Loading

பகுதி – 20

காலையிலிருந்து மூவரும் அசையாமல் அப்படியே இருக்க சூரியன் உச்சிக்கு வந்து நின்று சொன்னது காலம் உங்களது கஷ்டங்களுக்காக நிற்கபோவதில்லை நடந்தை மாற்றித்தர போவதில்லை என்று.

தயா எழுந்து வெளியே சென்றான்.
அமியும் அவள் அறைக்கு சென்றுவிட்டாள். தயாளினி அவளுடைய வேலைகளை கவனிக்க எழுந்து சென்றாள்.

மூன்று நாட்களாக அந்த வீடு மயான அமைதியை தத்தெடுத்து இருந்தது. ஒருவருக்கொருவர் பார்த்துக் கொள்வதில்லை பேசிக்கொள்வதில்லை.

மூன்றுநாள் கழித்து இனி கோவிலுக்கு சென்றிருந்தாள்.

தயா அமிர்த்தாவிடம் பேச வந்தான்.

அவள் ஷோபாவில் அமர்ந்திருக்க அவளுக்கு கீழே அமர்ந்து அவள் கால்களை கட்டிக்கொண்டு அவள் மடிமீது தலை வைத்து படுத்திருந்தான்.

ஸாரி அமி என்மேல தப்புதான் நான் ஒரு பொண்ணோட உணர்வுகளை மதிக்காம நடந்துட்டன். இனி அடிக்கடி கேட்டா நீ ஆம்பளையா ஆம்பளையான்னு இப்போ எனக்கே அந்த சந்தேகம் வந்திருச்சி.

அண்ணா ஏன் இப்படி பேசுற என் மேலதான் தப்பு உங்க பிரச்சனைக்கு நடுவுல நான் வந்திருக்க கூடாது.

இல்லை அமி நீ மட்டும் கேக்கலைனா அவ பேசிருக்கவே மாட்டா அவ மனசுல இருக்கிறது எனக்கு தெரியாமையே போய்ருக்கும்.

ஸாரி அமி அண்ணா தப்பு பண்ணிட்டன் அவன் அழ அவளும் அழுதாள்.

யாருமில்லாதவளுக்கு அனைத்துமாய் இருந்தவன் அவனின் கண்ணீருக்கு இவள் காரணமாய் இருக்கிறாள்.

அமி நீயும் அவளை மாறி என்னை தப்பு நினைக்கிறியா தேவைக்காக அவள பேச முடியாமல் தயங்கினான்.

அமியோ அவனை புரியாத பார்வை பார்க்க சொன்னான் அவன் காதலை முதல் முறையாக திருவாய் மலர்ந்து.

ஐ லவ் ஹர் அமி. நான் அவளை காதலிக்கிறன் என்றவன் அவளை பார்த்தது முதல் நடந்தது அத்தனையும் சொன்னான்.

அமி நான் அன்னைக்கி என் காதலை சொல்லதான் போன ஆனா அவ ரொம்ப வெக்ஸ் ஆ இருந்தா. இப்போ நான் லவ்வ சொன்னா என்னை இந்த ஜென்மத்துல ஏத்துக்க மாட்டா. நான் கொஞ்சம் செல்பிஷ்ஷா திங்க் பண்ணது அந்த இடத்துலதான்.

அவ வேணும் எனக்கு மட்டும் வேணும்னு நினைச்ச சோ எப்படியாச்சும் கல்யாணம் பண்ணிக்கனும்  நினைச்ச அதான் அவளை மிரட்டுன ஆனா அவளே மேரேஜ்க்கு ஓகேனு சொன்னதுதான் கல்யாணமே பண்ண.

இத்தனைநாளா என் காதலை சொல்லதான் முயற்சி பண்ற அவ ஏதோ வில்லன் மாறியே பாத்தா அதான் கொஞ்சம் டைம் எடுத்து சொல்ல வெயிட் பண்ண நீ கேட்டியே அன்னைக்கி நைட்தான் நாங்க நார்மலாவே பேச ஆரமிச்சோம் அவகிட்ட லவ்வ சொல்லதான் வந்தன் அதுக்குள்ளதான் என்னமோ ஆய்டுச்சி

அமிக்குதான் மேலும் குற்றவுணர்ச்சி அதிகரித்தது. அண்ணனின் வாழ்க்கையை கேள்விகுறி ஆக்கிவிட்டோமே என்று.

