
“எ…என்ன டாக்டர் சொல்…றீங்க?” எனக் கேட்டான் துஷ்யந்த் அதிர்ச்சி குறையாமல்.
“ரிப்போர்ட்ட நீங்களே பாருங்க. சந்தேகமா இருந்தா பேரென்ட்டல் டெஸ்ட் பண்ணி பார்த்துடலாம்.” என்ற மருத்துவர் தன் கையில் வைத்திருந்த ரிப்போர்ட்டை துஷ்யந்திடம் நீட்டினான்.
வேகமாக அதனை வாங்கிப் படித்தவனுக்கு தன் கண்களையே நம்ப முடியவில்லை.
பரத் அவனின் பிள்ளை. அதனால் தானோ என்னவோ பரத்துடன் அவ்வளவு நெருக்கமாக உணர்ந்தான்.
துஷ்யந்த் கையில் இருந்த ரிப்போர்ட்டை வாங்கிப் படித்த சந்திரசேகரன் மனைவியைப் பார்த்து ஆம் எனத் தலையசைக்க, பரிமளம் அதிர்ச்சியின் உச்சத்துக்கே சென்று விட்டார்.
ஆனால் பெற்றவர் இருவருக்கும் மகனின் ஒழுக்கம் மீது துளி கூட சந்தேகம் வரவே இல்லை.
இதில் ஏதோ ஒன்று நிச்சயம் இருக்கிறது என ஆழமாக நம்பினர்.
அதனாலேயே பரிமளம் கூட கண்ணீர் சிந்தவில்லை.
சகுந்தலாவை நெருங்கிய துஷ்யந்த் அவளிடம் ரிப்போர்ட்டை நீட்ட, அதில் பரத் துஷ்யந்தின் மகன் எனப் போடப்பட்டு இருந்ததையே வெறித்தாள் சகுந்தலா.
நிரஞ்சனாவோ கண்களில் கண்ணீருடன் துஷ்யந்தையே வெறித்துப் பார்த்தாள்.
துஷ்யந்த் மெதுவாகத் திரும்பி சகுந்தலாவின் முகம் நோக்க, அவளின் முகத்திலோ அதிர்ச்சியைத் தாண்டி பல குழப்பங்கள்.
“சகுந்தலா…” என துஷ்யந்த் அழைக்கவும் கண்ணீருடன் அவனை ஏறிட்டுப் பார்த்தவளின் முகத்தில் சொல்லொணா வலி.
“நீ… பரத்… இது… அப்போ ரிஷிகேஷ்…” என மாற்றி மாற்றி வார்த்தைகளைக் கோர்த்த துஷ்யந்திற்கு தன் தொண்டை வரை வந்த வார்த்தைகளைக் கேட்டு விடத் தான் துணிவு வரவில்லை.
ஆனால் அவன் என்ன கேட்க வருகிறான் எனப் புரிந்து கொண்ட சகுந்தலாவோ சட்டென தன் செவிகளைக் கரங்களால் மூடிக், “நோ… நோ… நோ துஷ்யந்த். தயவு செஞ்சு அப்படி மட்டும் கேட்டுடாதீங்க. சத்தியமா செத்துடுவேன் நான்.” என்றாள் கதறலாக.
துஷ்யந்தோ கண்களில் கண்ணீருடன் ஒன்றுமே புரியாமல் சகுந்தலாவை வெறித்தான்.
“அப்போ என்ன தான் மா ஆச்சு? தெளிவா சொல்லு முதல்ல. இது எல்லாம் எப்படி சாத்தியம்?” எனக் கேட்டார் சந்திரசேகரன் கோபமாக.
அது ஒரு தந்தையின் கோபம்.
ஏனெனில் இங்கு கேள்விக்குறியாகி நிற்பது அவரது மகனின் ஒழுக்கம்.
சட்டென தரையில் மண்டியிட்டு தலையில் அடித்துக் கொண்டு கதறினாள் சகுந்தலா.
“ஐயோ… ஐயோ… நான் என்னன்னு சொல்லுவேன். அந்த படுபாவி எனக்கு இப்படி துரோகத்தை செய்வான்னு நான் கொஞ்சம் கூட எதிர்ப்பார்க்கலயே.” எனக் கதறிய சகுந்தலா தன் கடந்த காலத்தைப் பற்றி வாய் திறந்தாள்.
______________________________________________________
ரிஷிகேஷுடன் லண்டன் கிளம்பிய சகுந்தலாவின் வாழ்வோ சகுந்தலா எதிர்ப்பார்க்காத அளவு மோசமாக இருந்தது.
நரகத்தை விடக் கொடிய ஒரு வாழ்வு அது.
லண்டன் சென்று முதல் இரண்டு நாட்கள் ரிஷிகேஷ் பெரிதாக வீட்டில் இருக்கவே இல்லை.
