Loading

10 – வலுசாறு இடையினில் 

 

இளவேணி நங்கையின் கல்லூரி வாசலில் நின்று கொண்டு இருந்தாள். 

 

“நங்க.. நங்க .. உன்ன பாக்க வரி பொண்ணு வந்து இருக்கு “, என ஒருத்தி வந்து சொல்லிவிட்டு போனாள். 

 

“என்ன பாக்கவா ? யாரு ? “

 

“தெரியல .. பாத்தா ஸ்கூல் படிக்கற பொண்ணு மாறி இருக்கு .. போய் கேண்டீன் ல பாரு.. டிபார்ட்மெண்ட் ஹெட் கூப்பிட்டு இருக்கு .. நான் அங்க போறேன் “, என கூறியபடி அவள் வேகமாக சென்று விட்டாள். 

 

“வினி .. வா டி .. யாருன்னு பாத்துட்டு வரலாம்”

 

“உன்ன பாக்க யாரு புள்ள இங்க வராங்க ? உனக்கும் தங்கச்சி இல்ல எனக்கும் தங்கச்சி இல்ல .. உனக்கு சொந்தத்துல யாராவது இருக்காங்களா ?”, வினிதா வளவழத்தபடியே வந்தாள். 

 

“அப்டி யாராவது இருந்தா உனக்கு தெரியாம இருக்குமா என்ன? அது யாரு நம்ம காலேஜ் ல தாவணி போட்டுட்டு வந்து இருக்கறது ?”, கேண்டீன் வாசலில் ஒரு பெண் தாவணியுடன் நிற்பது கண்டு கேட்டாள். 

 

“நம்ம காலேஜ் ல படிக்கற புள்ள மாதிரி தெரியல நங்க .. வா யாருன்னு போய் விசாரிப்போம் “, என கூறியபடி அந்த பெண்ணை நோக்கி சென்றாள் வினி. 

 

“அதுலாம் ஒண்ணும் வேணாம்.. வா நம்மல பாக்க வந்தது யாருன்னு மொத பாப்போம் “, என நங்கை அவளின் கை பிடித்து இழுத்து கொண்டு நடந்தாள். 

 

“என்னைய ஏன்டி இப்பிடி இழுத்துகித்து போற ? நான் என்ன உன் புருஷனா ? வேற பொண்ணு கிட்ட பேசபவறேன்னு சொன்னதும் இப்பிடி பண்ற ?”, வினிதா சிரிப்புடன் சோக பாவனை முகத்தில் காட்டி பேசினாள். 

 

“உங்க ஃப்ரெண்ட்க்கு அடுத்தவன் புருஷன இழுக்கறது தான் கை வந்தா கலை ஆச்சே “, என கூறியபடி இளவேணி அவர்கள் அருகில் சென்று நின்றாள். 

 

“ஏய் .. யாரு நீ ? “, நங்கை கோபத்துடன் கேட்டாள். 

 

“உன்னய கட்டுவேன்னு ஒருத்தர் சவால் விட்டுட்டு போனாறே அவரோட வருங்கால பொண்டாட்டி “, என தாவணியை இடுப்பில் சொருகி கொண்டு பதில் கூறினாள். 

 

“இந்த புள்ள .. யாரு கிட்ட பேசற ? பள்ளு கொட்டிரும் பாத்துக்க.. யாரு நீ ? சம்பந்தம் இல்லாம கண்ணா பின்ன ன்னு பேசிக்கிட்டு இருக்க “, வினிதா கண்டிப்புடன் கேட்டாள். 

 

“நான் எல்லாம் சம்பந்தத்தோட தான் பேசறேன்.. என் மாமா சிம்ம வர்மன் தெரியும் ல “

 

“அவன் உனக்கு என்னவா வேணா இருந்துட்டு போகட்டும்.. நீ அவன காட்டினாலும் சரி அவன கொன்னாலும் சரி அதுக்கு நீ எதுக்கு என்னை பாக்க வந்திருக்க ?”, நங்கை. 

