Loading

திமிர் 22

 

கழுத்தை இறுக்கி இருந்த டையை அவிழ்த்துத் தூக்கிப் போட்டவன் அமைதியாக மெத்தையில் படுத்தான். அவனது மன ஓட்டத்தைப் புரிந்து கொண்டவள் தொந்தரவு செய்யவில்லை. ஏற்கெனவே இருந்த குற்ற உணர்வு இவனைப் பார்த்ததும் இன்னும் அதிகரித்தது. எப்படி இதையெல்லாம் சமாளித்துக் காதலித்தவனோடு வாழப் போகிறோம் என்ற பெரும் கேள்விக்குறி அவள் முன்னால்.

 

கூடவே தன்னை வளர்த்தவர்களின் நினைவு. இங்கிருந்து அனுப்பியதோடு சரி, அவர்களின் நிலை பற்றி எந்தத் தகவலும் இல்லை. அதிலும், அஞ்சலை பற்றிய கவலைதான் அதிகம். முரளி எப்படியோ, ஒரு தாயாக எந்தக் குறையும் காட்டியதில்லை அஞ்சலை. ஒவ்வொரு முறையும் தனக்காக வாதிடும் அவர் அன்பில் நெகிழ்ந்து இருக்கிறாள். இந்நேரம் அனைத்தும் தெரிந்திருக்கும். தன்னை என்ன நினைத்தாரோ!

 

இவளாக அழைக்க மனம் வரவில்லை. முரளியைப் பற்றி நன்கு தெரிந்து தான், அந்த முயற்சியை எடுக்காமல் இருக்கிறாள். தன்னை வளர்த்தவர், தன்னை நிச்சயம் புரிந்து கொள்வார் என்ற நம்பிக்கையில் எழுந்து அவனை உசுப்ப, “தல ரொம்ப வலிக்குதுடி. காபி ஒன்னு எடுத்துட்டு வரச் சொல்லு.” என்றான்.

 

சமையல்காரருக்கு வேலை வைக்காமல் அவளே தன்னவனுக்காக எடுத்து வர, “நீ எதுக்காகப் போன? போன் பண்ணா அவங்களே எடுத்து வருவாங்க.” என்றவாறு தன்னிடம் நீட்டியதை வாங்கி வாயில் வைத்து விட்டு அவளைப் பார்த்தான்.

 

“நல்லா இருக்கா?”

 

“நீயா போட்ட?”

 

“ம்ம்!”

 

“சமைக்கத் தெரியுமா?”

 

“கொஞ்சம்…”

 

“காபி சூப்பர்!”

 

“தேங்க்யூ”

 

தலைவலிக்கு இதமாக இருந்தது அவள் போட்டுக் கொடுத்த காபி. குடித்து முடிக்கும் வரை அமைதியாக நின்றிருந்தவள், “சாரி” என்றாள்.

 

“எதுக்குடி?”

 

“நான்தான் தேவை இல்லாமல் கல்யாணம் ஆயிடுச்சுன்னு பொய் சொல்லிட்டேன்.”

 

“இங்க வா…” கை நீட்டி அழைக்க, அவனை உரசிக்கொண்டு அமர்ந்தாள்.

 

“உண்மையத்தான சொல்லி இருக்க.”

 

“அது நமக்குள்ள நடந்தது. நம்மளைப் பொறுத்த வரைக்கும் நமக்கு அது கல்யாணம். நல்ல நாள் பார்த்து மஞ்சள் கயிறு கட்டுனா தான இந்தச் சமூகம் அதைக் கல்யாணமா ஏத்துக்கும். வீட்ல இருக்கறவங்களே, எங்க தாலின்னு கேட்டால் என்ன பதில் சொல்லுவேன். தேவையில்லாத பொய்யைச் சொல்லி உனக்கும், உங்க அம்மாக்கும் இருந்த பிரச்சினையைப் பெருசு பண்ணிட்டேன்.”

 

ஆதரவாகத் தோள் மீது கை போட்டுச் சேர்த்துக் கொண்டவன், “நீயும் நானும் ஒன்னா சேர்ந்து வாழவே ஆரம்பிச்சிட்டோம். இதுக்கு மேல என்னடி இருக்கு? நீ சொன்னதுல எந்தத் தப்பும் இல்லை. அப்பவாவது அந்தப் பிசாசை அனுப்பிட்டு, நமக்குக் கல்யாண ஏற்பாடு பண்றாங்களான்னு பார்ப்போம்.” என நெற்றி முட்டினான்.

