Loading

பகுதி – 14

மூர்த்தி லேப்ஸ்…….

ஏகபட்ட பிரச்சனைகள் ஒன்றன் பின் ஒன்றாய் வர அதனை சமாளிக்கவே திறணி அற்று போயிருந்தனர் நம்மவர்கள்.

இதில் ரதிக்கு வேறு அடிக்கடி உடல் நிலை சரியில்லாது போனது காதல் நோயால்.

இப்பொதெல்லாம் அஜ்ஜூவின் வீட்டில்தான் அம்மணி அடிக்கடி விஜயம் புரிந்து வருகிறார்.

நண்பர்களின் பிரச்சனையை தீர்க்க சொல்லி கேட்டாள் அவன் முத்த பிரச்சனை செய்கிறான். இருவரும் இல்லை இல்லை ரதி மட்டும் காதல் உலகில் மிதந்துக்கொண்டு இருந்தாள்.

மிதக்க வைத்தான் வித்தைகாரன்.

கைப்பிடித்து கட்டிபிடித்து இதழ் கடித்து இடை வளைத்து என கொஞ்சம் கொஞ்சமாய் அவளை மயங்க வைத்திருந்தான் அவன் மீது பித்தாகி மோகம் கொண்டு அவனோடு போகத்தில் திளைக்கும் எல்லைவரை.

ஒருமாதம்  கடந்துவிட்டது இன்னும் பிரச்சினை ஓயவில்லை. அஜ்ஜூ காதலின் ஒருமாத நிறைவு விழாவிற்காக அவளை பீச் ரெசாட் அழைத்துச் சென்றிருந்தான்.

காதலை இவள் காட்ட கட்டிலை அவன் காட்ட பிச்சியாகிப்போனவள் அவன் மீதுள்ள காதலில் அவளையும் கொடுத்துவிட்டாள். சலிக்க சலிக்கை அவளை அனுபவித்து அனுப்பி வைத்தான் வீட்டிற்கு.

மூர்த்தியின் மனைவியும் மகளும் ஒரு கம்பேனிக்கு வேலைக்கு செல்வதால் ரதி வீட்டில் இல்லாதது அவர்களுக்கு தெரியவதில்லை. அவர்கள் சென்றப்பின் அஜ்ஜூவை காண சென்று அவர்கள் வருவதற்குள் திரும்பிவந்திடுவாள்.

தயா தீபன் இருவரும் வேலைப்பளுவில் சிக்கி தவித்துக்கொண்டு இருந்தனர்.

வேலையெல்லாம் முடித்தவன் அசதியாக சாய்ந்திட தயாவோ ஸ்லைடை கொடுத்திட்டுவாடா வசு மேம்கிட்ட என்றாள்.

தலை வலிக்கிது தயா கொஞ்சம் ரெஸ்ட் எடுத்திட்டு போறன்.

மூர்த்தியோ நான் போறன் மா என்ட்ட கொடு

அவரிம் கொடுக்க எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு வசுவைக் காண சென்றார்.

தீபன் இந்த ரதிக்கு ஏன் அடிக்கடி உடம்பு சரியில்லாம போது ஹாஸ்பிடல் போய் செக் பண்ணனும்.

தயா ஆமா என்னனே தெரியலை

நெக்ஸ்ட் மன்த் காசுவரட்டும் நல்ல ஹாஸ்பிடலா பார்த்து செக் பண்ணலாம்

ம்ம்ம் சரி

அப்போது தயாவின் கைப்பேசி அடித்தது.

புது நம்பராக இருக்கவும் தயா எடுக்கவில்லை மீண்டும் மீண்டும் அழைப்பு வர தீபன் எடுத்தான்.

ஹலோ யாரு

யாரு தீபனா நான் உங்களுக்கு வேண்டியவன் பேசுறன்பா

தீபன் ஃபோனை ஸ்ப்பீக்கரில் போட்டான்.

மிஸ் தயாளினிக்கு கால் பண்ணா மிஸ்டர் தீபன் எடுக்குறாரு ஏன் மேடம் புது  நம்பர்லாம் எடுத்து  பேசமாட்டீங்களா

தயா இருவரும் ஒரு சேர அழைத்தனர்.