 

“அடேங்கப்பா .. என்ன சத்தம் எல்லாம் பலமா தான் வருது.. என் மாமன் அதான் கட்டினா உன்ன தான் கட்டுவேன்-ன்னு இல்லாத கோக்கு மாக்கு வேலை எல்லாம் பாக்கராரு போல.. இங்க பாருங்க நான் தான் அவர கட்ட போறேன்.. உங்க மனசுல அவரு மேல ஏதாவது எண்ணம் இருந்தா இத்தோட மறந்துடுங்க .. அத சொல்ல தான் வந்தேன்”, என இளவேணி நங்கையை அளவெடுத்தபடி பேசினாள். 

 

“லூசா நீ? அவன நான் கட்டுறதா யாரு சொன்ன உனக்கு ? எனக்கும் அவனுக்கும் எப்பவும் எந்த சம்பந்தமும் வராது.. போய் நீயே அவன கட்டி சாவடி.. ஊருல ஒரு இம்சை கொறையும் .. வா வினி போலாம் “, என நங்கை அவளை முறைத்துவிட்டு சென்றாள். 

 

“சரியான திமிரு பிடிச்ச பொண்ணா இருக்கும் போலவே.. “, என மனதிற்குள் நினைத்தவள் மீண்டும் நங்கை  முன்பு சென்று வழி மறித்து நின்றாள். 

 

“மறுபடியும் என்ன ?”, என நங்கை எரிச்சலுடன் கேட்டாள். 

 

“உன்னைய நம்பரேன் ஆனா என் மாமன நம்ப முடியாது.. இப்போவே உன்ன கட்ட உன் அப்பாருக்கு பிரச்சனை மேல பிரச்சனை குடுத்துட்டு இருக்கு என் மாமா.. உன் வீட்ல சொல்றாங்கன்னு நீ கழுத்த நீட்டிட்டா ?”

 

“இந்தா பொண்ணு.. உனக்கு அவர காட்டிக்க இஷ்டம்னா போய் அவருகிட்ட சொல்லு.. தேவை இல்லாம இங்க வந்து ஏன் இம்சை பண்ணிட்டு இருக்க ?”, வினிதா பொறுமையை இழுத்து பிடித்தபடி பேசினாள். 

 

“அவர எப்டி கட்டிக்கணும் ன்னு எனக்கு தெரியும்.. அதுக்கு தான் உங்கள பாக்க வந்தேன்.. நீங்க மட்டும் திடமா இருந்தா போதும்.. மத்தத நானும் என் அப்பாரும் பாத்துப்போம்.. உங்க அப்பாவுக்கு பண நெருக்கடி அதிகமா இருந்தா இந்த நம்பருக்கு ஃபோன் பண்ணுங்க எவ்ளோ நாளும் ஒடனே உங்க வீட்டுக்கு வரும்.. “, என அவள் நம்பரை கொடுத்து விட்டு சென்றாள். 

 

“யாரு இந்த லூசு ? அந்த லூச கட்டடணும் ன்னு இப்டி வந்து பேசிட்டு போகுது.. இதுக்கு முன்ன இத பாத்தா நியாபகம் கூட எனக்கு இல்ல.. உனக்கு ஏதாவது ஞாபகம் இருக்கா வினி ?”, நங்கை இளவேணியை பார்த்தபடி கேட்டாள். 

 

வினிதா அமைதியாக இருக்கவும், அவளை தட்டி நிகழ்வுக்கு கொண்டு வந்தாள். 

 

“நான் கேட்டுகிட்டே இருக்கேன் நீ என்ன யோசனைல இருக்க?”

 

“இல்ல அந்த பொண்ணு சொன்னத யோசிச்சிட்டு இருந்தேன் நங்க.. “

 

“அது ஒளறிட்டு போகுது”

 

“ஒளறிட்டு தான் போகுது.. ஆனா உண்மைய சொல்லிட்டு போகுது நங்க.. கொஞ்சம் யோசிச்சி பாரு.. உன் அப்பாவுக்கு திடீருன்னு எப்டி எல்லா பக்கமும் பண நெருக்கடி வருது? என் அப்பா கிட்ட கூட உன் அப்பா ரெண்டு லட்சம் வாங்கிட்டு போய் இருக்காரு”, என வினிதா சொன்னதும் வீட்டில் அம்மா பொலம்பியது நினைவில் வந்தது. 

