வெண்மேகமாய் வந்து தாலாட்டவா
பதிவு 2
அவளின் விடாத அடைமழையான பேச்சில் இதழ்கள் தவழும் புன்னகையோடு அவளை பார்த்தவன்,
“உன் பேரென்ன?…” என்க, அவனை அதிசயமாய் பார்த்தவளோ!
“பேரு என்னன்னு கூட கேட்காமலா பொண்ணு பாக்க வந்திங்க?…” என்று கேட்டு வைக்க,
புன்னகையோடு முன்நெற்றியில் சரிந்த முடிக்கற்றையை கோதிவிட்டவன்,
“ப்ச்… ப்ச்…” என்று தோளைக்குலுக்கிவிட்டு, “பேர சொல்லுறியா?…” என்று கேட்டு வைத்தான்… இவள் பதில் சொல்வதற்காக வாயைத் திறக்கயிலேயே அவர்கள் இருந்த புறமாக ஒரு பெண் வர, இருவரின் பார்வையுமே அந்த பெண்ணின் புறம் திரும்பியது…
“நம்மள கூப்புட ஆள் வந்துட்டாங்கன்னு நெனைக்குறேன்…” என்றவனை பார்த்து விழிகள் சுருங்க புன்னகைத்தவள், அவன்புறம் கையை நீட்டி,
“நைஸ் டூ மீட்டிங் யு மிஸ்டர்.விக்ரமாதித்யன்… எப்படியும் இந்த கல்யாணம் நடக்கப்போறது இல்ல… ரயில் சிநேகிதம் போல பார்த்தோம், பேசுனோம், பிரிஞ்சோம்னு இல்லாம, பார்க்கும் போதெல்லா ஹாய் ஹலோன்னு பேசிப்போம்…” என்க, இவனுமே சிரித்தபடி அவள் கையை பற்றி குலுக்க, அந்த பெண்ணும் வந்து நின்றிருந்தாள்…
“என்ன தம்பி என்ன சொல்லுறா என் நாத்துனாகாரி…” என்ற பெண்ணை பார்த்து புன்னகைத்தவன்,
“சும்மா பேசிட்டு இருந்தோம் சிஸ்டர்…” என்க, அவளோ!
“சரி தம்பி… கீழ கூப்பிட்டாங்க அதான் வந்தேன்… போலாமாடி…” என்று வந்த வேலையை செவ்வனே முடித்துவிட்டு அவளையும் அழைத்துக்கொண்டு கிளம்ப, போகும் அவளையே பார்த்தபடி நின்றவன் என்ன நினைத்தானோ!
“பேரு என்னன்னு சொல்லாமலே போற?…” என்று கேட்டுவைக்க, அவன் புறம் நோக்கியவளோ!
“மித்து… இல்ல மித்ரா… இல்லல்ல மேகமித்ரா… மேகான்னும் கூப்பிடலாம்… உங்களுக்கு எப்படி கூப்புட தோணுதோ அப்படியே கூப்புடுங்க…” என்றுவிட்டு ஓட, இவனுக்கு தான் அவள் பெயரை கேட்ட பிறகு திக்கென்று
எங்கேயோ இடிப்பதைப் போலானது…
எல்லாம் தனது தாயின் திருவிளையாடல் தான் என்பதனை உணர்ந்தவன், வீட்டிற்கு சென்றதும் வைத்துக்கொள்வோம் கச்சேரியை என்றபடி கடுகடு முகத்துடனே சிறிதுநேரம் வரைக்கும் அங்கேயே நின்றுவிட்டு கீழிறங்கி சென்றிருந்தான்..
