பகுதி – 13
அஜ்ஜூ ரதியை இறக்கிவிட்டு கண்ணாடியில் அவன் முகம்பார்த்து பேசினான்.
நடிகன்டா நீ என்னமா பேசி கவுத்திட்ட பிஞ்சு மாங்காவ அறை மணி நேரத்துல பழுக்க வெச்சிட்டியேடா உனக்கிருக்க தெறமையே தெறம. பிட்டு போட்டு வெப்போம். பிர்ஷ் பீசை இதுவரை டிரை பண்ணதில்லையே என்று நினைத்தான்.
மூர்த்தி வீட்டில்………
மூர்த்தியின் வீட்டுக்கு அவரது மூத்த மகள் வந்திருந்தாள். அவளின் கணவனுக்கு வேலை போய்விட்டதென. அவர் ஒரு மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் டிரைவராக இருக்கிறார்.
என்ன பிரச்சனை என விசாரிக்க காரணம் சொல்ல படவில்லை அவர்களுக்கு.
தயாளினிக்கோ இதுவும் அவர்களின் வேலையோ உணர்வப்பூர்வமாக தங்களை தாக்க நினைக்கிறார்களோ என்ற எண்ணம் உதித்தது.
ஆனால் வெளியில் சொல்லவில்லை அவள் உள்ளணர்வு சரிதான் என யார் சொல்வார் அவளுக்கு.
தீபன் ரதி கிளம்பலை லேப்க்கு
அது எனக்கு உடம்பு முடியலை நான் இன்னைக்கி வரலை
தயா என்ன ஆச்சி
நத்திங் ரெஸ்ட் எடுத்தா சரியாகிடும் நீங்க போங்க மெதுவாக வாயசைத்தாள் பீரியட்ஸ் என்று தயாவிடம்.
ஓஓஓஓ சரி சரி ரெஸ்ட் எடு
தீபன் என்ன நீ உடம்பு முடியலங்குறா ஹாஸ்பிடல் கூப்பிட்டு போகாம ரெஸ்ட் எடுக்க சொல்ற
ஆமா மாச மாசாம் ஹாஸ்பிடல் போய்கிட்டு இருப்பாங்க என முணுமுணுத்து வாடா மெட்டல் மண்டையா என இழுத்து சென்றாள்.
அவர்கள் சென்றதும் மூர்த்தியின் மனைவியும் மகளும் கோவிலுக்கு செல்ல இவள் அஜ்ஜூவிற்கு அழைத்தாள் அவனை பார்த்து நேரில் காதல் உரைக்கும் எண்ணத்தில்
அவனுக்கு அழைத்திட முதல் ரிங்கிலேயே எடுத்தான்.
ஹலோ யாரு
ஹலோ
குரலை வைத்து அவனால் கண்டறிய முடியவில்லை பலகுரல் கேட்டவனாயிற்றே சரி சொல்லி வைப்போம் பொதுவா
பேபி நீயா என்றான்
அவளோ முப்பொழுதும் தன் நினைவுதான் என வெட்கினாள் இந்த பக்கம்.
ஆமா நான் ரதிதான்
ஓஓஓஓ ஏஞ்சலா என மனதில் நினைத்தவன் தெரியுது ஏஞ்சல் சொல்லு என்ன விஷியம் முடிவு பண்ணிட்டியா
நேர்ல பாக்கலாமா
உனக்காக உன்ன நேத்து விட்ட இடத்துலதான் வெயிட் பண்ணிட்டு இருக்க மூனுமணி நேரமா
அவள் அதிர்ந்து மூனு மணி நேரமாவா
என் தேவதைக்காக மூனு யுகம் கூட காத்திருப்பன்.
மொத்தமாக விழுந்துவிட்டாள் அவனிடம்.
பத்தே நிமிஷம் அங்கருப்பன் என்று பரபரவென்று தயாரானாள் அழகாக அவனுக்காக.
அவள் அழைத்த நொடியே புரிந்துக்கொண்டவன் அப்போதே கார் எடுத்திருந்தான்.
