11 – வலுசாறு இடையினில்
ஏகாம்பரம் கடையில் தலையை பிய்த்து கொண்டு அமர்ந்து இருந்தார்.
“வரிசையா அத்தனை பேரும் இப்படி வந்து நின்னா என்ன தான் பண்றது ? ச்சே .. இந்த சனியன தொரத்தரதுக்குள்ள நான் நடுவீதிக்கு வந்துடுவேன் போல “, என முனகியபடி என்ன செய்வது என்று யோசித்து கொண்டு இருந்தார்.
“அப்பா .. அப்பா ..”, என அழைத்தபடி ராஜன் வந்து நின்றான்.
“என்ன ராஜா இந்த நேரத்துல இங்க வந்து இருக்க ? ஏதாவது ஒடம்பு சரி இல்லயா?”, என அக்கறையுடன் கேட்டார்.
“ஸ்கூல்ல கொஞ்சம் பிரச்சனை பா .. நீங்க வந்து பிரின்சிபால் கிட்ட பேசுங்க ..”, என திமிராக அங்கிருந்த சாக்லேட் எடுத்து சாப்பிட்ட படி கூறினான்.
“என்ன பிரச்சனை ராஜா ? யாராவது உன்ன ஏதாவது சொன்னாங்களா ?”
“ஆமா பா.. நீங்க பெத்து வச்சி இருக்க பொண்ணு பண்ண தப்புக்கு என்னைய திட்டறாங்க.. வந்து நீங்களே பேசுங்க.. எனக்கு தல வலிக்குது”
“அவள விட்டு ஒழிச்சா தான் ராஜா நமக்கு நிம்மதி .. வந்து டீ குடி .. இப்போ போலாம் “, என அவனுக்கு டீ வாங்கி வர கடையில் வேலை பார்க்கும் பையனை அனுப்பினார்.
“இப்போ தல வலி போயிரிச்சா ராஜா “
“பரவால பா “
சரி வா “, என அவனை அழைத்து கொண்டு அவன் பள்ளிக்கூடம் நோக்கி சென்றனர்.
“எக்ஸ்க்யூஸ் மீ மேடம் “, என பிரின்சிபால் அறை வாயிலில் நின்று அனுமதி கேட்டான் ராஜன்.
“உன்ன உங்க அப்பாவ கூட்டிட்டு வர சொல்லி தானே அனுப்பினேன்.. வந்துட்டாங்களா ?”, என கோபமாக கேட்டார்.
“வந்துட்டாங்க மேடம்..”, என தன் தந்தையை முனால் விட்டு பின்னால் வந்தான்.
“வாங்க ஏகாம்பரம் சார்.. உங்க பையன் என்ன செஞ்சாண்ணு தெரியுமா ? உங்ககிட்ட ஏதாவது சொன்னானா?”, என கோபமாக கேட்டார் பிரின்சிபால் மேடம்.
“இல்லைங்க மேடம்.. என்ன பண்ணான் ?”
“உங்க பையனுக்கு ரெகார்ட் எழுதி குடுத்தது யாரு ?”, என ஒரு நோட்டை மேஜையில் விரித்தார்.
“என் பொண்ணு தான்.. ஏன் ஏதாவது தப்பா எழுதிட்டாளா ?”, என அவர் கேட்டதும் பிரின்சிபால் உண்மை நிலையை ஊகித்து கொண்டார்.
“ அப்ப இந்த நோட் ல இருக்க கையெழுத்து யாரோடாது ?” என ராஜனிடம் கேட்டார்.
“அது நான் எழுதினேன் மேடம்”
“நீயா எழுதின? சரி இந்தா இங்க ஒரு செண்டென்ஸ் எழுது “, என ஒரு பேனாவை அவனிடம் கொடுத்தார்.
“மேடம்”, என ராஜன் தயங்கினான்.
“எழுது டா”
ராஜன் தயங்கி தயங்கி ஒரு வாக்கியத்தை எழுதினான்.
மூன்றும் மூன்று விதமான கையெழுத்தாக இருத்தது. ஏகாம்பரம் மகனின் முகம் பார்த்து விட்டு பிரின்சிபால் முகத்தை பார்த்தார்.