இரண்டு நாட்கள் அழகாய் கடந்திருக்கும்… வீட்டிற்கு சென்று வருகிறேன் என்று சென்ற தேன்மொழி இன்னுமே வந்து சேராத காரணத்தினால், கோபத்தின் உச்சத்தில் அமர்ந்திருந்தாள் தேன்மொழியின் ஆறுயிர் தோழியிவள்… கிட்டத்தட்ட ஆறு ஆண்டு காலமாக ஒரே அறைக்குள் ஓருயிர் ஈருயிராய் வாழ்பவர்கள்… நட்பிற்கு இலக்கணம், இலக்கியம் என எது உண்டென்றாலும் இவர்களை எடுத்துக்காட்டாய் சொல்லும் அளவிற்கு ஒன்றாகவே திரிபவர்கள்… இருவருக்கும் ஒருமித்த எண்ணமோ கருத்தோ இல்லையென்றாலும் ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு மற்றொருவர் என்றுமே துணையாய் தான் இருப்பர் ஒரு விசயத்தை தவிர…
தேன்மொழி என்ன தான் முட்டி மோதினாலும், மேகா என்கின்ற மேகவதியை அவள் வீட்டிற்கு அழைத்து செல்லவே முடியாது… கடந்த சில வருடங்களில் அதனாலேயே இருவருக்குள்ளும் சிறுசிறு முரண்பாடுகள் ஏற்பட்டதென்னவோ உண்மை தான்… தனிமை பல சமயங்களில் இனிமையாய் தோன்றினாலும் தோழியை விட்டு பிரிந்திருந்த இரு தினங்களும் வெறுமையாகவே தோன்றி மனதை வதைத்தது… அறைக்குள்ளேயே அங்கும் இங்கும் அழைந்துவிட்டு இன்றும் வரவில்லையே என்று சிறு கோபத்துடன் அறையை விட்டு வெளியேற கவலை தோய்ந்த முகத்துடனே வந்து கொண்டிருந்தாள் தேன்மொழி…
அவளது முகத்தை பார்க்கும் பொழுதே என்ன நடந்திருக்கும் என்பதை அவளால் நன்றாகவே யூகிக்கமுடிந்தது… இப்படி தான் நடக்கும் என்று தெரிந்தபடியால் தானே போகாதே என்று ஒவ்வொரு முறையும் தடுப்பதுமே என்று நினைத்தவள், தன் மன உணர்வுகளை எல்லாம் ஓரங்கட்டிவிட்டு தேன்மொழியிடம் சென்றாள்…
“என்னப்ள இப்புடி வாரவ… இதுக்குத்தானே போகாத போகாதன்னு தலையா அடிச்சுக்குறேன்…” என்க, கண்ணீர் வழிய முயற்சிக்கும் முகத்துடனே மேகாவை அணைத்துக்கொண்டாள்…
“தேனு… என்னப்ள? அழுக நெனைக்காதன்னு எத்தனவாட்டி சொல்லியிருக்கேன்… நம்மளால சிரிக்கமுடியுமே தவிர அழ முடியுமா? கண்ணீரே வராம அழறதால நம்மளால ரொம்ப நேரம் இங்க உலாவ முடியாதுங்குறத மறந்துடுறியா? வலிய மனசுக்குள்ளேயே போட்டு மறச்சுக்குடுந்த… தேனு… தேனு…” என்று தேற்ற, அவள் சொல்வதில் இருந்த உண்மை உரைக்க, சட்டென்று மேகவதியிடம் இருந்து விலகியவள், வராத கண்ணீரை கன்னம் தொட்டு அவசரமாய் துடைத்துவிட்டு,
“மன்னிச்சுடு மேகா… இனிமே அப்படி பண்ணவே மாட்டேன்…” என்றாள்…
“ப்ச் சரி விடு… வா எதுவா இருந்தாலும் உள்ளார போய் பேசுவோம்…” என்று அவர்களின் அறைக்குள் நுழைய, அவர்கள் இருவரையும் இடித்துக்கொண்டு இல்லை இல்லை அவர்களின் உருவத்திற்குள்ளாகவே புகுந்து இரண்டு பேர் அறைக்குள் நுழைய, இவர்கள் இருவருக்கும் சர்ரென்று கோபம் தலைக்கு ஏறியது… அவ்வளவு நேரமும் அழகு வதனமாய் தெரிந்த முகம் ரத்தச்சிவப்பாய் மாறியிருக்க, அவர்கள் அணிந்திருந்த உடையோ இமைமூடி திறப்பதற்குள் கிழிந்து நைந்து போனதாய் மாறியிருந்தது… பட்டுப்போல் படிய வாரியிருந்த தலைமுடியுமே சிக்குண்டது போல் அலங்கோலமாய் காற்றில் பறக்க, தலையில் நிறைய இடங்கள் மொட்டையாய் தான் காட்சியளித்தது…
