Loading

மூன்று நாட்களுக்கு முன்

 

 

 

 

 

 

நேத்ராவை மருத்துவ மனையில் சேர்த்து ஒரு இரவு முடிந்திருந்தது. நேத்ரா என்னவோ கவலை கொண்டு தன்னுயிரை பிரித்திட தானே வழி தேடி மருத்துவமனையில் அமைதியாய் தற்காலிக நித்திரையில் இருக்க, அவள் உற்றவனின் நிலை தான் மிகவும் மோசமாக இருந்தது. 

 

வாழ்வில் நினைத்தது கிடக்க வேண்டும் என்றால் இத்தனை வேதனைகளை அடைய வேண்டுமா என்றே தோன்றியது நிமலுக்கு. உண்மை தானே நேத்ரா கிடக்க அவன் கண்ட கஷ்டங்கள் கொஞ்சமா என்ன. பல்வேறு இன்னல்கள் கடந்து தான் அவள் கரம் பிடித்தான். ஆனால் அதை இப்படி பாதியில் விட்டு விட்டு போவாள் என்று அவன் ஒருநாளும் நினைக்கவில்லை. இன்னும் அவள் என்னை புரிந்து கொள்ள வில்லையா என்ற ஆற்றாமை ஒருபக்கம் இருந்தாலும், அவள் மீது கோபம் தான் அதிகமாக வந்தது.

 

மீண்டும் மீண்டும் அவள் எழுதிய கடிதத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்…… என்ன நினைத்தானோ விறு விறு வென கிளம்பிச் சென்றவன் விடியலில் தான் மருத்துவமனை வந்தான்.

 

இரவு மருத்துவமனை வந்த சரண் நிமலை காணாதிருக்க நொடியில் நிகழ்வை யூகித்து கொண்டான். எப்படியும் இங்கு தான் வருவான் என அவனுக்காக காத்திருந்தான்.

 

காரணம் சொல்லிவிட்டு செல்லவில்லை தான் ஆனால் தன் நண்பன் இதைத் தான் செய்வான் என்பதை நன்கு அறிந்து வைத்திருந்தான் சரண். எண்ணங்களை புரிந்து கொண்ட நட்பு காலம் கடந்தும் நிலைக்கும் என்பது இவர்களின் வாழ்வில் உண்மையானது. 

 

இங்கு…… நிமல்

 

நேரே சென்று நின்ற இடம் ரகுவின் கெஸ்ட் ஹவுஸ் தான். எப்போதும் ரகு இரவில் கெஸ்ட் ஹவுசில் தங்குவது தான் வழக்கம். அவனை கண்காணித்ததில் இரவு எப்போதும் அவன் மட்டும் தான் அங்கு தங்குவது தெரிந்திருந்ததால் தான் அந்த வீட்டிற்க்கு வந்தான் நிமல். 

 

எப்போது தன் நேத்ரா அடைந்த அனைத்து துன்பத்திற்க்கும் காரணம் ரகு தான் என்று அறிந்தானோ அன்றே முடிவு செய்து விட்டான்….. அவன் இறப்பு எப்படி இருக்க வேண்டும் என்று. எல்லாவற்றையும் சரியாய் செய்தவன்…. அதை செய்ய காத்துக் கொண்டிருந்தது தான் தான் செய்த மிகப் பெரிய தவறு என்பதை இன்று அறிந்து கொண்டான் நிமல். 

 

கட்டவிழ்க்கப்பட்ட காளையென கண்கள் சிவந்து வெறி பிடித்தவன் போல தான் இருந்தான் நிமல். அவனின் உயரத்திற்கு அவன் நின்ற தோரணை அந்த நிலையிலும் அம்சமாய் கண்ணை கவரும் கள்வனாய் தான் கண்களுக்கு தெரிந்து….( இது தான் கேப்பில கிடா வெட்டுறது😍😜😜😜😜😍)

 

உள்ளே செல்ல அங்கு கையில் பணத்தை வைத்துக் கொண்டு அதன் வாசனையை அனுபவித்துக் கொண்டிருந்தான் ரகு. கூடவே விலை உயர்ந்த மதுவும்…… அவன் நினைத்தது நடந்தேறிய மிதப்பில் புன்னகை தவழ திரும்பியவன் நிமல் நின்ற நிலையை கண்டு ஆடித்தான் போனான்.