அவள் வரும்முன் அவன் சென்று காத்திருந்தான். எழிலோவியமாக நடந்து வருபவள் அவனுக்கு ஐந்தரை அடி ஜின்னாக தெரிந்தாள்.
பேரழகா இருக்க ஏஞ்சல் ஐய்யோ தமிழ்ல இதுக்கு மேல சொல்ல வார்த்தை ஏதாவது இருக்கா
ரதியோ சிவந்த கன்னங்களோடு இங்க வேணா வெளியபோய் பேசலாமா
ஓ ஷியூர் என அவளுக்கு கதவை திறந்துவிட்டான். ஓர் உயர்தர ஹோட்டலின் முன் நிறுத்தினான். அவனது பணசெழுமையை பறைசாற்ற
விழிவிரித்தவள் இங்கயா என்று வியந்தாள். அப்பாவியாய் இதுவரை நட்சத்திர விடுதியை நேரில் பார்த்திடா அதிர்ச்சியோடு
பிளான் சக்ஸஸ் என்று நினைத்தான்.
அங்கு ஒரு டேபிளுக்கு சென்று சேரை இழுத்துபோட்டு அவளை அமர சொல்லிட அவளும் மெலிதான தமயக்கத்தோடு அமர்ந்தாள்.
அவள் எதிரில் அமர்ந்தவன் என்ன சாப்பிடுற ஏஞ்சல்
இல்லை நான் சீக்கிரம் போகனும் வீட்ல உடம்பு சரயில்லனு சொல்லிட்டு வந்திருக்க
காதல் வந்தா பொய் சொல்லிதான ஆகனும் ஏஞ்சல் என்றான் ஒற்றை கண் சிமிட்டு
அவளோ சிவப்பேறி அதுலாம் ஒன்னுமில்லை என்றாள்.
ஹான் இந்த அழகான லிஸ்ப்ஸ் பொய் சொல்லுது பட் பேரழகான கண்ணு உண்மைய சொல்லுதே
போடா பேசியே கவுத்திடுற என்று உரிமையோடு பேசிட அஜ்ஜூவோ பட்சி சிக்கிடுத்து என்று குத்தாட்டம் போட்டான் மனதில்.
சரி ஏஞ்சல் உன்னோட பட்டு இதழை விரிச்சி உன் கஆதலை சொன்னா அடியேன் இந்த காதுகுளிர கேட்டுப்பன்
நான் சொன்னா உங்கமேல லவ் வந்திடுச்சினு
அவன் மறுநொடியே முகத்தை மாற்றி என்னை பிடிக்கலையா ஏஞ்சல் நான் உனக்கு ஏத்தவனா இல்லையா ஏஞ்சல் நீ இல்லாத வாழ்க்கை எனக்கு எதுக்கு ஏஞ்சல் என்றவன் அங்கிருந்த கத்தியை எடுத்து மணிகட்டில் வைக்க பதறியவள் ஓடிச்சென்று அவன் அருகில் அமரந்து கத்தியை தட்டிவிட்டு அவன் நெஞ்சில் சாய்ந்துக்கொண்டாள்.
ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ அர்ஜூன் என்று கண்ணீரோடு காதல் உரைத்தாள் அவனுக்கு ஏதும் ஆகிடுமோ என்ற பயத்தில்.
அவனோ தெளிவாக கூர்மையான பகுதிக்கு எதிர்புறம் கத்தியை வைத்திருந்தான் மணிகட்டில்.
ஃபன்னி கேர்ள் என நினைத்து அவளை அனைத்துக் கொண்டான்.
ஐ லவ் யூ டூ பேப் என்று அவள் உச்சியில் முத்தமிட்டான்.
இருவரும் இரண்டுமணி நேரமாக காதல் வளர்த்துவிட்டு இல்லம் திரும்பினர்.
அவள் காரிலிருந்து இறங்க அவள் கைப்பிடித்து இழுத்தான்.
அவளோ பதறக என்ன அஜ்ஜூ என்றாள்.
