Loading

பகுதி – 17

அமிர்தா தான் பொங்கி எழுந்துவிட்டாள்.

அண்ணி என்ன இது ஏன் நீங்க வேலைக்கு போகனும் இங்க என்ன குறை உங்களுக்கு

இனி அது எனக்கு வீட்ல சும்மா இருக்க போர் அடிக்குது அதான்

அமி அப்போ அண்ணாவோட லேப்க்கு  போங்க எதுக்கு இன்னொருத்தர்கிட்ட கைகட்டி வேலை செய்யனும் அதுவும் பில்லிங்

இனி அது எனக்கு லேப்ல வர்க் பண்ண பிடிக்கலை வேற ஏதாச்சும் பண்ணலாம்னுதான்

அமி வேற ஏதாச்சும் பண்ணனும்னா நீங்க புதுசா யோசிச்சி ஏதாவது பிஸ்னஸ் ஸ்டார்ட் பண்ணுங்க அண்ணா காசு தருவான் அதுல பண்ணுங்க இப்படி கேவலமா இன்னொர்தர்கிட்ட வேலைக்கு போறதெல்லாம் வேணா

அத்தோடு பேச்சு முடிந்ததாய் எழுந்து சென்றுவிட்டாள்.

இனிக்குதான் கண்களில் கண்ணீர் நிறைந்துவிட்டது.

சின்ன பெண் அவளை அதிகாரம் செய்வது போல தோன்றியது.  அதை கேட்டுக்கொண்டு கட்டியவனும் அமைதியாக இருப்பது இன்னும் வலித்தது. இதற்கெல்லாம் காரணம் இந்த திருமணம்தான் தயாவின் மீது கோவமாக வந்தது. ஆனால் காட்டத்தான் வழியில்லை.

தீபனின் பார்வையோ இதுக்குத்தான் நான் வேணானு சொன்ன என்பதுபோல இருந்தது.

அவன் கிளம்பிவிட்டான். வந்த வேலை முடிந்தது பத்த வெச்சாச்சி இனி வெடிக்கிதோ அனையுதோ அவங்க பாடு என்று.

தயாளன் அவன் அறைக்குச் சென்றுவிட்டான். இனியோ அழுது அழுது வேலை செய்துவிட்டு அவர்களின் அறைக்குச் சென்றாள்.

அவனோ கட்டில் அமர்ந்து இருகைகளையும் ஊன்றி அவள் வரவிற்காகவே எதிர்பார்த்து காத்திருந்தான். கண்களோ செம்மையை பூசிக்கொண்டு இருந்தது.

அவள் உள்ளே வந்தாள். அவன் அமர்ந்திருப்பதே அவளுக்கு பயத்தை கொடுத்தது.

அவனின் முன் நடுக்கத்தை மறைத்து நின்றாள்.

வாங்க மேடம் உங்களுக்காகதான் காத்திட்டு இருக்கன்.

அதுவந்து

சொல்லு என்ன வந்து

அவன் குரலே அவளுக்கு பயத்தை கொடுக்கஅமைதிதயாக நின்றாள் …….

சொல்லு டி என்ன வந்து….. பேசுடி …..

…..

இங்க என்ன குறை டி உனக்கு. நான் என்ன உனக்கு சோறு போடாம பட்டினியா போட்ருக்கனா மாசம் லட்ச்சத்துல சம்பாதிக்கிறன் டி உங்க ரெண்டுபேர்காகதான அப்றம்  நீ ஏன் வேலைக்கு போவனும் சொல்லுடி அதிகாரமாக கேட்டான்.

இதை அன்பாக கேட்டிருந்தாள் அவள் வேறுமாதிரி பேசியிருப்பாளோ என்னவோ இந்த அதிகாரம் அவளின் சுயமரியாதையை சீண்டியது.

எனக்கு உங்க காசுல சாப்பிட விருப்பமில்ல

வாட்……

ஆமா உங்களுக்கு அடிமையா உங்க காசுல சும்மா உக்கார்ந்து சாப்பிட விருப்பம் இல்லை

என்னது அடிமையா உனக்கு புத்தினு ஒன்னு இருக்கா இல்லையா அது யோசிக்கவே யோசிக்காதா. நீ என் மனைவி என்னோட சரிபாதி என்னோட அடிமை இல்ல.

