Loading

ஆஷாவை அவர்கள் வேறொரு இடத்திற்கு மாற்றி இருந்தனர்.

கனியன் : எப்போ இவங்கள வெளிய அனுப்ப போறோம்? என்று சாப்பிட்டுக் கொண்டே கேட்டான். இதோடு அவளை கடத்தி வந்து மூன்று நாட்கள் முடிந்திருந்தது.

கபிலன் : ம்ம்ம்… இன்னிக்கே கூட… என்றவனை வெட்டவா குத்தவா என்பது போல் பார்த்தாள் கநிகா.

கநிகா : என்ன நினைச்சுட்டு இருக்கிங்க ரெண்டு பேரும்? உங்களுக்கு பழிவாங்குறது மட்டுமே ரொம்ப பெருசா தெரியுதுல்ல? நாம பட்ட கஷ்டத்த மத்தவங்க பட கூடாதுன்னு தான நினைக்கனும். அத விட்டுட்டு அவங்களுக்கும் அதே கஷ்டத்த குடுத்துருக்கிங்க. இது எந்த விதத்துல நியாயம்?

கனியன் : நீ சின்ன பொண்ணி கனி… என்று என்று அவன் ஏதோ கூற வரவும் அவனை தடுத்தவள் “நமக்கு எல்லாருக்கும் ஒரே வயசு தான் ஆகுது. நீ கொஞ்சம் வாய மூடு. அவனோட வாய்ல என்ன கொழுக்கட்டையா வச்சுருக்கான். பேச மாட்டானா? அவங்க என்ன பண்ணாங்கன்னு இப்போ அவங்கள அவன் ஏன் இப்டி பண்ணான்?” என்று கோபத்தில் கத்தினாள்.

கபிலன் : நான் பண்ணதுல எந்த தப்பும் இருக்குற மாதிரி எனக்கு தெரியலையே.

கநிகா : அப்போ அவங்களுக்கு நமக்கும் என்ன வித்தியாசம் டா? அவங்க பண்ணதே அநியாயம். நம்ம அத விட பெருசா ஒன்ன பண்ணிட்டோம். உனக்கு ஒன்னு தெரியுமா??? “நீ விதைத்த வினையெல்லாம் உன்னை அறுக்க காத்திருக்கும்.” என்று உதடு பிதுங்க கூறியவள், விருவிருவென சென்று விட்டாள்.

செல்பவளையே புருவ முடிச்சுடன் பார்த்திருந்தனர் இருவரும்.

*
*

ஆஷாவின் வீடு :

கார்த்திக் அவ்வீட்டையே பார்த்தவாறு வெளியே நின்றிருந்தான். அவர்கள் இறுதியாய் சந்தித்த இடம். அதன் பிறகு இது வரையில் இருவரும் பார்த்துக் கொள்ளவில்லை.

அதிதி : ரொம்ப ஃபீல் பண்ணாம உள்ள வா. என்று அவனை இழுத்தாள்.

கார்த்திக் : இல்ல நான் வரல. நீங்க மட்டும் போய்ட்டு வாங்க. என்று கூறியவன் நொடியும் தாமதிக்காமல் அங்கிருந்து நகர்ந்தான்.

அதிதி அவனை பார்த்து ஒரு பெருமூச்சொன்றை வெளியே விட்டு விட்டு ஆஷிஷுடன் உள்ளே நுழைந்தாள்.

அங்கு இரண்டு அறைகள் இருந்தது. முதல் அறியின் கதவு மேல் சில பூக்கள் ஒட்டப்பட்டிருந்தது. அது அஷ்மியின் வேலை என்பதை உணர்ந்த அதிதியின் இதழ்கள் விரித்தது.

இருவரும் மற்றொரு அறைக்குள் நுழைந்தனர். அங்கோ கார்த்திக்கின் அனைத்து புகைப்படங்களும் மாட்டப்பட்டிருந்தது. சிறு வயதில் இருந்து இப்போது வரை அவன் புகைப்படங்கள் அனைத்தும். அதற்கு நடுவே அவனும் அவளும் ஒன்றாக எடுத்த புகைப்படமும் இருந்தது. ஆஷா சிவப்பு நிற பட்டுப் புடவையில் மிளிர, கார்த்திக்கோ வேட்டி சட்டையில் இருந்தான்.