வாவ் பேர் சொல்லாமயே கண்டுபிடிச்சிட்டீங்க

தீபன் எதுக்குடா கால் பண்ண

தயா உன் ஃபிரண்டோட கடலைபோடதான் நீதான் நந்திமாறி குறுக்க நிக்கிறியே

தயாளினி டேய் நீ ரொம்ப ஓவரா போற

தயா அட என்னமா உங்களுக்கு வேண்டிய பட்டவங்களுக்கு பிரச்சனை ஆகிடுச்சே சரி நமக்கு வேண்டாத வங்களானாலும் விஷியத்தை சொல்றது முறைனு கால் பண்ணா இப்படி எகுறுற

தீபன் யாருக்கு என்ன ஆச்சி

தயா பச்ச்ச் நா ரோட்ல வண்டி ஓட்டிட்டு போய்ட்டிருந்தன அப்போ

தயாளினி பச்…….தயா யாருக்கு என்ன ஆச்சி சொல்லித்தொலை

தயாவிற்கு உள்ளுக்குள் உற்சாகம் முதல் முறை அவள் பெயரிட்டு அழைத்தது. ஆனால் காட்டிக்கொள்ளவில்லை.

நான் போய்டிருந்தப்ப ஒரு பெரியவர் அடிபட்டு ரோட்டுல விழுந்து கிடந்தாரு தூக்கிட்டுவந்து எம்எம் ஹாஸ்பிடல்ல சேர்த்திருக்க அவர் பேரு கூட ஏதோ

தீபன் மூர்த்தி தாத்தா

எக்ஸாக்லி வந்து பில்ல கட்டிடுடு கூப்பிட்டுபோங்க பட்டென கட் செய்தான்.

இருவரும் பதறிக்கொண்டு வர தயா ஆயாசமாய் அமர்ந்து கேன்ட்டி கிரஸ் விளையாடிக்கொண்டு இருந்தான்.

மூர்த்திக்கு தலையில் பெரிய அடி கொஞ்சம் ரத்தம்போகி இருந்தது. தயாதான் மருத்துவமனையில் சேர்த்து ரத்தம் கொடுத்துவிட்டு அமர்ந்திருந்திருக்கிறான்.

தயா ஓடிச்சென்று பார்க்க தீபனோ தயாவின் சட்டையை பிடித்தான்.

ஓ** ஏன்டா எங்கள்ட்டயே பிரச்சனை பண்ற ஏன்டா தாத்தாவ ஆக்ஸிடன்ட் பண்ண

தயாவிற்கு கோவம் வந்துவிட்டது தீபனை ஓங்கி அறைந்தான்.

தீபன் அவனை அறைந்தான். இருவரும் சண்டையிட்டனர்.

ரதி வந்தாள் தீப விடு டேய் தீப விடுடா அவரை விளக்கிவிட்டாள்.

தயாவோ அரக்கனாக மாறி இருந்தான். தீபனின் மீது கொலைவெறி வந்தது என்ன ஏதென விசாரிக்காமல் வார்த்தையை விட்டதை எண்ணி.

அவர்களுக்கு பிரச்சனை தர தயாதான் இதை செய்திருப்பான் என்றே தயாளினியும் தீபனும் பேசிக்கொண்டு வந்தனர்.

அந்த கோவத்தில்தான் தீபன் தயாவிடம் அப்படி நடந்துக் கொண்டான்.

மூர்த்தியை காணச் சென்றவள் அவரின் நிலையை பார்த்து அழுதாள். அழுகையோடே வந்தாள் தயாவைக்காண.

அவளும் வந்து அவனிடம் சண்டையிட்டாள்.

நல்லாருப்பியா நீனு ஏன்டா ஏன் எங்க உயிரை வாங்குற உனக்கு நாங்க என்னடா பாவம் பண்ணோம் நிம்மதியாவே இருக்க விடமாட்டிக்கிற ச்சை ஆம்பளையா நீயெல்லாம்

தயாவிற்கோ போயும் போயும் இவர்களுக்கா நல்லது செய்தோம் என்ற எண்ணம்தான் அதில் தயாளினி கேட்ட கேள்வி வேறு எரிச்சல் வந்தது அவனுக்கு.