 

“பணம் பணம் ன்னு எல்லாரும் ஒரே நேரத்துல வந்து நின்னா பாவம் அந்த மனுஷன் எங்க போவாரு.. ஒருத்தனும் பொறுக்க மாட்டேங்கறாங்க.. என்ன தான் பண்றதோ தெர்ல.. இவளுக்கு ஒரு கல்யாணம் பண்ணலாம்ன்னு நினைச்சா கடைசில கோவில்ல வச்சி மஞ்ச கயிறு தான் கட்ட முடியும் போல “, என இரண்டு நாட்களுக்கு முன்பு பொலம்பியது இன்று காரணத்துடன் புரிந்தது. 

 

“ஏன் வினி.. அவன் நிஜமாவே சவாலா எடுத்துகிட்டானா ?”, நங்கை மனதில் பயம் எழுந்தது. 

 

“ஆமா நங்க.. இந்த புள்ள சொல்றதும் , உங்க வீட்ல நடக்கறதும் வச்சி பாத்தா வர்மண்ணே தான் எல்லாம் பண்ணுது போல “, வினிதாவும் தோழியை கலக்கத்துடன் பார்த்து கூறினாள். 

 

“அவன் ஏதோ வழக்கம் போல வெளாட்டுக்கு சொல்றான் ன்னு தானே நினைச்சேன்.. அய்யயோ இப்போ என்ன பண்றது வினி “, நங்கை பதற்றம் கொண்டு வினவினாள். 

 

“இதுக்கு தான் சொன்னேன் கம்முன்னு வான்னு .. எப்பவும் ஊமையா இருக்கறவ அன்னிக்கி தான் வாய தோறந்த வந்துச்சி பாரு எப்டி ன்னு.. “

 

“அன்னிக்கி அவன் பேசினது மட்டும் சரியா.. அவனே தான் வம்பு இழுத்தான்.. பொறுக்கி தனமா நடந்த வேற என்ன சொல்வாங்கலாம் ?”, நங்கை தன் பாக்க நியாயத்தை உரைத்தாள். 

 

“என்கிட்ட பேசி என்ன ஆக போகுது நங்க ? அந்த அண்ணே அன்னிக்கி பேசினது தப்பு தான்.. இப்போ என்ன பண்றது ?”

“அவன அண்ணே ன்னு இப்போ ரொம்ப மரியாதையா தான் பேசணுமா டி? அவன் கிட்ட இருந்து எப்டி தப்பிக்கறதுன்னு சொல்லு டி “, நங்கை கண்கள் கலங்க ஆரம்பித்தன. 

 

“ஏய் நங்க.. இப்ப என்ன ஆச்சின்னு கண் கலங்கற ? இரு யோசிப்போம்.. பயபடாத .. வா “, என அவளை சமாதானம் செய்தபடி அழைத்து கொண்டு நடந்தாள் வினிதா. 

 

“பேசாம அந்த அண்ணே கிட்ட போய் சாரி கேட்டுறு நங்க.. அப்பிடி பேசினதுக்கு தானே அவருக்கு கோவம் வந்து சவால் விட்டாரு .. இப்போ நீயே போய் மன்னிப்பு கேட்டுரு .. அவரு விட்டுருவாரு ..”

 

“அவனா ? அவன் ஒரு  முடிவு பண்ணா அத சாதிக்க எந்த அளவுக்கு வேணா போவான் டி.. அவன் தாத்தாவ கொண்ண வீட்டு ஆளுங்க என்ன ஆனாங்கன்னு உனக்கு நல்லா தெரியும் ல வினி.. இப்போ தான் ஒரு வேலை கெடச்சதுன்னு கொஞ்சம் சந்தோஷமா இருந்தேன்.. அதுக்குள்ள வரிசையா பிரச்சனை மேல பிரச்சனை வந்துட்டு இருக்கு.. ச்ச.. பொண்ணா பொறந்தா வாழ்க்கைல நிம்மதியே இருக்காது போல “, என தலையை கவிழ்ந்தபடி அமர்ந்து விட்டாள். 