“உங்க பையன எதுக்கு சார் படிக்க வைக்கறிங்க ? இந்த வருஷம் பன்னிரெண்டாவது பாஸ் பண்ணனுமா வேணாமா ?”
“ஏன் மேடம் .. என் பையன் நல்லா படிக்கறான்ல .. போனா தடவை கூட அவந்தானே செகண்ட் ரேங்க் “, ஏகாம்பரம் தன் மகனை தலைமை ஆசிரியர் கடிந்து கொள்வதை விரும்பாமல் அவனுக்காக தாங்கி பேச ஆரம்பித்தார்.
“ஹோ.. ரேங்க் வாங்கிட்டா போதுமா ? நல்ல பழக்க வழக்கம், ஒழுக்கம், நேர்மை எல்லாம் வேணாங்களா சார்?”, தலைமை ஆசிரியரின் கோபத்தின் காரணம் இன்னும் புரியாத பாவனையில் ஏகாம்பரம் அமர்ந்து அவரின் முகத்தையே பார்த்து கொண்டு இருந்தார்.
“நீங்க என்ன சொல்ல வரீங்க மேடம்? என் பையன் எந்த தப்பும் பண்ண மாட்டான்.. இந்த நோட் நீங்க எழுத குடுத்த சமயம் இவனுக்கு காய்ச்சல் அதான் அவனோட அக்காவ நான் எழுதி குடுக்க சொன்னேன்.. மத்தபடி அவன் வேலைல அவன் சரியா தான் இருப்பான்”
“என்ன என்ன வேலை பண்றான்னு உங்களுக்கு தெரியுமா சார்?”, தலைமை ஆசிரியர் ராஜனை முறைத்தபடி அவன் ஸ்கூல் பேக் எடுத்து டேபிள் மீது வைத்தார்.
“என்ன ராஜா பண்ண?”, என ஏகாம்பரம் மகனிடம் மெதுவாக கேட்டார்.
“அந்த பேக் தொறந்து பாருங்க சார் உங்களுக்கு புரியும்”, என கூறிவிட்டு எழுந்து நின்றார்.
ஏகம்பரமும் எழுந்து நின்று அவன் ஸ்கூல் பேக் திறந்தார். உள்ளே சிப்ஸ் பாக்கெட் , ஊறுகாய் பாக்கெட், அதற்கு கீழ் பீர் பாட்டில் நான்கு இருந்தது. அதற்கும் கீழே சிகரெட் பாக்கெட்டுகள் பத்து இருந்தது. பெயருக்கு கூட ஒரு பேனா, ஒரு நோட் இல்லை.
“என்ன ராஜா இதுலாம்?”, ஏகாம்பரம் அதிர்வுடன் கேட்டார்.
“இல்லப்பா.. இதுலாம் எனக்கு இல்ல.. அந்த வர்மன் கடைல வேலை பாக்கற அண்ணணுங்க தான் பா இதுலாம் வாங்கிட்டு வர சொன்னாங்க.. நான் முடியாதுன்னு சொன்னேன் ஆனா அவங்க என் நோட் புக் எல்லாம் எடுத்து வச்சிக்கிட்டாங்க பா”, என கண்களில் நீருடன் கூறியதும் ஏகாம்பரம் கோபத்தில் எரிய தொடங்கினார்.
“அவன் கடை பக்கம் நீ எதுக்கு போற ? அவனுங்க சொன்ன நீ செய்யணுமா? ஒடனே வந்து என்கிட்ட சொல்லணும் ல? நீ ஏன் இத எல்லாம் உன் பைல வச்சி இப்ப இப்படி அவமானபடணும்? இரு அவன இன்னிக்கி ஒரு வழி பண்ணிடறேன்”, என ஏகாம்பரம் அங்கிருந்து நகர்ந்தார்.