சிறுபிள்ளைத்தனமாக நடந்திருக்கிறாள். கணவன் மனைவிக்கிடையில் பிரச்சனை என்றால் அவர்கள் கட்டிக்கொண்டு புரண்டாலும் சரி வெட்டிக்கொண்டு செத்தாலும் சரி மூன்றாவது நபர் உள்ளே நுழையக்கூடாது.

பெண்களின் மனதை அறியாதவளா அவள் அண்ணன் காதலோடு இதை எல்லாம் செய்திருக்கிறான் என தெரிந்திருந்தாள் நிச்சயம் தயாளினி கொஞ்சம் யோசித்திருப்பாள். மனம் இறங்கி இருப்பாள். எல்லாம் கெட்டது அவளால்தான்.

ஸாரி அண்ணா என்னால தா அண்ணிக்கும் உனக்கும் சண்டை ஸாரி அண்ணா என் தப்புதான் அவனின் நெஞ்சில் கண்ணீர் வடித்தாள்.

அப்போது தயாளினி உள்ளே வந்தாள். இருவரும் இருக்கும் நிலையை பார்த்து உணர்ந்தாள். இருவரும் சமாதானமாகி விட்டார்கள் என்றே.

அவளுக்கும் அது ஆறுதலை தந்தது. பாவம் அப்பா அம்மா இல்லாமல் ஒருவருக்கொருவர் ஆறுதலாக இருந்தனர் அவள் வந்துதான் அவர்களுக்கிடையில் பிரச்சனை என்று.

இப்போது கொஞ்சம் நிம்மதி வந்தது.

அவள் சாப்பாடு பாத்திரங்களை டேபிளில் வைத்தாள். இருவரையும் பார்த்தாள். அழைக்க வாய் எடுக்க இருவரும் வந்து அமர்ந்துவிட்டனர்.

அவர்களுக்கு பரிமாற தயா தடுத்து அவனே பரிமாறிக்கொண்டான். இனிக்கு வலித்தது அவனது செய்கை. இத்தனை நாட்களாக பழகிய ஒன்றை செய்யவிடாமல் தடுப்பதால் வந்த வலி அது. மற்றபடி ஒன்றுமில்லை.

நீயும் உக்கார்ந்து சாப்பிடு இனி உன்கிட்ட கொஞ்சம் பேசனும்.

இருவரும் சாப்பிட அமிர்தா கல்லூரிக்கு கிளம்பினாள்.

மூவருமாக சென்றனர் அவளை கல்லூரியில்விட்டுவிட்டு தயா தயாளினி இருவரும் காரில் சென்றனர்.

தயா காரை நிறுத்த அவள் கேள்வியாக பார்த்தாள்.

அவன் இறங்க சொன்னான். அவள் இறங்கிட அன்று அவள் நடுரோட்டில் அவன் காலில் விழுந்த இடம்.
பழைய நினைவுகள் இருவருக்கும்.

என்னை மன்னிச்சிடு இனி என்றவன் அங்கே அவள் காலில் விழுந்தான்.
தயாளினி பதறிவிட்டாள்.

என்னங்க என்ன பண்றீங்க

எழுந்து சொன்னான் மன்னிச்சிடு இனி. நான் பண்ணதுக்கு இந்த ஒரு வார்த்தை போதாதுதா ஆனா எனக்கு வேற வழி தெரியலை. இழந்த இட்ததுலதான திரும்ப பெறனும்.

ரோட்டில் வருபவர்கள் போபவர்கள் எல்லாம் அவர்கள் பார்த்தனர்.

உன்னையும் உன்ன சேர்ந்தவங்களையும் ரொம்ப கஷ்டபடுத்திட்டன். சின்ன வயசுலருந்து நான் பிடிச்சதுதான் நான் செய்றதுதான் சரின்ற நினைப்புலயே வளர்ந்திட்டன். யாரும் இதுவரை என்னை எதிர்த்ததில்லை.