அங்குள்ள தலையனையில் இருந்து காஃபி கப் வரை அனைத்திலுமே அவன் இருந்தான். ஒன்று அவனின் புகைப்படம் இருக்கும். அல்லது அவனது பெயர் இருக்கும். இரண்டில் ஒன்றாவது அவள் வைத்திருந்தாள்.

ஆஷிஷ் : அதி… நீ என் கூட இல்லாதப்ப என்னோட ரூம் எப்டி இருந்துச்சோ அந்த மாதிரி இருக்கு. என்றவனின் கண்கள் கலங்கி போனது. அவள் இல்லை என்று வார்த்தையில் சொல்லும் போதே அவன் கண்கள் கலங்கி விட்டது. உண்மையில் அவள் இல்லாமல் அவன் எப்படி இருந்திருப்பான் என்று அவள் நினைக்கும் போதே அவளுக்கு வலித்தது.

மௌனமாக நின்றவள், கார்த்திக்கிற்கு கால் செய்து முக்கியமாக விஷயம் என்று கூறி மேலே வர சொன்னாள்.

அவனும் சலிப்புடன் உள்ளே நுழைய, அவன் மூளையோ நீ காண்பது கணவு தான் என்று சத்தியம் செய்யாத குறையாக கூறிட, மனமோ இது உண்மையாக இருந்திடாதா என்று ஏங்கித் தவித்தது.

கார்த்திக் அசையாமல் நிற்பதை பார்த்த ஆஷிஷுக்கு அவனது உணர்வுகளை புரிந்து கொள்ள முடிந்தது. மெல்ல அவனின் முதுகை தடவி கொடுக்கவும், அவனோ கத்தி விட்டான். இது வரையில் அவனை யாரும் இப்படி பார்த்திருக்க முடியாது. அவனது நெஞ்சம் குற்றவுணர்ச்சியில் மிதக்க, அப்படியே மயங்கி சரிந்தான் அவன்.

*
*

மருத்துவமணை :

ஆஷிஷும் அதிதியும் மெளனமாக நின்றிருந்தனர். அதே நேரம் வெளியே வந்தார் மருத்துவர். “அவங்க மனசுல ஏதோ இருக்கு. அவங்க physicalஆஹ் நல்லா தான் இருக்காங்க. ஆனா, மென்டல்லி ரொம்ப வீக்ஆ இருக்காங்க. பாத்துக்கோங்க.” என்று கூறி விட்டு சென்றார்.

அதை கேட்ட இருவரும் உள்ளே நுழைந்தனர். அங்கு அவன் அமைதியாக படுத்திருந்தான். கண்கள் கலங்கி போய் இருக்க, வெளியே ஏதோ ஒரு அரவம். மூவரும் சத்தம் வந்த திசையை நோக்கி திரும்பினார்கள். 

அங்கு ஆஷா தள்ளாடியவாறு நின்றிருந்தாள். அவளது கண்கள் முன்பு இருந்ததை போலவே நீல நிறத்தில் இருந்தது. அதை மற்றவர்கள் வாயை பிளந்து பார்த்திருந்தனர்.

ஆஷா : நீ ஏன் இங்க வந்த? என்று கண்களில் நீரோடு வினவினாள். அவளது கேள்வியிலேயே புரிந்தது அவள் அவனை எதிர் பார்க்கவில்லை என்று.

கார்த்திக் வேகமாக எழுந்து அவளை அனைத்துக் கொண்டான். “I am Sorry…” என்று கண்ணீரோடு கூறினான். “எனக்கு தெரியும்… நா எவ்ளோ சாரி சொன்னாலும் பத்தாது. ஆனாலும் சொல்லிட்டேன். என்ன மன்னிச்சுரு…” என்று கூறியவனை விலக்கியவள், “என்ன ஆச்சு? எதுக்கு சாரி சொல்ற? எனக்கு புரில…” என்று கூறியவளை குழப்பத்தோடு பார்த்தான் அவன். 

