Loading

  •  

     

    அவ காலேஜ் படிக்கும்போது எனக்கு லவ் ப்ரொபோஸ் பண்ணா  ஹாசினிமா  நான் எங்க போனாலும் பூ கொடுப்பது, என் பின்னாடியே வந்து என்கிட்ட பேசற கேர்ள்  ஸ்டுடென்ட்ஸ் என்கிட்ட பேச விடாம பண்றது,  அராஜகம் ரொம்ப லவ் டார்ச்சர் பண்ணா ஹாசினிமா ஒரு கட்டத்தில் எல்லோரும் சேர்ந்து என்னை கன்வின்ஸ் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க.

    அப்புறம் நான் என்னோட லவ்வ பத்தி சொன்னேன் உடனே கிண்டல் பண்ண ஆரம்பிச்சுட்டா ஒரு கட்டத்துல ரொம்ப தரம் தாழ்ந்து நடந்து போக ஒரு நாள் கேண்டீனுக்கு போனப்ப அவ பிரண்டு கிட்ட உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டேன்.

    உனக்கு வேற ஆளே இல்லையா ஜீவா பின்னாடி ஏன்டி இப்படி சுத்தி அவரை டார்ச்சர் பண்ற என்று கேட்டபோது,

    நான் படிக்கும்போது எல்லாத்துளையும் ஃபர்ஸ்ட் வருவேன்.  அதுக்கு அவ என்ன சொன்னா தெரியுமா அவன் எல்லாத்தையும் best.ஆ இருக்கான் என்னோட லவ்வர் ஆனா இன்னும் நான் கெத்தா இருப்பேன் என்று கூறினாள்.

    அந்த ஹாசினியை கண்டுபிடிச்ச  போடலாம் போல தோணுது என்று கூறிக்கொண்டிருந்தாள்.

    எனக்கு அப்படியே என் உயிரே போயிடுச்சு அப்புறம் அவமுன்னாடியே நான் போகல ஹாஸ்டலில் தங்கி படிக்க ஆரம்பிச்சேன்.

    நானே உன்ன பாக்கல இவை ஏதாவது கண்டுபிடித்து எதாவது செய்து விடுவாளோ என்ற பயம் டென்ஷன் எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு என்றான்.அப்பறோம் யாரையோ  லவ் பண்றானவுடனே தான் நன்றி பிரீ ஆனேன். சில பெண்கள் இப்படியும் இருகாங்க.

    அவ்வளவுதான் அவளை பார்த்தவுடன் எனக்கு பழய ஞாபகம் எல்லாம் வந்துடுச்சு என்றான்.

    அவளுக்கு தான் கல்யாணம் ஆயிடுச்சி அப்புறம் என்ன  என்று கூறி அவனது நெற்றியில் முத்தமிட்டவள்  அந்தளவுக்கா  ஜீவாஎன்ன  லவ் பண்ண என்று கேட்க ஜீவா அவளைக் கட்டி அனைத்து முத்தமிட்டான் உனக்கு தெரியாதுடா ஹாசினிமா நான் எவ்ளோ கஷ்டப்பட்டேன்  என்பது எனக்கு மட்டும்தான் தெரியும்.

    எனக்கு மட்டும் ஆசை இல்லையா எனக்கு எப்பவும் உன் கூட இருக்கணும்னு ஆசைதான்  ஹாசினிமா, மனுஷனா பொறந்தா ஏதாவது சாதனை செய்யனும்  எல்லாருக்கு இந்த வாய்ப்பு கிடைக்கிறதுஇல்லை.

    இந்த காக்கி சட்டையை போட்டிக்கிட்டு  நம்மளால முடிஞ்ச உதவியை  சாமானிய மக்களுக்கு நம்ம செய்தோம் வச்சுக்கோங்க நம்மள குழந்தைங்க நம்முடைய எதிர்காலம் நல்லா இருக்குமா என்று கூறினான்.

    மாலையானதும் வெளியில் கிளம்புவதற்காக ஹாசினி  புடவை உடுத்திக் கொண்டு கிளம்பினாள்.