முதல் முறை நான் உன்னை அதட்டும்போது நீ பயந்திருந்தா நான் உன்னை அப்படியே கண்டுக்காம விட்ருந்துருப்பனோ என்னவோ நீ அசராம நின்னது என்னை பாதிச்சிது. உன்கிட்ட பிரச்சனை பண்ணது உன்னை திரும்பி திரும்பி பாக்கனும்ற எண்ணத்துலதான்.

என்ன அப்படி பாக்குற இதுலாம் எனக்கே லேட்டாதான் புரிஞ்சிது. உன்ன இங்க கால்ல விழவெச்சன்ல அப்றம்தான் புரிஞ்சிது. சத்தியமா அன்னைக்கி நீ விழுவனு நான் நினைக்கவே இல்ல உன்ன சீண்டதான் செஞ்ச ஆனா நீ விழுந்த செகண்ட்தான் புரிஞ்சிது உன் வேலைய நீ எவ்ளோ லவ் பண்றனு.

அதுகப்றம் நீயும் உன் நினைவும் என்னை சும்மாவே விடலை தொறத்தி தொறத்தி டிஸ்டர்ப் பண்ணுச்சி கண்ணமூடி யோசிச்சா காதல்னு பதில் சொல்லுச்சி

அவள் கருவிழிகளை பெரிதாய் விரித்திருந்தாள் இவ்வார்த்தைகளை கேட்டு.

அந்த செக்ண்டே உன்கிட்ட சொல்ல வந்த ஆனா நீ கோவமா பேசி சபதம்லாம் போட்டு வேறமாதிரி நடந்துருச்சி

அப்போ ரொம்பவே செல்பிஷ்ஷா சைலடிஷ்ஷா திங்க் பண்ண நீ எனக்கு வேணும் எப்படி அடையனும்னு அதான் மிரட்டுன.

ஐ ஸ்வேர் என் அம்மா மேல சத்தியம் நீ உன் வாயால கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னாதான் உன் கழுத்துல தாலி கட்டனும்னு அன்னைக்கே முடிவு பண்ண நீ சீக்கிரமா மேரேஜ் வெக்க சொல்லவும் என்னால எதையுமே யோசிக்க யோசிக்க முடியலை அவ்ளோ சந்தோஷம் உடனே பண்ணிகிட்டன்.

அப்றம் வீட்ல உன்ன கிஸ் பண்ணது வம்பு பண்ணது எல்லாமே என் முழுமனசோட லவ்வோடதான். தேவைக்காக இல்லை. பட் அது உனக்கும் இருக்கனும்ன்றதை இந்த மூளையில்லாதவன் யோசிக்காம போய்ட்டன்

என்னை மன்னிச்சிடு இனி. இதுக்கு நீ என்னை தண்டனை கொடுத்தாலும் ஏத்துக்குறன். இனி உன்னோட விரும்பம்தான் இனிமே.

நீ எங்கவேணா வேலைக்குபோ என்ன வேணா பண்ணு நான் உனக்கு சப்போர்ட்டா இருப்ப As a friend அ.
உனக்கு என்னை காதலனா ஏத்துக்க தோணுனா நாம சேர்ந்து வாழலாம் இல்லை உனக்கு யாரையாவது பிடிச்சிருந்தாலும் சரி நான் தடுக்கமாட்டன்.

இப்போ என்னை நண்பனா ஏத்துக்குறியா இனி.

தெளிவாக பேசி முடித்து அவள் முகம் பார்த்திட அவளோ அவனது அதிரடியான காதலில் அசந்துபோய் நின்றிருந்தாள்.

இதை அவள் நிச்சயம் தயாவிடமிருந்து எதிர்பார்க்கவில்லை.

அத்தோடு அவன் பேசியதை உணரவே அவளுக்கு நிமிடம் பிடித்தது. ஏதும் பேசாமல் இருந்தாள். பின் அமைதியாக காரில் ஏறிக்கொள்ள அவன் வீட்டிற்கு அழைத்து வந்தான்.

அவள் நன்றாக யோசித்தாள். இறங்கும் போது பேசினாள்.

