
மறுநாள் அகமொழி எழுவதற்கு முன்பே ரிஸார்ட்டிற்கு கிளம்பி இருந்தான் அர்ஜித் அகன்.
வசந்தி மதிய உணவிற்கு அழைத்ததில் கண்டிப்பாக வருவதாக கூறியவன், தனக்காக நிறைய வகைகளை செய்ய வேண்டாமென்று அறிவுறுத்தி விட்டே சென்றான்.
ஒன்பது மணி அளவில் தான் கண் விழித்த அகமொழி, பக்கவாட்டு டேபிளின் மீது “அர்ஜென்ட் ஒர்க் காந்தாரி…” என நோட் எழுதி வைத்திருந்ததைக் கண்டாள்.
தனக்கும் வேலை இருப்பதை உணர்ந்து கிளாம்பிக்கிற்கு கிளம்பிட,
இங்கோ ரிஸார்ட்டிற்கு சென்ற அர்ஜித் அகனுக்கு பிரணீத் அழைத்து சண்டையிட்டான்.
“டேய் நாளைக்கு எங்கேஜ்மெண்ட்னா நாளைக்கு தான் வருவியா? இன்னைக்கே கிளம்புடா சேட்டா பாய்…”
“இல்லடா… மொழிக்கும் வேலை இருக்குனு பரஞ்சா. நாளைக்கு மார்னிங் வந்துடுவோம்டா”
“அந்த கதை எல்லாம் வேணாம். இன்னைக்கே கிளம்பு! நான் அகாட்ட பேசுறேன். அந்த சிட்டுவும் வரமாட்டாளாம். அனுட்ட கேட்டா அவளும் என்னவோ எக்ஸாம் இருக்குன்னு கழண்டுக்குறா. ஓவரா பண்றீங்க குடும்பமா” எனக் கொந்தளித்தான்.
“டா… ஞாங்கள் மறுவீட்டிற்கு வந்திருக்கான். மதியம் மொழி வீட்டினில் லஞ்ச்!”
“ம்ம்ம் ஓகே” சோகமாக கூறி விட்டு அழைப்பைத் துண்டித்தான்.
அவளையே ஓரக்கண்ணில் பார்த்திருந்த அவனது தங்கை வேணி தமையனின் வருத்தம் கண்டு, தனது அலைபேசியை எடுத்தாள்.
அதில் “அனு” என பதிவிட்டு இருந்த அனகாவின் வாட்சப் சேட்டை திறந்தாள்.
பிளாக் செய்யப்பட்டிருந்த எண்ணை சில நிமிட யோசனைக்குப் பிறகு அன் – பிளாக் செய்தாள்.
“அனு!”
தனது கல்லூரி மரத்தினடியில் நெற்றியில் கையூன்றி அமர்ந்திருந்த அனகா, குறுஞ்செய்தி வந்த ஓசை கேட்டு அலைபேசியை எடுத்துப் பார்த்து திகைத்தாள்.
கண்ணோரம் ஒரு நீர்த்துளி… வாட்சப் டிபியில், வேணியும் அனகாவும் பள்ளி சீருடையில் போஸ் கொடுத்துக்கொண்டிருந்த புகைப்படம் வெகு நாளைக்குப் பிறகு மின்னியது.
தன்னிடம் கோபம் மறந்து பேசிய தோழிக்கு அவசரமாக குறுஞ்செய்தி அனுப்பினாள்.
“வேணி… பரயு, எங்கனே இரிக்குன்னு?(எப்படி இருக்க)”
“ம்ம்! பைன். எங்கேஜ்மெண்ட்கு வரலையா?”
“ஞான் வந்தா நினக்கு பிடிச்சதில்லா அல்லோ?” அனுவிடம் இருந்து வந்த குறுஞ்செய்தி கண்டு வேணியின் முகத்தில் வேதனை பரவியது.
அவளிடம் பதில் வராது போக, “எல்லாம் கொஞ்ச நாளில மாறுன்னு நம்பியிருக்கான் வேணி… நமக்குள்ளே இருக்குற விரிசலும்… பட்சே மாறாதோ?” அனகா ஏக்கமாகக் கேட்டாள்.