    அவளது இடையில் கைவைத்து அவன் இங்க வா ஹாசினிமா உனக்கு நான் புடவை சரி செய்கிறேன் என்று பெட்டில் கமுந்து  படுத்துக்கொண்டு கால் பகுதியில் இருந்த மடிப்புகளை சரி செய்து விட்டான்.

    சரி செய்து விட்டான்  பிறகு மடிப்புகளை சரி செய்துவிட்டு இவனும் கிளம்பியவன் என்ன நினைத்தானோ ஹாசினி யின் இதழ்களை சுவைக்க தொடங்கியவன் மூச்சுமுட்ட குளிர் வேறு அவளை அள்ளி அணைத்து அவளுள் புதைந்து போனான்.

    வெளியே வர  பனி  பொழிந்து கொண்டிருந்தது. வெளியில் சென்று பழங்கள் வாங்கி வந்தனர்.

     

    இரவு உணவினை அறைக்கு வரவழைத்து அவன் அவளுக்கு உணவை ஊட்டி விட்டான் அவள் அவனுக்கு உணவு ஊட்டி விட்டு வாயை துடைத்து விட்டாள்.

    அதன் ஒரு வழியாக இரவு இரண்டு மணி நேரம் தனது லேப்டாப்பை எடுத்து அவன் அனைத்து வேலைகளையும் செய்தான்.

    ஹாசினியோ ஜீவா பட்டு மஹால் ரியோபெனிங் பற்றிய சிந்தனையும் எந்த மாதிரி டிசைன்ஸ் வர வைக்கணும் எப்படி  முகூர்த்தப் பட்டு ரெடி பண்ணனும் அதை பற்றிய சிந்தனையில்  குறிப்பெடுத்துக் கொண்டிருந்தாள்

    பத்து நாட்கள் ஓடியதே தெரியவில்லை. ஊருக்கு வந்து சேர்ந்தனர்.

    திருமணமாகி முதன்முதலா இந்த வீட்டிற்கு வந்திருந்தனர்.  வீட்டிற்கு வர ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்துச் சென்றார் ஜீவாவின் அம்மா.

    காலை உணவு உண்டபின் ஹாசினி  உன்னோட கடைக்கு தேவையான சாரி மாடல் செலக்ட் பண்ணிகோ ஒரு எக்ஸிபிஷன் போடணும் ஜீவா.

    அதுக்கப்புறம் நம்ம கடை ஓபன் பண்ணலாம் என்று கூறி அவளை அழைத்துக் கொண்டு சுந்தரமூர்த்தி பட்டு மஹாலுக்கு வந்து சேர்ந்தான்.

    இவளோ அவள் போட்ட டிசைன் அனைத்தையும் இந்தப் பத்து நாட்களில் போட்ட டிசைன் அனைத்தையும் தறி நெய்யும் இடத்திற்கு எடுத்துச் சென்று  ஆபீஸர் இடம் ஒப்படைத்தாள்.

    கடைக்கு தேவையான புடைவைகள் அனைத்தையும் வண்டியில் அனுப்பிவிட்டு இவர்கள் அனைவரும் காரில் கிளம்பினார்.

    ஒரு வாரத்தில் எக்ஸிபிஷன் வைத்தனர். நிறைய பேர் வந்து பார்த்துவிட்டு அருமையாக உள்ளது என்று பாராட்டி விட்டு செல்ல அப்பொழுது அவர்கள் அனைவருக்கும் திறப்பு விழா அழைப்பிதழை வழங்கினர்.

    ஹாசினி ஒவ்வொன்றையும் ஒவ்வொன்றையும் திட்டமிட்டு செய்தாள். 

    ஜீவா பட்டு மஹால் என்ற புதிய பட்டு மஹால்  ஓபன் செய்ய ஹாசினியின் பெற்றோர்  ராஜூவின் குடும்பம் என அனைவரும் வந்து ஃபங்ஷன் நல்லபடியாக முடிந்தது.

    முதல் நாள்  நல்ல வசூல் ஆனது ஜீவாவின் அம்மா ஊருக்கு செல்கிறேன் என்று கூற டிரைவர் மூலம் அனுப்பி வைத்தான்.

    காலையில் கிளம்பி இருவரும் பிஸியாகினர்.

