Loading

  1. இனி எந்தன் உயிரும் உனதா…

 

சில நாட்களிலேயே ஸ்போர்ட்ஸிற்கு டீம் செலக்ஷன் வர, கலப்பு அணியாகத் தான் அனைவரும் விளையாடுவர் என்பதால், இறுதியாக தேர்வான பத்து பேரையும் இரு அணியாகப் பிரித்து, அவர்களில் ஐவரை மெயினாகவும், இருவரை சப்ஸ்டிடியூட்டாகவும் தேர்ந்தெடுக்க முடிவு செய்யப்பட்டது.

ப்ரித்வியும், ஆருஷியும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, எதிர், எதிர் அணியில் கேப்டனாக இருக்க, ஃபைனல் செலக்ஷன் மேட்ச் தொடங்கியது. ஸ்ருஷ்டி என்ற பெண், கமண்டேட்டரி செய்ய, ஆட்டம் விறுவிறுப்பாக ஆரம்பித்தது.

ஆருஷி பள்ளிக்காலத்திலிருந்தே, முதல் பாக்கெட்டை எதிரணியைப் போடவிட்டு, அவர்கள் சற்றே அசந்த நேரம் தான் ஆட்டத்தைத் தொடங்குவாள். அவர்கள் உணரும் முன்னரே கடகடவென அவள் அணியினர் பாக்கெட்டும் செய்துவிடுவர். இந்த யுக்தி ப்ரித்விக்குத் தெரியும் என்பதால், தன் அணியை அசராமல் முடிந்தளவு தொடர்ந்து பாக்கெட் செய்து விடுங்கள் எனக் கூறியிருந்தான்.

தன் யுக்தியை அவன் அறிந்திருப்பான் என உணர்ந்த ஆருஷி, ஆரம்பத்திலிருந்தே அவள் ட்ரேட்மார்க் ஃபாஸ்ட் பாஸிங்கைத் தொடங்கிவிட்டாள். அவள் அணியினரும் அவளின் வேகத்திற்கு ஈடு கொடுத்து கண்ணசைவில் யாருக்கு பந்தை பாஸ் செய்யப் போகிறார்கள் என சமிக்ஞை செய்து பாஸ் செய்ய, மூன்று பாக்கெட்டை போட்டு விட்டனர்.

முதல் சுற்றின் முடிவில் ஆருஷி 3 – ப்ரித்வி 1 என்ற கணக்கில் இருந்தனர். இரண்டாவது சுற்றில், இவர்கள் ஃபாஸ்ட் பாஸிங்கை முறியடிக்கும் வகையில், ப்ரித்வி அணியினர் தூரத்திலிருந்தே பந்தை, பேஸ்கெட்டில் போட்டு புள்ளிகளை ஈட்டிக் கொண்டிருந்தனர்.

மைதானத்தின் நடுவில் பந்துடன் ஓடிக் கொண்டிருந்த ஆருஷியை, ப்ரித்வி அணியிலிருந்த ஒருவன் வேண்டுமென்றே, சற்று அபாயமான முறையில் இடிப்பது போல் வர, பந்தை தரையில் ஓங்கி தட்டி அவன் முகத்தில் அடிக்குமாறு செய்தவள், அதை மீண்டும் பிடித்துத் தட்டியபடியே ஓடினாள். பந்து ஓங்கி அடித்ததில் அவன் தடுமாறி விழ, அதற்குள் ரெஃப்ரீ விசிலத்து ஆட்டத்தை நிறுத்தியிருந்தார்.

“யூ ஆர் டிஸ்க்வாலிஃபைட் ஆருஷி…” என்று கூறிய அவர், விழுந்தவனின் அருகில் செல்ல,

“சார், பட்…” என அவள் கூறுவதற்குள்,

“சார் அவன் தான் வேணும்னே இடிக்க வந்தான்… அவ மேல எந்த தப்பும் இல்ல” எனக் கூறியிருந்தான் ப்ரித்வி.

“ஓ, அப்ப நா ஒழுங்கா ரெஃப்ரீ பண்ணலன்னு சொல்ல வர்றியா? அப்டி என்னை குறை சொல்ற மாதிரி இருந்தா, யூ மே லீவ் ப்ரித்வி…” எனக் கோபமாக அவர் கூற,

“ஃபைன், ஐ லீவ்…” என்றவன் அங்கிருந்து புயலென வெளியேற. மீண்டும் பந்தை அடிபட்ட அவன் முகத்திலேயே எம்பி விழுமாறு, தரையில் எறிந்த ஆருஷி, ப்ரித்வி பின்னால் ஓடினாள்.

