பகுதி -19
தயா முகம்கொள்ளா புன்னகையோடு இறங்கி வந்தான்.
அமிர்த்தா அவனை முறைத்தாள்.
தயா பாப்பா என்ன ஆச்சி ஏன் முறைக்கிற
அமி நீ நிஜமாவே என் அண்ணன்தான
என்ன ஆச்சி மா அவளருகில் வந்தான்.
பக்கத்துல வராத கத்தினாள் கோவமாய்.
தயாவிற்கு உள்ளுக்குள் அபாயமணி அடித்தது.
பாப்பா ச்சீ கூப்பிடாத அப்பிடி கூப்பிடாத
இனி அவள் அருகில் வந்து அமி என்னமா ஆச்சி ஏன் அவர்ட்ட இப்படி பேசுற
நீங்க எங்களுக்கு நடுவுல வராதீங்க அவள் முகத்தில் அடித்தார்போல் சொல்ல அவள் ஒதுங்கி நின்றாள்.
அமி என்ன பேசுற அவ உன் அண்ணி
நீயே என் அண்ணனானு சந்தேகமா இருக்கு இது அவங்களை அண்ணினு சொல்ற
தயா என்ன மா ஆச்சி ஏன் இப்படி கோவபடுற
நேத்து நான் அண்ணிட்ட கோவமா பேசிட்டன் ஸாரி கேக்க வந்தன் உன் ரூம்க்கு
இருவருக்கும் பதறியது அவள் எல்லாவற்றையும் கேட்டுவிட்டாளோ என்று.
தயா அமி
ச்சீ பேசாத ஒரு பொண்ணை மிரட்டி தாலி கட்டிருக்க இதுல யோக்கியம் மாறி பேசுற எல்லா விஷியத்தையும் யாழிகிட்ட கேட்டு தெரிஞ்சுகிட்டன்.
தயா அமி நான் சொல்றதை கேளு
என்னடா என்ன கேக்கனும் உன் பேச்சுல மயங்கி சுயமரியாதைய இழந்து நிக்கிறாங்களே இவங்கள போல நினைச்சியா என்னை
ஏன் ணா ஏன் இப்படி பண்ண அவங்க லேப்க்கு பிரச்சனை வரவெச்சி தீபனை அடிச்சி இவங்களை மிரட்டி அவங்க குடும்பத்துலருந்து பிரிச்சி இக்கட்டுல நிறுத்தி கல்யாணம் பண்ணிருக்க இங்கவந்து உனக்கும் எனக்கும் சேவகம் பண்ண வெச்சிருக்க இதே எனக்கு யாராவது பண்ணிருந்தா சும்மா இருந்துருப்பியா
தயா தலைகுனிந்து நின்றான். வேறு என்ன செய்திட முடியும். தவறுதானே அவன் மீது.
இனி அமி அவர்மேல எனக்கு கோவம் இல்லை
நீங்க பேசாதீங்க என்ன 90s ஹீரோயினா கல்லானும் கணவன் புள்ளானாலும் புருஷன்னு இருக்க ஏன் போலீஸ் இல்ல கோர்ட் இல்ல இவனை புடிச்சி கொடுத்து தண்டனை வாங்கி தரவேண்டியதான
உங்களமாறி பொம்பளைங்கலாம் ஆம்பளைங்க கட்ற மஞ்சள் தாலிக்கு அடங்கி போறனாலதான் இவங்கமாறி ஆம்பளைங்கலாம் நம்மளை இன்னும் உரிமைய கேட்டு வாங்குற நிலமைலயே வச்சிருக்காங்க
நெஞ்ச தொட்டு சொல்லுங்க இவன் போடுற சாப்பாடு உள்ள இறங்குதா முள்ளா குத்தலை சுயமரியாதைய இழந்துட்டு வாழுறமாறி தோனலை ஏன் சகிச்சிகிட்டு இருக்கீங்க
நேத்து குடிச்சிட்டு வரான் தாங்குறீங்க பளார்னு நாலு அப்பு அப்பி வெளிய துறத்தலை ஆரம்பத்துலயே விட்டுடுறது அப்றம் குடிக்கிறான் அடிக்கிறான் கொடுமை படுத்துறான்னு சொல்ல வேண்டியது ச்சை ஏன்தான் பொண்ணுங்க இப்படி இருக்காங்களோ
நேத்து நான் எவ்ளோ பேசுன அப்பகூட சொல்லாம அமைதியா நிக்குறீங்க லவ்வே பண்ணாம வெறும் ஒரு மஞ்சகயிறை கட்டுனதுக்கே இப்படி இருக்கீங்க இன்னும் லவ்வெல்லாம் பண்ணிருந்தா அவ்ளோதான் போலயே தயாவுக்கு அடிமை சாசனம் எழுதி கொடுத்துருப்பீங்க போல உங்களை
அமி ஸாரி நான் பண்ணது தப்புதான் ஆனா நான் இப்படி பண்ணுறதுக்கு காரணம் இருக்கு
என்ன பண்ணது தப்புனு ஒத்துக்கிட்டா தியாகியாய்டுவியா நீ. என்னடா என்ன காரணம் இருக்கு உன்கிட்ட
இனியோ அமி பிளீஸ் ஏன் இப்படி கோவபடுற பாதிக்கப்பட்ட நானே அமைதியாதான இருக்கன்.
ஏன் ஏன் அமைதியா இருக்கீங்க என்ன காரணம் சொல்லுங்க இப்படி அடங்கிப்போய் என்ன கிடைக்கப்போகுது உங்களுக்கும் இப்படி சுயமரியாதை இழந்து உங்களுக்கான அடையாளமில்லாம வெறும் தயாவோட மனைவின்னு மட்டும் இந்த உலகத்துல வாழப்போறீங்களா இதுக்கு செ…… சொல்லாமல் நிறுத்தினாள்.
இனி செத்துபோலாம்னு சொல்றியா அமிர்த்தா
…….
செத்து போலாம் தான். முயற்சி பண்ண முடியலை. நான் அவ்ளோ தைரியசாலி இல்லையே.
இந்த பிரச்சனையால் தயாவை உடைக்கப்போகிறோம் என இரு பெண்களும் அறியவில்லை.
இருவரும் அதிர்ந்து பார்த்தனர்.
சூய்சைட் டிரை பண்ண முடியலை. வீட்டுக்கு வாழ வந்த பொண்ணு செத்துட்டா இந்த வீட்லருக்க பொண்ணு எப்படி வாழுவா உன்னை பத்தி யோசிச்ச
ச்சீ போடானு தூக்கிப்போட்டு போவ முடியலை ஏத்துக்க அப்பா அம்மாவும் தயாரா இல்லை அப்படியே ஏத்துகிட்டாலும் வாழவெட்டியா வீட்டுல உக்கார சொல்றியா ரெண்டு தங்கச்சிங்க இருக்காங்க எப்படி போக சொல்ற என் தங்கச்சிங்க பத்தி யோசிச்ச
தனியா யாரும்வேணானு போய் வாழ இந்த சமுதாயம் விடாது. பலபேரோட கழுகுப் பார்வைக்கும் தப்பான நோக்கத்துக்கும் நான் ஆளாக வேணா அதுக்கு பிடிக்காலனாலும் ஒருத்தன்கூடயே இருந்துட்டு போய்டலாம்.
ஏன்னா எனக்கு போக எந்த போக்கெடமும் இல்லை. அப்பா அம்மா இருந்தும் இல்லாத நிலை ஆதரவா இருந்த பிரண்டை அடிச்சி போட்டாச்சு ஆசையோட என் கனவை நிறைவேத்த வந்த அடிச்சி ஒடச்சி கலைச்சாச்சி இதுக்குமேல ஒரு தனி மனுஷியா என்னை எப்படி போராட சொல்ற உன் அண்ணனை எதிர்த்து நான் என்னதான் பண்ண முடியும் சொல்லு
உடம்பாலயும் மனசாலயும் நான் ரொம்ப உடைஞ்சிட்ட அமி
பிடிக்கலை சுத்தமா பிடிக்கலை இவனை பிடிக்கலை இவன் தொடுறது பிடிக்கலை என்ன பண்ண சொல்ற கத்தி ஊரகூட்ட சொல்றியா நாக்க புடுங்குறமாறி என்னைத்தான் கேள்வி கேப்பாங்க
தங்க வீடு சாப்பிட சாப்பாடு போட்டுகக் துணி கொடுத்திருக்கான் பாதுக்காப்பு கொடுக்குறான் இதுக்குமேல என்ன வேணும் ஒரு பொண்ணுக்குனு கேப்பாங்க. ஒழுங்கா புருஷனோட ஆசைக்கு தகுந்தமாறி நடந்துக்கோ அதான் பிழைக்கிற வழினு சொல்லுவாங்க
நியாம்தான அது. ஒருத்தன் ஒரு பொண்ணுக்கு இவ்ளோ செய்யும்போது அந்த பொண்ணு அவனுக்கு அவளை கொடுக்கத்தான வேணும். அதான் உன் அண்ணனோட பொண்டாட்டியா வாழ முடிவெடுத்தன்.
நிச்சியமா என் மனசுல காதல் இல்லை. அதைபத்தி இங்க யாருக்குமே கவலை இல்லை ஒரு பொண்ணோட அடி ஆள் மனசுல என்ன ஆசையிருக்குனு யாருமே யோசிக்கமாட்டாங்க
அவங்க அவங்க நியாயமும் அவங்ககவங்க தேவையும்தான் இங்க முக்கியம் கண்ணீரோடு அவள் பேசி முடிக்க தயாவோ செத்திருந்தான் அவள் வார்த்தைகளில்.
என்ன வார்த்தை சொல்லிவிட்டாள் தேவை……தேவைக்காக இவளிடம் நெருங்கினேன் என்றா நினைத்திருக்கிறாள். என் தொடுகையில் காதல் தெரியவில்லையா இவளுக்கு. நினைக்க நினைக்க மனம் கணம் கொண்டது.
அப்படியே சரிந்து அமர்ந்துவிட்டான். ஆளுக்கொரு மூளையில் அமர்ந்துவிட்டனர். வீடே நிசப்தமாக இருந்தது.
தயாளினியின் மனதிலோ இத்தனை நாட்களாக இருந்த பாரம் இறங்கியது போன்ற உணர்வு. அவளை மதித்து அவளின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து அவள் மனதில் உள்ளதையும் கேட்க ஒரு ஜீவன் இந்த உலகத்தில் இருக்கிறது என்று நினைத்து சந்தோஷபட்டாள். அமிர்தாவை நினைத்து.
நேற்று தயாளன் பேசியதிலிருந்து அவள் உணரந்தாள். அவன் அவளை மனைவியாக நினைக்கிறான் அதனால் எல்லா உரிமையையும் அவளுக்கு கொடுத்திருக்கிறான். அதேபோல் அவளிடமிருந்தும் கணவனாக உரிமைகளை எதிர்பார்க்கிறான். அவளையும் அவள் சுற்றி உள்ளவர்களை பற்றியும் யோசித்தவள் தயாவை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் அதைதவிர வேறு வழி இல்லை என்பதால் அவனது ஆசைகளுக்கு இணங்கிடலாம் என்றே முடிவெடுத்தாள். அதனால் வந்த மாற்றம்தான் இரவு பேசியதும் காலையில் நடந்துக்கொண்டது. ஆனால் அந்த செயல்களில் நிச்சயம் ஒரு சதவீதம் கூட காதல் இல்லை.