இந்த எண்ணம் செயல்ல இருக்கனும் வெறும் வார்த்தை ல இல்ல

இனி என் பொறுமைய ரொம்ப சோதிக்காத அப்படி என்ன டி பண்ணிட்ட உன்னை என்னடி மதிக்கலை நானு. உன்கிட்ட நானோ அமியோ அதிகாரமா இதை செய் அதை செய்னு சொல்லிருக்கோமா நீ இதைதா சமைக்கனும் இப்படிதான் இருக்கனும்னு சொல்லிருக்கோமா இந்த டிரெஸ்தான் போடனும் எதாச்சும் ரூல்ஸ் போட்டோமா

நீங்க என்னை விருப்பமில்லாம கல்யாணம் பண்ணீங்க 

இங்கபாரு விருப்பமில்லாம தாலி கட்டுனனு சப்ப கட்டு கட்டாத நீ உன் வாயால என்னை கல்யணம் பண்ணிக்க சம்மதம்னு சொன்னதுக்கு அப்றம்தான் நான் கல்யாணவேலேயே ஆரமிச்ச.
இன்னைக்கு வர புருஷனா உன்கிட்ட எந்த உரிமையும் எடுத்துக்கலை அன்னைக்கி நீ திட்டுனதுல இருந்து. உன் விருப்பு வெறுப்புக்கு மரியாதை கொடுத்துதான் நடக்குறன். 

……

என்ன சொன்ன நீ என் சரிபாதின்றது வெறும் வார்த்தைல இருக்கு செயல்ல இல்லையா

உன்னை  பொண்ட்டாட்டியா நினைக்கிற நாலதான் உனக்கு இந்த வீட்ல எல்லா அதிகாரத்தையும் கொடுத்திருக்கன். நீ சமைக்கிறத சாப்பிடுறன். நீ துவச்சி போடுறதை போட்டுக்குறன்.  என்னோட எல்லா தேவைக்கும் உன்ன எதிர்பாக்குறன். உன்னோட தேவைகளை நிறைவேத்துறது என் கடமைனு நினைக்கிறன். உன்ன அடிமையா நினைச்சிருந்தா உனக்கு கட்டளைதான் கொடுத்திருப்பன். இப்படி நீ என்ன செஞ்சாலும் வாய மூடிட்டு இருந்துருக்க மாட்டன்.

கொஞ்ச நேரம் மௌனம்……..

தயாவினால் அந்த வார்த்தையை தாங்கிக்கொள்ள முடியவில்லை மீண்டும் கேட்டான்.

என்னடி அடிமையா இருக்க நீ. நான் என்னடி உன்னை அடிமையா நடத்துன.

இங்க சமையல் உன் விருப்பம்தான்.
என்னோட கிரெடிட் கார்ட் உன்கிட்ட கொடுத்துட்டன்.
இதுவரை செஞ்ச செலவுக்கு நான் கணக்கு கேக்கலை.
உன்னை இங்க போகாத அங்கபோகாதனு யாரும் இங்க ரெஸ்ட்ரிக்ட் பண்ணலை.
உன்ன சேர்ந்தவங்க யார் இங்க வந்தாலும் நானோ அமியோ தடுக்கலை.
நீ எத்தனை மணிக்கு எழுந்தாலும் உன்னை ஒரு வார்த்தை கேக்குறதில்லை.
நீ உன் இஷ்டபடிதான் எல்லா வேலையும் செய்ற.
உனக்கான பிரைவஸி இருக்கு
இதுல எங்கருந்து அடிமைத்தனம் இருக்கு.

எனக்கு தெரியலை இல்ல நீ கொஞ்சம் சொல்லி தெளிவு படுத்தேன்.

ஒரு கல்யணாம் ஆன பொண்ணுக்கு எதுஎதுலாம் பிரச்சனையா இருக்குமோ அது எதுவுமே உனக்கு பிரச்சனை இல்லை நீ இங்க உன்னோட விருப்பபடிதான இருக்க என்ன அடிமை படுத்துன உன்னை நான்.

  …….

சரி கடைசியா ஒன்னு கேக்குற சொல்லு அன்னைக்கி சொன்னல அஜ்ஜூ வரது பிடிக்கலைனு அதுலருந்து அவன் இங்க வந்தானா

…….

சொல்லு டி வந்தானா மிரட்டினான்

இல்லை என தலையாட்டினாள்.

ஏன் வரலை?

…..