“யாரு குட்டி இவைய்ங்கல்லாம்? என்ன தெனாவட்டு இருந்தா, யாரக்கேட்டு நம்ப எடத்துக்குள்ள நுழையிறாய்ங்க…” என்று புஸ் புஸ்ஸென்ற மூச்சுக்காற்றை ஊதியபடியே தேன்மொழி கர்ஜிக்க,
“பொறு தேனு… என்ன பண்ணுறாய்ங்கன்னு பாத்துப்புட்டு பொறவு பேசுவோம்…” என்ற மேகாவோ தன் உருவம்தனை பழையபடி மாற்றி தோழியின் தோளில் கைவைக்க, அவள் உருவமும் பழையபடி மாறியிருந்தது….
இருவருமாய் அடிமேல் அடிவைத்து அறைக்குள் நுழைந்து ஏற்கனவே உள்நுழைந்த இருவரும் என்ன பேசிக்கொள்கிறார்கள் என அவர்கள் அருகில் நின்றே கவனிக்க ஆரம்பித்திருந்தனர்…
பெண்பார்க்கும் படலம் முடிந்து வீட்டிற்கு திரும்பியிருந்த விக்ரமோ தனது பெற்றவர்களின் மீது உச்சகட்ட கோபத்தில் இருந்தான்… முக்கிய உறவுகள் வீட்டை விட்டு கிளம்பும் வரைக்கும் பொறுமையாய் அறைக்குள் முடங்கிக்கிடந்தவன், அனைவரும் கிளம்பிவிட்டனர் என்பதனை உறுதிப்படுத்திக்கொண்ட பின்னர் அதுநேரம் வரைக்கும் கட்டுப்படுத்தியிருந்த கோபம் தனை மொத்தமாய் கொட்ட ஆரம்பித்துவிட்டான்…
“என்ன நெனச்சுக்குட்டு இருக்கிங்க எல்லாரும்? வேணாம் வேணாம்னு சொன்னா யாருக்குமே புரியாதா? சொல்ல சொல்ல கேட்காம பொண்ணு பார்க்குற அளவுக்கு இறங்கிருப்பிங்க?…” என்று வீடே அதிரும்படி இவன் சப்தமிட, அவன் அதட்டலும் உருட்டலும் அவனை பெற்ற நாச்சியாரையும், ரெங்கநாதனையும் பாதித்தால் தானே!
“இப்ப எதுக்குடா இந்த குதி குதிக்கிறவன்? பொண்ணு தானே பாக்கப்போனோம்? கல்யாணமேவா பண்ணி வச்சுப்புட்டோம்?…” என்று ரெங்கநாதன் அசராமல் கேட்க, நாச்சியாருமே,
“அதானே… எதோ கொலக்குத்தம் பண்ணி வச்சவைங்கள விசாரிக்கிறாப்புல இல்ல விசாரிச்சுட்டு இருக்க.. வேணாம் வேணாம்னு சொன்னவன் என்னத்துக்கு நாங்க கூப்புட்டா வர்ற? முடியவே முடியாதுன்னு சொல்ல வேண்டியது தானே…” கேட்டுக்கொண்டு இருந்தவனுக்கோ பற்றிக்கொண்டு எரிந்தது…
“ம்மா என்ன ரெண்டு பேரும் வெளையாடிட்டு இருக்கிங்களா? நான் எத்தனவாட்டி படிச்சு படிச்சு சொன்னேன் நான் வரல வரலன்னுட்டு… அத்த, மாமான்னு அத்தன ஒறவையும் கூப்புட்டுப்புட்டோம், பொண்ணு வீட்டுல வாரோம்னு சொல்லி வாக்கு குடுத்துப்புட்டோம் எல்லாருமா போவலைன்னா மானமே போயிடும் சும்மா பேச்சுக்கு வந்துடு ராசான்னு யாரு கெஞ்சுனது?… இப்ப காரியம் ஆனதும் பேச்சமாத்துறியளா?…” என்க, அசடு வலிய திருதிருவென விழித்த நாச்சியாரோ!