அதுவே சகுந்தலாவிற்கு நிம்மதியாக இருந்தது.
ரிஷிகேஷ் வீட்டிற்கு வருவதும் தெரியாது. போவதும் தெரியாது.
இவ்வாறிருக்க, அன்று இரவு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள் சகுந்தலா.
நள்ளிரவில் திடீரென அவளின் ஒருகே சிணுங்கலும் முணங்கலுமாக சத்தம் கேட்கவும் இமைகளைப் பிரித்துப் பார்த்தவளுக்கு ஏகத்துக்கும் அதிர்ச்சி.
அங்கே அவளுக்கு மிக அருகில் எந்தவொரு ஆடையும் இன்றி யாரோ ஒரு வெளிநாட்டுப் பெண்ணுடன் நெருக்கமாக இருந்தான் அவளது கணவன்.
இருவரின் கட்டில் விளையாட்டில் கேட்ட அரவத்தில் தான் துயில் கலைந்து எழுந்து இருந்தாள் சகுந்தலா.
மறு நொடியே கட்டிலை விட்டு இறங்கி நின்றவள் வாயில் கை வைத்து கண்ணீருடன் அதிர்ந்து நின்று விட்டாள்.
இன்பக் கடலில் மூழ்கி இருந்த ரிஷிகேஷோ தலையை மட்டும் உயர்த்தி அவனுக்குத் தொல்லையாக விம்மிக் கொண்டிருந்த சகுந்தலாவை எரிச்சலாகப் பார்த்தான்.
சகுந்தலாவோ பேச மறந்து நின்று இருந்தாள்.
“ச்சே… ஒரு மனுஷன கொஞ்சம் நேரம் சந்தோஷமா இருக்க விடுறியா? எப்ப பார்த்தாலும் ஒப்பாரி வெச்சிக்கிட்டு. போய் ஒரு மூலையா உட்கார்ந்து அழு.” என எரிந்து விழுந்தான் ரிஷிகேஷ்.
அவனுக்கு கீழ் படுத்து இருந்த பெண்ணோ சகுந்தலாவை உதடு வளைத்து ஏளனமாகப் பார்த்தவாறு ரிஷிகேஷின் கழுத்தில் கைகளை மாலையாகக் கோர்த்து தன்னை நோக்கி இழுத்தாள்.
“டார்லிங்… நீங்க எதுக்கு இந்த இன்டியன் *** கூட எல்லாம் கோவப்பட்டு உங்க மூட ஸ்பாய்ல் பண்ணிக்குறீங்க. உங்கள கூல் பண்ண நான் உங்களுக்கு ஸ்பெஷல் ட்ரீட்மென்ட் தரேன்.” என ஆங்கிலத்தில் கூறியவள் சொன்னபடியே ரிஷிகேஷை கட்டில் விளையாட்டில் வித விதமாகக் கவனிக்க ஆரம்பித்தாள்.
முகத்தில் புன்னகையுடன் அப் பெண்ணுக்கு ஒத்துழைத்தான் ரிஷிகேஷ்.
அவர்களின் செயலில் சகுந்தலாவிற்கோ அருவருப்பில் வாந்தி எடுக்க வேண்டும் போல் இருந்தது.
அங்கு இருப்பது தன் கணவன் என்பது கூட அவளுக்கு மறந்து விட்டது.
ஏதோ அசிங்கத்தைப் பார்ப்பது போல் பார்த்து விட்டு அங்கிருந்து வெளியேறி விட கதவை நோக்கி ஓடினாள்.
ஆனால் அதுவோ பூட்டப்பட்டு இருந்தது.
சாவியையும் காணவில்லை.
கதவை இழுத்து இழுத்துப் பார்த்தவள் அது முடியாமல் போகவும் எங்காவது சென்று ஒளிந்து விடும் நோக்கில் குளியலறையை நோக்கி ஓடினாள்.
ஆனால் அது கூட பூட்டப்பட்டு சாவியைக் காணவில்லை.
அழுதுகொண்டே கதவைப் பிடித்து இழுத்தவளின் கரத்தைப் பிடித்து இழுத்து கீழே தள்ளினான் ரிஷிகேஷ்.
சகுந்தலாவோ அழுதுகொண்டே அங்கிருந்து எழுந்து ஓட முயல, அவளின் தலை முடியைப் பற்றி இழுத்துப் பிடித்த ரிஷிகேஷ், “எங்க ஓடப் பார்க்குற? நீ போகக் கூடாதுன்னு தானே எல்லாத்தையும் லாக் பண்ணி வெச்சிருக்கேன். இங்கயே உட்கார்ந்து நைட் ஷோ பார்த்து ரசி. உன்னால தான் என்னை சந்தோஷப்படுத்த முடியல. வேஸ்ட். நானாவது சந்தோஷமா இருந்துக்குறேன். எல்லாத்தையும் பார்த்து ஒழுங்கா கத்துக்க புருஷன எப்படி சந்தோஷப்படுத்தலாம்னு.” என நாக்கில் நரம்பில்லாமல் பேசினான் ரிஷிகேஷ்.