அவளின் கையை அழுத்தமாய் பிடித்து சொன்னான் ஆம்பளைதான் வரியா காட்டுறன்.

ச்சி பொறுக்கி நாயே

ஏய் யாருடி பொறுக்கி என்னடி சும்மா வார்த்தைக்கு வார்த்த பொறுக்கின்ற

தீபன் தயாவோடு வம்புக்கு வந்தான்.

ஆமாடா பொறுக்கிய பொறுக்கினுதான் சொல்லுவாங்க எடுடா கைய அவமேலருந்து இத்தனைநாளா நேருக்கு நேர் நின்னு மோதுன இப்போ ஆளை அடிச்சிபோட்டு எங்க ஃபீலிங்க்ஸோட மோதுற கேவலமானவன்டா நீ

தீபன் யூ ஆர் கிராஸிங் யுவர் லிமிட்ஸ் . என் பொறுமைக்கும் அளவிருக்கு

அப்படிதான் டா பேசுவன் நீ செஞ்சதைதான சொல்றன்

தயா கோபமாக வந்து அவன் முகத்திலேயே குத்துவிட்டான்.

மீண்டும் சண்டையிட ஆரமித்தனர். தயா தாயவை பிடித்து இழுத்து பளாரென அறைந்தாள். தயாவோ அவளை திருப்பி அடிக்க கையோங்கி பாதியிலேயே நிறுத்தினான்.

ரதியோ அஜ்ஜூவிற்கு அழைத்து ஓய்ந்துபோனால்.

நீ எல்லாம் மனுஷனே இல்ல மிருகம் உன்னை எல்லாம் பெத்ததே பூமிக்கு பாரம் மரியாதையா போய்டு இல்ல மிஸ்பிகேவ் பண்ணனு போலீஸ்ல கம்ப்ளைன்ட் பண்ணிடுவன்

தயா அவள் தாடையை பற்றி நீ பேசுன பேச்சுக்கு அனுபவிப்ப டி உன்னை என்ன பண்றபாரு மிரட்டிட

உன்னால ஆனதை பார்த்துக்கோ என தீபன் சொல்ல தயா கோவமாய் அவனைப் பார்க்க அங்கு வந்த மருத்துவர் அவர்களை திட்டி கிளம்பி போகசொன்னார்.

தயா கோவத்தோடு அங்கிருந்து சென்றான்.

மூர்த்தி மயக்கத்தில் இருந்ததால் அவரை காப்பாற்றியது இரத்தம் கொடுத்ததும் தயாதான் என அவருக்கும் தெரியாது.

தீபனும் தயாவும் அவரை பார்த்துக்கொண்டனர். ரதி அவர்களிடம் ஏன் பிரச்சனை பண்றீங்க அவங்களோட என கோபித்தாள்.

தீபன் ஏய் என்ன நீ எங்கள திட்ற தப்பு அவன்மேல தாத்தாவ ஆக்ஸிடன்ட் பண்ணிருக்கான்.

ரதி அவர்தான் பண்ணாருனு உனக்கு தெரியுமா என்ன ஆதரம் இருக்கு

தயா அவன்தான நக்கலா பேசி கூப்பிட்டான்

ரதி சும்மா உங்க கெஸ்ஸிங்க வெச்சி ஒருத்தரை தப்பா பேசாதீங்க அவரே ஆக்ஸிடன்ட் பண்ணிட்டு அவரே வந்து ஏன் ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணுவாங்களா

அப்போது ஒரு நர்ஸ் வந்தார்.

ஸார் பில் ஏற்கனவே கட்டியாச்சி நீங்க டிஸ்சார்ஜ் பண்ணி கூப்பிட்டு போகலாம்னு டாக்டர் சொல்லிட்டாரு

தயா பில் யாரு கட்டுனா

இவரை அட்மிட் பண்ணாரே அவர்தான். அவர்தான் இவங்களுக்கு பிளட்டும் கொடுத்து காப்பாத்துனாரு.