 

“ரொம்பக் கஷ்டமா இருக்கு அகா…”

 

அவளைத் திசை திருப்பும் பொருட்டு, “உனக்கும் அந்தப் பிசாசுக்கும் என்ன பிரச்சினை?” கேட்க, “பிரச்சினை எல்லாம் ஒன்னும் இல்ல. ரொம்ப ஓவராப் பேசுனா, அதான் அடிச்சேன்.” என்றாள்.

 

“அடிக்கிற அளவுக்கு மேடம்க்கு தைரியமா?”

 

“ஹலோ, அகம்பன் திவஜ் சார்! எங்களுக்கெல்லாம் இருக்கற தைரியத்துல பாதி கூட உங்களுக்கு இருக்காது. உங்களை மாதிரி எத்தனைப் பேரை பிசினஸ்ல பார்த்திருப்பேன் தெரியுமா?”

 

“அப்புறம் ஏண்டி, ரொம்பப் பயந்த பொண்ணு மாதிரி என்னைக் கண்டா நடுங்குற.”

 

பதில் சொல்ல விடாது கன்னத்தை மூக்கு நுனி கொண்டு உரச, நெளிந்து அவனைத் தள்ளி விட்டாள். விலகிய வேகத்தில் அவளை உரசிக்கொண்டு கட்டி அணைத்தவன் மெத்தையில் தள்ளினான். அகப்பட்டுக் கொண்டால் தப்பிக்க வழி தர மாட்டான் என்று பதறியவள், ஆரம்பக் கட்டத்திலேயே ஓட முடிவெடுத்தாள். அவள் எண்ணம் அறிந்து அவள் மீது ஊர்ந்தவன்,

 

“காபி குடிக்கறியா?” சம்பந்தமே இல்லாமல் கேட்டான்.

 

“ஹான்!”

 

“காபி செமையா இருந்துச்சு. நீயும் குடிக்கறியான்னு கேட்டேன்.”

 

“போட்ட எல்லாத்தையும் மடக்கு மடக்குன்னு குடிச்சிட்டுக் குடிக்கறியான்னு கேட்டா என்ன அர்த்தம்.”

 

“வேணும்னா சொல்லு, தரேன்”

 

“உன் பார்வையே சரியில்ல. எனக்கு எதுவும் வேண்டாம். ஆள விடுடா.”

 

“அப்படியெல்லாம் சொல்லக் கூடாது. நான் காபி கொடுப்பேனாம், நீ சமத்தா சாப்பிடுவியாம்.” என்றவன் குளம்பிச் சுவையில் ஊறிப்போன தன் உதட்டை அவள் உதட்டுக்குள் நுழைத்தான்.

 

காபியின் வாசம் உச்சி மண்டைக்குச் சென்றது. நாக்கை உள் நுழைத்து அவள் நாக்கோடு சுழன்று விளையாடியவன், தன்னிடம் இருந்த சுவை அனைத்தையும் அவள் இதழுக்கு மாற்றிய பின்னே விலகினான். குளம்பிச் சுவையோடு எச்சில் சுவையும் கலந்ததால் தேவாமிர்தமாக இருந்தது. அதை அள்ளிப் பருகியவளுக்கு இன்னும் தேவைப்பட்டது.

 

நாக்கைச் சுழற்றி, அவன் நீண்ட நாக்கைக் கவ்விக் கொண்டவள், இடைவிடாது முத்தத்தைத் தொடர்ந்தாள். அவள் வேகத்திற்கு ஈடு கொடுத்தவன், அவன் போக்கில் கைகளையும் மேய விட, அவன் தீண்டும் ஒவ்வொரு தீண்டலுக்கும் கசிந்துருகிக் காணாமல் போனாள்.

 

அவள் மீது இருந்தவன், சரிந்து தன் மீது அவளை மாற்றிக்கொள்ள, முத்தம் மட்டும் பிரியவில்லை. உதடு சிவக்க முத்தமிட்டவர்கள், விலகி முகம் பார்த்து வெட்கத்தில் சிரித்துக் கொண்டனர். மதுவின் கழுத்தில் முகம் புதைத்துத் தாகங்களைப் புரிய வைத்தவன் கைகளைத் துழாவி அங்கங்களை அளவெடுத்தான்.

 

ஓசை அதிகரித்தது அவளிடம்.‌ அதைக் குறைக்க மீண்டும் உதட்டிற்கு அம்பை எய்தினான். பின்னந்தலையைப் பற்றி விலக விடாது சேர்த்துக் கொண்டவள், தன்னை மெய்சிலிர்க்க வைத்தவனை மெய்சிலிர்க்க வைத்தாள் வேகமாக முத்தமிட்டு. கீழ் உதட்டை இழுத்து உயிர் நோகச் சோதித்தவள் மீசையைக் கடித்திழுத்துக் கத்த வைத்தாள்.