“ப்ளீஸ் வேணாம்…” என சகுந்தலா கை ஏந்தி மன்றாட, “இப்படி சொன்னா நீ வழிக்கு வர மாட்ட. உனக்கு என் வழி தான் சரி.” என்ற ரிஷிகேஷ் சகுந்தலா எதிர்ப்பார்க்காத நேரம் அவளை அங்கிருந்த இருக்கையில் அமர வைத்து போர்வையால் அசைய முடியாதவாறு கட்டினான்.
சகுந்தலா அவனிடம் இருந்து விடுபடப் போராட, அவளின் முயற்சி எல்லாமே தோல்வியில் தான் முடிவு அடைந்தது.
ரிஷிகேஷோ தான் விட்ட வேலையை மீண்டும் ஆரம்பித்தான்.
எந்தவொரு மனைவியும் காணக் கூடாத காட்சியை எல்லாம் சகுந்தலாவைக் காண வைத்தான் ரிஷிகேஷ்.
அருவருப்பில் கண்களை இறுக மூடிக் கொண்டவளுக்கு செவிகளை மூடத் தான் கரங்களை அசைக்க முடியவில்லை.
காதில் ஈயத்தை உருக்கிப் பாய்ச்சுவது போல் இருந்தது சகுந்தலாவிற்கு அவ் அறையில் கேட்ட ஓசைகள்.
விடிய விடிய நடந்த இவ் அட்டூழியத்தில் சகந்தலா அழுத களைப்பிலேயே மயங்கி விட்டாள்.
அடுத்து வந்த நாட்களிலும் இதுவே தொடர் கதையானது.
காலையில் சகுந்தலாவை வீட்டில் பூட்டி வைத்து விட்டு வேலைக்குச் செல்பவன் மாலை வரும் போதே முழுப் போதையில் தினமும் ஒரு பெண்ணின் இடையில் கையிட்டு அணைத்த வண்ணம் தான் வருவான்.
சில சமயம் ஒன்றுக்கு இரண்டு பெண்களைக் கூட அழைத்து வந்து சகுந்தலாவின் முன்னால் மிகக் கேவலமாக நடந்து கொள்வான்.
காலையில் வீட்டைப் பூட்டி விட்டு செல்பவனோ கைப்பேசியை மட்டும் சகுந்தலாவிடம் விட்டு வைத்து இருந்தான்.
ஆனால் அது கூட பல உருட்டல் மிரட்டல்களுடன் தான்.
“நான் இல்லாதப்போ இங்கிருந்து தப்பிக்கலாம்னு ஏதாவது ப்ளான் போட்டன்னு தெரிஞ்சுச்சு உன் ஒட்டு மொத்த குடும்பத்தையும் ஒன்னும் இல்லன்னு ஆக்கிடுவேன். மொபைல மட்டும் ஏன் தந்து வெச்சிருக்கேன்னு பார்க்குறியா? உன் கிட்ட மொபைல் இல்லன்னா உன் வீட்டுல இருப்பவங்க உன்ன கான்டாக்ட் பண்ண முடியாம ஆயிரம் கேள்வி கேட்பாங்க. ஒரு நாள் ரெண்டு நாள் என்னால சமாளிக்க முடியும். அதுக்கு அப்புறம் நான் சொன்னத நம்பாம போலீஸ் அது இதுன்னு போனா அநியாயமா என் கை கறை ஆகிடும்.” என்றான் ரிஷிகேஷ் வன்மத்துடன்.
சகுந்தலா அவனை அதிர்ச்சியுடன் நோக்க, “ஆனா உன் வீட்டுலயோ, இல்ல வேற யார் கிட்டயோ நீ என்னைப் பத்தியோ இங்க நடக்குறத பத்தியோ மூச்சு விட்டன்னு வை இந்த ரிஷிகேஷோட உண்மையான முகத்த பார்ப்ப. ஆனா அதுக்கு அப்புறம் திரும்ப அதைப் பார்க்க நீங்க யாருமே உயிரோட இருக்க மாட்டீங்க. பாவம் உன்னைப் பெத்தவங்க. வயசானவங்க. உன் அப்பாக்கு வேற ரொம்ப பெரிய ஆள் ஆகணும்னு கனவு வேற. எல்லாமே கனவாவே போயிடும்.” என மிரட்டினான்.