அந்த நர்ஸ் சென்றதும் ரதி தீபனையும் தயாவையும் தீயாய் முறைத்தாள்.

இருவருக்குமே கொஞ்சம் அவசரபட்டு விட்டோமோ என்ற எண்ணம் தோன்றியது.

தப்பா பேசிட்டோம் தீபா

ஆமா தயா ச்சை அவன் என்ன சொல்ல வரானு கேட்றுக்கலாம்

சரி விடு டா நாம இவ்ளோ ஃபீல்  பண்ற அளவுக்கு அவன் அவ்வளோ வர்த் இல்ல அவன் நமக்கு பண்ணதெல்லாம் வெச்சி பார்த்தா அவன்மேல நமக்கு சந்தேகம்தான் வரும்.

தீபன் நாம பேசுன பேச்சுக்கு என்ன ரிவஞ்ச் எடுக்க போறானோ

தயா பாத்துக்கலாம் டா விடு. மறுபடியும் ஸ்லைடு ரெடி பண்ணனும் வசுமேம்கிட்ட அனுப்பனும். ரிப்போர்ட் கொடுக்கனும்.

_____________________

தயா கோவத்தோடு காரை எடுத்துக்கொண்டு போய் அவனது லேப்பில் நிறுத்தினான்.

அவனது கோவத்தையும் கலைந்த ஆடையையும் பார்த்தவர்கள் என்ன ஏதென விசாரிக்க அவன் நடந்ததை சொல்லிட மூவருக்குமே இந்த முறை கோவம்தான்.

பொறுமையாக இருக்கும் வசீக்குமே எரிச்சலாக வந்தது அவனது நண்பனின் மீது எப்படி கை வெக்கலாம் என்று.

அவனை அடிச்சி மூன்ஜிய உடைக்கலாம் டா

தயா அவ அந்த தயா என்கிட்ட அடங்கனும்டா அவளை அடக்கனும் என் மேல கைய வெச்சிட்டா என்று கத்தினான்.

யாழி ஏய் விடுடா அவளை உன் கால்ல விழவெக்கிறோம் நாங்க நீ காம் ஆகு

அஜ்ஜூ அவனை அனைத்துக் கொண்டு மச்சான் விட்றா நாங்க பாத்துக்குறோம்.

அஜ்ஜூ வசீ யாழி மூவரும் அவர்களை முழுவதுமாக ஒழித்துக் கட்ட திட்டம் போட தயா கண்மூடி அமர்ந்திருந்தான்.

பின் அவர்களுக்கு சேம்பிள் அனுப்பும் அனைத்து மருத்துவமனையிலும் பேசி சேம்பிளை நிறுத்திட சொல்லலாம் அவர்களுக்கு வருமானம் வரும் அனைத்து வழிகளையும் அடைக்கலாம் என திட்டம் போட்டனர்.

தயா அவங்களுக்கு சேம்பிள் அனுப்புங்க என்றான்.

வசீ என்னடா  சொல்ற

தயா சேம்பிள் அனுப்புடா நமக்குவர சேம்பிளையும் மொத்தமா சேர்த்து அனுப்பு அந்த மூர்த்தியால இப்போதைக்கு வேல செய்ய முடியாது அந்த தீபனை அடிச்சி கையகால உடைச்சி போடுங்க அந்த ரெண்டு பொண்ணுங்க மட்டும் என்ன செய்றாங்கனு பாப்போம். அவங்களால முடிக்க முடியாது அப்படியே முடிச்சாலும் ஸ்லைடை பேத்தாலஜிஸ்ட்ட பாக்ககூடாது அவங்க யார்கிட்ட ரிப்போட் வாங்குறாங்கனு பாரு அந்த டாக்டருக்கு செட்டில்மெண்ட் பண்ணு அவ தவிச்சி நிக்கட்டும்

அஜ்ஜூ மனதில் நினைத்துக் கொண்டான் ரதியையும் உதவிக்கு அனுப்பக்கூடாது என்று.

தீபன் தனியாக வண்டியில் வர அவனை அடித்து பிரித்து மேய்ந்தனர் அஜ்ஜூ அனுப்பிய ஆட்கள்.

