பகுதி – 16
தீபன் அர்ஜூனை காண அவன் மருத்துவமனைக்கு சென்றான் ரதியுடன்.
அஜ்ஜூவோ ஒரு யுவதியுடன் சல்லாபித்துக் கொண்டு இருந்தான்.
இரண்டுமணி நேரமாக காத்திருந்தனர்.
அஜ்ஜூ சாவகாசமாய் அழைத்தான் அவர்களை.
என்ன வேணும் உங்களுக்கு
ரதிய எப்போ கல்யாணம் பண்ணிப்ப நேரடியாக விஷியத்திற்கு வந்தான்.
பச்…..
நீ சொன்னமாறி தயா அவரை கல்யாணம் பண்ணிகிட்டால நீ எப்போ ரதிய கல்யாணம் பண்ணிப்ப
ஏய் இங்கபாரு தயா தயாளினிய லவ் பண்ணா அவன் லவ்வ சேர்த்து வைக்க நான் இதை யூஸ் பண்ணிகிட்டன் அவ்ளோதான். என்னாலலாம் அவளை கல்யாணம் பண்ணிக்க முடியாது.
தீபன் அர்ஜூனின் சட்டையை பிடித்தான். ஏன்டா ஒரு பொண்ண ஏமாத்தி கொழந்தை கொடுத்துட்டு கல்யாணம் பண்ணிக்க முடியாதுன்னு சொல்லுவியா
அஜ்ஜூ டேய் கையெடுடா என்ன எகிறிட்டு வர அது என் குழந்தைதான்றதுக்கு என்னடா ஆதாரம் இருக்கு நீ பாத்தியா நான் அவளை தொட்டத இல்ல வந்து விளக்கு புடிச்சியா
ரதியோ அய்யோ என்று அழுதாள். ஏன் அஜ்ஜூ ஏன் இப்படி பேசுற தயவு செஞ்சி இப்படி பேசாத உன்ன கெஞ்சி கேக்குறன்.
ஏய் என்னடி ரொம்பத்தான் பத்னி வேஷம் போடுற நல்லவளாட்டம். என்ன வசதியான இடம்னதும் வளைச்சி போடாம்னு பாக்குறியா
அஜ்ஜூ
ச்சீ நிறுத்து உண்மைய சொல்லு இது யாரோட குழந்தை உனக்காக ரொம்ப துள்றான் என்ன இவன்தான் இதுக்கு அப்பனா ரெண்டுபேரும் பணம் பறிக்க திட்டம் போடுறீங்களா
ரதி அர்ஜூனை பளாரென அறைந்தாள். என் கற்ப சந்தேகபட்டப்ப கூட உன்னை நான் வெறுக்கலை என் நட்ப சந்தேகபட்டல இப்போ சொல்றன் டா நீ எனக்கு வேணா என் குழந்தைய எப்படி வளர்க்கனும்னு எனக்கு தெரியும் போடா என்று ஆவேசமாக திட்டிவிட்டு சென்றுவிட்டாள்.
தீபனோ அர்ஜூன் பேசிய வார்த்தையில் மொத்தமாக உடைந்திருந்தான்.
இருவரும் வெளியில் வந்து ஒரு மரத்தடியில் அமர்ந்தனர். ரதி ஓஓஓஓஓ வென்று கத்தி அழுதாள். செய்த தவறு செருப்பால் அடித்தது அவளை. அவளின் கற்பை கேவலமாக பேசிவிட்டான். அவள் குணத்தை கொச்சையாக பேசிவிட்டான். அவள் நட்பை அய்யோ நினைக்கவே நெஞ்சம் வலித்தது அவளுக்கு. நண்பர்களிடம் பொய்யுரைத்தது எத்தனை தவறென புரிந்துக்கொண்டாள் காலம் கடந்து.
தயாவிற்கு அழைத்து தீபன் நடந்ததை சொன்னான். அவளோ அங்கு துடித்துவிட்டாள். எத்தனை கேவலமான பிறவி இவன் நல்ல தாயின் வயிற்றில் பிரந்திருப்பானா இவன் என்று யோசித்தாள்.
இதனை தயாளனிடம் சொல்லாம் என்றான் தீபன். தயாவோ எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான். ஒரு பெண்ணை வலுக்கட்டாயமாக திருமணம் செய்தவனா நமக்கு நீதி வாங்கிதர போகிறான் அஜ்ஜூ பேசியதை விட இரண்டு மடங்கு இவன் அசிங்கமாக பேசுவான் என்றாள்.
