Loading

2   .    🌺🌺 தாழம்பூவே வாசம் வீசு      🌺🌺

விழா முடிந்ததும் தனது பிரின்சிபால் மேடத்தை பார்க்கச் சென்றவள்  மேடம்  ஒரு ரெண்டு வாரம் எனக்கு ஆர்கானிக்  சேரிஸ் பற்றி ட்ரெய்னிங் சுந்தரமூர்த்தி பட்டு மஹால் அவங்க கிட்ட பேச முடியுமா என்று கேட்டாள்.

வர விருப்பம் இருக்க ஒரு அஞ்சு பேர செலக்ட் பண்ணி என் கூட அனுப்பிச்சு விடுங்க மேடம் என்று கூறினாள்.

சரிமா அவர் கிட்ட கேட்டுப் பார்க்கிறேன் பிசியா ஒர்க் இருக்குன்னு போயிட்டாரு என்று கூற  தேங்க்யூ மேடம் என்றாள். 

சுந்தரமூர்த்தி பட்டு சென்டரில் மேனேஜரை அழைத்தான் ஜீவானந்தம் அண்ணா யாருக்காவது ஏதாவது பணம் தேவையா என,  ஏன் தம்பி எங்களுக்கு தேவையான பணத்தை பார்த்து பார்த்து செய்யறீங்க  அப்புறம் என்னப்பா என்று கேட்டார் .

இல்லன்னா நான் டெல்லி போறேன்  வர பத்து நாள் ஆகும் பணம் ரெண்டு லட்சம்  எடுத்து வச்சுக்கோங்க யாருக்காவது ஏதாவது அவசரம்னா  கொடுக்கறதுக்கு தேவைப்படும் என்று கூறினான்.

வீட்டிற்கு வந்தவன் தோட்டத்திலிருந்து தாழம்பூ செடிக்கு சிறிதளவு தண்ணீரை ஊற்றினான்.

ஜீவா சாப்பாடு எடுத்துவைக்கட்டாப்பா என வந்துட்டேன் மா என்று கூறினான். நான் ஒன்னு கேட்டா தப்பா நினைக்க மாட்டியே ஜீவா வயசு ஆகுது பொண்ணு பார்க்கலாமா என கொஞ்ச நாள் ஆகட்டும் நானே சொல்றேன் என்று கூறினான்.

பிறகு போன் ஒலித்தது சத்யபாமா காலேஜ் பிரின்சிபால்  அழைத்திருந்தார்கள்.  ஒன்னும் பிராப்ளம் இல்ல வர சொல்லுங்க நான் டெல்லி போரேன்  நான் வர்றதுக்கு பத்து நாள் ஆகும்.

அவங்க ட்ரெய்னிங் எடுக்கும் அளவுக்கு நம்ம  பெரிய ஷோரூம் இல்லியே என்று கூற இல்ல சார் அவர்களுக்கு ஆர்கானிக் சாரீஸ் பற்றி தெரியணுமா  என்று கூறினார்.

ஓகே மேடம் நீங்க அனுப்பி விடுங்க நான் என்னோட மேனேஜர் கிட்ட சொல்றேன் என்று கூறினான்.

மேடம் சொல்லுங்க இரண்டு பேர் மட்டும் உங்க வீட்ல இருந்து தங்கிக்கலாமா என  பர்மிசன் கேட்டு இருக்காங்க சார் என்று கேட்க ஓகே மேடம் என்று கூறினான்  ஜீவானந்தம்.

மா 5 பொண்ணுங்க நம்மளுடைய தறியில் வந்து ஆர்கானிக் சாரி பற்றி ட்ரெய்னிங் எடுக்க வராங்களாம் ரெண்டு பேர் மட்டும் நம்ம வீட்டில் தங்கி பாங்க மா  என்றான் .

இந்த வீடு கொலுசு சத்தம் இல்லாம,  பூ வாசனை இல்லாமல், வளையல் சத்தம் இல்லாமல் வெறிச்சோடிப் போய் இருக்கு என்று கூறியவர் ஏதோ பேசிக் கொண்டே உள்ளே சென்றார்.

ஜீவாவிற்கு வளையலின் சத்தம் கொலுசு ஒலி,  பூவின் வாசம் என்ற உடனே அவனுக்கு ஹாசினியின் நினைவு வந்தது.