அதன் பின் எங்கே சகுந்தலா வாயைத் திறக்க?
அன்றும் வழமை போல் சகுந்தலாவைக் கட்டி வைத்து விட்டு ரிஷிகேஷ் வேறு ஒரு பெண்ணுடன் நெருக்கமாக இருந்தான்.
சகுந்தலா வழமை போல் கண்களை இறுக மூடிக் கொண்டு கண்ணீர் சிந்த, ஓரக் கண்ணால் அவளைப் பார்த்த அப் பெண்ணோ ரிஷிகேஷை விலக்கி விட்டு எழுந்து அமர்ந்தாள்.
ரிஷிகேஷ் அவளைப் புரியாமல் நோக்க, “ஸ்வீட் ஹார்ட்… எத்தனை நாள் தான் நாம இப்படி தனியாவே என்ஜாய் பண்ணுறது? நமக்கும் ஒரு என்டர்டெயின்மென்ட் வேணாமா?” எனக் கேட்டாள் விஷமமாக.
அவளைக் குழப்பத்துடன் ஏறிட்ட ரிஷிகேஷிடம், “வட் அபவுட் த்ரீசம்?” எனக் கேட்டாள் கண்களில் காமரசம் சொட்ட.
“ஏர்லியா சொல்லி இருந்தா அரேன்ஜ் பண்ணி இருக்கலாமே டியர்? இப்போ என்ன பண்ணுறது?” எனக் கேட்டவனுக்கு தன் ஆசை நாயகியின் ஆசையை நிறைவேற்றி வைத்து விடும் வெறி.
உடனே அப் பெண்ணின் பார்வை சகுந்தலாவைத் தழுவி அவளை மேலும் கீழுமாக ஆராய்ந்தது.
சகுந்தலா தலை குனிந்தவாறு கண்ணீர் வடித்துக் கொண்டு இருந்தாள்.
தன் ஆசை நாயகியின் பார்வையைத் தொடர்ந்து பார்த்த ரிஷிகேஷிற்கும் அவள் சொல்ல வருவது புரிந்து இதழ்கள் விஷமமாகப் புன்னகைத்தன.
அப் பெண்ணோ ரிஷிகேஷைப் பார்த்துக் கண் அடிக்க, உடனே கட்டிலை விட்டு இறங்கிய ரிஷிகேஷ் அழுது கொண்டு இருந்த சகுந்தலாவை நெருங்கினான்.
தலையை நிமிர்த்தி அவனை ஏறிட்டுப் பார்த்த சகுந்தலாவின் கண்களில் அவ்வளவு வலி.
ரிஷிகேஷ் அவளைக் கட்டி இருந்த கட்டுக்களை அவிழ்த்து விட்டதும் பாய்ந்து எழுந்த சகுந்தலா அங்கிருந்து செல்ல முயன்றாள்.
அவளின் தலை முடியை அழுத்தமாகப் பற்றி இழுத்தவாறு கட்டிலை நெருங்கினான் ரிஷிகேஷ்.
வலியுடன் அவனின் பிடியில் இருந்து தன் தலை முடியை விலக்கப் போராடிக் கொண்டிருந்த சகுந்தலாவைக் கட்டிலில் வேகமாகத் தள்ளி விட்டான் ரிஷிகேஷ்.
சகுந்தலாவிற்கோ அக் கட்டிலில் அமர முடியாமல் அருவருப்பில் வாந்தி வருவது போல் இருந்தது.
என்னவோ பெரிய அசம்பாவிதம் நடக்க இருப்பதை சகுந்தலாவின் உள் மனம் எச்சரித்தது.
உடனே கட்டிலை விட்டு இறங்க முயல, அவளை இழுத்து கட்டிலில் தள்ளிய ரிஷிகேஷின் ஆசை நாயகியோ சகுந்தலா எதிர்ப்பார்க்காத நேரம் அவளின் மீது படர்ந்தாள்.
சகுந்தலா அதிர்ச்சியில் மூச்சு விடவே மறந்து போனாள்.
ஆனால் அவளின் புலன்கள் விழித்துக் கொள்ள, தன் முழு பலத்தையும் பிரயோகித்து அப் பெண்ணைத் தன்னை விட்டு தள்ளி விட முயன்றாள்.
உடனே சகுந்தலாவின் கன்னத்தில் ஓங்கி அறைந்தாள் அப் பெண்.
ஏற்கனவே பலவீனமாக இருந்த பெண்ணவளோ நொடியில் மயங்கி விட்டாள்.
அதுவே அக் காமுகர்கள் இருவருக்கும் வாய்ப்பாக அமையும் ஒரு பெண் என்றும் பாராது விடிய விடிய மாறி மாறியும் சேர்ந்தும் சகுந்தலாவை வன்புணர்வு செய்தனர்.