 

விலகியவன் கோட்டில் கை வைத்தவள், “காபி டேஸ்ட்ட விட இந்த மீசை டேஸ்ட் செமையா இருக்கு.” என மீண்டும் பிடித்திழுக்க, இந்த முறை அவளைக் கட்டுப்படுத்தினான் ஆடைக்குள் விரல் நுழைத்து.

 

அதுவரை ஆடிக் கொண்டிருந்த அவள் ஆட்டம் நின்றது. பெருமிதமாகச் சிரித்துக் கண் அடித்தவன் தன் ஆட்டத்தைத் தொடர்ந்தான். ஆடையை விலக்கி வெறும் தேகத்தில் முத்தமிட்டுப் பல் தடத்தை இலவச இணைப்பாகப் பதிக்க, அகம்பன் உச்சி முடிகளைக் கொத்தாகப் பிடித்தாள்.

 

மேல் சென்று நெற்றியில் முத்தமிட்டுக் கண்களை மூட வைத்தவன், அங்கு ஒரு குட்டி முத்தத்தை இட்டான். துடிக்கும் இமைகள் விரட்டி அடித்தது. பயந்து கீழ் இறங்கியவன் நுனி மூக்கை லேசாக நாக்கால் வருடி உதட்டுக்கு இடம் மாறினான். தன்னால் தன் இதழால் நிறம் மாறி இருக்கும் உதட்டை உரசி முத்தமிட்டுச் சமாதானம் செய்தவன் இதழ்கள் தங்கு தடை இன்றிக் கழுத்தில் புதைந்து சங்கில் முத்தமிட்டது.

 

அதற்கு மேல் செல்ல விடாமல் ஆடை தடை போட, முகம் சுருக்கி அதை மிரட்டி ஓட விட நினைத்தவன் எண்ணத்தைத் தவிடு பொடியாக்கினாள் ஆடையை இறுக்கிப்பிடித்து. எவ்வளவு சேட்டை செய்தும் அதற்கு ஒத்துழைக்காதவளை முறைத்து, ஆடையை விலக்கி மட்டும் விட்டவன் கோபத்தோடு முத்தமிட்டான். தன்னவனின் மோகத்தில் கோபம் கலந்திருப்பதை உணர்ந்தவள், சமாதானம் செய்யும் பொருட்டு அவன் சட்டையில் கை வைக்க, “போடி” வீம்புக்கு எழுந்து விட்டான்.

 

“ஹா ஹா”

 

“நக்கல்!”

 

“அடங்கவே மாட்டியா?”

 

“அப்படி என்ன ஆட்டம் போட்டுட்டாங்க. அதான் உஷாரா இருக்கியே.”

 

“என்ன கலவரம் நடந்துட்டு இருக்கு, கொஞ்சம் கூடக் கவலையே இல்லாம ரொமான்ஸ் பண்ற.”

 

“இந்த வியாக்கியானம் எல்லாம் என் உதட்டைக் கடிக்கும் போது இருந்திருக்கணும். உன்ன மாதிரி வீட்டுக்குள்ளயாடி இருக்கேன். இப்படிக் கடிச்சு வச்சிருக்க.” எனச் சிவந்த கீழ் உதட்டைப் பிதுக்கிக் காட்ட,

 

“அவ்ளோ காபி டேஸ்ட் அதுல.” கண்ணடித்தாள்.

 

“இன்னொரு தடவை முரண்டு பிடிச்சுப் பாரு. கதறக் கதற ரொமான்ஸ் பண்ணி அலற விடுறேன்.”

 

“நீ எப்பவும் அதைத்தான்டா பண்ற.”

 

“அப்பக் கூட வீம்பு பிடிக்கிறியே” என அவளை இழுத்து இதழை நெருங்கப் போக, இரு உதட்டிற்கும் நடுவில் கைவைத்து அதற்கு முழுத் தடை போட்டவள்,

 

“இதுக்கு மேல வேண்டாம். நைட் பார்த்துக்கலாம்.” எனத் தள்ளி விட்டாள்.

 

“ரொம்பத்தான் பண்ற, போடி”

 

“ஹா ஹா…”

 

“சிரிக்கிற இந்த உதட்டை ராத்திரி என்ன பண்றேன் பாரு.”

 

“அதை ராத்திரி பார்த்துக்கலாம்.”

 

“ரொம்பப் பேசுறாளே…”

 

“அகா…”

 

“ம்ம்…”

 

“அம்மாவைப் போய் சமாதானப்படுத்து.”

 

“இப்பப் போனா ரொம்ப பீல் பண்ணுவாங்க. ஈவினிங் பேசுக்கிறேன்.”