தனது அறைக்குச் சென்றவன்  கண்மூடித் தூங்கினான். கண்களின் ஓரத்தில் நீர் கசிந்தது.

அம்மா நெக்ஸ்ட் வீக் வர மாதிரி இருக்கும் பத்திரமா இருங்க என்று கூறி டெல்லி கிளம்பினான்.

சுந்தரமூர்த்தி பட்டு சென்டரில் நுழைந்தவள் தறி இருக்கும் இடத்திற்குச் சென்றாள். அங்கு அழகாய் நூல் கோர்த்து ஆர்கானிக் சாரீஸ் பீட்ரூட், கோரைப்புல் சாறு. வாழை நார்  வைத்து எப்படி செய்கிறார்கள் என்று கவனித்தாள்.

மேனேஜரிடம்  உங்களுடைய M.D  சாரை பார்க்க முடியுமா?  என்று கேட்க இல்ல மேடம் அவங்க டெல்லி கிளம்பிட்டாரு என்று கூறினார்.

நீங்க  வாங்க வீட்டுக்கு போகலாம் என்று அவளையும் விஜியையும்  அழைத்துச் சென்றார்.

வீடு  மிகவும் சிறியதாகவும் அழகாகவும் இருந்தது உள்ளே ஒரு கார் நுழையும் அளவிற்கு இடம் விட்டு தோட்டம் இருந்தது தோட்டத்தில் நிறைய மரங்கள் இருந்தது.

அந்த வீட்டின் ஓரத்தில் தாழம்பூ ஒன்று இருந்தது உள்ளே அழைக்க வாசனையும் உள்ளே சென்றனர்.

அத்தம்மா என்று ஓடி சென்று கட்டிக்கொள்ள வேண்டுமென்று தோன்றியது அதை மறைத்தாள்.

ஆன்ட்டி வீடு ரொம்ப அழகா இருக்கு என்று வீட்டினை சுற்றிப்பார்க்க சென்றாள்.    ஜீவாவின் அம்மாவிடம் பேசிக்கொண்டிருந்தாள் என்னோட பெயர் விஜி  அக்கா பேரு  ஹணி என்று கூறினாள்.

வீட்டை சுற்றிப் பார்த்துக் கொண்டு வந்தவள். வீட்டில் சுவற்றில் மாட்டியிருந்த சுந்தரமூர்த்தியின் போட்டோவை பார்த்தததும் அவளின் கண்கள் கலங்கியது

என்னுடைய கணவர் மா என்று  கூற  தெரியும்  ஆண்டி என்று கூறினாள்.

தெரியுமா என்று கேட்க இல்ல ஆண்ட்டி பட்டுமாஹால் கடையிலும்  தறி நெய்யும் இடத்திலேயும் போட்டோ  பார்த்தேன் என்று கூறினாள்.

போட்டோவை பார்த்ததும் தனது  வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளை பின்நோக்கிச் சென்றாள்.

பூதங்குடி என்ற ஒரு அழகிய மலை கிராமம் அந்த கிராமத்தில் சத்தியமூர்த்தியும் சந்திரனும் நல்ல நண்பர்கள்.

சத்தியமூர்த்தி விதவிதமாக பட்டுத்துணிகள் நெய்வதில் திறமைசாலி சந்திரன் பணத்தை மூலதனமாக போட சத்தியமூர்த்தி அவரின் திறமையை மூலதனமாக போட்டார்.

சிறிதளவு வீட்டில் தயார் ஆன புடவைகள் தங்களுடைய உழைப்பால் 10 பேர் வேலை செய்யும் அளவு வந்தது.

வரும் லாபத்தில் இருவரும் சமமாகப் பங்கிட்டுக் கொண்டனர். காலங்கள் உருண்டோட  வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யும் அளவிற்கு உயர்ந்தனர்.

ஒரு சிறிய பட்டு துணி கடை நடத்தி வந்தனர் சத்தியமூர்த்தி அவரின் மனைவி காமாட்சி இவர்களின் மகன் ஜீவானந்தம்.

சந்திரன் அவரின் மனைவி ராசாத்தி இவர்களின் மகன் ராஜீவ்,  ஹாசினி .இரண்டு  குடும்பம்பமும் ஒரே தெருவில் வசித்து வந்தது.