“ஒரு நிமிஷம் ஏகாம்பரம் சார்.. உங்க பையன் என்ன சொன்னாலும் அப்படியே நம்பாதீங்க.. அவன் சொல்றது உண்மையா பொய்யா ன்னு கண்டுபிடிக்கணும்”, என தலைமை ஆசிரியர் அவரை தடுத்தார்.
“என் பையன் என்கிட்ட பொய் சொல்ல மாட்டான் மேடம்.. இதுக்கு காரணமானவங்கள நான் பாத்து பேசிக்கறேன்.. நீங்க இவனா கிளாஸ் க்கு அனுப்பி விடுங்க.. “, என கூறிவிட்டு நேராக வர்மன் சூப்பர் மார்க்கெட் சென்றார்.
அங்கே வேலை செய்து கொண்டிருந்த ஒருவனை பிடித்து கன்னத்தில் அறைந்தார்.
“எங்க டா உன் மொதலாளி ? வர சொல்லு டா இங்க..” , என கத்தினார்.
“மொதல்ல அந்த பையன் மேல இருந்து கைய எடுங்க.. நீங்க பாட்டுக்கு வந்து கை நீட்டிட்டு இருக்கீங்க.. என்ன விஷயம்? எதுக்கு அவன அடிச்சீங்க ?”, என வட்டி வேகமாக வந்து ஏகம்பரத்திடம் நின்றான்.
“நீங்க தண்ணி அடிக்கவும், சிகரெட் பிடிக்கவும் என் பையன எதுக்கு டா வாங்கிட்டு வர சொல்றீங்க?”, ஆவேசமாக கேட்டார்.
“நாங்க ஏன் உங்க பையன வாங்கிட்டு வர சொல்லணும்? இது தொழில் நடக்கற எடம் இங்க அப்படி யாரும் நடந்துக்க மாட்டாங்க.. நீங்க தப்பா புரிஞ்சிக்கிட்டு வந்து பிரச்சனை பண்ணிட்டு இருக்கீங்க”
“நான் சரியா தான் டா நடந்துட்டு இருக்கேன். உங்க கடைல வேலை செய்யற பசங்க தான் என் பையன் கிட்ட சாராயம் வாங்கிட்டு வர சொல்லி இருக்காங்க.. அவனோட நோட் புத்தகம் எல்லாம் வாங்கி வச்சிகிட்டு இருக்காங்க”
“என்ன வட்டி என்ன இங்க சத்தம் ?”, என கேட்டபடி வர்மன் அங்கே வந்தான்.
“இவரு பையன் கிட்ட நம்ம பசங்க சாராயம் வாங்கிட்டு வர சொன்னதா சொல்றாரு மச்சான்.. நீயே கேளு அவர “, என வரமனை முன்னாள் விட்டு நின்றான்.
“நம்ம பசங்க எல்லாம் வேலை நடக்கறப்போ தண்ணி அடிக்க மாட்டாங்க .. அதுவும் ராஜாவீட்டு கன்னுகுட்டி கிட்ட ஏன் வாங்கிட்டு வர சொல்ல போறாங்க? அந்த பெரிய மனுசன நம்ம விடியல் பாருக்கு போய் விசாரிக்க சொல்லு”, என நக்கலாக பார்த்தபடி கூறினான்.
“நான் ஏண்டா அங்க போகணும்? என் பையன பத்தி எனக்கு தெரியும்.. ஒழுங்கா என் பையன் கிட்ட மன்னிப்பு கேட்டுட்டு அவன் பொருள திருப்பி குடுக்க சொல்லு”, ஏகாம்பரம் வெறுப்புடன் கூறினார்.
“இங்க யாரும் உங்க பையன எதுவும் வாங்கிட்டு வர சொல்லல.. அப்படி பட்ட பசங்கள நானும் கடைல வச்சிக்கறது இல்ல.. இங்க இருந்து நீங்களா போனா நல்லது ..”, வர்மனும் நேருக்கு நேர நின்று பதில் கொடுத்தான்.
“உனக்கு இப்போ நேரம் நல்லா இருக்குன்னு ஆடற.. சீக்கிரமே உன்ன இந்த இடத்த காலி பண்ண வைக்கறேன் டா “, ஏகாம்பரம் வன்மம் பொங்க கூறிவிட்டு சென்றார்.
