அத்தியாயம் 13 ❤
❤️நினைத்தது கிடைக்கும் என விளக்கின் ஒளியை எட்டிப்பிடித்து விட முடியும் என்றுஅதை சுற்றும் விட்டில் பூச்சியாய்உன்னையே சுற்றி வரும் நான்இது மடத்தனம் என்று எப்போதுஉணரப் போகிறேன்❤️
கோவிலுக்குள் நுழைந்து கடவுளைப் பார்த்தப் பிறகு தான், சுவர்ணலதாவிற்கு சற்று கலக்கம் நீங்கியது.கோவிலைச் சுற்றி வந்து பிரசாதம் வாங்கிக் கொண்டு அம்மாவும், மகளும் ஒரு இடத்தில் அமர்ந்தனர்.சுவர்ணலதா மகளின் நெற்றியில் குங்குமம் வைத்து விட்டார்.
மஹிமா ” அம்மா கோயிலுக்கு வந்தாச்சு, சாமியைப் பாத்தாச்சு. இப்போ நிம்மதியா இருக்கா ? “
சுவர்ணலதா ” ஆமாம்.இப்போ தான் நிம்மதியா இருக்குடி. கடவுளைப் பாக்காம எந்த வேலையும் ஓடாது.இந்த ஒரு வாரமா உங்க அப்பா வீட்ல இருந்தாரா ! அதுனால கோயிலுக்கு வர முடியல. “
மஹிமா ” கோயிலுக்கு வர்றது கூட அவர் டிசைட் பண்ணனுமா ? இதெல்லாம் ரொம்ப ஓவர்மா ? “
சுவர்ணலதா ” அவரோட குணம் தான் உனக்கு தெரியுமே ! “
மஹிமா ” ஆமாம் அம்மா . அவர் ஏன் இப்படி இருக்காரு ? கல்யாணம் பண்றதுக்கு முன்னாடியும் இப்படி தான் இருந்தாராம்மா ? ” என்ற மஹிமாவின் முகத்தில் கவலை தெரிந்தது.
சுவர்ணலதா ” ஆமா மஹி.உங்க அப்பா சின்ன வயசுல இருந்தே முசுடு.உங்க தாத்தா , பாட்டியால கூட அவரை மாத்த முடியால “
மஹிமா ” அவர் சீக்கிரம் மாறனும்மா “
இவர்களது உரையாடல் முடிந்து,
மஹிமா ” வாம்மா . வீட்டுக்குப் போகலாம் “
வீட்டினுள் நுழைந்ததும் மஹிமாவும் , சுவர்ணலதாவும் அதிர்ந்தனர்.ஏனெனில் ராமநாதன் ஹாலில் இருந்த சோபாவில் அமர்ந்து அன்றைய தினசரி நாளிதழைப் புரட்டிக் கொண்டு இருந்தார்.
இவர்களைப் பார்த்ததும்,
ராமநாதன் ” அடடே வாங்க ! அம்மாவும்,பொண்ணும் கோயிலுக்குப் போய் சாமி தரிசனம் பண்ணிட்டு வரிங்களா ? ” நக்கலாக கேட்க,
சுவர்ணலதா எச்சில் விழுங்கி,
“அது வந்துங்க ! இவளுக்கு காலேஜ்ல கவுன்சிலிங் – கு கூப்பிட்டு இருக்காங்க. அதுக்கு தான் கோயில் போய் கடவுளுக்கு நன்றி சொல்லிட்டு வர்றோம். உங்ககிட்ட கூட பர்மிஷன் கேட்டேனே ! “
அவரது கையை இறுகப் பற்றி நடுங்கிக் கொண்டே நின்றிருந்தாள் மஹிமா.
ராமநாதன் ” கவுன்சிலிங் – கு தான வர சொல்லி இருக்காங்க.அட்மிஷன் கிடைச்ச மாதிரி சந்தோஷப்பட்ற “
மஹிமாவைப் பார்த்து,
” என்ன ! உனக்கு அட்மிஷன் கிடைச்சுருமா ? ” மிரட்டும் குரலில் கேட்டார்.
மஹிமா ” கிடைச்சுரும்பா “
ராமநாதன் ” கிடைச்சா சரி. .அப்பறம் முக்கியமான வேலை பாக்க வேண்டி இருக்கு. .என் ரூமுக்குக் காஃபி கொண்டு வந்துரு “
சுவர்ணலதாவிடம் கட்டளைப் பிறப்பித்து விட்டு தன் அறை நோக்கிச் சென்றார் ராமநாதன்.
சுவர்ணலதா சமையலறைக்குள் சென்று ராமநாதனுக்காக காபி போட்டார்.
மஹிமா தன் அறைக்குள் அடைந்து கொண்டாள்.தந்தை வீட்டில் இருந்தாலே அவளது நடமாட்டம் இருக்காது.
ஏனென்றால் ஒரு தடவை சூடு வாங்கியது போதும் இனி அந்த மாதிரி எஎது நடந்தாலும் தன்னால் தாங்க இயலாது என்பதை உணர்ந்து தந்தை முன் செல்வதை நிறுத்தி விட்டாள்.
இரவு நேரத்தில் மஹிமாவின் அறைக்குச் சென்ற சுவர்ணலதா அவளிடம் பால் தம்ளரைக் கொடுத்தார்.