“என் அண்ணன் மாறாம எதுவும் மாறாது அனு!”
பின் வேணியே, “சரி விடு… நாளைக்கு வா” என அழைக்க,
அனகாவின் முகத்தில் சிரிப்பு பரவியது.
“நிஜமாய் நாளைக்கு எனிக்கு எக்ஸாம் இரிக்குன்னுடி! இல்லெங்கில் நீ என்னே செருப்பால் அடிச்சாலும் வந்து நின்னிருக்கும்… நீ பார்மலா கூப்பிடணோ எந்தா?” (நிஜமாவே நாளைக்கு எனக்கு எக்ஸாம் இருக்குடி! இல்லன்னா நீ என்னை செருப்பால அடிச்சாலும் வந்து நின்னுருப்பேன்… நீ பார்மலா கூப்பிடணுமா என்ன?)
எப்போதும் போல அவளது அன்பில் வேணியின் முகத்திலும் புன்னகை பரவியது.
“நின்டெ ஆளு எந்தா செய்யுன்னு? எந்தாடி திடீர்னு நிச்சயதார்த்தம்?” என வினவினாள் அனகா.
“நான் வேலைக்கு போக ஆரம்பிச்சதுல இருந்தே அப்பா மாப்பிள்ளை பாக்குறாருடி. அவரை இங்க எல்லாருக்கும் பிடிச்சுது. அதான் உடனே நிச்சயம் வச்சுட்டாங்க. கல்யாணம் லேட்டா தான் வைக்கிறதா பிளான். அதுக்கு காரணம் சொல்லாம வந்துடனும்!” என்றாள் கண்டிப்பாக.
“கண்டிப்பாய் வந்துடுவேண்டி வேணி! மாப்பிள்ளையை அவிடே எல்லார்க்கும் பிடிச்சதோ, இல்ல நினக்கு ஸ்பெஷலாய் பிடிச்சதோ?” அவளைக் குறும்பாய் கிண்டல் செய்திட, வேணிக்கு கன்னம் சிவந்தது.
“போடி!”
“நோக்கடா… நாணமோ?”
“ஏய் சும்மா இருடி…” குறுஞ்செய்திலேயே சிணுங்கிய தோழியிடம் பேசி பல நாள் கழித்து மனம் விட்டு சிரித்தாள் அனகா. வேணி அனகாவை விட ஒரு வயது மூத்தவள். ஒரே பள்ளியில் பயின்றவர்கள். ஒரு காலத்தில் உயிர் தோழிகளாக சுற்றிக்கொண்டிருந்தவர்கள் தான்! விதி அவர்களையும் பிரித்தது.
பிரணீத் அழைப்பைத் துண்டித்ததில் இருந்தே அர்ஜித் அகனுக்கு வேலையில் கவனம் செலுத்த இயலவில்லை.
அவன் வருந்தி அழைத்தும் போகாமல் இருந்தால் நன்றாக இராது என்றெண்ணி, அகமொழிக்கு அழைத்தான்.
வாங்கி லோனுக்காக மீண்டும் அப்ளை செய்திருந்தவள், வங்கியில் காத்திருந்தாள்.
முந்தைய நாள் நிகழ்வை ரிப்பீட் மோடில் எண்ணத்தில் ஓட்டிக்கொண்டிருந்தவள், ஆடவனின் எண்ணைக் கண்டு சில தயக்கத்திற்கு பிறகே ஏற்றாள்.
அவனோ முந்தைய நாள் இரவு எதுவுமே நிகழாதது போல, “ஓய் காந்தாரி… எந்தா செய்யுன்னு?” என வினவ,
“நான் பேங்க்ல இருக்கேன்… ஏன்?” என்றாள்.
அவனோ பிரணீத் பேசியதை கூறிவிட்டு, “ஞான் மதியம் கிளங்குன்னு (கிளம்புறேன்). நீ நாளைக்கு மார்னிங் வருன்னோ? ஃபிளைட் டிக்கெட் புக் செய்து வைக்காம்?” எனக் கேட்டான்.