    கடை திறந்து ஒரு மாதம் ஓடியதே தெரியவில்லை. ஒருநாள் காலை
    அவளை  எழும்ப விடாமல் இருக்க என்ன ?

    சார் ரொம்ப ஹாப்பியா இருக்க மாதிரி இருக்கு என்றாள்.

    ஜீவா எனக்கு நிறைய வேலை இருக்கு என்று கூற அவன் உனக்கு ஒர்க் அதிகமா தான் இருக்கும் என்றவன்.

    அவள் வயிற்றுப் பகுதியில் உள்ள புடவையை விலக்கி அவன் மென்மையாய் முத்தமிட்டான். உடல் சிலிர்த்து போனாள்.

      மீண்டும் மீண்டும் வயிற்றில் முத்தமிட்டு கொண்டிருந்தவன். வயிற்றில் காதினை  வைக்க என்ன பண்றீங்க எனக்கு ரொம்ப கூச்சமா இருக்கு என்று துள்ளி எழுந்தாள்.

    என்னடி பண்ற என்ன பண்ற எதுக்கு இப்போ  வேகமா எந்திரிச்ச என்று முறைத்தான்.

    ஏன் இப்ப நான் வேகமாக எழுந்திருசா  என்ன ஆச்சு என்று கேட்க அமைதியாக பொறுமையாக இரு என ஏன் ஜீவா இன்னைக்கு தேதி என்ன என்று கேட்டான்.

    டேட் என்ன இருபத்தஞ்சு என்று கூறினாள்.  மேடம் இன்னும் பீரியட்ஸ்  ஆகல தெரியுமா?  என

    நாம் மறந்தே போயிட்டேன்  இத எப்படி மறந்தேன் என்று தெரியவில்லை என்று கூறினாள்.

    ஜீவா ஹாசினிமா இந்நேரம்  குழந்தை உருவாகி இருக்கும்டா என்று கூற ஆமாவா   ஜீவா என்றாள்.

    இரு நான் ஏற்கனவே கிட் வாங்கிட்டு வந்தேன்  நேத்து நைட்டு என்று தனது பையில் இருந்து அதை எடுத்து செக் பண்ண 2 கோடு இருக்கு என்று கூற.

    .ஜீவா  அப்பா ஆகப் போற என்று கூற ஹாசினிமா  அம்மாவாகப் போகிறாய் என்றான்.

    நெற்றியில் முத்தமிட்டான்  ஹாசினிமா பத்திரமா இருக்கணும் டா என்று கூறியவன்.

    குழந்தை இருப்பது  உறுதியான பின் வயிற்றில் மீண்டும்  முத்தமிட்டான்

    நான்  டாக்டர்கிட்ட அப்பாயின்மென்ட் வாங்கி இருக்கேன். கிளம்பு  ஹாஸ்பிடல் போயிட்டு வரலாம் என்று கூறினான்.  இதெல்லாம் எப்ப செஞ்ச எனக்கு தெரியவே இல்லையே என்று ஹாசினி கூற .

    உன் பீரி யட் டைம்ஸ் அன்னைக்கே நான் கவனிச்சேன் நீ வயிறு வலின்னு சொல்லல டயர்டா இல்லை   இந்த பத்து நாளும் நான் எவ்ளோ கஷ்டப்பட்டேன் தெரியுமா என்று கூறினான்.

    மருத்துவரோ ரொம்ப கேர்ஃபுல்லா இருக்கணும். ஹாசினி  40 நாள் தான் இருக்கு அதனால ஒரு சிலருக்கு வாமிட் அதிகமா இருக்கும் ஒரு சிலருக்கு ஒண்ணுமே இருக்காது பத்திரமா இருங்க என்று அனுப்பினார்.

    மருத்துவமனையிலிருந்து வெளியே வந்தவன் ஜீவாவின் அம்மாவிற்கு போன் செய்து விஷயத்தை கூற நான் உடனே வரேன் ஜீவா என்றார் அம்மா.

    ஒன்றும் அவசரமில்லை பொறுமையா வாங்க என்று கூறினான்  ராஜுக்கு போன் செய்து விஷயத்தை கூறியவன் டாக்டர் கொடுத்த மெடிசின் சாப்பிடு  என்றான்.