 

“அப்படி இல்ல. நம்ம இவ்ளோ ஃபீல் பண்ணியும், ஒரு வார்த்தை கூட வந்து பேசலன்னு நினைப்பாங்க. இப்பப் போய் பேசுறது தான் சரி வரும்னு தோணுது.”

 

சில நொடி யோசித்து முடிவெடுத்தவனாக எழுந்து நிற்க, “அவங்க எது பேசினாலும் கோபப்படாத. இப்பத்தான் ஹாஸ்பிடல்ல இருந்து வந்துருக்காங்க. அவங்களோட ஹெல்த் முக்கியம்.” எடுத்துச் சொல்லி அனுப்பினாள்.

 

***

 

“அம்மா…”

 

செவியில் விழுந்தும் எழுந்திருக்காமல் படுத்திருந்தவர் கால்களைப் பற்றித் தன் மடியில் வைத்தவன், “சாரிம்மா” என ஆரம்பித்தான்.

 

“தேவை இல்லடா உன்னோட சாரி. கல்யாணம் பண்ற அளவுக்குப் போயிட்ட. இதுக்கு மேல என்ன இருக்கு. சும்மா பேசி அவளை நோகடிக்காத.”

 

“நீங்களும் அம்மா மாதிரிப் பேசாதீங்கப்பா. எங்களுக்குள்ள ரகசியமா நடந்தாலும் உங்க முன்னாடி நடக்கப் போறது தான் உண்மையான கல்யாணம். உங்க ஆசிர்வாதத்தோட நடக்கணும்னு விரும்புறோம்.”

 

“அது என்னைக்கும் நடக்காது அகம்பா… எனக்கு அந்தப் பொண்ண சுத்தமா பிடிக்கல. அனுவைக் கல்யாணம் பண்ணா மட்டும்தான், என்னோட ஆசிர்வாதம் கிடைக்கும் உனக்கு.”

 

“ஏம்மா பிடிவாதம் பிடிக்கிறீங்க” என்றதும் வெடுக்கென்று எழுந்தார்.

 

“நீ பிடிக்கலையா? இதுவரைக்கும் உன்னை எதிர்த்து இந்த வீட்ல யாராவது, ஏதாவது பேசி இருக்காங்களா? பெத்த அப்பா கூட உன் வார்த்தையை மீறினது கிடையாது. அப்படிப்பட்டவங்க, இன்னைக்கு வேண்டாம்னு சொல்றாங்கன்னா, எதுனால இருக்கும்னு யோசிக்க மாட்டியா?” என்றவரை இடை மறித்தான்,.

 

“அதேதான்மா நானும் சொல்றேன். எல்லாத்துலயும் சரியா முடிவெடுக்கிறவன் கல்யாண விஷயத்துல மட்டும் தப்பா முடிவெடுப்பான்னு எப்படி நம்புறீங்க. என் மேல வச்ச நம்பிக்கை எங்க போச்சு?” என்று.

 

“எப்ப அவளைக் கூட்டிகிட்டு இந்த வீட்டுக்கு வந்தியோ, அப்பவே உன் மேல வச்சிருந்த நம்பிக்கை போயிடுச்சு. இப்பக் கூட அவ சொல்லித்தான் வந்து இருப்பன்னு தோணுது. அவ ஆட்டி வைக்கிற பொம்மையா இருக்க. நீ எங்களையும், இந்தக் குடும்பத்தையும் பார்த்துப்பன்ற நம்பிக்கை கொஞ்சம் கூட இல்லை.”

 

“அம்மா!” என அன்னையை விட்டு விலகினான்.

 

பெற்றவர்கள் இருவரும் அமைதியாக அமர்ந்திருக்க, “இதுவரைக்கும் உங்களுக்காகவும், இந்தக் குடும்பத்துக்காகவும் தான் உழைச்சிருக்கேன். எனக்குன்னு நானா ஆசைப்பட்டது என்னோட விளையாட்டும், மதுணியும் மட்டும்தான். ரெண்டும் என்கூட இருக்கிற வரைக்கும் தான் இந்த உடம்புல உயிர் இருக்கும். நான் உயிரோட இருக்கணுமா, வேணாமான்னு நீங்களே முடிவு பண்ணிக்கோங்க.” என்று விட்டு அங்கிருந்து நடையைக் கட்டினான்.

 

 

***

கும்மாளமும், கூத்துமாக இருக்கிறது மினிஸ்டர் நவரத்தினத்தின் இல்லம். பெரியதாகச் சொந்த பந்தங்களை அழைக்காமல் முழுவதும் கட்சி ஆள்களை மட்டுமே அழைத்து இருக்கிறார். இந்தக் கேளிக்கை நடப்பதற்குக் காரணமே கட்சிதான். அதனால்தான் அவர்களே முதன்மையானவர்களாக ஆடிக் கொண்டிருக்கிறார்கள்.

