோ பெரிய ஜரிகை இருக்கறது எல்லாம் வேணாம் டா.. மெல்லிசா இருக்கறது எடு “, என அவனை திட்டிக்கொண்டு இருந்தார். 

 

அவன் காதில் அது எல்லாம் விழுந்தால் தானே ? அவன் மனதிற்கு பிடித்த அத்தனை புடவையும் பில் போட அனுப்பி வைத்தான். 

 

வினிதாவும் அவர்களுடன் வந்து சேர்ந்து கொண்டு தான் எடுத்த புடவை விவரங்களை கூறிவிட்டு அமர்ந்தாள். 

 

“ஏன்டி உனக்கு ஃபேன்சி பொடவ எடுக்கலியா ?”, என ஆச்சி அங்கிருந்த புடவைகளை கவனித்துவிட்டு கேட்டார். 

 

“நான் என்ன பொடவைய கட்டறேன் ? வேணாம் ஆச்சி..”

 

“யாரு டி இவ.. சிம்மா .. போய் அவளுக்கு நாலு பொடவ எடுத்துட்டு வாய்யா ..” 

 

“அதுலாம் வேணாம் ண்ணே .. எனக்கு வேணும்னா நானே கேக்கறேன் ..  “, என வினிதா மறுத்து விட்டாள்.

 

“இன்னிக்கி விடறேன்.. ஆனா உனக்கு இந்த பட்டு பொடவ எடுத்து இருக்கேன். என் கல்யாணத்துக்கு இதான் நீ கட்டணும்.. மாப்ளைக்கும் எடுத்துட்டேன்..”, என வர்மன் கூறிவிட்டு இரண்டு பெரிய கட்டபைகளை அவள் கைகளில் கொடுத்தான். 

 

“எதுக்கு ண்ணே இவ்ளோ செலவு பண்ணிக்கிட்டு ?”, என வினிதா மறுத்து பேச ஆரம்பிக்க, வர்மன் முறைத்ததும் வாயை கப்பென்று மூடி கொண்டாள்.  

 

“சரி பாட்டியும் பேரனும் எல்லாம் வாங்கிட்டீங்க இத எப்டி அவகிட்ட  குடுக்கறது?”, வட்டி கேட்டான். 

 

“அதுக்கு தான் நான் இருக்கேன் ல.. ஆனா அவங்க எடுக்கற முகூர்த்த பொடவ இதே கலர்ல இருந்துட்டா பிரச்சனை இல்ல இல்லைனா ஆயிரம் கேள்வி வரும்.. அதுவும் அவங்க அம்மம்மா வேற வந்துட்டாங்க.. நங்க இனிமே தனியா பேசறதே கஷ்டம் தான்”

 

“யாரு அவங்க அம்மம்மா ? அதான் காமாட்சி அம்மா எப்பவோ காலமாகிட்டதா சொன்னாங்களே ..”,என ஆச்சி கேட்டார். 

 

“நங்கை தாத்தாவுக்கு பெரிய பொண்டாட்டி,. அந்த காலத்துலயே புரட்சி பேசினதால அவங்க தாத்தா வீட்ட விட்டு ஒதுக்கி வச்சிட்டாங்களாம் .. அவங்க புருஷனும், ரெண்டாவது பொண்டாட்டியும்  செத்த அப்பறம் அவங்க பசங்க இவங்க பேச்சு கேட்டு தான் இப்போ உருபட்டு இருக்காங்க ன்னு நங்க சொல்வா .. அவ அப்பத்தாக்கு அப்பறம் அவமேல அக்கறை இருக்கறவங்க அவங்க தான்.. “, வினிதா தனக்கு தெரிந்த விவரங்களை கூறினாள். 

 

“அவங்க பெரு என்ன?”, ஆச்சி. 

 

“ஏதோ வித்தியாசமான பேரு தான். வே .. .ன்னு என்னவோ சொல்லுவாலே.. ஹான் ..  வேம்பு அம்மம்மா ன்னு அவ சொல்வா ஆச்சி”

 

“வேம்பு ..”, என தனக்குள் சிலமுறை சொல்லிக்கொண்டு யோசனை செய்தார். 

 

அங்கிருந்து எல்லாம் பில் போட்டு பணம் கொடுத்துவிட்டு கிளம்பினர். 

 

செங்கல்வராயனின் கையாள் ஒருவன் அவர்கள் கடையில் இருந்து வெளியே வருவது கண்டு அவர்களை பின் தொடர்ந்தான். 

 

அதைக் கண்ட வட்டி , “மச்சான்”

 

“மாப்ள .. “

 

“எங்க கொண்டு வரட்டும்?”

 

“வீட்டுக்கு தான்”

 

“இப்போ ஜெயில் எல்லாம் வீட்ல தானா?”, என வட்டி சிரித்தபடி கேட்டான். 