      அம்மா வீட்டிற்கு வந்தவளை  விட்டுவிட்டு செல்ல நினைக்க ஹாசினி அவனையும் வீட்டிற்கு உள்ளே அழைத்தாள்.

    ஹாசினி  உள்ளே செல்ல ஹாசினியின் அம்மாவும் அண்ணியும் வந்து கட்டிக் கொள்ள அண்ணி பாயசம் செய்து கொண்டு வந்து கொடுத்தார் ஸ்வீட் எடுங்க என்று கூறினார்.

    பாயாசம்  குடித்தவன் நான் கிளம்புறேன் நீ ஒரு இரண்டு நாள் இருந்துட்டு வா எனகூற  மாடிக்கு வரச்சொல்லி கண்களால் சைகை செய்தாள்.

     

    அறைக்கு  வந்தவுடன் ரெஸ்ட்  எடுத்துட்டு வாங்கஎன்றான்.  நீங்க எங்க போறீங்க எனக்கு வேலை இருக்கு டா போகணும்  புரிஞ்சுக்கடா என்றான்.
    அவளை அணைத்து அவளது நெற்றியில் முத்தமிட்டாள் ஹாசினி  டாப்ளேட்ஸ்  எடுத்துக்கோ என்று அவன் வெளியே சென்றான்.

    ஹாசினி  எப்பொழுதும் போல் கம்பியை பிடித்துக் கொண்டு நின்று கொண்டிருக்க கதவை தாழிட்டு வந்தவன்  அருகில் வந்தவன் அவளது முன் மண்டியிட்டு அவளது  வயிற்றை மென்மையாக முத்தமிட கண்களில் கண்ணீருடன் நின்று கொண்டிருந்தாள்.

    குட்டிமா அப்பா ஒரு  முக்கியமான விஷயமா போறேன் இப்போது ஆல் த பெஸ்ட் சொல்லுங்க என்று ஹாசினியின் வயிற்றில் காதினை வைத்தான் தேங்க்யூ செல்லக்குட்டி என்று வயிற்றில் மீண்டும் முத்தமிட்டு விடை பெற்றான்.

    அவன் சென்றபின்   மனசு மிகவும் பாரமாக இருக்க தனது அறையில் வந்து படுத்து உறங்கினாள்.

    அலுவலகம் வந்தவுடன் ராஜீவிற்கு  போன் செய்தான் ஜீவா மச்சி நான்கு மணிக்கு ஒரு டீ ம் ஆப்ரேஷன் ஸ்கூலுக்கு வெளியில் விற்கும் கடைகள் எல்லாத்துலயும் குட்கா போதைப் பொருட்களும் நிறைய விக்கிறாங்க ஆனால் வெளியே தெரியாமலேயே பசங்களுக்கு மட்டும் தனியாக வித்துகிட்டு  இருக்காங்க அதனால ஒரு டீம் வொர்க் போட்டு இருக்கேன் டா.

    நைட் வர மாட்டேன் உன் தங்கச்சி எப்படியாவது சமாளிப்பா  என்றான் .

    மூன்று மணியளவில் போன் செய்ய ஹாசினி  தூக்கத்தில் இருந்தாள். ஜீவா என்று அழைக்க ஹாசினிமா தூங்கறீங்களா தூங்குடா ரெஸ்ட் எடு எனக்காக முழிச்சிட்டு இருக்காத சாப்பிடாமல் இருகாத  நான் முடிஞ்சா தான் நைட் வருவேன்  மெசேஜ் பண்றேன்.

    டென்ஷனாகாத என்று கூறி போனை வைத்தான். அனைத்து இடங்களிலும் ஒரே நேரத்தில் ரெய்ட் செய்ய போதைப் பொருட்கள் அனைத்தும் கண்டுபிடிக்கப்பட்டது.

    எந்த இடத்தில் இருக்கிறது என்று குடோனை சென்று முற்றுகையிட்டு சீல் வைத்து திருபிய தருணம்  ஜீவாவினை  நோக்கி புல்லட் பாய்ந்தது. ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தான்  ஜீவா

     

    🌺🌺வாசம்  வீசும் 🌺

     

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
1
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்