
சத்ய யுகாத்ரன் தான் பேராசிரியர் என அறிந்த பின்பு சமத்தாக கல்லூரிக்கு வரத் தொடங்கினாள் இதயாம்ரிதா.
அவளது பார்வையைக் கவனமாகத் தவிர்த்து வந்த சத்யா, அவளை அடக்கவென்றே பல தண்டனைகளையும் கொடுத்தான்.
அதில் ஒன்று தான், அளவுக்கதிகமான அசைன்மென்ட் கொடுப்பது. இதெல்லாம் எனக்கு ஜுஜுபி என்ற தோரணையில் எதையும் எழுதாமல் வந்து, சத்யாவிடம் திட்டும் வாங்குவாள்.
“ஸ்டூடண்ட்னா ஒழுக்கம் இருக்கணும் இதயாம்ரிதா. நீ செய்றது எதுவும் சரி இல்லன்னு பனிஷ்மென்ட் குடுத்தா, அதையும் செய்ய மாட்டுற…” எனக் கோபத்துடன் கடிய,
“இப்ப சொன்னதை செஞ்சுருந்தா, நீங்க என்ன செஞ்சுருப்பீங்க… என்னை நிமிர்ந்து கூட பார்த்துருக்க மாட்டீங்க. இப்ப திட்றதுக்காக என்னை ஸ்டாஃப் ரூம் கூப்பிட்டு இவ்ளோ நேரம் பேசிட்டு இருக்கீங்களே… இந்த சான்சை மிஸ் பண்ண முடியுமா சொல்லுங்க!” என்றதில் அவளைக் கடுமையாக முறைத்தான்.
“இன்னைக்கும் அசைன்மென்ட் எழுதணுமா ப்ரொபி?” கண்சிமிட்டி அவள் கேட்க, “தேவை இல்ல யூ மே கோ!” என்று விட்டு புத்தகத்தில் மூழ்கி விட்டவனை எப்படி கரெக்ட் செய்வது என்ற யோசனையுடன் பொழுதைக் கடத்தினாள்.
மறுநாள் காலையிலேயே முதல் வகுப்பு அவனுடையது தான். வேண்டுமென்றே சில நிமிடங்கள் தாமதமாக வந்தாள். இப்போதெல்லாம் நண்பர்களுடன் கல்லூரிக்குச் செல்வதில்லை. வேண்டுமென்றே தனியாகச் சென்று கிடைக்கும் சந்தர்ப்பத்தில் சத்யாவுடன் கடலை போடுவதில் பெரும் கவனம் கொண்டாள்.
அவனோ ஒரு வார்த்தைக்கு மேலே பேசிட கூடாதென்று யாருக்கோ சத்தியம் செய்து கொடுத்தவன் போல கல்லாக இருப்பான்.
வகுப்பறை வாசலில் நிழலாடியதில் போர்டில் இருந்து கண்ணைத் திருப்பிய சத்ய யுகாத்ரன், அவளை அசட்டை செய்து விட்டு மற்ற மாணவர்களைப் பார்த்தான்.
“இனிமே என் க்ளாஸ்க்கு லேட்டா வர்றவங்க என் க்ளாஸ்ல இருக்கணும்னு அவசியம் இல்ல. என் க்ளாஸ் முடியிற வரை, கிரௌண்ட்ல ஓடணும். அதுக்கான ட்ரையல் இன்னைக்கு இந்தப் பொண்ணை வச்சு நடத்திடலாம்” என்றதும் அவள் பேயாய் விழித்தாள்.
“சார்… இதென்ன ஸ்கூல் பசங்க மாதிரி?” அவள் பேசும்போதே அதனைத் தவிர்த்து விட்டு, “சோ ஸ்டூடண்ட்ஸ் கமிங் டூ தி சப்ஜக்ட்” என பாடத்தில் புகுந்து கொள்ள, இதயாம்ரிதா அவனை முறைத்துப் பார்த்தாள்.
விஷாலுக்கு கோபம் வேறு பொத்துக்கொண்டு வந்தது. எத்தனை தைரியம் இருந்தால், இவளை வெளியில் நிற்க வைத்ததும் இல்லாமல் கிரவுண்டைச் சுற்றி ஓட வேண்டுமென தண்டனை கொடுத்திருப்பான்?