 

“இந்த ஒரு விஷயத்துக்கு மட்டும் மாப்ள”, என வர்மன் கூறிவிட்டு வினிதாவையும், ஆச்சியையும் காரில் அனுப்பிவிட்டு வேறு ஒரு கடை பக்கம் சென்று நின்றார்கள். 

 

“ஒரு ஆடு தான் மச்சான் வருது.. எத்தன ஆட நாம வெட்டறது ?”

 

“வந்த வரை வெட்டி கசாப்பு கடைல குடுத்தறலாம் மாப்ள .. “, என பேசியபடி அவன் செல்லும் பக்கம் இவர்கள் வேறு வண்டியில் பின் தொடர்ந்தனர். 

 

அவனோ சிம்மனை பின் தொடராமல் ஆச்சி செல்லும் வண்டியை பின் தொடர்ந்து சென்றான். 

 

ஆச்சி அன்று நங்கையை சந்தித்த சிவன் கோவிலுக்குள் சென்றார். பரம்பரை நகையுடன் முகூர்த்த புடவை வைத்து ஸ்வாமியிடம் வைத்து அர்ச்சனை செய்து கொண்டு பிரகாரம் சுற்ற வந்தார். 

 

வேல்முருகன் அந்த சமயம் அங்கு வந்ததால் இருவருக்கும் ஒன்றாக எடுத்த புது துணியை கொடுத்து விட்டு  ஒரு இடத்தில் அமர்ந்தார். 

 

“என்ன ஆச்சி இவ்ளோ நேரம் கலகலன்னு இருந்தீங்க.. இப்போ ஏன் டல் ஆகிட்டீங்க ?”, என வினிதா கேட்டாள். 

 

“ஒண்ணும் இல்ல டி.. ஒரு வேகத்துல இன்னிக்கி எல்லாம் பண்ணிட்டேன். நாளைக்கு கல்யாணம் கூட முடிஞ்சிடும் .. ஆனா அதுக்கு அப்பறம் அவங்க வாழ்க்கைய நெனைச்சா தான் மனசு சுணங்குது .. “, என பெருமூச்சு விட்டபடி கூறினார். 

 

“அது நெனைச்சா எனக்கும் பயமா தான் ஆச்சி இருக்கு.. வர்மாண்ணே அதுலாம் நான் சமாளிச்சிக்கறேன்னு சொல்லுது.. இவரும் அதே தா சொல்றாரு.. இந்த நங்கை என்ன பண்ணுவாளோ-ன்னு எனக்கு தான் திக்கு திக்குன்னு இருக்கு .. “, என வினிதா தன் மனதில் இருப்பதையும் கூறினாள். 

 

“ரெண்டு பேரும் வீணா ஏன் கவலபடறீங்க ? என் மச்சான் அதுலாம் என் தங்கச்சிய கண்ணுக்குள்ள வச்சி பாத்துக்குவாரு… ரெண்டு பேரும் அவங்க மனசு போல நல்லா  இருப்பாங்க ஆச்சி .. நீங்க தைரியமா இருங்க..”, என வேல்முருகன் இருவருக்கும் சமாதானம்  கூறினான். 

 

“நீங்க நினைக்கற மாதிரி வாழ்க ஒண்ணும் வெளயாட்டு இல்ல டா பேராண்டி.. பெரியவங்க சொல்வாங்க.. முதல் கோணல் முற்றும் கோணல் ன்னு.. நம்ம இப்போ பண்ண போற கல்யாணம் எவ்ளோ திருட்டு தனம் செஞ்சி செய்ய போறோம் .. அதுல அவங்க வாழ்க்க தளச்சிட்டா பிரச்சனை இல்ல.. இதுவே காரணமா வச்சி ரெண்டு பேரும் சண்டை போட்டுகிட்டே இருந்தா வாழ்க்கை வீணா போயிரும் யா.. அதுக்கு தான் நான் பயபடறேன் ..”, மனதில் இருக்கும் பாரத்தை பகிர்ந்து கொண்டார். 

 

“அது நல்ல பொண்ணு ஆச்சி.. மொத  கொஞ்சம் கோவபட்டாலும் போக போக  புரிஞ்சிக்கும்.. நீங்க காட்டற பாசம் பாத்து மனசு மாறும்.. மனசுல எதுவும் போட்டு கொழப்பிக்காம அடுத்து என்ன செய்யணும் ன்னு சொல்லுங்க.. “, என வேல்முருகன் தான் வந்த வேலை பற்றி பேச கூறினான். 

 

சுமார் ஒரு மணிநேரம் மூவரும் பேசிவிட்டு அங்கிருந்து நகர்ந்தனர். அவர்கள்  பேசிய அனைத்தும் இன்னும் இரண்டு பேர் அவர்களுக்கு தெரியாமல் கேட்டுக்கொண்டு இருந்தனர். 

 

அந்த இரண்டு பேரும் கோவில் விட்டு வெளியே வந்து ஆளுக்கு ஒரு திசையில் சென்றனர். 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
12
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்