“அப்டியா… ஆனா எப்படி வர்றது இங்க இருந்து.”
“கொச்சின் ஏர்போர்ட் போய்க்கோ. அங்க இருந்து ஃபிளைட் ஏறிக்கலாம். மொத்தமே 2.30 டு 3 ஹவர்ஸ் டிராவல் தான். இவிடே மேனேஜ் செய்யான் பற்றுமெங்கில், ஒருமிச்சு தன்னே போகாம்…(உன்னால இங்க மேனேஜ் பண்ண முடியும்னா சேர்ந்தே போய்டலாம்)” என முடித்திட, தனக்காக அவன் சிந்திப்பது புரிந்து, மணியைப் பார்த்தாள்.
“சரி பரவாயில்ல மேனேஜ் பண்ணிக்கிறேன். சேர்ந்தே போய்டலாம் அகன்…” என்றதும், இருவரும் வீட்டிற்கு வந்து அகமொழியின் பெற்றோரிடம் சொல்லிக்கொண்டு கொச்சின் விமான நிலையம் நோக்கிப் புறப்பட்டனர்.
அந்நேரம் அகமொழியின் எண்ணிற்கு பிரணீத் அழைக்க, “அகன் ப்ரோ எனக்கு பண்றாரு…” என்றதில், “அட்டென்ட் செய்யாத. சர்ப்ரைஸா போகாம்!” என்றதில் அவளும் நமுட்டு நகையுடன் அழைப்பை ஏற்காது போனாள்.
பிளைட்டில் ஏறி அமர்ந்ததும், முதல் தடவை பயணம் மற்றும் புது ஊருக்குச் செல்வதை எண்ணி அவளுக்கு எக்சைட்டிங்காக இருந்தது.
“நீ சென்னைக்கு போயிருக்கியா அடிக்கடி?” விழிகளை உருட்டிக் கேட்டவளை ஒரு மாதிரியாகப் பார்த்து மையமாகத் தலையாட்டி வைத்தான்.
“ப்ரோ இருக்கறதுனால போயிருப்ப தான…” அவளே பதில் கூறிட, அதற்கும் அவளறியாத கேலிநகை அவனிடம்.
“நீ சென்னைக்கு போயிருக்காயோ?” அர்ஜித் கேட்டதில், “இல்ல நான் தேனீ, அடிமாலி பக்கம் தவிர எங்கயும் போனது இல்ல. இதுவரை நான் பீச்சே போனது இல்ல. பட் புது ஊருக்கு டிராவல் பண்ண பிடிக்கும்” என்றாள் உற்சாகமாக.
அவளை ரசனை மின்னப் பார்த்தவன், “ஏன் போயதில்லா?” எனக் கேட்க,
“ப்ச், நான் ரிஷு ரூஹி மூணு பேரும் பிளான் எல்லாம் பயங்கரமா போடுவோம். ஆனா ஒன்னும் ஒர்கவுட் ஆகாது” வாயைப் பொத்தி சிரித்ததில், “அச்சனும் அம்மையோடேயும்?” அவன் மீண்டும் வினவினான்.
“எங்க அப்பா தான? லீவ் நாள்ல அவரை வெளில கிளப்புறதே கஷ்டம்” இருவரும் ஏதோ ஒன்றைப் பேசியபடி வர, விரல்களால் தொடையில் தாளமிட்டவன், “மொழி… ஞான் எந்தா வொர்க் செய்யுன்னு தெரியுமோ?” என ஆரம்பித்தான்.
‘ம்ம் தெரியுமே. அடுத்தவன் பொழப்பை கெடுக்குறது தான!’ வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டாள்.
“எந்தா?” அவன் புருவம் சுருக்கியதில், “நீ என்ன வேலை பாக்குறன்னு எனக்கு தெரியாதா? இப்ப நான் நல்ல மூட்ல இருக்கேன்…” என்றவள் அதை பற்றிய பேச்சை தவிர்த்தாள்.