தயா நான் வேலைக்கு போறன். ஆப்வியஸ்லி நான் உங்க வீட்லதா இருந்தாகனும். அதுதான் எனக்கும் உங்களுக்கும் மரியாதை என்னால உங்க மரியாதை போறதை நான் விரும்பலை. அன்ட் என் மனசுல உங்க மேல எந்த ஃபீலிங்க்சும் இல்லை நான் உங்களை விரும்பலை.   பட் நாம நல்ல பிரண்ட்ஸா இருக்கலாம்.  நடந்ததையே நினைச்சிட்டு இருந்தா பிரசண்டை வாழ முடியாது. என்று கை நீட்டினாள்.

அவனும் கைகுலுக்கினான்.

இது எவ்ளோ நாளைக்குனு தெரியலை பட் பாக்கலாம் ஐ ஃபீல் பெட்டர் நவ்.

தயாவும் சிரித்தான். சேம் ஃபீலிங்க் என்றான்.

இருவரும் வீட்டிற்கு செல்ல தயா அவன் அறைக்குச் சென்றான். அவனது பொருட்களை எல்லாம் எடுத்துக்கொண்டு வெளியில் வந்தான்.

என்ன ஆச்சி எங்க கிளம்பிட்டீங்க

பக்கத்து ரூம்க்கு மா

ஏன்

ஏன்னா கேர்ள் பிரண்டோட ஒரே ரூம்ல இருக்கிறது தப்புமா

அவனின் இந்த அதிரடி மாற்றத்தில் இனிக்கு தலையே சுற்றியது.

தயா பிளீஸ் இப்படி ஒரு டிராமேட்டிக் சேன்ச்ஜ் வேணா என் ஹார்ட் இவ்ளோ அதிர்ச்சிய தாங்காது ஒரே நேரத்துல

அவன் பொய்யாய் முறைத்தான்.

சும்மா சும்மா சொன்ன பா. நீங்க  இந்த ரூம்லயே இருங்க நான் ரூம் மாறிக்கிற ஏன்னா உங்க ரூம்ல பழகுன இடத்துலருந்து மாறுனா ஒரு மாதிரி இருக்கும்

ம்ம் சரி என்றிட இனி அவளது பொருட்களை எடுத்துவந்து வேறு அறையில் வைத்தாள்.

அவள் வேலை செய்யப்போக அவனும் உடன் செய்தான். இனிமே எல்லாமே ஷேர் பண்ணிக்கலாம்  இனி.

அவள் புரியாமல் என்ன

வீட்டுவேலை கரண்ட் பில் வீட்டு செலவு எல்லாமே ஷேர் பண்ணிக்கலாம். என் வைப்க்குதான் என்னால செலவு பண்ண முடியும் பிரண்டுக்கு இல்லை. அதும் உங்களுக்கு நான் செலவு பண்ணா உங்க செல்ப்ரெஸ்பெக்ட் என்னாகுறது.

அவள் ஒரு பார்வை பார்த்தாள்.

தயா உன்னை கேலி பண்றனு நினைக்காத உனக்கு இங்க uncomfortable ஆ இருக்ககூடாதுன்றதுக்கா சொல்ற

புரியுது எனக்கும் பட் வேலை கிடைக்கிறவரை

அதுவரை என் பிரண்ட்க்கு நான் செலவு பண்ற உன்னால எப்ப முடியுதோ அப்போ திருப்பி கொடு வாங்கிக்குறன்.

இனி மனம் லேசானதுபோல உணர்ந்தாள். மனம்விட்டு சிரித்தாள். இதுதான் அவளுக்கு வேண்டும். அவளுக்கான சுதந்திரம் அவளுக்கான அடையாளம் அவளுக்கான முடிவை அவளே எடுக்கும் உரிமை இதைத்தான் எதிர்பார்த்தாள்.

தீபனுக்கு அழைத்து நடந்ததை சொன்னாள். அவனுக்கோ எரிச்சல் தான் வந்தது. நல்ல வாழ்க்கையை நாசம் பண்ணிக்கொண்டு நிற்பதாக தோன்றியது. இதில் அவனுக்கு ஆச்சர்யம் கொடுத்தது தயாவின் காதலும் அவனது தற்போதைய நடவடிக்கையும்.

என்னமோ போ என்று அமைதியாகிவிட்டான். அவனிடம் வேலைக்கு கேட்டிருந்தாள்.