 

எப்பொழுதும் வெள்ளை வேட்டியில் பளபளக்கும் நவரத்தினம், இன்று தங்க நகைகளையும் கூட அணிந்து கொண்டு ஜொலிக்கிறார். அவர் பக்கத்தில் துணைவியான கற்பகம் பெருமையாக அமர்ந்திருக்கிறார். இரு பிள்ளைகளும் சற்றும் குறையாத மிடுக்கான தோரணையோடு அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருக்கின்றனர்.

 

இவ்வளவு ஏற்பாடும் நவரத்தினம் பிறந்த நாளுக்காகத்தான். மாலை வெளிச்சம் போதுமானதாக இருந்தது மினிஸ்டர் வீட்டை அலங்கரித்த மின்விளக்குகளுக்கு. முதலமைச்சருக்குப் பதில் துணை முதலமைச்சர் பலத்த பாதுகாப்போடு வந்திருக்கிறார். அதுவரை அமர்ந்திருந்த நவரத்தினம் குனிந்து கும்பிடு போட, “ஹலோ சார்” எனக் கைகுலுக்கினான் ஆதிகேஷ்.

 

“என்னப்பா, வீட்டிலயே சிம்பிளா பார்ட்டினு சொல்லிட்டு இப்படி ஜமாய்ச்சி இருக்கீங்க.”

 

“கொஞ்ச நாளா நிறைய இஷ்யூஸ் சார். எல்லாத்தையும் மறக்குற மாதிரிப் பண்ணியாச்சு.”

 

“நானும் கேள்விப்பட்டேன். ஆமா, எங்க ஹீரோவக் காணோம்.”

 

“உங்க பின்னாடி சார்” என்ற குரல் கேட்டுத் திரும்பிய துணை முதலமைச்சர், “வெல்கம் மை ஹீரோ, எப்படி இருக்க?” கட்டியணைத்து நலம் விசாரித்தார்.

 

“எப்பவும் போல சூப்பரா இருக்கேன் சார்.”

 

“கொஞ்ச நாளா நீ இல்லாம உங்க அப்பாகிட்ட எதுவுமே பேச முடியல. பேசாம அவர வீட்ல உட்கார வச்சிட்டு அடுத்த தடவை நீ மினிஸ்டர் ஆகிடு.”

 

“ஹா…ஹா… அதுக்கு எதுக்கு சார் அப்பாவ வீட்ல உட்கார வச்சுக்கிட்டு. ஒரே வீட்ல ரெண்டு மினிஸ்டர் இருக்கிறது நல்லது தான.”

 

“அப்படிப் போடு! அகம்பனா, கொக்கா…” எனக் கொக்கரித்துச் சிரித்தவர், “உங்க அண்ணன மட்டும் எதுக்குப்பா விட்டு வச்சிருக்க.” கேட்டார்.

 

“அவன் தான் அரசியல் பக்கமே தலை வைக்க மாட்டேன்னு பிசினஸைப் பார்த்துட்டு இருக்கானே. அவனை மட்டும் தலைய ஆட்டச் சொல்லுங்க சார். வர எலக்சன்ல அடுத்த மினிஸ்டர் அவனா தான் இருப்பான்.”

 

“அதான! நீ வைக்கிறது தானப்பா இந்தக் கட்சியில கட்டளையா இருக்கு.‌ நீ, உங்க அண்ணனை மட்டும் இல்ல, யாரை வேணா மினிஸ்டர் ஆக்குவ…” எனச் சத்தமாகக் கூறியவர் அகம்பன் காதில்,

 

“சிஎம்மை யாவது விட்டு வச்சிருப்பா.” கலகலப்பாகக் கூறினார்.

 

“யோசிக்கிறேன் சார்.”

 

வந்த அனைவரையும் வரவேற்றுக் கோலாகலமாக நவரத்தினத்தின் பிறந்தநாள் பார்ட்டி கொண்டாடப்பட்டது. சாதாரணமாகவே பிறந்தநாள் பார்ட்டி என்றால் மது இல்லாமல் இருக்காது. அங்கு இருப்பவர்களோ அரசியல்வாதிகள். சொல்லியா தெரிய வேண்டும்! கண்ணுக்கு மறைவாக இல்லாமல், கண்களைப் பறிக்கும் கண்ணாடி பாட்டில்கள் காட்சிப்படுத்தப்பட்டன.