“ஆதி, ஆதி நில்லு…” என அவள் கத்த,

திரும்பி அவளிடம் வந்தவன், “ஐ டோல்ட் யூ ஆருஷி, டோண்ட் கால் மீ லைக் தட்…” என இறுகிய முகத்துடன் கூறினான்.

“ஓ, லீவ் இட்… வை ஆன் எர்த் யூ வாக்ட் அவுட் ஃப்ரம் தேர்? பைத்தியம் புடிச்சுருக்கா உனக்கு? என்னை தான சொன்னாங்க, உனக்கென்னடா இடியட்…” எனக் கேட்க,

“இன்னிக்கு உன்ன சொன்ன மாதிரி, நாளைக்கு என்னை சொல்லமாட்டாங்கன்னு என்ன நிச்சயம்? அவன், அந்த ரெஃப்ரீக்கு சொந்தக்காரன், அதான், அந்தாளு அப்டி சப்போர்ட் பண்றான். நேர்மையா செலக்ஷன் நடக்காத டீம்ல இருந்தாலும் ஒன்னு தான், இல்லைனாலும் ஒன்னு தான்…” என்றவன் அங்கிருந்து வேகமாக சென்றுவிட்டான்.

அவளிடம் அப்படி சொல்லியது உண்மை தான் என்றாலும், அவளை இடிக்க வந்தவனைக் கொன்றுவிடும் ஆத்திரம் வந்தது ப்ரித்விக்கு. ‘எவ்ளோ தைரியம் இருந்தா அவள தொட வந்துருப்பான்’ என்ற எண்ணமே அவன் மனதில் ஓடிக் கொண்டிருந்தது.

💝

இந்த பிரச்சினை முடிந்து வாரங்கள் கடந்திருக்க, ப்ரித்விக்கு, ஆருஷி ஏன் கல்லூரி மாறினாள் என்ற கேள்வி மண்டையைக் குடைந்து கொண்டிருந்தது. ஏனெனில், பள்ளியிலிருந்து யூ.ஜி வரை இவனுடன் மதுரையில் படித்தவள், பி.ஜிக்கு சென்னை சென்றே தீருவேன் என அடம்பிடித்து சென்றாள். ஆனால், ஒரு வருட காலத்திலேயே ஏன் திரும்பிவிட்டாள் என அவனுக்குப் புரியவே இல்லை.

அதை அவளிடம் மீண்டும் கேட்க, “ஃபூட் ஒத்துக்கலடா…” என ஒரு வரியில் முடித்துவிட்டாள். ஆனால், அவள் எத்தகு சூழ்நிலையையும் சமாளித்து விடுபவள் என அறிந்ததால், அவனால் அவள் பதிலை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனாலும், அவளே சொல்லட்டும் என விட்டுவிட்டான்.

இதற்கிடையில் சாயும், ஆருஷியும் செம க்ளோசாகி விட்டனர். எந்தளவுக்குன்னா, ரெண்டு பேரும் கேன்டீன்ல சாப்புட்டுட்டு ப்ரித்வி தலைல பில்லக் கட்டுற அளவுக்கு. ப்ரித்வியும் தலையெழுத்தே என இவர்களுடன் சுற்றிக் கொண்டிருந்தான்.

அப்படி ஒருநாள் சாயும், ப்ரித்வியும் கேன்டீனில் அமர்ந்திருக்க, லைப்ரரியில் புக்கை ரிட்டர்ன் செய்துவிட்டு வருகிறேன் என ஆருஷி சென்றுவிட்டு, சற்று நேரம் கழித்து வந்தாள். அப்போது கேன்டீனின் பக்கவாட்டு ஜன்னலில் நின்று ஒரு பெண், சாயின் டேபிளைப் பார்த்துக் கொண்டிருக்க, அவள் பின்னே சென்ற ஆருஷி, பட்டென அவள் தலையில் அடித்தாள்.

“ஆ…” எனக் கத்தியவள், “ஏன்கா அடிச்சீங்க?” எனத் தலையைத் தேய்த்தபடிக் கேட்டாள்.