“ஆமா நினக்கு அப்படியே எல்லாம் தெரிஞ்சுடும்! பரயுன்னது கேள்டி… ஞான்…” என ஆரம்பிக்கும்போதே விமானம் லேசாய் குலுங்கியது.
பின் கிடுகிடுவென அதிகமாக குலுங்க, ஹேண்ட் லக்கேஜ் வைக்கும் கம்பார்ட்மெண்ட்டில் இருந்த சிறிய பொருள்கள் சரியாக லாக் செய்யாததால் கீழே சரியும் அபாயம் இருந்தது.
அர்ஜித் அகனின் கையை இறுக்கப் பற்றிக்கொண்டவள், “என்னடா கூட்டிட்டு வந்து போட்டுத் தள்ள பாக்குறியா?” என மிரட்சியாகக் கேட்க, அவனோ தீயாக முறைத்தான்.
அவனும் விமானம் ஆடியதால் சற்றே பயந்திருந்தான்.
ஆனால் ஆட்டம் இன்னும் அதிகமாக, “அகன் பயமா இருக்கு” என அவனை இறுக்கிக் கொண்டாள்.
அவனும் அவள் விழாது இருக்கும் பொருட்டு, தன் நெஞ்சில் மறைத்து அழுத்திப் பிடித்தான்.
விமானப் பணிப்பெண் காற்றின் வேக மாற்றத்தால் இந்த திடீர் டர்புலென்ஸ் ஏற்பட்டதாகவும் பயணிகள் பேனிக் ஆகாமல் இருக்கவும் அறிவுரை கூற, அகமொழிக்கு உயிர் பயமே வந்து விட்டது.
“டேய் சாக போறோமா?” விழிகளில் அச்சத்தை தேக்கி கேட்க,
“லூசு… கொஞ்ச நேரத்தில இது செரியா கழியும்டி. ரிலாக்ஸ்…” என்றவன் அவளை நோக்கியே மேலிருந்து சிறிய பொருள்கள் விழுவதால் அவளை நன்றாக அவன் புறம் சரித்து அவன் அவளை மறைத்தபடி தலையை முன்னால் நகர்த்தி இருந்தான்.
பொருள்கள் விழுந்தாலும் அவனைத் தாண்டியே அவளைத் தீண்டும்.
அப்படி ஒரு கைப்பை விழுந்ததில், அவளை நன்றாகவே தன்னுள் அமிழ்த்தினான். பையின் கூர்மையான உலோகக் கொக்கி அவனது நெற்றியில் லேசாகக் கீறிவிட, சிறு கீறலிலிருந்து ரத்தம் கசிந்தது.
அவளோ அவனுடனே புதைந்து விட்டாள்.
சிறிது நேரத்தில் மெல்ல மெல்ல விமானம் சீராகத் தொடங்க, அகமொழிக்கோ இதயத்துடிப்பு இன்னும் சீராகவில்லை.
“காந்தாரி… நோக்கு, இப்போ ஃபிளைட் நார்மல் ஆயி கழிஞ்ஞு.” அவன் குரல் கேட்டதும் தான் கண் விழித்தாள்.
“இன்னும் உயிரோட தான் இருக்கோமா?”
“எடி… நின்னே அவ்ளோ சீக்கிரம் என்டே கையில் இருந்து தப்பிக்க விட்டுடுவேனா? நீ என்டே லீஸ் ஆனு…” எனக் கிண்டல் குரலில் ஒலிக்க, நிமிர்ந்து முறைத்தவள் அவனது இதழ்கள் குறும்புச் சிரிப்பை உதிர்ப்பதை கண்ட பிறகே கேலி செய்வதை புரிந்து கொண்டாள்.
அவனைக் கட்டிப்பிடித்தபடி அமர்ந்திருப்பதே அப்போது தான் உறைக்க, இன்னுமாக நிமிர்ந்தவள் அதன்பிறகே அவன் காயத்தைப் பார்த்தாள்.
“அகன்… உன் நெத்தில இருந்து இரத்தம் வருது” என்றதும், அவன் லேசாய் எரிந்து கொண்டிருந்த காயத்தில் கை வைக்க போக, அவனைத் தடுத்தாள்.