“மாப்ள .. இந்த ஆள இதுக்கு மேல விட்டு வைக்கலாமா என்ன ?”, வர்மன் வேஷ்டியை மடித்து கட்டியபடி கேட்டான்.
“நம்ம விட்டாலும் அந்த கன்னுகுட்டி விடாது மச்சான்.. இந்தா வந்து இருக்கு பாருங்க படம்”, என்று தனது போனில் ராஜன் பாரில் தனது புத்தகங்களை வைத்து பீர் வாங்கிய காட்சி ஓடி கொண்டு இருந்தது.
“சூப்பர் மாப்ள.. இது தான் இன்னிக்கி நம்ம ஊரு ஹாட் டாபிக்”, என கூறிவிட்டு, வினிதாவின் எண்ணிற்கு அனுப்பினான்.
“மச்சான்.. நம்ம பண்றது சரியா ?”, என வட்டி சந்தேகத்துடன் கேட்டான்.
“எல்லாம் சரி தான் மாப்ள.. அவ வந்து இன்னும் ஒரு மாசத்துல இந்த கடைய தொறப்பா.. தொறக்க வைக்கறேன்.. நீ வேலைய கவனி..”, என கூறி விட்டு தோப்பிற்கு சென்றான்.
வினிதா வர்மன் அனுப்பிய வீடியோவை நங்கையிடம் காட்ட அவள் அதிர்ந்து அமர்ந்து விட்டாள்.
“என்ன டி இவன் இப்பிடி பண்ணிட்டான் ? “, வினிதா அதிர்ச்சியுடன் கேட்டாள்.
“எல்லாம் என் அப்பா அம்மாவ சொல்லணும் வினி.. என்ன ஏது ன்னு ஒரு வார்த்தை கேக்காம பணத்தை குடுத்து பைக் குடுத்து வழி அனுப்பி வைப்பாங்க.. அதுக்கான பரிசு இது ..”, என விரக்தியுடன் கூறிவிட்டு மேஜையில் தலை கவிழ்ந்து படுத்து கொண்டாள்.
“இது எல்லாருக்குமா போய் இருக்கும் ?”,வினிதா சந்தேகத்துடன் கேட்டாள்.
“உனக்கு அனுப்பினவன் கிட்டயே கேளு .. “
“ஹலோ.. அண்ணே .. நான் வினிதா பேசறேன்.. என்ன அண்ணே இது ? இது எல்லாருக்குமா போய் இருக்கு ?”
“யாருக்கு எல்லாம் போய் இருக்குன்னு நான் கணக்கெடுப்பா எடுக்கறேன் ? எனக்கு வந்துச்சி.. அதான் உன் உயிர் சினேகிதி பாக்கட்டும் ன்னு உனக்கு அனுப்பி விட்டேன்.. எப்டி இருக்கு படம் ?”
“வர்மா .. நீ அதிகமா பேசற.. உங்கள மாதிரியான ஆளுங்களுக்கு வாழ்க்கையும் புரியாது, மனசும் புரியாது.. அவன் கெட்டதுக்கு காரணம் என் அப்பா அம்மா தான். ஆனா நீ இப்போ பண்ணிக்கிட்டு இருக்க காரியம் எல்லாம் எதுவும் நடக்காது.. உனக்கு முறை பொண்ணு-ன்னு ஒருத்தி இருக்கள்ள அவள கட்டிக்கிட்டு எப்டியோ போய் தொல.. என்னய இம்சை பண்ணாத… “, வினிதாவிடம் இருந்து ஃபோன் வாங்கி பேசினாள் நங்கை.
“அது எப்டி அப்டி விடமுடியும் தமிழு ? நீ அன்னிக்கி பேசினது என்னைய ரொம்பவே குத்திரிச்சி.. உனக்கு தாலி கட்டாயமா நான் அமைதி ஆகமாட்டேன்”
“அது எப்பவும் நடக்காது.. அப்டி நடக்கற சூழ்நிலை வந்தா நானே என்னைய கொன்னுக்குவேன்”
“அதுலாம் நடக்க விடமாட்டேன் தமிழு.. ஐபிஓ கூட உன் வாய்ல மன்னிப்பு ணு ஒரு வார்த்தை வரல பாரு “, வர்மன் அவளை சீண்டும் விதமாக பேசினான்.