“நானும் ரொம்ப வாரமா பாக்குறேன். சாய் போற பக்கம்லாம் சுத்தி சுத்தி வர்ற… என்ன லவ்வா?” என ஆருஷி கேட்க,

“கொஞ்சமா…” என இழுத்தபடி கூறினாள் அப்பெண்.

அவள் ஐ.டியை எடுத்துப் பார்த்த ஆருஷி, “ஸ்ருஷ்டி சின்மயி… ஆண்டாள் மாதிரி தீவிரமா லவ் பண்ணுற ஜீவன்னு அர்த்தமா? நைஸ் நேம். எம்.எஸ்.சி ஃபர்ஸ்ட் இயரா, ஃபைன்… ம்ம், லுக் ஸ்ருஷ்டி தைரியமா பேசி, என்ன வா, போன்னு கூப்டா உன்ன ஃப்ரெண்டா சேத்துக்கிட்டு, உன் லவ்க்கு ஹெல்ப் பண்றேன்…” எனப் புன்னகையுடன் கூற,

“நெஜமாவா, தேங்க்ஸ் அவனி…” என உற்சாகமாகக் கூறினாள் ஸ்ருஷ்டி.

“அவனி? என் நேமும் தெரியுமா? ஹ்ம்… இது கூட நல்லா தான் இருக்கு…” என்ற ஆருஷி,

“சரி வா, உன்ன அவனுங்களுக்கு இன்ட்ரோ பண்ணி வக்கிறேன்…” என ஸ்ருஷ்டியை அழைத்துக் கொண்டு சென்றாள்.

உள்ளே வந்து அமரும்போதே, ப்ரித்வி கையிலிருந்த சமோசாவைப் பிடுங்கிய ஆருஷி, அதனைக் கடித்தவாறே, “டேய் இது ஸ்ருஷ்டி, என் ஃப்ரெண்டு… பி.ஜி ஃபர்ஸ்ட் இயர் பாட்டனி…” எனக் கூறினாள்.

சாய், “ஹாய் ஸ்ருஷ்டி…” என,

“ஹாய்…” என்பதற்குள் ஸ்ருஷ்டிக்குக் கன்னங்கள் சிவந்து போனது.  

இன்னொருபுறம், ப்ரித்வி, ஆருஷியை முறைத்தவாறு, “வேற வாங்கிக்க வேண்டியது தானடி… என்கிட்ட வம்பு பண்ணவே வருவியா?” எனக் கேட்க,

மீதி சமோசாவையும் வாய்க்குள் போட்டவள், “இதென்ன கேள்வி? நா பொறந்ததே அதுக்கு தான…” என கேலியாகக் கூறிவிட்டு,

“நா போய் இன்னும் நாலு வாங்கிட்டு வர்றேன்…” என எழுந்தாள்.

அவளுக்கு முன்பாய் எழுந்த ப்ரித்வி, “நீ போய் வாங்கி, நீயே பில்லக் கட்டு… எங்கம்மா குடுக்குற காசு பூராம் உங்களுக்கே செலவாகுது, எருமைகளா…” எனத் திட்டிவிட்டு அங்கிருந்து கிளம்பினான்.

“லூசுப் புடிச்சவன்…” எனத் திட்டிய ஆருஷி, சென்று இன்னும் மூன்று சமோசாக்களை வாங்கி வந்தாள்.

அதற்குள் சாயும், ஸ்ருஷ்டியும் கொஞ்சம் பேசத் தொடங்கியிருக்க, வந்து அமர்ந்த ஆருஷி, “மை சன்…” என சாயை அழைத்தாள்.

“யெஸ் மம்மி” என அவன் கேட்க,

“ஒரு மூணு, நாலு மாசம் முன்னாடி என் எனிமி வாழ்க்கைல ஏதாவது சம்பவம் நடந்துச்சா? அவன் ஆதித்யான்னு கூப்ட்டா கடுப்பாகுறதுக்கும், அதுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கா? அந்த டைம்ல நீ தான் அவன் கூட இருந்த, அதான் கேக்குறேன்…” என்றாள் ஆருஷி.

சற்று தயங்கியபடி சாய் யோசிக்க, ஆருஷி ஸ்ருஷ்டியைப் பார்த்தாள்.