 

“ஏன் நங்க இப்டி மனசு ஒடைஞ்சி பேசற.. நான் அந்த அண்ணே கிட்ட பேசி பாக்கறேன்.. “

 

“அவன் யாரு பேச்சையும் கேக்கமாட்டான் வினி”

 

“அவங்க ஆச்சி சொன்னா ?”, வினி கேட்டு விட்டு அவள் முகத்தை பார்த்தாள். 

 

“கேப்பானா?”, கொஞ்சம் நம்பிக்கை மனதில் முளைக்க கேட்டாள். 

 

“நான் அந்த ஆச்சி கிட்ட பேசி பாக்கறேன் நங்க.. அவங்க சொன்னா கேக்கும் ன்னு தான் நினைக்கறேன்.. அந்த அண்ணே ஜெயிலுக்கு போயிட்டு வந்ததுல இருந்து அந்த அண்ணே கிட்ட பேசவே இல்லைன்னு கேள்வி பட்டேன். இப்போ உனக்காக பேச சொல்லலாம் .. ஒரு வார்த்தை சொன்ன போதும் ல .. கேட்டு பாக்கலாம்..”

 

“சரி பேசு வினி.. எனக்கு என்னமோ பயமா இருக்கு.. இவன் கிட்ட எல்லாம் ஒரு நிமிஷம் பேசினாலே நெஞ்சு வலி வந்துரும்.. வாழ்க்கை முழுக்க எல்லாம் என்னால நெனைச்சி கூட பாக்க முடியாது வினி.. “

 

“ஹாஹாஹா .. “

 

“எதுக்கு டி சிரிக்கற ?”, நங்கை கோபத்துடன் கேட்டாள். 

 

“இல்ல .. சப்போஸ் அந்த அண்ணே உன்னை கட்டி, இந்த லூசு உங்கள எப்டி பிரிக்கலாம்ன்னு ஐடியா கேட்டா நீயே போய் ஐடியா குடுப்ப ல ? ஹாஹாஹா .. ஆனாலும் இந்த பொண்ணு பாவம்.. தப்பான நம்பிக்கை வச்சிட்டு இருக்கு.. ஸ்கூல் தான் முடிச்சி இருக்கும் போல”

 

“உன்ன கொன்றுவேன் வினி.. இன்னொரு தடவ அந்த வார்த்தைய சொல்லாத.. அதுக்கு நானே தூக்கு மாட்டிக்கலாம் .. அவன் ஒரு லூசு இந்தபொண்ணு ஒரு லூசு .. ரெண்டும் கட்டிக்கிட்டு எப்டியோ போகட்டும்.. என்னை வாழ விடுங்க டா”

 

“நங்க .. விடு கவலை படாத .. இதுக்கு ஒரு முடிவு கிடைக்கும்.. நல்லதே நடக்கும் ன்னு நினை”, என வினிதா அப்பொழுதிற்கு அவளை சமாதானம் செய்து வகுப்பறைக்கு அழைத்து சென்றாள். 

 

இளவேணி நங்கையிடம் பேசிவிட்டு சென்றது சில நிமிடங்களில் வட்டியின் காதுகளுக்கு சென்றது. 

 

“அப்டியா ? எப்ப ?”

 

“**********************”

 

“சரி சரி .. அத நான் பாத்துக்கறேன்.. நீ வேலைய கவனி”, என கூறி அழைப்பை வைத்துவிட்டு வர்மனுக்கு அழைத்தான். 

 

“சொல்லு மாப்ள “, வர்மன் தன் சூப்பர் மார்க்கெட்டில் இருந்து வேலையை கவனித்து கொண்டு கேட்டான். 

 

“மச்சான் .. அந்த சிங்காரி என் தங்கச்சி படிக்கற காலேஜ் போய் இருக்கா.. ”

 

“யாரு டா ?”

 

“அதான் உங்ககிட்ட நேத்து மல்லுக்கு நின்னாலே அவ தான்.. “

 

“அங்கயா அவ படிக்க போறா ?”