தயாவிற்கோ என்ன செய்வதென தெரியவில்லை அழுதுக்கொண்டே மருத்துவமனைக்கு ஓடினாள்.

அவனிருந்த நிலையை பார்த்து அழுது கதறி துடித்தாள்.

மூர்த்திக்கும் உடல்நிலை சரியில்லை இந்நிலையில் அவர்களின் லேப்க்கு ஆயிரம் சேம்பிள் வந்திருந்தது.

தயாளினிக்கு தலையே சுற்றிவிட்டது. ஒற்றையாளாய் எப்படி சமாளிப்பது என்று. கிராஸிங்கிற்கு வசு வந்தாள்.
அவசர அவசரமாக செய்துவிட்டு சென்றாள்.

தயா பிராஸஸிங்கை ஆரமித்தாள். ரிப்போர்ட் கொடுக்க வேண்டுமே இல்லாவிட்டாள் அவர்களின் லேப் பெயர் கெட்டுவிடுமே அவசர அவசரமாக செய்தாள். ரதி அவளுக்கு உதவி செய்தாள்.

ரதிக்கு அஜ்ஜூ கால் செய்தான்.

அவனுக்கு ஆக்ஸிடன்ட் என்று பதறினாள் பேதையவள். அழுதாள்.

தயா என்னாச்சு ரதி ஏன் அழுவுற பயந்து கேட்டாள்.

ரதி தயா தயா அவருக்கு அடிபட்டுடுச்சி  நான் அவரை பாக்கனும் அய்யே என்னை அனுப்பு

யாரு டி யாருக்கு என்ன ஆச்சு

அஜ்ஜூ என் அஜ்ஜூக்கு டி ஆக்ஸிடன்ட் டி

தயா அவளை அறைந்தாள் பைத்தியமா டி நீ என்னடி ஒலர்ர

அது அது  என தடுமாறியவள் மொத்த உண்மையையும் சொன்னாள்.

தயா இடிந்துபோய்விட்டாள். அடிமேல் அடி அவளுக்கு நிற்க கூட திறணியற்று அவள் சரிந்திட நட்பைவிட காதல் ரதிக்கு பெரியதாய் போக அவளைப் பாராது ஓடினாள் அஜ்ஜூவைத் தேடி.

அஜ்ஜூவோ சிறிய கட்டாக கையில் போட்டு அமர்ந்திருந்தான். அவனைக் கண்டு துடித்திட அவன் நடித்திட அவளை அவனிடமிருந்து அசையவிடவில்லை அஜ்ஜூ.

அங்கு எல்லாவற்றையும் தனியாளாக செய்து முடித்தாள் தயா. எத்தனை துன்பங்கள் அவளை அழுத்தினாலும் அவளின் தொழிலில் மேல் உள்ள பற்று அவளை திடமாக வேலை செய்ய வைத்தது.

ஸ்லைடை எடுத்துக் கொண்டு வசு வீட்டிற்கு செல்ல அவளோ வீட்டை பூட்டிவிட்டு எங்கோ சென்றிருந்தாள்.

அவளுக்கு அழைத்து அழைத்து ஓய்ந்துபோனால். கடைசியில் அழைப்பை ஏற்றவள் உங்களது ஸ்லைடை பார்க்க முடியாது என்று சொன்னாள்.

தயா அவளிடம் கெஞ்சினாள் அவளோ முடிவாக மறுத்துவிட்டாள்.

தயாவிற்கு தலை சுற்றி மயக்கமே வந்துவிட்டது. கண்ணை கட்டி காட்டில் விட்டதுபோன்ற உணர்வு இப்போது எங்கு செல்வது யாரிடம் கேட்பது நாளை ரிப்போர்ட் கொடுக்க வேண்டுமே இல்லாவிட்டாள் பிரச்சினை ஆகிவிடும்.

அவளுக்கு அந்த ஊரில் வேறு பெத்தாலஜிஸ்ட் யாரும் தெரியாது. தேடி அலைய தீபனும் உடன் இல்லை.