வீட்டில் சந்திரன் மனைவி ராசாத்தியிடம்  பிள்ளைகள் எங்கே ஒருவரையும் காணோம் என அவங்க எல்லாரும் சர்ச்சுக்கு போயிட்டாங்க என்று கூறினார்.

ஜீவானந்தம், ராஜீவ், ஹாசினி மூவரும் எப்பொழுதும் ஒன்றாகவே இருப்பார்கள்.

ஜீவானந்தம் ராஜீவிற்கு ஒரே வயது இருவரும் ஒரே வகுப்பில் படிக்க  அவர்கள் இருவரையும் விட மூன்று வயது சிறியவள்.

ஜீவானந்தம் ராஜூ இருவரும் எட்டாம் வகுப்பு படிக்க ஹாசினி ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள்.

ஹாசினி ராஜுவ  அண்ணன் கூப்பிடுற, ஜீவாவ   பேர் சொல்லி கூப்பிடுற அடி வாங்க போற என்று திட்டினாள் ஹாஸினியின் அம்மா.

சர்ச்சுக்கு வந்து அங்குள்ள முயல்களுடன் பறவைகளுடன் விளையாடுவார்கள் மீன்களுக்குப் பொறி  எடுத்துக்கொண்டு வந்து போடுவார்கள்.

மரத்தின் கீழே விழும் பாதம்  பழங்களைஎடுத்து சாப்பிடுவார்கள்  அருகில் ஒரு சிறிய மலை இருந்தது.

ராஜீவ்  இங்கே வா ராஜா என அடிக்கறான்  வந்து என்னன்னு கேளு என.

அவன் அதனை கண்டுக்காமல் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தான்.

ஜீவா அவளை அழைத்து ஹாஸினிமா யாருக்கும் பயப்பட கூடாது, தப்பு செஞ்ச தட்டிக் கேட்கனும்  என்று கூறியவன்.

தாழம்பூ வீட்டில் எந்த ஒரு மூலையில் இருந்தாலும் அதனுடைய மனம் அந்த வீட்டில் இருந்து கொண்டே இருக்கும். இதுபோல நீ இருக்கும் இடம் எப்பவுமே ஸ்பெஷலா இருக்கணும் ஹாசினிமா என்றான்.

ஒன்றும் புரியாமல் தலையை ஆட்டியவள் அவனுக்கு பாதாம் பழம் கொடுத்தாள்  சிரித்துக் கொண்டே அதை வாங்கினான்.

விளையாடி முடித்துவிட்டு அனைவரும் வீட்டிற்கு வந்தனர். இப்படியே நாட்கள் உருண்டோட ஜீவாவும் ராஜீவ் பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தார்

ராஜீ வ் எப்பொழுதும் கிரிக்கெட் விளையாடுவதில்  ஆர்வமாக இருந்தான்.

ஆனால் ஜீவா தறிநெய்வதில் ஆர்வமாக இருந்தான்.  புதுப்புது டிசைன்களை அவனுடைய அப்பாவை போலவே  அவனும் கற்றுக்கொண்டான்.

ஹாசினியோ  எப்பொழுதும் அத்தம்மா அத்தம்மா என்று காமாட்சி பின்னாடியே சுற்றி கொண்டிருப்பாள்.

காமாட்சி பெண் பிள்ளை இல்லாததால் ஹாஸினிக்கு வாரம் ஒருமுறை ஜடை பின்னி மல்லிகை பூ வைத்து நடுவில் தாழம்பூவை வைத்துவிடுவார் மலை கிராமம் என்பதால் அங்கே நிறைய தாழம்பு கீற்றுகள் கிடைக்கும்.

இந்தப் பூ கொஞ்சமா வச்சாலும் வாசமா தான் இருக்கு  நீ வந்து பாரேன் என்று அவனருகில் உரசிக் கொண்டு வந்து நின்றாள்.

அவனோ அவள் ஜடையை இழுத்து வாசம் பிடித்தவன் சூப்பரா இருக்கு ஹாசனிமா  என கொலுசொலி,  வளையல் சத்ததுடன்  ஒவ்வொரு அறையிலும் ஓடிக் கொண்டு இருந்தாள்.