மஹிமா அதை வாங்கிக் குடித்துக் கொண்டே,
” அப்பா வீட்ல இருக்காராம்மா ? “
சுவர்ணலதா ” இல்லடி . அவரு ஏதோ பார்ட்டினு கிளம்பிட்டாரு.இனி வீட்டுக்கு வர மூனு நாள் ஆகும் “
மஹிமா ” அது என்னம்மா கணக்கு மூனு நாளு ? “
சுவர்ணலதா ” பார்ட்டினா அவர் ஃபுல்லா குடிச்சுட்டு , அவரோட பேச்சிலர் ஃப்ரண்ட் வீட்டுக்குப் போய் தூங்கிடுவாரு.அப்பறம் அங்க இருந்தே ஆபிஸூக்கு கிளம்பிப் போய்டுவாரு “
மஹிமா ” என்னை மட்டும் பொம்பளைப் புள்ளையா அடக்க , ஒடுக்கமா இருக்க சொல்றாரு. ஆனா அவர் மட்டும் எந்த ரூல்ஸ் – யும் இல்லாம குடிக்குறாரு , சிகரெட் புடிக்குறாரு இதெல்லாம் நியாயமா ? “
சுவர்ணலதா ” அப்பாவைக் குறை சொல்லிட்டே இருக்காம, ஏதாவது உருப்படியான வேலை இருந்தா பாரு போ ” .
மஹிமா ” அதான ! உங்க புருஷன் தப்பே பண்ணுனாலும், நீங்க அதைக் கேக்காம இப்படியே விட்டுட்டு இருங்க.அவர் உங்க தலையில் ஏறி மத்தளம் வாசிக்கட்டும் ”
அம்மாவைக் கடிந்து கொண்டாள்.
சுவர்ணலதா ” இவ்ளோ வாய் பேசறவ , உன் அப்பாகிட்ட நீயே கேக்க வேண்டியது தான ? “
மஹிமாவின் முகம் நொடியில் சுணங்கியது. கையில் இருக்கும் சூடு போட்ட தழும்பை விரல் தானாக தடவிப் பார்த்துக் கொண்டது.
அதைக் கண்டு கொண்ட சுவர்ணலதா” மஹி விடும்மா ! இதையே நினைச்சு ஃபீல் பண்ணாத.இனிமே தான் நீ சந்தோஷமா இருக்கப் போற. காலேஜ் லைஃப் போனா வராது. நல்லா ஹேப்பியா என்ஜாய் பண்ணுடா ” மகளின் கைகளைப் பிடித்து தைரியம் கூறினார்.
நாட்கள் விரைவில் செல்ல ,
மஹிமாவிற்கு அட்மிஷன் கிடைத்து கல்லூரிக்குச் செல்லும் நாளும் வந்தது.காலையில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தார் சுவர்ணலதா.
வேலையாட்கள் மற்ற வேலைகளைப் பார்க்க சுவர்ணலதா கல்லூரி செல்லும் தனது செல்ல மகளுக்காக தானே பார்த்துப் பார்த்து காலை உணவையும் மதிய உணவையும் செய்து கொண்டு இருந்தார்.குளித்து முடித்து வெளியே வந்து உணவுண்ண அமர்ந்தாள்.
சுடசுட வெண் பொங்கலும், பருப்பு சாம்பாரும் தட்டில் இடப்பட்டு இருக்க , அந்த சூட்டையும் பொருட்படுத்தாமல் உண்டு முடித்தாள்.
சுவர்ணலதா ” மஹி காலேஜ்ல எந்த வாலுத்தனமும் பண்ணாம சமத்துப் பொண்ணா நல்லா படிக்கனும் ! ” சரியா ? “
மஹிமா ” என்னம்மா இப்படி சொல்றிங்க ? நான் எப்பவுமே சமத்துப் பொண்ணு தான்னு உங்களுக்குத் தெரியாதா ? “
சுவர்ணலதா ” ஆமா. நீ நாலாவது படிக்கும் போது ஒரு பையன் உன்னை அடிச்சான்னு அவனோட கால்ல பிளேடு வச்சு கீறி விட்டியே ஞாபகம் இருக்கா ? “
மஹிமா “அது அறியாத வயசு தெரியாம பண்ணிட்டேன் ” என்று சமாளிக்க ,
சுவர்ணலதா ” ஓஹோ ! இப்போ லெவன்த்ல ஒரு பையனோட மூக்க ஒடச்சியே அது என்ன வயசு ? “
மஹிமா ” அது… அச்சோ டைம் ஆச்சும்மா. நான் கிளம்பறேன் . பாய்.ஈவ்னிங் பாக்கலாம் ” அம்மாவிடம் விடை பெற்று விட்டு கல்லூரிக்குச் சென்றாள்.
நுழைவு வாயிலைப் பார்த்ததும் இனம் புரியாத மகிழ்ச்சி தோன்றியது மஹிமாவிற்கு.பள்ளிச் சீருடை,கட்டுப்பாடு, வீட்டுப் பாடம், மாதத்திற்கு ஒரு தேர்வு,முழு ஆண்டில் அதிக மதிப்பெண் வாங்க வேண்டும் என்ற கட்டாயம் இவற்றை எல்லாம் கொடுமையாக நினைத்த மாணவ,மாணவியர் ஆவலோடு எதிர் நோக்கி இருக்கும் வாழ்வு தான் கல்லூரி வாழ்க்கை.ஆனால் அவர்களுக்குத் தெரிவதில்லை.
பள்ளி வாழ்க்கை தான் எப்போதும் இனிமையானவை என்று,
பள்ளியில் தான் எந்த பிரச்சனையோ சோகமோ இல்லாமல்.. கள்ளம் கபடமற்ற தூய உள்ளமாக சுற்றித் திரிய முடியும்.
மஹிமாவின் இனிய கனவுகளுக்காக இந்த கல்லூரி தனது கதவுகளை திறந்து வைக்குமா ? இல்லை அவளது வாழ்க்கையின் மிகப்பெரிய திருப்பு முனையாக அமையப் போகுமா ?
– தொடரும்