 

“அவ படிக்க போல .. உங்க வாழ்க்கைய கெடுக்கலாம் ன்னு போய் இருக்கா .. “, என ஆரம்பித்து நங்கை இளவேணி இடையில் நடந்த சம்பாஷனைகளை கூறி முடித்தான். 

 

“இந்த அளவுக்கு வேலை பாக்கறாளா அவ ? அவ அப்பன தட்டுனா சரியா இருக்குமா ?”

 

“அவளுக்கு ஸ்கெட்ச் போட்டு குடுக்கறதே அவ யப்பான் தான்.. அதனால உங்க நடவடிக்கை எப்படி இருந்தாலும் அதுக்கு ஒரு ஸ்கெட்ச் வச்சி இருப்பான்.. “

 

“அப்ப அடுத்து நம்ம ஆச்சிய வச்சி அந்த ஆள ஊர விட்டு வெறட்டிடலாம் ..”

 

“அதுக்கு வாய்ப்பு இல்ல.. அதுவும் அவன்கிட்ட சவால் விட்டு இருக்கு”

 

“சரி .. சீக்கிரம் தமிழ’நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வரணும் .. அதுக்கு ஏற்பாடு பண்ணு மாப்ள “

 

“ஏன் மச்சான்.. எனக்கு ஒரு சந்தேகம் .. அந்த பொண்ணு உங்கள வெறுத்துரிச்சின்னா என்ன பண்ணுவீங்க ?”

 

“நம்ம ஊர்ல பொம்பலைங்க விருப்ப படி எத்தன நடக்குது ? விருப்பா அத மாத்திக்குவாங்க .. இவளும் அப்டியே பண்ணிகட்டும் “,, என கூறிவிட்டு ஏகம்பரத்தை அடுத்த பிரச்சனை கொண்டு தாக்க தயார் ஆனான் சிம்ம வர்மன். 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
10
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    4 Comments

    1. அடியேய் இளவேணி…ஓவரா தான் ஆடிட்டு இருக்க. இது எல்லாம் நல்லதுக்கு இல்ல பாத்துக்கோ. யாரு வர்மன் உன்ன தான் கட்டிக்க போறானா? இப்பயியே அப்பனும் புள்ளையும் கனவு கண்டுட்டு இருங்க. ஆளையும் மூஞ்சியையும் பாரு. நங்கைய பல்தி பேசவே உனக்கு அதிகாரம் இல்ல. இதால நங்கை கிட்டவே பேசுறியா? அப்பனும் பொண்ணும் சரியான ஈத்தறைங்களா இருக்கும்ங்க போலயே.

      வினி…நீ ஆச்சி கிட்ட பேசினாலும் ஒண்ணும் நடக்காது. ஆச்சியும் நங்கைய தான் தன் வீட்டு மருமகளா ஆக்கனும்னு முடிவோட இருக்கு. விட்டா வர்மனுக்கு அதுவே நங்கைய கல்யாணம் பண்ண ஸ்கெட்ச் போட்டு குடுக்கும். அதனால உன் முயற்சி வீண் தான்.

      வர்மா…இந்த இளவேணிக்கும் அவ அப்பனுக்கும் ஒரு பாயாசத்தை போட்டுடு பா…இந்த கொசு தொல்லைங்க தாங்க முடியல.

    2. வர்மா மாம்ஸ் பண்ணுற பிரச்சனையாலே பாவம் நங்கை தலையிலே தான் அவங்க அப்பா குடும்பத்தோட சேர்ந்து கரிச்சு கொட்டுறாரு🤦‍♀️🤦‍♀️ உனக்கு வேற வேலையே இல்லையா மாம்ஸ் போய் சாதரணமா அந்த ராஜ் பையலே ரெண்டு தட்டு தட்டினாலே பொண்ணு தருவாராக்கும் பெரிய நம்பியார் மாறி பிளான் பண்ணி கிட்டு😌😌

      1. Author

        ha ha ha… adiye idhu nalla ideava iruke…… ha ha ha…..