கார்த்திக் : என்ன கடைசியா எங்க பாத்த? என்று புருவம் சுருக்கி கேட்டான். “அது… நம்ம கூட பீச் போயிட்டு வந்தோம்ல…” என்று கூறவும் இவனுக்கு மயக்கம் வராத கோரை தான். ‘திரும்பியும் முதல்ல இருந்ததா?’ என்று கண்களை அகல விரித்தான்.

கார்த்திக் : ஒண்ணுல்ல மா… இது என்னோட தங்கச்சி. என்று அதிதியை காண்பிக்கவும், அவள் “அதுக்கு நான் என்ன பண்றது? உங்களுக்கு என்ன ஆச்சுன்னு தான் நான் கேட்டேன். அதுக்கு மட்டும் பதில் சொல்லுங்க.” என்று முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு கூறினாள். 

கார்த்திக் மனதினுள், ‘இவள நான் திருப்பி லவ் பண்ண வெக்கணுமா?… ஒரு தடவ பண்ணதே பெருசு… திருப்பியுமா…. என்று அவன் அதிர்ந்து போனான்.

ஆஷா : ப்ச்… நான் கிளம்புறேன்… எனக்கு வேலை இருக்கு… என்று கூறி விட்டு செல்ல போனவளின் கையை பிடித்து தடுக்கவும் அவள் அவனை வெட்டவா குத்தவா என்பது போல் பார்த்தள்.

கார்த்திக் அவளது கையை விட்டு விட்டு “சாரி மா. தெரியாம பண்ணிட்டேன். அது… உனக்கு கல்யாணம் ஆகிருச்சா?” என்று கெட்டவனை பார்த்து முறைத்தாள் அவள். இதற்கு மேல் ஏதாவது கேட்டால் அடி விழும் என்ப அனுபவத்தில் அறிந்திருந்த கார்த்திக், “இல்ல… சும்மா ஒரு general knowledgeக்கு தான் கேட்டேன்.” eஏ என் சமாளிக்க முயன்றவனை அவள் சுவாரசியமா பார்த்திருந்தாள்.

ஆஷா : Don’t try to impress me. Waste of time… என்று சிரிக்காமல் கூறியவள் அங்கிருந்து நகர்ந்தாள்.

ஆனால் அவள் ஏன் வந்தாள். எதற்கு இப்படி சொல்லி விட்டு சென்றாள்… என்பது புரியாமல் நின்றிருந்தான் அவன். அவள் நடிக்கிறாளோ என்ற என்ன கூட அவனுக்கு உண்டு. அது அவள் முதல் முறை அவள் கேட்ட கேள்வியிலேயே அவனுக்கு ஒரு சந்தேகம். அவள் எடுத்த உடன் அவனை பார்த்து கண்ணீருடன் வினவியது அவனுக்கு பெரும் சந்தேகத்தை கொடுத்திருந்தது.

அதிதி : அப்போ உண்மையாவே அவங்க பழச மறந்துட்டாங்களா? என்று புருவ முடிச்சுடன் வினவினாள். அவளுக்கு ஆஷாவின் குழந்தைகளை நினைக்கும் போது தான் கொஞ்சம் கவலையாக இருந்தது. 

ஆஷிஷ் : அப்டி தெரியலையே… என்று தாடையில் கை வைத்தவாறு கூறியவனை பார்த்த கார்த்திக், “அவ இப்போ உங்க வீட்டுக்கு தான போவா?” என்று எதையோ மனதில் வைத்தவாறு கெட்டவனை இப்போது அவன் குழப்பத்துடன் பார்த்தான்.

ஆஷிஷ் : அவ எதுக்கு எங்க வீட்டுக்கு வரணும்? அந்த பொண்ணு வீட்டுக்கு தான போகும். என்றான் குழப்பத்துடன்.

கார்த்திக் : ஓஹ்… அப்போ உங் தங்கச்சி உங்க கூட இல்லையா? என்று கெட்டவனா இப்போது அவன் “லூசா நீ?” என்பது போல் பார்த்து வைத்தான்.

*

*

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்