அதுவும் உண்மைதான் என்பதால் அனைவரும் பொறுமை காத்தனர்.
ஒருமாதம் கடந்திருந்தது…….
தீபன் தயாளினியை பார்க்க வந்திருந்தான். யாழியும் அப்போது வந்திருந்தாள்.
அவளின் நண்பர்கள் வருவதை தயாவும் தடுப்பதில்லை தயாவின் நண்பர்கள் வருவதை அவளும் தடுப்பதில்லை.
ரதியின் வாழ்க்கைக்கு என்ன முடிவெடுப்பது என தெரியாமல் நாட்களை கடத்தினார்கள்.
யாழிவரவும் பேச்சை நிறுத்தினார்கள். அவளுக்கு ஏன் இவர்கள் தான் வந்ததும் பேச்சை நிறுத்துகிறார்கள் அப்படி என்ன பேசுகிறார்கள் என்று தோன்றியது.
பெரிதாக கண்டுகொள்ளவில்லை. தீபனோ யாழினியும் ஒரு பெண்தானே அவளிடமாவது சொல்லி பார்க்கலாம் என்றான்.
தயாவோ அவ இவங்க மூனுபேரயும் தூக்கி சாப்ருவா
வசீகிட்ட
அவர் பேச்சு இவங்ககிட்ட எடுபடாது அவர் பாவம் இவங்க கேங்குல மாட்டுன அப்பாவி
என்னதான் பண்றது தலையை பிய்த்துக் கொண்டனர். பின் இனி வேலை இருக்கிறதென சொல்லிட தீபன் கிளம்புவதாக சொல்லி அங்கிருந்து வெளியே வந்தான்.
யாழினியோ ஃபோனில் ஒருவரோடு பேசினாள்.
செருப்பால அடி ராஸ்கல் பொம்பளைய ஏமாத்த நினைக்கிறானா பொண்ணுங்கனா கிள்ளு கீரைனு நினைச்சானா அவன் மேல கேஸ் கொடுத்து முட்டிக்கு முட்டி தட்ட வெக்கலை என் பேரு யாழினி இல்லை. ஆவேசமாக பேசினாள்.
தீபன் அவளையே இமைக்காமல் பார்த்தான். ஏதோ பெண்ணுக்காக நியாயமாக பேசுகிறாள் இவளிடம் சொன்னாள் நிச்சயமாக அவர்களுக்கு உதவுவாள் என நினைத்தான்.
தீபனோ ஒரு முடிவெடுத்தான் யாழினியிடம் சொல்லி பார்க்கலாம். கொஞ்சமாச்சும் இரக்கம் காட்டுவாள் என்று.
யாழினி தீபனை பார்த்தாள் இல்லை இல்லை முறைத்தாள் பின்னே அவளை வைத்த கண் வாங்காமல் பார்த்தாள் என்ன செய்வாள்.
அவள் அங்கிருந்து கிளம்ப தீபன் அவளிடம் பேசினான்.
ஏங்க உங்ககிட்ட கொஞ்சம் பேசனும்
என்ன பேசனும்
அவன் சுற்றி சுற்றி பார்த்தான்.
ஏய் என்ன பேசனும் நீ என்கிட்ட என்ன டா பேச போற எரிச்சலாக கேட்டாள்.
அது கொஞ்சம் பர்ஸனல் பிளீஸ் ஒரு பத்து நிமிஷம் பொறுமையா கேளுங்க
பச்…..எனக்கு டைம் இல்ல உன்கிட்ட பேசுற அளவுக்கு நீ வர்த்தும் இல்லை
பிளீஸ் பிளீஸ் ஒரு பொண்ணுக்கு பிரச்சனை பிளீஸ் ஹெல்ப் பண்ணுங்க ஒரு ஐஞ்சே நிமிஷம்.
பச்…. பொண்ணுக்கா எந்த பொண்ணுக்கு என்ன பிரச்சனல
அது கொஞ்சம் பெரிய கதை
ஓஓஓ காட் இது என்ன புது தலைவலி சரி வா கார்ல போய்ட்டே பேசலாம்.
இருவரும் காரில் சென்றுக்கொண்டு இருந்தனர். அவளோ அவசரமாக செல்ல வேண்டுமென்பதால் காரை அதி விரைவாக செலுத்தினாள்.
ஒரு கால் வர எடுத்து பேசினாள்.
ஹலே சொல்லுடா
……
தப்பு உன் மேலயா
…..
சரி விடு நம்மளைமாறி பெரியாளுங்க தப்பு பண்றதெல்லாம் சகஜம் பாத்துக்கலாம்.நமக்கா தப்பை மூடி மறைக்க தெரியாது. சரி நான் செச்சிடுறன்.