நடுரோட்டில் உள்ள ஒரு கல்லில் அமர்ந்திருந்தாள். அப்போது தயாவின் கார் வந்து நின்றது.

அவளை ஏளனமாகப் பார்த்து இறங்கினான்.

என்ன மிஸ் தயாளினி நடுரோட்டுக்கு வந்துட்டீங்க அதுக்குள்ள கேம் ஓவரா என்று நக்கல் செய்தான்.

தயாளினிக்கோ ஸ்லைடை இவர்கள் பார்த்து ரிப்போர்ட் கொடுத்தாள் போதுமே என்ற எண்ணம் தோன்றியது.

அவள் எழுந்து நின்றாள்.

ச்ச்சூஊஊஊஊ பாக்கவே பாவமா இருக்கியேமா ரொம்ப வேலையோ ஆயிரம் சேம்பிள் ஒரே ஆளா ரன் பண்றது கஷ்டம்தான் ஆனா பரவால்லயே பட்டுனு முடிச்சிட்ட ஐ அப்ரிஷியேட் யூ பட் இதை பாத்து யாரு ரிப்போட் கொடுப்பா கேலி செய்தான் அவள் நிலையை எண்ணி.

அவளோ அசராமல் அவனை நோக்கினாள்.

நாளைக்கு ரிப்போர்ட் கேட்டு எல்லாரும் கால் பண்ணுவாங்களே என்ன பண்ண போற டைம் கேக்க போறியா அது கிடைக்காதே கிடைக்க இந்த தயா விடமாட்டானே.

…….

பச்…..என்ன பண்ணலாம் உன்னை பார்த்தா பரிதாபமா இருக்கே…. வேணா நான் ஒரு யோசனை சொல்லட்டா நான் உனக்கு இரக்கம் காட்டுறன் உன் ஸ்லைடை பார்த்து ரிப்போர்ட் கொடுக்குறன் அதுக்கு……

அதுக்கு நான் என்ன பண்ணனும் அவள் தெளிவாக திடமாக கேட்டாள். அந்த குரலிலேயே தெரிந்தது அவன் என்ன சொன்னாலும் செய்வாள் என்று ஆனால் தயா அதனை உணரவில்லை. அவளை சீண்டினான்.

நீ பண்ணதெல்லாம் தப்புனு சொல்லி என் கால்ல விழு தயாளினி.

சொன்ன அடுத்த நிமிடம் விழுந்திருந்தாள் அவன் காலில் நடுரோட்டில்.

தயா சற்றே மிரண்டுவிட்டான். அவள் நிச்சயம் இதை செய்வாள் என அவன் எதிர்பார்க்கவில்லை. ஏனென்றால் அவளுக்கு அவள் சுயமரியாதை முக்கியம்.

நான் பண்ணது பேசுனது தப்புதான் உங்களை எதிர்த்தது தப்புதான் என்றாள்.

அவனோ இரண்டடி பின்னால் நகர்ந்து அவளை தூக்கினான். அவன் கைகளை தட்டிவிட்டாள். இப்போ பாக்குறீங்களா ரிப்போர்ட் நாளைக்கே கொடுத்திடுவீங்களா சாதாரணமாக கேட்டாள்.

ஏனோ தயா சண்டைக்கோழியாக திமிரி நின்றபோதுகூட அவனுக்கு உறுத்தவில்லை அவள் இப்படி செய்யவும் உறுத்தியது ஒரு பெண்ணை கஷ்டபடுத்துகிறோமோ என்று தோன்றியது.

அவள் மொத்த ஸ்லைடையும் அவனிடம் கொடுத்தாள். ஒரு பேப்பரில் அவளின் ஈமெயில் ஐடியை எழுதி கொடுத்து இதுக்கு மெயில் பண்ணிருங்க என்றாள்.

தயா ஒன்றும் பேசாமல் அங்கிருந்து சென்றான்.

அவனே எல்லாவற்றையும் பார்த்தான். ரிப்போர்டை அவளுக்கு அனுப்பினான். அவளிடம் இனி பிரச்சனை பண்ணக்கூடாது என முடிவெடுத்திருந்தான்.