வீடு சகஜநிலைக்கு வந்திருந்தது.
அமிர்த்தா அண்ணனின் முடிவை ஆதரித்தாள். வீட்டு வேலைகளை மூவரும் செய்தனர்.

அமிக்கு படிக்கும் வேலை இருப்பதால்  வேலை செய்ய வேண்டாம் நானே செய்கிறேன் என சொல்லிவிடுவான் தயா.

அவரவர் துணிகள் அவரவர் துவைத்துக் கொள்வர்.

சமையல் தயாவே செய்தான் அவர்கள் வீட்டில்  தோழியாக தங்கி இருப்பவள் உதவி மட்டும் செய்தாள் போதும் என்று சொல்லிவிட்டான். அவள் வருவதற்கு முன் எப்படி இருந்தானோ அப்படியே அவ்வீட்டை மாற்றினான்.

இனி அவனது கிரெடிட்  கார்டை அவனிடமே கொடுத்துவிட்டாள். தயாவும் மறுப்பேச்சின்றி வாங்கிக் கொண்டான். ஆனால் இனிக்கு ஒருமாதிரியாக இருந்தது அந்த உணர்வுக்கு என்ன என்றே அவளால் புரிந்துக்கொள்ள முடியவில்லை.

இப்படியே  அந்த வாரம்  சென்றது. வார இறுதியும் வந்தது.

அமியும் இனியும் மட்டுமே வீட்டில் இருந்தனர். தயா லேப்க்கு சென்றிருந்தான்.

அமி அவளுக்கு கேக் பிடிக்கும் என்று சொல்ல இனி செய்து தருவதாக சொல்ல அவளோ இருவரும் சேர்ந்தே செய்வோம் என அவளும் உதவிக்கு வந்தாள். அமி அவளை அண்ணி என்று அழைப்பதை நிறுத்தி இருந்தால். வாங்க போங்க அவ்வளவே அண்ணனையே ஏற்றுக்கொள்ளாத போது உறவுகொண்டாடுவது முறையில்லையே.

இருவரும் கேக் செய்திருந்தனர். எல்லாம் செய்து முடித்து டைனிங் டேபிளில் வைத்து சாப்பிடபோக அமியோ கசகசன்னு இருக்கு குளிச்சிட்டு வரன் என்று சொல்லி சென்றாள்.

இனியோ அவள் வேலை விஷியமாக தீபனிடம் பேசலாம் என்று அவன் ஃபோனை எடுக்க சென்றாள்.

இருவரும் கேக்கை போட்டுவிட்டு அவரவர் வேலைக்கு சென்றிருக்க தயா வந்தான்.

உள்ளே வரும்போதே கேக்கின் மணம் அவனை சுண்டி இழுக்க உள்ளே வேகமாக வந்தான்.

அதனை பார்த்து கண்கள் மின்னியவன் எடுத்து சாப்பிட்டான். அதன் சுவை நாக்கில் கரைய வெட்டி வெட்டி சாப்பிட ஆரமித்தான்.

மொத்த கேக்கையும் முழுங்கி இருக்க கடைசியா இருந்தது ஒரே ஒரு பீஸ் கேக்.

இருவரும் ஒரே நேரத்தில் கத்தினர்.

அண்ணா…..
தயா…….

அவனோ திருதிருவென விழித்தான். கையில் வாயில் கேக்கோடு.

அமி பாப்பா நீ செஞ்ச கேக் அற்புதம் செம்ம டேஸ்ட் போ நானே சாப்பிட்டு காலி பண்ணிட்ட

அவளோ அவனிடம் சண்டைக்கு நின்றாள். அவன் முடியை பிடித்து மாவாட்டினாள்.

எரும எரும திண்ணுமாடு கேக் திருடா ஏன்டா எங்க கேக்கை சாப்பிட்ட இடியட்

அம்மா வலிக்கிது டி விடு டி பைத்தியம்

ஏங்க வந்து காப்பாத்துங்க பாத்துட்டு நிக்குறீங்க இனியை துணைக்கு அழைத்தான்.

போங்க தயா ஆசையா  செஞ்சோம் நீங்களே சாப்பிட்டீங்க என்று அவளும் முறைத்தாள்.

