அத்தியாயம் 16 ❤
மஹிமா சென்றவுடன் ,
சிவரஞ்சனி ” என்ன விஷயம் கார்த்திக் ! நீ மஹிமாவைப் பார்க்குறப் பார்வையே சரி இல்ல ? ” அவனை ஆராய்ந்த படி கேட்டாள்.
கார்த்திக் ” மஹிமா ! அழகா தான் இருக்கா ! ” தனது தாடியைத் தேய்த்தபடி கூறினான்.
சிவரஞ்சனி ” அழகு தான்.செம வாலும் கூட. ஸ்கூல்ல – லாம் அவளை ஸ்டாஃப்ஸ் கூட சமாளிக்க முடியாது. அவ்ளோ சேட்டைக்காரி “
கார்த்திக் ” பாத்தா ரொம்ப அமைதியா தெரியுறா ? நீ சொல்றத எல்லாம் நம்பவே முடியல “
சிவரஞ்சனி ” அவ கூட நான் படிச்சு இருக்கேன். ஒரு நாள் என்கிட்டயே அவ வாலுத்தனத்த காமிச்சுட்டா ” எனவும்,
கார்த்திக் ” என்னப் பண்ணுனா ? ” என்று சுவாரசியமாகக் கேட்டான்.
சிவரஞ்சனி ” அவளைத் தெரியாம ஒரு தடவை இடிச்சுட்டேன். அதுக்கு பேட் ( bat ) ஐ வச்சு தலைலை அடிச்சுட்டா ” என சொல்ல ,
கார்த்திக் விழுந்து விழுந்து சிரித்தான்.
“அவ்ளோ பயங்கரமான ஆளா அவ ? ‘
சிவரஞ்சனி ” ஆமா.கார்த்திக் நம்ம விளையாட்டுக்கு இவ தான் சரியா இருப்பா.
சோ நீ நாளைல இருந்து கேம் – ஐ ஸ்டார்ட் பண்ணிரு.சரியா ? “
கார்த்திக் ” ஓகே. கேம் கொஞ்சம்
டஃப் ஆக தான் இருக்கும் போல.இருந்தாலும் அப்படி இல்லைனா சுவாராசியமா இருக்காது. நாளைக்கே விளையாட ஆரம்பிச்சுடலாம் ” சிவரஞ்சனியுடன் கை குலுக்கினான்.
கேன்டினில் இருந்து வந்த மஹிமா இவர்களுக்கு ஒரு புன்னகையை மட்டும் உதிர்த்து விட்டு தன் இருக்கையில் அமர்ந்து கொண்டாள்.
பிறகு வகுப்பிற்குள் நுழைந்தார் ஆசிரியர்.மாணவர்களை வரவேற்ற அவர் அவர்களைப் பற்றிய அறிமுகங்களை தெரிந்து கொண்டு பாடம் எடுக்க ஆரம்பித்தார்.
மாலை வீட்டிற்குள் நுழைந்த மஹிமா தனது தோள் பையை டைனிங் டேபிளிலேயே வைத்து விட்டு அங்கு இருந்த இருக்கையில் அமர்ந்தாள்.அவள் உள்ளே நுழையும் சத்தத்தை மஹிமாவின் கால் கொலுசே சுவர்ணலதாவிற்கு காட்டிக் கொடுக்க அவளைக் காண சமையலறையில் இருந்து வெளியே வந்தார்.
சோர்வாக அமர்ந்திருந்தவளைப் பார்த்தவாறு சுவர்ணலதா ” என்னாச்சு மஹி ? டல்லா இருக்க? காலேஜ் – ல என்ன நடந்துச்சு ? ” என வினவினார்.
மஹிமா ” உஃப் ! ஒன்னுமே நடக்கலம்மா செம்ம போர் ( bore ) . எனக்கு அங்க இருக்கவே பிடிக்கல “
சுவர்ணலதா ” என்னது போரிங்கா இருந்துச்சா ! என்னடி ! ஃபர்ஸ்ட்டே – யே இப்படி சொல்ற ? நீ அங்க எப்படி தான் மூனு வருஷம் படிக்கப் போறியோ ? “
மஹிமா ” அதை நினைச்சா தான்மா கடுப்பா இருக்கு “
என சலித்துக் கொண்டாள்.
சுவர்ணலதா ” புது ஃப்ரண்ட்ஸ் கிடைக்கலயா ? “
மஹிமா ” இல்லம்மா.சிவரஞ்சனி இருக்காள்ல அவ இருந்தா “
சுவர்ணலதா ” அப்பறம் என்ன ! அவ கூட பேச வேண்டியது தான ? “
மஹிமா ” அதெல்லாம் சரிப்பட்டு வராதும்மா. எனக்கு அவ கூட பேச பிடிக்கல “
சுவர்ணலதா ” விடு ! போக போக சரி ஆகிடும். மூனு வருஷம் சீக்கிரமே போயிரும் ”
அவளது தோளில் தட்டி ஆறுதல் அளித்தார்.கையில் காபியை கொடுத்து விட்டு அவளை உடை மாற்றி வருமாறு கூறினார்.
அடுத்த நாள்
விடியற்காலையின் புத்துணர்வுடன் படுக்கையை விட்டு எழுந்தாள் மஹிமா.
