Loading

அத்தியாயம்  21 ❤

வண்டியை நிறுத்தி விட்டு வீட்டிற்குள் நுழைந்த மஹிமாவின் முகத்தை ஆராய்ந்தார் சுவர்ணலதா.

அதில் களைப்பு தெரிய அது வரையில் அமைதியாக இருந்தவர் , அவளிடம் ,

” மஹி நேத்து அப்பா குடிச்சுட்டு வந்ததை பத்தியே நினைச்சு ஃபீல் பண்ணிட்டு இருக்கியா ?”

மஹிமா ” அம்மா அதெல்லாம் நான் எப்பவோ மறந்துட்டேன். மதியம் ஒரு மணிக்கு சாப்பிட்டது.இப்போ ரொம்ப பசிக்குது. நீங்க என்ன பண்றிங்க வேகமா கிச்சனுக்குப் போய் சாப்பாடு போட்டு எடுத்துட்டு வர்றீங்க ! ” என்று அவரைச் சமையலறைக்கு அனுப்பி வைத்தாள்.

சுவர்ணலதா சிரித்துக் கொண்டே,
”  நான் கூட நீ ரொம்ப ஃபீல் பண்றியோனு நினைச்சேன்.நீ பசிக்குதுனு சொல்ற ! “

அவளுக்குச் சாப்பாடு கொண்டு வந்து கொடுத்தார்.

கை கழுவாமலேயே தாய் கொண்டு வந்த சாப்பாட்டை உண்ண ஆரம்பித்தாள் மஹியா.

அதைப் பார்த்த சுவர்ணலதா ,
” கை கழுவாம சாப்பிட்டுட்டு இருக்க. என்ன பழக்கம் இது ?” என்று கடிந்து கொண்டார்.

மஹிமாவோ ,
”  வீட்டுக்குள்ள நுழையறதுக்கு முன்னாடியே வாட்டர் பாட்டில்ல இருந்த தண்ணில கை கழுவிட்டு தான் வந்தேன்மா ” 

சுவர்ணலதா அவளை நம்பாமல் பார்க்க,

மஹிமா ” ப்ராமிஸ் மா ”  உணவை விழுங்க ஆரம்பித்தாள்.

இதற்கிடையில் இன்னும் வீட்டிற்கு செல்லாமல் கல்லூரியிலேயே காத்திருந்து சிவரஞ்சனியும் கார்த்திக்கும் பேசிக் கொண்டு இருந்தனர்.

சிவரஞ்சனி ” அப்பறம் கார்த்திக் . மஹிமா என்ன சொல்றா ? ” அவனை நக்கலாகப் பார்க்க,

அதைக் கேட்டு சிரித்த கார்த்திக்,

” மஹிமாவுக்கு என்ன ! செமயா இருக்கா ! அதுவும் இன்னைக்குப் போட்டுட்டு வந்த அந்த லைட் ப்ளூ சுடிதார்ல சூப்பரா இருந்தா “

அவளது அழகை சிலாகித்துப் பேசினான்.

அதில் கடுப்பான சிவரஞ்சனி மேலும் அவனது வர்ணனைகளைக் கேட்கப் பிடிக்காமல் அதை நிறுத்தும் நோக்கத்தில்,

” அதைப் பத்தி எல்லாம் எனக்கு தேவை இல்ல. இது வெறும் சேலஞ்ச் தான். அதை முதல்ல நல்லா மூளைல ஏத்திக்கோ. நீ அவளை  உண்மையாவே லவ் பண்ணிருவ போல “

கார்த்திக் இப்போது அவளை ஆராயும் நோக்கில்,
” ஏன் பேபி ! உனக்குப் பொறாமையா இருக்கா ?”

சிவரஞ்சனி ” ச்ச ! ஜெலஸ் ஆ ! எனக்கா ! ஜஸ்ட் ஸ்டாப் இட் கார்த்திக். என்னோட லெவல் வேற , அவ வேற ! “

தற்பெருமை பேசினாள்.

கார்த்திக் ” ஆமாம். அதுவும் உண்மை தான் “

” இப்போ ஒத்துக்கோ. ஆனா காலைல அவளைப் பாத்து ஒரு லிட்டர் ஜொள்ளு ஊத்துற ,அதுவும் அவ ஈசியா அதைக் கண்டுபிடிக்கற அளவுக்கு ” அவனது தலையில் தட்டினாள்.

கார்த்திக் அவளது கைகளைப் பிடித்து அதை தடவிக் கொண்டே,
” சிவரஞ்சனி பேபி ! என் தலை மேல கை வைக்குற வேலையை இன்னையோட விட்றனும் சரியா “

அவளை எச்சரிக்கும் குரலில் கூறினான்.

சிவரஞ்சனி அதைப் பார்த்து மிரண்டாலும் தனது கைகளை அவனிடமிருந்து இழுத்துக் கொண்டே,
” ஓகே கார்த்திக்.நம்ம சேலஞ்ச் முடிய இன்னும் கொஞ்ச நாள் தான் இருக்கு. அதுக்குள்ள இந்த மஹிமா சேப்ட்டரைக் க்ளோஸ் பண்ணனும் “

” இது ரொம்ப கஷ்டம் . ஏன்னா, மஹிமா உன்ன மாதிரி பொண்ணு இல்ல. அவ கொஞ்சம் டிஃப்ரன்ட் ஆக இருக்கா. அதனால் அவ்ளோ சீக்கிரம் நம்ம சேலஞ்ச் முடியாதுனு நினைக்கிறேன் “

சிவரஞ்சனியோ அவனை எரித்தால் என்ன ? என்பது போல் பார்த்தாள். ஏனெனில், கார்த்திக்கிற்கு மஹிமாவின் மீது காதல் ஈர்ப்பு ஏற்பட்டு விட்டதோ என்ற புகைச்சல் உள்ளே இருப்பதே அதற்கு காரணம்.