: “அப்புடியா சொன்னேன்… சொல்லிருப்பேன் சொல்லிருப்பேன்…” என்றுவிட்டு நகரப்போக இவனோ தலையில் அடித்துக்கொண்டான்…
“சும்மா பாத்துட்டு வரலாமுன்னு சொல்லி அத்தன அழிச்சாட்டியம் பண்ணி கூட்டிக்கிட்டு போறப்பவே நெனச்சேன் என்னவோ இருக்குன்னு… அங்க போயிட்டு பொண்ணு கூட தனியா பேசுன்னு வேற கெளப்பி விடுறிங்க… இல்ல தெரியாம தான் கேட்குறேன் என்ன நடக்கணும்னு இந்த ப்ளான் எல்லாம்? இங்க பாரும்மா… நீயும் அப்பாவும் எதுக்காக இதெல்லா பண்ணுறிங்கன்னு எனக்கு நல்லாவே புரியுது… ஆனா நீங்க நெனைக்குற எதுவும் நடக்காது… அவ்ளோ தான் சொல்லுவேன்…” என்றுவிட்டு கோபமாய் சென்று அறைக்குள் முடங்கிக்கொள்ள கேட்டுக்கொண்டிருந்த நாச்சியாருக்கும் ரெங்கநாதனுக்கும் தான் மனம் பதைப்பாய் இருந்தது…
ஒரு மேகா😍😍😍😍 ப்ரோப்சலே ரிஜக்ட் பண்ணிட்டா, இன்னொரு மேகா பேயா 🥶🥶🥶🥶 கதை அருமையா போயிட்டு இருக்கு.
என்னது அழ முடியாத, அப்போ அவங்க மனுசங்க இல்லையா
இந்த தேனும் மேகாவும் பேசுறத பாத்தா அவைங்க ரெண்டு பேரும் பேயா….அடி ஆத்தீ….ஒரு ரும்ல ஒண்ணா தங்கி இருக்காங்க…ஊருக்கு போய்வாரங்கனு பேசினத வச்சு….ஐடில வேலைபாக்குற பொண்ணுங்கனு நினைச்சா….இதுங்க ரெண்டும் பேயா….
இந்த மேகாவுக்கும் விக்ரமுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கா?
என்ன நடந்துச்சு…உன் இவங்க செத்தாங்க…ஒண்ணுமே தெரியலயே….
ஏது முகம் ரத்தசிவப்பா மாறிருச்சா🙄🙄🙄…கண்ணுல தண்ணி வரலையா…தேனுவும் மேகாவும் பேயா😳😳😳…..மேகாங்கற பேர்ல விக்ரம்க்கு என்ன பரிஞ்சிது….
விக்ரம் எம்புட்டு கோவப்பட்டு கத்துறான் நாச்சியும் ரெங்கனும் கூல்லா கேண்டில் பண்றாங்க🤣
Ennathu peya rendum…. Ennama nadikuranka…. Ithula pona epila pota Maru scene hight ukanthurukka setha Kudal veliya vanthurum nu….. Eppadiov…. Mudiyala pa…. Nan kuda pei magava thn ponnu pakka poirukanum ninachen .. aprm Thane teriyuthu antha mega pei nu ….. Sekaram next ud kudunga sis ….