 

கற்பகத்தின் கணவரும், பிள்ளைகளும் முழுக் குடிகாரர்கள் இல்லை என்றாலும், அவ்வப்போது தங்கள் இன்பத்திற்காக அருந்தும் பழக்கம் கொண்டவர்கள். கண்டும் காணாமலும் இருந்து கொள்வார். ஆனால், இளைய மகன் மட்டும் அடிக்கடி வரம்பு மீறிச் செல்வான். அவனை மட்டும் கண்டித்தால் நன்றாக இருக்கும் என்று அடிக்கடி தனக்குள் சொல்லிக் கொள்பவருக்கு அது வெறும் கனவு.

 

முழுதும் கட்சி ஆள்களாக இருப்பதால் ஓரமாக ஒதுங்கி விட்டாள் மதுணிகா. அதுவும் இல்லாமல், கேக் வெட்டும் பொழுது அவளை அழைத்துப் பக்கத்தில் வைத்துக் கொண்டான் அகம்பன். அதற்கே அவன் குடும்பத்து ஆள்கள் முகம் கருகிவிட்டது. அன்றைய சம்பவம் போல் மற்றவர் முன்பு கலவரம் நடந்து விடக்கூடாது என்பதற்காக ஓரமாக அமர்ந்திருந்தவளை நோக்கி வந்த பிரியா,

 

“ஹாய் மது!” கை அசைத்தாள்.

 

“ஹாய்!” என்றாள் சங்கடமாக.

 

“என்ன, இங்க உட்கார்ந்து இருக்க?”

 

“சும்மாதான்.”

 

“எனி ப்ராப்ளம்?”

 

“இல்ல.”

 

“என்கிட்டப் பேசத் தயக்கமா இருக்கா?” என்றவாறு பிரியா அவள் பக்கத்தில் அமர, வெளிப்படையாக ஒத்துக் கொள்ள முடியாமல் அமைதியாக இருந்தாள்.

 

“நீயும், நானும் ஒன்னா ஒரே வீட்ல வாழப் போறோம். அதனால வேற வழி இல்ல. எனக்கு, நீ துணை, உனக்கு, நான் துணை…”

 

கலகலப்பாகப் பேசும் பிரியாவை மிகவும் பிடித்தது மதுணிக்கு. சங்கடத்தைத் தவிர்த்துச் சகஜமாகப் பேச ஆரம்பித்தாள். தூரத்திலிருந்து இதைக் கவனித்த ஆதிகேஷ்,

 

“இவகிட்ட எதுக்குப் பேசிட்டு இருக்க?” சிடுசிடுத்தான்.

 

“ஆதி…”

 

“இவளுக்கும், நம்ம குடும்பத்துக்கும் எந்தச் சம்பந்தமும் இல்ல பிரியா. அனு கூட உட்கார்ந்து பேசு.”

 

“கட்சி ஆளுங்க இருக்காங்க ஆதி. யாராவது பார்க்கப் போறாங்க. நீ போ, நான் போறேன்.”

 

மதுவை முறைத்து விட்டு அவன் நகர, “சாரி மது…” அவள் கைப்பிடித்தாள் பிரியா.

 

“அவர் பேசுனதுக்கு நீங்க எதுக்கு சாரி கேக்குறீங்க?”

 

“என் புருஷன் பண்ண தப்புக்கு நான்தான கேட்கணும்.”

 

“ஓஹோ! இன்னும் கல்யாணத்துக்கு ரெண்டு மாசம் இருக்குல்ல.”

 

“ஹா ஹா… நாங்களாவது ரெண்டு மாசம் தான். நீங்க எப்போன்னே தெரியாம வாழ்ந்துட்டுல்ல இருக்கீங்க.”

 

“சரி சரி, சமாதான உடன்படிக்கை.”

 

“அப்படி வா வழிக்கு.”

 

“அடுத்து யாராவது வந்து திட்டுறதுக்குள்ள கிளம்பிடுங்க.”

 

“புருஷன் வீட்டு ஆளுங்களுக்கு ரொம்பப் பயப்படுவ போல.”

 

“ச்சே! ச்சே! அவங்களுக்கு தான் என்னைக் கண்டால் பயம்.”

 

“நல்ல பொண்ணைத் தான் என் கொழுந்தனார் பிடிச்சிட்டு வந்திருக்காரு.”

 

“தேங்க்யூ”

 

“மது…”

 

“ம்ம்”

 

“ஆதியைத் தப்பா நினைக்காத. அவருக்குத் தம்பிய ரொம்பப் பிடிக்கும். எதுவும் தப்பாகிடக் கூடாதுன்னு தான் உன் விஷயத்துல முரட்டுத்தனமா நடந்துக்கிறாரு.”

 

“எனக்குத் தெரியும் பிரியா. அவங்க கோபத்தையும் தப்புச் சொல்ல முடியாது.”