அவனோ குழைந்து பேபி லவ் சொன்ன பர்ஸ்ட் டே எப்பவும் மறக்காது அதை இன்னும் மறக்காத மாறி ஸ்பெஷல் ஆக்கலாமே
எப்படி
உன்னோட இந்த பிங்க் லிஸ்ப் என்னோட லிப்ஸ டச் பண்ணா ஸ்பெஷல் ஆகிடுமே
ச்சீ போங்க அதெல்லாம் கல்யாணத்துக்கு அப்றம்தான்
ஏஞ்சல்
ஒரு ஜல்லும் இல்லை
ஹேய் நான் பாவமில்லையா பேபி அவள் கைப்பிடிக்க பட்டென்று தட்டிவிட்டாள்.
அவனோ முகத்தை கொஞ்சம் கடுமையாக மாற்றி ஸாரி ரதி உங்களை தொட்டது தப்புதான் மன்னிச்சிடுங்க இனி தாலி கட்றவரை உங்களை டச் பண்ணலை போதுமா ஏன்னா நான் பொம்பளை பொறுக்கில உங்களை ஏமாத்திடுவன்ல
அவன் கோவமாக பேசிட பதறியவளோ அவனோடு நெருங்கி அமர்ந்து அவன் வாயை மூடினாள்.
அஜ்ஜூ என்ன வார்த்தை பேசிட்டீங்க உங்களை லவ் பண்றனு உணர்ந்தப்பவே என்னோட எல்லாமே உங்க சொந்தம்னுதான் நினைக்கிறன் நா எப்படி உங்களை இப்படி பேசாதீங்க எனக்கு கஷ்டமா இருக்கு அவள் கண்கள் கலங்கிவிட்டாள்.
மனதில் நினைத்தான் எமோஷனல் ஃபூல்
அவள் கையை மெதுவாக பிரித்து இவ்ளோ கிட்ட வந்து சமாதனம் படுத்தாத டி என்னால முடியலை ரகசிய குரலில் சொல்லிட அவள் சிவந்து சிரித்தாள்.
அவளின் இடைவளைத்திட இம்முறை எதிர்ப்பில்லை படபடப்பு கூச்சம் அச்சம் என எல்லா உணர்வுகளும் வந்தது அவளுக்கு.
அவளின் கன்னத்தில் விரல்களால் கோலமிட்டவன் அவன் சூடான இதழை அவள் கன்னத்தில் பதிக்க அவள் உடலோ நடுக்கம் கொண்டிட காதுகளோ சிவப்பேறி போனது.
அவன் இதழை எடுக்காது இன்னும் அழுத்திட அவள் கைகளோ பிடிமானத்திற்காக அவன் தோளை பற்றியது.
மெதுவாக இதழை அவளிதழின் அருகில் கொண்டு வந்தவன் அவள் முகம் பார்க்க அவளோ கண்களை இறுக்க மூடி இருந்தாள்.
பர்ஸ்ட் டைம்போலயே இப்படி நடுங்குறா என அவளது நடுக்கத்தை ரசித்தவன் அவளின் இதழை தன்வசப்படுத்தினான்.
முதல்முறை என்பதால் அவள் தடுமாறிட அவன் இதழ் பிரித்ததும் மயங்கி கிடந்தாள் அவன் மீது.
அவளை விலக்கியவன் ஏஞ்சல் ஒரு கிஸ்கே மயங்குனா மத்ததெல்லாம் எப்படி என அவளை கேலி செய்திட அவளோ அவனை பார்த்து சிரித்து ஓடினாள்.
அஜ்ஜூ யாஹூஊஊஊஊ இந்த அஜ்ஜூ நினைச்சா ஆலியாபட்டயே கரெட் பண்ணுவான்டா இவ என்ன ஜூஜூபி என்று நினைத்தான்.
அஜ்ஜூவோ அவன் போனை எடுத்து ரதி டாப்ஸை கழட்டி இருந்த வீடியோவை பார்த்தான்.
