வஞ்சிக்காதே முரடா☀️1☀️

Loading

பி ஒன் போலீஸ் ஸ்டேஷன்

அங்கே உள்ள காவலர்கள் எல்லாம் பவ்யமாக எழுந்து நிற்க அங்கு போடப்பட்டு இருந்த சுழல் நாற்காலியில் நடுநாயகமாக கால் மீது கால் போட்டு அமர்ந்து இருந்தான் அவன்.

வம்சி…

அலை அலையான கேசம்.

தெனாவட்டான முகஜாடை

அவன் கைகளில் உள்ள நரம்புகள் முறுக்கி நிற்பதை போலவே அவன் மீசையும் முறுக்கி நின்றது.

சிறுத்த கண்களில் சிறுத்தை பார்வை என பார்ப்போரை ஒரு மிரட்டு மிரட்டும் முகம்.

அப்படி தான் மிரண்டு போய் இருந்தனர் அங்கே இருந்த காவலர்கள்.

நான் கேட்டதுக்கு இன்னும் பதில் வரலை… என்று டேபிளை தட்ட சர்வநாடியும் ஒடுங்கிப் போனது அவர்களுக்கு.

“நான் என் ஆளுங்க மேலே கேஸ் போடக்கூடாதுனு சொல்லியும் என் பேச்சை கேட்காம கேஸ் போட்டா எனக்கு என்ன மரியாதை? அதுவும் என் தம்பி விக்ரமை ஜெயில் உள்ளே போட்டு இருக்கீங்கனா உங்களுக்கு எவ்வளவு கொழுப்பு இருக்கும்” என்று கேட்டவனின் குரலில் தான் எத்தனை வன்மை.

ஆனால் அந்த வன்மைக்கு கொஞ்சம் கூட பயப்படாமல் கைக்கட்டி வந்து எதிரில் நின்றாள் அவள்.

அவள் இசை!

முழுப் பெயர் இயல் அரசி

“நான் தான் கம்ப்ளெயின்ட் கொடுத்தேன் அதுக்கு என்ன இப்போ” என்று கேட்டவளின் குரலில் கொஞ்சம் கூட பயம் இல்லை.

‘நான் என்ன தவறா செய்தேன்!’ பயந்து நடுங்கி சாவதற்கு என்பது அவள் எண்ணம்.

‘இனி உன்னை அலற அலற ஓட வைக்க பார்க்கிறேன்’ என்பது இவனின் எண்ணம்.

“உங்க தொம்பி என் பாட்டு ஸ்கூல்ல கத்துக்க வந்த பையனை போட்டு தர்ம அடி அடிப்பான்… அதைப் பார்த்துட்டு நான் பயந்து ஒதுங்கி போனுமோ. அதெல்லாம் முடியாது” என்று அவள் கத்த “இதுக்கு நீ ரொம்ப வருத்தப்படுவ” என்றான் வம்சி.

அவன் வார்தைகளை அழுத்தம் கொடுக்காமல் சொன்னாலும் அவன் குரலிலும் உடல் மொழியிலும் மிரட்டல் தெரிந்தது.

“ஊதுனா உடைஞ்சு போற அளவுக்கு இருக்கிற இந்த சின்ன பொண்ணு சொன்னதை வைச்சு யார் இந்த கேஸை போட்டது” என கேட்க அந்த காவலர் கூட்டத்தில் இருந்து ஒருத்தி மட்டும் பிரிந்து வந்து நின்றாள்.

அவள் பெயர் சந்திரிகா

அவள் அணிந்து இருந்த உடை காக்கி சட்டை

அவள் வகிக்கும் பதவியின் பெயர் எஸ். ஐ

அவளைப் பார்த்து முறைத்த வம்சி ஏதோ பேச வாயெடுக்க அதுவரை சிறை கம்பியின் உள்ளே நடப்பதை அமைதியாய் வேடிக்கை பார்த்து கொண்டு இருந்த விக்ரம் பேசினான்.

“அண்ணா நீ கேஸ் கொடுத்த அந்த பொண்ணை கவனிக்கோ…
நான் கேஸ் போட்ட இந்த பொண்ணை கவனிச்சுக்கிறேன்” என்று சொல்லிய அவன் எட்டி ஜெயில் கம்பியை உதைக்க வேகமாய் வந்து கதவுகளை திறந்தார் ஒரு காவலர்.

சட்டை காலரை சரி செய்து கொண்டவன் நேராக சந்திரிகா முன்பு வந்து நின்றான்.

“மிஸ். சந்திரிகா… கங்கிராட்ஸ்… உங்களுக்கு இன்னையிலே இருந்து பேட் டைம் ஸ்டார்ட் ஆகப் போகுது! என விக்ரம் சந்திரிகாவைப் பார்த்து எச்சரிக்க அவள் முகத்தில் பயந்ததற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை.

“மாறாக ஐ யம் வெயிட்டிங்” என்ற எகத்தாளமான பதில் தான் கிடைத்தது.

அவளின் பதிலில் கோபமுற்றவனின் கை முஷ்டி இறுகியது. அவன் தோள் மேல் தன் கையை போட்ட வம்சி “கோவத்தை இப்போ காமிக்க வேண்டாம். பொறுமையா காப்பிப்போம். அணுஅணுவா இவளுங்க இரண்டு பேரும் அலறுறதை பார்த்து நிம்மதியா ரசிப்போம். டி. கே “என்றவன் சொல்ல பதிலுக்கு தலையாட்டினான் விக்ரம்.

இனி அவர்கள் ஆட போகும் இந்த சதுரங்க விளையாட்டில் ராஜாக்களின் பக்கம் வெற்றியா இல்லை ராணிக்களின் பக்கம் வெற்றியா என்று பொறுத்து இருந்து பார்ப்போம்.

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 6

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
2
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்