“கை வைக்காத!” என்றவள் விமான பணிப்பெண்ணை அழைத்து சத்தமிட தொடங்கினாள்.
“உங்களுக்கு பிளைட் எடுக்கும்போதே வெதர் அன்ஸ்டேபிளா இருக்குன்னு தெரியாதா? கம்பார்ட்மெண்ட்ல ஹேண்ட் லக்கேஜை சரியா லாக் பண்ணாம வச்சது யார் தப்பு?” கண்ணாபின்னாவென கத்தியவளை அர்ஜித் தான் அடக்கினான்.
“மொழி… அமைதியாயி இரிடி. இது ஜஸ்ட் ஒரு ஆக்சிடென்ட்.”
“நீ சும்மா இருடா. பாரு எப்படி அடிபட்டு இருக்குன்னு. பிளைட்ல வந்தா உயிரை கைல பிடிச்சுட்டே வரணுமா? காசு கொடுக்குறோம்ல. நம்ம சேஃப்டி இவங்களுக்கு முக்கியமா இருக்கணுமா இல்லையா? இடியட்ஸ்…” எனக் கொந்தளித்தவளை பணிப்பெண்ணும் நிதானமாக சமாளிக்க முயல முடியவில்லை.
“சாரி ஃபார் தி இன்கன்வீனியன்ஸ் சார்” அர்ஜித்திடம் மன்னிப்பு வேண்ட,
“இங்க பேசிட்டு இருக்கேன்ல. உன் சாரி என்னடி அங்க போகுது…” என வரம்பின்றி பேச ஆரம்பித்தாள்.
அவளும் விமானத்தினுள் நுழைந்ததில் இருந்தே பார்க்கிறாள். அந்த ஏர்ஹோஸ்டஸ் அர்ஜித் அகனைக் கண்டு சிரிப்பதும், அவனுக்கு மட்டும் தனியாக பானங்களை கொண்டு வருவதுமாக அவளை மெல்ல கடுப்பேற்றி இருந்தாள்.
“மொழி மொழி நிறுத்துடி. ப்ளீஸ்…” அர்ஜித்திற்கு இப்படி கண்டபடி கத்தி சண்டை போட்டதெல்லாம் பழக்கமே இல்லை.
அவளோ சந்தைக்கடைக்கு காய்கறி விற்க வந்தவள் போல சரமாரியாக கத்தினாள்.
மொத்த ஏர்ஹோஸ்டஸ் வந்தும் அவளை சமன்படுத்த முற்பட, அவளோ அசரவே இல்லை.
“ஹேண்ட் பேக் எல்லாம் யாரு கரெக்ட்டா லாக் பண்ணாம மேல வச்சது? நான் எல்லாரையும் கம்பளைண்ட் பண்ண போறேன்…” என்று மிரட்டிட,
“பொண்டாட்டி ப்ளீஸ்… காம் டவுன். இது சின்ன காயம் தான், நோக்கு…” என அவளைத் திருப்பினான்.
“டேய் வீங்கி போயிருக்கு. பாரு இரத்தம் வருது…” என மீண்டும் தீயாக பணிப்பெண்ணின்புறம் திரும்பியவள், “ஃபர்ஸ்ட் எய்ட் இருக்கா இல்ல அதுவும் நாங்க பாராஷூட்ல இறங்கி போய் வாங்கணுமா?” எனக் குதறிட, அவளோ தப்பித்தோம் பிழைத்தோம் என ஓடியே விட்டாள்.
‘இனி இவனை நீ சைட் அடிப்ப…’ எனப் பற்களை கடித்து தனக்குள் கடிந்து கொண்டவளிடம்,
“எடி… நீ முதல்ல கோபத்தைக் குறை. அட உக்காரேன். ஒன்னும் இல்ல. ஜஸ்ட் காம் டவுன்…” அர்ஜித் பொறுமையாக கூற,
“என்னடா ஒன்னும் இல்ல” என எரிந்து விழுந்தாள்.