அன்று தயா மூடிய கணினியிலிருந்து அவனுக்து தெரியாமல் ரதியின் வீடியோவை அவன் ஃபோனுக்கு மாற்றி இருந்தான்.
டாப்ஸை கழட்டி ஷிம்மி மற்றும் லெக்கினோடு இருந்தவளின் அழகை அள்ளி பருக துடித்தது அவனது ஆசை.
அதனால்தான் அவளை எப்படி மடக்க என திட்டம் தீட்டி சரியாய் செயல்படுத்திவிட்டான். இனி அவளை அவன் மஞ்சத்தில் விழவைப்பது மட்டுமே அவனது முக்கிய குறிக்கோள்.
—————–
அமி வசீ……ஃபோன்கால்….
டேய் பீம்பாய் எங்கடா இருக்க போனில் பக்கத்து தெருவரை கேட்குமாறு கத்தினாள்.
வசீ போனின் சத்ததை குறைத்தான்.
பாவம் அண்ணன் காரனை எதிரில் வைத்துக்கொண்டு தங்கையோடு கடலை போட முடியாமல் தவித்தான்.
ஹலோ நான் முக்கியமான மீட்டிங்ல
இருக்க
நீ அங்க என்ன கிழிக்கிறனு எனக்கு தெரியும் வந்து பிக் அப் பண்ணு
இங்க வேலை நிறையா இருக்கு நாம இன்னொருநாள் மீட் பண்ணலாம்
வரமாட்ட
ஐயோவென்றிருந்தது அவனுக்கு இன்று லேப்பில் நிறை வேலை அத்தோடு வசீம் தயா இருவரும் பிஎச்டிக்கா ஒரு பிராஜக்ட் செய்வதால் அந்த வேலையும் இருந்திட அவனால் இடத்தைவிட்டு நகரமுடியவில்லை. அவனின் ஆசை காதலியோ அவனை மிரட்டிக்கொண்டு இருக்கிறாள்.
தயா டேய் வேலயபாக்காம என்னடா பேசிட்டு இருக்க
என்னடா வசீக்கு வந்த சோதனை போன்ல அவ மிரட்டுறா நேர்ல இவன் மிரட்டுறான் பாவம் பையன்
அது மச்சான் முக்கியமான ஆள் ஒருத்தர் டா வர சொல்றாங்க அதான்
வேலை இருக்குனு சொல்லி வை டா இப்பதான் திருவிழால தொலைஞ்ச குழந்தையாட்டம் முழிச்சிட்டு இருக்கான். இதனை எதிர் புறமிருந்து கேட்டவள் சிரித்தாள். போனை கட் செய்து அண்ணனுக்கு அழைத்தாள்.
அண்ணா வந்து பிக் அப் பண்ணு
வேலையா இருக்க பாப்பா நீயே கேப் புக் பண்ணி வந்திரு
அண்ணா சொன்னல புக்ஸ் வாங்கனும் நீதான் வந்து வாங்கிதரனும்னு நான் படிக்கனும் ஒன் வீக்ல இன்டனல்ஸ் எனக்கு புக் ரெபர் பண்றனு சொன்னல
சரி சரி வரன் இங்க ரொம்ப வேலை இந்த டென்ஷன்ல என்னால சரியா புக்க பார்க்க கூட முடியாது மா
அப்போ அஜ்ஜூ இல்லைனா யாழிய அனுப்பிவிடு
அவங்ங ரெண்டு பேரும் இங்கல்ல வெளிய போய்ருக்காங்க வசீதான் இருக்கான்
பச்…… அவரா அவர் ஒழுங்கா கைட் பண்ணுவாரா
ஏய் நாங்க படிக்கிறப்ப அவன்தானே எங்களுக்குலாம் புக் எடுத்துகொடுப்பான் நான் அவனையே அனுப்புறன் ரெண்டுபேரும் போய் வாங்கிட்டு வாங்க என வைத்தான்.