ஸ்ருஷ்டி, “ஓகே, யூ கய்ஸ் கேரி ஆன், நா கெளம்புறேன்…” என எழப் போக,

அவள் கரம் பற்றித் தடுத்த சாய், “இட்ஸ் ஓகே, நீ இருக்கனால ஒன்னும் பிரச்சின இல்ல சின்மயி…” என்றான்.

அவன் கரம் பற்றியதிலேயே றெக்கை கட்டிப் பறந்த ஸ்ருஷ்டி, அவன் அழைப்பில் புன்னகையுடன் அமர்ந்தாள்.

அவள் அருகிலிருந்த ஆருஷி, “ரொம்ப ஹைட்டு பறக்காத, கொஞ்சம் கீழ இறங்கு, அங்கேருந்து விழுந்தா செதறிருவ…” என அவளுக்கு மட்டும் கேட்குமாறு கூறியதில், அசடு வழியப் புன்னகைத்தாள்.

“இதப் பத்தி பேசுனாலே அவன் ரொம்ப கஷ்டப்படுவான். நா சொன்னேன்னு அவன்கிட்ட சொல்லாத ஆருஷி. உனக்குத் தெரியுறதுல எனக்கு பிரச்சின இல்ல, ஆனா, யாருக்கும் தெரியக் கூடாதுன்னு அவன் நெனைக்கிறான்” என அவன் தயங்கியபடியே கூற,

“நம்ம ஃப்ரெண்ட்ஷிப் மேல ப்ராமிஸா சொல்லமாட்டேன் சாய், நம்பி சொல்லு…” என்றாள் ஆருஷி.

“நா யூ.ஜில இருந்தே இந்த காலேஜ் தான். லாஸ்ட் இயர் தான் ப்ரித்வி இங்க சேர்ந்தான். அப்ப யூ.ஜி விஸ்காம் ஃபைனல் இயர்ல பாவனின்னு ஒரு பொண்ணு இருந்தா. தே லவ்ட் ஈச் அதர். எல்லாரும் ப்ரித்வினு கூப்டும்போது அவ மட்டும் ஆதித்யான்னு கூப்டுவா.

ஒருநாள் அவங்க ரெண்டு பேரும் எடுத்த ஃபோட்டோவ ப்ரித்வியோட இன்ஸ்டால, அந்த பொண்ணு வீட்டு ஆளுங்க பாத்துட்டாங்க. அது பெரிய பிரச்சினையாகி, அவ வீட்டுல காலேஜ ட்ராப் பண்ணிட்டாங்க. அப்புறம் அந்த பொண்ணு எக்ஸாம் மட்டும் தான் எழுத வந்தா. இப்போ என்ன பண்றான்னு கூடத் தெரில. அதான், அந்த நேம் யாராச்சும் சொன்னா, அந்த பொண்ணு ஞாபகம் வந்து அவன் ஃபீல் பண்ணுவான்” என்றான் சாய்.

“இப்டியா கேர்லெஸ்ஸா ஃபோட்டோவ இன்ஸ்டால போடுவாங்க? உன் ஃப்ரெண்டுக்கு மண்டைல மசாலாவே இல்லையா யுவா? அந்த பொண்ணு பாவனி நல்லா பேசுவா… எனக்கும் அவள ரொம்ப புடிக்கும். உன் ஃப்ரெண்டால தான் அவ லைஃபே மாறிருச்சு” என ஸ்ருஷ்டி ஆதங்கத்துடன் கூற,

“சும்மா எல்லாம் தெரிஞ்ச மாதிரி பேசாத. அவன் யாரு ஃபோட்டோவையும் சோஷியல் மீடியால போட மாட்டான். அதுலயும் பொண்ணுன்னா அவன் போட்ருக்க சான்ஸே இல்ல. நா ஃபோட்டோ போட்டாலே திட்டுவான், அவன் பண்ணிருக்க சான்ஸே இல்ல” என்று அழுத்தமாகக் கூறிய ஆருஷி,

சாயிடம், “அவன் இன்ஸ்டா பாஸ்வேர்ட் வேற யாருக்காச்சும் தெரியுமா?” என்றாள்.