தனது துப்பட்டா கொண்டு மெல்ல அவன் காயத்தில் ஒற்றி எடுத்தாள். வெப்ப மூச்சின் வேகமே அவளது சினத்தை எடுத்துரைக்க, சுற்றி முற்றி ஒரு முறை பார்த்தவன், அவள் கன்னம் பிடித்து அதரங்களில் அழுந்த முத்தமிட்டான்.
“இப்போ கோபம் போயதோ? ப்ளீஸ்டி சத்தம் போடாதே. என்டே செல்லப் பொண்டாட்டி அல்லோ!” எனக் கொஞ்சினான்.
“நீ கிஸ் பண்ணி என்னை டைவர்ட் பண்ண பார்க்காத அகன்…” என்றவளின் விழிகள் அவன் நெற்றி ஓரத்திலேயே தங்கி பரிதவித்தது.
வேகமாக முதலுதவி பெட்டியை எடுத்து வந்த பணிப்பெண், “லெட் மீ ஹெல்ப் யூ சார்?” எனக் கேட்க, அவளை நிமிர்ந்து காட்டத்துடன் பார்த்த அகமொழியைக் கண்டு திணறியவள், முதலுதவிப் பெட்டியைக் கொடுத்து விட்டுச் சென்றாள்.
“எடி நீ முதல்ல கோபத்தைக் குறை…” எதையாவது வைத்து அவளை அடித்து விடுவாளோ என்ற படபடப்பு எழுந்தது அவனுக்கு.
ஐஸ் பேக்கை எடுத்து வீக்கத்தில் வைத்து அழுத்திட, அவனே பிடித்துக் கொள்ளப் போனான்.
“கையை எடுடா!” எனக் கடிந்ததில் அவனும் கையை பட்டென எடுத்துக்கொள்ள, அவளே மருந்தும் இட்டாள்.
சிடுசிடுவென இருந்தது அவள் முகம்.
அவளது கோபத்தை ரசனையுடன் ஊடுருவிக் கொண்டிருந்தவன், “கொஞ்ச நேரத்தில இது செரியா கழியும் மொழி…” என்றான் மிருதுவாக.
“நம்ம ரிட்டர்ன், ட்ரெயின் இல்லன்னா பஸ்ல வரலாம் அகன்!”
“ஆக்சிடென்ட் ஏதில் போயினாலும் நடக்கும் மொழி…”
அவளிடம் பதில் இல்லை.
“இப்ப பரவாயில்லையா?” என்றாள் விரல்களால் அவனது நெற்றியை வருடியபடி.
“பரவாயில்லைடி”
“ம்ம்!”
விமானம் தரையிறங்கிட, அங்கேயே அவர்களை அழைக்க கார் ஒன்று தயாராக நின்றது. ஓட்டுநர் கார் சாவியை கொடுத்து விட்டுச் சென்றார்.
ப்ரணீத்திடமும் விவரம் கூறவில்லை. கேபும் புக் செய்யவில்லை. பின் எப்படி அங்கு கார் வந்து நின்றது என்ற சந்தேகம் அவளுக்கு வராமலே போனது.
அவள் இன்னுமே விமான மேனேஜ்மென்ட் மீது அல்லவா கோபமாக இருந்தாள்.
“காந்தாரி… முகத்தை கொஞ்சம் நார்மலா வை. இங்ஙனெ (இப்படியே) ப்ரணீடே வீட்டிற்கு வந்தா நல்லாயிருக்கில்லாடி. ப்ளீஸ் எனக்காக…” எனக் கண்ணைச் சுருக்கி கெஞ்சலாகக் கேட்க, அதன்பிறகே முயன்று மனதை நிதானப்படுத்தினாள்.
“என்னவோ நேத்துல இருந்து நேரமே சரி இல்ல!” ஜன்னல் வழியே வெறித்து முணுமுணுத்தாலும் அவனுக்கும் கேட்டது.