யாமினியும், “மச்சீஸ் இதெல்லாம் ஓவர்!” என கிசுகிசுத்திட, சத்யாவோ “இன்னைக்கு இந்த பனிஷ்மெண்ட்ட செய்யலைன்னா, அடுத்த ஒரு வாரத்துக்கு என் க்ளாஸ்ல கிரவுண்ட்ல தான் இருக்கணும்…” என்று விட, தாமதமாய் வந்த தன்னையே நிந்தித்துக்கொண்டாள் அவள்.
நுணுக்கமாக தான் அவனை அப்ரோச் செய்யும் வழியைக் கண்டறிந்து ஆப்பு வைத்து விட்டான் எனப் புரிய, “இதுக்குல்லாம் பின்னாடி உங்களுக்கு இருக்குங்க சார்…” என்று நக்கலாய் கூறி விட்டுச் சென்றாள்.
‘இருங்க ப்ரொஃபி… ஃபியூச்சர்ல நம்ம லவ் ஓகே ஆனதும், தண்டனை குடுத்த லிப்ஸ கடிச்சு வைக்கிறேன்!’ என்ற எண்ணத்தில் அவள் போலியாய் மிரட்டி விட்டுப் போக, அது பின்னாளில் திரித்து விடப்பட்டதை அவளே அறியாது போனாள்.
விஷால் வெடுக்கென எழுந்து, “திஸ் இஸ் நாட் ஃபேர் சார்…” என மறுக்க,
“ப்ச், நீயும் கிரௌண்ட்ல ஓடுறதுன்னா தாராளா போய் உன் ப்ரெண்டுக்கு கம்பெனி குடு. டோன்ட் டிஸ்டர்ப் மை க்ளாஸ்” என்று அழுத்தம் திருத்தமாய் கூறியதில் விஷால் அவனை காட்டத்துடன் ஏறிட்டபடி வகுப்பை விட்டு வெளியேற, அவனைப் பின் தொடர்ந்து யாமினி, நிலோபர், ஷ்யாம் அனைவருமே வெளியேறினர்.
பத்மபிரியா தான், பேந்த பேந்த விழித்தபடி நின்றிருந்தாள்.
சத்யா அவளைப் புருவம் உயர்த்திப் பார்க்க, அந்நேரம் வாசலில் நின்று யாமினி கத்தினாள்.
“என்னடி… இன்னும் அங்க நின்னு வேடிக்கை பார்த்துட்டு இருக்க” என்றதும் பதறிக்கொண்டு தனது புத்தகங்களை எடுத்து விட்டு, “சாரி சார்” என்று ஓடியே விட்டாள்.
அவளை விசித்திரமாகப் பார்த்த சத்யா தான், “ஒவ்வொண்ணும் ஒவ்வொரு தினுசா இருக்கு!” என்று தலையாட்டி விட்டு மீண்டும் வகுப்பைத் தொடர்ந்தான்.
கிரவுண்டைச் சுற்றி ஓடிவிட்டு, மூச்சு வாங்கி தரையில் அமர்ந்த இதயாம்ரிதா கன்னத்தில் கை வைத்து சோகத்தை டஜன் கணக்கில் பிழிந்தாள்.
“எவ்ளோ தைரியம் இருந்தா உனக்கே பனிஷ்மென்ட் குடுப்பான். அவனை சும்மா விட மாட்டேன் அம்ரி!” விஷால் பொங்கினான்.
“இது எனக்கும் என் ப்ரொஃபிக்கும் இருக்குற டீலிங். அவரை இதுக்குலாம் நான் சும்மா விட மாட்டேன்” என்று நம்பியார் ரேஞ்சில் வில்லத்தனமாய் பேசியவள், “சரி நான் அவரை ஸ்டாஃப் ரூம்க்கு போய் சைட் அடிச்சுட்டு வரேன்…” என்று வேகமாய் எழுந்தாள்.
“வெட்கமே இல்லையாடி உனக்கு?” நிலோபர் கடிந்திட,
“ச்சே நெவர்…” என்றவளோ துள்ளிக்குதித்து அவனை விழிகளில் நிரப்ப ஓடினாள்.