அவனால் வேலையில் சரியாக கவனம் செலுத்த முடியவில்லை. தலை வலித்தது. காஃப்பி ஆர்டர் செய்தான். தயாவின் நினைவு வந்தது. சிரித்துக்கொண்டான்.

அவளது மச்சம் நினைவில் வந்து நின்றது. இதற்கும் சிரித்தான். அவளின் நினைவுக்கு வந்தது இவனுக்கு வலித்தது.

ஏன் அவளோட கஷ்டம் நம்மளை இவ்ளோ பாதிக்குது அவளோட நினைப்பு இப்படி வந்து நம்மளை இம்சை பண்ணுது என்னடா தயா இது புது உணர்வா இருக்கு அவனது உடலும் மனமும் நிலையில்லாமல் தவித்தது.

கண்ணை மூடினாள் திறந்தாள் காரிகையவளின் முகமே வந்து இம்சித்தது.

பெருமூச்சுவிட்டவன் தரையில் அமர்ந்து நிமிர்ந்து கண்கள் மூடி அவனை ஒருநிலைப் படுத்திட அன்று அவளை முதல் முதலாய் பார்த்த காட்சி நினைவில் வந்து நின்றது.

அதே மஞ்சள் வண்ண சுடிதாரில் பேரழகியாக தோன்றினாள். அவளின் திமிர் அவனை கவர்ந்தது. அவளது அசராத பார்வை அவனை அசைத்தது.

இதழ் விரித்து சிரித்தவனுக்கு புரிந்துவிட்டது. பாழ்ப்போன மனது தறிகெட்டுபோய்விட்டது அவள் பின்னே என்று.

வெறுத்து ஒதுக்கியவள் ஓரமாய் இதயத்தின் உள்ளே வந்து அவனை ஒட்டுமொத்தமாய் ஆக்கிரமித்திருக்கிறாள் என்று.

கன்னியை கண்டாள் எரிந்து விழுபவன் காதலில் விழுந்திருக்கிறான்.

கண்களை திறக்க அவன் மனதில் பாடல்  ஓடியது.

காதல் என்ற ஒன்று அது கடவுள் போல உணரத்தானே முடியும் அதில் உருவம் இல்லை.

சிரித்துக்கொண்டான். உணர்ந்துவிட்டாள். அவளைக் காண சென்றான் துள்ளலாக இப்போதே உரைத்திட வேண்டும் அவனுக்கு. இந்த அவஸ்தையை அவனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அவன் பாரத்தை அவளுக்கு ஏற்றிட வேண்டும்.

காரை மிதமான வேகத்தில் செலுத்தினான்.

இளையராஜா ஒரு பக்கம் ஏர்ஆர் ரஹ்மான் ஒருபக்கம் என இசை வாசித்தனர் அவன் காதலுக்கு.

ஒரு காதல் கடிதம் விழி போடும் உனைக் காணும் சபலம் வரக்கூடும்

நீ பார்க்கும் பார்வைகள் பூவாகும் நெஞ்சுக்குள் தைக்கின்ற முள்ளாகும்

கண்ணே என் கண்பட்ட காயம் கைவைக்க தானாக ஆறும்

முன்னாலும் பின்னாலும் தள்ளாடும் என்மேணி செம்மேணி உன் தோளில் ஆடும் நாள்.

வலையோசை கலகலவென கவிதைகள் படிக்கிது குளுகுளு தென்றல் காற்றும் வீசுது

சில நேரம்  சிலுசிலுவென சிறகுகள் அடிக்குது எங்கும் தேகம் கூசுது

சின்னப் பெண் பெண்ணல்ல வண்ணப் பூந்தோட்டம்.

கொட்டடும் மேளம்தான் இன்று காதல் தேரோட்டம்.

பாடிக்கொண்டே வண்டி ஓட்டினான்.

(மீ இருடி வரும்போது யுவனை வாசிக்க வெக்கிறன்.)

தயாளினியைக் காண அவள் லேப்பிற்கு சென்றான். அங்கோ ஓஓஓஓவென கத்தி அழும் சத்தம் கேட்டது பதறினான் தயாளன்.

__________

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்