இதை கேட்ட தீபனுக்கு தூக்கிவாரி போட்டது. தப்பு சகஜமா தயா சொன்னமாறி இவ அவனுங்களை தூக்கி சாப்டுறுவா போலயே இவகிட்ட நியாயம் கேக்குறது சரியா வருமா. இவளும் நம்மளை தப்பா நினைச்சிட்டா.
அவ தப்பா நினைச்சா உனக்கென்ன டா என மனசாட்சி சரியாய் கேள்வி கேட்க அவன் மனது செல்லும் திசையை அறிந்து அவனையே ஏசிக்கொண்டான்.
வேணாடா தீபா இதுங்கலாம் மார்டன் டிரஸ் போட்ட சூனியபொம்மைங்க. இருக்குற பிரச்சனைல நீ ஒரு பிரச்சனை இழுக்காத அவன் மனதை ஒருநிலைபடுத்தி இருந்தான்.
சொல்லு என்ன பேசனும். பேசனும்னு சொல்லிட்டு சும்மா மண்டைய மண்டைய ஆட்டிட்டு இருக்க.
அது என தீபன் ஆரமிக்க எதிர்பாராத விதமாக சாலையில் ஒரு சிறுவன் குறுக்கேவர அவனை அடித்துதூக்கினாள்.
யாழியின் மீது தவறில்லை அந்த சிறுவன்தான் குறுக்கே புகுந்துவிட்டான்.
யாழினி பயந்துவிட்டாள். நொடியில் நடந்த விபத்தில். அவள் அடித்த அடியில் அந்த சிறுவன் நிச்சயம் பரலோகம் சென்றிருப்பான்.
காரை தூரத்தள்ளி நிறுத்தினாள்.
அவள் இறங்கப்போக தீபன் அவள் கைப்பிடித்தான்.
யாழு இந்த பக்கம் வா. யார் கேட்டாலும் நான் டிரைவ் பண்ண சொல்லு அவளை இழுத்து அவன் சீட்டிற்கு மாற்றி தீபன் டிரைவர் சீட்டிலிருந்து இறங்கினான்.
கூட்டம் கூடியது தீபனை அடிக்கவே வந்துவிட்டனர். தீபன் அந்த சிறுவனைத் தூக்கிக்கொண்டு காரில் ஏறினான்.
யாழினி பர்ட்ஸ் எய்ட் கிட்டை வைத்து அந்த சிறுவனுக்கு முதலுதவி செய்தாள். வேகமாக அதே சமயம் லாவகமாக வண்டியை செலுத்தியவன் வந்து நிறுத்தியது அர்ஜூனின் மருத்துவமனை.
தூக்கிக்கொண்டு ஓடினான். யாழினி பதறிப்போய் அர்ஜூனை அழைத்தாள்.
செய்தியறிந்து ஓடிவந்து சிகிச்சை அளித்தான். காவலர்கள் வர தீபனை கைது செய்தனர்.
யாழினி பதறி உண்மையை சொல்ல வர வேண்டாமென தலையாட்டினான் தீபன்.
யாழினி தயாவிற்கு அழைத்தாள். நடந்ததை சொல்லிட வேகமாக வந்தான்.
அர்ஜூனோ அரும்பாடு பட்டு அந்த சிறுவனின் உயிரை காப்பாற்றிவிட்டான்.
வசீ அந்த சிறுவனின் பெற்றோரிடம் பேசி பணம் கொடுத்து சரிகட்டினான்.
தயா காவல்நிலையம் சென்று அங்குள்ளவர்களை சரிகட்டினான்.
ஆனால் ஒரு வாரம் சிறையில்தான் இருந்தான். சீசீடீவி தீபனுக்கு எதிராக இருந்தது. காரில் கோளாரு என்று சொல்ல எடுபடவில்லை. ஏனென்றால் விபத்திற்கு பிறகு அதேகாரில்தான் அந்த சிறுவன் மருத்துவமனை அழைத்துவரப் பட்டிருக்கிறான்.
டிரங்க் அன்ட் டிரைவ் என்று வழக்கு பதியப்பட்டது. அந்த சிறுவனின் பெற்றோர் கேஸ் வாபஸ் வாங்கிவிட்டனர். ஆனால் சில சமூக சீர்த்திருந்தவாதிகள்தான் பிரச்சனை செய்தனர். நல்லவேலை தீபன் காரிலிருந்து இறங்கினான். இதுவே யாழி இறங்கி இருந்தால் பிரச்சனை வேறுமாதிரி சென்றிருக்கும்.