அவள் சென்ற திசையையே வெறித்திருந்த விஷாலை யாமினி நங்கென அடித்தாள்.
“எப்ப தான்டா உன் லவ்வ நீ அவள்கிட்ட சொல்லுவ? விஷயம் கை மீறி போச்சுன்னா அப்பறம் அவளை மறந்துட்டு நீ தேவதாஸா சுத்த வேண்டியது தான் பாத்துக்கோ” என்றதும், அதுவரை இலக்கின்றி வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த பத்மபிரியா திருதிருவென விழித்தாள்.
“லவ்வா? இது என்ன புது கதை?” என்றதும் ஷ்யாம், “இப்ப வந்து கேளு… என்னால உன்னால வந்துச்சுடி” என்று திட்டியதில், “நான் என்னடா செஞ்சேன்” என்றாள் அப்பாவியாய்.
நிலோபரோ அவனைத் தொடர்ந்து, “காலேஜ் சேருறதுக்கு முன்னாடியே உனக்குத் தெரியும்ல சத்யவைத் தேடி தான் அவள் வந்துருக்கான்னு, அதை ஏன் நீ எங்ககிட்ட சொல்லல. சொல்லிருந்தா எப்பாடுபட்டாவது தடுத்துருப்போம்” என்று கோபம் கொண்டாள்.
“ஹே… நிஜமா விஷால் அவளை லவ் பண்றான்னு எனக்குத் தெரியாதுடி. அதுவும் இல்லாம, அவள் என்னை நம்பி ஒரு விஷயம் சொல்லும்போது, அவள் பெர்மிஷன் இல்லாம அதை எப்படி வெளில சொல்றது…” என்றவளை நால்வரும் தீயாய் முறைத்தனர்.
யாமினி, “கைஸ்… எனக்கு இந்த காலேஜ்க்கு வரவே பிடிக்கல. ஏதாவது செஞ்சு டிஸ்கன்டின்யூ பண்ணிடலாம். தட்ஸ் பெட்டெர். அந்த சத்யாவை பார்த்தாலே எனக்கு இரிடேட் ஆகுது. ஒரு லோ மிடில் க்ளாஸ் ஆளு நம்மளை கண்ட்ரோல் பண்றது எனக்கு சுத்தமா பிடிக்கல” என்றதை ஷ்யாமும் ஒப்புக்கொண்டான்.
“அதுலயும் அவன் ஜஸ்ட் கெஸ்ட் லெக்ச்சரர் தான். என்னமோ அவன் தான் இந்த காலேஜை கட்டி ஆளுற மாதிரி அந்த மிடுக்கும், அழுத்தமும். ஐ ஜஸ்ட் ஹேட் ஹிம்” என்றான் எரிச்சலாக.
பின்னே, இந்த கல்லூரியில் படிப்பதில் முக்கால்வாசி பேர் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் தான். அவர்களே அவனைப் பார்க்காமல் கேவலம் சத்யாவிடம் மட்டும் உருகி குழைந்து பேசுவது கடுப்பை விளைவித்தது.
சத்யா இதே கல்லூரியில் தான் இளங்கலையும் முதுகலையும் பயின்றான். இப்போது ஜுனியராக இருக்கும் சில மாணவர்கள், இளங்கலையில் இருந்தே சத்யாவிற்குப் பழக்கமானவர்கள். அதனால், அவனிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்வார்கள். அது மட்டுமின்றி, கடந்த ஐந்து வருடங்களாகவும் அவன் தான் ஸ்டூடண்ட்ஸ் சேர்மன். அவனிடம் கண்ட ஒழுக்கமும், நேர்மறை சிந்தனையும், அதீத அறிவும் தான், கல்லூரி முடித்த கையோடு அதே கல்லூரியில் சிறப்பு பேராசிரியராக நியமிக்கப் போதுமானதாக இருந்தது. அதனை வசமாக மறந்து போன நண்பர் கூட்டத்திற்கு அவன் மீது எரிச்சல் தோன்றியது.