 

பின்னே சித்து கொன்றது நிமலைத் தான் என்று அவன் இந்த இரண்டு நாட்கள் ஆடாத ஆட்டமெல்லாம் அல்லவா ஆடிக் கொண்டிருந்தான். செத்து போனவன் என்று நினைத்தவன் உயிரோடு கண்முன்னே கம்பீரமாய் நிற்பதைக் கண்டால்….. எப்படி இருக்கும்.

 

அதிர்ச்சியும் பயமுமாய் ரகு நின்றிருக்க நிமல் அடித்த ஒற்றை அடி இடியென அவன் மேல் விழுந்தது. நிமலின் ஒற்றை அடியில் சுருண்டது ஒரு நொடி தான்… தானும் சலைத்தவன் அல்ல என்று ரகு சண்டையிட….. அடுத்தடுத்து நிமல் கொடுத்த அடியில் ரகு தளர்ந்து விட்டான். இறுதியாய் நிமல் குடுத்த குத்தில் முழுதும் மறந்து மயங்கிச் சரிந்தான் ரகு. தன் வாழ்வின் இன்னல்கள் கடவுள் எழுதிய விதியாய் இருந்தாலும் முழுக் காரணம் இவன் தானே என்று ஆத்திரம் தீரும் மட்டும் அவனை அடித்திருந்தான் நிமல்.

 

ரகுவை இழுத்து காரின் பின் பக்கம் போட்ட நிமல்… காரை எடுத்துக் கொண்டு சென்ற இடம் ஊருக்கு வெளியே காடுகள் சூழ்ந்து காணப்படும் அந்த குடோனிற்க்கு. குடோனின் ஒரு அறையில் அவனை வைத்து பூட்டியவன் மொத்த குடோனையும் அடைத்து சாவியை காட்டிற்குள் தூக்கி எறிந்தான்….

 

தன் காதலை பிரிக்க நினைத்தவன் இனி இல்லை என்ற நிம்மதி பெருமூச்சு நிமலிடம்…… அனைத்தையும் முடித்து விடியலில் தான் மருத்துவமனை வந்தான். நேத்ரா அறையின் முன் அமர்ந்திருந்த சரண் நிமலை பார்க்க அவன் கண்களில் தெரிந்த மிளிர்வே சொன்னது ரகுவின் நிலையை. புன்னகையோடு நிமலை அணைத்துக் கொண்டான் சரண்…. 

 

அடுத்த இரு நாட்கள் காத்திருப்பில் கழிய நேத்ராவும் கண் விழித்தாள்…..

 

 

இன்று….

 

 

கோபத்தோடு வெளியே சென்ற நிமல் அடுத்து மருத்துவமனை பக்கமே வரவில்லை. நேத்ராவும் அவனின் கோபத்தை கண்டு பயந்தவளாய் எதுவும் கேட்கவில்லை….. இரவும் நெருங்க சரணிடம்…. என்னடா சரண், நிமல் என்ன பார்க்க வரவே இல்ல…என் மேல ரொம்ப கோபமா???? என்றும் கேட்டு விட்டாள்… அவன் அமைதியாய் அவள் முகம் மட்டும் தான் கண்டான்… பதில் சொல்ல வில்லை. அதற்கான பதில் அவளுக்கு தெரியும் தான்… இருந்தும் நட்பிடம் தன் நிலையை கேள்வியாய் கேட்டு வைத்தாள்…..

 

 

இரவின் மிரட்டல் அந்த காட்டில் மட்டுமல்ல தனித்திருந்த அந்த குடோனிலும் கூட அதிகமாகத் தான் இருந்தது……. வெளிச்சம் துளியும் இல்லை. இருண்டு கிடந்த அந்த அறையில் அந்த உயிர் உடற்கூட்டை விட்டு பிரிய தயாராய் இருந்தது…..

 

ரகுவின் உயிர் தான். அவன் இன்னும் சாகவில்லை. அன்று நிமல் அடைத்து விட்டு சென்ற இரவு மயக்கம் தெளிந்து எழுந்தான்…… கண்கள் மங்கிட… அறையை சுற்றி சுற்றி பார்க்க கண்களுக்கு இருட்டு மட்டுமே தெரிந்தது. இரவு முழுதும் கத்தி கூப்பாடு போட்டான். யாரும் வரவில்லை. விடியல் தொடங்கி மெல்ல மெல்ல வெளிச்சம் பரவ…. சுற்றிலும் பார்த்தவன் அதிர்ந்து தான் போனான்………

 

 

அப்படி என்ன இருந்தது அந்த அறையில்?????

 

பார்க்கலாம்……

 

 

 

 

 

தொடரும்………prabhaas 💝💝💝

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்