கேக் சாப்பிட்டது ஒரு குத்தமா என்று பாவமாக பார்த்தான்.

கடைசி பீசை பிடுங்கி அமி சாப்பிட்டு விட்டாள். இனியோ கேக்கு போச்சே என்று பாவமாக அவர்களை பார்த்தாள்.

தயா செம்ம டேஸ்ட் நீயா செஞ்ச அமி

நானாவது இவ்ளோ டேஸ்ட்டா செய்றதாவது எல்லாம் இனிதான்.

வாவ் இனி wordless  அவ்ளோ சூப்பரா இருந்துச்சி. இதுவரை நான் சாப்பிடதுலயே பெஸ்ட் கேக் இதுதான்

ஆமா நீங்களே சாப்பிட்டு நீங்களே புகழ்ந்துக்கோங்க நான் அதை மோர்ந்து கூட பாக்கலை

😝😝😝 அரசியல்ல இதெல்லாம் சாதாரனமப்பா

அமி இனி எனக்கு ஒரு ஐடியா

என்ன இன்னொரு கேக் செஞ்சி மறுக்கா நீங்க ரெண்டுபேரும் சாப்பிடுறதா

இல்லை இல்லை நாம ஏன் கேக் ஷாப் ஆரமிக்க கூடாது ஆக்சுவலா நீங்க வேலை தேடீட்டு இருக்கீங்க இதை பண்ணலாமே உங்க லோன்கூட பாவம் தீபனே தனியா கட்டிட்டு இருக்காருல

நல்ல ஐடியாதான் பட் பிஸ்னஸ் ஸ்டார்ட் பண்ண காசு வேணும்ல

அமி நான் தரன் நாம பார்ட்னர்ஷிப்ல வேலை பாக்கலாம். ஸ்டார்ட்டிங் நான் கொடுத்த அமௌன்ட் எடுக்குற வரை ஷேர் 30 /70. நான் கொடுத்த அமௌன்ட் எடுத்ததும் 50/50 ஓகே வா

தீபன் அப்போது வந்தான். இவர்கள் பேசுவதைக் கேட்டவாறே.

ஹலோ ஹலோ நாங்களும் ஷேர் போடுவோம் எங்கள்டயும் மனி இருக்கு சிஸ்டர்.

இனி ஏதுடா நம்மகிட்ட காசு

தீபன் ஸ்டார்டிங்ல நீ உன் ஷேர் வேணா சொன்னல அது அப்டியேதான் இருக்கு அதை யூஸ் பண்ணிக்கோ

இனி இது சரியா வருமா அமி

அமி அதான் இந்த கேக் லவ்வரே சொல்லிட்டாரு ல செம்ம டேஸ்டு அப்றம் என்ன

இனி அப்போ ஓகே கேக் ஷாப் ஆரமிக்கலாம்.

தீபன் தயா அப்போ நீயும் நம்ம பொம்மிமாறி ஃபிளைட்ல காண்ட்ராக்ட் எடுத்து கேக் வித்து பெரியாளாகிடுவ

இனி ஆமா என் புருஷன் ஏர்லைன்ஸ் நடத்துறாரு பாரு. அப்படி பாத்தா வர நோயாளிங்களுக்குதான் நான் கேக் விக்கனும்.

தீபனும் இனியும் சிரிக்க தயாவும் அமியும் அவர்களை பார்த்து விழிவிரித்தனர்.

அதிலும் இனி என் புருஷன் என்றது தயாவை ஏதோ செய்தது. அவன் மனம் ரெக்கை கட்டி பறக்க மனசாட்சியோ வாய்தவறி வந்துருக்கும் அடங்கிட்டு இரு என்று அதட்டல் செய்து கீழே இழுத்து வந்தது.

தயாவும் அமியும் அமைதியாக இருக்கவே இனி அவள் பேசியதை உணர்ந்து மலங்க மலங்க பார்த்து வைத்தாள்.

அமியோ சாதாரணமாக அடுத்தடுத்த வேலையை பற்றி பேசி அவளை சகஜமாக்கினாள்.

இனிக்குதான் எப்படி அவள் வாயிலிருந்து அப்படி ஒரு வார்த்தை வந்தது என்று தோன்றியது.

________________

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
2
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment