Loading

பகுதி – 18

அவனைப் பார்த்தவள் பதறிப்போனாள்.

என்னங்க என்னாச்சு அவனருகில் வர தொடாத டி போடி என்றான் குழறலாய் பேசியபடி.

குடிச்சிருக்கீங்களா

ஆமா டி என் வாய்  நான் குடிப்ப அதை நீ கேக்ககூடாது தடுமாறி விழப்போக தாங்கிப்பிடித்து அவன் கையை எடுத்து தோள்மீது போட்டுக்கொண்டாள்.

விட்றீ அன்னைக்கி புடிக்கலை இன்னைக்கி ஏன் டி புடிக்கிற விடு டி என வாய் சொன்னாலும் அவள் தோள்மேல் கைப்போட்டு அவளோடு நடந்தான்.

ஏய் விடீறீ கத்தினான்.

ப்ச்……. அமி தூங்குறா ஹஸ்கி வாய்ஸில் சொன்னாள்.

தயா ஓஓஓஓ தங்கச்சி தங்கச்சி பாப்பா தூங்குறா கத்த கூடாது என இனியை பார்த்து கட்டளையிடுவதுபோல சொன்னான்.

யாரு நான்தான் கத்துறனா

பின்ன நானா கத்தினான் அவள் காதில்.

நான்தான் நான் தான் கத்தாதீங்க என்றவள் தள்ளாடி தள்ளாடி அவனை ரூம்க்கு அழைத்துவந்திருந்தாள்.

அவனை கட்டிலில் அமரவைக்க பொத்தென விழுந்தான் அவளோடு.

அவன்மீது மொத்த பாரத்தையும் போட்டு படுத்திருந்தாள் அவள்.

அவனோ குழறலாக பேசினான்.

என்னடி உனக்கு கீழ என்னை வரவெக்க பாக்குறியா நடக்காது டி அது நான் தயா டி

அவளோ அவன் கண்களையே பார்த்தாள். அதில் என்ன இருக்கிறதென அவளால் உணரமுடியவில்லை.

அவள் கண்ணைத்தான் அவனும் பார்த்தான்.

அவளை உருட்டி அவள்மீது அவன் இருந்தான். அவன் இப்படி செய்வான் என எதிர்பார்க்காதவள் பிடிமானத்திற்காக அவனையே பிடித்திருந்தாள்.

இனி உருகி அழைத்தான்.

இப்போதுதான் அதனை உணர்கிறாள் அவள். எல்லோரும் அவளை தயா என்றே விளிக்க இவன்தான் இனி என்று அழைக்கிறான்.  அவளை செல்லப்பெயர் வைத்து முதல் முறையாக விளிப்பது இவன்தான்.

இனி……. இனி…….இனி……
அதைத்தவிர அவன் வாயில் வேறு ஏதும் வரவில்லை.

அவளிடம் அவனுக்கு பிடித்த மச்சத்தையே பார்த்தான்.

விரலால் அவள் முகத்தை அளந்தான்.

இனி இந்த மச்சம் எப்படி வந்துச்சி உனக்கு. இது உனக்கு ரொம்ப அழகா இருக்கு உலரினான். நான் உன்கிட்ட விழுந்ததுல இந்த மச்சம்தான் முதல்ல.

அவள் புருவத்திற்கும் இமைக்கும்  இடையிலிருக்கும் மச்சத்தில் முத்தமிட்டான்.

எப்போதும் இதழ் ஒற்றிவிட்டு எடுப்பவன் இப்போது அதன் நொடிகளை நீட்டித்து இருந்தான்.

அழுத்தி அழுத்தி அவன் மீசையால் குத்தி அவளை முத்தமிட்டுக் கொண்டிருந்தான். அவளோ கண்மூடி அவனை விலக்காமல் படுத்திருந்தான்.

அந்த ஒற்றை முத்தம் அவளை சில்லிட வைத்தது. காதுமடல் சிவந்துபோனது காரிகைக்கு.

அவன் விலகினான். அவளை பார்த்தான். அவள் கண்மூடி கிடக்க சிரித்தான். பின் கோபமாக அவளின் கண்ணை விரல் கொண்டு திறந்தான்.

கனவிலிருந்து விழித்தவள் போல அவள் பட்டென எழ அவன் பாரம் மேலிருக்க மெத்தைமீதே மீண்டும் விழுந்தனர்.

அவன் நகன்றான் அவளிடம் சண்டையிட்டான்.

என்னடி என்ன பண்ற என்ன எதுக்குடி என்ன நீ கூப்பிட்டுவர எனக்கு நடக்க தெரியாதா அன்னைக்கி பார்டில எல்லார் வைஃப்பும்  அவங்க ஹஸ்பைன்டை எவ்ளோ கேர் பண்ணாங்க நீ பண்ணியா விக்ரம்ட்ட என்னோட மனைவினு கூட நீ சொல்லலை போடி போடி இங்கருந்து.

……

நான் அடிமைமாறி நடத்துறனா. நீதான் டி என்னை உனக்கு அடிமையாக்குன அதும் உன் மச்சத்துக்கு அடிமை ஆக்குன

அவள் விழித்தாள். அவனின் உலரல்களை கேட்டு என்ன சொல்றீங்க

சொல்ல முடியாது போடி

உன்னாலதான் எனக்கு ஆக்ஸிடன்ட் ஆச்சி பாரு கை அடிபட்ருச்சி தலைல முட்டிகிட்ட போடி

ப்ச் சரி போறன் போ

எங்கடி போற என்னைவிட்டு

அவன் முந்தானையை பிடித்து இழுத்தான் அவன் மீதே விழுந்தாள்.

அவன் மல்லாக்க படுத்திருக்க அவள் முதுகு அவன் மேல் இருந்தது. அவள் காதில் பேசினான்.

என்னவிட்டு எங்கயும் போககூடாது போகவிடமாட்டன் தெரியும்ல என்ன பத்தி நான் தயா

அவளை இறுக்கினான். சொல்றன்ல போமாட்டன்னு சொல்லு.

அவள் வாயே திறக்கவில்லை கால்களால் அவளைப் பின்னிக்கொண்டான்.

போவியா என்னைவிட்டு போவியா

அப்பா சாமி போகமாட்டான் போதுமா விடு என்ன இறுக்கி பிடிச்சே சாவடிச்சிடாத ஒரேடியா போய்டபோறன்.

அவன் பிடியைவிட்டான்.

எப்படி அடி பட்டுச்சி

சொல்லமாட்டான்

சொல்லலைனா போய்டுவன்

சரி சரி சொல்றன் போவாத அவள் முந்தானையை பிடித்து கையில் சுருட்டிக்கொண்டான்.

பச் புடவைய விடு

இல்ல நீ போய்டுவ

போமாட்டான் டா இங்கபாரு பின்னு கழறுது

கிட்டவா கழறாது என்றவன் அவள் நகர்ந்து வரும்வரைகூட பொறுக்காது இடையில் கைக்கொடுத்து இழுத்துக் கொண்டான்.

இம்சை டா உன்னோட அவனோடு நெருங்கி அமர்ந்திருந்தாள்.

சொல்லு

கார மரத்துல விட்டன்

அறிவில்ல ஏன் அப்படி பண்ண

என் பொண்டாட்டி அதான் நீ என்னோட சண்டபோட்டல

சண்டபோட்டா காரை மரத்துலவிடுவியா இடியட்

நீதான்

சரி கட்டுலாம் எப்படி போட்ட

நானே போட்டுகிட்டன் கார்ல கிட் இருந்துச்சி

இந்த கருமாந்தரத்தை எப்படி குடிச்ச

ஏன்டி பொண்ணுங்கலாம் சரக்கை திட்டுறீங்க நீங்க பண்ற டார்சர்க்கு அவன்தான் ஆறுதலா இருக்கான்.

அப்போ நாங்கதான் லைன்ல நின்னு வாங்கி குடிக்கனும் நீங்க பண்ற டார்சர் அப்பிடி

அதான் நின்டு வாங்கி குடிக்கிறாங்களே நீயும் வேணா போய் நில்லு

குடிச்சிருந்தும் வாய் அடங்குதா பாரு எரும எரும எப்படிடா குடிச்ச

வாயாலதான்

அய்யோ படுத்துறானே இந்த கருமத்தையும் கார்ல வெச்சிருந்தியா

ச்சோ ஸ்வீட் எப்படி கண்டுபிடிச்ச

பெரிய சிதம்பர ரகசியம் ச்சை பேசாம படு

தட்டிகொடு அப்போதான் தூங்குவன்

எட்டி மிதிக்க போறன் பாரு உன்ன

தட்டி குடு டி தட்டி குடு என்று அவள் சேலையை பிடித்து இழுக்க பின் அவிழ்ந்து அவன் கையோடு வந்ததுவிட்டது.

அவளோ கையால் மறைக்க அவனோ போதையில் அவள் மடியில் படுத்து மட்டையாகி இருந்தான். அவளுக்கோ வெட்கமாக இருந்தது. அவன் முன்னால் இப்படி இருக்க.

சேலையை எக்கு தப்பாக அவன் கையில் சுற்றி இருக்க அதை அவனிடமிருந்து பிரிக்க முடியவில்லை. அவனது மொத்த பாரமும் அவள் மேல் இருக்க அவனை விலக்கவும் முடியவில்லை.

அவளும் அவன் செய்த அலப்பறையில் டயர்டாகி போர்வையை போர்த்திக் கொண்டு  அப்படியே படுத்துவிட்டாள்.

விரோசனன் கதிர்கள் கண்ணை கூச தயா விழிகள் விரித்தான்.
என்றுமில்லாமல் இன்று அவன் மெத்தை கொழு கொழுவென வார்டர்பெட் போல இருப்பதாக தோன்றியது.

நன்றாக உடலை இப்படியும் அப்படியும் திருப்பினான். அதில் அவளுக்கு விழிப்புவர அவளும் இமைக்கூடை திறந்தாள்.

இரவு முழுவதும் அவள் மேலே அவன் படுத்திருக்க உடல்லெல்லாம் வலித்தது அவளுக்கு.

பச் எழுந்துருங்க கடுப்போடு சொன்னாள்.

அவனோ  அவள் குரல் கேட்டு கொஞ்சம் பதறி இருக்கும் நிலை அறிய அய்யோ பாவமாக இருந்தாள் அவள்.

இரவெல்லாம் அவள் புடவையை பிடித்து இழுத்து இழுத்து மொத்தமாகவே கழட்டி அவன் உடலோடு சுற்றி இருந்தான்.

இருவரும் சேலையோடு பின்னி சேலையில் வீடுகட்டி ஒன்றாக குடுத்தனம் நடத்தி இருந்தனர் இரவு முழுக்க.

அவன் எழ அவனோடு அவளும் எழ மீண்டும் விழ அவள் முறைக்க அவன் பாவமாய் விழிக்க இருவர் உடலும் நெருங்கி இருக்க காலையிலேயே கட்டில் சீனை ஓட்டிக் கொண்டிருந்தான்.

அவளின் இளமை வனப்புகள் வேறு அவன் கண்ணில் பட்டு தொலைக்க அவன்  உடலோ முறுக்கேறி கொண்டது. அவனது பார்வை மாற்றத்தை உணர்ந்தவள் வேகவேகமாக சேலையை கழற்றி மெத்தையிலிருந்து இறங்கி திரும்பி நின்றாள்.

மந்திரித்து விட்ட காளையாட்டாம் இருந்தவன் தெளிந்தான் அவள் விலகியதும்.

அவள் சேலை அவன் கையில் தயா என்னடா பண்ணி தொலைச்ச நேத்து அய்யோ அய்யோ கத்தி ஊரகூட்டிடுவாளோ என மைண்ட்வாய்ஸில் பேசியவன் இறங்கி அவள் முதுகைப் பார்த்து நின்றான்.

கிரகம்……அவன் கண்ணில் பட்டது அவள் நடுமுதுகில் நச்சென்று இருக்கும் மச்சம். அவனோ கிறங்கிப்போய்விட ச்சை பாக்காதடா தப்புடா என பார்வையை மாற்ற அடுத்து கண்ணில் பட்டது பின் இடையில் இருக்கும் அடுத்த மச்சம்.

நாம பார்த்தே இவளுக்கு மூனு மச்சம் பாக்காம எத்தனை இருக்குமோ

அடச்சி என்னடா இது மச்ச ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்க அவனுக்கு அவனே பேசிக்கொண்டு நிற்க அவனும் புடவையை தருவான் தருவான் என எதிர்பார்த்து நின்றவள் ரொம்ப நேரம் ஆகியும் தராமல் போக திரும்பினாள் அவன் பக்கமாக.

அய்யையோ……..
இப்போதும் அவன் கண்ணில் பட்டது அவளது கழுத்துக்கு கீழேயும் இடப்புற  மார்புக்கு மேலையும் இருந்த மச்சம்.

அப்படியே பார்வை கீழிறங்க நெஞ்சின்மேல் ஒரு மச்சம்

ஐஞ்சு என்றவன் வாய்விட்டு சொல்ல அவன் கையிலிருந்து சேலையை வாங்கிக்கொண்டு அதனை அவள்மேல் போர்த்திக் கொண்டாள்.

எவ்வளவு முடியுமோ அவ்வளவு முறைத்து பல்லை கடித்து இரு உன்னை வந்து வச்சிக்கிறன் என திட்டிவிட்டு வேறு ஆடையை எடுத்துக் கொண்டு குளியலறை புகுந்தாள்.

அவனோ தலைசுற்றி கிரங்கிப்போய் அமர்ந்திருந்தான். ராத்திரி அடித்த போதையை விட இவளின் மச்சம் அவனை அதிக போதை ஏற்றி இருந்தது.

முறுக்கேறி இருந்த உடல் மூச்சுவாங்கியது. உள்ளே அனலாக கொதித்து. கண்கள் ரெண்டும் மச்ச கன்னியின் மச்ச தரிசனத்தில் பொங்கிப்போய் இருந்தது.

சரியான மச்சக்காரியா இருப்பா போலயே சொல்லி சிரித்தவன் தலையை தட்டிக்கொண்டான். அவள் வெளில் வந்து ஆடப்போகும் ஆட்டம் தெரியாமல்.

அப்போ நைட் முழு அவமேலதா படுத்திருந்தோமா அவ சேலை நம்மகிட்ட இருக்கே அச்சோ எக்குதப்பா அவனை குனிந்து ஒரு பார்வை பார்த்து ச்சே ச்சே அதெல்லாம் இல்லை நம்ம பாடிலயும் எந்த சேஞ்சசும் தெரியலை  என்றவனுக்கு குத்தாட்டம் போட வேண்டும் போல இருக்க இறங்கி பைத்தியகாரனாட்டம் ஆடினான்.

கட்டிலில் படுத்து உருளோ உருளென்று உருண்டான். தலையணையை கட்டிபிடித்து கண்டமாக்கிக் கொண்டிருந்தான்.

தயாக்கு ஏதோ செய்தது. உடலெல்லாம் பரபரவென்று இருந்தது. அவ்வப்போது அவளின் மச்சம்வேறு நினைவில் வந்து இதமாக இம்சை செய்தது.

இவன்தான் நேற்று அவள் மீது கொலைவெறியில் இருந்தான் என்றால் யாரும் நம்பமாட்டார்கள்.

போனை எடுத்து ஸ்டேட்டஸ் பார்த்து அவனை அமைதி படுத்திக்கொண்டு இருந்தான். அவள் குளித்து முடித்து வந்தாள்.

அப்போது ஸ்ட்டேடஸில் பாடல் ஓடியது.

சேலையில வீடு கட்டவா சேர்ந்து வசிக்க
ஜன்னல் வெச்ச ஜாக்கெட் போடவா தென்றல் அடிக்க

அவன் ஆசையாக பார்க்க அவளோ டீஷர்ட் மிடி அணிந்திருந்தாள். அவன் சேலையை எதிர்பார்த்திருப்பான் போலும் யார் கண்டது.

இடுப்பில் கையை வைத்து முறைத்திட அவன் பட்டென அணைத்தான் போனை.

நேத்து ஏன் குடிச்சிட்டு வந்தீங்க

அது…..

என்ன அது

அது  கோவம் அதான்

என்ன கோவம் அப்படி ஒரு கோவம் உங்களை மறக்குற அளவுக்கு குடிக்க சொல்லுதா கோவம். வீட்டுல ரெண்டு பொண்ணுங்க இருக்கோம் இப்படி வீட்டு ஆம்பளை குடிச்சிட்டு வந்தா என்னாகுறது எவனாச்சும் வீடுபூந்து ரகளை பண்ணா நீங்க மட்டையாகி கிடப்பீங்க நாங்க அல்லாடனுமா அறிவில்லை புத்தி எங்க போச்சு மண்ணு திங்கவா

(மீ – பேசுடா தயா நீதான் தயா ஆச்சே பேசு இப்ப பேசு மேன்.)

(ரீடர்ஸ் மைண்ட் வாய்ஸ் பேச்சாடா பேசுன இப்ப தெரியுதா அன்னைக்கி எங்க ஹீரோஸ் சொன்னது)

பச்……. நீ தான் நான் குடிச்சதுக்கு காரணம் நீ அப்படி பேசவும்தான் கோவபட்டு குடிச்சன்

அதான் எனக்கு எடுத்து சொல்லி புரியவெச்சிட்டீங்கள்ல அப்றம் ஏன் குடிச்சீங்களாம்

……

குடிச்சிட்டு வந்து கொஞ்ச நஞ்சமா அலப்பறை பண்ணீங்க என்னைப்போட்டு படுத்தி எடுத்துட்டீங்க

தயா வாட் படுத்து

ப்ச்……… தொந்தரவு பண்ணீங்கனு சொன்ன

ஓஓஓஓ இனிமே இப்படி நடக்காது

இனிமே இப்படி நடந்தா வீட்டுக்கு வெளியதான் படுக்கனும் நினைப்பு இருக்கட்டும்.

ம்ம்ம்

போங்க டிரெஸ் எடுத்து வெக்கிற குளிச்சிட்டு வாங்க

ஒரு நிமிஷம்

என்ன

இனிமே எங்க வேலைய நாங்களே பாத்துக்குறோம் எனக்கோ அமிக்கோ நீ எதுவும் செய்ய வேணா

உங்களுக்கு வேலை செய்ய வேணாணா செய்யலை அமிக்கு செய்வன்

அது ஏன்

ஏன்னா அமி உங்க தங்கச்சி எனக்கும் தங்கச்சி

அவ எனக்கு தங்கச்சி இல்லை பொண்ணு

அப்போ எனக்கும் பொண்ணுதா என்று சொல்லியவள் நாக்கை கடித்தாள்.

அவன் கள்ள சிரிப்பு சிரித்தான். நேற்று அவன் சொன்னது அவளுக்கு புரிந்தது  என்று அவனுக்கு புரிந்தது.

டிரெஸ் எடுத்து  வெச்சிரு டி என்று சொல்லிவிட்டு குளியலறை புகுந்தான்.

அவளோ முகத்தை மூடி அமர்ந்தாள் மெத்தையில்.

இரவு அவன் செய்த இம்சைகள் நினைவுவர கன்னியவளுக்கு உடலெல்லாம் சிலிர்த்து போய்யிருந்தது.

நினைத்துக்கொண்டாள் இனி தயாளனின் மனைவியாக அவள் வாழ்கையை தொடரலாம் என்று. காரணம் காதல் இல்லை…….💔.

அவன் குளித்துமுடித்து டவலோடு வெளியே வர அவளோ வெட்கத்தோடு திரும்பி நின்றாள்.

அவளை பார்த்து மர்மமாய் சிரித்து கண்ணாடி முன் நின்று தலையை இப்படியும் அப்படியும் ஆட்ட அந்த நீர்த்துளிகள் அவள் மேல் பட்டு அவளுக்கு கூச்சத்தை கொடுத்தது.

நான் போறன் என்றவள் வெளியே போக அவனோ அழைத்தான்.

இனி

என்ன

இந்த டிரெஸ் வேணா வேற எடுத்துக்கொடு

நீங்க கப்போர்ட் முன்னாடிதான் நிக்கிறீங்க

நீ எடுத்துத்தா டி.

அவள் அவன் அருகில் வர நகராமல் நின்றான். அவளால் அவனது முகத்தை பார்க்க முடியவில்லை.

நகருங்க

கொஞ்சமாக நகர்ந்தான். அவள் கப்போர்டிலிருந்து டிரெஸ் எடுக்க இது வேணா இது என்றான்.

அவளோ உறைந்து நின்றாள்.
ஈரம் சொட்டும் வெற்றுடலடை அவள் முதுகின் மீது சாய்ந்திருந்தான்.

அவன் மூச்சுக்காற்று அவள் மேனியில் பட்டது. அவள் நடுங்க ஆரமித்தாள்.

அவனோ மெதுவாய் அவள் இடையில் கரம் பதித்திருந்தான்.

அவன் மூச்சுக்காற்றை அவள் கந்தாரத்தில் படரவிட்டான்.
அவளுக்கு ஏதோபோல் இருந்தது.
அவள் காதில் முணுமுணுத்தான்.

நைட் பாடுபடுத்துனன்னு சொன்னியே என்ன படுத்துன

பட்டென கண்கள் திறந்து அவனிடமிருந்து விலகி அவனை முறைக்க முயன்று அது முடியாமல் போகி வெளியில் ஓடிவிட்டாள்.

யாஹூஊஊஊஊஊ தயா சூப்பர்டா நல்ல மூட்ல இருக்கா இப்படியே லவ்வ சொல்லி கரெட் பண்ணிடு. ஐய்யோ என் இனி…..இனிக்கிறியே டி.  டார்ல்ஸ்……. என் பிளாக்ஃபாரஸ்ட்……. எவ்ளோ அழகு அப்படியே  கடிச்சி திங்கலாம் போலருக்கே ஏன் டி என்னை இப்படி படுத்துற அழகால கொல்ற டி உன் திமிரால என்னை வெல்ற டி என் வெல்லகட்டி கருப்பட்டி மச்சகன்னி……

காதல் பித்து தலைக்கேரி அவளைக் கொஞ்சிக் கொண்டு இருந்தான். அவளிடம் தன் காதலை எப்படி எல்லாம் சொல்லலாம் என மனதில் திட்டம் தீட்டினான்.

அவன் அறியவில்லை இந்த சந்தோஷம் ரொம்ப நேரம் நீட்டிக்க போவதில்லை என்று……. பிரச்சனை தயாவிற்காக வழி மீது விழிவைத்துக் காத்திருக்கிறது.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
0
+1
0
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்