தயா அரும்பாடுபட்டு அழைத்துவந்தான் தீபனை.
பணம் பத்தும் செய்தது ஒரே வாரத்தில் கேஸ் ஒன்றுமில்லாமல் போனது.
யாழிக்கோ தீபனின் மீது ஏதோ இனம் புரியாத உணர்வு. அவளுக்காக ஜெயிலுக்கு சென்றதால் வந்த அபிமானம்.
அந்த நெருக்கடியான சூழ்நிலையிலும் தெளிவாக அவளுக்காக சிந்தித்த அவனது அறிவு. அவளுக்கு வந்த பிரச்சனையை அவன் பிரச்சனையாக எண்ணியது. அது பிடித்திருந்தது.
அவளாக சென்று அவனிடம் பேசினாள்.
தீபன்
ம்ம் சொல்லுங்க
ரொம்ப தாங்க்ஸ்
பரவால்ல
எப்படி உங்களால இது முடியுது
எது டீ சாப்பிடுறதா அந்நேரம் அவன் டீ குடித்துக்கொண்டு இருந்தான்.
இல்லை அது நாங்க உங்ககிட்ட பிரச்சனை பண்ணிருக்கோம். சண்டை போட்ருக்கோம் உங்களை அடிச்சி போட்டோம். இருந்தும் அதைல்லாம் நினைக்காம எனக்கொரு பிரச்சினைனதும் உதவி பண்ணீங்க
இன்னா செய்தாரை ஒருத்தர் அவர்நாண
நன்னையம் செய்து விடல்
படிச்சா போதாது வாழ்க்கைல செயல்படுத்தனும் சுறுக்கென்று உரைத்துவிட்டு சென்றுவிட்டான்.
இதனை அங்கிருந்து கேட்ட தயாவிற்கும் ஏதோபோல் இருந்தது.
ஏனோ தயா அர்ஜூன் வசீ யாழி நால்வருக்கும் தீபன் நல்லவனாக தெரிந்தான். அவர்களின் தோழிக்கு உதவிவிட்டான் அல்லவா அதான் இந்த நல்ல எண்ணம்.
எப்போதும் தீபன் வந்தாள் ஏதோ ராபிச்சகாரன் வந்திருப்பது போன்றே பார்க்கும் தயாவின் பார்வை மாறி இருந்தது அந்த சம்பவத்திற்கு பிறகு.
அன்று அமி தயா இனி மூரும் சாப்பிட்டுக் கொண்டு இருக்க தீபன் வந்தான்.
தீபன் அடிக்கடி இனியின் வீட்டிற்கு செல்வதில்லை. எப்போதாவது சென்றாலும் அமி அல்லது இனிதான் உள்ளே அழைப்பார்கள் அன்று தயா அழைத்தான்.
உள்ள வாங்க தீபன்
அவனோ அமைதியாக வந்து நின்றான்.
இனி என்னடா என்ன விஷியம் இந்த நைட் நேரத்துல வந்திருக்க ஒருமாசமா என்னை பாக்ககூட வரலை நீ அவ்ளோ முக்கியமில்லாம போய்ட்டனா
லூசு தயா லூசு மாறியேயே பேசாத
தயாவும் அவனை பார்த்தான்.
தீபனோ இல்லை இவளதான் ஒருமாதரி தயங்கி சொன்னான்.
தயாவும் ஏதும் பேசிடவில்லை.
வேலை விஷியமா அலஞ்சிட்டு இருந்த அதா உன்னை பார்க வர முடியலை
ஓஓஓஓ சரி என்ன திடீர் விஜயம்
அது நீ கேட்டல ஒரு வேலை வேணும்னு. நீ கம்ப்பூட்டர் கோர்ஸ் முடிச்சிருக்கல ஒரு டெக்ஸ்டைல் ஷாப்ல பில்லிங்க்கு ஆள் வேணும் கேட்ருக்காங்க உனக்கு ஓகே வா நிறுத்தி நிறுத்தி கேட்டிருந்தான்.
அவனுக்கு நன்றாக இருக்கும் தயாளினியோட வாழ்க்கையில் பிரச்சனை வந்துவிடகூடாது என்ற எண்ணம். எப்படியும் இது ஒரு பூகம்பமாகும் என்று அவனுக்கு தெரிந்துதான் இருந்தது.
தயாவோ அவனது இனியை பார்வையாலே எரித்துக்கொண்டு இருந்தான்.
______________