விஷாலோ, “டிஸ்கன்டின்யூ பண்ணுனா மட்டும் அம்ரி அவனை விட்டுடுவாளா? எனக்கு என்னமோ அவள் ஏதோ விளையாட்டுக்கு அவன் பின்னாடி சுத்துறது மாதிரி தோணல. எனக்குத் தெரியும் அவள் ஒரு விஷயத்துக்கு ஆசைப்பட்டா அதுக்கு எந்த அளவு இன்டெப்த்தா உள்ள இறங்குவான்னு…” என யோசனையுடன் கூறியதில்,
“வேற என்ன தான் செய்றது?” என்று சலித்தாள் நிலோபர்.
“எவ்ளோ தூரம் போகுதுன்னு பாக்கலாம்… அப்பறம் இதை பத்தி யோசிக்கலாம்” என்றவனின் மனவடுக்குகளில் உருவானது சில குரூர திட்டம்.
—-
“ஹாய் ப்ரொஃபி!”
தன்முன்னே அனைத்து பற்களையும் காட்டியபடி நின்றவளை நிமிர்ந்தும் பார்த்திடாதவன், புத்தகத்தில் குறிப்பெடுக்க தொடங்க, அதனை வெடுக்கென பிடுங்கியவள்,
“நீங்க தான் இந்த காலேஜ்லேயே ஜீனியசாமே. ஒவ்வொரு வருஷமும் உங்க பேர் தான் டாப் ரேங்க் லிஸ்ட்ல இருக்கும்னு கேள்விப்பட்டேன். அப்பறம் எதுக்கு இந்த நோட்ஸ் எடுத்துக்கிட்டு. பொதுவா இப்படி படிப்ஸா இருக்குறவங்க லவ்ல ரொம்ப லோ ரேங்கிங்க்ல இருப்பாங்களாம்… நீங்க எப்படி?” என்று இழுக்க,
“காலேஜ்னு பாக்குறேன். ஓங்கி ஒரு அறை விட்டேன்னா தெரியும்…” எப்படின்னு என்றான் பல்லைக்கடித்து.
“கெட் அவுட்!” என்று அதட்டி அவளை அனுப்பி வைக்க, “ரொம்பத்தான்…” என்று முணுமுணுத்தபடி தொங்கிய முகத்துடன் அங்கிருந்து நகன்றாள்.
அதன்பிறகு தான், பரிட்சையன்று ஐடி கார்டை மறந்து விட்டு வந்ததும், அவளுக்காக அவனே பரீட்சை எழுதிக் கொடுத்ததும்.
அன்றும், அவனை ஏமாற்ற மனமற்று கிரவுண்டில் சக மாணவியின் வண்டியை வேகமாய் ஓட்டி தானாய் கீழே விழுந்து காயங்களை வாங்கிக்கொண்டாள்.
அப்போது அவள் காயங்கள் அவனைச் சற்று தடுமாற வைத்தது.
மறுநாளே விஷயத்தை அறிந்து கொண்டவன், அவளைத் தனியே அழைத்துப் பேசினான்.
“உனக்கு என்ன பைத்தியமா? என்கிட்ட பொய் சொல்லிட்டு அதை உண்மையாக்க வண்டில இருந்து விழுந்துருக்க?” எனக் கடிந்திட,
“ப்ச் தோணுச்சு. பண்ணிட்டேன்… ஐ டோன்ட் வாண்ட் டூ சீட் யூ அட் எனி காஸ்ட் ப்ரொஃபி! நீங்க தான் என் உள்ளார்ந்த காதலைப் புருஞ்சுக்காம சுத்தல்ல விடுறீங்க…” என உதட்டைச் சுளித்தாள்.
“முதல்ல இது காதல்னு பினாத்துறதை நிறுத்து. என்னைப் பத்தி என்ன தெரியும் உனக்கு? என்கூட நீ பேசுனது கூட கிடையாது. மோர் ஓவர், நீ என்னோட ஸ்டூடண்ட். அந்த லிமிட்ல இருந்துக்க பாரு இதயா…” எனக் கண்டித்தும்,
“ஏன் ஏன்… இந்த பரந்த உலகத்துல காதலிக்கிறது தப்பா ப்ரொஃபி. சரி நீங்க சொல்ற பாய்ண்ட்டுக்கே நான் வர்றேன்.