டேய் போய் அவளுக்கு புக் மட்டும் வாங்கி கொடுத்திடுடா இல்லைனா உண்டு இல்லைனு பண்ணிடுவா வீட்டுக்கு வந்து
இப்போ வேலை கெடலையா மிஸ்டர் தயா
தங்கச்சிக்கான என்ன வேணா பண்டுவன் மேன் நானு.
நீ தங்கச்சிக்காக பண்ற உன் தங்கச்சி ரொம்ப நல்லா பண்றாடா என்ற கவுண்டரோடு உள்ளே நுழைந்தான் அஜ்ஜூ.
தயா அவ என்னடா பண்ணா
அஜ்ஜூ வசீயை முறைத்து நத்திங்க்டா ஜஸ்ட் கிட்டிங் என்றவன் என்னவென விசாரித்தான்.
தயா விவரம் சொல்ல வசீ நீ இரு நான் போரன் என்றான்.
வசீயோ பதறியவாறு அவ என்னை தொலைச்சிடுவா என்று பயந்து இல்லை மச்சா இப்பதான வந்த நீ இரு நானே போறன் அதுமில்லாம புக் வாங்கலாம் உனக்கு அறிவு பத்தாதுடா
அஜ்ஜூ மிஸ்டர் வசீம்கான் for your kind information நானும் எம்பிபிஎஸ் எம் டி முடிச்ச டாக்டர்தான் இந்த வேலைய நீ பாரு நான் போய்ட்டுவரன்.
வசீம் இல்லைடா
தயா டேய் வசீயே போகட்டும் நீ அவளோட ஏதாவது வம்பு வளர்ப்ப அவ அதுக்கொரு பஞ்சாயத்து வெப்பா இவன்னா பேசாம பொய்ட்டு பேசாம வந்திடுவான்.
அது ஏன்டா இந்த வசீம்மேல இவ்ளோ நம்பிக்கை உனக்கு இவனே உன் தங்கச்சிய கரெட் பண்ண போறான் பாரு நக்கலாக சொன்னான்.
தயா அர்ஜூன் என்று கோவமாக விளித்தான். இதுவரை தயா நண்பர்களிடம் இத்தனை கோவம் பட்டதில்லை. யாரை பார்த்து என்ன பேசுற வார்த்தைய ஒழுங்கா பேசு எனக்கு வசீ பத்தியும் தெரியும் என் தங்கச்சி பத்தியும் தெரியும் இன்னொருவாட்டி இப்படி பேசுன பேசுற வாய் இருக்காது.
வசீமே ஒரு நிமிடம் பதறித்தான் போனான் தயாவின் கோவத்தில். அதிர்ந்து நின்றான்.
சரி சரி விட்றா விட்றா நீ சொன்னா கேட்டுக்க போறன் அதுக்கு ஏன் கொரில்லா பட டீசர் ஓட்டுற என்றவன் வாடா மச்சி என வசீயை அழைத்துக் கொண்டு வெளியில் சென்றான்.
வசீ தோளில் கைப்போட்டு அஜ்ஜூ பேசினான்.
கேட்டுகிட்டீங்களா வசீம் அவன் உங்களை எந்த அளவுக்கு நம்புறான்னு அந்த நம்பிக்கைய ரெண்டு பேரும் உடைச்சிடாதீங்க. தயா உடைஞ்சா அதை பார்க்க முடியாது என்னால. நானும் கவனிச்சிடுதான் இருக்கன் ரெண்டுபேரையும் எச்சி வெச்ச கேக் பிக்அப் டிராப். டவுட் கிளியர் பண்றனு பல மணிநேர டாக். அத்தோட அமியோட நேம் ரிதானு செல்லமா சேவ் பண்ணிருக்க உன் ஃபோன்ல ரூட்டு சரியில்லை உங்களோடது.
நீ யோக்கியமா கேக்காத? நான் வுமனைசர்தான் ஆன பிரண்டோட தங்கச்சிய தன்னோட தங்கச்சியா நினைக்காத அளவுக்கு மோசமானவன் இல்லை புரியும்னு நினைக்கிறன்.