 

“பட், எனக்கு அகம்பன் மேல பயம் இருந்தாலும் நிறைய நம்பிக்கை இருக்கு. என் கல்யாண விஷயத்துல கூட மாமா நிறைய எதிர்பார்த்தாரு. எங்க அண்ணனைப் பணத்துக்காக விக்க முடியாது, எங்க அண்ணி மட்டும் வந்தால் போதும்னு தெளிவா சொல்லிட்டாரு. அப்படிப்பட்டவர், ஒரு பொண்ணைக் கூட்டிட்டு வந்திருக்காருன்னா, நீ எவ்ளோ நல்ல பொண்ணுன்னு புரிஞ்சுக்க முடியுது. மத்தவங்களும் புரிஞ்சுக்கக் கொஞ்சம் டைம் கொடு.”

 

“பரவால்ல, மூத்தாரும் நல்ல பொண்ணைத் தான் செலக்ட் பண்ணி இருக்காரு. இப்பவே புருஷன் வீட்டு ஆளுங்களுக்கு இவ்ளோ சப்போர்ட் பண்றீங்க.”

 

“இதுல இன்னொரு உள்நோக்கமும் இருக்கு.”

 

“அரசியல்வாதி மருமகள்னு இப்பத்தான் தெளிவாய் காட்டுறீங்க.”

 

“ஹா ஹா… எனக்கு அந்த அனுவைச் சுத்தமா பிடிக்காது. டைரக்ட்டா இல்லனாலும், மத்தவங்க சொல்லிக் கேள்விப்பட்டிருக்கேன். அதுவும் இல்லாம, அவ என்னோட காலேஜ் ஜூனியர். யாரையும் மதிக்க மாட்டாள். சீனியர் கூட இவளைக் கண்டா ஓடுவாங்க. இவ கூடவா இருக்கணும்னு பயந்துட்டே இருந்தேன். என் கொழுந்தன் என்னைக் காப்பாத்திட்டாரு.”

 

“சத்தமாய் பேசாதீங்க பிரியா. அவள் நம்மளைத் தான் பார்த்துட்டு இருக்கா.”

 

மருமகள்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்கும் பொழுது சத்தம் காதைக் கிழித்தது. அப்பக்கம் பார்வையைத் திருப்ப, அகம்பன் நடுவில் நிற்க, அவனைச் சுற்றிப் பெரும் கூட்டமே நின்றிருந்தது. பெரும் ஆரவாரம் செய்து அவன் கையில் மதுக் கோப்பையைக் கொடுத்தவர்கள் குடிக்கச் சொல்ல, மண்டை சூடானது அவன் காதலிக்கு.

 

மதுக் கோப்பையை வாயில் வைத்துக்கொண்டு, எதார்த்தமாக அவள் பக்கம் திரும்ப, ‘நோ!’ கண்களால் எச்சரித்தாள்.

 

உதடு வரை வந்த மதுவை விலக்கித் திருதிருவென்று முழித்தான். மீண்டும் சத்தம் காதைக் கிழித்தது. கட்சி சார்பாக எங்கு பார்ட்டி நடந்தாலும், மதுவைத் தொட்டு ஆரம்பித்து வைப்பது அகம்பனின் முதல் கடமை. மதுக் கோப்பைகளைப் பார்த்ததுமே விரல் நீட்டி,

 

“குடிக்கக் கூடாது அகா…” மிரட்டி வைத்திருந்தாள்.

 

அவளுக்குப் பயந்து, வேண்டாம் என்று மறுத்துக் கொண்டிருந்தவனைச் சூழ்ந்த கூட்டம் குடித்தே ஆக வேண்டும் என்று வற்புறுத்த, ‘இந்த ஒரு தடவை மட்டும்டி.’ அவளிடம் கெஞ்சினான்.

 

கண்ணைச் சுருக்கிப் புருவத்தை நெளித்த மதுணி, மற்றவர்கள் அறியாது பல்லைக் கடிக்க, ‘விடமாட்டாங்கடி!’ பாவமாக உதட்டைப் பிதுக்கினான்.

 

முன்கோபம் நுனி நாக்கில் நாட்டியமாட, நடந்து அவன் அருகில் சென்றவள், ‘மதுணி ப்ராமிஸ்’ என்றாள்.

 

கண்களால் காதல் செய்து கொண்டிருக்கும் இவர்களைக் கற்பகம் கவனித்துக் கொண்டிருக்க, அனுவின் வயிற்றில் புகை கிளம்பியது. யாருக்கும் அஞ்சாத தன் மகன், ஒரு பெண்ணின் கண்ணசைவில் கட்டுப்பட்டு நிற்பதை வாய் பிளந்து பார்த்தார் நவரத்தினம். எத்தனை முறை கண்களைக் கசக்கினாலும், புது அவதாரத்தில் நிற்கும் தம்பியை ஏற்க மனம் வரவில்லை ஆதிகேஷ்க்கு.