உங்களைப் பத்தி எனக்கு எல்லாமே தெரியும். உங்க அம்மா பேர் மாலதி. அப்பா சீனிவாசன். பேங்க்ல க்ளர்க்கா இருக்காரு. வீட்டுக்கு ஒரே பையன்னாலும், சித்தப்பா அத்தை குடும்பத்தோட ஒரே கூட்டுக் குடும்பமா இருக்கீங்க. பேமிலி மேல ரொம்ப அட்டாச்மெண்ட். அஞ்சு வருஷமா இதே காலேஜ்ல ஸ்டூடண்ட்டா குப்பை கொட்டிட்டு, ஆறாவது வருஷமா ப்ரொபஸரா அவதாரம் எடுத்துருக்கீங்க.
நாட் ஒன்லி தட், ஆர். பி. ஐ எக்ஸாம்க்கு ப்ரிப்பேர் பண்ணிட்டு பார்ட் டைமா ஒர்க் பண்றீங்க. சோ நீங்க ஒன்னும் ப்ரொபஷனல் ப்ரொபஸர் கிடையாது ப்ரொபி. இந்நாள் ப்ரொபஸர் மட்டுமே. பியூச்சர்ல நீங் ஆர். பி. ஐ ஆபிசர் ஆகிடுவீங்க. நானும் வருஷக்கணக்கா இங்க ஸ்டூடண்டா இருக்கப்போறது இல்ல. ஒரு ஆர்கனைசேஷன்க்கு ஓனர் ஆகிடுவேன். சோ ஆபிசரும் ஆபிசரும் லவ் பண்ணிக்கலாம் ப்ரொபி. அதுக்கான பேஸ்ஸ இப்ப இருந்தே போடுறதுல என்ன தப்பு இருக்கு?
அண்ட் அஃப்கோர்ஸ் நம்ம பேசிக்கிட்டதே கிடையாது. அதுக்கு தான் வாங்க பழகலாம்னு சொல்றேன்” என ஒற்றைப்புருவம் உயர்த்தி காண்பித்தாள்.
அவளை சலனமின்றி ஏறிட்ட சத்யா, “என்னை பத்தி ஆராய்ச்சி செய்றதை விட்டுட்டு ஏதாவது உருப்படியான வேலையைப் பார்க்கலாம். காலேஜ்ல இதை பேசுறதே தப்பு இதயா. இன்னொரு தடவை இந்த மாதிரி உளறாத. அவுட்!” என்று விட,
“அதே தான் நானும் சொல்றேன். எனக்கும் காலேஜ்ல இதைப் பத்தி பேச கம்பர்ட்டபிள்ளா இல்ல. காபி ஷாப் போலாமா அண்ட் மோர் ஓவர், உங்களை ஆராய்ச்சி செய்றது தான் என்னோட முழு நேர வேலையே” எனக் குறும்பு மின்னக் கேட்டவளை, “திஸ் இஸ் த லிமிட். கெட் அவுட்” என்று கத்தி விட்டான்.
நொடியில் முகம் சுருங்கிப் போனது அவளுக்கு.
“இதுக்குலாம் சேர்த்து வச்சு பின்னாடி அனுபவிப்பீங்க ப்ரொபி!” விரல் நீட்டிப் போலியாய் மிரட்டிட, அந்த விரலை தனது பேனாவைக் கொண்டு அடித்தவன், வாசல் புறம் கண்ணைக் காட்டினான்.
அதில் முகத்தைத் தொங்க போட்டுக்கொண்டு வெளியேறியவளுக்கு அவனை எப்படி அணுகுவது என்றே தெரியவில்லை.
அவளுக்கும் யாரிடமும் இறங்கிப்போய் பழக்கமே இல்லை. நினைத்ததை நினைத்த நொடிப்பொழுதே நடத்தி விடும் செல்வாக்கு கொண்டவள். ஆனால் இவன் மட்டும் கைக்கெட்டும் தூரமிருந்தும் கண்ணாமூச்சி காட்டுகிறான்.
பணத்தை கொண்டு உடைமைகளை வாங்கி விடலாம். உணர்வுகளை விலைக்கு வாங்கிட இயலாதே!
அவனது கர்வமும், திமிரும் அவளை இன்னும் இன்னும் அவளிடம் காந்தமாய் இழுத்தது.