மாடி ஏறி வந்த சுவர்ணலதா அவள் எழுந்து நின்று ஜன்னலின் வெளியே தெரியும் தெளிந்த வானத்தை பார்த்துக் கொண்டு இருந்த மகளை கனிவுடன் நோக்கி விட்டு அவளது அருகில் வந்தார்.
அவளது தோளைத் தொட்டு ,
” என்னம்மா ! இன்னைக்கு காலேஜூக்கு ரெடி ஆகலையா ? “
தாயின் ஸ்பரிசம் பட்டதும் திரும்பிய மஹிமா அவரது கேள்விக்குப் பதில் கூறத் தயாராகினாள்.
” ஆமாம்மா. எனக்குக் காலேஜ் போக தோணலமா ! “
அவரது தோளைக் கட்டிக் கொண்டாள்.
சுவர்ணலதா மகளின் தலையைத் தடவிக் கொண்டே ,
” உனக்கு ஒரு சந்தோஷமான விஷயம் சொல்லவா ! “
என புதிர் போட,
” என்னம்மா ! ” அசுவாரசியமாக கேட்டாள்.
” உங்க பாட்டி ஊருக்கு வரப் போறாங்க “
மஹிமாவின் முகம் காலை சூரியனை விட பிரகாசமாக ஜொலித்தது.
” நிஜமாவா – ம்மா ? ” சிறு குழந்தையைப் போல் கேட்டாள்.
அவளது இந்த சந்தோஷத்தைக் கண்டு அவருக்கும் புத்துணர்ச்சி கிடைக்க,
” நிஜமா தான் மஹி ! இப்போ தான் உங்க மாமா கால் பண்ணாரு பாட்டியை கூட்டிட்டு நம்ம வீட்டுக்கு வர்றாராம் “
மஹிமா ” சூப்பர்மா . நல்லவேளை நான் லீவ் போட்டேன் ” என அகமகிழ்ந்தாள்.
” சரிடா. கீழே வந்து காஃபி குடிக்கிறியா ? இல்லை கலா கிட்ட குடுத்து விடவா ? “
மஹிமா ” கலா அக்காகிட்ட குடுத்து விடுங்கம்மா. நான் ரெடி ஆகிட்டு வர்றேன் “
சுவர்ணலதாவின் பூர்வீகம் சென்னைக்கு சற்று தொலைவில் உள்ள கிராமம்.
அவரது தந்தை கிருஷ்ணன் மற்றும் தாய் சந்திரா. இவர்கள் இருவரும் தங்களது மகளை ஊரில் உள்ளவர்கள் ஆச்சரியமாக பார்க்கும் அளவிற்கு மேற்படிப்பு படிக்க வைத்தனர். ஏனெனில் அந்த ஊரிலேயே சுவர்ணலதா தான் அதிகம் படித்தவர்.
மகள் படிப்பை முடித்ததும் சந்திரா தனது கணவனிடம் கூறி மாப்பிள்ளை பார்க்க முடிவெடுத்தனர்.ஒரு வருடமாக அலைந்து தேடி கண்டுபிடித்தனர் ராமநாதனை.வீட்டிற்கு ஒரே பிள்ளை. அதனால் அவருக்கு ஏகத்துக்கும் செல்லம்.அவரது குணங்களைப் பற்றி ராமநாதனின் பெற்றோர் எடுத்துரைத்தனர்.ஆனால் அவர் சென்னையில் பெரிய கம்பெனி வைத்து நடத்தி இருப்பது தெரிய வந்ததும் தனது மகள் நல்லவிதமாக வாழ்வாள் என்ற நம்பிக்கையில் ஊரே அசரும் விதமாக மகளுடைய திருமணத்தை நடத்தி வைத்தனர்.அவர்கள் தங்கள் மகள் வீடும் வாசலுமாக வாழ்வாள் என நினைத்தனரே தவிர அவள் நிம்மதியாக வாழ்வாளா என்று நினைக்காமல் இருந்தது தான் பெற்றோர் செய்த தவறு.
சுவர்ணலதா தனது திருமண வாழ்க்கை பற்றி பெற்றோரிடம் அதிகமாக கூறாமல் இருந்தாலும் அவர்களுக்கு மகள் படும் துயரம் தெரியாமல் இல்லை.
ஆனால் ராமநாதனிடம் கேட்டால் எங்கே அதற்கும் தன் மகள் துன்பம் அனுபவிக்க வேண்டுமே என்று உள்ளுக்குள்ளேயே மருகிக் கொண்டனர்.
தற்போது சந்திரா பேத்தி பிறந்த பல வருடங்கள் கழித்து இப்போது தான் அவளைப் பார்க்க வருகிறார்.
மஹிமாவிற்கு பாட்டியின் மேல் அவ்வளவு பிரியம்.என்ன தான் பாட்டியை சில நாட்கள் தான் பார்த்தாலும் அவள் சந்திராவின் செல்லப் பேத்தி.
அதனால் அவரது வருகையை இவள் எதிர் நோக்கிக் கொண்டு இருக்கிறாள்.
குளியலறைக்குள் இருந்து வெளியே வந்ததும் சுடிதாரை எடுத்து அணிந்தவள் கீழே வந்தாள்.
– தொடரும்