 

‘சத்தியமா இதுக்கு மேல குடிக்க மாட்டேன். இந்த ஒரு தடவை மட்டும் ப்ளீஸ்.’

 

‘முடியவே முடியாது. என் மேல சத்தியம்னு சொல்லியும் குடிச்சா அவ்ளோதான்… என்கிட்ட வரவே கூடாது.’

 

‘இன்னைக்கு நைட் மட்டுமா?’

 

‘எப்பவும்!’

 

‘அடியே!’

 

‘சமாதானம் பண்ணிக்கலாம்னு தப்புக் கணக்குப் போடாத அகா… இந்த மதுவா, கையில இருக்க அந்த மதுவான்னு முடிவு பண்ணிக்க.’

 

‘ரெண்டுமே போதைடி!’

 

‘சாவடிச்சிடுவேன். அது கூட என்னை கம்பேர் பண்றியா?’

 

‘ஐயையோ, இல்ல செல்லம். ஆசையா இருக்கு.’

 

‘பக்கத்துல பச்சத் தண்ணி இருக்கு, குடிச்சு ஆசையைத் தீர்த்துக்க.’

 

கையில் இருந்த மதுவை மேஜை மீது வைத்தவன், “இன்னைக்கு எனக்கு ரொம்பத் தலைவலியா இருக்கு. நீங்க எல்லாரும் குடிங்க, அப்புறம் ஜாயின் பண்ணிக்கிறேன்.” என்ற பின் தான் நிம்மதியானது அவன் காதலிக்கு.

 

முகம் சுருக்கி மிரட்டியவள், யாரும் பார்க்கா வண்ணம் பறக்கும் முத்தத்தைக் கொடுத்துவிட்டுச் சிரிக்க, அவளுக்காகப் பல்லைக் காட்டியவன், கமலுக்குக் கண்ணைக் காட்டினான். புரிந்து கொண்டவன் மதுவிடம் சென்று, “வாங்க அண்ணி, சாப்பிடலாம்.” என்றழைத்தான்.

 

“பசிக்கல.”

 

“சாப்பாட்டைப் பார்த்தா பசிக்கும்.”

 

“அகா கூடச் சாப்பிடுறேன்.”

 

“சார் வர மிட் நைட் ஆகும். அதுவரைக்கும் பசி தாங்க முடியாது.”

 

“பரவால்ல. நான் வெயிட் பண்ணி உங்க சார் கூடச் சாப்பிடுறேன்.”

 

“உங்க உடம்பு மேல கொஞ்சம் கூட அக்கறை இல்ல உங்களுக்கு. நேரத்துக்குச் சாப்பிட்டால் தான சாரைச் சமாளிக்க முடியும். இப்பக் கொஞ்சம் சாப்பிட்டுட்டு, சார் கூடக் கொஞ்சம் சாப்பிட்டுக்கோங்க.” என வர மறுத்தவளைத் தரதரவென்று இழுத்துச் செல்ல, அவள் செல்லும் வரை சமத்துப் பிள்ளையாக இருந்தவன், மேஜை மீது இருந்த மதுக்கோப்பையைச் சுழற்றித் தன் கைக்கு மாற்றினான்.

 

கூட்டம் ஆரவாரம் செய்வதைக் கேட்டு மதுணி திரும்ப, “அவங்க கிடக்குறானுங்க, குடிகாரப் பசங்க.” அந்தப் பக்கம் பார்வையைச் செல்ல விடாது சாமர்த்தியமாக இழுத்துச் சென்றான்.

 

கண்ணில் பரவசம் பொங்க, மதுக் கோப்பையை வாயில் வைத்தவன் போதையாகச் சிரித்து முழு பாட்டிலைக் கையில் எடுத்தான். அப்போதுதான் பார்ட்டி பார்ட்டியாகத் தெரிந்தது அனைவருக்கும். ஆண்கள் கூட்டம் அலைமோதியது மதுக் கோப்பைக்கு. ஆசை தீரப் பருகியவனுக்கு, ஆட்டம் தேவைப்பட்டது. குடித்தால் மட்டுமே வரும் ஆட்டத்தை ஆட,

 

“போடுடா பாட்ட!” என உரக்கக் கத்த, குழைந்து வரும் தன்னவன் குரலில் பாதிச் சாப்பாட்டுக் கையோடு ஓடினாள் மதுணிகா.

 

 

Click on a star to rate it!

Rating 4.7 / 5. Vote count: 15

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
14
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்