ஆனால் கார்த்திக்கோ இதை எதையும் அறியாதவன் போல,
” நம்ம சேலஞ்ச்சோட கால அளவை கொஞ்சம் எக்ஸ்டண்ட் பண்றியா ? “

சிவரஞ்சனி ‘முடியலடா சாமி ‘ என்று அவனை முறைத்துக் கொண்டு இருந்தாள்.இவன் கண்டிப்பாக அவளிடம் காதலில் விழுந்து விட்டான் என்பதை ஊர்ஜிதப்படுத்திக் கொண்டாள்.

கார்த்திக் ” சிவா உங்கிட்ட தான் கேக்குறேன் ! ”
அவளை அழைக்க,

சிவரஞ்சனி ” ஹாங்… ! பாக்கலாம். நீ ஃபர்ஸ்ட் அவளை உன்னப் பாத்து சிரிக்க வை ” 

கார்த்திக் அவளை முறைத்துக் கொண்டே
” காலைல கேன்டின்- கு போறதுக்கு முன்னாடி நல்லா தான் சிரிச்சு பேசினா. நீ வந்ததும் தான் உர்ருனு ஆகிட்டா ”  வேண்டுமென்றே அவளது காலை வாரி விட,

சிவரஞ்சனி ” பொய் சொல்லாத கார்த்திக் “என சீறினாள்.

கார்த்திக் ” நான் சொல்றது உண்மை தான் சிவா பேபி. நீ இருக்கிற இடமே நெகட்டிவ் வைப்ஸ் – னால நிறைஞ்சுருது.நீ இனிமேல் நான் மஹிமா கிட்ட பேசும் போது அங்க வராத “

மேலும் மேலும் அவளை கோபப்படுத்த அவனிடம் அதற்கு பேல் வாயைக் குடுத்து வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டாம் என நினைத்த சிவரஞ்சனி ,

” ஓகே கார்த்திக். நாம பப்புக்கு போய் ரொம்ப நாளாச்சு. டுடே போலாமா ? ”  கண்களில்  எதிர்பார்ப்புடன் கேட்டாள்.

ஆனால் கார்த்திக்கோ அவளது எதிர்பார்ப்பை அலட்சியம் செய்யும் நோக்கில்,

” நோ பேபி ! டுடே நான் ரொம்ப பிஸி. அதனால நெக்ஸ்ட் வீக் பாக்கலாம். பாய் ” என்று நடந்து சென்று விட்டான்.

கோபத்தில் மூக்கு விடைக்க கையில் இருக்கும் மொபைலை உடைப்பது போல் அழுத்திப் பிடித்துக் கொண்டே ,

‘மஹிமா ! உன்ன பழி வாங்கனும்னா கணக்குப் போட்டுத் தான் கார்த்திக்கிட்ட சேலஞ்ச் பண்ணேன். ஆனா இப்போ அவன் உன்ன பாக்காம இருந்து இருந்தாலே பெட்டர்னு தோனுது. சீக்கிரம் இதுக்கு ஒரு முடிவு கட்றேன் ‘
மனதில் கறுவிக் கொண்டே அந்த இடத்தை விட்டு அகன்றாள்.

வீட்டில் தன் அறையில் நுழைந்த சிவரஞ்சனி பார்க்கும் பெருட்களை எல்லாம் உடைத்துக் கொண்டு இருக்க அதைப் பார்த்து பயந்த வேலையாட்கள்
அவளை தனியே விட்டு நகர்ந்தனர்.

சீற்றம் குறைந்து  சோபாவில் அமர்ந்தவள், தனது அடுத்த கட்ட திட்டத்தைப் பற்றிய யோசனையில் தன்னை ஆழ்த்திக் கொண்டாள்.

கார்த்திக் வீட்டில்  செல்பேசியை கையில் வைத்துக் கொண்டு குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டே ஒருவரது அழைப்பிற்காக காத்திருந்தான்.

அவனது எதிர்பார்ப்பின் கால அளவு நீண்ட நேரம் ஆகாமல் அந்த நபர் கார்த்திக் கிற்கு அழைப்பு விடுத்தார்.

முதல் ரிங்கிலேயே எடுத்தவன்,
” ஹலோ ஜகன். நான் கேட்ட டீடெய்ல்ஸ் கிடைச்சுதா ?”

அந்த ஜகன் என்னும் நபர் கூறிய தகவலில் நிம்மதியும் , மகிழ்ச்சியும் அடைந்தவன் ,
” இனிமே நான் பாத்துக்கறேன் “

ஜகன் ” யாரு சார் அந்தப் பொண்ணு ? இவ்ளோ உன்னிப்பா அவளைப் பத்தி டீடெய்ல்ஸ் கேட்கறீங்க ?”

” அது உனக்குத் தேவையில்லாத விஷயம் ” என்று அழைப்பைத் துண்டித்தான்.

மறுநாள் காலையில் சிவரஞ்சனியால் ஏற்படப் போகும் பூகம்பத்தை அறியாமல் கார்த்திக்கும் , மஹிமாவும் நிம்மதியாக உறங்கினர்.
  
     – தொடரும்

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
2
+1
1
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்