ஏனென்றால் அவளைப் பொறுத்தவரை பிடிவாத்தில்தான் தயா அவளை திருமணம் செய்திருக்கிறான். அவன் மனதிலும் காதல் என்ற ஒன்று இல்லை.
கொஞ்சம் பொறுத்திருந்தால் காலம் கனிந்திருந்தாள் அவன் காதலை அவளிடம் உரைத்திருப்பான் அதுதான் நடக்காமல் போய்விட்டது.
தயா புரிந்துக்கொண்டான். ஒரு பெண்ணின் மனதை வெறும் திருமணம் என்ற ஒன்றால் மட்டுமே பெற்றுவிட முடியாது என்று. காதல் அதனை உணரவேண்டும் அவன் உணர்ந்தைப் போன்று அவளும் உணரவேண்டும். அவளுடைய விருப்பத்தோடுதான் அவளை நெருங்க வேண்டும். இல்லையென்றால் வெறும் கடமைக்கான தாம்பத்யம்தான் கிடைக்கும் காதலோடு எதுவும் நடக்காது. அவன் தொட்டபோதெல்லாம் அவள் அமைதியாக இருந்தது அவன் காதலை உணர்ந்து அல்ல அவள் கடமை என்று நினைத்துதான்.
அவன் மீதுள்ள தவறு அவன் மட்டுமே காதலை உணர்ந்தது அதை அடைய அவளை திருமணம் செய்தது. அவன் ஆசையோடு அவளிடம் நடந்துக்கொண்டது இதெல்லாம் அவன் மீது தவறுதான்.
காதல் அதை இருவரும் உணரவேண்டும். திருமணம் இருமனம் இணைய வேண்டும். அவன் காதலை உணர்த்துவதில்தான் அவன் தவறியிருக்கிறான்.
மனைவி என்ற அங்கீகாரம் கொடுத்து அவளுக்கான உரிமையை கொடுப்பதில் அல்ல காதல் அவள் மனதை புரிந்து அதற்கான வழியில் அவள் செல்லும்போது அவளோடு உடன் பயணிப்பதும் அவளுக்கு உறுதுணையாக இருப்பதிலுமே உள்ளது காதல்.
தயா கலங்கியிருந்தான் அவன் கண்ணில் கண்ணீர் வடித்தது. இது தவறை உணர்ந்த குற்றவுணர்ச்சியில் அடையாளம்.
அமிர்த்தா பதறிவிட்டாள். எதற்கும் கலங்காகவனை இப்படி கலங்கடித்துவிட்டோமே.
இது அவர்கள் வாழ்க்கை எப்படியோ வாழட்டும் என நினைத்து ஒதுங்கி இருக்கலாமோ என்று யோசித்தாள்.
பெண்ணியம் அண்ணனின் கண்ணீரில் அடிபட்டது.
தயாளினிக்காக பேச்சபோய் அவன் மனதை உடைத்துவிட்டோமோ தயாளினியே கொஞ்ச நாளில் அவனோடு இணக்கமாக இருந்திருப்பாளோ. திருமணபந்தத்தில் இருப்பவர்களின் மனதில் கொஞ்சநாளில் காதல் அது வந்திருக்குமோ நாம்தான் தேவையில்லாமல் அவளைக் கிளறிவிட்டோமோ என நினைத்தாள்.
மூவரும் மூன்று மனநிலையில்………
உங்களோட கேள்விக்கான விடை கிடச்சிருச்சா தயா ஏன் தயாவ விட்டுபோகளைனு. தெளிவா சொல்லிட்டன். இதுக்குமேல டவுட்டு வந்தா பாப்பா பொறுப்பு இல்லை டேரக்டா இனி கிட்ட கேட்டுக்கோங்க. ஆனா அதுக்கு பதிலை அவ புருஷன் அவனோட ஸ்டைல்ல சொன்னா என்கிட்ட குறைபட்டுகிட்டு வரக்கூடாது. மூக்குலயே குத்திபுடுவன்.