“அங்ஙனெ பொத்தாம் பொதுவாய் பரயான் பற்றில்லா… (அப்படி பொத்தாம் பொதுவா சொல்ல முடியாது)ஸ்வீட் மொமெண்ட்ஸும் இருந்தல்லோ.” அவனும் முணுமுணுத்தான்.
“ம்ம்?” அவள் கேள்வியாய் அவனது முகம் பார்க்க, சில்மிஷத்துடன் புன்னகைத்தான்.
வெட்கத்தை தாண்டியும் ஒரு ஆதங்கம் சூழ, “ஒரே நைட்டுல எல்லாம் முடிஞ்சுடாதுன்னு குத்தி காட்ட தான சகிச்சுக்கிட்ட. அதுல எங்க இருந்து ஸ்வீட் வந்துச்சு?” என அடிக்குரலில் குதறிட, அர்ஜித் அகனின் முகம் மாறியது.
விழிகளை சாலை நோக்கித் திருப்பிக் கொண்டவன், மீண்டும் அவள் புறம் குனிந்து, “குத்திக்காட்டணும்னு எனக்கும் ஆசை அல்ல மொழி… ஆனா உன்டே மேல இருக்குற கோபம் எனிக்கு போயதில்லா!” என்றான் அனலாக.
“எனக்கு மட்டும்? இதை ஸ்டார்ட் பண்ணது நீ அகன். நீ தான் முதல்ல என் நிச்சயத்தை நிறுத்துன. உன் கூட நைட்டு தங்குனேன்னு…”
“எல்லாம் முடிஞ்ஞுன்னு ஞான் மென்ஷன் செய்ததில்லா.”
“அதான், என் சேரியை எடுத்து வந்து குடுத்து இன்டைரக்ட்டா சொல்லிட்டியே. இதுல தெளிவா சொல்ல என்ன இருக்கு?”
“என்டே கேரக்டரை அசாசினேட் செய்தப்போ எனக்கும் அப்படி தான் இருக்கும்! ஆருன்னு தன்னே அறியாத ஒருத்தரை பத்தி, எதையும் விசாரிக்காதே ரிஸார்ட்டில் இருக்குற பொண்ணுங்களையும் சேர்த்து அசிங்கப்படுத்தியது நீ தான்! பிசினஸில் ப்ராப்ளம்னா அது பிஸினஸோடே தான் இருந்திருக்கணும்… ஐ ஜஸ்ட் ஹேட் இட்!” என்றான் கோபத்துடன்.
அப்போதும் ரூஹி மீது பழி போட பிடிக்காமல் அமைதியாகி விட்டாள்.
அவன் ரிவியூ கொடுத்ததில் தானே இத்தனையும். அவன் மட்டுமென்ன, தன்னைப் பற்றி அசிங்கமான ரிவியூவை தானே கொடுத்தான். அவளது கிளாம்பிங்கிற்கு வரும் காதலர்களின் அந்தரங்கத்தை படம் பிடிப்பது போலான கருத்துகளை முன்வைத்தது அவன் தானே!
கேட்டால் அதற்கும் காரணம் சொல்வான்… அவனிடம் வாதாட விருப்பமின்றி மீண்டும் பார்வையைத் திருப்பிக் கொண்டாள். அதற்காக அவனிடம் மன்னிப்பு கேட்கவெல்லாம் அவளது ஈகோ அனுமதிக்கவில்லை.
அவன் மன்னிப்பை எதிர்பார்த்திருப்பானோ என்னவோ, ஒரு கணம் அவளையே பார்த்திருந்தவன், “ஈகோ பிடிச்சவ…” என திட்டி விட்டு, அவள் காதோரம் சரிந்தான்.
“நமக்கு பிசினஸ் டாக் தான் செட் ஆகல்ல மொழி. பட்சே, ஆஸ் அ வைஃபா யூ ஃபிட் மீ வெல்! நிஜமாய் நின்னே பழி வாங்க தான் கல்யாணம் செய்தேன். இப்போ பழி வாங்க தோணதில்லா… சகிச்சுக்க தான் நினைச்சேன். அதைத் தாண்டி, ஐ லைக் யூ!” என்றதில் விழி அதிர அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
இத்தனை வெளிப்படையாக அவன் தன்னைப் பிடித்திருப்பதாகக் கூறியது அவளது ஈகோவையும் சற்று குறைத்தது.
