Loading

     

                      ஜானவி :    ”   என்ன சொல்றது. ஏன் தான் இப்படி பண்றங்களோ? எதும் புரியல. இவ்ளோ பெரிய ப்ராஜெக்ட் எப்படி பண்றது? பார்த்தாலே பயமா இருக்கு. குழந்தை வேற அழுவாள் ” என்று தன் மனதுக்குள் குழம்பியவளை நோக்கி, அவன் வந்தான்.

 

       சதானந்தன். அவன் தான் அவளோட பாஸ். பிரண்ட். ” என்ன ஆச்சு மேடம் மனசு குழந்தை கிட்ட ஓடி போயிடுச்சோ. ம்ம்  ஜானவி நான் சொன்னத கொஞ்சம் யோசிச்சு பாத்தியா? “

 

        ஜானவி : ” சதா அது வந்து….. எனக்கு ஒரு குழந்தை இருக்கா. இது எல்லாம் உங்க வீட்ல தெரிஞ்சா வேண்டாம். நாம பிரண்ட் அவே இருப்போம். “

 

 

       சதா : ” ஹே லூசு. சொல்லுறத கேளு. என் மனைவி னு நீ அங்க வா. அவளோ தான். மத்தபடி நாம பிரிஎண்ட்ஸ் தான். உன் மனசு மாற நாளுக்காக நான் காத்திருப்பேன். சரி வா போகலாம். சுருதி தேட போறா “

 

     அவனை தொடர்ந்து அவள் சென்றாள்  வீட்டுக்கு. உள்ள போன உடனே அம்மா அம்மா னு வந்து கட்டி கொண்ட சுருதி, ” அம்மா அப்பா அப்….. பா……. பாக்க போலாமா? ” இது அவள் தினமும் கேக்கும் கேள்வி.

 

       பதில் சொல்ல துடித்தாள். ஆனால்  5 வயது குழந்தை கிட்ட என்ன சொல்லுறது. தான் வாழ்ந்து கெட்ட கேவலத்தை சொல்ல மனம் வரவில்லை. அவள் தயங்க, சதா அருகே வந்தான். ” சுருதி நீ என்கிட்ட இருக்கியா? ”   நாம ஒண்ணா பெரியப்பா வீட்டுக்கு போலாமா? “

 

      அவள் அவனை பெரி  அப்பா னு கூப்பிடுவா. கொஞ்சும் மழலை மாறவில்லை. “ஜானவி நிஜமா உன் பதில் சொல்லு. வராத புருஷனுக்கா நீ தவம் இருக்க. ப்ளீஸ் டா. அங்க போகலாம். உன் மனசு மாறும்” என்றான்.

 

 

அவனை பார்த்த பெண்ணவள் கண்ணில் தெரிந்தது சதானந்தன் முகம் அல்ல. அது அந்த முகம். கண்கள் கலங்க, தன் மகள் மனம் எண்ணி சம்மதித்தாள்.

 

      “சோ ஸ்வீட் டியர் பிரண்ட். உன் மனசு மாற வரைக்கும் நான் நல்ல நண்பனா காத்திருப்பேன்”. என்றான். சுருதி யை தூக்கி கொண்டு அவன் முன்னே ஆடி காரில் ஏற, பின்னே ஜானவி வந்தாள்.

 

” கருமம். இவள் எல்லாம் பொண்ணு னு சொல்லவே நாக்கு கூசுது. பொண்ணா இவ. தூஊ கருமம். எவன்கிட்ட யோ போய் வயித்த தள்ளிக்கிட்டு வந்தா. என் வீட்ல என் புருஷன் இவளை பாத்தா உடனே பாவம் னு வேலை வாங்கி தந்து, அடைக்கலம் குடுத்தாரு. இவ அந்த எம் டி ய வே மயக்கிட்டா. ” என்று கங்கா பேச, கண்ணில் அனல் மின்ன, சதா திரும்ப, ” வேண்டாம் ப்ளீஸ் ” என்றாள் ஜானவி.

 

பயணம் அமைதியா போனது. காரில் பாப்பா தூங்க, ஜானவி மனது வலியில் துடிக்க தொடங்கியது.

 

” கிருஷ்ணா என்ன பண்ணேன் னு இப்படி கொல்லுற. என்னால முடியல. பாப்பா இல்லாட்டி நான் செத்து போய் இருப்பேன் கண்ணா. என் மாமா சாரி அவர் நல்லா இருக்கட்டும். இந்த அனாதை பெண்ணை யாருக்கும் பிடிக்காது. ” கண்கள் மூடி இருந்தது. ஆனால் கண்ணீர் நிற்கவில்லை.

 

 

    எல்லாம் கண்ட சதா, அவளாகவே மாறட்டும். என்று கடவுளை வேண்டி கொண்டான்.

 

 

       மலை அழகு கொஞ்சும் கொடைக்கானல் அவளுக்கு அவன் அணைப்பை தான் நினைவு படுத்தியது. மனமே மறக்க முயற்சி செய். அவன் எங்கயோ யாரோட இருக்காரே என்று என்னும் மனதை தடுக்க முடியல…..

 

 

 

 

யாரவன் கிருஷ்ணன் லீலைகள் புரியும் கலியுக கண்ணை கண்டு தனது வாழ்வில் கலியுக மீரா படும் பாடு தான் இந்த தொடர்கதை. படித்து கருத்துக்கள் சொல்லுங்கள்.

 

 

 

 

மன்னா வாராயோ……

 

 

 

 

 

         

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்