என் உயிர் நண்பன் என்னோட கஷ்ட நஷ்டத்துல கூட இருந்தவன் நானே சொன்ன வீட்டுக்கு வராத டா அவளுக்கு பிடிக்கலைனு. ஏன் சொன்ன  நீ சொல்லிதான  உன் வார்த்தைக்கு மரியாதை கொடுத்துதான.

ஏன்னா இது என் வீடு இல்ல நம்ம வீடு இந்த வீட்ல முழு உரிமை உனக்கும் இருக்குன்றனாலதானா. எதையுமே புரிஞ்சிக்கலைல நீ. அசால்டா வார்த்தையவிடுற உன்னை அடிமைமாறி நடத்துறன் செயல்ல இல்லனு.

ச்சை போடி அந்த பக்கம் கண்ணுக்கு முன்னாடி நிக்காத கோவத்துல அடிச்சிட போறன்.

அவன் மனதிலிருந்த பாரத்தை கொட்டிவிட்டு அவன் பக்க நியாயத்தை சொல்லிவிட்டு வெளியில் சென்றுவிட்டான்.

அவளோ அவன் பேசிய பேச்சின் உண்மைகள் உரைக்க அப்படியே அமர்ந்துவிட்டாள்.

ஆம் அவன் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மைதானே அப்படித்தானே இங்கு இருக்கிறாள்.

இன்னும் சொல்ல போனால் அவள் வீட்டிலிருந்ததை விட இங்கு சுதந்திரமாகத்தான் இருக்கிறாள். எல்லாமே அவள் விருப்பப்படிதான் நடக்கிறது. இதில் அடிமைத்தனம் எங்கும் இல்லையே.

அவள் கணவன் அவளை வசதியாகத்தானே வைத்திருக்கிறான். அவன் சொன்னதுபோல கட்டாயத்தாலி ஒன்றும் அவன் கட்டிவிடவில்லையே.

அன்று வார்த்தையில் மட்டுமே கூறினான் எனக்கு கீழே நீ இருக்க வேண்டும் என்று ஆனால் இங்கு வந்ததிலிருந்து எல்லாவற்றுக்கும் அவளைத்தானே எதிர்பார்த்து இருக்கிறான். இன்னும் சொல்ல பேனால் தயாளினிதான் அந்த வீட்டை நிர்வகம் செய்கிறாள்.

இந்த ஒருமாதமாக பால் பில்லிருந்து ஆரமித்து கரண்ட் பில் வரை அவள்தான் கட்டி இருக்கிறாள்.

அமி அவனது தங்கை அவள் கூட ஃபோன் ரீச்சார்ஜ் பண்ண இவளிடம்தான் பணம் கேட்டாள். இனி எல்லாவற்றையும் உங்களிடம்தான் கேட்க வேண்டும் என அண்ணன் சொன்னான் என்று புன்னகையுடன் சொல்லி அவளை முத்தமிட்டாள்.

ஏன் இந்த வீட்டின் நிர்வாகம் இனி உங்களுடையது எனக்கும் அதில் சம்மதம் என்று.

அவனது தங்கையிடம்கூட அவன் வீட்டின் பொறுப்பை கொடுக்கவில்லை அவளுக்குதான் மொத்த உரிமையையும் கொடுத்து இருக்கிறான் என  நினைத்தவளுக்கு கண்ணீர் கரைபுரண்டு வந்தது. அவள் தவறு புரிந்தது. தயாவின் மீது இனம் புரியாத உணர்வு வந்தது. அந்த உணர்விற்கென்ன பெயர் என அவளுக்கு புரியவில்லை.

இரவு வெளியில் சென்றவனை இன்னும் காணோம். அவனுக்காக காத்திருந்தவள் அவனைக் காணாது கொஞ்சம் பதறினாள்.

கோபத்தில் வேறு சென்றிருக்கிறானே என்று.

அவனுக்கு அழைக்க அழைப்பு அறையில் கேட்டது. ஏனோ தவிப்பாக உணர்ந்தாள்.

முதல் முறை தயாவிற்காக துடித்தாள்.

யாரோ நடந்துவரும் சத்தம் கேட்ட ஓடிவந்தாள் தயாவாகத்தான் இருக்கும் என்று.

அவள் நினைப்பு பொய்க்கவில்லை.
வந்தது தயாதான் தலை கையில் கட்டோடு.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்