நாள்கள் காதலின் பரவசத்துடன் நகர, விஷால் கேன்டீனில் நகத்தை கடித்தபடி அமர்ந்திருந்தான்.
“என்னடா, டீயை வாங்கி வச்சுட்டு வேடிக்கை பார்த்துட்டு இருக்க?” எனக் கேட்டபடி அவனுக்காக வாங்கிய தேநீரை இதயா எடுத்துக் குடிக்க,
“அது ஒன்னும் இல்ல அம்ரி. காலேஜ்ல டூர் அனவுன்ஸ் பண்ணிருக்காங்க. அதான் உன்னை அனுப்பலாமான்னு யோசிச்சுட்டு இருக்கேன்” என்றதும் அவள் புரியாது ஏறிட்டாள்.
“என்னை மட்டுமா? நீங்கள்லாம் வரலையா? அதுவும் இல்லாம காலேஜ் டூர் எல்லாம் செம்ம போர்டா. அங்க போற நேரத்துக்கு நான் சத்யாவை கரெக்ட் பண்ற வேலையைவாவது பார்க்கலாம்…” என்றாள் கண்சிமிட்டி.
கடுப்பை உள்ளுக்குள் அடக்கிய விஷால், “அதில்லடி. உனக்கு பியூச்சர்க்கு யூஸ் ஆகுற மாதிரி டூர். அதான் சொன்னேன்” என்றவன் மேலும் விளக்கினான்.
“பொதுவா இந்த காலேஜ்ல டூர்ன்னா, ஏதாவது வில்லேஜ்க்கு தான் கூட்டிட்டுப் போவாங்கலாம். அங்க ரெண்டு மூணு நாள் ஸ்டே பண்ணி, அடிப்படை தேவைகள் என்னென்ன இருக்குன்னு பார்த்து கவர்மெண்ட்க்கு ஸ்டூடன்ட் சார்பா மனு குடுத்து சரி செய்வாங்களாம். ஸ்டூடண்ஸ் பெர்சனலாவும் ஹெல்ப் பண்ணுவாங்களாம். நீ தான் ட்ரஸ்ட் ஸ்டார்ட் பண்ணனும்னு சொன்னியே. உனக்கு யூஸ்புல்லா இருக்கும்ல?” என்று அடக்கமாய் வினவினான்.
“வாவ்… பிரில்லியண்ட். நம்ம படிச்ச காலேஜ் ஸ்கூல்ல எல்லாம் ஹை பையான ஹோட்டல், பிளேசஸ்னு கூட்டிட்டுப் போய் தான் பாத்துருக்கேன். இட்ஸ் கொயட் இண்ட்ரஸ்டிங். நான் போறேன்” என்றதும் விஷால் விஷமப்புன்னகை பூத்தான்.
‘நீ திரும்பி வர்றப்ப சத்யான்ற சேப்டர் இருக்காது அம்ரி’ அவனுள் கறுவிக்கொண்டான்.
இந்நிலையில் அவள் கல்லூரி பேருந்தில் செல்வதும், கிராமத்தில் தங்குவதும் பாதுகாப்பு இல்லையென்றதால் அவளுக்கென தனியாய் வாகனமும் தங்குமிடமும் ஏற்படுத்தினான் விஷால்.
அவளோ முற்றிலும் மறுத்தாள். “க்ளாஸ்மேட்ஸ் கூட போகும்போது இது எதுக்கு எனக்கு மட்டும் தனியா? ஆக்வார்டா இருக்கும்டா… வேணாம்…” என்று விட, “நீ வி. வி. ஐ. பி ன்னு மறந்துடாத” எனக் கண்டித்தான்.
“நான் போற இடத்துல யாருக்குமே என்னைத் தெரியாது. அப்படியே ப்ராப்ளம் வந்தா நான் மேனேஜ் பண்ணிப்பேன். எனக்குன்னு தனியா எல்லாம் செய்றதா இருந்தா நான் போகல” என்று விட்டாள்.
“சரி சரி அட்லீஸ்ட் கார்ல போ… பஸ் உனக்கு செட் ஆகாதுல” என்று அவன் இறங்கி வந்ததில், அதற்கு மட்டும் ஆமோதித்தாள்.