“நான் மன்னிப்பு கேட்டா மட்டும் நீ எல்லாத்தாயும் விட்டுறுவியா வர்மா ?”
“உன்கிட்ட பிடிச்சது இந்த திமிரு தான் டி.. ஏகாம்பரம் பொண்ணா இருந்து கூட நீ நிமுந்து நிக்கற பாரு அதான்.. அந்த திமிர நான் அடக்கி காட்டறேன் டி”, வர்மன் சிரிப்புடன் கூறினான்.
“உன்னால முடிஞ்சத பண்ணிக்க வர்மா.. என் அப்பா உனக்கு எக்காரணம் கொண்டும் அகத்தி குடுக்க மாட்டாரு”
“ஹாஹாஹாஹா .. ஹோ அந்த தைரியத்துல தான் நீ இருக்கியா? இரு அதையும் சிதைக்கறேன் டி என் முத்த தமிழு “
“ச்சி.. ஒழுங்கா என் பேர சொல்லு.. பொறுக்கி “, என மீண்டும் திட்டினாள்.
“இந்த பொறுக்கி உன்ன என்ன பண்ண போறேன்னு நீயும் பாரு டி“, என கூறி போனை வைத்தான்.
“ச்சே .. இவன் எல்லாம் என்ன சொன்னாலும் கேக்க மாட்டான் வினி.. தலகணம் டன் கணக்குல இருக்கு.. இவன் கிட்ட இந்த வீடியோ சிக்கி நாற போகுது என் குடும்ப மானம்.. அந்த ராஜன் எருமா மாட்ட சொல்லணும் என் அப்பா அம்மாவ சொல்லணும்.. கருமம் கருமம்.. எல்லாம் என் உயிர வாங்கரத்துக்குன்னே வந்து இருக்குங்க ..”
“நங்க.. நம்ம ஒரு தடவ அந்த ஆச்சிய பாத்து பேசி தான் பாக்கலாமே”, வினிதா மீண்டும் கூறினாள்.
“என்னமோ பண்ணு .. இந்த வீடியோ பாத்தா அந்த ஆச்சி அவன நிறுத்த வாய்ப்பு இருக்கு.. “
“ஆனா உன்ன பாத்தா அது சொல்லுமா ?”
“ஏன் என் மூஞ்சில மகாராணி கலையா கொட்டி கெடக்கு ? “, நங்கை எரிச்சலுடன் கேட்டாள்.
“இல்ல டி .. யாருக்கும் அடங்காத வர்மாண்ணே உனக்கு அடங்குது.. உன் பேச்ச எல்லாம் கேட்டுட்டு அமைதியா இருக்கு”
“என்னை கொலைக்காரி ஆக்காத வினி.. காலைல தாணு ஒருத்தி வந்து எல்லாம் சொல்லிட்டு போனா.. அவன் என்னைய சாவடிக்கறதுகுன்னே பொறந்து வந்து இருக்கான்.. இவங்க நடுவுல சிக்கி சீரழியறது நான் தானே..”
அங்கே வர்மன் தனக்கு தானே பேசி சிரித்து கொண்டு இருந்தான்..
இந்தா அப்பாக்கு இன்னும் வேணும்😌😌😌😌 என்ன இன்னும் எவ்வளவு பட்டாலும் திருந்த மாட்டாரு😒😒😒
thnk u dear
பையன் பையன்னு நல்லா செல்லம் குடுத்தாருல…அவருக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும். இப்போவே புக் எல்லாத்தையும் வச்சு தண்ணி அடிக்குறவன், நாளைக்கு இவரயே அடிச்சுப்போட்டுட்டு காச திருட மாட்டான்னு என்ன நிச்சயம்? அவனால இந்தாளு நல்லா அனுபவிக்க போறாரு.
thnk u dear