ஓடி வந்தவள் திடீரென்று ஜீவாவின் மீது மோதியவளைப் பிடித்து நிறுத்தியவன்

அவளை பார்த்து போங்க என்றான்.

ஜீவா எவ்வளவு அழகாக புடவை நெய்யரான்  நீ என்னடா எப்ப பாரு கிரிக்கெட் விளையாடிட்டு இருக்கே என்று கேட்க?

அம்மா அவனுக்கு அது பிடித்திருக்கிறது செய்யறான் . எனக்கு இதை புடிச்சிருக்கு நான் இதை செய்றேம்மா என்று கிரிக்கெட் அட்டையை தூக்கி கொண்டு ஓடினான்.

பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய பின் அனைவரும் சர்ச்சுக்கு சென்று விளையாட பறவைகள் பாதாம் பழம் என்று அவர்களின் பொழுது ஓடிக்கொண்டிருந்தது.

ஜீவா அங்கிருந்த கம்பியை பிடித்துக் கொண்டு தூற  இருந்த மலையே பார்த்துக் கொண்டிருந்தான்.

ஹாசினி ராஜுவிடம் அண்ணா எனக்கு வயிறு வலிக்குது  வா வீட்டுக்கு போலாம் என்று கூப்பிட, ஒரு மேட்ச் இருக்கு ஹாசினி இரு வரேன் என்று கூறிக் கொண்டிருந்தான்.

அவள் கண்களில் கண்ணீருடன் வந்து பாதாம் மரத்தின் அடியில் அமர்ந்து அழுது கொண்டிருந்தாள்.

ஜீவா அவனைப் பார்த்துக் கொண்டிருந்தவன் அழுகுரல் கேட்டு திரும்பினாள். ஹாசினிமா ஏன் அழுறீங்க என்று கேட்க வயிறு வலிக்குது ஜீவா.

ராஜீவ் அண்ணனைக் கூப்பிட்டா வீட்டுக்கு வர மாட்டேங்குறான் ஜீவா.

எனக்கு வயிறு வலிக்குது என்று அழ ஆரம்பிக்க சரி நான் உன்னை கூட்டிட்டு போறேன் என்று கூறி அவன் சைக்கிளில் அமர்ந்ததும் அவன் பின்னால் அமர்ந்து ஜீவாவின் வயிற்றை கட்டிக்கொண்டாள்.

ஹாசினிமா   கை எடுத்துக்கோங்க அங்க இருக்க கம்பில்ல பிடிச்சுக்கோங்க என்று அவளது கையை எடுத்து விட்டான் .

அவளது வீட்டில் விட உள்ளே சென்றாள்.

ஏன் சிவா நீங்க ரெண்டு பேர் மட்டும் வந்திருக்கீங்க ராஜு வரலையா என இல்லத்த ஹாசினி வயிறு வலிக்குதுன்னு சொன்னாங்க  அதனால கூட்டிட்டு வந்தேன் என்று கூறினான்.

அவ உன்ன  பெயர் சொல்லி கூப்பிட றா  நீ  அவ சின்ன பொண்ணு அவள வாங்க போங்கன்னு சொல்றே என்னமோ போங்க ரெண்டு பேரும் என்று கூறிவிட்டு வீட்டினுள் சென்றார்.

அவளை விட்டுவிட்டு தனது வீட்டிற்கு வந்தவன்  அப்பாவுடன் தறி நெய்யும் இடத்திற்கு சென்றான்.

வீட்டிற்கு வர வீட்டில் யாருமே இல்லை.
காமாட்சி ஜீவா ஹாஸினி பெரிய பொண்ணா கிட்ட வரியா பங்க்ஷன் நடக்குது என்று கேட்க அம்மா இதுக்கெல்லாம் போய் நான் வருவேனா  அம்மா என்றான்.

சத்தியமூர்த்தி  ஜீவா நெய்திருந்த புடவை, பூ, பழம் இரண்டு தங்க வளையல்கள் தட்டில் வைத்து மாமன் வீட்டு சீதனம் என வழங்க வீட்டிற்குள் அழைக்கும் நாளன்று ஜீவா நெய்திருந்த புடவையை கட்டி விட்டால் ராசாத்தி.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
3
+1
1
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்