“எனக்குத் தெரிஞ்சு இல்ல…” என சாய் கூற,

“நா கிரவுண்ட்ல இருக்கேன்…” எனக் கூறி, ஸ்ருஷ்டியின் அழைப்பைக் காதில் வாங்காமல், விறுவிறுவென சென்றுவிட்டாள் ஆருஷி.

“விடு அவ கோபம் சீக்கிரம் போயிரும்…” என சாய் கூற,

“எனக்கு பாவனின்னா யாருன்னே தெரியாது…” எனப் புன்னகையுடன் கூறினாள் ஸ்ருஷ்டி.

“அப்புறம் சொன்ன?” என சாய் குழப்பமாகக் கேட்க,

“இந்த காலேஜ்ல பெஸ்ட் பேர் யாரு தெரியுமா?” எனப் புன்னகை மாறாமல் கேட்டாள் ஸ்ருஷ்டி.

“இந்த காஸிப்லாம் பொண்ணுங்களுக்கு தான் தெரியும்…” என சாய் முறைப்பாகக் கூற,

“எனக்கு தெரிஞ்சு அது, ப்ரித்வியும், அவனியும் தான்…” என்றாள் ஸ்ருஷ்டி.

“ஏன்?” என சாய் புருவத்தை உயர்த்தி ஒருமாதிரியாகக் கேட்க,

“ஆர் யூ மேட் யுவா? அன்னிக்கு பேஸ்கெட் பால் டீம் செலக்ஷன் அப்போ நான் தான் கமண்டேட்டரி பண்ணேன். அன்னிக்கு ப்ரித்வியோட ஆக்ஷனப் பாத்துருக்கணும். நீ தான் படிப்பாளி, மிஸ் பண்ணிட்ட. அவனிய எங்க இயர் ஹிஸ்டரி சைக்கோ ராஜ் இடிக்க வந்ததுக்கு, ப்ரித்வி செம டென்ஷன் ஆகிட்டான். அப்புறம் காலேஜ் ஹவர் முடிஞ்சப்புறம், சேஞ்சிங் ரூம்ல விட்டு அவன் வாய ஒடச்சதப் பாக்கணுமே, கண்கொள்ளாக் காட்சியா இருந்துச்சு” என உற்சாகமாகக் கூறினாள் ஸ்ருஷ்டி.

“ஸோ, அவங்க லவ் பண்றாங்கன்னு சொல்ல வர்றியா?” என அவளைக் கூர்மையாகப் பார்த்தபடி கேட்டான் சாய்.

“எத்தன பேர பாத்துருப்பேன், தெரியாதா? ஹன்ட்ரட் பர்செண்ட் ஷ்யூர், அத கன்ஃபார்ம் பண்ணிக்க தான் ப்ரித்வி பத்திப் பேசுனேன். அவனி, கோபப்பட்ட அப்பவே தெரிஞ்சுருச்சு. ஆனா, ரெண்டு பேருமே அத ஃபீல் பண்ணல. பாப்போம், எப்போ சொல்லிக்கிறாங்கன்னு” என்றவள்,

“பை யுவா சீ யூ…” என பேகை எடுத்துக்கொண்டு கிளம்பினாள்.

பின்னால் திரும்பிய சாய், “சின்மயி…” என அவளை அழைக்க, “ஹ்ம்…” எனத் திரும்பியவளிடம்,

“நெறைய பேர பாத்துருக்கேன்னு சொன்னியே, ஒரு பொண்ணு சுமார் நாலு வருஷமா, நா போகும்போதும் வரும்போதும் சைட்டடிக்கிறா. டிஃபரண்டா யுவான்னு கூப்டுறா. ஒருவேள அவ என்ன லவ் பண்ணுவாளோ?” என தன் குறும்புப் புன்னகையுடன் கேட்க,

அதில் கன்னக் கதுப்புகள் சிவந்து போக, “ஒருவேள நீ பாக்க அவ செத்துப்போன சித்தப்பா மாதிரி இருப்பியா இருக்கும்… அதான் பாத்துருப்பா” என சிரித்தபடி கூறியவள் செல்ல, செல்லும் அவளைப் பார்த்து இளநகையுடன் தலையை இடவலமாக அசைத்துக் கொண்டான் சாய்.

 

 -தொடரும்…

  -அதி… 💕

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
3
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    2 Comments

    1. அருமையான காதல் கதை. மேலும் பல படைப்புகளை எழுத வாழ்த்துகள்!