நாசுக்காய் சொல்லி வைத்தான் நண்பனவனிடம் தோழனின் தங்கை தோழி இல்லை என்று.
வசீம்க்கு எது நடக்ககூடாது என்றிருந்ததோ அது ஜகஜோதியாய் நடந்துவிட்டதொரு உணர்வு.
தன்னவளை தேடி சென்றான்.
காதல் அது நண்பனின் தங்கை அண்ணனின் தோழன் என்றெல்லாமா பார்த்து வருகிறது.
கண்ட நொடி முதல் படுத்துகிறதே பாடாய். அறிவுக்கு இருக்கும் தெளிவு மனதிற்கு இல்லாமல் போய்விட்டதே. இனி அவளிடம் எப்படி உரைப்பேன் மறந்திடு என்னை என இல்லை இவனிடம்தான் எப்படி உரைப்பேன் உன் நான் இல்லை என்று. இருவரும் இரு கண்களாயிற்றே தோழனா காதலியா என்ற நிலையில் யாரை தேர்ந்தெடுக்க என்று மொத்தமாக குழம்பி நின்றான்.
அப்போது வசீக்கு ஒரு அழைப்பேசி அழைப்பு வர எடுத்து பேசியவனின் முகம் இருளை தத்தெடுத்தது.
அதன்பின் அமியை காண சென்றான்.
டேய் பீம்பாய் வர இவ்ளோ நேரமா என்ன பண்ண நான் எவ்ளோ நேரமா வெயிட் பண்ற என்று காரில் ஏறி அவனை அணைக்க வர அவளை தடுத்தான்.
என்ன ஆச்சி
நாம பிரேக் அப் பண்ணிக்கலாம்
வாட் என்ன உளர்ர
நாம பிரிஞ்சிடலாம் நீ உன் வழியபாரு நான் என் வழிய பாக்குறன்.
பீம்பாய் அடிக்கடி நீ இப்படிதான் கோளாராகிடுவ உனக்கு ட்ரீட்மெண்ட் பண்ணாதான் சரிவருவ என அவனை முத்தமிட நெருங்க அவளை ஆக்ரோஷமாக தள்ளிவிட்டான்.
அறிவில்லை உனக்கு ஆம்பளையே கிடைக்கலையா என்னையே ஏன் படுத்துற உனக்கு என்கிட்ட என்ன வேணும் சொல்லு தந்து தொலையுற அதை கொடுத்தா தொல்லை ஒழியும்ல என்றிட பெண்ணவளின் கண்கள் மடைதிறந்தன.
என்ன வார்த்தை சொல்லிவிட்டான். காதலோடு அவனை அன்டியதற்கு நல்ல பெயர் கொடுத்துவிட்டான். என்ன வேண்டுமா உன் காதல் அது மட்டும்தான் வேண்டும் இந்த பிறவிக்கு என மனதில் சொல்லிக் கொண்டாள்.
உன்ன பத்தின எல்லா வண்டவாளமும் எனக்கு தெரிஞ்சிடுச்சி நீ எக்கேடோ போ தயவு செஞ்சி என்னை படுத்தாத நீ இன்னொரு தடவை என் பக்கம் வந்த நா மனுஷனா இருக்க மாட்டன்.
என்னை பத்தி யார் என்ன சொன்னானு தெரியலை நீ தப்பா புரிஞ்சிட்டு இருக்க நீயா என்ட்ட திரும்பிவருவ அப்போ உனக்கான தண்டனை இருக்கு என்றவள் காரிலிருந்து இறங்கி கேப் பிடித்து வீட்டிற்கு சென்றாள்.
வசீ ஜடமாக திரும்பினான் வீட்டிற்கு உயிரைத்தான் அவள் கொண்டு செல்கிறாளே.
தன்னவனின் வார்த்தையில் காயப்பட்டவள் அந்த வலயினை தாங்க முடியாது ஷவரின் அடியில் நின்று அதனோடு போட்டிப்போட்டுக் கொண்டு இருந்தாள்.
____________