“நானும் உன்னைப் பிடிக்காம தான் மேரேஜ் பண்ணேன். ஆனா உங்கிட்ட இவ்ளோ கம்ஃபர்ட்டபிளா ஃபீல் பண்ணுவேன்னு நானும் எதிர்பார்க்கல… நீ ஒரு ஹஸ்பண்ட் மெட்டீரியல் தான் மிஸ்டர் மலையாளி…” எனக் கண் சிமிட்டி அவளும் அவளது எண்ணத்தை ஒப்புக்கொண்டாள்.
“நீயும் ஒரு வைஃப் மெட்டீரியல் தான்…” அவன் முகத்தில் குறும்பு இழையோடியது.
நாக்கைத் துருக்கியவள், “இனி நமக்குள்ள பிசினஸ் டாக் வேணாம்” என்று கூறி விட, “அப்போ வேற எந்தா டாக் இருக்கலாம்?” என்றான் ஹஸ்கி குரலில்.
கன்னங்கள் இப்போது தடையின்றி சிவந்திட, சின்ன தயக்கம் அவளுக்கு.
“அது… வந்து… நான் வேணும்னே நேத்து அப்படி பண்ணல அகன்!” பாதியில் நின்று போன கூடலைப் பற்றி கூற,
“ஞானும் நின்னே குத்திக்காட்டுற இன்டென்ஷனில் நேத்து நைட்டு ஸ்டார்ட் செய்ததில்லா. ஒரு ஃபுளோவில் பரஞ்சு கழிஞ்ஞு… நீ உன்டே கிளாம்பிங்காக உன்னே அடமானம் வெச்சதாய் பரஞ்சதில் ட்ரிகர் ஆயிட்டேன்…” என்றதில் அவனை நிமிர்ந்து முறைத்தாள்.
“நானும் வேணும்னு சொல்லல. சும்மா ஃப்ளோல தான் சொன்னேன்.”
இருவருக்கும் மன்னிப்பை வேண்டிக்கொள்ள முற்றிலும் விருப்பமில்லை.
“சத்யமாயோ?” அவன் நன்றாக குனிந்து கேட்டதில் அவனது வெப்ப மூச்சு நெற்றி தழுவி சென்றது.
எப்போதும் அவன் நெருக்கத்தில் தேகம் மட்டுமே சிலிர்க்கும் இப்போது இதயமும் மெல்லச் சிலிர்த்தது.
“ம்ம்”
“செரி… ஞான் ரிஸார்ட்டில் நைட்டு…” என அவன் ஆரம்பிக்க,
ரிசார்ட் பற்றிய பேச்சே அவளுக்குப் பிடிக்காமல் போனதில், இந்தத் தருணத்தை கெடுத்துக் கொள்ள விருப்பமின்றி, “நமக்குள்ள பிசினஸ் பத்தின பேச்சு வேணாம்னு இப்ப தான் சொன்னேன்” என்றாள் முடிவாக.
ஏதோ சொல்ல வந்தவன், பின் பெருமூச்சுடன் “ஓகே… டீல்!” என்றதில், அவளும் அதனை விடுத்து, “இங்க மால் நிறைய இருக்குமோ” எனப் பேச்சை திசை திருப்ப, அவள் இழுத்த இழுப்பிற்கு அவன் மனமும் பின்தொடரச் சென்றது. இரு மனங்களும் மெல்ல புரிதலை நோக்கி பயணம் செல்ல… விபத்திற்குள்ளாகாது போகுமோ?
அகன் வசமாவாள்(வான்)
மேகா
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
35
+1
2
+1
1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


அகன் என்ன வேலை செய்கிறான் பிசினஸ் தானே பண்ணுகிறான்.
அவன் எதுவோ சொல்ல வர இவள் விடமாட்டேங்கறா… லைக் சீக்கிரம் லவ் ஆகும் போல 💖💞💕💜💛