சுற்றுலா செல்லும் நாள் அன்று, அவளை வழியனுப்பி விட நண்பர்கள் ஐவரும் வந்து விட்டனர்.
“நான் வர்ற வரைக்கும் என் ஹார்ட்டை பத்திரமா பாத்துக்கோங்க மச்சீஸ்…” என இதயாம்ரிதா உருகி கூற, “உன் ஹார்ட்டையா?” எனப் புரியாது வினவினாள் நிலோபர்.
“ஆமா என் ப்ரொபியை சொன்னேன். அவர் தான என் ஹார்ட்!” என்று நெஞ்சில் கை வைக்க, கேட்பவர்களுக்கு சகிக்கவில்லை.
அவர்களது உள்ளெண்ணம் புரியாத இதயாம்ரிதாவிற்கு, எப்போதும் போல இந்த விஷயத்திலும் தனது நண்பர்கள் தன் பக்கமே நிற்பார்கள் என்று நம்பிக்கொண்டாள். காதலென்றால் அதற்கு உடந்தையாக இருப்பது நண்பர்கள் என்பது தானே எழுதப்படாத விதி.
அந்த விதி அவளது தலையெழுத்தை மட்டுமல்லாது அவளது உயிரானவனின் தலையெழுத்தையும் மாற்றப்போவதை அறியவில்லை.
சரியாக பேருந்து கிளம்பும்நேரம் ஒரு ஷோல்டர் பையுடன் அங்கு விட்டான் சத்ய யுகாத்ரன். அவனைக் கண்டு கண்ணாலேயே முத்த ஸ்மைலியை அனுப்பிய இதயாம்ரிதாவைத் திரும்பியும் பாராதவன், சுற்றுலாவைத் தலைமை தாங்கிய பேராசிரியர் சுஜாதாவிடம் வந்து நின்றான்.
“என்ன சத்யா நீ வந்துருக்க?” சுஜாதா வியப்பாய் கேட்டார்.
“உங்களுக்கு அஸிஸ்டண்ட்டா அப்பாய்ண்ட் பண்ணுன ப்ரொபஸருக்கு சின்ன ஆக்சிடென்ட் மேம். அவரால இப்ப டிராவல் பண்ண முடியாதாம். பிரின்சி என்கிட்ட கேட்டாரு… அதான் நான் வந்துட்டேன். உங்களால தனியா மேனேஜ் பண்ண முடியாதுல” என்றதும் அவனைக் கனிவாய் ஏறிட்டார்.
“நீ படிக்க வேண்டியதே நிறைய இருக்கே சத்யா!” அவனுக்காக கவலை கொண்டார். இளங்கலை படிக்கும்போது சத்யாவின் பேராசிரியர் சுஜாதா தான். அப்போதிருந்தே அவன் மீது அசைக்க இயலா பரிவு அவருக்கு.
“புக்ஸ் எடுத்துருக்கேன் மேம். அங்க வந்து படிச்சுக்குறேன். இன்னும் டைம் இருக்கே எக்ஸாம்ஸ்க்கு” என்று புன்னகைக்க, அவனது அசத்தல் புன்னகையைக் கண்ணிலேயே களவாடினாள் இதயாம்ரிதா.
“ஆண்டிகிட்டலாம் சிரிச்சு பேசுறாரு. நம்மளை பார்த்தா மட்டும் தான் சீன போடுறாரு… இருங்க பிரொபி. இந்த டூர் முடியிறதுக்குள்ள உங்களை முடிக்கிறேன் ச்சீ… மடக்குறேன்” என்று தனக்குத் தானே பேசியபடி காரின் கதவை காலால் எத்தி மூடிவிட்டு மிடுக்காய் பேருந்தினுள் ஏறி அமர்ந்தாள். ஆடவனின் விழிகள் இயற்கையில் இலயிக்க, அவள் விழிகள் முழுதும் அவனிடத்திலே நிலைத்திருந்தது.
புது காதல் மலரும்
மேகா
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
7
+1
49
+1
4
+1
1
⬅ Prev Episode
14 – புதுக்காதல் புனைந்திடவா (9 to 9 husband )
Next Episode ➡
16 – புதுக்காதல் புனைந்திடவா (9 to 9 husband)
